Thursday 27 September 2018

ENGIRUNDHO VANDHAAN- 7

சரி வாங்கஎன்றார் விசாலம் தயக்கமாக. ‘ஐயோ திலீப்புக்கு தெரிஞ்சா என்னை மேலும் வெறுத்துடுவானேஎன்று பயந்தான். ஆனால் அந்தப் பெண் அழகானவள் அறிவானவள் என்று கேள்வி ஒருவேளை தன் மகன் அந்தப் பெண்ணை பார்த்து மனம் மாற மாட்டானா என்று ஆசை.
அவர்கள் மதியம் வந்து அமர்ந்து பேசி விருந்து உண்டுவிட்டு எங்கப் பெண்ணை இங்க ரெண்டு நாள் விட்டுட்டு போகிறோம் சம்பந்தியம்மா..... அவளுக்கு ஊட்டி எல்லாம் சுற்றி பார்க்கணும் னு ஆசை..... எங்களுக்கு தலைக்குமேல வேலை..... அதான் திலீப் தம்பி இருக்குதே, ரெண்டு பேரும் சுற்றி பார்க்கட்டும்... மனசு விட்டு பேசி பழகட்டும்.. என்ன சொல்றீங்கஎன்றுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் சென்றுவிட்டனர்.
சரிஎன்றார் அரை வாயால் விசாலம். அவள் சுவாதிக்கு ஒரு கெஸ்ட் ரூமை ஒழித்து ஏற்பாடு பண்ண சொல்லிவிட்டு திலீப் வந்தால் என்னாகுமோ என்று பயந்தபடி காத்திருந்தார்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினான் திலீப். வாச ஹாலிலேயே ஒரு அழகிய பெண் ஒயிலாக அமர்ந்திருப்பதைக் கண்டு யாரிவள் என்று தோன்றி உள்ளே வந்தான்.

அம்மாஎன்று அழைத்தான்.
பயந்தபடி தயக்கமாக வா பா திலீப்.... ரொம்ப வேலையா... என்ன குடிக்கற?” என்று விசாரித்தார்.
எனக்கு இப்போ ஒண்ணும் வேண்டாம் மா” ‘இது யாரு?’ என்று கண்களால் வினவினான்.
திலீப் இதப் பார்த்தியா, இதுதான் சுவாதி, நம்ம ராவ் பகதூர் சிங்காரம் பிள்ளை இல்லை அவர் மகள்..... இங்க ஊர் சுற்றிப் பார்க்கன்னு வந்திருக்கா.... ரெண்டு நாள் நம்ம வீட்டுல தான் தங்கி இருப்பா..... உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே....?” என்று கேட்டார்.
இப்போதானே வந்திருக்கா போக போகத்தானே தெரியும் ப்ராப்ளமா இல்லையான்னுஎன்று மனதினுள் நினைத்துகொண்டான்.
ஒரு அரைப் புன்னகையுடன் அதெல்லாம் ஒண்ணுமில்லை.... ஷீ இஸ் மோஸ்ட் வெல்கம்என்றான். “ஹெலோஎன்று கூறினான் அவளைக்கண்டு.
ஹை திலீப், எப்படி என் சர்ப்ரைஸ்?” என்று கேட்டாள்.
என்ன சர்ப்ரைஸ்?” என்றான்.
அதான் அவ திடீர்னு வந்திருக்காளே அதைச் சொல்றாஎன்று பூசி மெழுகினார் விசாலம்.
நீ போ பா, போய் பிரெஷ் பண்ணிக்கிட்டு வாஎன்றார்.

திலீப் நாளையும் மறுநாளும் நீங்க புல் டே என்னோடுதான் இருக்கணும்...... எனக்கு இந்த ஊட்டிய சுற்றிக் காண்பிக்கணும் டியர்என்றாள் கொஞ்சலாக அவன் மீது ஈஷாத குறையாக.
சாரிங்க, எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு..... வர்ற வாரம் எங்க ஆனுவல் மீட்டிங் வேற..... அதற்கு தயார் பண்ணனும்.... அதனால நான் எங்க டிரைவர் நாயகம் அங்கிள காரோட இங்க விட்டுட்டுப் போறேன்.... அவர் உங்களை அழச்சுகிட்டு போய் ஊரச் சுத்தி காண்பிப்பார்.... அவருக்கு இங்க எல்லா இடமும் அத்துப்படிஎன்று நழுவிக்கொண்டு மேலே சென்றுவிட்டான்.
என்ன ஆண்ட்டி இது, நான் டிரைவர் கூட போகிறதா.... அதுக்கா எங்கப்பாம்மா என்னை இங்க விட்டுட்டு போனாங்க?” என்றாள் கொஞ்சலும் எரிச்சலுமாக.
அவனுக்கு வேலை அப்படிமா... நான் பேசிப் பார்க்கறேன்என்றார்.

இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். மெல்ல மேலேறி திலீபன் அறைக்குப் போய்
ஏன் பா ராஜா, அந்தப் பிள்ள ரெண்டு நாளைக்குத்தானே வந்திருக்குது.... அதுல நாள ஒரு நாளானும் அவகூட கொஞ்சம் போய் சுற்றிட்டு வரக்கூடாதா?” என்று கேட்டார் தயங்கியபடி.
ரொம்ப கஷ்டம் மா..... அதுமட்டும் இல்லை அவ பேசறதும் மேலே விழுந்து ஈஷறதும் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலைமாஎன்றான்.
என்னக்காக ராஜாநாளை அரை மட்டும்... நாள மதியம் சாப்பிட வந்துட்டு அவ கூட போயிட்டு வா பாஎன்றார்.
மறுக்க முடியாமல் சரிஎன்றான் அரை மனதாக. எரிச்சல் வந்தது.
இப்போ உனக்காக ஓகே சொல்றேன்.... அதுவும் நாள அரை நாள் மட்டுமே..... இனிமே என்னைக் கேட்காம என்னை சம்பந்தப்படுத்தி எந்த வாக்கும் குடுக்காதே மாஎன்றான்.
சரிப்பாஎன்றார் விசாலம் இந்த அளவானும் ஒப்புக்கொண்டானே என்று.

அன்று இரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுவிட்டு திலீப் குட் நைட் என்று கூறி மேலே சென்றுவிட அவனை முறைத்தாள் சுவாதி. ‘ஆனாலும் ரொம்பத்தான் தெனாவட்டு.... என் காலில விழ வைக்கிறேன் டா உன்னைஎன்று கூறிக்கொண்டாள்.
உடல் அழகை பளிச்சிட்டு காட்டும் ஒரு நைட்டியை அணிந்து கொண்டிருந்தாள். அதனுடனேயே மேலே ஏறிச்சென்றாள். அவன் அறைக்கதவை தட்ட தன் மடி கணினியில் ஏதோ முக்கியமாக வேலை செய்து கொண்டிருந்தவன் இந்த வேளையில் யார் என்று எண்ணி கதவைத் திறந்தான். அதிர்ந்தான்.

என்ன வேணும் சுவாதி.... இங்க எங்க இந்த நேரத்தில?” என்றான் எரிச்சலான குரலில்.
தூக்கம் வரலை அதான் உங்ககிட்ட கொஞ்சம் பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன்என்று அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து அவன் பெட்டில் சட்டமாக அமர்ந்துகொண்டாள். அவளும் அவள் உடையும் போஸும் பேச்சும் அவனுக்கு சகிக்கவில்லை.
எனக்கு முக்கியமான வேலை இருக்கு.... காலைக்குள்ள இதை முடிச்சு எடுத்துகிட்டு போகணும்.... நாள காலை மீட்டிங் இருக்கு.... சோ ப்ளிஸ்என்று கதவை காட்டினான்.
அப்போ என்னை கெட் அவுட் னு சொல்றீங்களா?” என்றாள் ஆத்திரமாக.
அப்படி சொல்லலை சுவாதி..... டிஸ்டர்ப் பண்ணாதீங்க னு சொல்றேன்..... எனக்கு வேலை இருக்குஎன்றான் அமைதியாக.

அவள் நோக்கம் தெள்ள தெளிவானது. அம்மாவும் இதில் கூட்டா என்று குமைந்தான்.
அவள் காலை தரையில் உதைத்துக்கொண்டு வெளியே சென்றாள். ஹப்பா என்று கதவை மூடி தாளிட்டான்.
கஷ்டம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொண்டான். அவன் மனம் அவனையும் அறியாமல் மதுவிடம் சென்றது. பெண்மையின் மொத்த உருவம் என் மது, அவள் நாணமும் அவள் முகச் சிவப்பும் அவள் ஒதுக்கமும் ஒழுக்கமும் என்னை ஈர்த்தது எனலாம்
இப்படியா மேலே வந்து விழுவாள் என் மதுஎன்று தோன்ற. ‘சீ யாரை யாரோடு நான் ஒப்பிடுகிறேன்..... என் மது ஒரு தேவதை.... இது அம்மா சொல்வார்களே அதுபோல கழிசடைஎன்று கூறிக்கொண்டான். பின் தன் வேலைகளை முடித்து படுத்தான். மது கனவில் வந்து தாலாட்டினாள். சுகானுபவமாக அதை அனுபவித்தபடி உறங்கிப்போனான்.

அடுத்த நாள் அதிகாலை எழுந்து அவன் வழக்கம் போல உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான். அங்கேயே தன் காபி கப்புடன் வந்துவிட்டாள் சுவாதி அதே நைட்டியில் .
அட ராம காலை சுற்றின பாம்புஎன்று எண்ணிக்கொண்டான். அவளை கவனியாததுபோல அவன் தன் பயிற்சிகளை தொடர்ந்தான்.
குட் மார்னிங் திலீப்என்றாள்.
குட் மார்னிங்என்றான்.
என்ன பண்றீங்கஇதெல்லாம் தினமும் செய்வீங்களா.... அதான் நீங்க அவ்வளவு ஹேன்ட்சமா இருக்கீங்க.... நைஸ் பாடிஎன்றாள். அவனுக்குக் கூச்சமாகியது.
கர்மம் டா சாமிஎன்று எரிச்சல்பட்டு பதில் ஏதும் கூறாமல் தனது அறைக்குள் நுழைந்து மூடிக்கொண்டு வியர்வை ஆறக் காத்திருந்து குளிக்கச் சென்றான். பின் ஆபிஸ் உடையில் தயாராகி கீழே இறங்கி வந்தான்.
வாவ் யு லுக் மார்வலஸ்என்றாள்.
தாங்க்ஸ்என்று முனகினான். அவன் அன்று மிகவும் நன்றாக இருந்தான் தான். டார்க் நேவி ப்ளூ பேண்டும் அதனுடன் லைட் சந்தன கலர் ஷர்ட் இன் செய்து அடர் சிவப்பும் நேவி ப்ளூவும் கலந்த டை அணிந்திருந்தான். அதே நேவி ப்ளூ கோட் அவன் கையில் மடிந்து தொங்கியது. அவசரமாக காலை உணவை உண்டுவிட்டு
அம்மா நான் கிளம்பறேன்.... முடிஞ்சா தான் லஞ்சுக்கு வருவேன்... நிறைய வேலை இருக்கு.... இவங்கள நாயகம் அங்கிளோட அனுப்பு.... என்னால இன்னிக்கி முடியும்னு தோணலைஎன்றுவிட்டு ஓடியே விட்டான்.
அதென்ன நான் யாருகூட போகணும்னு அவர் யாரு தீர்மானிக்க?” என்று கீச்சுக் குரலில் அலறினாள்.
அம்மாடி இந்தப்பெண் என் வீட்டிற்கு மறுமகளா வந்தா எம் பாடு திண்டாட்டம் தான்என்று விசாலமே பயந்து போனார்.
சரி மா அவன் வேலை அவனுக்கு... உனக்கு நாயகத்தோட போகப் பிடிக்கலேன்னா விட்டுடு.... வீட்டிலேயே இரு.... இல்லைனா தனியா கார் எடுத்துகிட்டு போயிட்டு வாஎன்று கூறினார்.
இதுக்காகவா  வரச்சொன்ணீங்க?” என்று ஆத்திரமானாள்.
நான் வரச்சொல்லலையே மா.... உங்கப்பா தான் கூப்பிட்டு நாங்க வரோம்னார் சரின்னேன்..... உன்னை இங்க விட்டுட்டுப் போக போறதாகவும் அவரேதான் சொன்னார் நான் சரின்னேன்.... அவ்ளோதான்என்று கூறிவிட்டு தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். ‘அம்மாடி சரியான அடங்காப்பிடாரிஎன்று நினைத்துக்கொண்டார்.

அத்யாயம் பன்னிரண்டு
வேறு வழியின்றி டிரைவருடன் கிளம்பினாள் சுவாதி. ஊரை சுற்றிவிட்டு அங்கே இங்கே என்று கண்டதையும் வாங்கி கொறித்துவிட்டு வினாயகத்தை உண்டு இல்லை என்று செய்துவிட்டு மாலை நேரம் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் காரில். அப்போது அங்கே திலீப் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஹே டிரைவர், அது திலீப் தானே?” என்று கேட்டாள்.
ஆமா மேடம்என்றார் அவர் மரியாதையாக.
இங்க என்ன பண்றாரு,  யாரு அந்தப் பொண்ணு?” என்றாள் ஆத்திரமாக.
எனக்குத் தெரியாது மேடம்என்றார்.
உனக்கா தெரியாது, எல்லாம் உள்ளூட்டு.... கண்டவளோட ஊர் சுத்த முடியுது.... என்கூட ஊர் சுற்றிப் பார்க்க முடியவில்லை..... இதானா அவர் சொன்ன முக்கியமான ஆபிஸ் வேலை.... இருக்கட்டும் பேசிக்கிறேன்என்று காரை நிறுத்தச் சொல்லி அவனருகே போய் நின்றாள்.

ஹை திலீப்என்று வேண்டுமென்றே அவனிடம் ஈஷிக்கொண்டு நின்றாள். கூட நின்ற பெண்ணுக்கு சங்கடமானது.
நீங்க எங்க இங்க, முக்கியமான ஆபிஸ் மீட்டிங்னு அம்மாகிட்ட பொய் சொல்லீட்டு இவங்க கூட சுத்தறீங்களா?” என்று கலாட்டா போல நிஜமாகவே வயிறு எரிந்து கேட்டாள் ஏளனமாக அந்தப் பெண்ணை பார்த்தபடி.
ஆனாலும் இந்தப் பெண்ணு அழகாவே தான் இருக்கா... அதான் இந்த ஆளு மயங்கீட்டான் போல..... என்னைவிடவா அழகுஎன்று நினைத்துக்கொண்டாள் உள்ளூர.
இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க..... என் மீட்டிங் முடிஞ்சு கிளம்பும்போது எதிர்பாராம இங்க சந்திச்சேன் பேசிகிட்டிருக்கேன் நீங்க இங்க எங்க வந்தீங்க?” என்றான் எரிச்சலுடன்.
“என்னைத்தான் நீங்க உங்களோட ஊர் சுத்திப் பார்க்க கூட்டிப் போகலையே.... அதான் நானே சுத்தலாம்னு வந்தேன்.... இப்போ வீட்டுக்குதான் போறேன்.... நீங்களும் வீட்டுக்கா... அப்போ நான் உங்ககூடவே வந்துடறேனேஎன்று ஓட்டினாள்.
இல்லை எனக்கு இன்னும் வேலை இருக்கு..... முடிஞ்சு வீடு திரும்ப இன்னும் சில மணி நேரம் ஆகும்.... நீங்க போங்க சுவாதிஎன்று அனுப்பினான்.
ஆமா ரொம்ப வேண்டப்பட்டவங்களோட முக்கியமான வேலை இருக்கும்தான்என்றாள் இழிவாக அந்தப்பெண்ணைப் பார்த்தபடி.

யாரு என்னஎன்று ஒன்றும் கேட்கவில்லை அந்தப் பெண்.
அவனே மது அது யாருன்னு தோணுதா.... ஒண்ணுமே கேட்கலியே?” என்றான்.
அவள் எனக்கு தெரிய வேண்டியதா இருந்தா நீங்களே சொல்லுவீங்களே தீபுஎன்றாள்.
தட்ஸ் மை கார்ள்என்று எண்ணிக்கொண்டான்.
அவ எங்களுக்கு தெரிஞ்ச பாமிலி வீட்டுப்பொண்ணு.... இங்க ரெண்டு நாளு சீசன் டைம்னு சுத்திப் பார்க்க வந்திருக்கா..... எனக்கு ஒண்ணும் பிடிக்கலை.. ரொம்ப மாடெர்ன் டைப்.... எல்லாம் அம்மா ஏற்பாடு..... அவளும் அவ உடையும் பேச்சும் சிரிப்பும் ரொம்ப ஈஷரா மது... அசிங்கமா இருக்குஎன்றான் எரிச்சலாக.
மது சிரித்துக்கொண்டாள். ஆனால் உள்ளூர பெருமை கொண்டாள் என் தீபு உத்தமன்என்று.
என்னடி உள்ள செகண்ட் ட்ராக் என்னமோ ஓடுது?” என்று கேட்டான்.
பேசிக்கொண்டே காரில் ஏறி அமர்ந்தனர். “ஒண்ணுமில்லியேஎன்று சமாளித்தாள்.
மரியாதையா சொல்லுஎன்றான்.
இல்ல என் தீபு உத்தமன்னு நினைச்சேன் சிரித்தேன், தப்பா?” என்றாள் குரல் வெளியே வராமல்.
ம்ம் அப்படியா.... என் மது மட்டும்?” என்று அவள் முகத்தருகே குனிந்தான்.
அதோ அவங்க வராங்கஎன்றாள்
எங்க?” என்று பதறினான்
அவள் கலகலவென சிரித்தாள்.
உன்ன.... இரு, நீ அழிஞ்சே என்கிட்டே இன்னிக்கி.... அவப் பேரைச் சொல்லியா என்னை பயமுறுத்தறஎன்று அவள் முகம் இழுத்து இதழ் மீது இதழ் மூடி சுவைத்தான். பின் மெல்ல விடுவித்தான்
போதுமா தண்டனைஎன்றான் கண் சிமிட்டியபடி.
சி போ ரொம்ப மோசம்என்று சிவந்து போனாள்.

சட்டென்று பின்னாலே திரும்பிப் பார்த்தாள். நல்லவேளையாகக் கண்ணன் இன்னமும் மருந்து வேகத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குதான் லேசாக உடம்பு சுட்டதென்று டாக்டரிடம் காட்டி மருந்து வாங்க வந்தாள். அப்போதுதான் வழியில் திலீப் அவளைக் கண்டு நிறுத்தினான். பின் இருவருமாக டாக்டரிடம் காண்பித்துவிட்டு மருந்துடன் வந்து கண்ணன் தூங்கிவிட்டான் என்பதால் அவனை பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அவளை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு தன் வீட்டை அடைந்தான். அப்போது அங்கே சுவாதி ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டாள். அவன் வரக் காத்திருந்தவள் போல,
உங்க மகன் எங்க போனாரு என்ன மீட்டிங் யாரோடன்னு கேளுங்க ஆண்ட்டி.... ரொம்ப உத்தமன் மாதிரி வேஷம் போடறாருஎன்று கத்தினாள்.
என்னம்மா, என் பிள்ளையைப் பற்றி என்கிட்டேயே மோசமா பேசறே.... மைன்ட் யுவர் வர்ட்ஸ் சுவாதி.... எனக்கு எம் பிள்ளையைப் பற்றி நல்லாவே தெரியும்என்றார் கோபமாக.
என்னிடம் கோபித்து பயனில்லை அவர நானே இன்னொரு பெண்ணோட பார்த்தேன்.... அது யாருன்னு கேளுங்கஎன்று கீச் கீசென்று கத்தி தீர்த்தாள்.
லிசன் சுவாதி.... அத எங்கம்மா என் கிட்ட கேட்கவே வேண்டாம்..... நானே எங்கம்மாகிட்ட சொல்லிப்பேன்.... ஆனா நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குங்க, நான் யாரோட வேணும்னாலும் போவேன் பேசுவேன் பழகுவேன் இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்..... நீங்க வந்ததிலிருந்து ரொம்பவே என் ப்ரைவசீல மூக்கை

நுழைக்கறீங்க இத்தோட நிறுத்திக்குங்கஎன்று நிதானமாக அமைதியாக ஆனால் திண்ணமாக கூறிவிட்டான்.

No comments:

Post a Comment