Sunday 14 July 2019

ANBIN VAASALILE - 4


அடுத்த வாரத்தில் தன் கம்பனியின் புதிய ஆர்டர்களை கவனிக்க வேண்டி தன் வேலையில் மிகவும் பிசியாகிப் போனான் தீபன். சமீபத்தில் வந்துபோன விருந்தினர்கள் இவனைப் பற்றியும் இவனது கம்பனியைப் பற்றியும்  நல்ல கருத்துகளை ஏற்படுத்தி இருக்க மேலும் புதிய ஆர்டர்கள் அவனுக்கு வழங்கப்பட்டன.

இதற்கெல்லாம் அவளும் ஒரு முக்கிய காரணம் என்று உள்ளூர எண்ணிக்கொண்டான். இனித்தது. அவர்கள் வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோரை சந்தித்து அன்று கோவிலில் நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கோற வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். வேலை மும்மரத்தில் அது மறந்தே போனது.
கம்ப்யுடர் சாப்ட்வேரில் அவரவர் தேவைப்படி ப்ரோக்ராம்கள் செய்து கொடுக்கும் தொழில் அவனுடையது. அதில் அவனது கம்பனி நல்ல பெயர் பெற்று விளங்கியது.
பின்னோடு மேலும் சில ஆர்டர்கள் திரட்டும் விஷயமாக அவன் லண்டன் மற்றும் ஸ்விஸ் செல்ல வேண்டி வந்தது. ஒரு மாத சுற்றுப் பயணமாக அவன் செல்ல ஏற்பாடுகள் நடந்தன.

அவனில்லாத நேரங்களில் அவன் ஆப்த நண்பனும் பார்ட்னருமான விவேக் கம்பனியை நன்றாகப் பார்த்துக்கொள்வான்.... அந்த நம்பிக்கை அவன் மீது இருந்தது.... ஆர்டராயினும் பண விஷயமாகினும் அவனை நம்பலாம்... ஆயினும் இருவர் ஒப்புதலுடனே எதையும் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருந்தனர்..... அந்த வகையில் இருவர் மத்தியில் இருக்கும் நட்பு எந்தக் காரணம் கொண்டும் பாழாகாமல் இருக்கும் என்று நினைத்தனர்.

தீபன் அங்கே சென்று புதிய ஆர்டர்களுக்காக அவரவரை சந்திப்பது மீட்டிங்க்ஸ், டிஸ்கஷன்ஸ், பிசினஸ் லஞ்ச டின்னர் என்று நாட்கள் ஓடியது.... நமது ஊர் சாப்பாட்டிற்கு நாக்கு ஏங்கியது.... அங்கேயும் சில நம்மூர் சிற்றுண்டிச் சாலைகள் இருந்தன, அங்கேயே சில நேரம் உண்டு பார்த்தான், ஆயினும் நாக்கு கேட்கவில்லை.
அவன் தங்கியிருந்த ஹோட்டலிலோ வசதி இருந்தாலும் என்னமோ குறைந்தது.... அது என்ன என்று யோசித்தான்.... கவனிப்பு இல்லை.... எல்லோரும் பிசியாக தொழிலாக செய்தனரே தவிர நம்மூர் போல விருந்தோம்பல் எங்கேயும் இல்லை என்று தெளிவாகியது.
கூடவே வந்தனாவின் நினைவும் வந்து வாட்டியது.

இந்தியாவில் இருந்தபோது அவளைப் பற்றிய எண்ணம் அதிகம் வராமல் பார்த்துக்கொண்டான்... எண்ணம் தோன்றினாலும் அதை மாற்றினான்... ஆனால் இங்கே அன்றைய வேலை முடிந்து ஹோட்டல் ரூமில் அடைந்தபோது தனிமையில் அவள் நினைவு சுற்றிச் சுற்றி வந்தது... திடீரென்று எதோ அவனுக்கு உரிமைபட்டவளைப் போல அவளைக் காண மனசு துடித்தது.... அவளோடு பேச மனம் விழைந்தது...

என்னவென்று கூறி அழைத்துப் பேசுவது.... அசலே அவளோடு பெரிய நல்லுறவு ஒன்றும் வளர்த்துக்கொள்ளவில்லையே என்று துவண்டான். ஆனால் மனம் பரபரத்தது.

அடக்கமாட்டாமல் தன் மொபைலில் இருந்து அவள் மொபைல் நம்பரை கண்டெடுத்து லாங் கால் போட்டான். அவள் எடுத்து ஹலோ என்றதும் அந்தக் குரலைக் கேட்டதும் அவனுக்குள் குப்பென உற்சாகம் ஆனால் படபடப்பு. என்னப் பேசுவது என்று தெரியாமல் வைத்துவிட்டான்.
அங்கே வந்தனா குழம்பினாள்..... ‘வெளியூர் கால் போல உள்ளது... ஆனால் ஒன்றும் பேசாமல் வைத்துவிட்டார்களே.... ஏதேனும் ஹோட்டல் பூக்கிங் விஷயமாக இருக்குமோ என்று மீண்டும் வந்தால் பார்போம் என்று காத்திருந்தாள். மீண்டும் ஐந்து நிமிடங்களில் கால் வர உடனே எடுத்தாள்.

வந்தனா ஹியர், மே ஐ நோ ஹூ இஸ் ஸ்பீக்கிங் ப்ளிஸ்?” என்றாள். அவளது அழகிய குரலில் அவளின் சரளமான ஆங்கிலம் கேட்டு தீபனுக்கு சொக்கியது.
.... ..ஆம் தீபன் என்றான் தைரியத்தை திரட்டிக்கொண்டு.
ஓ தீபனா, என்ன மிஸ்டர் தீபன் எங்கிருந்து கூப்பிடுறீங்க? லாங் கால் போல இருக்கே?” என்றாள் ஆச்சர்யமாக.
ஆமா நான் லண்டனிலிருந்து கூப்பிடுறேன் வந்தனா..... சாரி டிஸ்டர்ப் பண்ணீட்டேனா?” என்று கேட்டான்.
இல்லை இல்லை சொல்லுங்க.... அங்கிருந்து அழைக்கறீங்களே ஏதானும் முக்கிய விஷயமா.... ஏதானும் புக்கிங் செய்யணுமா?” என்றாள் கடமையே கண்ணாக.
இல்ல வந்தனா, அதேல்லாம் ஒண்ணும் இல்லை.... வந்து.... இல்லை.... சும்மாதான்....” என்று உளறிக்கொட்டினான்.
ச்சே நான் ஒரு பூல் ..... புத்திகேட்டு போச்சு எனக்கு...... நான் பாட்டுக்கு கூப்பிட்டு உளறிகிட்டிருக்கேனே.... அவ என்னைப்பத்தி என்ன நினைப்பா?’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

எப்படி இருக்கீங்க, உங்க அப்பாம்மா சுகமா..... நானும் வீட்டுக்கு வந்து அவங்களப் பார்த்து அன்னிக்கி சட்டுன்னு போய்ட்டேன்னு மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன்..... ஆனா பாருங்க அதுக்குள்ள இந்த பாரின் ட்ரிப் வந்துருச்சு....” என்றான்
ஓ அதுவா, அத விடுங்க..... அவங்க அத ஒண்ணும் தப்பாவே எடுத்துக்கல
அப்போ நீங்க?” என்று கேட்டான்.
நான்...” என்று தடுமாறி நானும் ஒண்ணும் தப்பா எடுத்துக்கலை.... ஏதானும் அவசர வேலை நினவு வந்திருக்கும்னு நினைத்தேன். அவ்ளோதான் என்றாள்.
ஓ தாங்க்ஸ் வந்தனா என்றான். ‘குரல் குழைந்தார்போல இருந்ததோ.. ஏன் அப்படி என்று தோன்றியது வந்தனாவிற்கு.

வேற ஏதானும் விஷயம் உண்டா மிஸ்டர் தீபன்?” என்றாள்.
ஓ சாரி, நான் பாட்டுக்கு பேசிகிட்டிருக்கேன் நீங்க ஆபிஸ்ல இருப்பீங்க...... டிஸ்டர்ப் பண்ணீட்டேன்..... வேற ஒண்ணும் இல்லை.... இந்தியா வந்த பிறகு சந்திக்கறேன்.... ஓகே பை... வெச்சுடறேன் என்றான் தீபன் மனசில்லாமல். அவளுடனே பேசிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று மனம் ஏங்கியது.
சரி ஓகே.... பை மிஸ்டர் தீபன் என்று வைத்தாள் வந்தனா.

என்ன இது எதற்கு திடீரென்று லண்டனிலிருந்து அழைத்தான்.... விஷயமாக ஒன்றுமில்லை.... ஒன்றும் பேசவில்லை.... என்னமோ உளறிக் கொட்டினான்.... என்னவாயிற்று இவனுக்கு?’ என்று யோசித்தாள். ஒரு வேளை என்னோடு பேசத் தோன்றி கூப்பிட்டு என்ன பேசுவதென தெரியாமல் அப்படிச் செய்தானோ..... ஏன் பேச விழைந்தான்.... ஒரு வேளை.....’ அதற்குமேல் யோசிக்க தைரியம் இன்றி வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்.

ஆனாலும் அவன் விஷயமே இல்லாமல் கூப்பிட்டு அவளிடம் பேசியது இனித்தது.
ச்சே ஏதோ கர்டசி கால் அதுக்குப்போய் என்று மனதை அடக்கினாள். ஆனாலும் மனசுக்குள் ஒரு உல்லாசம். அதே உற்சாகத்துடன் வீட்டை சென்றடைந்தாள்.
எல்லாவற்றையும் தாயுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு. மாலையில் வீடு வந்ததும் காபியுடன் பின் வாசலில் இருக்கும் கிணற்று மேடையில் அமர்ந்து தாயுடன் அரட்டை அடிப்பது வழக்கம். அம்மா காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்தபடி அவள் பேசுவதை கேட்டு உம் கொட்டுவாள். இது தினசரி வழக்கம். அதன்படி அன்றும் தீபன் அழைத்ததை பற்றி தன் தாயிடம் கூறி சிரித்தாள்.
ஆனால் முதிர்ந்த தாய் மனது ஏதோ இருக்கிறது என்று கணக்கிட்டது. ‘சரி பார்க்கலாம் என்று அப்படியா மா... நல்ல பிள்ளை பாவம்என்று மட்டும் கூறினாள்.

அதே நேரம் உள்ளே நுழைந்து அவர்களை தேடியபடி அங்கு வந்த சங்கரனும் இவற்றைக் கேட்டு அர்த்தத்தோடு மங்களத்தைப் பார்க்க அவள் கண்ணசைவில் அவரை அடக்கினாள்.

இரவு தனிமையில் என்ன மங்களம் என்ன சொல்றா வந்தனா?” என்றார்.
இப்போதைக்கு ஒன்றும் இல்லைன்னு தோணுது..... ஏதோ காஷுவலா கூப்பிடிருக்கு அந்தத் தம்பி, பார்க்கலாம்..... போகப் போகத் தெரியும் என்றாள்.
அப்போது தன் அறையில் படுக்கையில் சாய்ந்து கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் வந்தனா. அவள் உள்ளில் இன்னமும் ஏன் அழைத்தான் என்று வண்டு குடைந்தது.

ஆனாலும் அந்த எண்ணம் அவன் பேசியது எல்லாமே இனித்தது. பேசிய அந்த சில வாக்கியங்களை மீண்டும் மீண்டும் அசைபோட்டாள். தன்னை அறியாமல் முகத்தில் மலர்ச்சி குடிகொண்டது. தீபன் தீபு என்று சொல்லி பார்த்துக்கொண்டாள். சிவந்து போனது முகம்.
நீதானா என்னை நினைத்தது..... நீதானா என்னை அழைத்தது.... நீதான் என் இதயத்திலே....” என்று பாடிக் கொண்டாள்

சி என்ன இது அவன் யாரோ என்னமோ அவனைப் போய் என்று அடக்கினாள். தூங்க முயன்று தோற்றாள். அவள் மொபைலை எடுத்து பார்த்தாள். அவன் பேசி முடித்த உடனே அந்த நம்பரை சேவ் செய்து கொண்டாள் தீபு என. அதைக்கண்டு இப்போது ஆச்சர்யப்பட்டாள்இது என்ன, என்னையும் அறியாமல் தீபு என்று சேவ் செய்துள்ளேனே?’ என்று. ‘சரியாபோச்சு என்று கடிந்து கொண்டு தூங்கிப்போனாள்.
இரு நாட்கள் இப்படிச் செல்ல மறுநாள் மாலை அதே நம்பரிலிருந்து கால் வந்தது. மனசும் கையும் பரபரக்க உடனே எடுத்தாள்.

ஹெலோ மிஸ்டர் தீபன் என்றாள் ஆசையாக.
ஆனால் பயந்தோ தயங்கியோ... என்னவோ தீபன் அம்முனையில் வைத்துவிட்டிருந்தான். சிறிது நேரம் காத்திருந்து பார்த்தாள். ஏனோ அவனோடு பேச மனம் விழைந்தது.... சண்டித்தனம் செய்தது. சரி என அவன் எண்ணை அமுக்கினாள்.
அவன் உடனே ஹலோ வந்தனா என்றான் மிகுந்த உற்சாகமாக மகிழ்ந்த குரலில்.
ம்ம் ஆமா, கூப்பிடிருந்தீங்க போலிருக்கே என்றாள் மெல்லிய குரலில் சத்தமே வெளி வராமல்.
ஆமா இல்லையே... ஓ கூப்பிட்டேனா..... அது ஒன்றுமில்லை தவறுதலா கைபட்டு...” என்று இப்போதும் உளறிக் கொட்டி மூடினான். வந்தனாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் ஓஹோ அப்போ நான் வெச்சுட்றேன்.... ஏதானும் முக்கிய விஷயமா இருக்குமோன்னு கூப்பிட்டேன் என்றாள்.

ஐயோ இல்லை வைக்காதே ப்ளிஸ், ஏதானும் பேசேன் என்றான் அவசரமாக.
கள்ளன்என்று மனதிற்குள் வைதாள்.
என்ன பேசணும்?” என்றால் ஏதுமறியாதவள் போல.
ஏதேனும் என்றான். “எப்படி இருக்கே வந்தனா?” என்றான் அவன் அப்படி சடாரென்று ஒருமைக்குத் தாவியது அவளை குருகுருக்க வைத்தது.
நல்லா இருக்கேன் நீங்க எப்பிடி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
நல்லா இருக்கேன் ஆனா ஒரே போர் போ.... இங்கே வேலை இன்னும் முடியல.... இன்னும் நாலு நாள் ஆகும்.... வர சனிக்கிழமைதான் திரும்ப முடியும் போல இருக்கு..... நம்ம சாப்பாடு வேற இல்லை..... நம்ம மொழி பேசறவங்க யாருமில்லை.... ஒரே தனிமை, சாப்பிட்டாலும் வயிறு நிறையாத மாதிரி ஒரு தோணல்.... மனசு எதை எதையோ கேட்குது என்றான் ஏக்கமான குரலில்.
ஐயோ பாவம்..... கஷ்டம் தான் என்றாள் நிஜமாகப் பாவப்பட்டு.
எப்படா ஊருக்கு வருவோம்னு இருக்கு..... எல்லோரையும் பார்ப்போம்னு இருக்கு என்றான்.
எப்படா உன்னை பார்ப்பேன்னு இருக்குஎன்று மனதுக்குள் கூறி மகிழ்ந்து கொண்டான்.
இது நானா!! கோவமும் எரிச்சலும் ஆத்திரமுமாகவே வாழ்ந்த என்னை இப்படி மாற்றி அமைத்து விட்டாளா என் வனி?’ என்றான்.

என்னது வனிவா?’ என்றது மனம்.
ஆமா நான் என் வந்தனாவிற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் என்றான்.
உன் வந்தனாவா? அது எப்போலேர்ந்து?’ என்று இடித்தது மனது.
போடா நீ வேற என்று அதை அடக்கினான்.
அப்பறம் என்ன விஷயம் வந்தனா?” என்றான்.
ஒண்ணுமில்லியேஎன்றாள்.
அதுசரி நீ ஏன் என்னை கூப்பிட்டே ஏதானும் முக்கிய விஷயம் இருக்கும்னு நினைச்சேனே?” என்று கிளறினான்.

இல்லையே.. நீங்க கூப்பிட்டீங்க..... உங்க மிஸ்டு கால் பார்த்துதான் நான் கூப்பிட்டேன்.... வேற ஒண்ணுமில்லைனா வெச்சுட்றேன் என்றாள்என்ன இது நான் லாங் கால் போட்டு இவனோடு இப்படி அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறேனே என்று சட்டென்று தோன்றி.
வேண்டாம் வெச்சுடாதே..... ஏதானும் பேசு..... ஐ பீல் அ லாட் பெட்டர், உன்னோட பேசும்போது எனக்கு இந்தியா திரும்பும் ஏக்கம் கொஞ்சம் குறைஞ்சாப்ல இருக்கு என்றான் கெஞ்சும் குரலில்.
என்ன பேசறது?” என்றாள் விழித்தபடி.
உங்க ஹோட்டல் சந்திச்ச ரசனையான கெஸ்ட் யாரையானும் பத்திச் சொல்லு..... நான் இங்கே சந்திச்ச சில ஆசாமிகளப் பத்திச் சொல்றேன் என்று எடுத்துக் கொடுத்தான்.
அவள் சிரித்துக்கொண்டாள். “நாம ஐ எஸ் டி கால்ல இருக்கோம் தீபன் என்றாள். அவள் மிஸ்டர் இல்லாமல் தீபன் என்று அழைத்ததே அவனுக்கு இப்போது இனித்தது.
அதுனால என்ன.... நீ வை நான் கூப்பிடறேன்..... ப்ளிஸ் எடுத்து பேசு என்ன என்றான்.
சரி என்று அவள் வைத்தாள். பின்னோடு அவன் அழைத்தான் எடுத்து பேசினாள். என்ன பேசினார்களோ ஒரு மணி நேரம், கேட்டால் சொல்லத் தெரியாது.....

அவள் ஹோட்டல் விருந்தினர்களை பற்றிக்கூற அவன் சிரித்தபடி கிண்டலடித்தபடி கேட்டான். அவன் வெளிநாட்டில் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி சுவாரசியமாக கூறக்கேட்டு இவள் சிரித்தாள். கேலியும் கிண்டலுமாக சிரித்து வயிறு வெடித்தது... கன்னம் சிவந்தது. பேசி முடித்து போனை வைத்த தீபன் அவளுடன் பேசிய மயக்கத்தில் கள்ளுண்ட வண்டுபோல படுகையில் தோய்ந்து கிடந்தான். அவனையும் அறியாமல் பாடல் வந்தது.

எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்து கொடுத்தாள்.

சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம்

துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்.
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது…”
என்று பாடியபடி தூங்கிப் போனான். வெகு நாட்களுக்குப் பிறகு அயர்ந்து தூங்கினான்.

இவர்கள் பேசியதை எதேர்ச்சையாகக் கண்ட மங்களம் புருவம் உயர்த்திவிட்டு சென்றுவிட்டாள். டிவி பார்த்தபடி அவள் மீது ஒரு கண் வைத்திருக்க,  ஒரு மணி நேரம் அப்படியே அவர்கள் பேசியதை கண்டு அதிசயப் பட்டாள். கொஞ்சம் பயந்தாள்பார்க்கலாம் என்று சங்கரன் காதிலும் போட்டு வைத்தாள்.
முடிந்தபின் சாப்பிட வந்த மகளிடம் யாரு மா போன்ல?” என்று சாதாரணமாக விசாரித்துக்கொண்டாள்.
தீபன் தான்மா.... ஒரே தமாஷு.... அங்கே ஒரே போர் அடிக்குதாம்... பேச யாருமில்லை..... நம்ம ஊர் சாப்பாடு வேற கிடைக்கலியாம் பாவம், அதான் சும்மா பேசிகிட்டிருந்தோம் என்றாள் இயல்பாக. மனதிற்குள் ஓரத்தில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. ‘சும்மாத்தான் பேசிக்கொண்டோமா?’ என்று கேட்டது மனது.
ஆமா பின்ன என்றாள்.
ஓஹோ அப்போசரி என்றது மனம் கேலியாக. ‘வேறென்னவாம்?’ என்றாள்.’ ஒண்ணுமில்லியே என்றது மனது.





No comments:

Post a Comment