Friday 7 September 2018

MANNAVANE AZHALAMA - 7

அடுத்த நாள் ஆபிசில் அவளைக் கண்டு அவனுக்கும் அவனைக் கண்டு அவளுக்கும் சங்கோஜமாக வெட்கமாக இருந்தது. அங்கே எதுவும் வெளி காண்பித்துக்கொள்ளாமல் ஆபிஸ் வேலையை மட்டுமே பார்த்தனர். 

அன்று சனிக்கிழமை அரை நாள் என்பதால் தனியே கண்டு பேச ஆவல் கொண்டது மனது.
ஆபிஸ் முடிந்து அவளை வெளியே அழைத்துச் சென்றான். அங்கே அமர்ந்து ஒரு காபியுடன் பேசிக்கொண்டனர். 

“நான் உன்கிட்ட நிறைய சொல்லணம் கருணா” என்றான்.

“எனிக்கி ஒரு பாஸ்ட் உண்டு, அதை நீ அறியணம்” என்றான். 

“எனிக்கி எந்த பாஸ்டும் அறியண்டா தரு, எனிக்கி நீங்கள் மாத்திரம் மதி, கூட நம்ம பிள்ளைரும்” என்று அவள் பேசவிடாமல் தடுத்துவிட்டாள்.

“அதல்லா கருணா, ஞான் நினக்கு சொல்லீட்டுண்டு, ஞான் வினுவை அத்தறை காதலிச்சு, அவளை அத்தரை சீக்கிரம் என்னால் மறக்க முடியாதோ என்னமோ.... அவளை என்னால காலம் முழுசும் மறக்க முடியாதுடா கருணா” என்றான்.

“உங்கள யார் வினு சேச்சியை மறக்கச் சொன்னது சேட்டா..... எதுக்கு மறக்கணம்.... எனக்கு அதில் ஒரு ப்ராப்ளமும் இல்லா கெட்டோ” என்றாள்.

“ஒண்ணு புரிஞ்சுக்குங்கோ சேட்டா, வினுவிண்டே தருணினை அல்லா நான் காதலிச்சது. இப்போ இங்கே இருக்கறது எண்ட தருணா.... எனிக்கி அது மாத்திரம் மதி” என்றாள்.

“ஓ மை டியர் கருணா, எத்தரை தெளிவா இருக்காய் நீ” என்று மெச்சிக்கொண்டான். “ஞான் வளர அதிருஷ்டசாலியாண” என்றன் அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்தபடி, அப்படியே திருப்பி அதில் தன் இதழ் பதித்தான். அவள் முகம் சிவந்து தலை தழைத்துக் கொண்டாள்

“எப்போடீ மோளே நம்மளூடே கல்யாணம்....?” என்று ஏங்கினான். அவள் அவன் ஏக்கம் புரிந்து களுக்கென்று சிரித்துக்கொண்டாள்.

“எண்டே அனியன் விஷ்ணு படிப்பு இன்னம் ரெண்டு மாசத்தில் முடிஞ்சுடும், இப்போவே காம்பஸ் இண்டர்வ்யு நடக்கறது தரு.... அதில் அவனுக்கு வேலைக்கு வாய்ப்பு வந்திருக்கு..... நிச்சயமா ஏதேனும் ஒரு ஜோலியில சேர்ந்துடுவான்.... அதன் பின் எனிக்கி கவலை இல்லை, நமக்கு கல்யாணம் கழிக்காம்” என்றாள் உற்சாகமாக.
“நிண்டே அம்மே என்னை கல்யாணம் கழிக்க சம்மதிக்குமோ?” என்று கேட்டான் தருண். 

“பார்க்கலாம். பேசி ட்ரை பண்ணணம்..” என்றாள் கொஞ்சம் யோசனையாக. “கருணா” என்று குழைந்தான். 

“ம்ம்” என்றாள். 

“அதெந்தா டீ, நீ என்னை மோகிச்சது?” என்றான். 

“போ சேட்டா” என்றாள் நாணியபடி. 

“பறையு மோளே, ப்ளிஸ்” என்றான். 

“என்னமோ
, எனிக்கி பறையான் அறியில்லா. சொல்லத் தெரியலை சேட்டா. நிங்கள பிடிச்சு போய்.... அது மாத்தரம் அல்லா, கனிகாவும் நிதினும் கூடி வளர இஷ்டப்பட்டு போயி... தே ஆர் சோ ஸ்வீட் அல்லே சேட்டா...”

ஆம் என்று தலை அசைத்தான். “அவர்களைப் பற்றியானும் நான் சில உண்மைகளை பேசணம் கருணா” என்றான் மெல்ல. 

“என்ன உண்மைகள், குழந்தைகளுக்கு என்ன உண்மை... விடுங்கோ தரு” என்றாள் அவன் என்ன செய்வதென்று தெரியாமல் பேசாமலிருந்தான்.

வீட்டிற்குச் சென்றதும் அம்பிகா சந்தோஷமாக இருந்தாள். விஷ்ணு நல்ல கம்பனியில் நல்லதொரு வேலைக்கு செலெக்ட் ஆகி இருந்தான். கருணாவிற்கும் ரொம்பவே சந்தோஷம் தான். அவனுக்கு விரைவாக வேலை கிடைத்தால் தானும் சீக்கிரமே தருணை மணக்க முடியுமே என்று அவளுக்கு குதூகலம்.

“விஷ்ணுக்கு ஜோலி கிட்டியல்லோ, நீ இப்பொள் கல்யாணம் செய்துகொள்ளேன் மோளே?” என்றாள் அம்பிகா. 

“ஞான் கல்யாணம் கழிக்கும் அம்மே, ஆனால் அய்யாளை அல்லா..” என்றாள். “பின்னே?” என்று கேட்டாள். 

“ஞான் ஒரு ஆளை....”  என்று திணறினாள் வெட்கத்துடன். “இஷ்டப்படுன்னுண்டோ?” என்றாள் அம்பிகா. 

“அதே அம்மே” என்றாள். 

“ஆராண?” என்றாள். 

“அது அம்மே, எண்ட பாஸ் என்னை இஷ்டபடுன்னு” என்றாள். 

“என்தாடீ,,, நிண்டே பாஸ்ஒ... நின்னையோ?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

ஆம் என்று தலை அசைத்தாள். 

“ஞான் போய் அயாளை கண்டு பேசீட்டு வராம்” என்றார்.

அதன்படி அடுத்த நாள் அவர்கள் வீடு தேடி சென்றாள் அம்பிகா. அன்று ஞாயிறு என்பதால் தருண் பிள்ளைகளோடு அங்கே தான் இருந்தான். 

“இதாரு இந்த குழந்தைகள்?” என்று கேட்டாள் அம்பிகா.
“இது தருணிண்டே பிள்ளைகள்” என்றாள் கல்யாணி. 

“எந்தா?” என்று எகிறி அதிர்ந்தாள். 

உடனே “ஞான் பின்ன வராம்” என்று கிளம்பிவிட்டாள். எல்லோருக்கும் சுருக்கென்றது.

வீட்டிற்கு வந்து ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டாள் அம்பிகா. 

“நீ என்தாடீ அந்த பாசினை ரெண்டாம் கல்யாணம் கழிக்கான் ரெடியாயோ. நினக்கு அம்மாவன்  நல்ல வரன் கொண்டு வந்தார் இல்லையா?” என்று எகிறினாள்.

“அதுனால எந்தா அம்மே?” என்றாள் ஏதும் அறியாமல். 

“அவருக்கு ரெண்டு பிள்ளைகள் உண்டு என்னு நினக்கு அறியாமோ?” என்றாள். “ஆமாம், நல்ல பிள்ளைகளா அம்மே” என்றாள். 

“நினக்கு ப்ராந்தோ, பைத்தியம் பிடிச்சோ, அவனைப்போய் ரெண்டாம் தாரமா கட்டிண்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்க்கப் போறயா நீ?” என்று கத்தி தீர்த்தாள்.
அரண்டு போனாள் கருணா.

“இதுக்கு ஞான் சம்மதிக்கில்லா” என்றாள் முடிவாக. அடுத்து என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எப்படி ஒப்புக்க வைப்பது என்று அறியாமல் துவண்டு போனாள் கருணா.
அடுத்த நாள் மதியம் ஆபிசில் கருணாவிடம் வீட்டில் நடந்ததை கேட்டறிந்தான் தருண். 

“அதுக்குத்தானே நானே எல்லாம் சொல்றேன்னு சொன்னேன்... நீ கேட்டுக்கவே இல்லையே கருணா” என்றன் பாவமாக. 

“சரி, நானே வந்து நிண்ட அம்மையோடு எல்லாம் சொல்லறேன்” என்றான். அதன்படி அன்று மாலை தருணுடன் கல்யாணியும் சாரதாவுமாக வருணும் கூடக் கிளம்பி கருணாவின் வீட்டிற்குச் சென்றனர்.

அம்பிகா ஏனோதானோ என்று வரவேற்றாள். அமர வைத்தாள். கருணாவிற்கு வியர்த்துப் போனது. கைகள் நடுங்கின. சாரதா அவள் நிலை புரிந்து அவளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டாள்.

“ஆண்ட்டி ஞான் சில சத்தியங்கள் இங்கே சொல்லணம்னு வந்துட்டுண்டு. நீங்கள் பொறுமையா கேட்கணம் ப்ளிஸ்” என்று வேண்டிக்கொண்டான். என்னவோ என்பதுபோல முகத்துடன் கேட்டாள் அம்பிகா. தொண்டையை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தான் தருண்.

உங்களுக்கு நன்னா புரியணம்னு இனி தமிழ்லயே பேசறேன். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால்...

“நான் காலேஜ் டேசில் விந்தியா என்ற பெண்குட்டியை ஸ்நேகிச்சு.... கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன்.... ரெண்டு சைட் பேரண்ட்சும் ஒப்புக்கலை....” என்று தொடர்ந்து கூறத் துவங்கினான்.

“அப்போ விந்த்யாவின் அம்மைக்கு உடல் நிலை மோசம் ஆச்சு. உடனடியா அவளுக்குத் கல்யாணம் பண்ண முடிவெடுத்தா, அவள் வீட்டில. அவள் கலங்கிப் போனாள். ஒரு பக்கம் அம்மையின் உடல்நிலை, மறுபக்கம் தனது அவசரக் கல்யாண ஏற்பாடுகள் அவளை திணற அடித்தன.

“முதல்ல நாம அம்மாவின் ஆரோக்யத்தை சரி பண்ண பாற்போம், இப்போ போய் என்ன எனக்கு கல்யாணம்னு பேசிகிட்டு.... எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை” என்று கூறிப் பார்த்தாள்.

“தும் சுப் ரஹோ.... நீ சொல்லி நாங்க கேட்கற நிலை இல்லை.... நாங்க சொல்கிறபடி நீ கேள், போதும்.... உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு” என்றார் தந்தை கபீர் சிங். 

“என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று மறுத்தாள். “ஏன், உன் அம்மாவுக்காக இதுகூட செய்ய முடியாதா?” என்று தாய் அழுதபடி கேட்க 
குழம்பினாள் வினு. முயன்று தோற்று தருணிடமே வந்து புலம்பினாள். 

விஜயனுடன் ஆலோசித்தனர். தருண் தயங்கியபடியே தன் அண்ணன் வருணிடம் விஷயத்தைக் கூறினான்.

“வருண், சேட்டா.... நீ எங்ஙன இண்டு, ஞான் நன்னாயிட்டுண்டு” என்றான் அவன். “அச்சன் அம்மை எல்லோரும் சுகம்தானே?” என்றான். குசலம் விசாரித்தபின் தயங்கியபடி “சேட்டா ஞான் இவிட ஒரு பெண்குட்டிய கண்டு.... எனிக்கி வளர இஷ்டமாயி..... அவள தன்னே கல்யாணம் கழிக்கணுமின்னே ஆக்ரகம் இண்டு.... நீதான் சேட்டா, அம்மா அப்பாகிட்ட சொல்லி எங்க கல்யாணத்த நடத்தி வைக்கணம்.... அவங்க அம்மாவுக்கு இப்போ உடம்பு நன்னாயிட்டு இல்லை... அதனால எத்தரை வேகம் கல்யாணம் கழிச்சால் அத்ரையும் நல்லதா சேட்டா” என்றான். 

வருண் முதலில் கோபம் கொண்டான். “எந்தாடா நீ காணிச்சது.... ஞான் எங்கன பறையும் அச்சனோடு?” என்று இரைந்தான். பின் மெல்ல ஆத்திரம் குறைந்து “சரி ஞான் நோக்கட்டே....” என்று வைத்துவிட்டான்.

வருண் தாய் தந்தையிடம் தருணின் திருமண விஷயமாகப் பேச முனைய அங்கே பிரளயம் வெடித்தது. தருண் விந்த்யாவை திருமணம் செய்துகொள்ள எந்த வகையிலும் தான் ஒப்புவதற்கில்லை என்று கூறிவிட்டார் அவனின் தந்தை. 

“என் பேச்சை மீறி அவன் அவளை கல்யாணம் கழிச்சால் பின்னே அவன் எண்டே மகனில்லா” என்று முடித்துவிட்டார். தருணின் தாய்தான் இதில் அவதிப்பட்டு போனாள். பிள்ளை பாசமும் விடாமல் கணவன் சொல்லையும் மீர முடியாமல் இருதலை கொள்ளி எறும்பானாள்.

நிலைமையின் தீவிரத்தினால் தருண் வேறு வழி இன்றி தன் தாயிடம் போன் இல் பேசி விஷயத்தை கூறிவிட்டு, “அம்மே, என்னோடு க்ஷமிக்கணும்.... எனிக்கி இவிட வேறு வழி ஒண்ணும் இல்லா அம்மே..” என்று மன்றாடினான். மெளனமாக கண்ணீர் விட்டாள் அந்தத் தாய். கடைசியாக போன் வைக்கும்போது மனம் கேளாமல் அவனை ஆசீர்வதித்தாள்.

அந்த ஒரு வார்த்தை அவனுக்கு யானை பலம் குடுக்க, அவன் விந்த்யாவின் பெற்றோர் முன்னிலையில் தன் தோழன் விஜயனின் ஆதரவுடன் சென்று விந்த்யாவை மணக்கக் கேட்டான்.

“தும் கோன் ஹோ, ஏக் மதராசி ( யார் நீ, ஒரு மதராசி)..... நான் என் பொண்ணே உனக்கு குடுக்க முடியாது.... கெட் அவுட்.... நீங்க எல்லாம் படிக்க வரீங்களா, இல்ல பொண்ணுங்களை சைட் அடிக்க வரீங்களா..... அவள்க்கு மாப்ள பார்த்தாச்சு..... நாளனிக்கி கல்யாணம்.... வம்பு பண்ணாம பேசாம போயிடு, இல்லேனா உன் உயிருக்கு நான் காரண்டி இல்லே” என்று மிரட்டினார் கபீர் சிங். 

பயப்படாதபோதும் எதிர்த்து நின்று விஜயனும் தருணுமாக என்ன பேசியும் அவரிடம் பலனில்லாமல் போனது. அதன்பின் அவனைக் காணவும் முடியாமல் வினு வீட்டினுள் பூட்டி வைக்கப்பட்டாள்.
“அவள் மேஜர், அநியாயமாக விருப்பமில்லா திருமணத்தில் அவளை கட்டி வைக்கின்றனர்” என்று டெல்லி போலீசில் புகார் குடுத்தனர் தருணும் விஜயனும்.
போலிஸ் கான்ஸ்டபில் அவர்கள் வீட்டிற்கு விசாரிக்க வந்ததும் விந்த்யாவே அவர் முன் வந்து நின்று “இல்லை என் சம்மதத்துடன்தான் இந்தத் திருமணம் நடக்கிறது” என்று கூறிவிட்டு அழுதுகொண்டே உள்ளே ஓடிவிட்டாள். 

வந்த கான்ஸ்டபில் தருணை அழைத்துச் சென்று மிரட்டி அனுப்பினார். பின்னர் தெரிந்தது, ‘தருணை கொலை செய்வேன்’ என்று அவளது தந்தை பயமுறுத்த, வேறு வழியில்லாமல் அவள் அப்படிக் கூற வேண்டி வந்ததென்று.

அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பினர் தருணும் விஜயனும்.
அங்கே அர்ஜுன் சிங்கிற்கும் விந்த்யாவுக்கும் திருமணம் நடந்தே விட்டது.

பின்னோடு ஒரு வாரத்தில் விந்த்யாவின் தாய் இறந்து போனார். அதுவே விந்த்யாவிற்கு பெரும் அதிர்ச்சியாகப் போனது. அதிலிருந்து அவளை மீட்க பெரும்பாடுபட்டான் அவள் கணவன் என்று தெரிந்தது... தோழிகள் மூலம் அவ்வப்போது சேதி வந்தது. அதன் பின்னோடு வினுவை பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதன் பின் பைத்தியம் போல திரிந்தான் தருண். விஜயனும் அவனது அன்னையும் மட்டுமே அவனுக்கு ஆறுதல். விஜயன் மூலம் வருணுக்கு செய்தி எட்டியது.
“போதும் நீ அவிட ஜோலி செய்தது இவிட வா” என்று மிரட்டினான். தருண் எதற்கும் மசியவில்லை. 

“என்னை தனிச்சு விடணும் சேட்டா.... எனிக்கி அவிடே யாரையும் பார்க்கண்டா.... ஞான் பின்ன வராம்” என்று வைத்துவிட்டான்.

தன் மன வேதனையை மறக்க தன் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான் தருண். விஜயனுடன் சேர்ந்து பழைய கம்பனியின் பொருட்களை தங்களுக்கென ஒரு புதிய கம்பனி துடங்கி அதன் மூலம் விற்பனை செய்ய முனைந்தான் தருண். மேலும் சில கம்பனிகளின் விற்பனை பொருட்கள் சேர்ந்துகொள்ள மளமளவென சூடு பிடித்தது. வேறே எண்ணமே இன்றி ஊர் ஊராக இருவரும் சுற்றி பிசினஸ் பிடித்தனர். நல்லபடி உயர்ந்து வந்தபோது தான்....

‘வினு கருவுற்றாள். கனிகா பிறந்தாள். கொஞ்சம் கடினமான பிரசவமானது. 
சிசேரியன் செய்தே குழந்தையை எடுத்தனர். பேறு காலத்தில் கவனிக்க எவருமின்றி தானே விழுந்து எழுந்து தன்னை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை விந்த்யாவிற்கு.....’  என்று எல்லாமும் கேள்விப்பட்டான்.

அவளது கணவன் அவளை சிறிதளவும் கவனிப்பதில்லை. அவள் ஒரு வறண்ட வாழ்வு வாழ்ந்து வந்தாள் என்று கேள்விப்பட்டு துடித்துப் போனான் தருண். அவளை மறக்கவும் முடியாமல் வேறொரு பெண்ணை மனதாலும் நினைக்கவும் முடியாமல், தன் வாழ்வும் பாழாகி நடை பிணமாக வாழ்ந்து வந்தவனுக்கு ஒரே ஆறுதல் விஜயன் மட்டும்தான்.

அந்நேரத்தில்தான் விஜயன் கல்பனாவை திருமணம் செய்தான். தெரிந்த குடும்ப நண்பரின் மகள். அவ்வபோது பார்த்துப் பேசி பழகி உள்ளனர். தருணுக்கும் அவளைத் தெரியும். அவ்வபோது விஜயனுடன் கண்டிருந்தான். அதனால் அவனது கல்யாண வேலைகளை தலை பொறுப்பாக ஏற்றுக்கொண்டு செய்து முடித்தான் தருண். 

கல்பனாவுக்கும் தருனைப் பற்றி எல்லாமும் தெரியும், விஜயன் சொல்லி இருந்தான். அவள் அவனுக்கு உடன் பிறவா தங்கை ஆனாள். விஜயனிடம் எவ்வளவு நெருக்கமோ அதையும்விட அண்ணா அண்ணா என்று அன்புடன் பழகும் கல்பனாவிடம் அவன் நெருங்கிவிட்டான்.

அங்கே விந்த்யாவுக்கு வாழ்க்கை நரகமாகியது. அவள் கணவனுக்கு இவள் தருணை காதலித்தும் அவனையே திருமணம் செய்ய விரும்பியதும் எல்லாம் தெரிந்து இருந்தது. அதை மனதில் வைத்துகொண்டு ஓயாமல் அவளை கொடுமை படுத்தியவண்ணம் இருந்தான்.

“என்ன, எப்போ பாரு அழுமூஞ்சியா இருக்கே, அவன் நினைப்பு வந்துடுச்சா, அவன் உன்னை தொட்டானா.... இங்கேயா, இப்படியா... என்று கூறிக்கொண்டே அவளை சித்திரவதை செய்தான்.

பச்சை உடம்பு என்றும் பாராமல் அவளை அடக்கி ஆண்டான். தன் ஆண்மைக்கு தீனி போட மட்டுமே அவனுக்கு அவள் தேவைப்பட்டாள்.... அவனது அந்த விதமான கொடுமையினால் மனதளவில் துவண்டு போனாள்.... உடல் ரணப்பட்டு போனாள் விந்தியா..... சொல்லி அழ தாயுமில்லை. கணவனை ஏன் என்று கேட்க ஆளுமில்லை

அவள் அவன் முகம் கண்டு பேசாமல், அவனை ஒரு மனிதனாகவும் எண்ண முடியாமல் வெறுத்து ஒதுக்கினாள். அவளது பாராமுகம், அவனது வெறுப்பு என்று பல்வேறு காரணங்களால் கொஞ்ச கொஞ்சமாக அவன் தன்னைவிட்டு விலகிப் போவதுபோல தோன்ற ஆரம்பித்தது விந்த்யாவிற்கு. அவனுடன் பேச்சை குறைத்துக்கொண்டாள். 

அவளுக்கு கனிகாவே உலகமானாள். ஆனால் அதுவும் கூட சிறிது சிறிதாக மாறியது. எரிச்சல் வந்தது. குழந்தை என்றும் பாராமல் அது அழும்போது எரிந்து விழுந்தாள். 

“சனியனே சும்மா இரு, என்ன எப்போ பாரு அழுகை..... நானே வேதனையில இருக்கேன், இது வேற..” என்பாள்.

ஒரு முறை அவள் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தபோது அவளை காண வந்த தந்தை துணுக்குற்றார்.


“வினு என்னடா இது, இப்படி இருக்கே, உன்னை நீயே பாழ் பண்ணிக்கிட்டு, முகம் கழுவாம, எந்த அலங்காரமும் இல்லாம இப்படி கிடக்கியேடா?” என்றார் ஆதுரமாக.

1 comment:

  1. Excellent, kadhai interesting aaga poindruku. next episode eppo enru eanga vaithuvitteergal.

    ReplyDelete