Monday 3 September 2018

MANNAVANE AZHALAMA 3

மூன்று நாட்கள் இப்படியாக அரட்டை சாப்பாடு கும்மாளம் என்று கரைய, தனிமையில், வினு நினைவுக்கு வந்து துவண்டான் தருண். 

“ஐயோ, நீ இப்போ எங்களோட இங்கே இல்லையே வினு..... எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க, ஆனா நான்....” என்று குமைந்தான்.

அடுத்த நாள் பகல் வருண், தருணையும் பிள்ளைகளையும் பார்த்திருந்த புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீடு பசுமையாக இருந்தது. வாசலில் பெரிய திண்ணை..... அடுத்து ஒரு சின்ன ஆபிஸ் அறை..... உள்ளே சென்றால் பெரிய ஹால், அதனை அடுத்து இருபக்கமும் பாத்ரூமுடன் கூடிய படுக்கை அறைகள்..... அதன் பின்னே டைனிங் ஹால் அதையொட்டி சமையல் மற்றும் ஸ்டோர் ரூம்..... பின் வாசல் வழியே வெளியே போனால், கிணற்று மேடை, பம்ப் மோட்டார் ரூம்.... மேலே இரு படுக்கை அறைகள் ஒரு சின்ன ஹால்... நிறைய செடி கொடிகள், மாமரங்கள் தென்னைகள்..... மனதுக்கு ரம்மியமாக இருந்தது அந்த சூழல். கனிகா நிதினுக்கும் வெகுவாக பிடித்துப்போக தருணும் அதையே முடித்துவிடுவதென தீர்மானித்தான்.

விலைபேசி பத்திரம் ரெஜிஸ்டர் செய்து விரைவிலேயே அங்கே குடி புகுந்தனர். 

சாமான்கள் லாரியில் வந்து இறங்கி இருக்க அவை அப்படியே அந்த வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரித்து அடுக்கினர். மேரிக்கு வேலை சரியாக இருந்தது. அவரவர் தேவை விருப்பம் அவளறிவாள் என்பதால் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தாள். அவ்வபோது கல்யாணியும் சாரதாவும் கூட வந்து உதவினர்.

ஒருவாறாக வீடு அமைக்கப்பட்டு எல்லாம் செட் ஆனதும் அடுத்தது ஆபீஸையும் அமைக்க ஏற்பாடுகள் செய்தான். வீட்டினை ஒட்டி பத்து நிமிட தூரத்திலேயே ஒரு ஆபிஸ் பார்த்து முடிவு செய்தான். தென் இந்தியாவில் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களை போய் பார்த்து பேசி அவர்கள் தம் பொருட்களை தாங்கள் விற்பனை செய்து தருவதாக ஒப்புதல் வாங்கி வந்தான். நாள்தோறும் விஜயனுடன் ஸ்கைப்பில் பேசி அவ்வபோது நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டான்.

மேரிக்கு வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்கவே நேரம் சரியாகிப் போனது. 

இப்போது ஊரும் தருணின் குடும்பமும் பழகிவிட்டதால் அவளது பயமும் தயக்கமும் குறைந்திருந்தது.

இங்கே வந்து செட்டில் ஆகி மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. பிள்ளைகளுக்கும் அவர்களது சம்மர் லீவ் முடிந்து பள்ளிகள் துவங்க, பக்கத்தில் சுசியும் வினித்தும் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துவிட்டான் தருண். வினித்தும் கனிகாவும் ஒரே வகுப்பு. சுசி ஒரு வகுப்பு பெரியவள், நிதின் ஒரு வகுப்பு சின்னவன். எல்லோரும் ஒன்றாகவே பள்ளிக்குச் சென்று வந்தனர். சகோதர சகோதரிகள் இடையே நல்ல அன்பும் நட்பும் ஏற்பட்டது

புதிய வீட்டில் வாசலில் மாமரத்தில் ஒரு ஊஞ்சல் கட்டி கொடுத்திருந்தான் தருண். கனிகாவிற்கு ஊஞ்சல் என்றால் கொள்ளை இஷ்டம் என்று அவனுக்குத் தெரியும். அவ்வபோது வருண் குடும்பமும் சரண்யா குடும்பமும் வார இறுதிகளில் வந்து ரெண்டு நாள் தங்கி பிள்ளைகளுடன் நேரம் செலவழித்தனர்.

அதுபோன்ற ஒரு சனியன்று எல்லோரும் ஒன்றாக வந்திருக்க சரண்யாவின் மகன் ப்ரமோதும் சுசி, விநீத்தும் கனிகா நிதினோடு விளையாடிக் கொண்டிருந்தனர். நான் முன்னே நீ முன்னே என்று ஊஞ்சலில் ஏறி ஆட போட்டி போட்டனர். ஓங்கி ஊஞ்சலை ஆட்டிவிட்டுக்கொண்டனர். சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. பெற்றோர் அனைவரும் அதை மகிழ்ச்சியுடன் கண்டபடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஊஞ்சல நிதின் வீசி ஆட்ட பிரமோத் பாலன்ஸ் தவறி கீழே விழுந்தான். மணல் திட்டுதான் என்பதால் அடி ஒன்றும் பலமாகப் படவில்லை. இதற்காகவென்றே ஊஞ்சலை மிகவும் கீழே இறக்கி கட்டி இருந்தான் தருண். ஆனாலும் பிரமோத் விழுந்ததும் சரண்யா வெகுண்டாள்.

“ஏண்டா, என் பிள்ளையை பிடிச்சு தள்ளினாய் நீ.... நினக்கெந்தா ப்ராந்தோ.... அனாதைகளுக்கெல்லாம் இந்த ஆத்துல வாழ்வு” என்று திட்டினாள். அனைவரும் அதிர்ந்து போயினர். நிதின் அசலே பிரமோத் கீழே விழுந்ததில் பயந்து போயிருந்தான். இப்போது என்றுமில்லாது சரண்யா திட்டவும், கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் மலங்க மலங்க விழித்தான். கண்ணில் நீர் முட்டியது.

“சாரி ஆண்ட்டி ஞான் வேணும்னு செய்தில்லா” என்றான்.
“எந்தாடா சாரி?” என்று மேலும் கத்த
“மதி சரண்யா, நிறுத்து, குழைந்தைகள் அப்படிதான் இருக்கும்.... நீ இதை இத்தோட விடு மோளே” என்று அவள் கணவர் மாதவன் தான் அடக்கினார்.
நிதின் மெல்ல தருண் அருகில் வந்து, “அனாதை நா எந்தா டாடி, ஞான் அனாதையானோ?” என்று கேட்டான். அங்கே அனைவர்க்கும் கதி கலங்கியது. சாரதா “அப்படி எல்லாம் இல்லேடா கோந்தே, நீ இங்கே வா... வல்லியம்மை (பெரியம்மா) கிட்ட வா நீ..... சரண்யா ஆண்ட்டி வெருதே ஏதோ பரஞ்சதா... விடு, வா நமக்கு போய் ஊஞ்சாலில் களிக்காம்” என்று அவனை தூக்கிப் போய் சமாதானப்படுத்தினாள்.

அத்யாயம் 3
குழந்தைகள் நடந்தவற்றை மறந்து மறுபடியும் ஜாலியாக விளையாட போய்விட, அனைவரின் பார்வையும் சரண்யா மீது பாய்ந்தது. தருண் தனக்கு ஏற்பட்ட கோவம் ஆத்திரம் இயலாமை அனைத்தையும் அடக்கி ஆண்டிருந்தான் ஆயினும் ரெண்டு வார்த்தை கேட்டே ஆக வேண்டும் என்று அடக்கமாட்டாமல்,
“சரண்யா, கனிகாவும் நிதினும் அனாதைகள் அல்லா.... எண்டே சொந்தம் மக்கள்
(பிள்ளைகள்).... நினக்கு அதில் என்தெங்கிலும் ப்ராப்ளம் உண்டெங்கில் அது நின்னோடு வைக்கு.... எண்டே பிள்ளைரோடு முகம் காணிக்கண்டா..... எனிக்கி அது இஷ்டமில்லா..” என்றான் காரமாக. 

“சாரி சேட்டா” என்றாள் அவள் தன் தப்பை உணர்ந்தவளாய். அந்த கசப்பு மனதில் இருந்து மாற கொஞ்சம் காலமாகியது.

இரவு படுக்கும் முன் கனிகா தருணின் அறைக்கு வந்தாள்.

“எந்தாடா கோந்தே?” என்றான் அவளை அருகே அமர்த்தி. 

“அதெந்தா டாடி, ஞானும் நிதினும் அனாதைகளானோ?” என்றாள். 

ஐயோ என்றிருந்தது தருணுக்கு. 

“இல்லை கனி, நீ எண்ட மோள். நிதின் எண்ட மோன். எண்டே பிரியப்பட்ட மக்களாண நிங்கள்” என்று அவளை அணைத்துக்கொண்டான். அவனுக்கே கண்கள் பனித்தன.


வீடும் ஆபிசும் கூட பிள்ளைகளும் என்று தன்னை தானே பிசியாக வைத்துக்கொண்டாலும் இத்தனையும் மீறி மனம் மட்டும் அமைதிகொள்ள மறுத்தது. வருணிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவனிடம் தருண் தன் மன நிலையை பகிர்ந்துகொண்டான். எப்போதுமே வருணும் தருணும் மிக நெருக்கம். சிறு வயது முதலே தனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருண் வருணிடம்தான் முதலில் சொல்வான்.

“முடியலை சேட்டா, என்ன பண்ணினாலும் மனம் அடங்க மாட்டேங்கறது. வினுவுடன் ஞான் பெரிசா ஒண்ணும்.... ஆனால் அவளோடு எனிக்குண்டான பெந்தமும் அன்பும் காதலும் நிஜம்.... எட்டு வருஷமா சில மாதங்கள் மட்டுமே வீட்டில் இருந்தாள்.... அவள் பிரிவை தாங்காமல் நான் தவிக்குனுண்டோ என்னால் அதுவும் இல்லியா..... என்னமோ ஒரு வெறுமை, ஏதோ சோகம் சேட்டா” என்றான் எங்கோ வெறித்தபடி.

வருணுக்கு அவனை பார்க்க கவலையானது. அவனை தேற்ற முயன்றான். இந்த வெறுமையும் சோகமும் அவன் தன் வாழ்வில் எந்த சுகமும் காணாததால் ஏற்பட்டது என்று அந்த மூத்த சகோதரனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று இரவு சாரதாவுடன் இதை பகிர்ந்துகொண்டான். அவள் அதிகம் பேசமாட்டாள் ஆனால் எந்த விஷயமாகினும் அலசி ஆராய்ந்து நல்லபடியான தீர்வு காணுவாள். அவளிடம் சொல்லாத ரகசியங்கள் எதுவுமே வருணிடம் இல்லை எனலாம். 

“சாரதே, எந்தா செய்யும், தருண் இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம் அல்லே சாரதே” என்று புழுங்கினான். 

“ஹ்ம்ம், அதே சேட்டா, இதின ஒரு வழி உண்டு” என்றாள்.
“எந்தா?” என்றான் ஆவலாக. 

“அல்லா, தப்பெங்கில் க்ஷமிக்கணும் கெட்டோ” என்றாள் பீடிகையுடன்.
“நீ சொல்லு மோளே” என்று ஊக்குவித்தான். 

“அல்லா, தருணுக்கு இப்போ முப்பத்தி ஆறானோ வயசு?” என்றாள்.
“அதே, முப்பத்தி ஆறு” என்றான் வருண். 

“இந்த வயசு சந்தோஷமாயிட்டு வாழவேண்டிய வயசல்லே சேட்டா..... தருண் கல்யாணம் கழிக்கணம். அதுதன்னே இதின இப்போ தீர்வு” என்றாள் அவனை நேரே கண்ணோடு கண் கண்டபடி. 

“நீ சொன்னது சரியா மோளே, எந்நாலும் இந்த விஷயம் அவனோடு ஆரு பேசறது..... அவன்ட இதப்பத்தி இப்போ பேச எனிக்கி தைரியம் இல்லா சாரதே” என்றான். 

“பேசணம் சேட்டா..... நிங்கள் தன்னே சம்சாரிகணம்.... இப்போ தானே வந்திருக்கான், பார்க்கலாம், கொஞ்ச காலம்.... நல்ல பெண்குட்டி தருணுக்கு வேண்டிட்டு நான் தேடறேன் சேட்டா..... தருண் இன்னொரு கல்யாணம் கழிச்சே ஆகணும்” என்றாள்.

அவள் சொல்வது சரிதான் தருணின் இந்தத் தனிமை வெறுமை வாழ்க்கையின் சோகம் தீர வேண்டுமெனில் அவனுக்கு மறுமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று வருணுக்கும் புரிந்தது. ஆனால்... எப்படி... ஒப்புவானா தருண்..’ என்று குழம்பினான்.
“சரி பார்க்கலாம் சாரதே” என்று படுத்தனர்.

பின்னோடு நினைவு வந்தவளாய் வருணின் மார்பில் சாய்ந்தபடி சாரதா கூறினாள், “அதனினும் முன்பு தருனோடு சொல்லுங்கோ சேட்டா, யோகா செய்ய. அதினே மனசு நிம்மதியாகும்..... ஒரு உற்சாகம் வரும்.... உடம்பும் மனசும் தேம்பாயிட்டு தோணும்” என்றாள். 

“அது சரியா.... ஞான் பேசறேன்... அது எங்ஙனயா டீ பெண்ணே, நீ இங்ஙன... எந்தா ஒரு புத்திடீ எண்ட மோளே” என்று கட்டிக்கொண்டான். 

“அஹான், இது நன்னாயி..” என்று சிரித்தபடி தன்னை ஒப்புகொடுத்தாள்.

அதன்படி அடுத்த நாள் தருணை கண்டபோது அவனிடம் முதல் கட்டமாக யோகா சேரும்படி வேண்டினான். தருணும் ஒப்புக்கொண்டான். அங்கே டெல்லியில் வினுவும் ஹாஸ்பிடலில் இருந்தாள் பிள்ளைகள், வீடு ஆபிஸ் என்று அல்லாடியபோது சில நாட்கள் யோகா பயிற்சிக்கென சென்று வந்தான். அது அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது, ஆனால் அதை தொடர முடியாமல் ஏதேதோ தடங்கல்கள் வந்து நின்று போயிற்று. இப்போது அதன்மேல் மீண்டும் ஈர்ப்பு வர பக்கத்தில் பிரபலமாக இருந்த ஒரு கேரள ஆயுர்வேத யோகா சென்டருக்கு சென்று விசாரித்தான். சேர்ந்தும்விட்டான்.

அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஆறுமணிக்குள் தயாராகி யோகா வகுப்புக்கென செல்ல, அங்கே அவனைப்போல பல ஆண்களும் பெண்களும் வந்து குழுமி இருந்தனர்.... அவர்களுக்கு சொல்லிகொடுக்கவென அழகிய ஒரு இளம் பெண் உள்ளே வந்தாள்.... அவள் கண்களில் கருணை நிறைந்து... ஒரு சாந்தம் நிலவியது.... அன்பான அடக்கமான மெதுவான குரலில் பேச்சு.... அதிராமல் பதறாமல் மெல்ல ஒரு நிஜ யோகியைப் போலவே அவர்களுக்கு செய்ய வேண்டியதை கற்றுக் கொடுத்தாள்.

“ஞான் காருண்யா, உங்க யோகா இன்ஸ்ட்ரக்டர்..... முதலில் நாம இந்த ஒரு வாரமும் பிரணாயாமா பழகப் போறோம்..... பின்னே மெல்ல மெல்ல யோகா ஆரம்பிக்கப்படும்” என்றாள். அந்தக் குரலும் அந்த கண்களின் சாந்தமும் அவனை என்னமோ செய்தது..... கண்ணை மூடி சப்பணம் இட்டு அமர்ந்து பெரும் மூச்செடுத்து அமைதியாக ஆத்மாவிலிருந்து ஓம் என்று குரல் கொடுத்தாள் காருண்யா.

“ப்ளிஸ் ரிபீட்” என்றாள். அதேபோல் அனைவரும் ஓம் என்றனர். 

“மெல்ல நிதானமா மெல்லிய குரலில் சொன்னால் போதும்.... ஓ வென்று சத்தமாக பறையண்ட ஆவசியம் இல்லை” என்று திருத்தினாள். அதேபோல ஓம் கூறி பழகினர். அதன் பின் ‘நாடி சுத்தி’ ஆரம்பித்தாள். 

“நாம் எடுக்கும் மூச்சின் சப்தம் நமக்கே கேட்கப்டாது.... மூச்சு வெளியிடும்போது அது பதறாமல் சிராக வெளியே விடணம்” என்று செய்து காண்பித்தாள். 

“ஒன்பது முறை செய்யுங்கள்” என்றாள். அதன்படி செய்ய தருணுக்கு வேறே ஒரு உலகத்தில் இருப்பது போலத் தோன்றியது. மேலும் சூரிய பேதா சந்திர பேதா என்ற மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொடுத்தாள்.

“இன்னு
, இது மதி நாள காணாம்..... ஆனால் நண்பர்களே, இதை இன்னு மாலையும் செய்து பழகிக் கொள்ளுங்கோ” என்று வேண்டுகோளாகக் கூறினாள். 

‘ஒ அதற்குள் ஒரு மணி நேரம் முடிந்துவிட்டதா’ என்று தோன்றியது. 

‘ஐயோ இங்கிருந்து போக வேண்டுமே’ என்று தோன்றியது தருணுக்கு. வகுப்பு முடிந்து எல்லோரும் கலைய, அவன் காருண்யாவிடம் சென்றான்.

“தாங்க்ஸ், இந்நிக்கிதான் சேர்ந்தேன், உங்க வகுப்பு எனிக்கி வளர இஷ்டமாய்” என்றான். 

“ஓ தேங்க்ஸ்” என்றாள் புன்னகையுடன். 

“மனசில ஒரு அமைதி.... எத்தறை நாளுக்கு பின்னே அங்ஙன ஒரு நிம்மதி அறியாமோ” என்றான். 

“குட், உங்களுக்கு அப்படி ஒரு பிலிங் ஏற்பட்டதுனா, நீங்க அவ்வளவு ஆழமா அனுபவிச்சு அதை முழு மனசோட செஞ்ஜெள்னு அர்த்தம்.... எனிக்கி வளர சந்தோஷம்” என்றாள் லேசான மலையாள வாடை இருந்தாலும் பெரும்பாலும் தமிழில். 

“ஒகே நாள காணாம்” என்று கை கூப்பி விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு வந்து மீண்டும் குளித்து ஆபிசிற்குக் கிளம்பினான். 

“என்ன டாடி இன்னிக்கி இவளோ சீக்கிரம்?” என்றாள் கனிகா. 

“இன்னிக்கி ஆபிஸ்ல இண்டர்வ்யு இருக்கு கனி” என்றபடி ஷுவை மாட்டினான்.

ஆபிஸ் சென்றபின் பத்து மணி வாக்கில் வந்திருந்த காண்டிடேட்சை ஒவ்வொருவராக அழைக்க நேர்முகம் நடந்தது. இதுவரை இந்த மூன்று மாதங்களில் சேல்ஸ் கு என இருவரை அமர்த்தி இருந்தான். வரவேற்பில் ஒரு பெண்ணை அமர்த்தி இருந்தான். ஆபிஸ் மேனேஜராக ஒரு ரிடைர்ட் ஆசாமிய பொறுப்பு குடுத்து அமர்த்தி இருந்தான்.

ஹரிஹரன் மிகவும் நல்லவர், கஷ்டப்படும் குடும்பம்.... ரிடைர் ஆகி பணதட்டுபாட்டுடன் அவதி படுகிறார் என்று வருண்தான் சிபாரிசு செய்திருந்தான். அவரும் வருணின் கணக்கு தப்பாமல் சிரத்தையாகவே பணி செய்தார். இப்போதும் அவரும் இவனுமாகத்தான் கணக்கு வழக்கு பார்த்து கணினியில் அனைத்தையும் ஏற்றி பார்த்துக்கொள்ளவென அக்கௌண்ட்ஸ ஆபிசர் தேர்வு செய்து கொண்டு இருந்தனர்.

மூன்றாவது ஆளாக உள்ளே நுழைந்தவளைக் கண்டு அவன் ஆச்சர்யப்பட்டான், அவளும் கூட. 

“நீங்க இங்க?” என்றான். 

“இது உங்க ஆபீஸ்னு நேக்கும் தெரியாது.... எனிவே நைஸ் மீட்டிங் யு ஹியர்” என்றபடி அமர்ந்தாள் காருண்யா. ஹரிஹரனையும் வணங்கினாள். அவளது ரெசுமே வை பார்வையிட திருப்தியாகவே இருந்தது. சில வேலை சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டான் அவளும் சரியாகவே கூறினாள். ஆறாண்டுகள் அனுபவம் இருந்தது. 

இதுவே போதும் என்று இருவருக்கும் திருப்தியாக அவளையே தேர்வு செய்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் அடக்கமாக. 

“அவிட யோகா.... இவிட அக்கௌண்ட்ஸ்..?” என்றான் கேள்வியோடு,
“அது மனதின் நிம்மதிக்கு, இது வயிற்றின் நிம்மதிக்கு..” என்றாள் மெல்லிய சிரிப்புடன் அவன் கடகடவென சிரித்தான்.

“நாளைக்கே ஜாயின் பண்ணிக்கலாம்” என்றான். 

“நிச்சயமா, தாங்க்ஸ் அகேயின்” என்றாள்.

கம்பனி இங்கே சூடுபிடித்தது. நடுவில் விஜயன் வந்து நான்கு நாட்கள் தங்கிச் சென்றான். இருவரும் பழைய காலம் போல அவர்களது வீட்டின் மாடி பால்கனியில் அமர்ந்து அரட்டை அடித்தனர். வருணையும் அழைத்திருந்தான் தருண். மூவருமாக பேச்சும் சிரிப்புமாக கழித்தனர். விஜயன், அண்ணா என்று வருணுடன் சட்டென்று ஒட்டிக்கொண்டான். பிள்ளைகளுடன் அடுத்த நாள் பொழுது கழிய விஜயன் ஆபீஸையும் வந்து பார்த்தான். காருண்யாவை கண்டு அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“கணக்கெல்லாம் பக்காவாக பார்க்கறீங்க.... எனக்கு ரொம்ப ஈசியா இருக்கு.. இங்கேர்ந்து வர கணக்கை நான் சரிபார்க்கவே வேண்டாம்னு நிம்மதியா இருக்கு, குட் ஜாப்... கீப் இட் அப்” என்று வாழ்த்தினான்
“தாங்க்யு சார்” என்றாள் அடக்கமாக. 

“நல்ல தேர்வு தருண்” என்றான் அவனிடம். 

தருண் காருண்யாவிடம் கூறி இருந்தான்,
“நானும் விஜயனும் ஈருடல் ஓருயிர் போல, என் வாழ்க்கையில பில்லர் போல சப்போர்ட்... நாங்க பார்ட்னர்ஸா தான் இந்த கம்பனிய ஆரம்பிச்சு டெல்லில நடத்தினோம்.... இப்போ என் பர்சனல் ப்ராப்ளம்ஸ் காரணமா நான் இங்க வந்து இந்த பிரான்சை ஆரம்பித்திருக்கேன்.... இதுல உங்க உதவி பெரும் நிம்மதி தந்துட்டுண்ட...” என்று.

“ஐயோ, என்ன அப்படி எல்லாம் சொல்றேள்.... நான் என் ட்யூட்டியத் தான் பண்ணறேன்” என்றாள். 

“அதை சரியா பண்ணறேள்” என்றான் சிரித்தபடி.


2 comments: