Friday 12 July 2019

ANBIN VAASALILE - 2


 நீங்க இங்க!” என்றான் தீபன்.
நான் இங்க கெஸ்ட் ரிலேஷன்ஸ் மேனேஜர் என்றாள் புன்சிரிப்புடன்.
உங்க ரிக்வெஸ்ட் வந்தது.... அதன்படி எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன்.... மேற்கொண்டு ஏதானும் தேவைபடுதா?” என்று கேட்டாள். ‘இவள் இங்கே இவ்வளவு உயர்ந்த உத்யோகத்தில் இந்த சின்ன வயதில்! ’ என்று அவனுக்கு ஆச்சர்யம் ஆனது. ஆனால் இயல்பான அவனது முறைப்பு குணம் எட்டிப் பார்த்தது.
நீங்க எல்லாம் செய்திருக்கலாம்.... ஆனா நாங்க அதை சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கணும்தானே.... வரப்போறது எங்க பிரின்சிபல் கம்பனியைச் சேர்ந்தவங்க..... அவங்களுக்கு இங்கே எந்த கஷ்டமும் இருக்கக் கூடாது என்றான் கறாராக.
ரைட் சார்.... நாங்களும் அத மனதில் வெச்சுதான் எல்லா ஏற்பாடும் எப்போதும் செய்வோம்.... உங்க கெஸ்ட் இங்க சந்தோஷமா வசதியா இருந்தாத்தான் அங்க உங்களோட உண்டான மீட்டிங்க்ஸ் டிஸ்கஷன்ஸ் நல்லபடி நடக்கும், பிசினஸ் செழிக்கும், ஆம் ஐ கரெக்ட்?” என்றாள் அவனை பார்த்து.
தினேஷ் அயர்ந்துவிட்டான். தீபன் அதிசயித்து திகைத்துப் போனான்.

இவளுக்கென்ன இக்ஷிணியா.... தான் மனதில் நினைத்ததை அப்படியே கூறுகிறாளே என்று பார்த்தான்.
அவன் மனதை படித்தவள் அப்போ என்னோட வரீங்களா.... நீங்களே உங்க கண்ணாலப் பார்த்துடுங்க ஏற்பாடுகள் போதுமான்னு.... ஏதானும் குறை இருந்தா நான் உடனே சரி பண்ணிட ஏதுவா இருக்கும் என்றாள் பணிவாக. முகத்தில் அதே முறுக்கோடு எழுந்து அவள் பின்னே சென்றான் தினேஷ் தொடர.
தங்களது கெஸ்ட்களின் தேவைக்கென புக் செய்த அறையை பார்வையிட்டனர். பளிச்சென்று மிக அழகாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கு இதமாக அழகுபடுத்தப் பட்டிருந்தது.

இந்தப் பூக்கள் மற்றும் பழங்கள் இன்று இரவு பிரெஷாக மாற்றப் பட்டுவிடும்.... தினமும் மாற்றப்படும் கூட.... இந்த குட்டி குளிர்சாதன பெட்டி ஏதுக்கே நிறப்பி வைக்கப்பட்டிருக்கு.... அவர்கள் உபயோகத்திற்கு ஏற்ப அதுவும் நிறைக்கப்படும் என்று விவரித்தாள்.
இன்னைக்கு நைட் அவங்க இரண்டு மணிக்கு செக் இன் செய்யும்போது உடனடியாக அவர்களை வரவேற்று கவனிக்கவென இரு பணியாளர்களை போட்டிருக்கேன்.... அவங்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும்.... அதனால் நீங்க கவலைப் படாமல் இருக்கலாம்.... வி ஆர் ஹியர் டு செர்வ் யு என்றாள் அடக்கமாக ஆனால் மிடுக்காக.
தீபனுக்கு திருப்தி. “குட் ஜாப் என்றான் எங்கோ பார்த்தபடி.
தாங்க்யு, போலாமா என்று தனது அறைக்கு அழைத்து வந்தாள்.

அதற்குள் லஞ்ச டைம் நெருங்கி இருக்க சாப்பிட்டுட்டு போகலாமே என்று கேட்க
இல்லை வேற பிசினஸ் லஞ்ச இருக்கு.... தாங்க்ஸ் பார் தி ஆபர் என்று கிளம்பினான் தீபன், இன்னமும் பிரமிப்பு அடங்காமல்.

தினேஷோ வந்தனாவின் அழகில் மயங்கி ஜொள் விடாத குறைதான்
.
காரில் திரும்பும்போது அவள் புராணமே பாடிவந்தான்.
என்னமா ஹாண்டில் பண்றாங்க சார்.... என்ன நேர்த்தி.... என்ன ஆங்கிலப் புலமை..... ஷ இஸ் டூ குட் இல்லையா சார்..... ரொம்பவே அழகா இருக்காங்க என்றான்
தினா என்ன இது, ஒரு பெண்ணைப் பற்றி இப்படித்தான் பேசுவதா.... டீசெண்டா நடந்துக்க என்றான் தீபன்.
சாரி சார் என்றான். தீபன் மனத்திலும் தினா சொல்வதெல்லாம் உண்மை என உரைத்ததுதான். ஒப்புக்கொள்ளத்தான் மனமில்லை.
அன்றிரவு வீட்டிற்குச் செல்லுமுன் பிரத்யேகமாக தீபனின் கெஸ்ட்களை கவனிக்கும்படி பல முறை கூறிவிட்டு அவசரம் என்றால் தன்னை அழைக்கத் தயங்க வேண்டாம் என்றும் கூறி வீட்டிற்குச் சென்றாள் வந்தனா.

அடுத்த நாள் காலை ஆபிசை அடைந்தபோது அந்த விருந்தினர்களை சென்று கண்டாள். அறிமுகம் செய்துகொண்டு, “இஸ் எவிரிதிங் ஆல்ரைட், எனி கம்ப்ளேண்ட்ஸ்?” என்று கேட்டுக்கொண்டாள்.
ஓ நோ, யு ஹாவ் டன் ஆ குட் ஜாப் என்றனர் அவர்கள் மலர்ந்த புன்னகையுடன்.
அவர்களின் திருப்தியை அவர்களின் முகத்தில் கண்டு தானும் சந்தோஷித்து வெளியே வந்தாள். அங்கே தனது அறையில் ஒரு சிறு பொக்கே இருக்கக் கண்டாள்.
யார் அனுப்பியது என்று பார்த்தால். “குட் கீப் இட் அப் என்று மெசேஜோடு தீபன் அனுப்பி இருந்தான். பாறைக்குள் நீர் என்று சிரித்துக்கொண்டாள். தேங்க்ஸ் என்று இமெயில் அனுப்பினாள்.

அன்று அவர்களோடு அங்கேயே பிசினஸ் லஞ்சுக்கென வந்திருந்தான் தீபன். அவளையும் கண்டு நன்றி கூறிவிட்டு செல்லலாம் அந்த சாக்கில் அவளை காணலாமே என்றெண்ணி அங்கே வர, கதவு திறந்தே இருந்தது. வாயில் பென்சிலை வைத்து உருட்டியபடி ஏதோ ஆழ்ந்த யோசனையில் எங்கோ பார்த்திருந்தாள் வந்தனா. அந்த மோன நிலையில் அவளைக் கண்டு மதிமயங்கிப் போனான் தீபன்.
ச்சே இது என்ன, பெண்கள் எல்லாம் மாயப் பேய்கள்.... எங்கம்மா போல எல்லோரும் இருக்க முடியாது.... இவர்கள் எல்லாம் வேலைக்கு வருவதே சம்பாதிக்கவும், அழகு பண்ணிக்கவும் தானே..... அப்படியே எவனானும் பணக்காரன் அம்புட்டா அவனை வலையில போட்டுக்க வேண்டியது.... எங்கப்பனை வளைத்தார்ப்போல என்று பொருமினான்.

நிமிடத்துக்கு நிமிடம் அவன் புத்தி மாறி அவன் முகத்தில் மலர்ச்சி மறைந்து எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதை மறைக்கும் முன்னே வந்தனா அவனை கவனித்துவிட்டாள்.
ஹலோ சார் வாங்க ப்ளிஸ் கம்.... ரொம்ப நேரமாச்சா வந்து?” என்றாள் சிநேகமாக.
ஆமா அதெல்லாம் கவனிக்க உங்களுக்கு ஏது நேரம்..... அதான் பகல் கனவு கண்டுகிட்டு உட்கார்ந்திருக்கீங்களே என்றான் காட்டமாக. அவள் முகம் சுருங்கிவிட்டது.
நான் வேற ஒரு கெஸ்ட் ரிக்வெஸ்ட் பத்தி யோசனையிலிருந்தேன்.... நீங்க வந்ததை கவனிக்கல.... ஐ ஆம் சாரி சார் என்றாள் அவனை நேராகக் கண்டு. ‘இவன் என்ன மாதிரியான ஜந்து. இப்போதுதானே பூக்கள் அனுப்பினான்... அப்போதே எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதே முகத்தில் என்று வியந்தாள்.
இட்ஸ் ஒகே, உங்களுக்கு ஆயிரம் வேலை ஆயிரம் கெஸ்ட்.... அதுல ஜஸ்ட் நானும் ஒருத்தன்.... எனிவே, தாங்க்ஸ் சொல்லத்தான் வந்தேன், கிளம்பறேன் என்று விருட்டென்று சென்றுவிட்டான்

அவளுக்கு என்னமோ போல ஆனது. தினமும் எத்தனையோ விதமான மனிதர்களும் அவர்களின் வேறுபட்ட குணாதிசயங்களையும் கண்டு வருபவள் தான். போனா போகட்டும் என்று விட்டுவிட்டாள். ஆயினும் அடி மனதில் அவன் அவளை தப்பாகப் புரிந்துகொண்டானே என்று சிறு துயரம் தோன்றியது. ‘அவன் யாரோ என்னமோ என்ன வேணுமானாலும் நினைத்துக்கொள்ளட்டுமே.... அவனே சொன்னதுபோல பல கெஸ்ட்களில் அவனும் ஒருவன் என்று மனதை தேற்றினாள்.



அத்யாயம் ஐந்து
அந்த விருந்தினர் அங்கே இருந்த ஒரு வாரமும் அவன் தினமும் அங்கு வந்து போனான். ஆனால் அவளும் அவனை தானே சென்று பார்க்கவில்லை. அவனும் அவளைத் தேடி வரவில்லை. எங்கேனும் எதேர்ச்சையாக கண்டால் அவள் புன்சிரிப்புடன் விஷ் செய்வாள் அதுமட்டுமே. அவனிடம் ஒரு தலை அசைப்பு மட்டுமே பதிலாக வரும்.
அவர்கள் அறையை காலி செய்து கொண்டு போனபின் அடுத்த நாள் தினேஷ் வந்தான்.
மேடம், யு ஹாவ் டன் இட்.... அவங்களுக்கு இங்க ரொம்பத் திருப்தி..... சொந்த வீடு போல கவனிச்சுக்கிட்டீங்கன்னு பாராட்டினாங்கஎன்றான்.
ஆமா என்கிட்டேயும் அளவு கடந்து புகழ்ந்தாங்க..... அது எங்க கடமை தானே மிஸ்டர் தினேஷ் என்றாள்.
ட்ரூ, ஆனாலும், எங்க பாஸ்கூட ரொம்ப சந்தோஷப்பட்டாரு..... இந்தக் கவரத் தரச் சொன்னாரு... கூடவே இந்தப் பூக்களையும் என்று தந்தான்.
இது என்ன?” என்றாள்.
பிரித்துப் பாருங்க என்றான்.
அதனுள் சில ஆயிரங்கள் இருந்தன.
மிஸ்டர் தினேஷ் இந்தப் பூக்கள் மட்டும் வெச்சுக்கிறேன்..... அதுகூட கர்டசிக்காக..... இந்த ஹோட்டல்ல எனக்கு வேணுங்கற அளவு சம்பளம் தராங்க.... நானும் அதற்குண்டான என் கடமையைத்தான் செய்தேன்..... இந்தக் கவரக் கொண்டு போய்டுங்க..... இத நான் ஏற்க முடியாது..... எல்லாரையும் பணத்த கொடுத்து வாங்கீட முடியாதுன்னு போய் சொல்லுங்க உங்க பாஸ்கிட்ட என்றாள் கோபமாக ஆனால் அமைதியான குரலில் அவள் சுபாவம்போல்.
தினேஷ் ஏதோ சொல்ல வாயெடுக்க போதும் என்பது போல் கை காட்டினாள்.
ப்ளிஸ் இத மேற்கொண்டு வளர்க்க வேண்டாம் என்றாள். வேறுவழி இன்றி எழுந்து சென்றான் தினேஷ்.

அங்கே போய் தீபனிடம் நடந்தவற்றைக் கூற அவனுக்கு ஒரு பக்கம் பணத்திற்கு ஆசைப்படாத ஒரு பெண்ணா என்று ஆச்சர்யம்.... ஆனாலும் அவன் இயல்புப்படி ஆமா என்ன பெரிசா சம்பளம் கொடுக்கிறாங்க.. கடமைய செய்தேன்னு வசனம் பேசறா..... கிப்டா மனசுக்கு பிடிச்சு கொடுத்தா பேசாம வாங்கிக்க வேண்டியதுதானே என்று பொருமினான்.
அவங்க ரொம்ப வித்யாசமானவங்களா இருக்காங்க சார் என்றான் தினேஷ்.
நீ வேற எரியற நெருப்பில எண்ணைய விடறியா என்று அவனை முறைத்தான். தினேஷ் எதுவும் பேசாமல்சரியான முரட்டாடுஎன்று மனதிற்குள் நினைத்தபடி வெளியே வந்துவிட்டான்.

அங்கே தீபன் மனசுக்குள் இன்னமும் ஆச்சர்யம். ‘பாரதி கண்ட புதுமை பெண்தான்..... இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணா?... நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, கடமை அன்பு பண்பு துணிவு....’ என்று அவளை மனம் வர்ணித்தது.
அட கஷ்டகாலமே!  நான் இப்படி ஒரு பெண்ணைக் கண்டு அனத்தும்படி செய்துவிட்டாளே என்று நொந்து கொண்டான்.
இனிமே அவளைப் பற்றி நினைக்கக் கூடாது..... வேலை கெடுது.... அவ செய்ய வேண்டிய வேலை நல்லபடி செய்து கொடுத்துட்டா.... அது போதும்..... இனி அனாவசியமா அவளை சந்திக்கும் நிலை எனக்கு இல்லை.... அப்பறம் என்னஎன்று தீர்மானித்தான். ‘ஓஹோ அப்படியா!’ என்று விதி சிரித்தது அவனைக்கண்டு.

அத்யாயம் ஆறு
அடுத்த வாரத்தில் தன் தாய் சுப்ரஜாவின் நினவு நாள் வர இருந்தது. ஞாயிறு நினவு நாள் என்பதால் எப்போதும் போல ஏதேனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் உணவு கொடுக்க ஏற்பாடு செய்து அந்நாளை அங்கேயே கழிக்கலாம் என்று முடிவு செய்திருந்தான். சனிக்கிழமை காலை பத்து மணியோடு ரொம்பவும் கேள்விப்பட்ட ஒரு ஆசிரமத்திற்குச் சென்றான். உள்ளே சென்று பார்க் செய்துவிட்டு அவர்களின் கட்டிட அமைப்புகள் அழகிய தோட்டம் என்று கண்டு மனம் லேசாகி நடக்க, அங்கே ஒரு புன்னை மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் ஒரு வயதான மூதாட்டியிடம் தன்னை மறந்து சிரித்து பேசியபடி இருந்த பெண்ணைக் கண்டான்.

இது இது வந்தனா அல்லவா.... அட இவள் இங்கே என்ன செய்கிறாள்.... என்னவோ செய்யட்டும் எனக்கென்ன.... இப்போதுதான் அவள் நினைவை மாற்றிக்கொண்டு வருகிறேன்.... இப்போது இவள் மீண்டும் என் கண்ணில் பட வேண்டுமா, கஷ்டம் என்று நொந்தபடி ஆபிஸ் அறையை அடைந்து அந்த ஆசிரமத் தலைவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தான். வேறு சில இடங்களில் சந்தித்து அவரோடு இவனுக்கு ஏதுக்கே பரிச்சயம் உண்டு. இங்கு வந்ததில்லையே தவிர சில முறை நன்கொடை கொடுத்து உதவியுள்ளான்.

அவர் அன்பாக உபசரித்து பேசிக்கொண்டிருந்தார். “முத முறையா வந்திருக்கீங்க, என்ன சாப்பிடுறீங்க மிஸ்டர் தீபன்?” என்றார். “அதேல்லாம் ஒண்ணும் வேண்டாம் சாகர் என்றான் தீபன்.
எங்க ஆசிரமத்த சுற்றி பார்க்கறீங்களா?” என்று கேட்டார்.
ஓ ஷ்யூர் என்று அவரை பின்தொடர்ந்தான். அங்கே ஆதரவற்ற பெரியோர்களும் குழந்தைகளும் என இரு பகுதிகள் இருந்தன. அவர்களுக்கென உள்ளேயே ஒரு கிளினிக், சின்னக் கோவில், விளையாட மைதானம், வார இறுதிகளில் எல்லோரும் கூடி சினிமா பார்க்க பெரிய ஹால் வசதி என்று இருந்தது.... சமையல் அறையும் டைனிங் ஹாலும் கூட சுத்தமும் சுகாதாரமுமானதாக இருந்தது கண்டு திருப்தியுற்றான் தீபன்.

நீட்டா வெச்சிருக்கீங்க.... ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் என்றான்.
அடுத்த நாள் இனிப்புடன் கூடிய மதிய உணவுக்கு பணம் கொடுத்துவிட்டு மேற்கொண்டும் நன்கொடையாக ஒரு செக் கொடுத்துவிட்டு குழந்தைகள் இடத்தை சுற்றியபடி வெளியே வந்தான்.
அப்போது அங்கே குழந்தைகள் கண்ணாமூச்சி ஆடியபடி கலகலவென சிரித்த வண்ணம் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
ரொம்ப சியர்புல்லா இருக்காங்க...” என்றான் பாராட்டுதலாக.
ஆமா வந்தனா வந்துட்டா போதாதா இவங்களுக்கு...” என்றார் அவரும் சிரித்தபடி.

ஓ ஆம் அதோ அங்கே கண்ணில் துணியை கட்டியபடி குழந்தைகளை பிடித்துக் கொண்டிருக்கிறாளே என்று நினைக்கும்போதே அவள் ஓடி வந்து இவன் மீது தெரியாமல் முட்டிக்கொண்டாள். பாலன்ஸ் தவறி கீழே விழ இருந்தவளைத் தன்னையும் மீறி பிடித்துத் தாங்கிக்கொண்டான். ஒரு பூக்குவியலாய் தன் கைகளில் சாய்ந்தவளை தாங்கியபோது அவனுள் என்னென்னவோ மாற்றம் என்னென்னமோ எண்ணங்கள்.
அவள் உடனே சுதாரித்து சாரி என்றபடி கட்டை அவிழ்த்தாள். அதற்குள் எல்லாக் குழந்தைகளும் என்று கைதட்டி சிரித்து ஆரவாரித்தனர்.
சு பேசாம இருக்கணும்.... சமத்து இல்ல...” என்று அவர்களை அடக்கியபடி கண்ணைத் திறந்து எதிரே பார்க்க,
இவனா!  கஷ்டமே, இவன் மீதா மோதிக்கணும்...... நான் வேணும்னே முட்டிகிட்டேன்னு குற்றம் சொல்லுவானே என்று நொந்தபடி. “மன்னிச்சுக்குங்க என்று கூறிவிட்டு நகர முற்பட்டாள்.
இரு வந்தனா என்றார் சாகர். “இவர் தீபன் னு இங்க நிறைய உதவி பண்ணி இருக்கார், உன்னை மாதிரியே என்று அறிமுகம் செய்து வைத்தார்.
இது வந்தனா, ஹோட்டல்ல மேனேஜரா வேலை பண்றாங்க.... மாதத்தில் ஒரு சனி ஞாயிறு இங்க காலைலேர்ந்து மாலை வரை இவங்க எல்லோரோடும் நேரம் சிலவழிப்பாங்க..... கூடவே மாத சம்....”
சார் ப்ளிஸ் என்று அவரை அடக்கினாள் வந்தனா.

இதுல என்னமா தப்பு.... நீ செய்யறதத்தானே சொல்றேன் என்று அவளை அடக்கிவிட்டு, “மாத சம்பளத்தின் ஒரு பகுதிய இங்க கொடுத்திடுவா.... அதில இங்க ஒருவேளை சாப்பாடு கவலை இல்லாம நடக்குது..... ஷி இஸ் அ ஜெம் என்று புகழ்ந்தார். அவள் சங்கோஜமாக தலை குனிந்தாள். ஓரக்கண்ணால் அவனை பார்க்க அவனோ அப்போது அவளையே ஆச்சர்யமாகப் பார்த்திருந்தான். ‘இதென்ன இப்படி பார்த்து வைக்கிறானே என்று எண்ணினாள் வந்தனா.
ஓ ஐ சீ, குட்..... பரவாயில்லையே, இந்த வயசு பெண்கள் மேக்கப், உடை, நகை, கேளிக்கைகள்னு செலவு செய்வாங்கன்னு நினைத்தேன் என்றான் வேண்டும் என்றே  கேலியாக.

அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை முறைத்தாள்.
நீங்க எப்போதும் எல்லோரயையும் தப்பாவே கணித்து பழக்கம்தானே..... எல்லோரையும் பணத்தாலே அளக்காதீங்க மிஸ்டர் தீபன் என்று கூறிவிட்டு குழந்தைகளோடு விளையாடச் சென்றுவிட்டாள்.
அவளது கோபம் நிறைந்த பார்வையும் பேச்சும் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. மனதிற்குள் அவள் மேலும் மேலும் ஏறி சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டாள். ‘சுத்தம் என்று நினைத்தான்.
அவனும் விடைபெற்று வெளியே வந்தான்.

அடுத்த நாள் எழுந்துகொள்ளும்போதே மனது கனத்திருந்தது. ஆண்பிள்ளை என்றாலும் கண் நிறைந்தது.
அம்மா, ஏன் மா இத்தனை சீக்கிரம் என்னை அனாதையா விட்டுவிட்டு போய்டே..... நான் தனியனாகீட்டேனே என்று மனமுருகி அவர் படத்தின் முன் கண்மூடி நின்றான். ‘எனக்குன்னு யாருமே இல்லைன்னு தோணுது மா.... வளர்ந்த ஆண்பிள்ளை ஆனாலும் என் தனிமை என்னையே பயம் கொள்ள வைக்குதுமா..... அதை மறைக்கத்தான் நான் கோவமும் கண்டிப்புமா நடந்துக்கறேன்..... என் கூடவே தெய்வமா இருந்து என்னை வழி நடத்து மா என்று வேண்டிக்கொண்டான்.

வேலை ஆட்கள் எல்லோருக்கும்  பணம் கொடுத்து விட்டு ஆசிரமத்திற்குச் சென்றான். மதிய உணவிற்கு இன்னமும் நேரம் இருந்தது. சாகர் எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்தார். அதைப் பார்த்து நன்றி கூறிவிட்டு அங்கே இருந்த தோட்டத்து மேடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான். குழந்தைகள் ஒரு பக்கம் சிரித்து ஆடி ஓடி விளையாடினர். பெரியவர்கள் பேச்சும் சிரிப்புமாக இருந்தனர். அனைவரின் மையமாக சுழன்று கொண்டிருந்தாள், ஆம் வந்தனாதான். அவனைக் கண்டு ஒரு நொடி நின்று ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் வேலையைத் தொடர்ந்தாள். அவனும் அவளைப் பார்த்து பதிலுக்கு விரிந்த புன்னகை செய்தான்.


No comments:

Post a Comment