Wednesday 24 July 2019

ANBIN VAASALILE -14 FINAL


ஆமா வனி, நிச்சியமா நீதான் முக்கிய காரணம்.... அப்பாவும் சித்தியும் என்னை வந்து கவனிச்சுகிட்ட போதுதான் நான் எவ்வளவு மோசமாக வக்கிரமா நடந்துகிட்டேன்னு எனக்கு புரிஞ்சுது.... அதை எனக்கு புரிய வெச்ச பெருமை உன்னையே சாரும். நிர்மலாம்மா ரொம்ப அன்பானவங்கன்னு புரிஞ்சுது..... யோசிச்சு யோசிச்சு மண்ட வெடிச்சு எடுத்த முடிவு....” என்று எல்லாம் சொல்லி முடித்தான்.

எனக்கு உங்கள இப்போவே பார்க்கணும் போல இருக்குஎன்றாள்.
பார்த்து...?” என்றான்.
அத பார்த்தப்பறமா சொல்றேன்என்றாள்.
சரி நான் இப்போ ஆபிஸ் போயிட்டு லஞ்ச அவர்ல வீட்டுக்கு வரேன்என்றான்.
ம்ம் சரி காத்திருப்பேன்என்றாள். அவன் கிளர்ந்தான்.
என்னடி ஸ்பெஷல்?” என்றான்.
ஒண்ணுமில்லியேஎன்றாள் மழுப்பலாக.
ஹே சொல்லுடி னாஎன்று குழைந்தான்.
லஞ்ச அவர்ல மீட் பண்ணுவோம் சரியாஎன்று வைத்துவிட்டாள்.

அவன் லஞ்ச அவரில் வீட்டிற்குச் சென்று அவளது அறைக்குச் சென்றான்
. அங்கே அவள் மும்மரமாக ஏதோ வேலையில் ஈடுபட்டு இருந்தாள். அவன் அதை கலைக்காமல் போய் சோபாவில் அமர்ந்து காத்திருந்தான். அதை முடித்துவிட்டு நிமிர்ந்தவள் அவனைக் கண்டு நீங்க எப்போ வந்தீங்க தீபு?” என்று ஆச்சர்யமானாள்.
இப்போதான் ஹனிஎன்றான்.
அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் கை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு தீபுஎன்றாள்.
பின் அவனை கை பிடித்து இழுத்து எம்பி அவன் இதழோடு இதழ் பதித்து ஆழ்ந்த முத்தமிட்டாள். அவன் அதிசயித்து கண்மூடி கிரங்கிப்போனான். அவன் கைகள் அவள் மேனியை தழுவ ஈருடல் என்பது மாறி ஓருடலாக பின்னிப் பிணைந்தனர். அவன் கிடைத்த சான்சை விடாமல் தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டே அவளை விட்டான். பின் மெல்ல சுதாரித்து பிரிந்தனர்.

ம்ம்ம் வாட் ஆ கிபிட்என்றான் கிறங்கிப் போய்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கி தலை குனிந்தபடி சென்று மீண்டும் சோபாவில் அமர்ந்தாள். ஸ்வீட்டோடு சாப்பாடு செய்திருந்தாள். இருவருமாக பகிர்ந்து உண்டனர். அவளை வம்பு செய்தபடி சாப்பிட்டு முடித்தான்.
லஞ்ச அவர் முடிந்ததும் கிளம்பினான்.

மாலையில உன்னையும் கூட்டிகட்டா வனி?” என்று கேட்டான்.
வேண்டாம் தீபு, இது உங்களுக்கும் அவங்களுக்கும் உண்டான தனிப்பட்ட நேரம்..... தனிப்பட்ட சந்தோஷம்..... அங்க நானிருந்தா நல்லா இருக்காது தீபு..... நீங்க அவங்கள கூட்டிகிட்டு வாங்க.... நான் இங்கே ஏற்பாடுகளை பார்க்கறேன்..... அவங்க இங்க வந்ததும் எல்லோருமா ஒண்ணா செலிபரேட் பண்ணலாம் சரியாஎன்றாள்.
எவ்வளவு தீர்கமாக யோசிக்கறேடீ, என் செல்லம்என்று அணைத்து கன்னத்தில் தட்டிவிட்டு விடைப் பெற்றுச் சென்றான்.

அத்யாயம் இருபத்தி எட்டு
அன்று மாலை தன் ஆபிஸ் வேலையை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்பினான் தீபன்.
மதியமே ராமையாவை அழைத்து வந்தனா எல்லாமும் கூறி இருக்க அவருக்கு சந்தோஷத்தில் கை கால் ஓடவில்லை. நிஜமாவா உண்மைதானே என்று கேட்டுக்கொண்டார்.
ஆமா அங்கிள், மாலை அத்தை மாமா  தீபா எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க அதற்கு பிறகு இங்கேதான் இருப்பாங்க என்றாள்.
மாமாவின் அறை அப்படியேதான் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அதை மீண்டும் சுத்தப்படுத்தி உறைகள் திரைகள் மாற்றி புதிது போல ஆக்கினாள்.
மேலே தங்களது அறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி பெட்ரூமை தீபாவிற்காகவென அழகாக அலங்கரித்தாள்.
விசேஷமாக ராமையாவுடன் சேர்ந்து விருந்து சமைத்து டேபிளில் அடுக்கினாள். வீட்டை அழகு படுத்தி தானும் குளித்து அழகாக உடுத்தி அவர்கள் வரக் காத்திருந்தாள்.

மாலை ஏழு மணியோடு சில பெட்டிகளில் அத்யாவசிய சாமான்களோடு வந்து இறங்கினர் எல்லோரும்
. தீபாவிற்கு உற்சாகம் கரை புரண்டது. “அண்ணீ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
இனிமே நாம எல்லாம் ஒண்ணா இருப்போமாம் அண்ணன் சொல்லிச்சு என்றாள்.
ஆமா செல்லம் என்று அவளை கட்டிக்கொண்டாள் வந்தனா.
வாங்க மாமா வாங்க அத்தை என்று வரவேற்றாள்.
இதெல்லாம் உன்னாலதான் நடந்தது வந்தனாமா என்று அவள் தலையில் கை வைத்து ஆசி கூறினார் ரகுபதி.
ஐயோ அப்படி ஒண்ணும் இல்லைங்க மாமா... அவர் தானே யோசிச்சு எடுத்த முடிவு என்றாள் அடக்கமாக.

அவளை அதிசயித்துப் பார்த்தான் தீபன்
.
அவள் சிரமப்பட்டு அவர்களுக்காகவென அறை ரெடி செய்து வீட்டை சீர் செய்து ஸ்பெஷலாக சமைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போயினர் அனைவரும்.
தீபனுக்கு உள்ளூர ஒரு உதறல், ‘இது சரியான முடிவா.... இது ஒத்துவருமா?’ என்று உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி பறந்தது. அதை அவன் முகத்தில் இருந்தே கண்டு கொண்ட வந்தனா அவன் கை பிடித்து அமுக்கி ஆல் வில் பி வெல் என்றாள்.
அவள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று தெளிந்தான்.

ஆனா ஒண்ணுடீ..” என்றான் குனிந்து அவளிடம்
என்ன?” என்றாள்.
முன்போல சுதந்திரமா ஒன்னோட கொஞ்சிக்க முடியாது..... அக்கம் பக்கம் பார்த்து கை போடணும் என்றான் கண் சிமிட்டி.
சி போ என்று சிவந்து போனாள்.
எல்லோருமாக அமர்ந்து அரட்டை அடித்து சாப்பிட்டு பேசி சிரித்து மகிழ்ந்தனர். ராமைய்யாவிற்கு கண்கள் நிறைந்தன. கொஞ்சம் உப்பு மிளகாய் எடுத்து வந்து அனைவரையும் சுற்றி எடுத்துச் சென்று அடுப்பில் போட்டு வெடிக்கவிட்டார்.

சில நாட்களில் இங்கே ரகுபதி நிர்மலா தீபாவிற்கு பழகிப் போனது. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து மருமகள் அமைத்திருப்பதைக் கண்டு மெச்சிக்கொண்டாள் நிர்மலா. தீபா இங்கிருந்தே ஸ்கூல் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

அவர்கள் மத்தியில் நடமாடியபடி வந்தனாவோடு ரகசியமாக கொஞ்சுவதில் ஒரு த்ரில் இருந்ததுதான் என்று உணர்ந்தான் தீபன். அதை அவளிடமும் சொல்லி வெட்கப்பட வைத்தான். அனைவர்க்கும் நடுவில் அமர்ந்து ரகளை செய்து கொண்டிருந்தான்.
அவளைக்கண்டு ரகசியமாக கண் சிமிட்டுவான்... காற்றில் உம்ம்மா கொடுப்பான்..... தீபா அருகில் இல்லாதபோது இன்னும் அதிகம்.... வேண்டுமென்றே இழைந்து கொண்டு இடித்துக்கொண்டு நடந்து போவான்.... வந்தனாவிற்குதான் இவனை சமாளிப்பது கஷ்டமானது.

என்னங்க இப்படி அழும்பு பண்றீங்க?” என்று தனிமையில் கடிந்து கொண்டாள்,
நான் என்ன பண்ணேன்?” என்றான் சிறு பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு.
ச்சே ரொம்ப மோசம் என்று சிவந்து போனாள். அவள் சிவந்த கன்னத்தை வருடியபடி
இதெல்லாம் ஒருவித ரசனையான சரசம்டீ.... இப்போதான் என்ஜாய் பண்ண முடியும்..... ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் மை டியர் என்றான்.
அதுக்கில்ல மாமாவும் அத்தையும் ஏதானும்...” என்று அவளும் கிறங்கித்தான் போனாள். உள்ளுக்குள் மனம் இதை எல்லாம் ரசித்ததுதான்.
அவங்களும் காதலிச்சவங்கதானே என்றான்.
மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கினார்போல தோன்றியது ரகுபதி நிர்மலாவுக்கு மட்டுமின்றி தீபன் வந்தனாவிற்கும் கூட.
சங்கரன் மங்களத்துக்குமே கூட பெருமகிழ்ச்சி.

அத்யாயம் இருபத்தி ஒன்பது

இப்படியாக ஒன்றாக குடித்தனம் செய்திருக்க இவர்களின் தலை தீபாவளி வந்தது. எல்லோருமாக துணிமணிகள் ஷாப்பிங் ஸ்வீட்டுகள் செய்வது என்று வீடு நெய் மணத்தது. நிர்மலா பக்குவம் சொல்ல வந்தனா அவளோடு கூட சேர்ந்து தினுசு தினுசாக செய்து ஜமாய்த்தனர்.

அங்கே சங்கரனும் மங்களுமும் கூட தலை தீபாவளி என்று சிறப்ப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். முன்தினமே அங்கே வர வேண்டும் என்று அழைத்திருந்தனர். முன்தினம் அங்கே தீபாவுடன் சென்று கொண்டாடினர். தீபாவோடு சேர்ந்து ஊரையே அசத்தி பட்டாசு வெடித்து ஆசை தீர கொண்டாடி மகிழ்ந்தான் தீபன்.
மறுநாள் காலை நான்கு மணிக்கே விழித்தெழுந்து குளித்து புதுசு உடுத்தி மீண்டும் தொடர்ந்தனர். வந்தனா தாய் வீட்டில் எடுத்திருந்த மயில்கண் வண்ண பட்டுப்புடவையில் மிளிர்ந்தாள். தாயுடன் சேர்ந்து பலகாரம் தயாரித்து ஸ்வீட்டுடன் எல்லோருமாக சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

வலுக்கட்டாயமாக மங்களம் சங்கரனையும் கூட்டிக்கொண்டு தங்கள் வீடு வந்து சேர்ந்தனர். அங்கே எல்லோருமாக கூடி பேசி சிரித்து பண்டிகை கொண்டாடினர். தீபனும் தீபாவும் கூடினால் வீடே அதிர்ந்தது. ரகுபதி நிர்மலா, வந்தனா தீபனுக்கு புதுசு தந்து மாற்றிக்கொள்ள கூறினார்கள். அது மிக அழகிய மஞ்சள் கிழங்கு நிற பட்டுப் புடவை.
அதை உடுத்தி அழகு தேவதையாக திகழ்ந்தாள் வந்தனா. தலை சுற்றி சொக்கி விழுவது போல நடித்தான் தீபன்.
போதுமே என்று இவள் சிவந்து நாணிப் போனாள்.

தீபாவளிக்கு எனக்கு என்னடி ஸ்பெஷல்?” என்றான் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு பின் கழுத்தில் முத்தமிட்டபடி.
இப்போ தர முடியாது, ஆனால் இன்னும் எட்டு மாதத்தில் கையில கொடுக்க முடியும் என்றாள் மேலும் சிவந்தபடி.
போடி எட்டு மாதம் கழித்து நீ கொடுக்கற வரைக்கும் காத்திருக்கணுமா.... இப்போ...” என்று பேசிக்கொண்டே போனவன் சட்டென்று உரைத்து ரியலி!! ஓ மை டார்லிங், மை ஹனி வனி...... நிஜமாவா?” என்று அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
ஆம் என்பதுபோல வெட்கி லேசாக தலை சுற்ற, அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

முத முதலா உங்ககிட்டதான் சொல்லணும்னு நேத்து அம்மா அப்பாகிட்ட கூட சொல்லலை என்றாள்.
ஓ மை லவ் என்று மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தான். அவள் வயிற்றில் குனிந்து முத்தமிட்டான். அவளுக்கு கூசியது.

சும்மா இருங்களேன் இப்படி படுத்தினா எப்பிடி என்றாள் குழைந்த குரலில்.
டீ எனக்கு பயமா இருக்குடீ..” என்றான் திடீரென்று படுக்கையில் அமர்ந்தபடி.
அவன் முகத்தில் நிஜமான கலவரம் கண்டு அவளும் கலங்கிப் போய்
ஏன் என்ன கண்ணா, என் தீபு இல்ல.... என் செல்லமில்ல... என்ன கலக்கம் சொல்லுங்களேன்?” என்று கெஞ்சினாள்.

இல்லடீ நேத்துவரைக்கும் ஒண்டிக் கட்டையா தனியா அனாதை மாதிரி வாழ்ந்தேன்..... இன்னிக்கி என்னடானா எனக்குன்னு என் மனைவி, கூடி வாழ வந்திருக்கும் அம்மா அப்பா தங்கை..... போதாதற்கு இப்போ எனக்குன்னு ஒரு பாப்பா.... இதெல்லாம் நிஜம்தானே..... உண்மைதானே..... கனவில்லையே..... திடீர்னு இவ்வளவு சொந்தங்கள்... மூச்சு திணருதுடீ.... பயமா இருக்கு என்று அவள் வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்துக்கொண்டான்.
கண்ணிலிருந்து நீர் பெருகிக்கொண்டிருந்தது.

ஐயோ இவளோதானா.... என்னமோன்னு நானும் பயந்துட்டேன்.... என் செல்ல தீபுவா இப்படி கலங்கறது..... கடவுள் கருணை வைத்தார் தீபு..... நம்ம மேல கருணை வைத்தார்.... எல்லாமே நிஜம்.....இனிமே என்னிக்குமே உண்மையானது.... இது மாறாது.... அதுக்கு நாம நம்ம வீட்டு பெரியவங்களுக்கும் தெய்வத்துக்கும் தான் நன்றி கூறிகிட்டே இருக்கணும் என்று ஆறுதல் படுத்தினாள்.

கண் துடைத்துக்கொண்டு ஜோடியாக மாடியிலிருந்து கீழே வந்தனர். அனைவரும் ஒன்றாக இருக்கும்போது மெல்ல இருவருமாக இந்த நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்ள என்று சந்தோஷம் எல்லோரையும் பற்றிக்கொண்டது. ஆரவாரமானது.
இன்னிக்கி டபிள் சந்தோஷம் டபிள் செலிபரேஷன் என்று கொண்டாடினார் ரகுபதி.

நிர்மலாவும் மங்களமும் வந்தனாவை வந்து அணைத்துக்கொண்டனர்
. மற்ற விவரங்கள் காதோடு மெல்ல கேட்டுக்கொண்டனர். அவள் வெட்கத்துடன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள்.
ரொம்ப ரொம்ப நாளைக்குப் பிறகு எங்க வாழ்வில இப்படி ஒரு சந்தோஷத குடுத்திருக்கீங்க.... நல்லா இருக்கணும் என்று எல்லோரும் வாழ்த்தினர்.
ஆனந்தம் விளையாடும் வீடு....” என்று எப் எமில் பாட்டு ஓடியது.

முற்றும்








































 





1 comment: