Monday 15 July 2019

ANBIN VAASALILE -5


அத்யாயம் பத்து
தீபன் ஊர் வந்து சேர்ந்துவிட்டான். உடனே வந்தனாவை பார்க்க மனம் பரபரத்தது. ஆபிசில் விவேக்கும் மற்ற பணியாளர்களும் அவனில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வியந்தனர்.
என்னடா மச்சான், ஒரே சிரிப்பும் சந்தோஷமுமா இருக்கே?” என்றான் விவேக் கூட.
ஒண்ணுமில்லியேடா, நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு... சந்தோஷப்படணும் தானே என்று கூறி சமாளித்தான்.
ஆனால் மற்றவர் கண்டு வியக்கும் வண்ணம் அவனது இயல்பு மாறித்தான் இருந்தது. எத்தனையோ திறமை இருந்தும் அறிவும் ஆற்றலுமாக விளங்கியும் கூட சட்டென்று சள்ளுமென விழுவான். முகத்தில் எப்போதும் ஒரு கடுமை, எதற்கெடுத்தாலும் கோபம் என்று இருந்தவன் தானே அவன்.

அடுத்த நாள் ஞாயிறு
, கடைசி வாரம் ஆயிற்றே வந்தனா ஆசிரமத்துக்குப் போவாள். அங்கே கண்டு பேச முடியுமா முயற்சிக்கலாம் என்று முடிவு செய்து ஜெட்லாக் போகத் தூங்கி எழுந்து பிரெஷாக குளித்து பளிச்சென்று உடுத்தி கிளம்பினான். அவளைப் போலவே தனது கம்பனி வருவாயிலிருந்து சில பர்சென்ட் வரவை ஆசிரமத்திற்கென ஒதுக்கி இருந்தான். அதற்கு வரி விலக்கு வேறு இருந்தது. விவேக்கும் கூட முழு மனதாக அதற்கு ஒப்புக்கொண்டிருந்தான். அந்த செக்கை கொடுக்கும் சாக்கில் அங்கு போய் வரலாம் என்று எண்ணம்.

ஒருவேளை வந்தனா அங்கு இன்று வராவிடில் என்று எண்ணம் தோன்றி மறைந்தது. சரி ஒரு வேளை அப்படித்தான் வரலைனா இருக்கவே இருக்கு, அவ பெற்றோர் கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டி வந்தேன்னு சொல்லி நேரா வீட்டுக்கே போய் பார்த்துட வேண்டியதுதான் என்று அதற்கும் மனது ரெடி செய்துகொண்டது.

ஆசிரமத்தை அடைந்து பார்க் செய்தபோதே தூரே அவளை கண்டான் உவகை கொண்டான். தலை கோதி சரி செய்துகொண்டு முகத்தை ரியர் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு ஒருவித பரபரப்போடு உள்ளே சென்றான். அங்கே சாகரைக் கண்டு செக்கைக் கொடுத்து பேசிக்கொண்டிருந்தான்.
இதற்காக இவ்வளோ தூரம் வரணுமா தீபன்..... கூப்பிட்டிருந்தா நானே ஆள் அனுப்பி வாங்கிக்கொண்டிருப்பேனே என்றார் அவர், இவன் நிலைமை இவனது ப்ளான் அவர் என்ன அறிவார் பாவம்.

ஓ நாட் ஆ ப்ராப்ளம் சாகர்.... இந்த வழியே வேலையா வந்தேன் அதான்.... இதோ இது உங்களுக்கு ஒரு சின்ன கிபிட்.... நான் நேத்து தான் லண்டன்லேர்ந்து வந்தேன் அதான் என்று கூடவே ஒரு சின்ன பென் செட்டும் எடுத்து வைத்தான்.
ஓ ரொம்ப தாங்க்ஸ் தீபன்.... வெரி கைண்ட் ஆப் யு என்றார் சாகர் மகிழ்ந்துபடி.
சுற்றி பார்ப்பதுபோல வெளியே வந்தான் தீபன். வந்தனா சில குழந்தைகளுடன் அமர்ந்து ரைம்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதைக்கண்டு அவர்களை டிஸ்டர்ப் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்தான்.

சாதாரண சல்வார் அணிந்து புல்வெளியில் அமர்ந்து அந்தக் குழந்தைகளுக்குச் சரியாக அரட்டை அடித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறியபடி விளையாட்டாய் ரைம்சும் சொல்லி கொடுத்தபடி இருந்தாள் வந்தனா. அதை ஆச்சர்யமாகக் கண்டபடி ஒரு ஓரமாக அமர்ந்தான். ஏதோ உந்துதலின் பேரில் வந்தனா அவன் இருக்கும் பக்கம் திரும்ப அவனை அங்கே சட்டென்று கண்டதில் திக்குமுக்காடிப் போனாள்.

முகம் மலர்ந்து விகசித்து தீபன் என்றது உதடுகள்.
ஆம் என்பது போல கண்கொட்டி ஹலோ வந்தனா என்றான்.
ஹாய் தீபன், எப்போ வந்தீங்க ஊர்லேர்ந்து?” என்று கேட்டாள்.
நேத்துதான்
எப்படி போச்சு டூர் எல்லாம்?” என்றாள்.
ஓ ரொம்ப நல்லா இருந்தது.... நிறைய ஆர்டர் கிடைத்தது.... கடைசி நாலுநாள் ஓடியதே தெரியல, அவ்வளோ இனிமையா இருந்தது என்றான் அவள் கண்களை ஆழமாக பார்த்தபடி..

அவள் அதைக்கேட்டு விழி விரித்து உடனே தலை குனிந்து கொண்டாள்
, அவன் கண்ணின் வீச்சைத் தாங்கமாட்டாமல்.
இது என்ன, இதன் பெயர் என்ன.... இவனை பார்க்கும்போதே மனதுக்குள் ஏதோ உருகுதே..... படபடப்பாய் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றனவே என்று அவளுக்குள் கேள்விகள். ‘இது சரியா?’ என்று பயந்தாள்.
ஏனாம்?” என்றாள் மெதுவான குரலில்.
என்னமோ நீதான் சொல்லணும் என்றான் அவனும் குறும்பாக. அவள் மேலும் தலை குனிந்தாள்.
குழந்தைகள் நடுவில் அமர்ந்திருக்கிறோம் என்று உணர்ந்து அவர்களுக்கு வேறே ரைம்ஸ் சொல்லி கொடுத்தபடி அவனை கண் பார்த்திருந்தாள். அவனும் அவளை பார்த்தபடி மௌனமாய் அமர்ந்திருந்தான். பின்னோடு ஆயா வந்து பிள்ளைகளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

வந்தனா தீபனை பார்த்தபடி எழுந்தாள். மதிய உணவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
இங்கேதான் சாப்பிடுவியா?” என்றான்.
பல நேரங்கள்ள அப்படித்தான், ஆனா இன்னிக்கி என் வண்டி ரிப்பேர், அதுனால மாலை வரை இங்க இருக்க முடியாது.... லேட் ஆனா அம்மா கவலைப் படுவாங்க.... அதுனால் சீக்கிரமா வந்தர்றேன்னு சொல்லீட்டு ஆட்டோல வந்தேன்.... கிளம்பணும் என்றாள் தயக்கமாக.
இப் யு டோன்ட் மைன்ட், நான் டிராப் பண்ணலாமா?” என்று கேட்டான்.
அவள் தயங்கினாள். ‘போ என்று உள்ளேயிருந்து உந்துதல் ஆனாலும் கொஞ்சம் பயம் தயக்கம். பயந்தபடியே சரி என்று தலை அசைத்தாள். அவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. உள்ளே சென்று சாகரைக் கண்டு இன்னமும் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டுவிட்டு விடை பெற்றனர்.

வெளியே வந்து அவன் காரை எடுக்க முன் பக்கத்து சீட்டில் ஏறி தயக்கமாகவே அமர்ந்தாள். முதன் முறையாக வாழ்க்கையில் ஒரு ஆடவனோடு தனியாகக் காரில் போகிறோம் என்று மனது படபடப்பாக இருந்தது.
எப் எம்மில் பாடல்கள் ஒலித்தன.
அறியாத வயசு புரியாத மனசு....” என்று பாடல் வரிகள் இருவரையும் மயக்கியது.
அவன் வண்டி ஒட்டியபடி ஓரக்கண்ணால் அவளையே பார்த்தான். அவன் பார்ப்பதை அறிந்து அவளும் ஓரக்கண்ணால் பார்த்தாள்.
சாப்பிட்டு போலாமா வந்தனா?” என்று கேட்டான்.
சாப்பாடா?” என்றாள்
ப்ளிஸ் நான் ஒன்னோட கொஞ்சம் பேசி பழகணும்னு ஆசைப் படறேன்..... என்னை தவறா நினைக்கலேன்னா என் மேல நம்பிக்கை இருந்தா வா என்றான். அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை கட்டிப்போட்டது. சரி என்றாள்.

அத்யாயம் பதினொன்று
ஒரு உயர்தர ஐந்து நக்ஷத்திர உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். ஒரு மூலையில் இருந்த டேபிளில் சென்று அமர்ந்தனர். அவளது விருப்பு வெறுப்பு கேட்டறிந்து ஆர்டர் செய்தான். சாப்பாடு வருவதற்குள் அவளது மனதை அறியும் பொருட்டு பலதும் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் அதற்குதான் கேட்கிறான் என்று அறிந்தவள், அவளும் அவனைப் பற்றி கேட்டறிந்தாள்.

அப்போதுதான் அவன் தன் கதையையும் கூறினான். தனது தாயைப் பற்றி அவன் கூறக்கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்டாள். தந்தை பற்றியும் அவரது ரெண்டாவது மனைவி மகள் பற்றியும் கூட மறைக்காது கூறினான்.
என்ன சொல்றீங்க தீபன்? உங்களுக்கு ஒரு தங்கையா அதுவும் பதிமூணு வயசுல?” என்றாள் ஆச்சர்யமாகி.
அவ என் தங்கை இல்லை என்றான் எங்கோ பார்த்தபடி.
இல்லை தீபன், அப்படிச் சொல்லாதீங்க..... உங்கப்பா செய்தது தப்பாவே இருக்கட்டும்.... அந்தக் குழந்தை என்ன தப்பு செய்தா.... பதிமூணு வயசுன்ன அவ இன்னமும் குழந்தைதானே தீபன்..... பாரதத்துல கூட சொல்லி இருக்கு,

கௌரவர்களை அழிக்கச் சொன்னேனே தவிர அவர்களின் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்ததுன்னு இப்படி கொன்று குவித்தாய்னு கேட்டாங்களாம்அது போல குழந்தைங்க தெய்வத்திற்கு சமானம் இல்லையா..... ஒரு அண்ணன் இருந்தும் இல்லாம அதைப் பத்தி தெரியாமயே வளருதே அந்தப் பெண்..... நீங்க என்னிக்கிருந்தாலும் அவளுக்கு அண்ணன்ங்கறத மாற்றிட முடியுமா தீபன்?” என்று சின்னக் குழந்தைக்குச் சொல்வதுபோல எடுத்துரைத்தாள்.

தீபனுக்கு உள்ளுக்குள்ளே கொஞ்சம் இளகியது. ‘உண்மைதானே, பாவம் அந்தச் சிறு பெண்மேல் எனக்கு ஏன் இந்த காழ்புணர்ச்சி என்று எண்ணிக்கொண்டான். பின் சாப்பாடு அருந்திக்கொண்டே பலதும் பேசினர்.

காரில் ஏறி அவளை வீட்டில் விடவென கிளம்பும்போது பெசன்ட் நகர் மர நிழலில் நிறுத்தினான். கார் கிட் பாக்சிலிருந்து ஒரு பரிசுபொருளை வெளியே எடுத்தான்.
ப்ளிஸ் வாங்கிக்கோ வந்தனா என்றான்,அவளிடம் தந்தபடி.
இல்லை தீபன், ப்ளிஸ், எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தாள். முகம் இறுகி போயிருந்தது.
அதைக்கண்டவனுக்கும் கோபம் வந்தது.

நான் எந்த தப்பான எண்ணத்தோடும் இதை கொடுக்கலை வந்தனா..... அன்னிக்கும் கூட உன்னைத் தப்பா இடைபோட்டு நான் பணம் கொடுத்தனுப்பலை. நீ அத புரிஞ்சுக்கணும்..... நீ எனக்கு பெரிதும் உதவி செய்திருந்தே...... அதை பாராட்டித்தான் கொடுக்க நினைச்சேன், வேண்டாம்னு மறுத்தே நானும் ஒத்துகிட்டேன்..... ஆனா இது அப்படி இல்லை..... நான் பாரின் ட்ரிப் போனபோது என் மனசுக்கு க்ளோசா இருக்கும் அனைவருக்கும் பரிசு பொருள் வாங்கினேன்.... உனக்கும் வாங்கினேன்.....

நீ என் மனசுக்கு இனியவள்
, மிகவும் நெருங்கியவள்..... இன்னமும் நீ என் மனச புரிஞ்சுக்கலைனா அது என் துரதிருஷ்டம்..... வாங்கிக்க இஷ்டமில்லைனா பரவாயில்லை என்று முடித்தான்.
அவள் அவன் முகத்தை கண்டாள். கோபித்துக் கொண்ட சின்னக் குழந்தையின் முகம் போலத் தோன்றியது.... அவளுக்கு சிரிப்பு வந்தது.
சரி குடுங்க என்று கை நீட்டினாள்.
ஒன்றும் வேண்டாம்..... ஐயோ பாவம்னு நினைச்சு வாங்கிக்கத் தேவை இல்லை வந்தனா என்றான்.

அப்படி நினைக்கலை தீபன்..... ப்ளிஸ் கொடுங்க.... சந்தோஷமா வாங்கிக்கறேன்.... போதுமா, கொஞ்சமே கொஞ்சம் சிரிச்சாப்ல தரீங்களா?” என்றாள் கேலி செய்தபடி.
அவன் உடனே சிரித்துவிட்டான்.
ஹப்பா என்ன கோவம் வருது உங்களுக்கு என்றபடி வாங்கிக் கொண்டாள். “என் நிலைமையும் நீங்க புரிஞ்சுக்கணும்.... எங்க வீட்டுல ரகசியங்களே கிடையாது..... இத நான் வங்கிகிட்டா அம்மாகிட்ட என்னன்னு சொல்றது..... தீபன் கொடுத்தார்னா..... ஏன் எதுக்குனு கேட்க மாட்டாங்களா..... அதுக்குள்ள கோவப்பட்டா எப்பிடி?” என்றாள் நிதானமாக.
ஓ அப்படி ஒண்ணு இருக்கோ என்றான்.
அதுசரி என்றாள்.

பிரிச்சு பாரேன் என்றான் ஆர்வமாக கண்கள் மின்ன.
பிரித்தாள். அழகிய ஒரு ஜிர்கோனி பெண்டண்டும் மாட்சிங் காதணிகளுமாக மின்னியது.
அட இது ரொம்ப காஸ்ட்லி மாதிரி இருக்கு..... அம்மா கொன்னுடுவாங்க தீபன் என்று பயந்தாள்.
இது வைரம் இல்லை வந்தனா..... ‘அமெரிக்கன் டைமண்ட்னு சொல்வாங்க..... அதான் இது..... நீ அவங்ககிட்ட அப்படியே சொல்லு..... இல்லைனாலும் இன்னிக்கோ நாளைக்கோ நானே வருவேன்.... அவங்களப் பாத்து மன்னிப்பு கேட்க, அப்போ நானே சொல்லிக்கிறேன் என்றான்.

சன்னச் செயினோடு டாலர் திரும்பிய பக்கமெல்லாம் கோடி வைரங்களாகக் கொட்டியது
....  கண்ணைப் பறித்தது. அதை கையில் வைத்து அழகு பார்த்தாள்.
அணிந்துகொள்ளேன் வந்தனா என்றான் ஆசையாக. அணிந்து கொண்டாள்.
அவளது மாநிறத்திற்கு அது வெகு பாந்தமாக பொருந்தி மின்னியது..... அந்த மின்னலை அவன் கண்களில் கண்டாள். அவனது எல்லையில்லா மகிழ்சிக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது.

தாங்க்ஸ் தீபன் என்றால்.
எனிதிங் பார் யு மை டியர் என்றான், அவன் கிறங்கிப்போய்.
அவன் குரலைக் கேட்டு அவளுக்குப் படபடப்பாகியது.
போலாமா?” என்றாள் குரலே எழும்பாமல்.
போகணுமா, இன்னும் கொஞ்ச நேரம் பேசீட்டு போலாமே?” என்றான் குழந்தைபோல.
இல்லை லேட் ஆயிடுச்சு.... அம்மா தேடுவாங்க தீபன் என்றாள்.
சரி என்று கிளப்பிக்கொண்டு போனான். அங்கே அவள் வீடு சென்றடைந்ததும் சட்டேன்று யோசித்து தானும் இறங்கினான்.
இதென்ன நீங்களுமா உள்ள வரீங்க?” என்று பயந்தாள்.
நான் வந்தா உனக்கென்னவாம்.... நான் ஒண்ணும் உன்னைப் பார்க்க வரலை..... அங்கிள் ஆண்ட்டிய பார்க்க வரேன் என்றான்.
தோ டா என்றாள் அவள் கேலியாக.

ஞாயிறு ஆதலால் தந்தையும் வீட்டிலே இருந்தார்..... அவனை வரவேற்று உபசரித்தனர்..... வந்தனா போய் பிரெஷ் செய்து கொண்டு வந்து அமர்ந்தாள். அதற்குள் மொத்த ஊர் விஷயங்களும் அலசி தீர்த்தனர் சங்கரனும் தீபனும். இன்றும் கூட அவர்கள் பல நாள் நண்பர்கள் போல அரட்டை அடிப்பது கண்டு வியந்தாள். அவள் வந்தபின் அவ்வப்போது அவன் பார்வை அவளைத் தழுவிச் சென்றது. அதைக்கண்டு அவள் தலை குனிந்தாள்.
வரட்டுமா?” என்று விடை பெற்றுச் சென்றான்.
அவளிடம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றான். வாசல் கார் வரை சென்று வழி அனுப்பினார் சங்கரன்.

உள்ளே வந்ததும் மகளோடு அமர்ந்தனர்.
என்னமா விஷயம்?” என்று கேட்டார்.
என்னதுப்பா?” என்றாள் விளங்காமல்.
என்னமா, நீதான்மா சொல்லணும்?”
என்னதுப்பா?” என்றாள் மீண்டும்.
தீபன் உன்னை விரும்பறாரா..... நீ அவர விரும்பறையா?” என்றார் நேரடியாக.
ஐயோ அப்படி எல்லாம் இல்லை என்று தடுமாறினாள்.
எனக்கு அவரப் பிடிச்சிருக்குதான் பா.... ஆனா அவரும் அந்த மாதிரி வெளிப்படையா ஒண்ணும் சொல்லலைபா..... நானும் அதப்பத்தி ஒண்ணும் சொல்லிக்கலைபா என்றாள் தலை குனிந்தபடி.
இப்போதைக்கு நாங்க நல்ல நண்பர்கள் மட்டும்தான் பா..... ஆசிரமத்தில சந்திச்சோம் வீட்டிற்கு ஆட்டோல தானே போகணும் நான் டிராப் பண்றேன்னு கூட்டிகிட்டு வந்தாரு அவ்ளோதான் என்றாள்.

ஓ அப்படியா.... அவர் வேற ஒண்ணுமே பேசலையா வந்தனா மா?” என்றார்.
கார்ல இந்த பரிச கொடுத்தார்.... ‘பாரின்லேர்ந்து எல்லாருக்கும் வாங்கினேன்.... உனக்கும் வாங்கினேன்.... எந்த தப்பான எண்ணத்தோடையும் தரலை’ னு சொல்லித் தந்தாருபா” என்றாள் சற்றே நாணியபடி. 
அவர் வெளிப்படையா பேசல, அதனால நீயும் ஆசைய வளர்த்துக்காதே செல்லம். அப்பறமா நீ கஷ்டப்படக்கூடாது பாரு, அதுக்குதான் சொல்றேன், என்னடா என்றார் மங்களம்.
சரிமா என்றாள் தோய்ந்து போய். ‘இது என்ன சங்கடம் என்று தோன்றியது.

உள்ளே சென்று கொஞ்சம் படுத்தாள். உள்ளம் அவனையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘அவன் வெளிப்படையா பேசி இருந்தால் நல்லதோ என்று எண்ணினாள்.
நான் என் எல்லையிலேயே நின்றேன், அதனால் தயங்கி இருப்பான்..... இன்னமும் கூட சுமுகமாக பேச ஆரம்பிக்காத நிலையில் என்ன தைரியத்தில் அவன் மட்டும் காதல் சொல்லுவான் என்று யோசித்தாள்.
என்ன என்ன என்று மனம் தாளாமல் கொதித்தது.... இது ஆவறதில்லை என்று எழுந்து சென்று டிவி பார்த்தாள்..... அதிலும் காதல் படங்கள் பாடல்கள் என அவளை வருத்தெடுத்தன.

அத்யாயம் பன்னிரண்டு
அங்கே தீபனும் தனது படுக்கையில் சாய்ந்து அவ்வண்ணமே துவண்டிருந்தான்.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...” என்று பாடத் தோன்றியது.
நான் கொடுக்கும் கிப்டையே யோசித்து வாங்கிக்கொள்கிறாளே...., அவளிடம் நான் போய் எப்படி காதல் சொல்ல என்று தோன்றியது.
இப்படியே போனால் பைத்தியமே பிடிக்கும் எனக்குஎன்று தோன்றியது. அன்றிரவு வரை தாக்கு பிடித்தான். இரவு மணி பத்திருக்கும்போது தன் அறையில்தானே இருப்பாள் என்று தைர்யமாக அவளை அழைத்தான்.

வந்தனா என்றான் கரகரப்பான ஆழ்ந்த குரலில்
சொல்லுங்க தீபன் என்றாள் அவளும் குரலே எழும்பாமல்.
இன்னுமா என் மனசு உனக்கு புரியல..... என்னைக் கொல்லாமல் கொல்றியேடீ கண்ணம்மா என்றான்.
நானா நீங்களா?” என்றாள்.
அப்பிடீன்னா...?” என்றான் கண்கள் மின்ன.
ஒண்ணுமில்லை என்றாள்.
சொல்லுடி என்றான்.
அவள் மௌனமாகவே இருக்க வனி என்றான் கிரங்கிப்போய்.
அவள் உள்ளம் துடித்து நெகிழ்ந்தது அந்த சொல் கேட்டு
ம்ம் என்றாள்.
ஐ லவ் யு ஸோ மச் வனி என்றான் ஆழமாக மூச்செடுத்து.
அவள் அந்த சொற்களின் இனிமையை ரசிப்பதுபோல மெளனமாக அனுபவித்தாள்.
பின் தானும் ஆழ்ந்த மூச்செடுத்து ஐ லவ் யு டூ தீபு என்றாள்.
அவன் அந்த சொல்லில் கிளர்ந்தான்.... கிறங்கிப் போனான்....
திரும்பச் சொல்லுடி என்றான்.
தீபு என்றாள்.
ம்ம்ம்ம் என்றான்.
அவள் நாணி சிவந்தாள்.
எனக்கு இப்போவே உன்னை பார்க்கணும்போல இருக்கு என்றான்.
ஐயோ என்ன இது என்றாள் பதறி.
அவள் காதோரம் போனில் பாடினான்


4 comments: