Tuesday 16 July 2019

ANBIN VAASALILE - 6


இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசைக் கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள்கைதி ஆகி விட்டேன் அப்பவே அப்பவே

சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட தாழைப் போல உன்னால் நானும் பூத்தாட
உன்னைக் கண்டேன் என்னை காணோம்
என்னைக் காணா உன்னை நானும்... “
என்று அவன் பாடப்பாட காதலாகி கசிந்துருகி நாணி துவண்டாள் வந்தனா.

சொக்கிப் போய், “தீபு...” என்றாள் காதலையெல்லாம் குரலில் தேக்கி.
என்னடா?” என்றான் அவனும் கிரங்கிப்போய்.
என்னால முடியாது..... இனி உங்கள பிரிஞ்சு இருக்க முடியாது.....” என்றாள்.
அவன் வியந்து மகிழ்ந்து போனான்.
ஹேய் ஹனி, நிஜமாவா சொல்றே?” என்று கேட்டான்.
ம்ம் என்றாள்.
சரி நான் வந்து உன் பெற்றோர்கிட்ட பேசறேன்.... எவ்வளவு சீக்கிரமா முடியுமோ கல்யாணம் பண்ணிக்கலாம், போதுமா என்றான்.
ம்ம் என்றாள்.
வனி, நான் போயி இப்படி உருகி உருகி காதலிப்பேன் ன்னு நினைக்கவேயில்லைடீ..... எப்பிடி என்னை இப்படி மாத்தீட்டே?” என்றான் கிளர்ந்த குரலில்.
போடா என்றாள் செல்லமாக.
அவன் ஓஹோ என்று பெரிதாக சிரித்தான்.
சு என்ன இது அர்த ராத்திரி இப்படி தான்  சிரிக்கறதா?” என்றாள் மிரட்டியபடி.
இன்னும் பெரிதாக சிரித்தான்.
வனி, நாம நேர்ல காதல் சொல்லி இருந்தா...” என்று நிறுத்தினான்.
இருந்தா?”  என்றாள் ஆர்வமாக.
உன்னை அப்படியே கடிச்சு தின்னிருப்பேண்டீ என்றான் காதலாகி.
ஆசை..... நாங்க அப்படியே விட்டுட்டு வேடிக்கை பார்ப்போமாக்கும் என்றாள் இடக்காக.
அதை சமாளிக்க எங்களுக்கு தெரியுமில்ல என்றான்.
சி போ என்றாள் வெட்கத்தோடு.
வனி என்றான்
ம்ம் என்றாள்.
இச் என்று போனில் இதழ் பதித்தான்.
அதை உணர்ந்து வாய் பேச மறந்து திகைப்பாய் சமைந்தாள்.
ஹே ஹனி என்றான்.
ம்ம்

தூங்கலாம் தீபு.... மணி ஒண்ணு..... நாளைக்கு ஆபிஸ் இருக்கு என்றாள் கெஞ்சலாக.
போடி மனசே வரலை என்றான்
ப்ளீஸ் என்றாள்.
சரி என்று அணைத்துவிட்டு தூங்கிப் போயினர்.

அத்யாயம் பதிமூன்று
அடுத்த நாள் பொழுது விடிந்து வெகு நேரம் கழித்தே விழித்தாள் வந்தனா . மங்களம் வந்து பலமுறை அழைத்தும் அவளால் கண் திறக்க முடியாமல் போனது.
என்னமோ ஏதோ என்று அருகில் வந்து அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தார் மங்களம்.’ காய்ச்சல் எதுவும் தோன்றவில்லையே என்று யோசித்தார் கவலையுடன்.
என்னடா குட்டி?” என்றார்.
ஒண்ணுமில்லைமா ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வரலை.... அதான் கண்ண இழுத்துடுச்சு..... கவலப்படாதேமா என்று கூறிவிட்டு அவசரமாக தன் வேலைகளை செய்துகொண்டு அலுவலகத்திற்கு ரெடி ஆனாள்.
முடியலைனா கொஞ்சம் ரெஸ்டா இரேன் கண்ணு.... லீவ் போடேன் என்றார் அவர்.
இல்லைமா ஐ ஆம் ஆல்ரைட்.... நீ கவலைப்படாதே என்று கிளம்பிவிட்டாள்.

அங்கே சென்று அவசர வேலைகளை கவனித்து அன்றைய மெயில் பார்த்து பதில் அளித்து ஒரு முறை ரவுண்ட்ஸ் போய் வந்தாள்.
வந்து அமரும்போது
ஹை ஹனி என்ன பண்றே?’ என்று தீபனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. உடனே சிவந்து போனாள். அவன் விளிப்பே அவளை சிவக்க வைத்தது. 
வேலையில இருக்கேன், நீங்க?’ என்று பதில் அனுப்பினாள்.
நானும் ஆபிஸ்ல தான் இருக்கேன் ஆனா ஒண்ணும் கிழிக்கல..... காலை முழிச்சதுலேர்ந்து உன் நினைவாவே இருக்குடீ என்று பதில் அனுப்பினான்.
ஆபிஸ் நேரத்துல நோ அதர் டாக்ஸ் சரியா.... என் செல்ல தீபு இல்ல..... வேலையப் பாருங்க.... மாலையில பேசலாம்.... லவ் யு என்று பதில் அனுப்பினாள்.
யு ஆர் ரைட் ... லவ் யு டூ டார்லிங் என்று பதில் அனுப்பினான்.

அந்தக் காதல் உணர்வு இன்னும் தீவிரமாக உண்மையாக வேலையில் ஈடுபட உற்சாகத்தைக் கொடுத்தது. காதல் தான் எத்தனை இனிமையான அனுபவம். அது வாழ்க்கையின் ஸ்பைஸ் என்று அதனால் தான் சொல்கிறார்களோ.

மதிய உணவு நேரத்தில் அவள் தன் அறையிலேயே சாப்பிட அமர்ந்தாள். சப்பாத்தி குருமா அம்மாவின் கை பக்குவத்தில் கும்மென்று  மணத்தது.
இது அவனுக்கு பிடிக்குமா..... ஓரளவு சமையல் தெரியும்தான், ஆனாலும் இன்னமும் அவனுக்கு என்னெவெல்லாம் பிடிக்கும் என்று அறிந்து அம்மாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ‘அதுசரி என்று சிரித்துக்கொண்டாள். ‘இப்போலேர்ந்தே எண்ணத்தைப் பாரேன் என்று வியந்து போனாள்.
மே ஐ ஜாயின் யு?” என்று குரல் கேட்டதுமே உள்ளம் துள்ளியது. அவளது ப்ரியமானவனின் குரல் அல்லாவா அது .
தீபு நீங்க இங்க...?” என்றாள் ஆச்சர்யமாகி கண்கள் விரிய.
அப்படி பார்க்காதே..... இது ஆபிஸ் வேற என்றான் கண் சிமிட்டி.
சி போ என்று தலை தாழ்த்திக்கொண்டாள்.

உக்காருங்க, சாப்பிட்டீங்களா தீபு?” என்றாள் ஆன்பாக.
என்னையும் சாப்பிட்டாயா என்று கேட்க எனக்கென்று ஒரு ஜீவன் என்று எண்ணிக் கிளர்ந்தான்.
இல்லை இன்னும்.... உன்னை உடனே பார்த்தே ஆகணும்னு மனசு ஒரே சண்டித்தனம் செய்தது.... அதான் லஞ்ச டைம் தானே னு கிளம்பீட்டேன்..... இங்க வந்து பார்த்துக்கலாம்னு.... வா இங்கே உணவகத்துல போய் சாப்பிட்டுகிட்டே பேசலாம்தானே என்றான்.
போலாம்தான் ஆனா வேண்டாம்..... அம்மா கொடுத்தனுப்பி இருக்காங்க.... ஷேர் பண்ணி இங்கேயே பேசிகிட்டு சாப்பிடலாம், என்ன சரியா...?” என்றாள்.
யூர் விஷ் இஸ் மை கமேண்ட் என்றான் இடுப்பு வரை குனிந்து.

அவள் சிரித்துக்கொண்டே இப்போதான் உங்களை நினைச்சேன் தெரியுமா என்றாள் ஆசையாக.
என்று முகம் சுருங்கினான்.
என்ன... ஏன் நான் ஏதானும் தப்பா சொல்லீட்டேனா தீபு?” என்று தவித்து போனாள்.
இப்போதான் என்னை நினைச்சே னா இப்போ வரை நினைக்கவேயில்லியா..... நான் என்னடானா உன்னை மட்டுமே தான் நினைச்சுகிட்டு இருக்கேன் தெரியுமா என்றான் குழந்தை போல.

அடராமா அதுவா உங்க கோபம்...... ஆனாலும் மோசம்..... என்னமோன்னு பயந்துட்டேன்..... நான் சொன்னதன் அர்த்தம் அது இல்லை தீபு..... சாப்பிட உக்காந்தேன்..... உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதேல்லாம் கத்துகிட்டு சமைச்சுபோடணும்னு நினைச்சேன்னு சொல்ல வந்தேன் என்று சிவந்து போனாள்.
அவன் கண்கள் மின்னின ரியலி?” என்றான் கண்கள் அகல விரித்து. 
சரி வாங்க, பசியா இருப்பீங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்று அவனுக்கும் ஒரு ப்ளேட் கொண்டு வந்து வைத்து மேலும் இரு டிஷ்கள் அங்கிருந்தே ஆர்டர் செய்து வர வழைத்தாள். எல்லாவற்றையும் அவனுக்கும் தனக்குமாகப் பரிமாறினாள்.
அவள் அவனுக்கு பரிமாறும் அழகைக்கண்டு மனம் கனிந்தது தீபனுக்கு. அவளையே பார்த்தபடி சாப்பிட்டான்.

தட்டப் பார்த்து சாப்பிடுங்க தீபு என்றாள்.
ம்ம் என்றான் ஆனாலும் பார்வை அகலவில்லை.
இடது கை உணவை உண்ண வலது கைய்யால் அவள் இடது கையை பிடித்தபடி சாப்பிட்டான்
குழந்தை தன் தாயின் சேலை நுனியை பிடித்துக்கொண்டு சாப்பிடுவதுபோலத் தோன்றியது.
பாவம் என் தீபு, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கி நிற்கிறான்என்று மனம் அவன்பால் மேலும் மேலும் மையல் கொண்டது.
அத்தையின் கை பக்குவம் ரொம்ப அருமை வனி என்றபடி நப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டான்.
அத்தையாமே...’ என்று இவளுக்கு புல்லரித்தது.
அவன் ஆசையாக சாப்பிடுவதைக்கண்டு  அம்மாவின் உணவை அவனுக்கே பரிமாறிவிட்டு தான் ஹோட்டல் உணவை உண்டாள்.

சாப்பிட்டு சுத்தம் செய்து அங்குள்ள சோபாவில் போய் அமர்ந்தனர். அப்போதும் அவள் கைகள் அவன் கைகளுக்குள்ளேயே தான் இருந்தன.
தாங்க்ஸ் ஹனி, ரொம்ப நாளாச்சு.... இல்ல இல்ல..... வருஷங்களாச்சு இப்படி நிறைவா சாப்பிட்டு..... ராமைய்யா அங்கிள் சமைப்பார் தான் ஆனாலும் அம்மாக்களின் கை பக்குவம் தனிதான் இல்லியா வனி என்றான் அவள் முகத்தை பார்த்தபடி.
அவள் ஆம் என்பதுபோல தலை அசைத்தாள்.
லஞ்ச அவர் முடிந்திருக்க அவன் கிளம்பட்டுமா மாலையில சந்திக்கலாம் என்றான்.
நான் என் பைக்ல வந்தேன்...” என்றாள் .
ம்ம் பரவாயில்லை, ஜஸ்ட் பத்து நிமிடம் பேசீட்டு நீ வீட்டுக்கு போ ஓகேவா?” என்றான்.
சரி என்றாள்.
பை ஹனி என்று அருகில் வந்து பட்டும் படாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு சென்றுவிட்டான்.
அவன் கண் மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றாள். அந்தக் கோடிக்குச் சென்று அங்கிருந்து திரும்பிப் பார்த்து கை அசைத்துவிட்டு சென்றான்.
இது என்ன மாதிரியான அன்பு. ‘சொக்க வைக்கிரியேடா என் அன்புக் காதலா என்று கிரங்கினாள்.
போதும் வேலையப் பாரு என்று அடக்கி வேலைமேல் கவனம் வைத்தாள்.

அன்று மாலை சொன்னதுபோல ஆறு மணி அளவில் அவள் அலுவலகம் முடிந்துக் கிளம்பி வெளியே வரவும் அவன் தன் காரில் மெயின் ரோடில் வந்து அவளோடு சேர்ந்து கொள்ளவும் சரியாக இருந்தது. அருகே உள்ள ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி ஆர்டர் செய்துவிட்டு ஸ்வீட் நத்திங்க்ஸ்பேசிக்கொண்டிருந்தனர். கால் மணி நேரம் என்று கணக்கிட்டது அரை மணி ஆனது.
கிளம்பறேன் தீபு, அம்மா கவலைப்படுவாங்க என்றாள்.
சரி அத்தைக்காகப் போக விடறேன் என்றான் கெத்தாக.
தோ டா.... என்னைவிட எங்கம்மா முக்கியமாப் போய்டாங்க என்றாள் சோகமாக.
ஆமா பின்னே, வருங்கால மாமியார்.... எனக்குத் தாய்க்குபின் இன்னொரு தாய்..... அவங்களுக்கு என்னால அனாவசிய கவலைகள் கஷ்டங்கள் வரவிடக் கூடாதே என்றான் உண்மையாக.

அட கள்ளா என்று முணுமுணுத்தாள்.
என்ன சொன்னே?”
 
ஒன்றுமில்லியே
இல்ல என்னமோ சொன்னே, சொல்லு என்று அடம் பிடித்தான்.
நீங்க கோபிச்சுகிட்டா?” என்றாள் பயந்து.
இல்லை சொல்லு என்றான்.
அட கள்ளா என்று சொன்னேன் என்றாள் தழைத்த முகத்துடன்.
ஆஹா கள்ளனா!! அப்படியா,” என்று நெருங்கி வந்தான்.
வேண்டாம் தீபு, சொல்றதக் கேளுங்க.... இது பப்ளிக் பிளேஸ்என்றாள்.
ஸோ வாட் என்று அருகில் வந்து அவள் கையைப் பிடித்து இதழ் பதித்தான். “இது இந்த கள்ளனின் பரிசு என்றான்.
அவளை வெட்கம் சூழ்ந்தது. போலாம் என்று கிளம்பினர்.

அத்யாயம் பதினான்கு
இப்படியாக நாளொரு பொழுதும் இனிமையாகக் கழிந்தது. அவன் வெகுவாக மாறி இருந்தாலும் இன்னமும் அவன் மூர்கத்தனம் உள்ளே இருந்தது.  அதை மாற்ற அவளும் பெரும் பாடுபட்டாள்.
இப்படி தொட்டதுக்கெல்லாம் அடம் கோபம் னு இருந்தா எப்பிடி... நீங்க என்ன சின்னக் குழந்தையா தீபு?” என்று கேட்டாள் ஒரு நாள் அவனோடு காரில் அமர்ந்து பேசியபடி.

ஆமா அப்படிதான்  வெச்சுக்கோயேன்... அதுக்கு என்ன இப்போ..... உன்கிட்ட எனக்கு உரிமை இருக்கு கோபப்படறேன்..... அடம் பிடிக்கறேன்..... பிடிக்கலைனா சொல்லீடு  என்றான் முரடாக. 
பாத்தீங்களா இதத்தான் சொல்றேன்... அதென்ன முணுக்குன்னா மூக்குமேல கோபம்.... முக சுணக்கம்..... இப்படி இருந்தா நான் உங்கள எப்படி சமாளிக்கறது?” என்றாள்.
அலுப்பா இருக்கா இப்போவே அலுப்பாயிடுச்சா?” என்றான் வெறுமையாக.
அட ராமா! அப்படியா சொன்னேன் தீபு, உங்கமேல அலுப்பு வெறுப்பு கூட வருமா, அதுவும் எனக்கு.... இவ்வளவுதானா நீங்க என்னை புரிஞ்சுகிட்டது?” என்றாள் அடிபட்டவளாக.

அவள் கலங்கிய கண்கள் அவனை என்னமோ செய்தது
.
சாரி ஹனி, என்னை மன்னிச்சுடு..... நீ கலங்கினா எனக்கு இதயமே வெடிச்சுடும் டா..... நான் என்ன செய்யறது.. எத்தனையோ வருடங்களா அன்பு காட்ட ஆதரவா நிற்க யாருமில்லாம வளர்ந்தவன் நான்.... சில சமயம் எப்படி நடந்துக்கணும்னு தெரியல.... நீதான் என்னை நல்வழிப் படுத்தணும்..... நீ சொன்னா நான் கேட்டுக்குவேன்..... இனிமே நிச்சியமா இப்படி சும்மா சும்மா கோவப்பட மாட்டேன்..... ஆங் அடம் செய்வேன் கொஞ்சம்...... கார்யம் ஆகணும்னா அடம் பிடிச்சாத்தானே ஆகும் என்றான் கண் சிமிட்டியபடி அவளை சிவக்க வைத்து.
சி போடா என்றாள் அவன் தலையை கலைத்துவிட்டபடி.
வனி என் ஹனி என்று அவளை அருகே இழுத்தான்.
என்ன பண்றீங்க விடுங்க தீபு என்றாள். குரல் நடுங்கி குழைந்து போயிருந்தது.
அவளை மேற்கொண்டு யோசிக்கவிடாது பேச விடாது இதழோடு இதழ் பொருத்தி பின்  மெல்ல விடுவித்து அவள் கழுத்தின் வளைவில் முகம் பதித்தான்.

ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டான். 
என்ன என்பது போல அவள் புருவம் உயர்த்தினாள்.
சீக்கிரமா கட்டிக்கணும்டா என்றான்.
இப்போ கட்டிக்கிட்டு தானே இருக்கீங்க என்றாள் அவள் விஷமமாக.
அவன் இன்னமும் இறுக்கி அணைத்தபடி,
இதையா சொன்னேன், திருமணம் செய்துக்கணும் இனிமே தாளாது னு சொன்னேன் என்றான் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தபடி.
என்ன தாளாது?” என்றாள் மீண்டும் குறும்பாக.
சொல்லட்டுமா?” என்று அவள் காதோடு ரகசியமாகச் சொல்ல....
சீ என்று சிவந்து நாணி தலை குனிந்தாள் அவனை விலக்கிவிட்டு.
நீதானே டீ கேட்டே, நான் சொன்னேன் என்றான் உல்லாசமாக சிரித்தபடி.
என்னைச் சொல்லணும், உங்க பேச்சு எப்படி போகும்னு தெரிஞ்சும் கேட்டேனே என்றாள் முனகலாக.

ஏண்டீ நான் என்ன பண்ணேன்?” என்றான் அறியாப் பிள்ளையாக.
அவள் ஒரு விரலை உயர்த்தி வேண்டாம் என்று பத்திரம் காட்டினாள். அவன் அதற்கும் சிரித்தான்.
சி போடா கள்ளா என்றாள்.
சும்மா சொல்லக்கூடாதுடீ, நீ போடா கள்ளா னு சொல்றதே ஒரு கிக்கா தான் இருக்கு என்றான்.
கிக்கா!!! அப்போ அந்தப் பழக்கம் எல்லாம் உண்டா?” என்றால் நிஜமான பயத்தோடு.
இல்லை வனி, சத்தியமா இல்லை..... நான் எந்த விதமான போதையையும் என்று நாடியதில்லை. என் வேலைதான் எனக்கு போதை தந்தது.... அதில் நான் சாதித்தவை சாதிக்க வேண்டியவை தான் என் போதை..... ஆனா இப்போ...” என்று குறும்பாக அவள் உதடுகளை விஷமமாக பார்த்தான். அவள் அவன் பார்வைகண்டு தன் கீழுதட்டை கடித்தபடி நாணி  குனிந்தாள். அவள் அப்படி கடிக்கும்போது அவனுக்குள் ஏதோ மாற்றங்கள்.
அவன் பார்வை போகும் வண்ணம் கண்டு ம்ம்ம் பத்திரம் என மிரட்டினாள் கண்களை உருட்டி.



4 comments: