Sunday, 19 August 2018

NESAMULLA VAANSUDARE - IRUDHI PAGUDHI

“ம்ம்” என்றாள்.
“ஹே என்ன அழறியா?” என்றான் காதலாக. கண்ணில் நீர் முட்டி நின்றதுதான்.
“ம்ம்” என்றாள்.
“சி அசடா நீ, விடும்மா, கலங்காதே.... இனி அவ தொந்தரவு செய்ய மாட்டா” என்றான் ஆறுதலாக.
“கவலைப்படாம தூங்கு டார்லிங்” என்றான். ஓகே என்று வைத்தனர். அவளுக்கு ஏது தூக்கம். மனம் புரண்டது பயம் அப்பிக்கொண்டது.

அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகம் செல்ல அவள் தன் வேலையில் பிசியாக இருந்தாள். அப்போது யாரோ ஒரு பெண் சித்துவின் அறைக்கு வந்திருப்பது தூரத்தில் கண்ணில் பட்டது. ஒரு வேளை ஒரு வேளை ஷாலுவா என்று துடித்து போனாள் சங்கீதா. ஆம் அது ஷாலுதான். அவனை காணவென நேரே ஆபிசிற்கே வந்துவிட்டாள்.

“என்ன, உங்க வுட்பியும் இங்கதான் வேலை பார்க்கிறாங்களாமே..... அவங்கள எனக்கு அறிமுகம் செய்ய மாட்டீங்களா சித்து?” என்று அவன் நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்து அவன் மீது சாய்ந்தபடி கொஞ்சினாள்.
“நீ எங்க இங்க வந்தே, உன்னை யாரு உள்ள விட்டது..... இறங்கு முதல்ல வெளியே போ” என்று கத்தினான்.
“சும்மா சத்தம் போடாதீங்க சித்து.... நான் எல்லாம் அறிஞ்சு தயாரா தான் வந்திருக்கேன்.... நீங்க என்னை வெளியேத்தினா உங்களுக்குத் தான் அவமானம்...... நீங்க என்னை கல்யாணம் செய்துகிட்டுதான் ஆகணும், இல்லேனா நான் உங்க வுட்பி கிட்ட பேச வேண்டி இருக்கும்” என்றாள்.
“என்ன, மிரட்டறியா..... அவளுக்கு ஏதுக்கே எல்லாமே தெரியும்... சோ நீ உன் நாடகத்தை நிறுத்தீட்டு... கிளம்பு” என்றான்.

“இதுவரை நடந்தது தெரிஞ்சிருக்கலாம்..... ஆனா, நான் சொல்வேனே இன்னிக்கி நீங்கதான் என்னை இங்கே வரச் சொன்ணீங்கன்னு,.... என்னோட கிளம்பி ரிசார்ட்டுக்கு போக ப்ளான் பண்ணீங்கன்னு எல்லாம் சொல்லுவேனே..... அப்போ என்னாகும்னு யோசிச்சீங்களா.... நான் அப்படி எல்லாம் செய்து உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னு பார்க்கறேன்..... அதனால் மரியாதையா என்னோட இப்போ கிளம்பி வெளியே வாங்க.... நான் ஒரு நல்ல துணி கட்டி நகை போட்டு பல நாள் ஆச்சு..... பெரிய ஹோட்டல்ல போய் ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிடலை..... என்னோட வாங்க, ஷாப்பிங் செய்யலாம், அப்படியே சாப்பிட்டுவிட்டு எங்கானும் ஊர் சுற்றலாம்” என்று ப்ளான் போட்டாள்.

“அதுக்கு வேற ஆளப் பாரு.... நீ முதல்ல இங்கிருந்து வெளியே போறியா இல்லை ஆளக் கூப்பிட்டு விரட்டவா?” என்று கத்தினான்.
“சத்தம் போட்டா உங்களுக்குத்தான் அவமானம்னு நான் சொல்லல, கிளம்புங்க” என்று மிரட்டினாள். அப்போது யாரோ விருந்தினர் என்று எண்ணி ஆபிஸ் பாய் குளிர்பானம் கொண்டு வந்தான்.
“தாங்க யு” என்றபடி வாங்கி உறிஞ்சினாள்.
“சங்கீதா மேடம சார் கூப்பிடுகிறாருன்னு கொஞ்சம் அழைத்து வரியா?” என்று அவனிடம் அவளே கூறினாள். அவன் சித்துவின் முகம் பார்க்க அவன் வேண்டாம் என்று கூற முயல, “வரச் சொல்லுங்க, இல்லேனா கதையே வேற” என்றாள் ரகசியமாக. சரி அவன் முன் ரசாபாசம் வேண்டாம் என்று தலை அசைத்தான்.

“ஐயோ என் சகி, இவள் முன் அசிங்கப்பட வேண்டுமா” என்று புழுங்கினான். சங்கீதா உள்ளே வர அனுமதி கேட்டு வர ஷாலு இன்னமும் அவன் மீது சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு துணுக்குற்றாள். தலை கவிழ்ந்து எதிர் நாற்காலியில் அமர்ந்தாள். நுனியில் அமர்ந்து “எதுக்கு சர் வரச் சொன்னீங்க?” என்றாள் மெல்ல. அவனை ஏறிடக்கூட அவளுக்கு இஷ்டமில்லை.
“இல்ல... நான்..” என்று தடுமாறினான்.

“இல்ல சங்கீதா, அவர் சார்பில நான்தான் வரச் சொன்னேன்... நாங்க கொஞ்சம் அவசரமா வெளில போக வேண்டியது இருக்கு, சோ, அவர் இல்லாத நேரத்துல ஏதானும் அவசர ஆபிஸ் வேலைகள் வந்தால் நீங்கதான் பார்துப்பீங்களாமே, அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு நான் கூப்பிட்டேன்....” என்றாள் உரிமை பட்டவள் போல. சங்கீதா இதைக் கேட்டு திகைத்தாள். சித்துவின் முகம் பார்த்தாள் அந்தப் பார்வையில் அளவிலா கோவமும் சங்கடமும் வெறுப்பும் கண்டான் சித்து.

‘என்னை உனக்குத் தெரியாதா.... என்னை நீ நம்ப மாட்டாயா?’ என்ற இறைஞ்சல் இருந்தது அவன் பார்வையில்.
“நான் எங்கும் வெளீல வரலை, நீ கிளம்பு” என்றான் மீண்டும்.
“அதான் இவங்க இருக்காங்களே, ஆபிஸ நல்லபடி கட்டி காப்பாத்துவாங்க, நீங்க வாங்க சித்து, நாம ஜாலிய சுத்தீட்டு வரலாம்” என்றாள் மீண்டும். சங்கீதா உடனே எழுந்து வெளியே வந்துவிட்டாள். அவளின் சீட்டை அடைந்து அமர, ஒரே படபடப்பாக இருந்தது.... உடம்பெல்லாம் எரிவதுபோல தோன்றியது.... மடை திறந்தாற்போல அழுகை வந்தது... ‘அவளை அடிச்சு வெளியே தள்ள முடியல, அவ மேல விழுந்து கொஞ்சறா அவளோட சமரசம் பேசிகிட்டு உக்கார்ந்திருக்கான்... இவனுக்கும் இன்னமும் அவ மேல அசை போகல போல’ என்று பொருமி தீர்த்தாள். அவளை ஒரு இயலாமையோடு பார்த்தபடி ஷாலுவோடு வெளியே சென்றான் சித்து.
‘அடப்பாவி போய்டானே அவளோட’ என்று கனன்றது சங்கீதாவிற்கு.

வெளியே சென்றவன் காரில் அவளை ஏற்றி மெயின் ரோட் வந்து ஒரு திருப்பத்தில் காரை நிறுத்தி, “போதும் உன் நாடகம்... இத்தோட நிறுத்திக்கோ.... என் வழில குறுக்கே வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.... இன்று அனாவசியமா நீ என் சங்கீதாவை அவமான படுத்திவிட்டாய்..... இனி நான் பொறுக்க முடியாது.... உன் மேல ஆக்ஷன் எடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, வேண்டாம் அடங்கீடு” என்று மிரட்டினான். அவளா அசருவாள்.

“என்ன முடியுமோ செய்யுங்களேன் சித்து.... நான் தகுந்த ஆதாரத்தோட நிரூபிப்பேன்.... நீங்கதான் என்னை வரச் சொன்நீங்கன்னு.... அன்னிக்கே எனக்காக என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நகை புடவை எல்லாம் எடுத்தீங்கன்னு... என்னை திருமணம் பண்ணிக்கறேன்னு சொல்லி என்னை ஏமாத்தீட்டீங்கன்னு சொல்லுவேன்” என்றாள்
“ஒண்ணும் பலிக்கலைனாலும், நாலு தரம் இப்படி உங்கள வலுக்கட்டாயமா வெளியில அழச்சுகிட்டு போய் ஊர் சுத்தினா அப்பறம் சங்கீதா உங்கள வெறுத்துடுவா, திரும்பியும் பார்க்க மாட்டா, என்ன ஓகேவா, செய்யட்டுமா?” என்றாள். அவள் எதற்கும் துணிந்துவிட்டாள் என்று உணர்ந்தான். ‘இவள் இப்படி எல்லாம் பேசினால் இவளை யாரும் நம்பப் போவதில்லைதான், ஆயினும் அது அசிங்கமாகும், சங்கீதாவிற்கு அவமானமாகும்... தன்மையாகத்தான் இவளை டீல் செய்ய வேண்டும் என்று தணிந்த குரலில், “உனக்கு இப்போ என்ன வேணும்?” என்றான். லிஸ்ட் அடுக்கினாள்.

“என்னால உன்கூட வர முடியாது, ஆனா நான் பணம் குடுக்கிறேன், நீ போய் வாங்கிக்கொள்” என்றான்.
“இல்ல நீங்க என்னோட வரணும்” என்று அடம் பிடித்தாள்.
“இன்னிக்கி முடியாது, முக்கயமான மீட்டிங் இருக்கு, அதனால் இன்னிக்கி நீ போ.... நாளைக்கு நான் உன்னோட வரேன்” என்றான். அவன் அவளைக்கண்டு பயந்துவிட்டான் என்று வெற்றி களிப்பு ஷாலுவிற்கு. சரி என்று வந்த பணத்தை விடாமல் வாங்கிக்கொண்டு ஒரு கால் டாக்சியில் ஏறி ஷாப்பிங் சென்றாள். அவன் சென்றது ஒரு மீட்டிங்கிற்குதான்.

இப்படி அவள் தினமும் ஆபிஸ் வருவதும் அவனிடம் கொஞ்சுவதும் சில சமயம் அவளுடன் அவனும் வெளியே செல்வதும் ஆபிசே கண்டு பின்னே புரளி பேசியது. சங்கீதா வாழ்க்கையை வெறுத்தாள். சித்துவை வெறுத்தாள். இனி அவனை தான் மணக்க முடியாது என்று தீர்மானித்தாள். வேலையை ராஜினாமா செய்ய கடிதம் எழுதி அவனுக்கு இமெயில் அனுப்பினாள்.
‘ஏற்க முடியாது நான் உன்னோடு பேச வேண்டும்’ என்று பதில் வந்தது. அவனை சந்தித்து ஒரு வார்த்தையும் பேச அவளுக்கு இஷ்டமில்லை. ‘முடியாது’ என்று வேலைக்கு வராமல் வீட்டில் அமர்ந்தாள். இந்த நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

போனில் அழைத்தான், பேச மறுத்தாள்... மீண்டும் மீண்டும் என முயன்றான்.
“என்னதான் வேணும் உங்களுக்கு, நான் உங்களோட பேச விரும்பல... நீங்க இன்னும் அவள மறக்கல... என் கூட பேசியதெல்லாம் நடிப்பு... என் மேல ரொம்ப காதல், நான் இல்லாம வாழவே முடியாதுனு சொன்னதெல்லாமே பொய் பித்தலாட்டம்... அதான் அவ கூப்டு ஐயோ னு அழுததும் நான் சொன்னதே போதும்னு அவ பின்னாடி ஓடீட்டீங்க, இப்போ அவ சுண்டு விரல்ல சுத்தி விடறா... நீங்களும் பம்பரம் போல அவ இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடறீங்க.”

“ச்சே அசிங்கமா இல்ல. ஆபீசே கொல்லுனு சிரிக்கிது உங்க நடவடிக்கையை பார்த்து.
உங்களுக்கு இருக்கோ இல்லையோ, எனக்கு அசிங்கமா அவமானமா இருக்கு. நான் இனி உங்களை மணக்க முடியாது, உங்க கிட்ட வேலையும் செய்ய முடியாது. இனி எனக்கு போன் பண்ணவோ பேசவோ சந்திக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். குட்பை” என பொரிந்து தள்ளிவிட்டு பதிலுக்கும் காத்திராமல் போனை வைத்துவிட்டாள்.
அவன் மீண்டும் அழைத்து தன் நிலை உணர்த்த முயல அவள் போனை சுவிச் ஆப் செய்து வைத்திருந்தாள். தோற்றான். பாரம் அமர்ந்தது மனதில். மண்டை விண் விண்ணென வலித்தது. சுருண்டு படுத்தான். தொய்ந்து போனான்.

“ஆபிசில் எல்லோருக்கும் தெரிந்து அசிங்கமான சீன் வேண்டாம்.... தயவு செய்து ஆபிஸ்ற்கு மட்டுமானும் வா, நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டேன்... பேச முயல மாட்டேன்” என்று மெசேஜ் விடுத்தான். மனமில்லாமல் சென்றாள். ஒரு வாரம் போல ஓடியது.

“இன்று எல்லாவற்றுக்கும் முடிவுரை, மாலை ஐந்து மணிக்கு இந்த ஹோட்டலுக்கு வரவும்.... ப்ளீஸ் எனக்காக, என் மேல் நீ கொண்ட காதல் உண்மை என்றால் வா” என்று மெசேஜ் அனுப்பினான். “முடியாது” என்றே பதில் அனுப்பினாள்.

ஆனால் மணி ஐந்தை நெருங்கியது மனம் தவித்தது. ஒரு டாக்சி பிடித்து அங்கே சென்றாள்.... அவன் சொன்ன அறையின் சாவியை வரவேற்பில் பெற்று உள்ளே சென்று அமர்ந்தாள்.... சிறிது நேரத்தில் அவன் குரல் கேட்டது போலத் தோன்றியது.... எங்கே இருந்து வருகிறது குரல் என்று தேடினாள்.... அந்த அறைக்கும் பக்கத்து அறைக்கும் நடுவே ஒரு உள் கதவு இருந்தது. அதன் பின்னிலிருந்து வந்தது அவன் குரல். அவள் கேட்க வேண்டும் என்றே அவன் உரக்க பேசினான் போலும், அவள் கதவின் இந்தப் பக்கம் நின்று மூச்சுவிடாமல் கேட்கத் துவங்கினாள்.

“சரி ஷாலு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் குழைவாக சித்து. தூக்கிவாரி போட்டு வியர்த்து கொட்டியது சங்கீதாவிற்கு. அவன் வசமாக வலையில் சிக்கினான் என்று கொக்கறிதாள் ஷாலு.
“நல்ல முடிவு சித்து..... குட் எப்போ பண்ணிக்கலாம்?” என்றாள்.
“உன் இஷ்டம்” என்றான்.
“இப்போ உன் மாமனார் இங்க வருவாரு, அவர்கிட்டேயே கேட்டு முடிவு பண்ணிக்கலாமா?” என்றான்.
“என் மாமனாரா, உன் அப்பாவா சித்து?” என்றாள்.
“ஆமா அப்பன், வரார்” என்றான் சித்து கேலியாக. “ஒ” என்றாள் ஷாலு கொஞ்சம் படபடப்பாக. ‘இவன் அப்பாவாவது, இங்கேயா, ஏன் வருகிறார்?’ என்று உள்ளே குடைந்தது.

“அவர் இங்க ஏன் வரணும் சித்து, அப்பறமா வேணும்னா நாமளே உங்க வீட்டுக்கு போய் அவங்களப் பார்த்து ஆசிகள் பெறலாமே?” என்றாள்.
“ஆனா அவருக்கு தன் மருமகளப் பார்க்க ஆசை இருக்குமே, பொன் காப்பு வெள்ளி காப்பூ போடணும்னு ஆசையா இருக்காமே” என்றான். அவனின் கேலி குரல் ஷாலுவிற்கு விளங்கவில்லை. அவளுக்கு ஏசி அறையிலும் வேர்த்தது சரி என்றபடி அமர்ந்தாள்.

பேச்சை வளர்த்தும் பொருட்டு, “அப்பறம் ஷாலு, சொல்லு, அந்த வினோத் என்ன பண்ணான்?” என்று கிண்டினான்.
“அவனா, பொழப்ப கெடுத்தான்..... அமெரிக்கா போலாம் வான்னு கூப்பிட்டுகிட்டு போய் அடைச்சு வெச்சான்..... செலவுக்கு கூட பணம் தரலை.... என்னை அடிமையாக்கினான்..... என்னை குழந்தை பெத்துக்கணும்னு கட்டாயப்படுத்தினான்” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

“ஒ அப்படியா, நீ என்ன பண்ணினே?” என்றது வேறு ஒரு குரல். அந்தக் குரலை உணராமல், “நான் இவனுக்கெல்லாம் மசிவேனா என்ன, அவன் என் பேர்ல போட்டிருந்த பணம், என் பேர்ல வாங்கின சொத்து பத்திரங்கள், அவன் வாங்கித் தந்த விலை மதிப்பில்லாத சாமான்கள் உடைகள் நகைகள்னு எல்லாத்தையும் சுருட்டிகிட்டு அவனுக்கே தெரியாம கல்தா குடுத்துட்டு ஓடி வந்துட்டேன்..... என்னை அங்க காணாம தேடிகிட்டு இருக்கும் அந்த பைத்தியம்..... விவாகரத்து பத்திரம் வெச்சுட்டு வந்துட்டேன்.... இனி அவன் என்னை ஒண்ணுமே பண்ண முடியாது.... அது ஒரு பேக்கு, என்னை யாரானும் அடக்கி ஆள முடியுமா... நான் ஒரு சுதந்திரப் பறவை இல்லையா” என்றாள் இருமாப்பாக.

“அடிப்பாவி” என்று எண்ணிக்கொண்டாள் சங்கீதா.
“அப்போதே, “யார பேக்குன்னே, என்னய்யா ஷாலு?” என்றபடி இன்னொரு ரெண்டாவது குரல் கேட்டது. ஷாலு அங்கே வெலவெலத்து போயிருப்பது அறிந்தாள் சங்கீதாவிற்கு. அப்போது யாரோ நடு கதவின் தாழ்பாளை நீக்கும் சப்தம் கேட்டு சங்கீதா கதவை மெல்ல தள்ளினாள். ஒரு அங்குலம் மட்டுமே திறந்து வைத்துக்கொண்டு உள்ளே பார்க்க அங்கே சித்து இவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கண் சிமிட்டினான்.

அங்கே வினோத் வந்திருக்க, அவனைக் கண்டுதான் நடுங்கிக்கொண்டிருந்தாள் ஷாலு.
“நீங்க, நீங்க.... இங்க எப்பிடி?” என்றாள்.
“உன்னைப் பிரிந்து என்னால வாழ முடியுமா டார்லிங், நீ என் ஆசை மனைவி இல்லையா.... அதான் ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுனு’ உன் பின்னாடியே ஓடி வந்துட்டேன்” என்றான் அவன் கிண்டலாக. ஆனால் அவன் முகத்தில் ரௌவ்த்ரம் தெரிந்தது.
“ஷாலு, உன் மாமனாரப் பார்க்கணும்னியே வந்திருக்கார் பார்க்கலாமா?” என்று “வாங்க” என்று அழைத்தான். அதே நேரம் போலிஸ் ஆபிசர்கள் உள்ளே நுழைந்தனர்.
“இதோ, உன் மாமனார் மச்சினர் எல்லோரும் உன்னை மாமா வீட்டுக்கு அழைத்துப்போக வந்திருக்காங்க..... அங்கதான் உனக்கு கல்யாணம் கருமாதி எல்லாமே நடக்கும் கிளம்பு” என்றான் வினோத் கேலியாக. ஷாலு முற்றிலும் துவண்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

சங்கீதாவிற்க்கு புரிந்தது. ‘சித்து, அவள் சொல்படி எல்லாம் ஆடி நடித்து போலிசின் உதவியுடன் வினோதை வரவழைத்துள்ளான்..... அவனின் உதவியோடு அவள் மீது புகார் செய்து அவளை கைது செய்ய ஏற்பாடு செய்துவிட்டான்’ என்று. ஓடிப்போய் சித்துவை அணைத்துக்கொள்ள மனம் நாடியது. மெல்ல ஷாலு முன்னே போலீசுடன் நடக்க சித்து பின்னே ரெண்டடி எடுத்து வைத்து கதவை முழுமையாகத் திறந்தான்.

“சித்து” என்று அவனிடம் ஓடிப்போய் நெருங்கி நின்று கொண்டாள்.
“என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” என்றாள்.
“உஷ் பேசாம இரு, இதெல்லாம் வேண்டாம்” என்று இடது கையால் அவள் இடுப்பை வளைத்து பிடித்தபடி நின்றான்.
“தேங்க்ஸ் வினோத், உங்களால்தான் என் வாழ்க்கை பிழைத்தது, இதான் என் வுட்பி சங்கீதா.... எங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையையும் காப்பாத்தீட்டீங்க” என்று அவன் கை குலுக்கி நன்றி சொன்னான்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் சித்தார்த்.... உங்க மெசேஜ் கிடைச்சதனால்தான் இவ இங்க இருக்கான்னு தெரிஞ்சுது, என்னோடு ஆசை வார்த்தை பேசி, மணமுடித்து அங்க வந்தபின் என் வாழ்க்கையையே நரகமாக்கிட்டா.... எப்போ பாரு ஷாப்பிங், ஊதாரிச் செலவு..... நான் டாக்ஸ் கணக்கிற்காக இவள் மீது முதலில் வாங்கிய சொத்து பத்தியெல்லாம் எப்படியோ தெரிஞ்சுகிட்டு, எல்லா பத்திரத்தையும் என் லாக்கர்லேர்ந்து திருடிக்கிட்டு நகை நாட்டோட கம்பி நீட்டிட்டா... நல்லவேளை நான் உழைத்து சம்பாதித்து பறிபோகாமல் காப்பாற்றிட்டீங்க” என்றான் அவனும்.
“என்னோடு மனம் ஒத்து குடித்தனம் பண்ணி இருந்தா, இயல்பாகவே இதெல்லாம் அவளுடைய சொத்துதான்.... அது புரியல இந்த லூசுக்கு.... என்ன பண்றது..... எல்லாம் என் தலை எழுத்து...” என்றான்.
“கங்க்ராட்ஸ் சங்கீதா” என்றான் அவளிடம். “தேங்க்ஸ்” என்றாள் அவள் நாணத்துடன்.
“ரொம்ப உசத்தியானவர் உங்க அவர்” என்றான். அவள் அவனை நிமிர்ந்து கண்களில் ஒரு வித பெருமையோடு பார்த்துக்கொண்டாள். அவன் அவள் இடையை மேலும் இறுக்கிக்கொண்டான்.
“சரி நான் வரேன், போலிஸ் கிட்ட போகணும்... இன்னமும் எனக்கு வேலை இருக்கு, ஷாலு இந்த ஷாக் ட்ரீட்மென்ட்னால, நல்லபடியா இனியானும் திருந்தி ஒழுங்கானவளா மாறி என்னோட குடித்தனம் பண்ண ஒத்துகிட்டா அவளையும் அழச்சுகிட்டு திரும்பி போய்டுவேன்..... அவ திருந்தலைனா அவ பேர்ல சீட்டிங் கேஸ் போடத்தான் வேணும்..... என்ன பண்ண போறாளோ பார்க்கணும்” என்றான் பெருமூச்சுவிட்டபடி.

வினோத் விடைபெற அந்த அறையை விடுத்து
, அவளோடு பக்கத்து அறைக்கு வந்தான் சித்து. நடுக்கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான்....
இந்த அறையில் அவள் அமர்ந்து அவனையே பார்த்திருந்தாள். அன்று இவனை என்னவெல்லாம் பேசினேன் நான்..... ஷாலுவை மறக்கவில்லை, தன்னிடம் பேசியதெல்லாம் நடிப்புஎன்று... ஏசினேனே, அவன் உள்ளம் எப்படி கலங்கி இருக்கும்.... அவற்றுக்கு நான் இவனிடம் இப்போது எந்த முகத்துடன் மன்னிப்பு வேண்டுவதுஎன்று அவளுக்கு அவமானமாக இருந்தது. அவள் அருகில்  படுக்கையில் அமர்ந்து, ம்ம் என்றான் புருவம் உயர்த்தி. அவள் தலை கவிழ்ந்தாள்.
என்னடா சகி?” என்றான்

மன்னிச்சுடுங்க சித்துஎன்று நழுவி அவன் பாதங்களை பணிந்தாள்.
ஹே என்ன இது?” என்று பதறி அவளை அள்ளிக்கொண்டான்.
என்னடி இதெல்லாம், பைத்தியமா நீ..... உன் நிலையில் நானிருந்தால் இதை விட மோசமா பேசியிருப்பேன் நடந்திருப்பேன்..... மறந்துடு ஹனிஎன்றான். அவள் அழுகை முட்ட உங்களை கஷ்டப்படுத்தீட்டேன்என்றாள்.
அவள் கண்களை தன் உதட்டால் ஒற்றி எடுத்து
,
இதுக்கெல்லாமா அழறது ஹனி?” என்றான். அவள் முகம் தெளியாமலே இருக்க, “ஒண்ணு வேணா பண்ணலாமா?” என்றான். அவள் ஆவலுடன் என்ன என்றாள்.

உனக்கு மன்னிப்பு கேட்கணும் அவ்ளோதானேஎன்றான் ஆம்என்றாள் கண்ணீருடன்.

சரி அப்போ நான் அன்னிக்கி கேட்டேனே அந்த ட்ரீட் இப்போ தந்துடு, என்ன?” என்றான். அவன் எதைச் சொல்கிறான் என்று விளங்க சில நொடிகள் ஆகின. சி போஎன்று முகம் சிவந்து கவிழ்ந்தாள்.
ப்ளீஸ் ஹனிஎன்றான் அவளை மேலும் தன்னோடு இறுக்கியபடி. அதற்குமேல் தாளாமல் அவன் மார்பிலேயே சாய்ந்தாள்.... அதையே அவளது ஒப்புதலாக எடுத்துக்கொண்டான்.... அவள் முகம் நோக்கி குனிந்தான்.... நான்கு இதழ்களும் சேர்ந்து அங்கே கவிதை எழுதின.... மேலும் அவள் முகம் எங்கும் அவன் முத்தக் கோலம் வரைந்தான்.... அவள் முகம் மேலும் சிவந்து துடிப்பதை கண்டு சிரித்துக்கொண்டான்.

பிளீஸ் சித்துஎன்றாள் அவன் காதோடு. சரி என்று விடுவித்தான். அவள் கண்மூடி கிடக்க அவள் உதடுகள் துடித்துக்கொண்டு இருந்தன. அவனை அது என்னமோ செய்தது... மீண்டும் அவளைத் தழுவி அவள் கழுத்தில் முகம் பதித்தான். கைகள் எல்லைமீற ஒரு நிலையில் அவள் தடை போட்டாள். அவனை வெட்கத்துடன் விலக்கி எழுந்து அமர்ந்தாள்.

போலாம், இங்க இருந்தா வம்புஎன்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கி அவனுடன் எழுந்து நடந்தாள். அவளது வீட்டில் அவளை இறக்கி விட காரில் கூட்டிச் சென்றான்.
எப்படி சித்து?” என்று கேட்டாள்.
அதுவா, ஒண்ணுமில்லைடா...என்று சொல்லத் துவங்கினான்.
அன்னிக்கி இவ ஆபிஸ் வந்தா இல்ல, தன்னோட என்னையும் வெளியே இழுத்துகிட்டு போனா இல்லை, அப்போவே இவ உள் நோக்கம் எனக்கு புரிஞ்சுபோச்சு....... இவள தன்மையாத்தான் பேசி ஜெயிக்கணும்னு திட்டம் போட்டேன்..... பணம் தானே போனா போகுதுன்னு குடுத்து ஷாப்பிங் செய்ய அனுப்பீட்டு, நான், என் நண்பன் ஒருத்தன் போலீஸ்ல பெரிய பொறுப்புல இருக்கான், அவன்கிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன்..... அவன் மூலமா வினோத கண்டு பிடிச்சோம்.... அவருக்கு இவளப் பத்தி மெசேஜ் அனுப்பினோம்..... உடனே இங்கே வர முடியுமான்னு கேட்டோம்.... அவரும் இவளைத்தான் தேடிகிட்டு இருந்தாரு போல, உடனே வரேன்னு கிளம்பி வந்துட்டாரு....

இவ வாயாலேயே அவ செய்த அனைத்தையும் ஒத்துக்க வைக்கணும்னு போலிஸ் நண்பன் பிரபுவின் உதவியுடன் இந்த ரூம் எடுத்தோம்..... உனக்கும், நான் வாயால சொல்லாமலே உண்மை புரியணும்னு இந்த நடுவுல கதவு இருக்குற மாதிரி அறையை நான் தேர்ந்தெடுத்தேன்.... பிளான்படி நான் அவகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி உண்மையை வரவழைச்சேன்.... வெளியே நின்னு இவ பேச்சை கேட்டுகிட்டே வினோத் மற்றும் போலிஸ் ஆட்கள் உள்ளே வந்தாங்க.... அதன்பின் நடந்தது தான் உனக்கே தெரியுமே ஹனிஎன்றான்.

கிரேட் சித்து... இது புரியாம நான் ரொம்ப சின்னத்தனமா நடந்துகிட்டேன்என்றாள் வருத்தத்துடன்.
அதை விடவே மாட்டியாடீ நீ?” என்று செல்லமாக கடிந்து கொண்டான். அவனின் உரிமையான டீ எனும் விளிப்பில் கரைந்தாள் சங்கீதா. அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவன் தன் வீடு அடைந்தான்.
ஹப்பா கடவுளே எவ்வளவு பெரிய கண்டத்தில் இருந்து என்னை காப்பாற்றி உள்ளாய் தெய்வமே என்று நன்றி கூறிக்கொண்டான்.

அடுத்த வாரத்திலேயே முகூர்த்த நாள்.... சங்கீதாவின் திருமணம் வெகு விமர்சையாக சித்தார்த்துடன் நடந்துகொனண்டு இருந்தது. எப்போதும் போல நண்பர்கள் இவர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தனர்.

நல்ல நேரத்தில் அவன் அவள் சங்கு கழுத்தில் தாலி கட்ட
, கண்களில் நன்றியுடன் அவன் முகம் பார்த்தாள்.... மாலையில் இதோ, வரவேற்பு..... ஒத்த உடையுடன் பொருத்தமான ஜோடியாக நின்றனர். அன்று அவனருகே நின்றது அவளுக்கு நினைவு வந்தது. என்ன என்பதுபோல அவளை கண்டு புருவம் உயர்த்தினான். ஒன்றும் இல்லை என்றாள் கண் அமர்த்தி. காற்றில் உதடு குவித்தான். தலை தாழ்த்தி சிவந்தாள். இப்படி அவர்களின் ஒவ்வொரு ரகசிய தருணத்தையும் கமிரா படம் பிடித்து பாதுகாத்தது.

கண்ணில் ஆனந்தக் கண்ணீர் மல்க, தன் மகளுக்கு ஒரு விதமான அவமானமும் இன்றி அவளுக்கு முன்பு நிச்சயித்தவன் கையாலேயே தாலி பாக்கியம் கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்து நின்றனர் கணேசன் சரோஜா தம்பதியினர்.
சுனில் ஓடி ஓடி விருந்தினர்களை சந்தோஷமாக உபசரித்துக்கொண்டு இருந்தான்.
ஒற்றை பிள்ளையின் வாழ்வு செழித்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டனர், மனமும் கண்களும் நிறைந்து, மரகதம் ராமலிங்கம் தம்பதியினர்.

சிஸ்டர், நீங்க உங்க அன்பால சாவித்திரியையே மிஞ்ஜிட்டீங்க.... தாலி கட்டாம ஓடினவன தேடி பிடிச்சு உங்க அன்பால கட்டிப்போட்டு மீண்டும் அவன் கையாலையே தாலி வாங்கிகிட்டீங்களே, யு ஆர் ரியலி கிரேட்என்றான் ஷ்யாம்.
போடா, என் மனைவிய இவன் பாராட்டறான் புதுசா, எனக்குத் தெரியாத என்ன, என் சகியின் அருமைஎன்று அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் சித்தார்த்.

நிறைந்தது.

Saturday, 18 August 2018

NESAMULLA VAANSUDARE - 12

“அதெல்லாம் நீட்டாகத் தான் இருக்கு, நீ பேசு சகி” என்றான்.
“நான் யோசிச்சுப் பார்த்தேன்”
“என்னத்த  யோசிச்சே?” என்றான் குறும்பாக. அவனை முறைத்தாள்.
“சரி சரி சொல்லு” என்றான்.
“உங்கள எனக்கு பிடிச்சிருக்கு, நானும் உங்கள நேசிக்கிறேன் னு புரிஞ்சுது” என்றாள் குரலே வெளிவராமல். அதைக்கேட்ட மாத்திரத்தில் அவன் வண்டியை நிறுத்தியே விட்டான். திரும்பி அவள் பக்கம் அமர்ந்து, ஆழ்ந்து அமைதியாக அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.... பின் மெல்ல ஒருமுறை அழுந்த கண் மூடித் திறந்தான்... அதில் பிரகாசம்.... மெல்ல அவள் கைகளை எடுத்து தன் முகத்தோடு வைத்துக்கொண்டான். மெல்ல இதழிடம் கொண்டு வந்து உள்ளங்கைகளில் முத்தமிட்டான். அவளுக்கு சிலிர்த்தது. கைகளை உருவ முயன்றாள். ஆனால் அவன் இன்னமும் இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டான்.

“தேங்க்ஸ் ஹனி” என்றான். அவள் அந்த மொழி கேட்டு சிவந்து போனாள். “என்னை பூரணமா மன்னிச்சு முழு மனசோட தானே இதை சொன்னே சகி?” என்றான்.
“ஆம்” என்று தலை அசைத்தாள்.
“அப்போ மேற்கொண்டு பெரியவங்க கிட்ட பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்தானே?” என்றான்.
“இப்போவேயா?” என்றாள் கண் உயர்த்தி.
“ஆமா, பின்ன, இதுவே ரொம்ப லேட்.... இனி தாங்காது..... கண்டவன் வந்து அப்ளிகேஷன் போடவா.... அதை நான் பார்த்துகிட்டு கோவப்படவா, என்னால ஆகாது” என்றான். சிரித்தாள்.

“சிரிக்கிறியா, இரு உன்ன” என்று அவள் முகம் நோக்கி குனிந்தான். அவனை தள்ளிவிட்டாள். ஜன்னல் ஓரம் ஒதுங்கி வெளியே பார்த்தபடி மேலும் சிவந்து போனாள். அவளது கன்னச் சிவப்பை கண்டபடி அவனும் புன்னகைத்தான். விசில் அடித்தான். அவள் சிரித்துக்கொண்டாள்.

“சரி நான் எங்கம்மாப்பாகிட்ட பேசறேன்.... எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான். “உங்கப்பாம்மா தான் என்ன சொல்வாங்களோ என்னை மன்னிச்சாங்களோ இல்லையோன்னு கவலையா இருக்கு” என்று ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தான்.

“அதெல்லாம் மன்னிச்சுட்டாங்க, ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்றாள் மெதுவாக. “போலாமா?” என்றாள். சரி என்று அவள் வீட்டின் தெருவில் நுழைந்தான்.
“ஆமா, அன்னிக்கி நீ பர்சனல் மேனேஜரா ஆர்டர் வந்த உடனேயே எனக்கு ட்ரீட் தரேன்னு சொன்னியே, இன்னும் ஒண்ணுமே தரலியே, இப்போவானும்...?” என்று கண் சிமிட்டினான்.
அவள் நாணியபடி, “என்ன ட்ரீட்?” என்றாள். அவன் அவள் பக்கம் குனிய அவளுக்கு அவன் வேண்டுவது விளங்கியது. முகம் மேலும் செவ்வானமானது.
“சி போ” என்று அவனை விலக்கி தன் முகத்தை தன் கைகளில் மறைத்துக்கொண்டாள். அவள் வீடு வந்துவிட ‘ஹ்ம்ம்’ என்று அவன் பெருமூச்சு விட்டான். தன் ஒற்றை விரலை உதட்டில் வைத்து முத்தமிட்டு எடுத்து அவன் உதட்டில் ஒற்றிவிட்டு சிரித்தபடி இறங்கினாள்.

“பை குட் நைட் அண்ட் தாங்க்ஸ்” என்றாள்.
“இனி நமக்குள்ள, தாங்க்ஸ் சாரி எல்லாம் சொன்னேனா என்கிட்டே ஒதபடுவே ஹனி” என்றான் அவன் உல்லாசமாக.
“ஓகே” என்றாள். அவளை இறக்கிவிட்டுவிட்டு விசில் அடித்தபடி உற்சாகமாக வண்டி ஒட்டியபடி வீடு வந்து சேர்ந்தான். அங்கே தன் அன்னையைக் கண்டான்.
“அம்மா எப்படி இருக்கே?” என்று அருகமர்ந்தான்.
“என்ன, அய்யாபிள்ள இன்னிக்கி ஒரே சந்தோஷமா இருக்காபோல இருக்கே?” என்றார் மரகதம்.
“ஆமா மா சகிகிட்ட பேசிட்டேன்... அவளும் என்னை ஏத்துகிட்டா மா” என்றான் சிரிப்பாக.
“அப்படியா, ரொம்ப சந்தோஷம் ராஜா.... சீக்கிரமே நல்லது நடக்கட்டும்” என்று வாழ்த்தினார்.
“என்ன பசிக்கவே பசிக்காதே, வயிறு நிறைஞ்சு போயிடுச்சா?” என்று வாரினார்.
“அம்மா..” என்று கொஞ்சினான்.
“போ போய் முகம் கழுவி சாப்பிடு” என்று அனுப்பினார்.
“அம்மா தாயே காப்பாத்தினே, இம்முறையானும் அந்தப் பொண்ணு கூட சேர்ந்து எம் பிள்ள வாழ்க்கை செழிக்கணும், என்று வேண்டினாள்.

அதை அடுத்து ஒரு வாரகாலமும் அவளை அவனே வீட்டில் கொண்டு இறக்கி விட்டான். அப்போது அவர்களுக்கு பேச நிறைய சந்தர்ப்பம் கிட்டியது. ஆவலாக ஆசையாக காபி ஷாப் பார்க் பீச் என்று அவளுடன் சுற்றினான். அவளுக்கும் அவனின் அருகாமை பிடித்தது, அவன் செய்யும் செல்ல சீண்டல்கள் அவளை நாண வைத்தாலும் அவனின் பேச்சும் சிரிப்பும் அவளை கொள்ளை கொண்டன. மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் இன்னமும் ஆழமாக அறிந்து உணர்ந்து புரிந்து தங்கள் மண வாழ்க்கையைப் பற்றிய இன்பக் கனவுகள் கண்டபடி இருந்தனர்.
அவன் தன் அன்னையிடம் பேசி சீக்கிரத்திலேயே அவள் பெற்றோரை சந்தித்து திருமணம் பற்றி பேசச் சொன்னான். அவரும் அப்படியே செய்ய நல்ல நாள் பார்த்தார்.

அடுத்த ஞாயிறு அவர் போன் செய்துவிட்டு கணவருடன் சங்கீதாவின் வீட்டிற்கே வந்தனர். கணேசன் சந்தோஷித்தார். மகளுக்கு எந்த வித அவமானமும் ஏற்படாமல் நிச்சயித்தவனுக்கே அவள் மனைவியானால் அதுவே பெரிய யோகம் தான் என்று அவர் எண்ணிக்கொண்டார். அவன் மனம் திருந்தியதும் அவரிடம் மறுபடி மன்னிப்பு கேட்டதும், அந்தப் பெண்ணை கட்டோடு மறந்திருப்பதும் நல்லவனாக மாறி இருப்பதும் கூட அவர் மனதுக்கு சந்தோஷத்தையே குடுத்தது.

“ரொம்ப நல்லது சம்பந்தியம்மா, என்னிக்கோ நடக்க வேண்டியது, நடுவில என்னென்னமோ நடந்து போச்சு. இப்போவானும் காலம் தாழ்த்தாம நல்லதே நடக்கட்டும்” என்றார் மகிழ்ச்சியாக. உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த சங்கீதாவிற்கு பூரித்தது.
“சங்கீதா, வாம்மா, வந்து பெரியவங்கள வணங்கிக்க” என்று அழைத்தார். மிதமான அலங்காரத்தில் இருந்தாள்.
“சீக்கிரமே நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துடுமா” என்று ஆசிகள் கூறினர். எல்லோர் மனமும் நிறைந்தது. அவன் வரவில்லையா என்று ஒரு முறை ஓரக்கண்ணால் தேடினாள்.

“யாரைத் தேடுறே, அவன் வரலை மா” என்று சிரித்தார் மரகதம். “இல்ல” என்று அவள் நாணினாள்
“அதான் தினமும் ஆபிஸ்ல பாத்துக்கறீங்களே அப்பறம் என்ன” என்று வாரினார் ராமலிங்கம். அவள் வெட்கத்துடன் உள்ளே எழுந்து ஓடிவிட்டாள்.

முகூர்த்தம் குறித்துக்கொண்டு கூப்பிடுகிறோம் என்று கூறி அவர்கள் சென்றனர். வாங்கிய முகூர்த்த பட்டு நகைகள் அப்படியே இருக்க அனைத்தையும் எடுத்து பாலிஷ் இட்டு புதுசாக செய்தார் சரோஜா. மண்டபம் பார்த்து புக் செய்தார் கணேசன். திருமண வேலைகள் சிறப்பாக நடக்கத் துவங்கின. மிகவும் நெருங்கியவரை மட்டுமே இம்முறை அழைப்பது என்று இரு குடும்பமும் முடிவு செய்தனர்.

அங்கே தினமும் ஆபிசில் எப்படியேனும் அவளிடம் ஒரு முறையேனும் தனிமையில் பார்த்து பேசிக்கொண்டான் சித்து. இரவில் மொபைலில் இஷ்டம்போல கொஞ்சிக்கொண்டான். அவளும் சிவந்தபடி அவனின் சீண்டல்களுக்கு இடம் கொடுத்தாள்.

“அது எப்பிடிடி, நேர்ல என்னைத் தள்ளி விடறே, போன் ல ஒண்ணும் செய்ய முடியாதுன்னுதானே எல்லாத்துக்கும் இடம் குடுக்கறே, கையில கிடைச்ச அன்னிக்கி இருக்கு உனக்கு” என்று சிரித்தான்.
“போதுமே” என்றாள்.
“போதாதேடீ, ஏங்கறேனே ரொம்பவே” என்றான் பெருமூச்சுடன்.
“நீங்க ஆபிஸ் முதலாளி, அங்கே என்ன சரசம், யாரானும் பார்த்தா?” என்றாள். தவித்தபடி.
“பார்க்கட்டுமே, பேசட்டுமே, அடுத்த மாசம் நம்ம திருமண பத்திரிக்கையப் பார்த்த பிறகு பேசின அதே வாய் கப்புன்னு மூடிகும்டீ என் செல்லமே” என்று கொஞ்சிக்கொண்டன்.

“ஆனாலும் ஆளு நீங்க ரொம்ப மோசம்” என்றாள்.

ஒரு மாலை அவளை அடம் பிடித்து காரில் ஏற்றி, காபி ஷாப்பில் அமர்ந்து காபியுடன் அரட்டை அடைத்தபின் அவளிடம் கொஞ்சி வம்பு பேசியபடி காரை நகர்த்தபோக, அப்போது அவன் மொபைல் அழைத்தது.
“ச்சே இதுவேற” என்று சலித்தபடி ஆன் செய்தான். புதிய நம்பர்... காரில் தனது மொபைலை சிங்க் செய்திருந்ததால் காரின் ஸ்பீக்கரிலேயே போன் கேட்க முடிந்தது. இவன் ஹலோ என்றதும் “ஹலோ சித்து, நான் ஷாலு” என்றது குரல். சங்கீதாவின் முகம் இருண்டு போனது. அவனும் அதை கண்ணுற்றவன் திடுக்கிட்டான். “இவ எதுக்கு கூப்பிடுகிறா?’ என்று முனகியபடி ஆப் செய்தான்.

“சாரி சகி, அவ ஏன் என்னை கூப்பிடுகிறான்னு எனக்கு சத்தியமா தெரியாதுடா” என்றான். அவனை ஏறிட்டு நேராகக் கண்டாள். அதில் குற்றச்சாட்டு இருந்தது. கால் வந்தது.

“எடுங்க” என்றாள் கண்டிப்பாக. எடுத்தான். “ஹலோ” என்றான்.
“நான் உங்கள சந்திக்கணும், ரொம்ப அவசரம்..... நான் ரொம்ப இக்கட்டுல மாட்டிகிட்டு இருக்கேன்.... அன்னிக்கி நான் பேசினத மனசுல வெச்சுக்காம ப்ளீஸ் என்னை வந்து காப்பாத்துங்க” என்றாள் ஷாலு அந்தப்பக்கம். அவன் ஸ்பீக்கரிலேயே விட்டான், வேண்டும் என்றே, அவளுடன் தனக்கு இனி, சங்கீதாவுக்கு தெரியாத ரகசியங்கள் இல்லை என்று காண்பிக்கவே அப்படி செய்தான். “முடியாது” என்று ஆப் செய்தான்.

மீண்டும் அழைப்பு வர, “என்னை இனி தொந்தரவு செய்யாதே” என்று ஆப் செய்தான். மீண்டும் அழைப்பு வந்தது,

“பேசுங்க” என்று ஜாடை செய்தாள் சங்கீதா. “என்னதான் வேணும் உனக்கு?” என்றான் எரிச்சலாக.
“நான் பெரும் சங்கடத்தில் இருக்கேன் சித்து ப்ளீஸ்” என்றாள் அழுகையுடன். அவன் போன் இன் வாயை அவளே பொத்தி, “போய் ஒரே ஒரு முறை பார்த்து முடிஞ்சா உதவி செஞ்சுட்டு வாங்க” என்றாள்.
“உனக்கென்ன பைத்தியமா, அவளுக்கா, நான் உதவி செய்வதா... நெவர்..... அவளை என்னால மன்னிக்க முடியாது” என்றான் மெல்லிய குரலில் பல்லை கடித்தபடி.

“தெரியும், மன்னிக்க சொல்லலை, உதவிதான் செய்யச் சொல்றேன்” என்றாள் அழுத்தமாக.
மனமில்லாமல் “எங்க வரணும்?” என்றான். சொன்னாள் “சரி வரேன்” என்று வைத்துவிட்டான்.
“இது இப்போ அவசியமா சகி?” என்றான்.
“மே பி, அங்க போய் பார்த்தாதானே தெரியும்.... போயிட்டு வாங்க” என்றாள் முகம் கடினமாகவே இருந்தது. அவளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு காரை ஷாலு கூறின இடத்தை நோக்கி ஓட்டினான்.

சித்துவின் கார் அந்த ஹோட்டலின் வாயிலை அடைந்து வாலேயில் கொடுத்துவிட்டு அவள் சொன்ன ரூம் நம்பரைத் தேடிச் சென்றான். கதவை தட்டியதும் ‘கம் இன்’ என்று குரல் கேட்டது. உள்ளே தயக்கமாகவே சென்றான்.
“ஹை சித்து” என்று முன்பு போல ஓடி வந்து அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அவன் தன் கையை உதறிக்கொண்டான்.
“என்ன எதுக்கு கூப்பிட்டே, சீக்கிரம் சொல்லு நான் போகணும், எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றான் கடினமான முகத்துடன் எரிச்சலாக. “போலாம், இருங்க சித்து, முதல்ல உக்காருங்க” என்று ஜூஸ் எடுத்து கொடுத்தாள். அதை கையாலும் தொடவில்லை அவன்.
அவன் பொறுமை இன்றி அமர்ந்திருப்பதைக் கண்டு அவளுக்கு கோவம் மூண்டது.
“என்ன பொறுமையில்லாம இருக்கீங்க..... முன்னெல்லாம் என்னோட எத்தனை நேரம் இருந்தாலும் போதாதுன்னு கொஞ்சுவீங்களே?” என்று கொஞ்சினாள். எரிச்சல் அதிகமாகியது சித்துவிற்கு.
“விஷயத்த சொல்லு” என்று கர்ஜித்தான்.

“நான் உங்க கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது சித்து கண்ணா, என் தவற புரிஞ்சுகிட்டேன்.... வினோத நம்பி நான் கல்யாணமும் பண்ணி இருக்கக் கூடாது, அமெரிக்காவுக்கும் போயிருக்கக் கூடாது..... அங்க ஒரே போர், அங்க போகாதே இங்க போகாதே, தனியா ஊர் சுத்தாதே னு ஆயிரம் ரூல் போடறாரு.... போதாததற்கு அவரின் நண்பர்கள் புடை சூழ ஓயாமா பார்ட்டி... தண்ணி அடிக்கறது, அவரவர் பெண்டாட்டிகளை மாற்றிக்கொண்டு டான்ஸ் ஆடுவதுனு அக்கிரமம் பண்றாரு சித்து” என்றாள் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு. அவள் வேஷம் போடுகிறாள் என்று சித்துவுக்கு புரியாமல் இல்லை. சரி எவ்வளவு தூரம் போகிறாள் பார்க்கலாம் என்று பொறுத்திருந்தான்.

“என் பேர்ல சொத்து வாங்கறேன் பணம் போடறேன்னு சொல்லி பல இடங்கள்ள என்கிட்டே கை எழுத்து வாங்கிக்கிட்டாரு..... அதெல்லாம் என்ன எதுக்குன்னு கூட தெரியல.... ஆனா என்கிட்டே செலவுக்கு கூட தாராளமா பணம் குடுக்க மாட்டேங்கறாரு..... வெறுத்து போச்சு..... வீட்டுக்குள்ள வெச்சு பூட்டாத குறைதான்..... என்னை காப்பாத்துங்க சித்து...... நான் என் தவறை உணர்ந்துட்டேன், என்னை நீங்களே கல்யாணம் பண்ணிக்குங்க..... நான் வினோதை டைவர்ஸ் பண்ணீடறேன்” என்றபடி அவன் கையைப் பிடிக்க வந்தாள். நெருங்கி அவன் சோபாவில் அமர முயன்றாள். அவன் சட்டென்று விலகி எழுந்தான்.

கேலியாக அவளை பார்த்து, “ம்ம் அப்பறம், இன்னும் என்னென்னா டிராமா பண்ணப் போறே, மொத்தமா முடி... நான் கிளம்பறேன்” என்று வாயிலை நோக்கி நடந்தான்.
“ஐயோ டிராமாவா, என் அழுகையும் சங்கடமும் உங்களுக்கு டிராமா மாதிரியா தெரியுது சித்து கண்ணா..... இல்லை நிஜம்மா சொல்றேன், என்னை அவன் அடிமை மாதிரி நடத்தறான், கொத்தடிமையாத்தான் வெச்சிருக்கான்..... அவனோட நண்பனுக்கு கூட்டி குடுக்க பார்த்தான்” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

“ஷாட் அப்” என்று கத்தினான். “அது உன்னோட சொந்த வாழ்க்கை, சொந்தப் பிரச்சினை.... உனக்கும் எனக்கும் எந்த சொந்த பந்தமும் தொடர்பும் இல்லை.... இதை எல்லாம் என்கிட்டே சொல்லி எந்தப் பயனும் இல்லை.... நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, இனி நீ என் வாழ்க்கையில வரவே முடியாது..... நான் அதை அனுமதிக்கவும் மாட்டேன்.... நீ எக்கேடும் கேட்டுபோனு தான் விட்டிருப்பேன், ஆனா நீ கூப்பிடும்போது என் வுட் பி என்கூட இருந்தா..... எனக்கு கல்யாணம் ஆகப் போகுது..... அவ என்னை உன்னை ஒரு முறை சந்தித்து உதவ சொன்னதால தட்ட முடியாம வந்தேன்.... உன் நாடகம் நல்லா புரிஞ்சுபோச்சு... குட் பை..... இனி என்னை தொந்தரவு செய்ய முயன்றா நான் பொல்லாதவனா இருப்பேன் சொல்லீட்டேன்.... மைன்ட் இட்” என்று திட்டிவிட்டு வெளியேறி விட்டான்.

ஷாலுவிற்கு ஆத்திரம் ஏறியது, இவனையானும் அடையலாம் சொகுசா வாழலாம்னு நினச்சா இவன் தேறிட்டானே, என் நடிப்ப கண்டு பிடிக்கற அளவுக்கு இவன் எப்போ புத்திசாலியானான்..... அவ யாரவ இவனை இப்படி மயக்கி கைக்குள்ள போட்டு வெச்சிருக்காளே, அவள் சொன்னதால என்னை பார்க்க வந்தானாமே, கண்டு பிடிக்கறேன்.... என்னை ஒதுக்கி இவன் எப்படி வேறு ஒருத்திய கட்டறான்னு நானும் பார்க்கறேன்” என்று சூளுரைத்துக்கொண்டாள்.

அதன்படி அவனைப் பற்றி மேலும் விசாரித்ததில். சங்கீதாவை மணக்க வந்து நிறுத்தியதும், இப்போது அவள் அவனிடமே வேலை செய்வதும் இருவரும் விரும்பி மணக்கப் போவதும் அனைத்தும் தெரிய வந்தது. ஓஹோ அப்படியா விஷயம், இருக்கட்டும் என்று பொருமிக்கொண்டாள்.

அங்கே தன் வீட்டில் சங்கீதா மனம் பாரமாகி தன் கட்டிலில் கவுந்தடித்து படுத்து கிடந்தாள்.
‘அங்கே சென்றிருப்பானா, என்னவாக இருக்கும், நான் அவனை போக சொல்லி இருக்கக் கூடாதோ... அவனுக்கும் கூட இஷ்டமே இல்லையே, என் தலையில் நானே மண்ணை போட்டுக்கொண்டேனா, கடவுளே, கலக்கமா இருக்கே.... என் சித்துவை காப்பாத்து’ என்று வேண்டிக்கொண்டாள்.
‘நாந்தான் போகச் சொன்னேன்னா அவனுக்கு எங்க போச்சு புத்தி, நான் போக முடியாது அவ சங்காத்தமே எனக்கு வேண்டாம்னு இல்ல அவன் சொல்லி இருக்கணும்’ என்று கோவமும் இயலாமையும் அவன் மீது திரும்பியது.
மணி பத்து என்றது. அவன் மொபைலுக்கு அழைத்தாள். அவன் எடுத்தான். “ஹலோ சித்து” என்றாள் மெல்ல. “ம்ம் என்னா?” என்றான் கடினமாக.
“என் மேல கோபமா, அவகிட்ட போக சொன்னேனே அதுக்கா, சாரிபா. போனீங்களா, என்னாச்சு பா?” என்றாள் தயக்கத்துடன்.
“ஆமா நீ போன்னா போகணும் வான்ன வரணும்..... ஆமா போய் தொலைஞ்சேன்..... அந்த நாடகக்காரி விஷமக்காரியப் பார்த்தேன்..... அவ அடங்கவே இல்லை, அடங்கவும் மாட்டா..... நான் சொன்னபோது நீ நம்பலையே, அவ புருஷன் அவள கொடுமை படுத்தறானாம், கொத்தடிமை மாதிரி நடத்தறானாம்.... அதனால அவனோட வாழப் பிடிக்கலையாம், அவனை டைவர்ஸ் செய்துட்டு என்கிட்டே வராளாம்..... நான் அவளை மணக்க வேண்டுமாம், எப்படி இருக்கு..... எல்லாம் வேஷம்....” என்று
பொருமினான். 

“என்ன போகட்டுமா, அவளையே பண்ணிக்கட்டுமா?” என்றான் கிண்டலாக. “சித்து...” என்று அழுதாள் சங்கீதா. திக்கென்றது. ‘ஐயோ இவனை திரும்ப மணமுடிக்கும் எண்ணம் அவளுக்கு வந்துவிட்டதே, என்னை நிம்மதியாக வாழ விடுவாளா என்று நெஞ்சம் கலங்கியது.
 “என்ன அதிர்ச்சியா இருக்காக்கும், என்னை பலவந்தமா போகச் சொன்னபோது இதை எதிர்பார்க்கலை அப்படிதானே?” என்றான் எகத்தாளமாக. அவள் என்ன சொல்லுவாள். அவளின் மௌனம் அவனை என்னமோ செய்தது.

“சரி சரி விடுடா செல்லம், அவ சொல்லீட்டா போச்சா, எனக்குன்னு புத்தி இல்லையா என்ன.... நீ கவலைப்படாதே, “உனக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை நீ உன் வழிய பாத்துக்கன்னு” அடிச்சு சொல்லீட்டு வந்துட்டேன். டோன்ட் வர்றி ஹனி” என்றான் குழைவாக.