Thursday 6 September 2018

MANNAVANE AZHALAMA - 6

உள்ளே தனது அறைக்குச் சென்று கட்டிலில் மடங்கி அமர்ந்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். தருணின் மன நிலை தெரியாமல் அவனிடமே தன் காதலை கூற முடியாமல் அவள் தவிக்க, இதில் இந்தக் கல்யாணப் பேச்சு வேறு பூதமாக மிரட்டியது..... யாரோடும் மனம் விட்டு பேசி தீர்வு காண முடியாமல் ஒடுங்கினாள். மாமாவும் அம்மாவுமாக ஜாதகப் பொருத்தம் பார்க்க போயிருந்தனர்.... மேலும் பயம் கூடியது.... என்ன செய்வதென்று அறியாமல் கோவிலுக்குச் சென்றாள்.

அங்கே மனமுருகி பிரார்த்தித்துவிட்டு தரிசனம் செய்துவிட்டு ஓரமாக மண்டபத்தில் வந்து அமர அங்கே சாரதா இவளைக் கண்டாள். அவளது அழுது சிவந்த முகம் அவளுக்குக் கவலை உண்டாக்கியது. 

“காருண்யா” என்றபடி அருகே வந்து அமர்ந்தாள். மெல்ல ஆதரவாக அவள் தலை தடவி,
“எந்தா என்னவோ போல?” என்று கேட்டாள். 

“ஒண்ணுமில்லா சேச்சி” என்றாள் கருணா. 

“ஞான் நிண்டே சேச்சி அல்லே, அப்போ சொல்லணம். எந்தா விஷயம் சொல்லு” என்றாள். அதுவே போதுமானதாக அவள் தோளில் சாய்ந்து அங்கேயே அழுது தீர்த்தாள் கருணா. 

“எந்தா குட்டி இது, சொல்லு?” என்றாள்.

“அம்மாவன் வந்துட்டுண்டு சேச்சி” என்றாள். “சரி, அதின?” என்றாள்

“எண்டே கல்யணத்தினே ஒரு வரன் கொண்டு வந்துட்டுண்டு.... அம்மா என்னை நிர்பந்திக்குன்னு அய்யாளை நான் கல்யாணம் கழிச்சே ஆகணுமென்னு..” என்று மேலும் அழுதாள்.

“ஓ, நினக்கு அய்யாள் இஷ்டம் இல்லையோ?” என்று கேட்டாள். 

“அய்யாள் யாரோ நான் அறியில்லா, எனிக்கி ப்ராப்ளம் அய்யாளோடல்லா சேச்சி.... எனிக்கி ஈ கல்யாணமே வேண்டான்னு” என்றாள். 

“எந்தினா?” என்று கேட்டாள்.
“அறியில்லா”
“நீ யாரையானும் இஷ்டபட்டோ?” என்று கேட்டாள். மௌனமானாள் கருணா. “ஆஹான், அதாண விஷயம் அல்லே.... ஆரா அது?” என்று கேட்டாள். மீண்டும் கருணா மௌனமாகவே இருக்க,
“என்கிட்ட சொல்லு மோளே” என்றாள் ஆதுரமாக. 

“எனக்கே உறப்பில்லை சேச்சி.... நான் அய்யாளோடு இது பத்தி பேசீட்டில்லா” என்றாள்.
“அது அப்படியோ, இன்னா சரி, இப்போ பேசு” என்றாள்.
“முடியாது” என்று உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கினாள். 

“ஆரா அது மோளே, எந்தா ப்ராப்ளம்.?” என்றாள் பின்னும். 

“அய்யாளுக்கு கல்யாணம் கழிஞ்சு..... ரெண்டு பிள்ளரும் உண்டு... அம்மா அய்யாளை கல்யாணம் கழிக்கான் விடில்லா” என்று அழுதாள்.

பளிச்சென்று விளங்கியது சாரதாவிற்கு. அவளுக்கு விளங்கி இருக்கும் என்று கருணாவிற்கும் தெரியும் ஆதலால் அவள் முகத்தை ஏறெடுத்து பார்க்கும் துணிவின்றி தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீ அவனிடத்தில் இதப் பத்தி பேசலையா?” என்று கேட்டாள்.
“இல்லை சேச்சி..... என்னால முடியலை....”
“ஏன்?”
“எனக்கு தைர்யம் இல்லை.... அவர் மனசில கல்யாணம்னு எண்ணமே இருக்கா மாதிரி எனிக்கி தெரியலை.... அதான் பயமாயிட்டு உண்டு” என்றாள்.

“அய்யே அசடா நீ, பயந்து பேசாம இருன்னாலே, நீண்டே கல்யாணம் என்தாவும்.... நீ தைர்யமாயிட்டு போய் பேசு..... வேணும்னா நான் கூட வராம்” என்றாள் கண்ணில் கேலியுடன். அவளை சட்டென்று நிமிர்ந்து பார்த்த கருணாவிற்கு வெட்கம் வந்தது. சாரதாவின் மடி சாய்ந்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.

“டீ மோளே, அது தருண் தானே?” என்று கேட்டாள். இருந்த நிலையிலேயே ‘ஆம்’ என்று தலை அசைத்தாள். 

“அடிக்கள்ளி, நான் நிண்ட முகம் காணட்டே” என்று அவளை நிமிர்த்தினாள். “போ சேச்சி” என்று சிணுங்கியபடி மீண்டும் முகம் மறைத்தாள் கருணா. 

“சரி இப்போ எந்தா செய்யாம்?” என்றாள். 

“நான் எண்டே வருனோடு பேசறேன்..... தருண் கிட்ட நீதான் பேசணும் பெண்ணே..... எங்க குடும்பத்திலே யாருக்கும் ஒண்ணும் அப்ஜெக்ஷன் இருக்காது..... தருணை நினைச்சால் தான் எனிக்கும் கூட கொஞ்சம் பயம். அவன் ஒத்துக்கொண்டால் பின்னே கல்யாணம் தான்” என்று அவள் முகம் வழித்தாள். 

“பயமாகுன்னு சேச்சி” என்றாள். 

“வேறே வழியில்லா மோளே, பேசித்தான் ஆகணம்” என்று தேற்றினாள். “இன்னிக்கே போ, போய் பேசீட்டு சொல்லு. மிச்சத்த நான் பார்த்துக்கறேன்” என்று வாக்களித்தாள்.
சரி என்று யோசனையுடன் கிளம்பினாள் கருணா.

தருணை எப்படி சந்தித்து என்ன பேசுவது என்று கலங்கியபடி நடந்து போய்க் கொண்டிருக்க, தருண் மாலை வாக் போகவென அதே ரோடில் பின்னே வந்து கொண்டிருந்தான். இவளைக் கண்டு நாலெட்டு எடுத்து வைத்து அருகில் வந்து சேர்ந்துகொண்டான். 

“ஹை கருணா” என்றான். 

“எந்தாயி, இன்னிக்கி ஆபிஸ் வரலை?” என்று கேட்டான்.

“ஒ... ஒண்ணுமில்லை..... தருண்” என்று தடுமாறினாள். 

“நான் வாக் போகக் கிளம்பினேன், நீயும் என்னோடு வரையா?” என்றான்.
சரி என்று சேர்ந்து நடந்தாள். 

‘பகவானே இவரோடு நான் வாழ்க்கை முழுவதும் இப்படி தொடர்ந்து நடக்க ஆசைப்படறேனே, அது நடக்குமா, நீதான் நடத்தி வெய்கணம்’ என்று வேண்டிக்கொண்டாள்.

“என்ன இன்னிக்கி ரொம்ப டல்லா இருக்கே கருணா, முகமெல்லாம் ஏதோபோல இருக்கு?” என்றான். “ஏதேனும் வேதனையோ?” என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண் கலங்கி இருக்க அவனுக்கு துணுக்கென்றது. “எந்தா கருணா?” என்று நின்றேவிட்டான்.

“வீட்டிலே கல்யாணத்துக்கு வரன் பார்க்கறா” என்றாள்.
“ஒ” என்றான் அவனுக்குமே தூக்கிவாரி போட்டது. 

“நீ ஒத்துண்டயோ?” என்றான். 

“இல்லை” என்றாள். மனம் ‘ஹப்பா’ என்று சற்றே நிம்மதி ஆயிற்று.
“ஏன்?” என்றான்.
அவனை ஏறிட்டுவிட்டு தலை கவிழ்ந்தாள். 

“அய்யாளை பிடிக்கலை” என்றாள்.

“ஒ அப்போ வேற யாரையானும்...?” என்று நிறுத்தினான். 

அவள் மௌனமாகவே நடந்தாள். 

“கருணா இங்க வா, இங்கே மரத்தடியில் உக்காரலாம்” என்று அமர்த்தினான். “ப்ளிஸ் என்னன்னு சொல்லு” என்றான். 

“ஒண்ணுமில்லை” என்றாள். 

“இல்லை என்னமோ இருக்கு, ப்ளிஸ் சொல்லு” என்றான். 

“நீங்க என்னை தப்பா எடுத்துப்பேள்”
“இல்லை நீ சொல்லு” என்றான். அவளின் பீடிகையும் தயக்கமும் கண்டு,
“நீ யாரையாவது காதலிக்கறாயா?” என்றான். அவனை ஏறெடுத்து கண்ணோடு கண் நேராகக் கண்டாள். இமைக்காமல் கண்டாள். அவள் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவனுக்கு ஒரு செய்தி சொன்னது.

‘என்ன சொல்கிறாள் இவள்!’ என்று மலைத்துப் போனான். 

“உங்களுக்கு தெரியாதா... புரியலையா....?” என்றாள் தலை கவிழ்ந்தபடி. “இல்லை” என்று தலை அசைத்தான். 

“ஒ அப்போசரி, நான் வரேன்... நேரமாச்சு” என்று கிளம்பினாள்.

‘என்ன சொல்ல வந்தாள்.... இப்போது ஒன்றும் சொல்லாமல் கிளம்புகிறாள்.... அவள் கண்ணின் மொழி என்ன சொன்னது... அது நான் புரிந்துகொண்டது தான் என்றால், அது உண்மையா, இது எப்படி.... நடக்குமா, நடந்தால் எல்லோரும் என்ன சொல்வார்கள்..’ என்று நூறு கேள்விகள் அவன் மனதில். அவளை நிறுத்தவும் முடியாமல் அவளை மேற்கொண்டு ஒன்றும் கேட்கவும் முடியாமல் துவண்டான். அவள் முன்னே நடந்து செல்ல மனம் அவள் பின்னே சென்றது அவன் பின் தங்கி நின்றுவிட்டான்.

வழியில் வருணின் வீட்டை அடைந்தான். சாரதாவும் வருணும் இவனுக்கென்றே காத்திருந்தது போல “வா வா தருண், ஒரு முக்கியமான விஷயம்” என்று இழுத்துச் சென்றனர்.
“எந்தா?” என்றான். 

“நினக்கு தெரியுமோ, காருண்யாக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருக்கு” என்றாள் சாரதா. 

“நிச்சயமா?” என்று அதிர்ந்தான். 

‘வரன் பார்க்கறதாத்தானே சொன்னா கருணா’ என்று எண்ணிக்கொண்டான். அவன் முகம் பேயறைந்தாற்போல ஆனது கண்டு சிரித்துக்கொண்டனர் இருவரும் உள்ளுக்குள்ளே.

“நிஜமானோ?” என்றான்.
“அதே” என்றான் வருண். 

“அவளோட மாமா வரன் கொண்டு வந்தாராம்.... பொருத்தம் பார்த்தாச்சு... நிச்சயம் பண்ணியாச்சு... கல்யாணம் கூடிய சீக்கிரம்” என்றான்.

“ஆனா....” என்று நிறுத்தினாள் சாரதா,
“எந்தா ஏட்டத்தி?” என்றான்
“அவளுக்கு இந்தக் கல்யாணத்திலே இஷ்டமில்லை தருண்” என்றாள். மனது கொஞ்சம் சமாதானம் ஆகியது. முகம் சற்று தெளிவு பெற்றது. 

“ஏனாம்?” என்றான் ஒன்றும் அறியாதது போல. 

“அவள் ஒண்ணும் சொல்லலை.... ஆனா எனிக்கி டவுட், அவள் ஆரையோ இஷ்டபட்டுடுண்டு னு” என்றாள். 

“யாரை?” என்றான்.
“அது நினக்கல்லே தெரியண்டது..... என்னைக் கேட்டால்” என்றான் வருண்.
“வருண் சேட்டா” என்று அதட்டினான்.

“சரி நான் நேராயிட்டு பாயிண்டுக்கு வராம் தருண்.... நீ இப்போ உண்மை பேசணம் ஒகே..... உனக்கு காருண்யாவை இஷ்டம் தானே, அவளுக்கு உன்னை இஷ்டம்னு அவள் சாரதாகிட்ட சொல்லியாச்சு.... இப்போ நீதான் முடிவு எடுக்கணம் தருண்..... இல்லைனா அவளுக்கு பலவந்தமா அந்தக் கல்யாணத்தை பண்ணி வெச்சுடுவள் அவளோட அம்மை....

தருண் நான் சொல்றது நீ புரிஞ்சுக்கறாய் இல்லையா, ஒருதரம் பட்டாச்சு இன்னொருதரமும் கோட்டை விட்டுடாதே தருண்” என்றான்
கண்ணில் வலியோடு நிமிர்ந்தான் தருண். “சேட்டா” என்றான் கலங்கிப் போய். “நான்.... நான் எப்படி.... அவளை?” என்றான். 

“ஏன் என்ன தயக்கம்?”
“எனிக்கி ரெண்டு பிள்ளைரு உண்டு சேட்டா”
“அது அவளுக்கும் தெரியுமே தருண்”
“ஆனாலும்.. தயக்கமா இருக்கு.... நான் அவளை கல்யாணம் கழிக்கக் கேட்டால் அவளோட அம்மா தருமோ?” என்று கேட்டான் சிறுபிள்ளையாக. 

“தரும், இல்லெங்கில் நாங்கள் தர வைப்போம்” என்றான் உறுதியாக. 

“நீ மொதல்ல உன் மனசுகிட்ட கேட்கணம் தருண்.... நீ அவளை இஷ்டப்படறியோன்னு” என்றான். 

முகம் லேசாக சிவக்க கூச்சத்துடன் சாரதாவை காண முடியாமல் தலை கவிழ்ந்தான் தருண்.
“இஷ்டமானோ தருண்?” என்றான். 

“அதே சேட்டா... ஆனாலும்...” என்றான். 

“இன்னா பின்ன, வாட் ஆர் யு வெயிடிங் பார்” என்றான். 

“போ அவ கிட்ட ஒத்துக்கோ.... நம்ம அம்மா அப்பாகிட்ட நாங்க பேசறோம் ஓகே?” என்றான்.
“கனிகா, நிதின்..?” என்றான். 

“அவா ரெண்டு பேருக்கும் கருணாவை எத்தரை இஷ்டம் என்னு நினக்கு தெரியும்தானே.... அவருக்கு ரொம்ப இஷ்டம்... நீ போடா கருணாவோடு பேசீட்டு என்னோடு சொல்லு.... போ” என்று அனுப்பி வைத்தான்.

என்ன பேசுவது எப்படி பேசுவது என்று புரியாமல் திணறினான் தருண். 

தன் மனது அவளை நாடுவதை காதல் கொண்டதை நூறுமுறை அசைபோட்டுக்கொண்டான். நிஜமே, சத்தியமாக தான் அவளை விரும்புகிறோம் என்று உணர்ந்தான். கருணாவிற்கு போன் செய்து பேசலாமா என்று யோசித்தான். மெல்ல தைர்யத்துடன் அவளது நம்பரை அழுத்தினான். அவள் ரெண்டு மூணு ரிங்குக்குப் பிறகு எடுத்து மெல்ல ஹலோ என்றாள்.

“இது ஞானா, கருணா” என்றான். அந்தப்பக்கம் சத்தமே இல்லை.
“கருணா ஆர் யு தேர்?” என்றான். 

“ம்ம்” என்றாள். 

“என்னோடு பிணங்கியோ(கோவமா)?” என்றான். 

“இல்லை” என்றாள்.

“ஞான் என்னை உணர்ந்தேன்.... நின்னேயும் உணர்ந்தேன்.... இப்போ... ஞான்.... எனிக்கி நின்னை வளர வளர இஷ்டமா மோளே..... நினக்கு என்னை இஷ்டமாணோ?” என்றான். 

அந்தப்பக்கம் லேசான அழுகை கேட்டது. 

“என்தாடீ நீ கரையினுண்டோ? (அழுகிறாய)?” என்றான் பதறிபோய். 

“ம்ஹும் இல்லை” என்றாள் அவசரமாக.
“பின்னே?” என்றான்.
“இது சந்தோஷத்திலாண” என்றாள். 

“அதுசெரி” என்றான்.

“எனிக்கி நின்னை பார்க்கணம்.... இப்போ...” என்றான். 

“அது எங்ஙனே.... நாள காணலாம் ஆபிசில் வெச்சு” என்றாள். 

“போடி, நாள வரே ஞான் காத்திரிக்கணமோ... எனிக்கி ஆவில்லா” என்றான் சிறு குழந்தை போல.
“பிணங்கியோ?” என்று கொஞ்சினாள். 

“ம்ம் இல்லா....” என்றான். 

“தரு என்னை சத்தியத்தில் இஷ்டமாணோ?” என்றாள். 

“அதே, சத்தியம்” என்றான்.
“ஐ லவ் யு கருணா” என்றான்.
“ஐ லவ் யு டூ தருண்” என்றாள். 

“நாள காணாம் நமக்கு,.... குட் நைட்” என்றாள்.

“குட் நைட்டோ.... நினக்கு உறக்கம் வருமோடி மோளே, எனிக்கி உறக்கம் வரில்லா டீ, நமக்கு கொஞ்சம் கூடி பேசிக்கொண்டிருக்காம்” என்றான்.

“என்ன பேசணம்?” என்றாள். 

“ஏதானும்” என்றான்.
“எனிக்கி நின்னோடு நிறைய பேசணம்.... நிறைய விஷயங்கள் சொல்லணம். டிஸ்கஸ் செய்யணம் கருணா” என்றான். 

“நாளைக்கு பேசலாம் சரியா” என்றாள். ஒகே என்றான்
அங்கே வீட்டில் அவளை மீண்டும் கல்யாணத்திற்கு மாமாவும் அம்மாவுமாக பலவந்தப் படுத்த அவள் தீர்மானமாக அந்த வரனை கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டாள். அதனால் கோபம் கொண்ட அம்பிகா அவளை அடித்துவிட்டு மடங்கி அமர்ந்து அழுதாள். 

“எந்தாடீ இது, அச்சனும் இல்லை.... நீ இப்படி பிடிவாதம் பிடிச்சா ஞான் எந்தா செய்யும்” என்று அழுதாள். 

“என்னால நினக்கு ஒரு கஷ்டமும் வராது அம்மே.... ஞான் பின்னே கல்யாணம் கழிக்கும்..... விஷ்ணு படிப்பு முடியட்டே அம்மே” என்றாள் பக்குவமாக. 

“நீ ஆரையும் இஷ்டப்பட்டோ?” என்று கேட்டாள் அம்பிகா. மெளனமாக இருந்தாள் கருணா. 

‘ஹ்ம்ம்’ என்று ஒரு பெருமூச்சோடு எழுந்து போய்விட்டாள் அம்பிகா.
“வருண், ஞான் பேசினேன் கருணாவோட... சொன்னேன் இஷ்டப்பட்டுன்னு..” என்றான் கொஞ்சம் வெட்கியபடி. 

“ஆனால் இன்னமும் எண்டே பாஸ்ட் பத்தி ஞான் சொல்லீடில்லா சேட்டா.... எப்படி பேசறது அதப்பத்தி...” என்றான் கலக்கத்துடன். 

“பேசித்தான் ஆகணம்..... என்னிக்கிருந்தாலும் அவளும் அதை அறியண்டதல்லே தருண்” என்றான் வருண்.



2 comments:

  1. superb, iruvarum virumba thodangivittaargal, aanaalum innum enna thayakkam?

    ReplyDelete