Sunday, 9 September 2018

MANNAVANE AZHALAMA 9 - FINAL PART

‘இவனுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு. தனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை’ என்று எண்ணி உள்ளுக்குள்ளே மருகினாள்.

விஜயனிடம் வினுவை குணமாக்குவேன் என்று வீரமாகக் கூறினானே தவிர, வினுவின் நிலை கண்டு தாள முடியவில்லை அவனால். அவள் படும் வேதனை, சிகிச்சைகளின் வீரியம் அவளை தொய்ந்து போக வைத்திருந்தது. ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்துப் பார்த்தனர். அவள் அலறலில் தருண் தன்னையே இழந்தான். போதும் என்று நிறுத்திவிடக் கூறினான்.

ஒரு நாள் தாங்க முடியாமல் யாரோடேனும் பேசி அழுது தன் பாரத்தை கொட்ட வேண்டும் என்று எண்ணி தன் அன்னைக்கு துணிந்து போன் செய்தான். மதிய நேரம் ஆதலால் தந்தை ஏதோ வேலையாக வெளியே சென்றிருக்க அவன் தாயிடம் பேச முடிந்தது.

“அம்மே” என்றான் ஆசையாக,
“ஆரா, தருணானோ மோனே?” என்றார் அவரும் கண்ணீருடன். 

“அதே அம்மே” என்றான் அவனும் கலங்கி. அவரின் ஆதரவான ஆசையான குரல் கேட்டு உடைந்தான். 

“ஒ” வென அவன் அழ அவர் என்னமோ என்று பயந்து போய் அந்த பக்கம் தவிக்க, பின் ஒருவாறு தெளிந்து தன் அன்னையிடம் பேசினான்.

“அம்மே, ஞான் விந்த்யாவை பின்னேயும் கண்டு. அவள் கணவன் அவளை தெருவில் நிறுத்தி... டைவர்ஸ் அப்ளை செய்துட்டுண்டு. அவள் அச்சன் மறிச்சு போயி. அவள் ரெண்டு குழந்தையுடன் தெருவிலாயி அம்மே” என்று அடக்கமாட்டாமல் அழுதான்.

“ஐயோ எண்டே தெய்வமே, எந்தினா இங்கனே?” என்று கேட்டாள் கல்யாணி. 

“அவ நிலைமை தான் மோசமா இருக்கு.... அவ மனம் ஒரு நிலையில இல்லை.... ஒண்ணா ஆத்திரம் கோவம் சண்டை கத்தல்னு இருக்கா.... இல்லைனா அமைதியா அன்பா இருக்கா..... எப்போ மாறுவான்னே சொல்ல முடியலை.... ரெண்டு குழந்தைகளையும் அவளையும் என் பிசினசையும் சமாளிக்கவே முடியலை.... ஏதோ மேரி மற்றும் விஜயன் இருக்காங்களோ நான் கொஞ்சம் நடமாடிக்கிட்டு இருக்கேன்” என்று கொட்டினான்.

“ஐயோ மோனே எந்தா நீ பறையின்னது?” என்று பதறிப் போனார் அந்தத் தாய்.
“இது வேணோ மோனே, நீ எந்தினா இதில் இடைப்பட்டது?” என்றார்
“அவளுக்குன்னு இந்த உலகத்துல இப்போ யாருமில்லா அம்மே” என்றான். “அவளை ஏதெங்கிலும் ஆசிரமத்தில் விட்டுடு” என்றார். 

“பின்னே குட்டிகளோ?” என்றான். அவர் பதிலேதும் பேசவில்லை. 

“நீ எந்தா தீர்மானிச்சது?” என்று கேட்டார். 

“அம்மே, அவள் ஜிவிச்சிருக்கும்வரே ஞான் தன்னே அவளை நோக்கிக்கொள்ளாம்.... பிள்ளைரு எண்டே கூடத்தன்னே உண்டாவாம். இதுதன்னே எண்டே தீர்மானம்” என்றான்.

“இது சரியாணோ குட்டா, எனிக்கி வளர குழப்பமாகுன்னு எனிக்கி நின்னே காணணம்” என்றாள்.

“ஞான் வராம் அம்மே” என்று வாக்களித்தான். அதற்குள் தந்தை வந்திருக்க அவன் தாய் போன் ஐ வைத்துவிட்டாள்.

தாயிடம் பேசியபின் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

“பாவம் வினு” என்று அவளிடமே அமர்ந்து அவளிடம் அன்பாக பேசினான். 

அரவணைத்தான். அவனிடம் ஒன்றிக்கொண்டாள். அவளும் அன்பாக நடந்துகொண்டாள். பின்னோடு பத்து நிமிடங்களில், “என்ன ஒரே அடியா கொஞ்சறே, எதுக்கு இப்போ ஈஷறே, உனக்கு இதுக்கு மட்டும்தான் நான் வேணும்.... அதே ஒழிய, நான் ஒரு மனுஷி இங்க இருக்கேன்னு உனக்கு உரைக்காது, இப்போ மட்டும் வந்திட்டியா” என்று அசிங்கமாக அவனை திட்டத் துவங்கினாள். 

அவன் என்று அறியாது அவனை அர்ஜுன் என்று நினைத்து பேசுபவளை அவன் என்னவென்று சொல்லி கண்டிக்க முடியும்.

கலங்கி கசந்து போனான் தருண். மேரியை சந்திக்கக் கூட கூசியது அவனுக்கு. ஆனால் அவள் உலகம் அறிந்தவள். 

“நீங்க போங்க சார் நான் பாத்துக்கறேன்” என்று அவளின் மருந்துகளை தந்து அவளை அமைதி படுத்தினாள்.

இதே போன்ற நிலை மீண்டும் மீண்டும் என வரத்துடங்க டாக்டர் கன்னா யோசனையானார். அவள் நாளுக்கு நாள் மூர்கமானாள். எதையும் தூக்கி அடித்து உடைத்து என இருக்க ஒரு நாள் குழந்தை நிதினைத் தூக்கி கீழே போட முயற்சித்தாள். மேரி ஓடிப்போய் குழந்தையை வாங்க தருண் வினுவின் கைகளை பிடித்துக்கொண்டான். அதற்குமேலும் அவளை வீட்டில் வைத்திருப்பது நல்லதில்லை என்று கன்னா கூற அதன்படி அவளை மருத்துவமனையில் சேர்த்தான் தருண்.
அடுத்த நாள் ஆபிசிற்கு செல்ல தலையை கையில் தாங்கியபடி முகம் சுருண்டு அமர்ந்திருப்பவனை கண்டான் விஜயன். 

“என்னடா?” என்றான் ஆதரவாக. 

“ப்ச் ஒண்ணுமில்லை” என்றான். 

“வினுக்கு உடம்பு முடியலையா?” என்று கேட்டான். 

“ஆமாட, திரும்பவும் அதே கதை, மூர்கமா கத்தறாள், ஆத்திரத்தோட பொருட்களை போட்டு உடைக்கறாள். என்ன பண்றதுன்னே தெரியலை.... எப்படி சமாளிக்கறதோ புரியலை..... குழந்தைங்க வேற பயப்படுறாங்க... இன்னிக்கி அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணீட்டுதான் வரேன்.....” என்றான் 

“இது உனக்கு தேவை இல்லாதது, ஆனாலும் அதுதான் உனக்கு சுகம்னு இழுத்து விட்டுகிட்டே.... சரி பார்க்கலாம், மனசை தளரவிடாதே தருண்” என்று தேற்றினான் விஜயன்.

அங்கே விட்டுவைக்க மனசில்லாமல் தினம் அங்கே சென்று அவளைக் கண்டு கொஞ்ச நேரம் அங்கே அவளிடம் செலவழித்தான்.... பெரும்பாலும் அவன் போகும் நேரங்களில் அவள் மருந்தின் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பாள்.... அல்லது அவளுக்கு நிலை மோசமாகி இருக்க சிகிச்சைக்கென உள்ளே கூட்டிச் சென்றிருப்பார்கள்.... வெறுமை உணர்வு வாட்ட வீடு வந்து சேர்வான்.

பிள்ளைகளை பேணி அரவணைத்து அன்பாக ஆனால் அதே நேரம் கண்டிப்புடன் அணைத்து வளர்த்தான். இருவருக்கும் தந்தையின் பெயர் கூட தெரிந்திருக்கவில்லை. அவனிடம் வந்து சேரும்போது கனிகாவிற்கு இரண்டு வயதே நிரம்பவில்லை. நிதின் கை குழந்தை. கனிகாவிற்கு இன்னமும் அன்னையின் மேல் பயம் உண்டு. நிதினுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் முன்பே அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.
‘ஏதோ உடம்பு சரி இல்லை, அதனால் அம்மா அங்கே இருக்கிறாள்’ என்று மட்டுமே தெரியும் அந்தச் சிறுவனுக்கு.

இரண்டாண்டுகள் கடக்க வினு ஹாஸ்பிடலில்தான் இருக்க வேண்டும் என்றானபின் கன்னாவிடம் கூறிவிட்டு பிள்ளைகளுடன் ஒருமுறை பாலக்காட்டிற்குச் சென்றான் தருண்.

வீட்டை அடைந்தான். தாய்க்கும் வருணிற்கும் அவன் வருவது தெரியும் என்பதால் அவர்கள் முன்வந்து வரவேற்றனர். முந்தின நாட்களில் செய்தி வந்தபின், வருண் அமைதியாக விளக்கமாக அவன் தந்தையிடம் அனைத்தும் கூறினான் 

“அவன் பட்டது வரை போதும் அச்சா.... இந்நிலையில் அவன நாமளே ஆதரிக்கலைனா அவனுக்குன்னு வேறா யார்தான் இருக்கா” என்று மன்றாடினான்.
“சொல்லச் சொல்ல கேட்காமே அந்த அவள காதலிக்கும்போது யோசிக்கணும். சரி விட்டதுன்னு இருந்தா, பின்னோட இப்போ இதா அவளையும் குழந்தைகளையும் கூட்டி வந்து வெச்சு சேவை பண்றான்... கஷ்டம்.... அப்போ  இதை எல்லாம் யோசிச்சிருக்கணுமேய்” என்றார் அவர் வீராப்பாக. 

“போறும், நீங்க என் பிள்ளையை போட்டு மென்னு தின்னது.... இது என் வீடும் கூட.... என் பிள்ளை என்னைப் பார்க்க வரான்... பேரப்பிள்ளைகளுடன் இங்கேதான் இருப்பான்.... இது என்டே நிர்ணயம்” என்றாள் ஒரே போடாக கல்யாணி. அவளை அப்படி பேசி கேட்டிராதவர் அடங்கினார். பிடிக்காவிடினும் பேசாமல் இருந்தார்.
வீட்டின் படி ஏறினான் தருண். ஏழு வருடங்கள் கழித்து தாய்வீடு செல்கிறான். அனைவரின் கண்களும் கலங்கியே இருந்தன. 

“என்ட மோனே” என்று ஆற தழுவிக்கொண்டாள் கல்யாணி. 

“இதாரா இது” என்று ஓடி வந்து பிள்ளைகளை அணைத்து வாரி எடுத்துக்கொண்டார். கொஞ்சி மகிழ்ந்தார். 

தருண்
ஆனவரை பிள்ளைகளிடம் தமிழிலும் மலையாளத்திலுமே தான் பேசுவான் அதனால் அவர்களுக்கும் ஓரளவு பேச முடியும் என்பதால் பெரும் கஷ்டம் இருக்கவில்லை.

உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்களை குளிக்க வைத்து சிற்றுண்டி குடுத்து விளையாட வைத்தார்.

தருண் பிள்ளைகளுடன் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்தாள் சரண்யா அவன் தங்கை. 

“சேட்டா” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள். 

“தா கண்டோ, இதா எண்ட சேட்டன் தருண்” என்று அறிமுகம் செய்து வைத்தாள். அவள் கணவன் மாதவன் அவனிடம் அன்பாக பேசிக்கொண்டான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசியபடி உண்டனர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவியலும் ஓலனும் காளனுமாக பப்படம் உப்பேரி என்று சத்யா(விருந்து) சாப்பாடு சாப்பிடுவது ஏதோ பின்னொருமுறை உயிர்த்தெழுவதுபோல தோன்றியது தருணுக்கு. மனதின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் சுருக்கென்றது. 

“ஐயோ என் வினு, அங்கே அனாதையாக கிடக்க நான் இங்கே வந்து என் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேனே’ என்று. ஆனால் என்ன செய்ய விதியின் சதி. தனது குடும்பமும்தான் தன்னைக் காணாமல் இத்தனை ஆண்டுகள் அவதிப்பட்டனரே என்று தேற்றிக்கொண்டான்.

அவ்வபோது போன் செய்து டாக்டர் கன்னாவிடம் பேசிக்கொண்டான்.
சரண்யாவிற்கு தான் இல்லாதபோது திருமணம் நடந்திருந்தது. வருணுக்கு தருண் படித்துக்கொண்டிருக்கும்போதே சாரதாவுடன் திருமணம் ஆகி இருந்தது. 

“எந்தா ஏட்டத்தி, சுகம்தன்னே?” என்று விசாரித்துக்கொண்டான். இவனிடம் பெரிதும் பேசி பழக்கம் இல்லையெனினும் அவளும் அன்பாக பேசி பழகினாள். பிள்ளைகளை கொஞ்சிக்கொண்டாள். தன் பிள்ளைகள் வினீத், சுசித்ராவுடன் அறிமுகம் செய்துவைத்து எல்லா பிள்ளைகளும் ஒன்றாக விளையாடச் செய்தாள். அவர்கள் குழந்தைகள் இவர்களை விடவும் ஓரிரு வயது மூத்தவர்கள்.

கனிகா நிதினுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்க அப்போது கோபாலன் அங்கே சென்றார். யாரும் காண்கிறார்களா என்று சுற்றியும் பார்த்துவிட்டு “வா மோனே” என்று நிதினை கையில் எடுத்துக்கொண்டார். “மோள் வா” என்று கனிகாவையும் இடது கையால் அணைத்துக்கொண்டார். தென்னங்குருத்துக்களால் தேர் செய்து அவர்களுக்கு விளையாட குடுத்தார். இதை எல்லாம் ஜன்னலின் ஒரு ஓரத்தில் அமைதியாக நின்று பார்த்த கல்யாணி கண்கள் கலங்க தருணை அழைத்து காண்பித்தாள். தாத்தாவின் மடியில் அமர்ந்து என்னமோ பேசிக்கொண்டனர் இரு குழந்தைகளும். நிதின் அவரது பெரிய மீசையை அதிசயமாகக் கண்டு பிடித்து இழுத்தான். “வேண்டடா மோனே வலிக்குன்னு” என்று அவர் சிரித்துக்கொண்டார்.

நான்கு நாட்கள் அங்கிருந்து பிள்ளைகளை பாட்டி தாத்தாவோடு உறவாட வைத்து தானும் மனம் நிறைந்து அனுபவித்துவிட்டு கிளம்ப ஆயத்தங்கள் செய்தான் தருண். 

போகணம் அல்லே?” என்று தாய் கலங்கினாள் 

“விந்தியா அவிட ஒத்தைக்கல்லே அம்மே” என்றான் ஆம் என்று தலை அசைத்தார்.
“அவளோ ஹாஸ்பிடலில் ஆயி.... நீயும் பிள்ளைரும் தனிச்சு எங்ஙனடா மோனே, நினக்கு கல்யாணம் கழிக்கண்டே.... இந்த பிள்ளைகளை வெச்சுண்டு எப்பிடிடா மோனே?” என்று கலங்கினர். 

“எனிக்கி இனி கல்யாணம் இல்லா அம்மே.... இவர் மாத்திரம் மதி” என்றான்
“நீ இவிட வந்தூடே... இங்கேயே வந்துட்டா நாங்க எல்லாம் இங்க இருக்கோம் பார்த்துப்போமே..... பிள்ளைங்க இன்னுமே சின்னவங்களாச்சே குட்டா” என்றார்.
“இப்போ முடியாது அம்மே” என்று கிளம்பினான்.

திரும்பி வர மீண்டும் சூனியமும் வெறுமையும் குடிகொண்டது. பிள்ளைகள் முகத்திலும் மலர்ச்சி மறைந்தது. 

“அங்க நல்லா இருந்துது இல்லையா டாடி” என்றான் நிதின். ஆம் என்றதுபோல புன்னகைத்தான். 

“மேரி, உனக்கு அவியல் பண்ணத் தெரியாதா?” என்று கேட்டுக்கொண்டாள் கனிகா.
“கத்துண்டு பண்ணித்தறேன் கனி” என்றாள் அவள்.

“சார் பிள்ளைகள் அங்க ரொம்ப ரசிச்சாங்க போல...” என்றார் ஆதுரமாக. தருண் புன்னகைத்துக்கொண்டன்.

“அம்மா வீட்டுக்கு வரமாட்டாங்களா டாடி?” என்றான் நிதின். 

“வருவாங்கப்பா” என்று சமாதானப்படுத்தினான்.

அடுத்த நாள் ஹாஸ்பிடலுக்குச் சென்று விந்த்யாவை கண்டு வந்தான். அப்போது கொஞ்சம் தெளிந்திருந்தாள். 

‘நல்ல முன்னேற்றம்’ என்றார் கன்னா. ரொம்பவே மகிழ்ந்தான் தருண். 

‘ஒரு மாதிரிக்காக அவளை நான்கு நாட்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று பார்க்கலாம்’ என்றார். அவனும் கொஞ்சம் கலக்கத்துடனேயே அவளை அழைத்துப் போனான்.

வீட்டை அடைந்த வினு தன் குழந்தைகள் வளர்ந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். கண்ணீர் விட்டாள். 

‘தரு தரு’ என்று அவன் கையை பிடித்துக்கொண்டு அன்பாக பேசினாள். அவன் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் செய்த உதவிகளை அறிந்து மனது நன்றியில் திணறியது. அவனிடம் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டாள் மேரியிடம் அன்புடன் நன்றி கூறிக்கொண்டாள். வாரம் என்றது அவள் நார்மலாக இருந்தபடியால் ஒரு மாதமானது. நேரத்தோடு வீட்டிற்கு ஓடிவந்து அவளுடன் நேரம் செலவழித்தான். அந்த இரு மாதங்கள் வீடு சுகமாய் இருந்தது. வாழ்க்கை இலகுவாய் கழிந்தது.

ரெண்டே மதங்கள், யார் கண் பட்டதோ, அவளுக்கு திரும்ப ஒரு நாள் இரவு பிட்ஸ் போல வந்தது, அதன்பின் அவளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது. பின்னோடு அவளது பழைய கத்தலும் ஆத்திரமும் கோவமும் சூழ்ந்து கொண்டன. அவளுடன் செலவழித்த அந்த அறுபது நாட்களை எண்ணியபடி வாழ்ந்தனர் பிள்ளைகளும் தருணும்.

இது போல அந்த எட்டு வருடங்களில் சில முறை அவள் நன்றாக இருக்கும்போது துணிந்து வீட்டிற்கு அழைத்து வருவதும், பின்னோடு ஓரிரு மாதங்களில் அவள் நிலைமை மோசமானதும் மறுபடி அங்கே கொண்டு சேர்பதுமாக. வெய்யிலும் மழையும் மாறி மாறி அடிப்பதுபோல தருணின் வாழ்க்கை பந்தாடப்பட்டது. பல நேரங்களிலும் தொய்ந்துதான் போனான் தருண். 

என்ன இந்த வாழ்க்கை”, என்று சில நேரம் அலுப்பு தோன்றியதுதான். எனக்கு மட்டும் ஏன் இப்படி.... இந்தப் பிள்ளைகள் என்ன பாவம் செய்தனர்.... தாய் அன்பு இல்லாமல் என்னோடு கூட அவ்வபோது மட்டுமே அவளை கண்டுகொண்டு ஏன் இப்படி அவதிபடவேண்டும்... என்று குமுறினான்.

இப்படியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க இதோ இப்போது ஒரே அடியாக விந்த்யாவின் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது. என்ன சொல்வது யாரை குறை சொல்வது.... தெய்வத்தையா, விதியையா, மருத்துவத்தையா தன்னையேவா ஒன்றும் புரியாமல் கலங்கி அமர்ந்திருந்தான் தருண்.

இன்று...

பழைய கதையை சொல்லி முடித்து கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தான் தருண். கருணாவுக்கோ அவன் பட்ட துன்பங்களை நினைத்து தாளவில்லை. என் தருணுக்கு இத்தனை கஷ்டங்களா என்று யாரையும் கண்டுகொள்ளாது அவனிடம் ஓடிப்போய் அவன் அருகே அமர்ந்தாள். அவன் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

யாருக்கு வரும் இப்படிப்பட்ட மனசு, காதலித்த பாவத்துக்காக, அதில் தோல்வியும் கண்டு, அனாதையாக நின்றவளை அவளது மன நிலை தெரிந்தும் கூட்டி வந்து வைத்து காப்பாற்றி, சிகிச்சை செய்து, அவளுக்கு பிறந்த பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை தன் பிள்ளைகளாக ஏற்று பேணி வளர்த்து, படிக்க வைத்து... எண்டே தருண்என்று மனசு விம்மியது. 

என்ன பாக்கியம் செய்தேனோ எனக்கு தருண் கிடைக்க, என்று கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டாள். இதுநாள் வரை அவன் வாழ்வில் ஒரு நல்லதும் நடக்கவில்லை.
அவனுக்குண்டான எல்லா அன்பும் அரவணைப்பும் சுகமும் சந்தோஷமும் நான் என் தருணுக்கு அள்ளி வழங்குவேன்என்று தனக்குள் கூறிக் கொண்டாள். இனி என் தருண் தனி அல்ல.... நானிருக்கிறேன் என் தருணை பார்த்துக்கொள்ளஎன்று முடிவு செய்துகொண்டாள்.

ஞான் இப்போ சொல்லறதுதான், எண்ட அம்மே ஒப்பினாலும் இல்லைனாலும் நான் உங்களைத்தான், உங்களை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்என்றாள் கண்ணீர் வழிய. தருணின் முகம் மலர்ந்தது.

அம்பிகாவும் கூட எல்லாவற்றையும் கேட்டு கரைந்து போயிருந்தாள். 

க்ஷமிக்கணம் எல்லோரும் என்னோடு க்ஷமிக்கணம்..... எனிக்கி எண்டே மோள் கருணாவை தருணுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கான் பூரண சம்மதமா.... தருண் சாரி டா மோனே.... இந்த ஆண்ட்டியோடு க்ஷமிக்கணம்என்றாள். 

ஐயோ ஆண்ட்டி எந்தா இது..... அதெல்லாம் வேண்டாஎன்றன் அவசரமாக.
சாரதாவும் கருணாவும் கட்டிக்கொண்டனர். அதை ஒருவித பொறாமையோடு பார்த்திருந்தான் தருண். 

சாரதே, அவளை விடு.... இல்லெங்கில் தருண் நின்னை கொல்லும்என்று சிரித்தான் வருண். தருணுக்கு ஒரே வெட்கமாகிப் போனது. அனைவரும் கல்யாண தேதி முடிவு செய்வது பற்றி பேசிக்கொண்டனர். தருணும் கருணாவும் ஒருவர் கை மற்றவர் பிடித்தபடி கண்ணால் ஆயிரம் வார்த்தைகள் பேசிக்கொண்டனர்.

தங்கள் வீட்டிற்குச் சென்று கோபாலனிடம் அனைத்தையும் கூறினர். அவருக்கும் மிக்க மகிழ்ச்சி. அதைவிட கனிகாவும் நிதினும் மகிழ்ந்து ஆட்டம் போட்டனர். நிஜம்மாவா என்று நூறு முறை கேட்டுக்கொண்டான் நிதின்.

அடுத்த நாள் முகூர்த்தம் நிச்சயம் செய்தனர். விஜயனையும் கல்பனாவையும் வர வழைத்தான் தருண். கல்பனா மிக விரைவில் கருணாவுடன் ஒட்டிக்கொண்டாள். 

ஒரே வாரத்தில் ஒரு நல்ல நாளில் திருமணம் நல்லபடி நடந்தது,
மணமேடை எளிமையாக வாழை இலை தோரணங்களால் அலங்கரிக்கப்படிருந்தது. மேடையின் நடுவே தென்னங்குறுத்துக்கள் நெற்பரையுள் அமர்த்தி அலங்கரிக்க பட்டிருந்தது... இரு ஆளுயர வெண்கல உயர குத்துவிளக்குகள் பளீரென பிரகாசித்தது.

பெரிய ஜரிகையிட்ட செட் முண்டுடுத்தி நெற்றியில் பெரிய சிவப்பு பொட்டும் சந்தன கீற்றும் பளீரென மின்ன அன்ன நடையுடன் வந்தாள் கருணா. கழுத்தில் மாங்கா மாலை அட்டிகையும் நீண்ட காசு மாலையும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தன. 

கல்யாணி நீண்டதொரு பாலேய்க்கா மாலையையும் அவள் கழுத்தில் இட்டார். 

பட்டுப்புடவை ஓதியிட்டு குடுத்து, கருணாவின் கழுத்தில் தாலி கட்டினான் தருண்.

ஆலிலை கிருஷ்ணன் முத்திரையிட்ட தாலி மற்ற நகைகளை காட்டிலும் அவள் நெஞ்சத்தை நிறைத்தது.

பத்தே நிமிடங்களில் கல்யாணம் இனிதே முடிய, நெருங்கிய சுற்றத்தாருக்கும் நட்புக்குமாக சத்யா விளம்பப்பட்டது. அவியல், தோரன், ஒளன், காளன், எரிசேரி, பொடுத்துவல், பப்படம், நேந்த்ரங்காய் வறுவல், அடப்ரதமன், பால்பாயசம் சோறு, சாம்பாரு என ஒரு பிடி பிடித்தனர் அனைவரும்

அன்று முதல் இரவு, ஆம் இருவருக்கும் முதல் இரவுதானே... ஆனால் கருணாவை அணைத்தபடி அவள்மேல் கால்போட்டபடி இரு பக்கமும் கனிகாவும் நிதினும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். அவளை காணாமல் அவன் வந்து எட்டிப் பார்த்தான் தருண். அவள் உதட்டில் விரல் வைத்து ஜாடை காண்பித்தாள். 

இங்க என்ன பண்றே?” என்றான் அவன் சத்தமில்லாமல். 

இவர்கள் என்னை பிடித்துக்கொண்டனரே
, நான் என்ன செய்யட்டும்என்றாள் அவள் நமுட்டு சிரிப்புடன். 

எழுந்து வாஎன்றான் பொறுமையில்லாமல். 

இருஎன்று ஜாடை செய்தாள். 

தூங்கிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு மெல்ல ஒவ்வொருவரின் காலை எடுத்து தலையணை மேல் போட்டாள். மெல்ல நழுவினார்போல நகர்ந்து கட்டிலைவிட்டு வெளியே வந்து விடிவிளக்கை போட்டுவிட்டு வெளியே வந்தாள். 

என்தாடீ இது, ஞான் அவிட காத்து கொண்டிருக்கேன்... நீ இங்க...?” என்று அவளை கையில் அள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான் தருண். ஐயோ எந்தா சேட்டா இது, விடுன்னு என்றாள் கருணா.

அங்கே கட்டிலில் கிடத்தி தானும் அருகே அமர்ந்தான். 

நானும் பாவம் அல்லே... கருணை வை கருணாஎன்று குழைந்தான். அவள் சிவந்து தலை குனிந்தாள். 

அவளை தன்னோடு அணைத்தபடி
, “ஞான் எவளோ பயந்தேன் தெரியுமா, எனிக்கி நீயானும் கிட்டுமோ இல்லையோன்னு..என்றான் கண் கலங்க . அவள் அவசரமாக அவன் வாய் பொத்தினாள். 

நான் எப்போதும் நீங்கள் பக்கத்தில் உண்டு..... இனி நீங்கள் அழவே வேண்டா... என்னோட சேட்டாஎன்று அவன் தோள் சாய்ந்தாள். அவளை இறுக்கிக்கொண்டான்.
எத்தரை காலம் ஆயி இங்கன அமைதியும் சந்தோஷமுமாயிட்டு வாழ்ந்துஎன்றான்.
எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் கருணா. 

ஆஹான்என்றபடி அவனும் முத்தமழை பொழியத் துடங்கினான்.

சுவற்றில் வினுவின் போட்டோ காற்றில் ஆடியது.

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நான் அல்லவா
மன்னவா மன்னவா மன்னவா....

என்று பாடுவது போல தோன்றியது. கண்ணை இறுக மூடி கருணாவை இறுக்கி அணைத்துகொண்டான் தருண்.

காதலியாக அவன் மடி சாய்ந்தவள் தாயாகி அவனை நெஞ்சில் தாங்கினாள்

நிறைந்தது
 
6 comments:

  1. Wow asusual ...super,nice,sweet etc,.,...bt this time Malayalam...tat too nice...u r asusual multi-talented sisy.elame super...no words to much express ...regards...vazhtha vayathillai..erunthalum vazha nalamudan....vazhga pallandu..

    ReplyDelete
  2. Romba super madam! KalakkiteaL!

    ReplyDelete