Saturday 13 July 2019

ANBIN VAASALILE -3


அவன் அங்கேயே அமர்ந்து அவளை வேடிக்கை பார்த்தது அவளுக்கு என்னமோ போலிருந்தது. அதற்குமேல் இயல்பாக விளையாட முடியவில்லை. ஒரு பெரியவர் அருகே அமர்ந்து அவருக்கு நாளிதழ் படித்துக் காட்ட ஆரம்பித்தாள்.
அவ்வபோது அவனிடம் ஓடியது பார்வை. ‘இவன் இங்கே ஏன் வந்தான்..... ஒருவேளை என்னை வம்பு செய்யவோ என்று எண்ணினாள். உடனே மாற்றினாள். ‘ச்சே ச்சே அவன் அப்படி பட்டவன் அல்லவே..... ஏதானும் வேலையோ என்னமோ என்று எண்ணினாள்.
சாகர் கூப்பிடுவதாகக் கேட்டு உள்ளே சென்றாள்.

வந்தனா இன்னைக்கு தீபன் சாருடைய தாயின் நினைவு நாள்..... அதான் மதிய உணவு அவங்க பேர்ல ஏற்பாடு ஆயிருக்கு..... நீயும் கொஞ்சம் இருந்து உதவ முடியுமா.... அவங்க பேர்ல ஒரு பிரார்த்தனை செய்துட்டு உணவு கொடுத்துடலாம் என்று வேண்டிக்கொண்டார். ‘ஓஹோ அதுதான் விஷயமா..... அவன் தாயில்லாப் பிள்ளையா..... ஐயோ பாவமே என்று உருகியது. அவள் தாயை உயிர்னும் மேலாக நேசிப்பவள் ஆயிற்றே.

நிச்சியமா சாகர் சார் என்றாள். பின் உணவை பரிமாறி அனைவரையும் அழைத்து அமர்த்தி தீபனையும் அமர வைத்து அவள் முன்னின்று ஒரு சிறு பிரார்த்தனை செய்வித்தாள். தீபனின் தாய் சுப்ரஜா பெயர் கூறி அவர் ஆன்மா அமைதி பெற வேண்டி உணவை அவர் பிரசாதமாக உட்கொள்ளுவோம் என்று உண்ண வைத்தாள். அனைவரும் உண்ணும்போது சாகர் தானும் அமர்ந்து அவளையும் அமர வைத்து உண்டனர்.

தீபனுக்கு அவளது அந்த பிரார்த்தனை கண்கள் பனிக்கச் செய்தன. ‘இவள் ஏன் இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள்..... என்னை இவளது எண்ணங்கள் வாட்டுகிறதே.... குழப்புகிறதே...... என்ன முயன்றாலும் இவள் முகமும் அந்த காந்தக் கண்களும் என் நினைவை விட்டு அகல மறுக்கின்றனவே..... என்ன செய்வேன் என்று புலம்பினான்.

உண்டு முடித்து வெளியே வந்து அனைவரிடமும் விடை பெற்று வந்தனாவிடம் வந்தான்.
ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க சொன்ன பிரார்த்தனை என் நெஞ்சை தொட்டுடுச்சு...... ரொம்ப தாங்க்ஸ்...... இட் மெண்ட் ஆ லாட் டு மி...... உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வந்தனா என்று கூறிவிட்டு விடை பெற்றான்.
உங்க மனசு அமைதி அடைஞ்சதுனா அதுவே போதும்..... இது ஒரு சிறு உதவி அவ்வளவேதான்.... வரேன் என்று அவளும் விடை பெற்றாள்.
உங்கள நான் எங்கியானும் டிராப் செய்யட்டுமா?” என்று கேட்டான்.
இல்லை நான் என் டூ வீலர்ல தான் வந்திருக்கேன் தாங்க்ஸ் என்று சென்றுவிட்டாள்.
ஹ்ம்ம் என்று இயலாமையினால் ஆன ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது தீபனிடம் இருந்து.

அத்யாயம் ஏழு
வீட்டை அடைந்து உடை மாறி தன் படுக்கையில் படுத்திருந்தான். தூக்கம் வரவில்லை. ஆயினும் கண் மூடி சாய்ந்திருந்தான். மூடிய கண்களின் உள்ளே வந்தனாவின் அழகு முகம் வந்து போனது. தலையை உதறிக்கொண்டான். ‘இதேதுடா வம்பு என்று தோன்றியது. அங்கே நடந்தவற்றை எல்லாம் மெல்ல அசை போட்டான். மனசுக்கு இனித்தது.

அவளை பார்க்கவே போவதில்லை என்று நினைத்தேனே.... மறுபடியும் பார்க்கும்படி ஆகியது.... அதனால் எனக்குதான் வேதனை.... ஏன் அவள் நினவு என்னை வாட்டுகிறது..... அப்படி என்றால் அவளை நான் விரும்புகிறேனா.... ஐயோ அவளிடம் நான் எப்போதும் தன்மையாக நடந்துகொள்ளவில்லை..... அவளுக்கு என்னைப் பற்றிய ஒரு நல்ல எண்ணமும் இருக்காது..... அந்நிலையில் நான் அவளை விரும்புவது தெரிந்தால் அதை அவள் எப்படி ஏற்பாள்.... இன்னமும் கசப்பு ஏறி என்னை வெறுத்துவிட்டால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது..... அம்மா, நீதானே எனக்கு எல்லாமுமாக இறுக்கிறாய்..... இதற்கு என்னதான்மா வழி?’ என்று மனதுக்குள் புலம்பி அப்படியே தூங்கிப் போனான்.

அன்று மாலை கோவிலுக்குச் சென்று வரலாம் மனம் அமைதியாகும் என்று எண்ணி குளித்துக் கிளம்பினான். பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றான். அது அவன் தாய் சுப்ரஜாவிற்கு மிகவும் பிடித்தமான கோவில். அவரை அழைத்துக்கொண்டு அவன் அங்கு பலமுறை சென்றிருக்கிறான்.  இப்போதும் தனியாக அங்கு செல்லும்போது தாய் தன் கூடவே நடந்து வருவதுபோல பேசி சிரிப்பது போலத் தோன்றும்.

தந்தை பிசினஸ் பிரயாணம் பணம் என்று திரிய அவனும் அவன் தாயும் மிக நெருங்கிய நண்பர்கள் போல எல்லா இடத்திற்கும் சுற்றுவார்கள். கோவில், சினிமா, பீச் என்று.
உள்ளே சென்று அர்ச்சனை செய்துவிட்டு திரும்பும்போது அங்கே மறுபடி வந்தனாவைக் கண்டான்.

அட ராமா என்னடா இது வம்பா போச்சு.... இவ ஏன் என் கண்ணிலேயே பட்டுகிட்டே இருக்கா?’ என்று அலுத்துக்கொண்டாலும் உள்ளம் குதியாட்டம் போட்டது. அவள் இப்போது தனியாக அல்லாமல் பெற்றோர் போல தோன்றும் இரு பெரியவர்களுடன் இருந்தாள். முக ஜாடை அதையே உறுதி செய்தது. அங்கே பிரகாரத்தில் அமர்ந்து தேங்காய் பிரசாதத்தை உடைத்து அவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள்... அவளை நெருங்கிப் போய்க் கொண்டிருந்தவன் மீது ஒரு தேங்காய் சில்லு வந்து பட்டு விழுந்தது.
என்னமா பாத்து செய்யக்கூடாதா, அந்தத் தம்பி மீது பட்டுடுச்சு என்றார் அவள் தாய்.
சாரி என்றபடி நிமிர ஆறடிக்கும் குறையாமல் அங்கே புன்னகையுடன் நின்றவன் தீபன். அவனைக்கண்டு அவள் மெல்ல புன்னகைத்தாள். “இது மிஸ்டர் தீபன்...” என்று அவனை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவன் வணக்கம் கூறினான். அவள் தந்தை அவனை பிடித்து அமர்த்தி பேசிக்கொண்டிருந்தார்.

அப்படி ஒரு குடும்பமாக உட்கார்ந்து பேசுவது அவனுக்கு வேறு ஒரு அற்புத உலகத்தில் இருப்பது போலத் தோன்றியது.... அவன் தந்தையிடம் கிடைக்காத அன்பான பேச்சும் அரவணைப்பும் அவரிடம் அவன் கண்டான்.... மனப்புண்ணிற்கு பெரும் மருந்தாக இருந்தது அவர் பேச்சு....
நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும் தம்பி என்று வேண்டினார்.
நிச்சியமா வருவேன் அங்கிள் என்றான் அவரை பாசத்துடன் பார்த்து.

தன் தந்தை சங்கரனும் தீபனும் பல நாள் பழகியது போல பேசி அளவளாவிக்கொள்வதை ஆச்சர்யமாகக் கண்டாள் வந்தனா
.
என்னை பார்த்தால் தான் கடுவன் பூனையாக இறுக்கிறான்.... மற்றவர் எல்லோருடனும் சகஜமாக தானே பழகுகிறான்.... பெண்களைக் கண்டால் ஆகாதோ, உருகி உருகி மதியம் தாயின் பெயரில் உணவு படைத்தானே அவர்களும் ஒரு பெண்தானே..... ஒரு   வேளை என்னை மட்டுமே பிடிக்கவில்லையோ?’ என்று பல எண்ணங்கள் அவள் மனதில். ‘அட ச்சே போ நமக்கென்ன என்று ஒதுக்கினாள்.

உங்க அப்பா யாரு என்ன செய்யறாரு தீபன்?” என்று கேட்டார் சங்கரன். உடனே அவன் முகம் சுண்டிப் போனது. பதில் கூற விரும்பவில்லை என அவன் முகம் தெளிவாக கூறியது.
இஷ்டம் இல்லைனா விட்டுடுங்க தீபன் என்றார் அவர்.
அதேல்லாம் ஒண்ணுமில்லை அங்கிள் என்று மெல்ல பிரஜாபதி இண்டஸ்ட்ரீஸ் கேள்வி பட்டிருப்பீங்க அதன் முதலாளி ரகுபதிதான் என் அப்பா..... அவருக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லை அங்கிள், மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை என்றான் எங்கோ பார்த்தபடி.

ஓ அவரா ஐ சீ..... இட்ஸ் ஓகே......அத விட்டுடுவோம் என்று அவரும் வேறே பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவனும் கலகலப்பாகப் பேச ஆரம்பித்தான்.
சட்டென்று திரும்பியவன் முகம் சுருங்கி நான் அவசரமா போகணும், வரேன் அங்கிள் ஆண்ட்டி, பார்க்கலாம் இதான் என் கார்ட் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும்.... வரேன் வந்தனா சீ யு என்று கூறி பறந்துவிட்டான்.

அவன் அப்படி சட்டென்று கிளம்பியது எல்லோருக்குமே என்னவோ போல இருந்தது. ஆனால் ஏதோ பலத்த காரணம் என்று தோன்றியது வந்தனாவிற்கு.
அவன் முகம் சுருக்கிய திசையை கண்ட சங்கரன் ஓஹோ என்று எண்ணிக்கொண்டார்.

அதோ பாரு வந்தனா, அந்த ப்ளு கலர் ஷர்ட் போட்டு கூட ஒரு லேடியோட வராரே அவர்தான் ரகுபதி, தீபன் கூறினாரே அவரது அப்பா. அவரைக்காண விரும்பாமல்தான் தீபன் உடனே கிளம்பீட்டாரு..... அவங்களுக்குள்ள என்ன வேற்றுமையோ.... ஆனா பாவம் தீபன் ரொம்பவும் நல்ல பிள்ளையா தெரியறாரு..... அம்மாவும் இல்லை தந்தையோடும் நல்ல உறவு இல்லை.... இது கொடுமை மா என்றார் சங்கரன்.

அடக்கடவுளே தீபனுக்கு இப்படி ஒரு நிலைமையா?’ என்று வருந்தினாள் வந்தனா. அவர் கூடவே ஒரு பெண் அவரைவிட சற்றே வயது குறைவாகத் தோன்றும் பெண், ஆனால் சாந்தமான தெய்வீகமான முகம்..... அவரோடு சென்று அர்ச்சனை முடித்து வெளியே வந்து அவர்களை விட்டு சற்று தள்ளி பிரகாரத்தில் அமர்ந்தனர்..... ஒருவேளை அவரும் கூட தன் மனைவி பெயரில் அர்ச்சனை செய்ய வந்தாரோ என்னமோ..... அப்போ இந்தப் பெண் யாரு.....ஒருவேளை மறுமணம் புரிந்தாரா.... அதுதான் வேற்றுமைக்குக் காரணமோ?’ என்று மண்டைக்குள் குடைந்தது வந்தனாவிற்கு.
எதுவானாலும் தீபன் பாவம்..... மறு முறை சந்தித்தால் இன்னமும்  அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.... என்னால் முடிந்தது அது மட்டுமே என்று முடிவு செய்தாள்.

கோவிலிலிருந்து திரும்பிய தீபன் மிகுந்த கோபத்துடன் இருந்தான். தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டான். தன் தாயின் படத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு புலம்பினான்.
என்ன கொழுப்பு இருக்கணும் மா அந்த மனுஷனுக்கு..... உனக்கு துரோகம் செஞ்சுட்டு, உனக்கு அர்ச்சனை பண்ண, அந்தப் பொம்பளையோட கோவிலுக்கு வந்திருக்காரு..... அவளும் என்னமோ அவரோட கைகோர்த்து கிட்டு உனக்கு அர்ச்சனை செய்ய கிளம்பீட்டா..... நல்லா பேசிகிட்டிருந்தாங்க வந்தனா பெற்றோர்..... அதக் கெடுத்தார்ப்போல வந்துட்டாங்க ஜோடி போட்டுக்கிட்டு..... சட்டுன்னு நான் கிளம்பறதாப் போச்சு..... என்னைப்பத்தி என்ன நினைச்சாங்களோ என்று குமைந்தான்.
அப்போதும் முகத்தில் மாறா சிரிப்புடன் அவனுக்கு தைர்யம் கூறினார் புகைபடத்தில் சுப்ரஜா.

ஆமா நீ எப்போதும் இப்படி சிரிச்சு மழுப்பீடு..... என் கஷ்டம் உனக்கெங்கே புரியப் போகுது என்று அவரையே திட்டினான்.
பின்சாரி மா என்று புகை படத்திற்கு முத்தம் வைத்தான். அந்த நிமிடத்தில் அவன் செய்கை ஒரு சிறு பிள்ளையைப்போல இருந்தது. பாவம் என்றே தோன்றும் அதை கண்ட எவருக்கும்.

இரவு சாப்பாடு வேண்டாம் என்று படுத்துவிட்டான். சமையல்கார ராமைய்யா விடவில்லை.
இரவு நேரம் பட்டினியா படுக்கக் கூடாது, கொஞ்சமா கொண்டு வந்திருக்கேன்... சாப்பிட்டுட்டு படு தீபன் என்று உரிமையுடன் கூறி அருகே நின்று சாப்பிட வைத்தார்.
பல  காலம் தொட்டு அங்கே அவர் வேலை பார்த்து வருகிறார். தீபனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவர் அவர்தான் என்றே கூற வேண்டும்.... தாயை இழந்து தவித்த தீபனுக்கு ஒரே ஆறுதல் அவர் மட்டுமே.... அதனால் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் சாப்பிட்டு படுத்தான். மனம் கொஞ்சம் அமைதிப் பட்டது.
எப் எம்மில் பாட்டு கேட்டபடி படுத்தான். அதில் தாலாட்டு பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன.

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ இன்ப தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட....
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே
அன்னை வளர்ப்பதிலே...”
அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் அவை. ஒரு காலத்தில் சுப்ரஜாவைப் பாடச் சொல்லி அவர் மடி மீது தலை வைத்து கேட்டபடி படுத்திருப்பான். இன்றும் அவரை நினைத்தபடி அந்த பாடலை கண்களில் நீரோட கேட்டான். அப்படியே தூங்கிப் போனான் அந்த இருபத்தி ஏழு வயதுக் குழந்தை.

அத்யாயம் எட்டு
அங்கே ரகுபதியும் தூக்கம் வராமல் படுத்திருந்தார்.
சுப்ரஜா வீட்டைத் திறமையாக நிர்வகித்தாள். எல்லாம் அவள் பொறுப்பாக இருந்தது. அதனால் அவர் நிம்மதியாக ஊர் ஊராகத் திறிந்து தனது பிசினசை வளர்க்க முடிந்தது. வேண்டிய அளவு நேரமும் பாசமும் சுப்ரஜாவிற்கும் தீபனுக்கும் கொடுக்கத் தவறினார்தான். ஆனால் அது அவருக்குப் புரிய வெகு நாள் ஆனது. புரிந்தபோது சுப்ரஜா தன் கடைசி மூச்சுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். அவர் உடைந்து போனார். தான் உடைந்து போனால் தீபன் என்னாவான் என்று தன் கவலையை சோகத்தை மறைத்தார். அவனிடம் விலகி இருப்பது போல நடித்தார். தன் மகன் முன்னே தன் சோகத்தை காண்பிக்க வெட்கினார். அதுதான் அவர் செய்த மிகப் பெரிய முதல் தவறு. அவனுக்கு அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய அரவணைப்பை கொடுக்கத் தவறினார்.

அதன்பின் நிர்மலாவை சந்தித்து அவளது கவனிப்பும் ஆதரவும் கண்டு தனக்கு ஒரு துணை வேண்டும் என ஆசைப்பட்டு மணந்தார். அது இரண்டாவது தப்பு. அதை மகனிடம் எடுத்துச் சொல்லி அவன் ஒப்புதலோடு செய்திருந்தால் இப்போது இந்த கதி ஏற்பட்டிருக்காது அல்லவா என்று எண்ணிப் புழுங்கினார்.
அவர் மனப் புழுங்களை அறிந்த நிர்மலா அவர் தலையை மெல்ல பிடித்து விட்டாள். ஆதரவாய் புன்னகைத்தாள்.

அதையே நினைத்து வருத்தப்படக் கூடாது..... பிரஷர் ஜாஸ்தி ஆயிடும்..... பேசாம மாத்திரை போட்டுட்டு படுங்க பதி என்றாள் அன்பாக. “முடியல நிம்மி..... இன்னிக்கி கோவில்ல தீபனப் பார்த்தபோது எவ்வளோ ஆசையா கிட்டபோய் பேசணும்னு கிளம்பினேன்.... ஆனா அவனோ நம்மள பார்த்துட்டு அப்படி சட்டுன்னு கிளம்பி  போய்டானே நிம்மி..... இந்த அளவு எம் பிள்ளை என்னை வெறுத்திடுவான்னு நான் நினைக்கலை நிம்மி.... மனசு தவிக்குது .... நான் என்ன செய்வேன் என்று வாய்விட்டு புலம்பித் தீர்த்தார்.

எல்லாத்துக்கும் நாந்தாங்க காரணம்..... நான் உங்க வாழ்க்கையில குறுக்கிட்டிருக்கக் கூடாது பதி..... அதான் பிள்ள என்னோட கூட சேர்த்து உங்களையும் வெறுத்துட்டான் என்றாள் குற்ற உணர்வுடன்.
அதேல்லாம் இல்லை நிம்மி.... அவனுக்கு உன்மேல கோவம் இல்லைமா..... என்மேல தான்.... அதுக்கு நீ என்ன செய்வே.... விடு, வா தூங்குவோம்... கொஞ்சம் மனசு அமைதிபடும் என்று படுத்தனர்.

நிர்மலாவை மணந்து தனியே குடித்தனம் வைத்த பின்பும் தீபனோடு அந்த பங்களாவில் அவர் தங்கினார்தான். நிர்மலாவைப் பற்றி அறிந்தபின் பெரிதாக சண்டையிட்ட தீபன், அவரைக் காணப் பிடிக்காமல் அவர் வீட்டில் இருக்கும் நேரம் வரை வீட்டிற்கே வராமல் இருந்தான். வீட்டில் இருந்தால் கீழேயே இறங்கி வராமல் தவிர்த்தான். அதை எல்லாம் கண்டு மனம் குமைந்து அவனுக்கு மேலும் கஷ்டங்கள் கொடுக்காமல் அவர் விலகிவிட்டார்.
தான் அவனை கவனிக்க தவறிவிட்டோம் என்பது அப்போது தெளிவாகியது. எப்படி எப்படியோ அவனை சமாதானப் படுத்த முயன்று தோற்றார். இப்போது பிள்ளை பாசம் அவரை வாட்டியது.

அதில் ஒரே ஆறுதல் நிர்மலாவும் அவள் அரவணைப்பும் அவர்களுக்கென பிறந்த தீபாவும் தான்
. ஆம் மகனை நினைத்து அந்தப் பெயரையே தன் மகளுக்கு வைத்தார் ரகுபதி. தீபாவிற்கும் தீபனுக்கும் நடுவே பதிநான்கு வயது வித்தியாசம் இருந்தது. முதலில் அரசல் புரசலாக ஊர் மக்கள் சிரித்தனர். வம்பு பேசினார். பின் எல்லாமும் அடங்கிப் போனது.



No comments:

Post a Comment