Saturday 20 July 2019

ANBIN VAASALILE - 10


அனைவரும் கிளம்பிவிட்டனர். தீபன் மட்டும் இருந்தான். அவளோடு பேசிக்கொண்டிருந்தான்.
ஆனாலும் உங்களுக்கு இவ்வளோ அழும்பு ஆகாது என்றாள் தணிவான குரலில்.
எதச் சொல்றே?” என்றான்.
உங்க அப்பா அவ்வளவு ஏக்கமா தன்மையா கேட்டாரு இல்ல..... வரேன் வரல ஏதானும் சொல்லலாம் இல்ல என்றால்.
அந்தப் பேச்சை விடு என்றான்.

சரி இப்போது வேண்டாம் பிறகு பாற்போம் என்று விட்டுவிட்டாள்
.
அவன் உர்ர் என்று கோபமாக இருந்தான் என அறிந்து மெல்ல அவனருகில் நகர்ந்து அமர்ந்தாள்.
அதை ரசித்தாலும் என்ன ஈஷல், போடி என்றான்
எம் புருஷன் நான் உக்காருவேன் நீங்க என்ன சொல்றது என்றாள்.
அவன் கண்கள் மின்ன கிளர்ந்தான்.
ஹேய் பெண்டாட்டி என்று இடது கையால் அணைத்து அருகில் இன்னமும் இழுத்துக்கொண்டான்.
இப்போ மட்டும்? என்றாள்.
மெல்ல குனிந்து சூப்பரா இருக்கேடீ...... மனசும் உடம்பும் என்னென்னமோ கேக்குதுடீ என்றான் ஏக்கப் பெருமூச்சுடன்.
என்ன கேக்குது ஒதையா?” என்றாள் கண்களில் குறும்பு கொப்பளிக்க.
அவளை முறைத்துவிட்டு சுற்றும் பார்த்துவிட்டு குனிந்து அவள் கையில் இதழ் பதித்தான்.
ஐயோ என்ன இது தீபு... யாராச்சும் வந்துறப் போறாங்க என்றாலும் கன்னங்கள் சிவந்து போனது. அதை ரசனையோடு பார்த்திருந்தான்.
பின்னோடு அனைவரிடமும் விடைப் பெற்றுச் சென்றான்.

ஒரே மாதத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது. அதனால் மளமளவென கல்யாண வேலைகளை பார்த்தனர் சங்கரன் வீட்டில். பெரியம்மா பெரியப்பாவும் கை கொடுக்க வேலை நடந்தது. மண்டபம் பார்த்து கல்யாண காண்ட்ராக்ட்டுக்கு விட்டு விட்டனர்.

அந்த மனிதர் நடேசன் மிகவும் நல்லவர்
. எத்தனையோ கல்யாணங்களை செய்து முடித்த அனுபவம் இருந்தது. பாந்தமாக மனதுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அனைத்தையும் அமைத்துக் கொடுத்தார்.
வந்தனாவிற்கு மொத்தமாக லீவ் கிடைக்காது என்பதால் வார இறுதிகளில் தன் திருமண ஷாப்பிங்கை முடித்துக்கொண்டாள். கல்யாணத்துக்கு மூன்று நாள் முன்னிலிருந்து அடுத்த இரு வாரங்கள் வரை என்று லீவ் கிடைத்தது.
அவ்வப்போது தீபனுடனும் சென்று அவன் பக்க திருமண ஏற்பாடுகள்,அவன் உடைகள், அவனது இருந்த சில சுற்றங்களுக்கு உடைகள் என்று வாங்க உதவி வந்தாள்.

உங்க அப்பா அம்மா தீபாக்கு துணி எடுக்கணுமே தீபு?” என்று கவனம் செய்தாள். முறைத்தான்.
இதில முறைக்க ஒண்ணுமே இல்லை..... அவங்க செய்ய வேண்டிய முறைப்படி வந்து சடங்கெல்லாம் செஞ்சு கடமைய நிறைவேற்றினாங்கதானே..... நீங்க கொஞ்சம் இறங்கி வரணும் தீபு..... இந்த முக்கியமான நேரத்துல அது  ரொம்பவே அவசியம் என்று வலியுறுத்தினாள். அவன் முறைப்பாகவே இருந்தான். ஆனால் அவள் இளகவில்லை.
வேண்டா வெறுப்பாக அவளோடு துணி எடுக்கச் சென்றான்.
நான் வருவேன் ஆனா நீயே தான் எல்லாம் செலெக்ட் செய்யணும் என்று ரூல் போட்டான்.
சரி வாங்க என்று அழைத்துச் சென்றாள்.

ரகுபதிக்கு பட்டு வேட்டி சட்டை
, நிர்மலாவிற்கு பட்டுப் புடவை என வாங்கினாள்.
தீபாவிற்கு வாங்கும்போது மட்டும் ஆசையாக முன் வந்தான். வந்தனா உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். ‘முரட்டாடு அந்தச் சின்னக் கைகளுக்குள் கட்டுண்டுவிட்டதே என்று எண்ணி வியந்தாள்.
அவளுக்கு நல்ல தளிர் பச்சையில் சிகப்பு பார்டர் கூடிய அகல ஜரிகை பட்டு பாவாடை ப்ளவுஸ் மற்றும் தாவணியும் வாங்கினர்.

ஏன் தாவணி, இன்னும் அவ போடலையே?” என்று கேட்டான். அவன் என்ன அறிவான்.
இதுவரை போடலியா.... அவ அணிந்து நாம பார்க்கலையான்னு நமக்குத் தெரியாதே தீபு..... இப்போ அணியலைன்னாலும் பின்னோடு அணியவேண்டி இருக்கும்தானே..... அதனால் அதுவும் இருக்கட்டும் என்று வாங்கினாள்.
பரவாயில்லை நீ வனி என்று மெச்சிக்கொண்டான். அவனுடைய திருமண உடைகளையும் மாலை வேளைகளில் அவனோடு சென்று அவளே தேர்வு செய்ய வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்துச் சென்றான்.

திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்கள் இருந்த நிலையில் ஒரு நாள் காலை அவனிடமிருந்து எப்போதும் போல காலை குறுஞ்செய்தி வரவில்லையே என்று யோசித்தாள் வந்தனா. சரி ஏதேனும் முக்கிய வேலை இருந்திருக்கும் பார்க்கலாம் என்று நினைத்தாள்.
மதியம் வரையிலும் கூட எந்த செய்தியும் இல்லை என்றதும் கொஞ்சம் பயந்தாள். அவனது மொபைலை எடுக்கவில்லை. வீட்டு நம்பரில் அழைக்கலாம் என்று நினைத்து எடுத்தபோது அதில் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. ராமைய்யாதான் பேசினார்.

அம்மா வந்தனாமா, நான் ராமைய்யா பேசறேன் என்றார் பதட்டமாக.
தம்பிக்கு உடம்பு முடியலை மா.... காலைலேர்ந்து எழுந்து கீழே வரவே இல்லை, சரி தூங்கறாருன்னு நினைச்சேன்.... பத்து மணி ஆச்சேன்னு மேலே போய் பார்த்தேன் இழுத்து மூடிகிட்டு படுத்து கிடந்தார்..... ஏதோ அனத்தல். தொட்டுப் பார்த்தா உடம்பு ரொம்ப சுடுதுமா.... நான் குடும்ப டாக்டருக்கு போன் பண்ணி இருக்கேன். அய்யா வீட்டுல சொல்லலாம்னா தீபன் தம்பி கோபிச்சுக்குமொன்னு பயமா இருக்கு..... ஆனாலும் இப்போ உங்ககிட்ட பேசீட்டு அவர கூப்பிடத்தான் போறேன்..... நீங்க கொஞ்சம் வரமுடியுமா?” என்று கேட்டார்.

தோ கிளம்பீட்டேன் ராமையா அங்கிள்... பத்திரமா பாத்துக்குங்க.... தோ வந்துடறேன் என்று தன் பெற்றோரிடம் செய்தி சொல்லிவிட்டு பறந்தாள்.
அதே நேரம் ராமையா ரகுபதி வீட்டிற்கும் தகவல் தந்தார்.
என்னங்க பிள்ளைக்கு உடம்பு முடியலையாமே என்றாள் நிம்மி பதறிபோய்.
சரி டாக்டர் போயிருக்காரு..... பார்த்துட்டு சொல்லட்டும்...... நான் அங்கே போகலாம்னா கத்துவானே..... என்னைப் பார்த்தா அதுக்குன்னே வீம்பு பிடிச்சு மருந்தக் கூடக் கையாலத் தொட மாட்டான்..... இதுக்கு முன்னாடி அப்படி நடந்திருக்கே, நினைவில்லையா உனக்கு.... நீயும் நானும் பதறி என்னவாகப்போவுது..... பேசாம ஒக்காரு நிம்மி என்று அடக்கினார்.

அவர் சொல்வது முற்றிலும் உண்மை
.
வருடங்களுக்கு முன் ஒரு முறைஅங்கிள் அவர இங்கிருந்து போகச் சொல்லுங்க அப்போதான் நான் மருந்து சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து ரகுபதியை விரட்டியவன் ஆயிற்றே.

வந்தனா நீ முன்னால போ மா. தேவைனா கூப்பிடு நான் அப்பாவை அழச்சுகிட்டு பின்னாடியே வந்துடறேன்என்றார் மங்களம்.
வந்தனா அங்கே சென்றபோது டாக்டர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். சோர்ந்து சுருண்டு படுத்திருந்தவனைக் காண சகிக்கவில்லை. டாக்டர் ஒரு இன்ஜெக்ஷன் போட்டு மருந்துகள் எழுதித் தந்தார்.
காய்ச்சல் அதிகமாத் தான் இருக்கு..... வைரலா ஆ இருக்கலாம்..... எதுக்கும் ஜாக்ரதையா பக்கத்துல இருந்து பார்த்துக்கணும்.... அப்பப்போ ஏதானும் குடிக்கக் கொடுங்க..... ரொம்ப டையர்ட் ஆக இருக்கும்.... நாளைக்கு வரேன் என்று கூறிச் சென்றார்.
 
ராமையா நானே போய் வாங்கி வந்துடறேன் மா.... இங்கே பக்கத்துல தான்..... நீங்க இங்க இருங்க என்று கூறி கிளம்பிச் சென்றார்.
அவன் அருகே பெட்டில் அமர்ந்தாள் வந்தனா
தீபு எப்பிடி இருக்கு இப்போ?” என்றாள் கண்கள் கலங்க.
என்னடா, ஐயாம் ஒகே டா.... நீ கலங்கினா அப்பறம் நான் என்ன செய்வது?” என்றான் தீனமான  குரலில்.
வெறும் ஜுரம் தானே சரியாய் போயிடும்.... படுத்து ரெஸ்ட் எடுங்க என்று தேற்றினாள் .
ஹே ஹனி தாங்க்ஸ் பார் கமிங் என்று அவள் கைபிடித்து தன் மார்பின் மீது வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டான்.
என்ன இது, யாருக்கோ மாதிரி தாங்க் எல்லாம் பண்றீங்க.... நீங்க என் புருஷன் தீபு என்றாள் நேராகப் பார்த்து வந்தனா.
ஓ மை! வனி என்று பிடித்த கையில் லேசாக முத்தம் பதித்தான்.
ராமையா மருந்து வாங்கி வர அதை கொடுத்து கொஞ்சம் பானம் கரைத்து கொடுத்தாள்.

அன்று முழுவதும் அங்கேயே கழித்தாள்
. அவன் மருந்தின் வேகத்தில் உறங்க அவனருகே நாற்காலியை போட்டுக்கொண்டு அமர்ந்தாள். அவ்வபோது சூப், பானம், ஜூஸ் என்று கொடுத்தாள். அவன் மருந்து மயக்கத்தில் இருந்தான். ஒன்றும் அறியாத நிலை. மாலையில் ஜுரம் கொஞ்சம் குறைந்தது. அவன் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும்போது மதியம் ரகுபதியும் நிர்மலாவும் வந்து பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டுச் சென்றனர்.
ஏன் வரச் சொன்னேன்னு உன்னையும் ராமையாவையும் வருத்தெடுத்துடுவான் மா..... நாங்க கிளம்பறோம் பாத்துக்க என்று கூறிச் சென்றார் ரகுபதி.

அன்று இரவு அவனுக்கு கொஞ்சம் லேசான முழிப்பும் தெளிவும் வந்தது
. அவளோடு சன்னக் குரலில் பேசிக்கொண்டிருந்தான்.
நான் இரவு வீட்டிற்கு போயிட்டு காலங்காலையில வந்துடட்டுமா தீபு?” என்று கேட்டாள்.
போகணுமா?” என்று முரண்டான் சின்னக் குழந்தை போல.
பின்ன இங்கே எப்பிடி?” என்று நாணத்தோடு கேட்டாள்.
அதெல்லாம் ஒண்ணும் பரவாயில்லை. இந்த ஜூர வேகத்துல நான் உன்னை ஒண்ணும் பண்ணீட மாட்டேன்... நீ இங்கே இருக்கே, என்னை பார்த்துக்க அப்படீங்கற எண்ணமே என்னை நிம்மதியா உறங்க வைக்குது ப்ளிஸ் போகாதேயேன் வனி?” என்று கெஞ்சினான்.

இவள் தந்தை தாயை அழைத்துக் கேட்டாள்
.
சரிமா நீ அங்கேயே இரு..... கூட ராமையாவையும் இருக்காரே துணைக்கு..... ஏதானும் அவசரம்னா என்னைக் கூப்பிடு வந்துடறேன் என்றார் சங்கரன்
சரி பா என்றாள்.
அவனுக்கு முகம் மலர்ந்து போனது தாங்க்ஸ் ஹனி என்றான்.
கரைத்த ரசம் சாதம் சமத்தாக உட்கொண்டு மருந்துகள் எடுத்துக்கொண்டு படுத்துக்கொண்டான். மெல்ல அவனிடம் பேசியபடி அவனை தட்டித் தூங்கப் பண்ணினாள்..... ராமையா சாப்பிட அழைத்தார்.... கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பக்கத்துக்கு அறையில் கொஞ்சம் படுத்தாள்.

நல்ல தூக்கத்தில் வனி என்று அழைக்கும் குரல் கேட்டு விழித்தாள்..... தூக்கி வாரி போட்டது.... எங்கே இருக்கிறோம் என்று உடனே புரியாத நிலை..... உடனே சுதாரித்து பக்கத்துக்கு அறைக்கு ஓடினாள்.
எங்கே போனே என்னை தனியா விட்டுட்டு?” என்றான் சிறு குழந்தையாக.
பக்கத்து அறையில் கொஞ்சம் தூங்கிட்டேன் தீபு என்றாள் மன்னிப்பாக.
ஆமா பாவம் முழு நாளும் எம்பக்கதிலேயே இருந்துட்டே...... உனக்கும் டையர்ட் ஆகா இருக்கும்தானே.... நான் பாரு அதை யோசிக்கவே இல்லை...... உன் தூக்கத்த கெடுத்துட்டேன் என்றான் அவனும் மன்னிப்பாக.
நீ இருக்கக் கொண்டு ஏதோ பரவாயில்லை.... இதுக்குதான் மனைவி னு ஒருத்தி வேணுங்கறது..... பாரு அந்த பெரிய மனுஷன் எட்டிக் கூட பார்க்கலை..... அங்கிள் சொல்லாமையா இருப்பாரு என்றான் குற்றமாக.

இல்லை தீபு மாமா அத்தை வந்தாங்க.... நீங்க தூங்கும்போது வந்து பார்த்துட்டு கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டுப் போனாங்க என்றாள் மெல்லிய குரலில் பயந்தபடி.
அவங்க ஏன் இங்க வந்தாங்க அவங்கள யார் இங்கே கூப்பிட்டா?” என்றான் உடனே மாறிப்போய்.
அடராமா எதுவும் குற்றம்னா எப்பிடி என்று நினைத்தாள்.
என்னவாம்?” என்றான்.
உள்ளம் அவர்களை நாடுகிறது.... உடம்பு முடியவில்லை எனும்போது மட்டும் வேணுமாக்கும்..... நல்ல இருக்கே இவன் நியாயம் என்று எண்ணினாள். ‘ஆனா வந்தா தப்புன் னு கத்தல் என்று சிரித்தாள்.

அத்யாயம் இருபத்தி ஒன்று
அடுத்த நாளும் அப்படியே கழிந்தது. அன்று மதியம் அங்கே வீட்டிற்கு ஊர்லிருந்து யாரோ வந்திருந்தார்கள் என வந்தனாவை வரச்சொல்லி கூப்பிட்டனர் பெற்றோர். அவளும் அரை மனதாகக் கிளம்பினாள். ஆயிரம் முறை ராமையாவிடம் பாத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்றாள்.
பரவாயில்லை வனி, நீ தைர்யமா போ.....  நான் நல்லாதானே இருக்கேன்... இன்னிக்கி புள்ளா ஜுரம் கூட அவ்வளவா இல்லியே டா என்று அவனும் அனுப்பினான்.
பின்னோடு போன் வந்தது. அவன் எடுத்து தெம்பில்லாத குரலில் ஹெலோ என்றான், நம்பரை கவனிக்கவில்லை.
நா.. நான்... நிர்மலா பேசறேன் தம்பி என்றது அந்தப் பக்கம் குரல்.
அவனுக்குத் தூக்கி வாரி போட்டது..... ஒன்றுமே பதில் கூறாமல் திகைத்து அப்படியே படுத்திருந்தான்.
வெச்சுடாதீங்க ப்ளிஸ் என்றார்.

அப்போதும் ஒன்றும் பேசவில்லை
.
இப்போ எப்பிடி இருக்கு உடம்புக்கு..... இங்க உங்கப்பாவும் நானும் தீபாவும் கூட ரொம்ப கவலையா இருக்கோம்..... அதான் மனசு கேக்காம சட்டுன்னு கூப்பிடுட்டேன்.... அவருக்கு பேசணும்னு ஆசை ஆனா பயம்..... இப்போ பரவாயில்லியா.... ஜுரம் குறைஞ்சிருக்கா?” என்று ஆதுரமாக கேட்டார்.

ஏனோ அவனுக்குள் மளுக்கென்று ஏதோ உடைந்தது
..... அழுகை கண்ணை நிறைத்தது..... யாருமே இல்லாமல் இப்படி அனாதையாய் கிடக்கிறோமே என்ற கழுவிரக்கமோ அல்லது தன் தாய்க்கு சமானமானவள் ஆதரவாகக் கேட்ட சொற்களின் தாக்கமோ..... அவளிடம் எரிந்து விழத் தோன்றவில்லை. அவரது பேச்சு என்னமோ சொல்லொணா நிறைவை கொடுத்தது போலத் தோன்றியது.
சில வருடங்கள் முன்பும் இரு முறை உடம்பு முடியாதபோது இப்படி நடந்துள்ளதுதான். அப்போது ரகுபதி வேறே ஊரில் இருந்தார். ராமையா கூறி போனில் அழைத்து பேசினார்தான். ஆனால் இவன் திட்டி எரிந்து விழுந்து வைத்துவிட்டான்.

இப்போது அதுபோல செய்யத் தோன்றவில்லை
.
ம்ம் நல்லா இருக்கேன்..... அவ்வளவா ஜுரம் இல்லை என்றான்.
சாப்பிட்டியாபா?” என்றார்.
ம்ம் என்றான்.
மருமக இருக்காதானே பார்த்துக்க?” என்று கேட்டார்.
பொறுமையாக அவளுக்கு பதில் சொல்கிறானே என்று ஆச்சர்யம் ரகுபதிக்கு. அவர் கை போனில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இல்லை அவ வீட்டிற்கு போயிருக்கா.... ஏதோ அவசர ஜோலியா என்றான்.
சரி படுத்துக்க நான் வேற டிஸ்டர்ப் பண்ணீட்டேன் என்று வைத்துவிட்டார் நிர்மலா.

அவனுக்கு
அதற்குள் ஏன் வைத்துவிட்டார்?’ என்று தோன்றியது.
தோ டா, சரியான கூத்து உன்னோடு என்றது மனது. அதை அதட்டி அடக்கிவிட்டு சரிந்து படுத்துத் தூங்க முயன்றான் முடியவில்லை.
வனி இங்க இருந்தபோது நிம்மதியாக இருந்தது.... அயர்ந்து தூங்கினேனே.... இப்போது அதுவும் முடியலையே...  போர் அடிக்குது வேற.... தீபாவை வரச்சொல்லி இருக்கலாமோ என்று எண்ணினான்.
ஏதேதோ யோசனைகளில் மூழ்கி கண் மூடி வெறுமனே படுத்திருக்க கொலுசு சத்தம் கேட்டது வனி என்று ஆசையாக கண்விழித்தான்.

ஆனால் அங்கே நின்றது தீபா. ‘அட இப்போதுதானே நினைத்தேன் என்று எண்ணிக்கொண்டான்.
ஹை தீபாகுட்டி என்றான்.
எப்பிடி இருக்கு அண்ணா?” என்று தொட்டுப் பார்த்தாள்.
ஜுரம் அவ்வளவா இல்லை என்றாள் பின்னல் திரும்பி.
அப்போதுதான் கவனித்தான் பின்னே நிர்மலாவும் கூடவே ரகுபதியும் நின்றிருந்தனர்.
இவர்களை எல்லாம் யார் கூப்பிட்டது, எல்லாம் ராமைய்யா அங்கிள் வேலையாகத்தான் இருக்கும்...’ என்பது போல முகம் திருப்பிக்கொண்டான்.
ஏன் நிஜமாவே அவங்க வந்தது உனக்கு பிடிக்கலையாக்கும் இழைந்து பேசினே போன்ல என்று இடித்தது மனது.


2 comments: