Wednesday 17 July 2019

ANBIN VAASALILE - 7


தீபு, அப்பாம்மா ட வந்து எப்போ பேசப்போறீங்க?” என்று கேட்டாள்.
நானும் யோசிச்சுட்டேன்டா..... அதச் சொல்லணும்னு தான் வந்தேன்..... எங்க நீதான் நான் வந்தவுடனே என்னை மயக்கீட்டியே என்றான் வேண்டுமென்றே அவளை சீண்ட எண்ணி.
என்னது நானா உங்களை மயக்கினேனா.... இதென்ன புது கதை?” என்றாள் முறைப்பாக.
இல்ல நீ அவ்வளோ அழகா இருக்கறதால நான் மயங்கீட்டேன்னு சொல்ல வந்தேன் என்றான் மீண்டும் குறும்பாக.
அதுஎன்றாள் மிரட்டியபடி.
சரி சரி விஷயத்துக்கு வாங்க என்ன யோசிச்சீங்க?” என்று கேட்டாள்.

இந்த ஞாயிறு நாள் நல்லா இருக்குனு ராமையா அங்கிள் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.... அன்னிக்கி வரேன், வந்து பேசறேன்..... ஆனா வனி நான் மட்டும்தான் வருவேன்...... எங்கப்பா வரணும்னு எல்லாம் உங்க வீட்டுல அடம் பிடிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறன்..... நீ வேணா என் கதைய அவங்ககிட்ட சொல்லீடு என்றான். முகம் கொஞ்சம் கடுமை ஏறி இருந்தது.
சரி நான் பேசறேன்.. நீங்க கவலைப்படாதீங்க தீபு என்றாள் தன்மையாக.
அப்போ சரி ஞாயிறு பார்க்கலாம்..... இத பாரு ஹனி, நான் வரப்போறது பெண் பார்க்க என்றான் கண்களில் மின்னல் தெறிக்க.
ஸோ அதுக்கேற்றார்போல சொஜ்ஜி பஜ்ஜியோட பெண்பார்க்க ஏதுவா அலங்கரிச்சுகிட்டு வந்து என்னை வணங்கி, பாட்டு பாடி  எல்லாம் செய்யணும் என்றான் கெத்தாக.
ஓஹோ சார்வாள் பெண்பார்க்க வரீங்களாக்கும்..... சரி சரி அப்படியே என்றாள் அவளும் நமுட்டு சிரிப்புடன்.

அத்யாயம் பதினைந்து
அந்த ஞாயிறு தீபன் வீட்டிற்கு வரப்போவதாக தன் அன்னையிடம் கூறினாள் வந்தனா.
ஏன், என்ன ஏதானும் முக்கிய விஷயமா?” என்று அவளை ஆழம் பார்த்தார் மங்களம்.
தலை குனிந்தபடி ஆமாம் மா..... அவர் அவரு என்னை பெண் கேட்க வரப்போறாராம் மா என்றாள். “என்னை விரும்பறதா சொன்னார். இந்த சில நாள்ள ரெண்டு மூணு தரம் பார்த்துப் பேசினோம்.... எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.... நீதான் மா அப்பாகிட்ட பேசணும் என்றாள் குழைந்தபடி.
எல்லாம் முடிவு பண்ணியாச்சு இல்ல.... அப்பறம் என்ன.... நானும் அப்பாவும் ஒப்புக்கு என்று அவளை கிண்டல் செய்தார் மங்களம்.
போ மா என்று அவர் தோளில் சாய்ந்து முகம் மறைத்துக்கொண்டாள் வந்தனா
அன்னிக்கி கேட்டபோது, அப்படி எல்லாம் இல்லை நாங்க நண்பர்கள்னு கதை அளந்தே!” என்று மேலும் வாரினார். “சரி போகட்டும் இங்க வா என்று அழைத்துப் போய் அமர்த்தி சங்கரனையும் என்னங்க, கேட்டீங்களா சங்கதி... இங்க வாங்கஎன்று அமர்த்தி

இப்போ எல்லாம் விவரமா சொல்லு எங்ககிட்ட என்று கேட்டாள்.
வந்தனாவும் கிடைத்த சான்ஸில் தீபனைப்பற்றி, அவன் தாய் தந்தை அவர் இரண்டாம் முறை மணந்த நிர்மலா மகள் எல்லா விஷயமும் கூறி முடித்தாள். அவன் என்ன தொழில் எங்கே எப்படி செய்கிறான் என்றும் கூறினாள். எல்லாவற்றையும் பொறுமையாக இருவரும் கேட்டனர்.

பின் சங்கரன் ஒரு பெருமூச்சுடன் எனக்கு புரியுதுடா  குட்டி..... பாவம் அந்தப் பிள்ளை.... அன்புக்கு ஏங்கிப் போய் கிடக்கு.... இப்போ அவங்க அப்பா பேச வர மாட்டாருன்னு தீபன் சொல்றாரு சரி..... நாளைக்கு அந்த மனுஷன் நம்மகிட்ட வந்து நான்தானே அவனோட அப்பா, எனக்கு தெரியாம நீங்க எப்பிடி அவனுக்கு கல்யாணம் பேசப்போச்சு னு கேட்டு வம்பு பண்ணினா, அப்போ என்ன பண்றது?” என்றார் யோசனையாக.
ஒண்ணு செய்யலாங்க என்றாள் மங்களம்.

என்ன என்பது போல இருவரும் பார்க்க
, “மாப்பிள்ளை இப்போ வந்து பார்த்து பேசீட்டு போகட்டும்.... நிச்சயம் வெச்சுட்டு நாம ரெண்டு பேரூமா இவருக்கு தெரியாம அவங்க அப்பா மற்றும் சித்தியப் போய் பார்த்து பேசி விவரம் சொல்லீடுவோம்.... அவங்க என்ன சொல்றாங்கன்னும் தெரிஞ்சுடும் என்றாள்.
நல்ல யோசனைதான்...” என்று சங்கரன் தயங்க
ஐயோ தீபனுக்கு தெரியாமையா, அம்மா..... அவரு ரொம்ப கோவக்காரரு மா.... இந்த விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும் என்று பயந்தாள் வந்தனா.
அதுகென்னம்மா பண்ண முடியும்.... பெரியவங்க கிட்ட பேச்சுக்கானும் ஒரு வார்த்தை கேட்டுக்காம எப்படி கல்யாணம் முடிவு செய்யறதுடா கண்ணு?” என்றார் மங்களம்.

வந்தனா யோசிக்க ஆரம்பித்தாள்
.
நீ இப்போலேர்ந்து கவலைப்படாதே..... இப்போதைக்கு மாப்பிள்ளை வந்து பேசட்டும்..... பிறகு மிச்சம் யோசிக்கலாம்.... நீ இப்போதைக்குப் போய் ஜாலியா கனவு காணு என்று கிண்டல் செய்தார் சங்கரன்.
பாரும்மா அப்பாவ என்று வெட்கி உள்ளே ஓடிவிட்டாள்.

ஞாயிறு அன்று அவன் வேடிக்கையாகக் கூறி இருந்தாலும் அவன் சொன்னதுபோலவே நிஜமாகவே சொஜ்ஜி பஜ்ஜிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மங்களம். அவன் அவரது உணவை பெரிதும் பாராட்டி நப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டான் என்று வந்தனா கூறி இருந்தாள். அதனால் ஸ்பெஷலாக சமைத்தார் மங்களம். காபிக்கு டிகாக்ஷன் போட்டு தயாராக வைத்தாள்.

வந்தனா அங்கே  சன்ன ஜரிகை இட்ட ஒரு பட்டுப்புடவை எடுத்து அணிந்துகொண்டாள்
. தாமரை பூ வண்ணத்தில் அறக்கு நிற பார்டருடன் அவளது மாநிறத்துக்கு எடுப்பாக அவளை அணைத்துக்கொண்டது அந்தப் புடவை. நீண்ட ஹாரமும் காதில் ஜிமிக்கியும் ஆட, கை வளையல்கள் குலுங்க தன்னையே கண்ணாடியில் பார்த்தவள் வெட்கத்தில் சிவந்து மேலும் அழகானாள். தலை முடியை நாலு கால் போட்டு நிறைய ஜாதி சரம் தொங்கவிட்டாள். நெற்றியில் பொட்டிட்டு திருப்தியாக கீழே வந்தாள்.

அவளைக் கண்டு முகம் வழித்து திருஷ்டி கழித்தார் மங்களம். “என்ன அழகுடி, என் கண்ணே பட்டுடும் போஎன்றார்.
எல்லாம் தயாராயிருக்க சிறிது நேரத்தில் தீபனின் கார் உள்ளே நுழைந்தது. பலநாள் அவனோடு பழகி பேசியிருந்தபோதும், சட்டென்று ஒரு வெட்கம் அவளை சூழ்ந்தது. அவன் கொஞ்சம் சங்கோஜமாக உள்ளே வந்து அமர்ந்தான். என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பினான்.

சங்கரன் அதைக்கண்டு மங்களத்தைப் பார்த்தபடி
என்ன தீபன் எப்படி இருக்கீங்க... வேலை எல்லாம் எப்படி இருக்கு?” என்று ஆரம்பித்தார்.
ஓ ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள் என்றான் தடுமாறி.
அப்பறம், வந்தனா எல்லாம் சொன்னா..... எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் முழு திருப்தின்னு தான் சொல்லணும்.... உங்க அப்பா பத்தியும் எல்லாம் சொன்னாதான்...” என்று இழுத்தார்.

அவன் அவர் முகம் பார்த்தான்
.
அதப்பத்தி எங்களுக்கு அப்ஜெக்ஷன் ஒண்ணும் இல்லை என்றார். அவன் ஹப்பா என்று நினைத்தான்.
என்ன எங்க பெண்ணைப் பார்த்து உங்க முடிவச் சொல்றீங்களா மாப்பிள்ளை?” என்று வாரினார் மங்களம்.
அவன் அவரை ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தான்.
ஐயோ என்ன அத்தை நீங்க.....  நான் ஏதோ விளையாட்டுக்கு....” என்று முனகினான்.
அதுனால என்ன, இருங்க கூப்படறேன் என்று வந்தனா வா மா என்று அழைத்தார்.

வந்தனா கால்கள் பின்ன மெல்ல நடந்து வந்தாள்
. அவளைக் கண்டு சொக்கி மயங்கிப் போனான் தீபன். வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். தான் எங்கே இறுக்கிறோம் கூட யார் இருக்கிறார்கள் எல்லாமும் மறந்து போனது.
என்ன மாப்ள எங்க பொன்னை பிடிச்சிருக்கா?” என சற்றே நகைத்தபடி அவளது தந்தை கேட்க, தன் வசம் அடைந்தான்.

அவள் எதிர் சோபாவில் அமர
, மங்களம் வேண்டுமென்றே பெண்ணுக்கு பாட்டு கத்து குடுத்திருக்கோம்... வேணும்னா பாடச் சொல்லவா?” என்று கேட்டார்.
அவனும் அவருக்கு சளைத்தவன் அல்ல என்பதுபோல அப்போ ஒரு பாடல் பாடலாமே என்றான் வந்தனாவைப் பார்த்தபடி. அவனுக்கு இருக்கும் லொள்ளை நினைத்து சிரித்தபடி அவளும் மெல்லிய குரலில்
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ... தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ... அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
ம‌ங்கையை வாழ்த்த‌ வ‌ந்தாரோ
சீருடன் வந்துசீத‌ன‌ம் த‌ந்து
சீதையை வாழ‌ வைத்தாரோ...
தேவி.. வைதேகி காத்திருந்தாளோ... என்று பாடினாள்.

தீபனோ அந்தப் பாடலையும் குழைந்து மயங்கி வந்தனா பாடிய அழகையும் கேட்டு ரசித்து சொக்கிப் போனான். மனக்கண்ணின் முன் அவன் அவள் கழுத்தில் மாலையிட்டு மங்கள நாண் கட்டும் காட்சித் தோன்றியது. புளங்காகிதம் அடைந்தான். கண்கள் பனிக்க அவளையே பார்த்திருந்தான். அன்றுவரை ஒரு அனாதைபோல வாழ்ந்தவனுக்கு இத்தனை சொந்தங்கள், தனக்கென ஒருத்தி என்று ஏற்படப் போவதை நினைத்து சமைந்து அமர்ந்திருந்தான். அவள் பாடிக்கொண்டே அவனை ஏறெடுத்து பார்க்க கண்கள் பனிக்க அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்து துணுக்குற்று என்ன என்று கேட்டாள் கண்ணால் புருவம் உயர்த்தியபடி.
ஒன்றுமில்லை என்று கண் சிமிட்டி அவள் கவலை தீர்த்தான் மயக்கும் புன்னகையோடு.

அவள் பாடி முடித்ததும் நிஜமாவே சொல்றேன் ரொம்ப அற்புதமான குரல் உனக்கு வந்தனா என்றான் ஆத்மார்த்தமாக.
அவள் தாங்க்ஸ் என்றாள்.
பின்னோடு போய் டிபன் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் ஆசையாக உண்டான்.
அத்தை ரொம்ப நல்லா இருக்கு..... தாங்க்ஸ்.... ஆனா பாவம் ரொம்ப சிரமப்பட்டிருப்பீங்க.... எதுக்கு இவ்வளவு என்றான் சங்கோஜமாக.
அப்படி என்ன பெரிய கஷ்டம்..... உங்களுக்கில்லாம வேற யாருக்கு மாப்பிள்ள என்று கேட்டார் மங்களம்.

அவனுக்கு குளிர்ந்து போனது
. “இந்த அன்பெல்லாம் கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும் அங்கிள் என்றான் பாசத்தோடு.
அவ மட்டும் அத்தை நான்மட்டும் அங்கிளா?” என்று அவர் தன் பங்குக்கு அவனை கலாய்த்தார்.
ஐயோ அப்படி எல்லாம் இல்ல மாமா.... போதுமா என்று அவனும் சிரித்தான்.
தன் குடும்பத்தோடு அவன் எவ்வளவு இலகுவாக ஒட்டிக்கொண்டான் என்று வியந்து பார்த்தாள்.
அவன் கண் கொட்டி என்ன என்றான்
ஒன்றுமில்லை என்று தலை அசைத்தாள்.

பின் வேண்டுமென்றே
எனக்குப் பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு..... உங்க பெண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்கலியே என்றான்.
சங்கரனும் உண்மை போல என்னமா உனக்கு மாபிள்ளையப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.
உங்க இஷ்டம் பா என்றாள் அவள் அவனை சீண்டியபடி.
, அப்போ நான் வேண்டாம்னு சொன்னா பண்ணிக்க மாட்டியா...... ரெண்டுபேருக்கும் வால்தனம் குறைச்சலே இல்லை என்று அவள் காதை பிடித்துத் திருகினார்.
ஐயோ அப்பா, போங்கப்பா என்று அவர் தோளிலேயே வெட்கி சாய்ந்து கொண்டாள் வந்தனா.

சரி தீபன், நான் நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன்.... நிச்சயம் வெச்சுக்கலாம்..... பின்னோடு ஒரு நல்ல முகூர்த்தத்துல கல்யாணத்த நடத்தீடலாம்..... எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணு..... அவ திருமணம் அவ இஷ்டப்படி நடப்பது எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம்....
ஆனாலும்... என்று இழுத்தார்.
நிச்சயத்தின் போதும் திருமணத்தின் போதும் உங்க மனுஷங்கன்னு உங்கப்பா உயிரோட இருந்தும் முன்னால வந்து நிக்கலைனா நான் என் சொந்தங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார் தயங்கியபடி.
தீபன் முகம் இறுகக் கண்டு பயந்துபோனாள் வந்தனா.
அப்பா என்று அவர் கை பிடித்து அடக்கப் போனாள்.
இருமா எல்லாம் தெளிவா பேசிடணும்..... இது ஆயிரம் காலத்துப் பயிர் என்றார்.
அதுக்கு நான் என்ன பண்ணனும் மாமா?” என்றான் அப்போதும் மரியாதையுடனே தீபன்.

ஒண்ணுமில்லை உங்களுக்கு அவரோட போய் பேச விருப்பமில்லைனா வேண்டாம்..... நாங்க போய் பேசறோம்..... ‘கல்யாணம் பேசி இருக்கோம், நீங்க வந்து முன்னாடி நின்னு நடத்தி குடுக்கணும்னு நான் வேண்டிக்கிறேன் அவர்கிட்ட.... என்ன சொல்றீங்க தீபன்?” என்று கேட்டார்.

அவர் வர்றது எனக்கு பிடிக்காதே மாமா என்றான்.  “அவருக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன மாமா சம்பந்தம், அதையும் இதையும் முடிச்சு போடாதீங்க மாமா ப்ளிஸ்...” என்று சொல்லி பார்த்தான்.
“அவரோட எனக்கு ஓட்டும் இல்லை உறவும் இல்லை மாமா.... நான் போய் கூப்படறது நடக்காது, நீங்க போய் அவர்கிட்ட கெஞ்சிகிட்டு நிக்கறதும் எனக்கு இஷ்டமில்லை..... அவர் அங்க வந்து முன்னாடி நிக்கறதும் எனக்கு பிடிக்கலை மாமா...” என்று தன் பிடிவாதத்திலேயே நின்றான்.
‘ப்ளிஸ் எனக்காக ஒதுக்குங்களேன்’ என்று வனி கண்களால் கெஞ்சினாள். அவள் முகம் காண முடியாமல் அவன் வேறே பார்த்தான்.

ஆனா கல்யாணம்ங்கறது நம் வாழ்வில் ஒரு முறைதானே வரும் தீபன்..... அப்போ உங்கப்பா முன்னால நிக்கலைனா எப்படி..... அவர் பாட்டுக்கு யாரோ ஒரு விருந்தாளி மாதிரி அங்க வந்து நின்னுட்டு போகட்டுமே.... உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க அவரோட பேசாதீங்க.... என்ன நான் சொல்றது?” என்று பக்குவமாக போட்டு வாங்கினார்.
“நாளைக்கு விஷயம் தெரிஞ்ச பின்னாடி, என்னை கேட்காம எம் பிள்ளைக்கு கல்யாணம் பண்ண நீங்க யாருன்னு அவர் வந்து கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும் தீபன், எங்க சொந்தங்களுக்கு நடுவே எனக்கு அது ஒரு அசிங்கமான சூழ்நிலையா போயிடுமே பா” என்றார் தன்மையாக. அதற்குமேலும் அந்தப் பெரியவரை கெஞ்ச விடுவதில் தீபனுக்கு விருப்பம் இல்லை.

சரி என்னமோ பண்ணுங்க...... எனக்குப் பிடிக்கலை..... ஆனாலும் நீங்க பெரியவங்க, பெண்ணைப் பெத்தவங்க.... உங்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் வரலாம் இதனால்..... அதுனால நான் அவர் வர ஒத்துக்கறேன்.... உங்களுக்காக, என் வந்தனாவிற்காகத்தான், நான் போனா போகுதுன்னு ஒத்துக்கறேன்....

உங்களை முதல் முறை பார்த்தப்போவே உங்களில் நான் என் அப்பாவைக் கண்டேன்..... அந்த மதிப்பு மரியாதையோடதான் நான் உங்களோட பேசிப் பழகறேன், அது உங்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா நான் அவரைக் கூப்பிட மாட்டேன்
..... வந்தாலும் பேச மாட்டேன் என்றன் முறைப்பாக.
சரி அப்படியே தீபன் என்றார் ஹப்பா இவ்வளவானும் ஒப்புக்கொண்டானே என்று.

வந்தனாவிற்கும் ஹப்பா என்றிருந்தது. ‘எங்கே அவன் முன்கோபத்தால் தன் பெற்றோரை எடுத்தெறிந்து பேசிவிடுவானோ என்று உள்ளூர பயந்தாள்.
ஆனால் அவன் அவ்வளவு தரம் கெட்டவன் அல்ல என்று நிரூபித்துவிட்டான் தீபன் . அவள் மலர்ந்த முகம் கண்டு அவன் முக சுணக்கம் மாறியது.
அப்போ நான் கிளம்பட்டுமா அத்தை... மாமா வரட்டுமா என்று எழுந்தான்.
சரி தீபன் நான் நிச்சயத்துக்கு நாள் பார்த்துட்டு உங்க அப்பாகிட்டையும் பேசீட்டு கூப்படறேன் உங்கள என்றார்.
வழி அனுப்ப வாசல்வரை வந்தாள் வந்தனா. அவர்கள் பேசட்டும் என்று பெற்றோர் உள்ளேயே நின்றுவிட்டனர்.

என்னடி சொக்க வைக்கிறே என்றான் அவளை தனிமையில் கண்டு.
அங்க மட்டும் என்னவாம்.... இந்த டிரஸ்ல எவ்வளோ அழகா இருக்கீங்க தெரியுமா.... யு லுக் சோ ஹாண்ட்சம் என்றாள் மயங்கிப் போய்.
ஹே ஹனி ரொம்ப அழகாப் பாடினே..... என்ன நல்ல குரல் உனக்கு..... சொக்கீட்டேன் போ..... அந்தப் பாடலை கேட்கும்போது மனக்கண் முன்னால நமது கல்யாண காட்சிதான் வந்து நின்னுது தெரியுமா என்றான் ஆசையாக.
ம்ம் எனக்கும்தான் என்று நாணி தலை குனிந்தாள்.
வரட்டுமா.... நைட் கூப்படறேன் சரியா என்றான் மயக்கமாக.
ம்ம் என்றாள் அவளும் மயங்கியே இருந்தாள்.


No comments:

Post a Comment