Tuesday 25 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 6

ஆசிரமத்தில், பிறந்த குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் வரும் வளரும் என்பதால் எனக்கு அவர்கள பேணி வளர்த்த அனுபவமும் இருந்தது.... அதனால் நானும் மகிழ்ச்சியாகச் சென்றேன்... கொஞ்சம் சிக்கலான பிரசவம் தான் ஏன் என்றால் பிரேமாவிற்கு பெரிதாக சக்தி இருக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்தே குழந்தையை எடுத்தனர்.... ஒரு மாதம் போல அவள் ரெஸ்டில் இருக்க நாந்தான் தாயையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டேன்.... நடுநடுவே பூரணி அம்மாவும் வந்து பார்த்துக்கொண்டார்

கண்ணனுக்கு  மூன்று மாதம் ஆகி இருக்கும்போது டாக்டரிடம் செக் அப்பிற்கு அழைத்துச் சென்றனர் பிரேமாவும் ஜார்ஜுமாக. போகும் வழியில்தான் விதி விளையாடியது தீபு....” என்று மேலும் அழுதாள் மது.

அவனுக்கும் உண்மை தெரியும் என்பதால் அவன் அவள் முதுகை தடவி கொடுத்து சமாதானபடுத்திக்கொண்டிருந்தான்.
அவங்க போன டூ வீலர ஒரு லாரி வந்து அடிச்சிடுச்சு..... கண்ணன் தூக்கி எறியப்பட்டான்... நல்ல வேளையாக ஒரு துணி மூட்டையில் போய் எகிறி விழுந்தான்.... சிறு காயங்களுடன் தப்பினான்.... பிரேமா அந்த இடத்திலேயே உயிர் இழந்தாள்.... ஜார்ஜையும் அவளையும் ஒரு வக்கீல் தான் வழியில் இந்த விபத்தை கண்டு மருத்துவமனையில் சேர்த்தார்..... ஜார்ஜ் சொல்லி எனக்குத் தகவல் கூறினார்.... நான் போய் கண்ணனை பொறுப்பெடுத்துக்கொண்டு காத்திருந்தேன்.... பிரேமா இறந்தது அப்போதும் எனக்குச் சொல்லப்படவில்லை.... ஜார்ஜ் ஏதோ உயில் எழுதக் கேட்டதாக அந்த வக்கீல் கூறினார்..... ஏற்பாடுகள் மளமளவென நடந்தன.... ஜார்ஜ் கேட்டுக்கொண்டபடி எழுதி முடித்து கை ஒப்பம் வாங்கியபின் நான் உள்ளே அழைக்கப்பட்டேன்.... என்னிடம் ஜார்ஜ் வேண்டி கேட்டுக்கொண்டார்..... உயிலின்படி நான் கண்ணனின் கார்டியனாக்கப் பட்டேன்..... கடைசி வரை அவனை நான் என் மகனாக பார்த்துக்கொள்ள வேண்டினார் ஜார்ஜ்..... அவருக்கு நான் வாக்கு கொடுத்தேன்.....

என் உயிர் தோழியின் பொக்கிஷம் கண்ணன்
..... அவளின் நினைவுச் சின்னம்..... அவனை எப்படியும் விட்டுவிட என்னால் எப்படி முடியும் தீபுஎன்று தேம்பினாள். “இதோ கண்ணனே என் உலகம் னு வாழறேன்.... இந்த வீடு ஜார்ஜ் வாங்கியது... கண்ணனுக்கு சொந்தம்.... இந்த ஆறேழு மாதங்களாக நான் இங்கேயே கண்ணனுடன் தங்கி ஸ்கூல்ல வேலை பார்க்கிறேன்... அவன் என் உயிர் தீபு.... நான் எப்படி உங்களை மணக்க முடியும்.... நீங்க ஒப்புக்கொண்டாலும் உங்க தாயார் என்ன சொல்வார்கள்..... உங்களை மணந்த காரணத்தால் என் பொறுப்புகள் மாறும்... அப்போது என் மகனை நான் பார்த்துக்கொள்வதில் ஏதானும் குறை ஏற்பட்டால் என்ன செய்வது.... என் பிரேமாவிற்கு நான் எப்படி பதில் சொல்வது..... நீங்கள் புரிந்து நடப்பீர்கள் எனக்கு தெரியும் தீபு.... ஆனாலும் என் நிலை மாறும்தானே..... என் வீடு எனக்குப் பிறக்கும் குழந்தைகள் என்று என் முக்கியத்துவம் மாறும்போது என் கண்ணனுக்கு நான் துரோகம் செய்துவிடுவேனோ என்ற பயம் எனக்கு இருக்கும்தானே தீபு என்று அழுதாள்.
நான் உங்களை மறுக்க காரணம் கேட்டீர்களே, இதுதான்..... அல்லாது நீங்கள் கூறியது போல உங்களை பிடிக்காமல் அல்ல..... எனக்கு உங்களை, உங்களை மட்டுமே பிடிக்கும்.... அவ்வளவு பிடிக்கும்.... என் மனதில் எல்லாமுமாக இருப்பவர் நீங்கள்தான் தீபுஎன்று கரைந்தாள்.

இதை எல்லாம் முந்தியே உங்ககிட்ட சொல்லி இருக்கலாம் சொல்லி இருக்கணும்... ஆனா என்னை பொறுத்தவரை கண்ணனை நான் வேறேயா நினைக்கவே முடியாத நிலையில் இருக்கேன் தீபு. அவனை என் பிள்ளை இல்லை என்று என் வாயால் கூறக்கூட எனக்கு மனமில்லை அதுதான் உண்மை”

திலீபன் கண்களும் பனித்தன. ‘இப்படியும் ஒரு பெண்ணா இந்த உலகத்தில்என்று வியந்து போனான்.
ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டான். பின் மெல்ல தேறி அவளையும் தேற்றி
மது இதப் பாரு, இந்த விஷயங்கள் எல்லாமும் எனக்கு ஏதுக்கே தெரியும்.... உன் வக்கீல் எனக்கும் தெரிந்தவர்தான்.... நீ அன்றொரு நாள் அவரைக் கண்டுவிட்டு திரும்பும்போது நான் பார்த்தேன்..... அவரைக் கண்டு விவரங்கள் கேட்டேன்..... இதில் பெரும்பாலும் கூறினார்....
நீ என்னிடம் உன் வாய்மொழியாய் எல்லாவற்றையும் கூறினால் உனக்கொரு நிம்மதி என்றுதான் பேசவிட்டேன் மது... அதல்லாது உண்மைகளை நம்பாமல் அல்ல...
அனைத்தும் அறிந்தபின் என்னுள் நானே யோசித்து அலசி தீர்த்துக்கொண்டுதான் உன்னிடம் பேச வந்தேன் டா.....

நான் அப்போதே கூறியது போலத்தான் கண்ணன் மேல் எனக்கிருக்கும் அன்பு நீ அறியாதது அல்ல
..... நீயே மறுத்தாலும் அவன்தான் நம் மூத்த மகனாக இருப்பான்.... நாளை ஏதேனும் விவகாரம் வராமல் இருக்க நம் திருமணம் முடிந்ததும் அவனை முறைப்படி ஸ்வீகாரம் எடுத்துக்கொள்வோம்..... அவன் என் வாரிசாக இருப்பான்..... அவன் சொத்துக்கள் அவனிடமே இருக்கும்.... என் சொத்துக்களிலும் பங்கு அவனைச் சேரும்..... அடுத்து நமக்கு குழந்தை பிறந்தாலும் பிறக்காவிடினும் இவனே நம் தலைப்பிள்ளை மதுஎன்றான் உறுதியாக.

எல்லாம் தெரிஞ்சுமா இப்படி முடிவெடுத்தீங்க தீபுஎன்று வியந்தாள்.
‘ஆம்’ என்று தலை ஆட்டியவன்,
“இன்னும் என்னடா
?” என்றான்.
நான் இப்படி கேட்கிறேனேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க தீபு,” என்றாள் தயங்கியபடி.
“சொல்லு டா” என்றான்
“இல்லை, ஒரு வேளை, எனக்கு ஏதானும் நடக்கக் கூடாதது நடந்து அதனால கண்ணனை நான் பெற்றேடுத்திருந்தாலும் நீங்க இந்த முடிவுக்குத்தான் வந்திருப்பீங்களா தீபு..... ஏன் கேட்கிறேன் னா, இந்த முடிவு உங்க வாழ்க்கையில மட்டுமில்லாம என் வாழ்க்கையிலும் ஒரு மிகப் பெரிய திருப்பம். அதான்....” என்றாள்

“என்னை, என் காதலை, நான் உன் மீதும் கண்ணனின் மீதும் வைத்திருக்கும் அன்பை சோதித்துப் பார்க்கிறாயா மது?” என்று கேட்டான்.
“சரி என்ன நினைத்து நீ இந்த கேள்வியக் கேட்டிருந்தாலும், இதோ என் பதில், ஆம் மது, கண்ணனை நீயே எந்தவிதமான காரணத்துக்காக பெற்று எடுத்திருந்தாலும் நான் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன்” என்றான் அடிபட்ட முகத்துடன்.

“மன்னிச்சுடுங்க தீபு” என்று அவன் மேலேயே சாய்ந்துகொண்டாள்.
“இப்போ உன் மனம் தெளிவாச்சா மது?” என்றான். அவளது குழப்பமான முகம் ஓரளவுதான் தெளிந்திருப்பதைக்கண்டு.

அம்மா..?” என்றாள்.
ஆம், அவர்களுக்குச் சொல்லி புரியவைக்க வேண்டும்..... உண்மை தெரியவைக்க வேண்டும்.... புரிந்துகொள்வார்கள்..... எனக்கு நம்பிக்கை உள்ளதுஎன்றான்.
இப்போ உன் சம்மதத்தை சொல்லலாம் தானே மதுஎன்று குழைந்தான்.
அவள் முகம் சிவந்தாள். அவன் மடிமீதே தலை கவிழ்ந்தாள்.
மதுஎன்றான், அவள் முகம் நிமிர்த்தி.
அவன் முகம் காண வெட்கி இதெல்லாம் நிஜமா தீபு?” என்றாள் இன்னமும் நம்பிக்கை இன்றி.
உனக்கு நம்பிக்கை வரவழைக்க நான் என்ன செய்ய வேண்டும், சொல்லு மது செய்யறேன்என்றான் அவளை ஆழமாகக் கண்டு.
அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
உனக்கு சம்மதமா இல்லையா?”  என்று கேட்டான்.
சம்மதம்என்றாள் மெல்லிய குரலில்.
நம்பிக்கை வந்ததா?” என்று கேட்டான்.
அவள் சற்றே முழித்தபடி சந்தேகமாக தலை அசைத்தாள்.
அதைக்கண்டவன் அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழ் தேடி தன் இதழ் பதித்தான். ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம் அவள் கண் மூடி கிரங்கிப்போனாள். விலகவும் தோன்றாமல் அவனோடு ஒன்றி சாய்ந்தாள்.
இப்போ நம்பறியாடீ ?” என்றான் கண் சிமிட்டியபடி.

அப்போது கண்ணன் முழித்துக் கொண்டு சிணுங்கினான்.
என் சமத்துப் பிள்ளை, அப்பாக்கு டைம் கொடுத்து முழிச்சுட்டான்என்று சிரித்தான்.
சி போஎன்று எழுந்து ஓடிச் சென்று அவனை எடுத்துக்கொண்டாள்.
திலீபிடம் வர கண்ணன் அவனைக்கண்டு ஒரே சிரிப்பாக தாவினான். அவனை ஆசையாக வாங்கி கொஞ்சிக்கொண்டான்.
அவள் அதை ஆவலாக பார்க்க என்னடி பார்வை.... உன்னையும் கட்டிக்கிட்டு கொஞ்சட்டுமா?” என்று மற்ற கையயால் அவளையும் இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
போங்கஎன்றாள் சிவந்து.
திலீப்பிற்கு நிறைவாக இருந்தது.
டேய் உங்கம்மா பெரிய ஆளுடா.... திருமணத்திற்கு முந்தியே குடும்பஸ்த்தனாக்கீட்டா என்னைஎன்று சிரித்தான்.
அவள் அவனை செல்லமாக அடித்தாள்.
இருங்க அவனுக்கு பாலும் உங்களுக்கு காபியும் கொண்டு வரேன்என்று உள்ளே ஓடிச் சென்றாள். அவன் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். என்னவோ புரிந்ததுபோல அவனும் சிரித்துக்கொண்டான்.
மது வந்து கண்ணனை ஏந்திக்கொண்டாள். அவனுக்கு பால் புகட்டி வாய் துடைத்தாள். மீண்டும் திலீபிடம் கொடுத்துவிட்டு
இருங்க சாப்பிடுட்டு போகலாம்தானே.... நான் ஏதானும் டிபன் செய்யறேன்என்றாள்.
சரி சிம்பிளா பண்ணு..... என்னால உன்னைவிட்டு ரொம்ப நேரம் பிரிஞ்சு இருக்க முடியாதுடிஎன்றான் தாபமாக.
போதுமேஎன்று சிவந்து உள்ளே ஓடினாள்.

தோசை மாவு இருந்தது
. கொஞ்சம் சட்னி அரைத்துக்கொண்டு தோசை ஊற்றி எடுத்து வந்தாள். கண்ணனை மடியிலேயே வைத்தபடி  அவ்வபோது மதுவுக்கும் ஊட்டியபடி தானும் உண்டான். அவள் மறுக்க முயன்று தோற்றாள்.
என்ன இது அடம், நீங்க சரியா சாப்பிடுங்களேன் தீபுஎன்றாள். மன நிறைவோடு வயிறும் நிறைந்து பிரியா விடைப் பெற்று வண்டியைக் கிளப்பினான்.

அத்யாயம் பத்து
திலீப் உற்சாகமாக வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் அமர்ந்தான்.
அம்மா நான் உங்கிட்ட பேசணும்என்றான். “என்னடா?” என்றார்
அம்மா நான் கல்யாணம் பண்ணிக்க தீர்மானிச்சுட்டேன்என்றான்.
நிஜமாவா சொல்றே ராஜா?” என்றார் ஆவலாக. “பொண்ணு பார்க்க போலாமாபா?” என்றார்.
இல்லைமா, பொண்ண நான் ஏதுக்கே பாத்து வெச்சிருக்கேன்.... நீ வந்து பார்த்து ஒகே பண்ணனும்என்றான்.
என்னடா சொல்றே யாருடா அது.... அந்த குலம் கெட்ட பொண்ணா?” என்றார்.
அம்மா, அவள் தான், ஆனா அவள் குலம் கெட்டவள் இல்லை..... அவளைப் பற்றின அனைத்து உண்மைகளையும் சொல்றேன், முழுசா கேட்டுட்டு அப்பறமா சொல்லு..... தெரிஞ்சுக்காம நீயாவே ஏதானும் தப்பா முடிவு பண்ணிக்காதேமா ப்ளிஸ்என்றான்.
என்ன சொல்லப் போறே..... அவ உத்தமி பத்தினி னு அவ உன்கிட்ட சொன்ன கதைய நீ என் கிட்ட சொல்லப் போறே..... அவ சொன்னா நீ வேணா நம்பலாம் ராஜா, நீ இன்னமும் உலகம் தெரியாதவன்..... காதல் மயக்கத்தில இருக்கே..... புத்தி மழுங்கி போயிருக்கு உனக்கு..... நான் அப்படி இல்லை, உலகம் பார்த்தவ..... மனுஷாள அறிஞ்சவ..... நீ என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.... நம்ம வீட்டுக்கு ஒரே வாரிசு நீ..... அப்படி இருக்கும்போது உனக்கு கல்யாணம் பண்ணிக்க வேற பொண்ணா கிடைக்காது.... போயும் போயும் கையில பிள்ளையோட நிக்கிற அந்த கழிசடை தான் கிடைச்சாளாஎன்று இரைந்தார்.
அம்மாஎன்று திலீப் இரைந்தான்.

என்னம்மா இப்படி எல்லாம் பேசறே.... உன் வயசுக்கு நன்னா இல்லைமா.... நான் உனக்கு சொல்லக் கூடாது, ஆனாலும் நீ அவளப் பார்த்தது கூட இல்லை..... அப்படி இருக்கும்போது அனாவசியமான வார்த்தைகளை ஏன் பேசணும்..... உனக்கு பிடிக்கலைனா விட்டுடு மா.... நான் உன் சம்மதம் இல்லாம அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், அவளில்லாம இன்னொரு பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன்..... நீ நன்னா முடிச்சுபோட்டு வெச்சுக்கோ..... இதுல எந்த மாற்றமும் இல்லை....

ஒண்ணு தெரிஞ்சுக்கோ மா
, நான் நினைச்சா, நீயும் வேண்டாம் இந்த வீடும் சொத்தும் சுகமும் எதுவும் வேண்டாம்னு இப்போவே இந்த வீட்டை விட்டு வெளியே போய் அவளையும் கல்யாணம் பண்ணீண்டு தனியா குடித்தனம் பண்ணி புதுசா எனக்குனு தொழில் துடங்கி வெற்றிகாணவும் முடியும்..... ஆனா நான் நீ வளர்த்த பிள்ளை..... எங்கம்மாவ தவிக்கவிட்டு எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்க எனக்கு இஷ்டமில்லை..... என்னைவிட மது இதுக்கு ஒப்புக்கவே மாட்டா..... உனக்கு இன்னும் அவளைத் தெரியாது.... குடுக்க குடுக்க தழைக்கும் கற்பகவ்ரிக்ஷம் அவள்..... மற்றவருக்காக உதவுவதற்கே தன் வாழ்க்கைய அர்ப்பணம் பண்ணி இருக்கா என் மது.... நீ தான் நான் அவளைப் பற்றி பேசுவதை கேட்கவே கூடாதுன்னு இருக்கியே, அப்பறம் பேசி என்ன பிரயோஜனம்...... விடுமாஎன்று வெறுப்பாக மேலே தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
திக்பிரமை பிடித்து அமர்ந்துவிட்டார் அவன் தாய் விசாலம் .
என்ன பேச்சு பேசீட்டு போறான்..... எல்லாம் அவ சொல்லி குடுத்து அனுப்பி இருக்கா..... நன்னா நாடகம் ஆடி என் பையனை எனக்கு ஆக விடாம பண்ணீட்டாளே பாவி படுபாவிஎன்று வைத்து தீர்த்தார்.
மறுகணமே ஐயோ என் பிள்ளை இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறானே.... அவன் ஒரு முறை தீர்மானித்தால் யாராலும் மாற்ற முடியாதே.... வேறு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டேன் னு சொல்றானே.... என் பிள்ளை வாழ்வு தழைக்கவே தழைக்கதோஎன்று பயம் வந்து கலங்கினார். ‘தெய்வமே இருக்கறது ஒரு பிள்ளை.... என்னை ஏன் இப்படி சோதிக்கற?’ என்று அழுதார்.

மேலே சென்று படுத்த திலீப் மனம் வெதும்பி இருந்தான். ‘மது பயந்ததுபோல ஆகிவிட்டதே..... அம்மா அவளைப்பற்றி கேட்க கூட இஷ்டப்படவில்லையே.... எப்படி சமாளிப்பது..... நான் ஒருவேளை மதுவை மணமுடிக்கவே முடியாதோஎன்று புழுங்கினான். புரண்டு புரண்டு உடம்பு வலிதான் மிஞ்சியது.
நாளை பொழுது நல்லதாக இருக்கட்டும் எனக்கு துணை புரிவாய் கருணை வைப்பாய் இறைவாஎன்று வேண்டியபடி தூங்கிப் போனான்.

அடுத்த நாள் எழும்போதே மனம் கலங்கியது. ‘என் மது, உன் அருமை என் அம்மாவுக்கு புரியலையே நான் எப்படி பேசிப் புரிய வைப்பேன்... உனக்கு நான் என்ன பதில் சொல்வேன்என்று உள்ளுக்குள் அழுதான். தன்னையே தேற்றிக்கொண்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான். அவன் முகம் கொடுத்து பேசாது ஒன்றும் உண்ணாது அப்படிச் சென்றதைப் பார்த்து மனம் கலங்கினார் விசாலம்.


அன்று, முன்பு சம்பந்தம் பேசிய குடும்பத்தில் இருந்து இங்கே வருவதாக இருந்தது. கூப்பிட்டு தகவல் கூறினார்கள்.

2 comments: