Wednesday 5 September 2018

MANNAVANE AZHALAMA - 5

“இருக்கட்டும், ராத்திரி ஆயி அல்லே... தனிச்சு போண்டா, தருண் இவள அவளிண்ட வீட்டில் கொண்டுவிட்டுவா” என்று அனுப்பினான். 

“ஐயோ எந்தினா, வேண்டா சாரே” என்றாள்.
“நோ ப்ராப்ளம், வா” என்று அவளுடன் நடந்தான் தருண், மனம் மகிழ்ந்தது. வருணுக்கு நன்றி கூறியது.

அந்தி மயங்கும் மாலை நேரத்தில் சில்லென்ற காற்று வீச அவளுடன் நடந்தபடி இருப்பது அவனுக்கு வெகு சுகமாக இருந்தது. 

“டான்ஸ் வளர நன்னாயிருன்னு கருணா” என்றான். அவன் அவளை ‘கருணா’ என்று அழைத்ததைக் கண்டு அவள் சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தாள். 

“தேங்க்ஸ்” என்றாள். 

“யு லுக் ப்யூடிபுல் டுடே” என்றான். 

‘ஒ’ என்று லேசாக கூச்சத்துடன்
“தேங்க்ஸ் சார்” என்றாள். 

“என்னை சார் என்னு விளிக்கண்டா கருணா.... ப்ளிஸ், தருண் என்னு விளிச்சூடே?” என்றான். 

“ஐ வில் ட்ரை” என்றாள் சிரிப்புடன். 

நடந்தபடி அவள் வீட்டை அடைந்தனர். அழகாக சின்னதாக இருந்தது வீடு. ஆனால் சுற்றிலும் தோட்டமும் பூக்களுமாக அருமையாக இருந்தது. அவள் வீட்டின் பின்னே ஒரு சின்ன காயல் ஓடியது. மிக ரம்மியமான சூழலாய் இருந்தது அந்தக் காட்சி. 

அவள் தன் அன்னையை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். 

“எண்ட பாஸ் ஆண அம்மே” என்றாள்.

அவள் தாய், “பாயசம் கொண்டு வரேன் சாப்பிட்டுட்டுதான் போகணும், கேட்டேளா” என்று கூறி உள்ளே மறைந்தாள். 

“அதெந்தா கருணா, ஞான் நிண்ட பாஸ் மாத்திரம் தானோ?” என்றான் அவள் கண்ணை நேராகக் கண்டு. 

“அங்ஙன அல்லா,” என்று தயங்கினாள். 

“நான் நிண்டே பிரெண்ட் அல்லே” என்றான். 

“எஸ் ஷ்யூர்” என்றாள். ஹப்பா என்று ஒரு தவிப்பு அடங்கியது அவள் முகத்தில். அதைக்கண்டுகொண்டு சிரித்தான் தருண்.

பாயசம் அருந்திவிட்டு விடை பெற்றான். அன்று இரவு முழுவதும் அவன் எண்ணத்திலும் உறக்கத்திலும் கனவிலும் கருணாவே வந்து போனாள். அன்பாக பேசினாள், அழகாக பாடினாள், சிரித்தாள் மயக்கினாள் ஆடினாள். சட்டென்று கண்விழித்தான் தருண். 

‘என்ன இது இப்படி எல்லாம் தோணறது ச்சே’ என்று தலை சிலுப்பிக்கொண்டு தூங்க முயன்றான்.

அடுத்த நாளும் அங்கே ஓணத்திற்கென லீவ் என்பதால் அனைவருமாக ஏதேனும் சினிமாவிற்கு செல்லலாம் என்று முடிவுகட்டி புக் செய்தனர். இரு காரில் எல்லோருமாக செல்ல, உள்ளே போய் அமர்ந்தனர். பிள்ளைகள் எல்லோருமாக ஒன்றாக அமர்ந்து கலாட்டா செய்தபடி இருக்க, கடைசி சீட்டில் தருண் அமர்ந்தான். பின்னோடு யாரோ அருகில் வந்து அமர்ந்தனர்.

ஒரு ஆண், அவனுடன் வந்தவர்களைக் கண்டு திகைத்தான் தருண். அது கருணாவும் அவளது தாயும்தான். அந்த ஆண் அவள் தம்பி போலும். 

“ஹை கருணா” என்றான். அப்போதுதான் இருட்டில் அவனைக் கண்டாள் அவள்.
“ஹை தருண்” என்றாள். அவள் தம்பி தெரிந்தவர் போலும் என்று நகர்ந்து நடுவில் போய் அமர அவனருகில் கருணா அமர வேண்டி வந்தது. இருவருக்குமே படபடப்பாக இருந்தது. எதேர்ச்சையாக கைகள் தொட்டுக்கொண்டன. 

“சாரி” என்றான் தருண். 

“சாரமில்லா” என்றாள். 

என்ன படமோ ஒன்றும் மனதில் லயிக்கவில்லை. என்னமோ சொல்ல தெரியாத அனுபவம். கொஞ்சம் படபடப்பு, கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் ஆச்சர்யம். 

கொஞ்சம் கூச்சம் என்று கலந்திருந்தது.

படம் முடிந்து வெளியே வந்து அவளிடம் ஜாடையில் விடைபெற்று வீடு வந்தான். மனம் ஒரு நிலையில் இல்லை தடுமாற்றம் கொண்டது.

இதனிடையில் கனிகாவும் நிதினும் கருணாவிடம் மிகவும் நெருங்கிவிட்டனர்.

இருவருக்கும் எப்போதும் அவளைப் பற்றிய பேச்சுதான். அது அப்படியே அங்கே தாய் வீட்டிலும் எல்லோர் காதுக்கும் எட்டியது. கனிகாவும் நிதினும் இரவு தருணிடம் அமர்ந்து பேசியபடி கொஞ்சம் நேரம் கழித்துவிட்டுதான் தூங்க செல்வது வழக்கம்.

“டாடி” என்றான் நிதின், “ம்ம்” என்றான் தருண்.

“அம்மா இனி வரமாட்டாளா?” என்று கேட்டான். அவனை திடுக்கிட்டு பார்த்து “அதே நிதின், வினு இனி வரமாட்டா” என்றான். 

“அப்போ எங்களுக்கு அம்மா இல்லையா?” எ
ன்றான் அழுகை முட்ட.

“இல்லைடா குட்டா, இனி ஞாந்தன்னே நினக்கு எல்லாமாய் இருக்கிம்” என்றான் அவனை அள்ளி எடுத்துக்கொண்டு. 

“எனிக்கி மம்மீ வேணம்” என்று அழுதான். அழுகையினூடே சட்டென்று முகம் மலர்ந்து, “டாடி நான் ஒண்ணு பறையட்டே” என்றான். “என்ன?” என்றான் தருண்.

“கருணா ஆண்ட்டி உண்டல்லோ, அவர நமக்கு இங்க ஞங்களூட அம்மை ஆயிட்டு வரான்னு கேட்டாலோ?” என்றான். 

“ஹா, நல்ல ஐடியா” என்றாள் கனிகாவும் சேர்ந்துகொண்டு. 

“ஹே, எந்தா நீங்கள் இங்கன.... தப்பு.... அங்கன பறையண்டா..... கருணா இவிட எப்படி வரும்.... அவள் நிண்டே அம்மையில்லா” என்றான்.

“எனிக்கி ஆண்ட்டியை வேணம்” என்று மேலும் அழுதான். அவனை சமாளிப்பது கடினமானது தருணுக்கு. 

“சரி சரி நோக்காம்.. நீ போய் கிடந்நு உறங்கு” என்று அனுப்பி வைத்தான். பின் கனிகாவின் முகம் கண்டான். அதில் ஏதோ சொல்ல விழைந்த பாவம் கண்டான்.
“எந்தா கோந்தே?” என்றான் ஆதரவாக. 

“டாடி ஆண்ட்டியை, கல்யாணம் கழிச்சாலோ” என்றாள். 

“கனிகா, இட்ஸ் நாட் பாசிபிள்” என்றான் இயலாமையோடு. 

“வை நாட் டாட்?” என்றாள். 

“அது... நான்... எங்ஙன பறையும்..... சொன்னாலும் நிங்கள்கு புரியாது” என்றான். “சரி டாட், குட் நைட்” என்று கோவமாக சென்றுவிட்டாள். தருணிடம் இருந்து ஒரு பெருமூச்சுதான் வந்தது.

கருணாவை காணும்போதெல்லாம், உள்ளுக்குள்ளே அவனுக்கு கொஞ்சம் ஆசை துளிர் விட்ட போதும் தான் வினுவுக்கு செய்யும் துரோகமோ என்று எண்ணி உள்ளூரக் கலங்கினான் தருண். வினுவை மறக்க இயலுமா என்று திணறினான். ‘நான் மறக்க முயலவில்லை... என்னால் முடியாது, ஆனால் கருணாவை பிடித்திருக்கிறது என்பதும் நிஜம்தான்’ என்று மனம் தடுமாறியது. செய்வதறியாது திகைத்து தூங்கிப் போனான்.
அங்கே வீட்டில், “அம்மே, ஏதானும் புரியறதோ அம்மைக்கு?” என்று கேட்டாள்.
“எந்தா சாரதே?” என்றார். 

“தருண் கருணாவினே இஷ்டபடுன்னு னு எனிக்கி ஒரு டவுட் அம்மே” என்றாள்.
“எந்தாடீ, நீ சொல்றது நிஜமானோ,?” என்றாள் கல்யாணி கண்கள் விரிய. “எண்டே குருவாயூரப்பா இது நடக்கணம், நீ நடத்தி வெய்க்கணம்” என்று வேண்டினாள்.

அங்கே ஆபிசில் தினமும் பார்த்து பேசி அன்பான ஒரு நட்பு, ஆழமானது இருவரிடையே. கருணாவிற்கு தருணின் மீது காதல் வந்தது.... அதை அவள் மெல்ல மெல்ல உணர்ந்துவந்தாள்.... அவன் அவளை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் அவள் தன்னை இழந்து வந்தாள்.... அவனின் அழகு, கம்பீரம், திறமை, அறிவு அனைத்துமே அவளை கவர்ந்தது.

‘ஐயோ ரெண்டு பிள்ளைக்கு அச்சன், வாழ்வில் அடிபட்டு துன்பப்பட்டு இப்போதானே கொஞ்சம் தெளிஞ்சிருக்கார்.... நான் போய் எப்படி...?” என்று நிதானித்தாள். ‘அவருக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணம் இருக்குமோ இல்லையோ’ என்று நினைத்து கலங்கினாள்.

அப்போது கோவிலில் வைத்து பார்த்து, சாரதா கருணாவிடம் நட்பு கொண்டாள். அதனை அடுத்து அடிக்கடி அவளை வீட்டிற்கு அழைத்து குடும்பத்துடன் பழக வைத்தாள். அனைவருக்கும் அவளை மெல்ல மெல்ல பிடித்துப் போயிற்று.
அன்று ஞாயிறு மதியம். சுசியின் பிறந்த நாள் என்று கூறி அவளையும் சாப்பிட அழைத்திருந்தாள் சாரதா.

“காருண்யா ஒரு நல்ல பாட்டு பாடு மோளே” என்று கேட்டார் கல்யாணி.
“ஐயோ எனிக்கி பாட்டெல்லாம் வராது அம்மே” என்றால் கூச்சத்துடன். தருண் அவளையே பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க அவளால் பாட முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் அவனது குடும்பம், என்றேனும் இந்த இனிய குடும்பத்தின் ஒரு பாகமாக தானும் ஆவோமா’ என்ற ஏக்கம் மனதில் எழுந்தது. சாரதாவும் உந்த பின் மெல்லிய குரலில் பாடத் துடங்கினாள்.

அஞ்சன கண்ணெழுதி ஆலில தாலி சார்த்தி
அரப்புற வாதிலில் ஞான் காத்திருன்னு
மணவாளன் எத்தும் நேரம்
குடுமையில் சூடனொரு
குடமுல்ல மலர் மால கோர்த்திருன்னு...

என்ற பழைய மலையாள திரைப்பட பாடலை அவள் மனமுருகி பாட கண்கள் அகல அவளை வியந்து பார்த்தான் தருண். அவன் கண்கள் அவளைவிட்டு அகலவில்லை. 

சாரதாவும் வருணும் கல்யாணியும் கூட அதை கவனித்துக்கொண்டனர்.

‘தன் மணாளனை எண்ணி அவன் வர காத்திருந்த பெண், மாலை கோர்த்து வைத்து, பட்டும் உடுத்தி, மை எழுதி பொட்டும் வைத்து அரண்மணை வாயிலில் காத்திருக்கிறாள்’ என்ற அர்த்தத்தில் ஓடிய பாட்டு அது.

அவள் அந்தப் பாட்டை ஏன் பாடினாள். அதன் அர்த்தம் என்ன... அதன் மூலம் அவள் கூறாமல் கூறிய செய்தி என்ன... என்று அனைவருக்கும் முக்கியமாக தருணுக்கு யோசனை வந்தது. கனிகாவும் நிதினும் அவள் பக்கத்தை விட்டு அகலவில்லை. 

அவர்கள் கூட சேர்ந்து இப்போதெல்லாம் சுசியும் விநீத்தும் கூட அவளுடனே சுற்றித் திரிந்தனர்.

அவள் அந்த வீட்டின் கூடத்தின் ஓர் பக்க திண்ணையில் அமர்ந்து பாட, கனிகா ஒரு புறமும் நிதின் மறுபுறமும் அவள் மடியில் தலை வைத்து படுத்தபடி பாட்டை கேட்டிருந்தனர். அந்தக் காட்சி அனைவர் கண்ணையும் கட்டிப்போட்டது.

அவள் விடைபெற்று கிளம்பிச் சென்றாள். அன்று அவள் மனதுமே ஒரு நிலையில் இல்லாது காதல் உணர்வில் தளும்பி நின்றது. பாடும்போது அடிக்கடி கடைக்கண்ணால் தருணை கண்டாள். அவனும் அவள் பாடுவதை வியப்புடன் கண்ணில் ஒரு மின்னலுடன் கண்டுகொண்டுதான் இருந்தான் என்பதை அறிந்தாள். 

லேசாக முகம் சிவந்து போனது.

அவள் சென்றபின் பிள்ளைகள் தூங்கிவிட, சாரதாவும் வருணும் தருணிடம் வந்து அமர்ந்தனர். சாதுவாக ஆரம்பித்தாள் சாரதா. 

“நல்ல பெண்ணு, அல்லே சேட்டா” என்றாள். 

“அதே சாரதே” என்றான் வருண் பின்பாட்டு பாடியபடி. சாரதா ஏதோ நினைத்து இந்தப் பேச்சை ஆரம்பித்து இருக்கிறாள் என்று அறிந்தான்.

“எனிக்கி அவள வளர இஷ்டமாயி கெட்டோ” என்றாள். 

“அதே, நல்லதொரு தரவாட்டுகுடும்பத்து பெண்ணாண.... எந்தா தருண்?” என்று அவனையும் இழுக்க, அவன் என்ன சொல்வதென்று திணறி “அதே சேட்டா” என்றான். 

“ஆபிசில் ஈ பெண்குட்டி எப்படி?” என்றாள் சாரதா,
“எப்படி என்னால், என்ன சொல்ல ஏட்டத்தீ(அண்ணீ)..... அங்கேயும்தான் நல்ல திறமை, நன்னாயிட்டு ஜோலி செய்யும்” என்றான் பட்டும்படாமலும்.

“எந்தா தருண், நீ அவளை இஷ்டபடுன்னோ?” என்று கேட்டான் வருண்.
நிலை தடுமாறி,
“என்ன இப்படி கேட்கறாய் சேட்டா?” என்றான். 

“ஏன் என்ன தப்பா கேட்டேன்... சொல்லு, நீ அவளை இஷ்டப்படறியா... நல்ல பொண்ணாச்சேன்னு கேட்டேன்... அவ்ளோதானே” என்றான். 

“இல்லை, அப்படி ஒண்ணும் இல்லை” என்றான் முனகியபடி. 

“சரி, அது போகட்டே, அவள் நின்னை இஷ்டப்படுன்னுண்டோ?” என்றான்.

“அடராமா, எந்தா இது, இங்ஙன..... அதொண்ணும் எனிக்கி அறியில்லா” என்றான் தருண் அழாத குறையாக. 

“சரி ஞான் கண்டுபிடிக்காம்” என்று சாரதாவும் வருணும் சிரித்துக்கொண்டனர்.

“ஒண்ணும் வேண்டா, பேசாம இருங்கோ ரெண்டு பேரும்” என்று அதட்டினான்.

வீட்டிற்கு அந்தக் குழப்பத்துடனேயே செல்ல, தெளியாத அவன் முகம் கண்டு மேரிக்கு பாவமாக இருந்தது. சாப்பாட்டை அளைந்தபடி ஏதோ யோசனையில் இருந்தான் தருண். அதைக்கண்டு, “என்ன சாப், குச் ப்ராப்ளம் ஹே க்யா?” (ஏதானும் ப்ரோப்ளம் ஆ?) என்றாள் மேரி. 

“ஆங், என்ன மேரி?” என்றான் கலைந்து. 

“எனி ப்ராப்ளம் சாப்?” என்றாள். 

“ஒ நத்திங் மேரி” என்றான். 

“நான் இதெல்லாம் பேசலாமான்னு தெரியலை சாப்.... பட் பேசறேன், நீங்க என் தம்பி மாதிரி..... உங்களோட எல்லா கஷ்டத்திலும் நான் கூட இருந்து பார்த்திருக்கேன்.... (நீங்க உங்க வாழ்க்கையில எந்த சுகமும் அனுபவிக்கலை).... குச் பி ஸுக் நஹி ஹே ஆப்கி ஜிந்தகி மே.... இப்போ கருணாவை உங்களுக்கு பிடிச்சிருக்கு, ஆனா அவங்கள மணக்க துணிவில்லை, அதானே விஷயம்..?” என்றாள். 

“பிள்ளைங்களுக்கும், உங்க வீட்டுல எல்லோருக்கும் அவங்கள பிடிச்சிருக்கு.... நான் சொல்லட்டா சாப், அவங்க ரொம்ப நல்லவங்க.... உங்களுக்கு ஒரு நல்ல துணை அவங்கதான்னு எனக்குத் தோணுது.... பசங்களுக்கு ஒரு நல்ல தாயா அவங்க இருப்பாங்க.... நான் இன்னும் எத்தனை நாள் இவங்கள பார்த்துக்க முடியும்..... எனக்கும் வயசாகுமே, முடியாம போயிடுமே, அப்போ நீங்க என்ன செய்வீங்க சாப்.... யோசிச்சு நல்ல முடிவா எடுங்கோ.... நல்லதே நடக்கும்.... கருணா மேம்சாப் பஹுத் அச்சி ஹே” (கருணா ரொம்ப நல்லவங்க) என்றாள். பின்னோடு அவன் என்ன சொல்லுவானோ என்று தயங்கி உள்ளே செல்ல முற்பட்டாள்.

“தாங்க்ஸ் மேரி, நான் உன்னை இந்த வீட்டு கவர்னஸ்ஸா மட்டும் இல்லை, என்னோட மூத்த சகோதரியாத்தான் பார்க்கறேன் நடத்தறேன்.... நீ சொன்னதைப் பத்தி நான் யோசிக்கிறேன்” என்றான் புன்னகையுடன். 

உடனே மலர்ந்து “தேங்க்ஸ் சாப்” என்றாள் மேரி.

இந்நிலையில் அங்கே கருணாவின் வீட்டில் அவளுக்கு மனக் குழப்பம் ஏற்பட்டது. அன்று வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றதும் அவளது மாமா வந்திருப்பதைக் கண்டாள்.
“தா பார்த்தியோ, அம்மாவன் (மாமா) வந்திருக்கா” என்றபடி உற்சாகமாக அவருக்கென ஸ்பெஷலாக உணவு சமைத்துக் கொண்டிருந்தாள் அவளது அன்னை.
“அம்மாவன் வரணம்..... எங்கன இண்டு, வீட்டிலே எல்லோரும் சுகம்தன்னே அல்லே” என்று விசாரித்தாள். அவருக்கு இவளை எப்போதுமே பிடிக்கும். 

“வா மோளே, எல்லோரும் சுகம்தன்னே.... நீ எங்கன இண்டு..... நிண்டே ஜோலியோ?” என்று கேட்டார் அருகே அமர்த்திக் கொண்டார். முதுகை தலையை என்று தடவி கொடுத்தபடி கேட்டார்.

அவளுக்கு பூச்சி ஊறுவது போல இருந்தது. அவர் எப்போதும் அப்படித்தான் தொட்டு பேசுவார். அன்னையின் கண்களுக்கு அது பாசத்தின் வெளிப்பாடாகத் தோன்றும்.... ஆனால் கருணாவுக்கோ எப்போதுமே அருவருப்பாகத்தான் இருக்கும்.... போறது வயதில் முதிர்ந்தவர் என்று பேசாமல் ஒதுங்கி அமர்ந்து கொள்வாள். 

“என்தாடீ நினக்கு என்கிட்டே கூட நாணம்?” என்று அவர் கிண்டல் செய்வதும் உண்டு. அவர் மனதில் ஏதேனும் வக்கிரத்துடன் இதை செய்தாரோ அல்லது அவரது இயல்பே அதுவோ, கருணாவால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

“தா கேட்டியோடி மோளே, அம்மாவன் நினக்கு கல்யாணத்தினே ஒரு நல்ல வரன் கொண்டு வந்துட்டுண்டு” என்றாள் அவள் தாய் அம்பிகா. 

“எந்தா?” என்று அதிர்ந்தாள். மனக்கண் முன் ஒரு கணம் தருண் வந்து மறைந்தான்.
“எனிக்கு இப்போ கல்யாணம் வேண்டா அம்மே” என்றாள். 

“அது எந்தினா அங்கனே?” என்றாள் அவள் காட்டமாக. “நினக்கு இருபத்தி எட்டு கழிஞ்சு, பின்ன எப்போவாக்கும் கல்யாணம் பண்ணிப்பாய்?” என்று கேட்டாள்.

“நான் கல்யாணம் கழிஞ்சு போய்டா அனியன் விஷ்ணுவ யாரு படிக்க வெய்ப்பா, இந்தக் குடும்பத்த யாரு பார்த்துப்பா, புரிஞ்சுண்டு பேசறியா நீ அம்மே” என்றாள்.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்னு... நீ இந்த வரனை ஒத்துக்கோ... அது மதி” என்றார் மாமா. 

“இல்லை, எனக்கு பிடிக்கலை” என்றாள். 

“அதெந்தா, காணாமலே பிடிக்கலைன்னா எந்தா அர்த்தம்?” என்று கத்தினாள் அவள் தாய். 

“நினக்கு பிடிச்சாலும் இல்லை எங்கிலும் ஈ கல்யாணம் ஞான் நடத்தும்..... நீ பார்த்துக்கோ” என்றாள்.

2 comments:

  1. Kerala natilam pengaludane! மதுரத் தமிழும் மயக்கும் மலையாளமும் கலந்து கொஞ்சுகிறது நம்மை!

    ReplyDelete