Thursday 18 July 2019

ANBIN VAASALILE - 8


அவன் சென்றுவிட உள்ளே வந்தவளிடம் சங்கரன், “என்னம்மா சந்தோஷம் தானே?” என்று கேட்டார்.
ரொம்ப சந்தோஷம் பா என்று பெற்றோரை விழுந்து வணங்கினாள்.
அடடா என்னமா இதெல்லாம் என்று அவசரமாக எழுப்பினார் மங்களம்.
இருக்கட்டுமே மா, எத்தனை பேருக்கு வாய்க்கும் இது போல..... மகள் மனசு அறிஞ்சு புரிஞ்சு, அவ இஷ்டப்பட்டவனையே கூப்பிட்டுப் பேசி கல்யாணத்துக்கு சம்மதிச்சு நடத்தி குடுப்பது என்றாள்.
பேச கத்துகிட்டா நம்ம குழந்தை என்றார் சங்கரன் பெருமிதமாக. அவள் தலையை ஆசையாய் தடவி கொடுத்தார்.
பெண்ணிற்கு கல்யாணம் அதுவும் அவள் இஷ்டப்பட்டபடியே என்று சந்தோஷம் இருந்தாலும், உள்ளே ஐயோ மணமாகி சென்றுவிடுவாளே..... இவளை பிரிந்து எப்படி இருப்போம் என்று கவலை அரித்தது.... சோகம் சூழ்ந்தது.... மனதை தேற்றிக்கொண்டு ஜோசியருக்கு போன் செய்தார் சங்கரன்.

அத்யாயம் பதினாறு
அடுத்து வந்த வாரங்களில் தீபனும் வந்தனாவும் சில முறை மாலை வேளைகளில் சந்தித்துக் கொண்டனர். ஒரு நாள் அவளுக்கு சீக்கிரமே வீட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்று அவள் வண்டி எடுத்து வரவில்லை. லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது. மழை நாளில் எங்கேனும் மாட்டிகொண்டால் தொல்லை, வண்டி வேறு நீரில் மாட்டிக்கொண்டு நின்று போகும் என்று அவளுக்கு தயக்கம்.
அன்று மதியமே அவளுக்காகவென தீபன் சீக்கிரமே தன் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து அவளை பிக்கப் செய்துகொண்டான். அவர்கள் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். எப்போதும் போல அவன் வம்பு செய்துகொண்டே வண்டி ஓட்டியபடி இருக்க ஒரு பெரிய பள்ளியின் வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளிடம் ஒரு பொறுக்கி வம்பு செய்ய முயன்று கொண்டிருந்தான்.
அங்கே பாருங்க தீபு என்றாள் அலறலாக வந்தனா.
அவனும் சட்டென்று பார்த்து வண்டியை ஒடித்து திருப்பி நிறுத்தினான்.

லேசான மழையிலும் வெளியே ஓடிப் போய் அவன் சொக்காயை கொத்தாக பிடித்து முகத்தில் ஒரு குத்துவிட்டான்.
ஹே நீ யாரு, இந்த பொண்ணு எனக்கு தெரிஞ்சப் பொண்ணு என்று சமாளித்தபடி எழுந்தான் அந்த ரவுடி.
சீ வாய மூடு..... அதப் பார்த்தாலே தெரியுது பெரிய இடத்து பெண்ணுன்னு..... நீ அவளுக்கு சொந்தமா.... கொன்னுடுவேன் ராஸ்கல்..... பேசாம போறியா, இல்லை போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளவா. கேட்க யாரும் இல்லைனா போதுமே பொறுக்கி நாயே என்று சரமாரியாகத் திட்டினான்.
அந்த ரவுடி திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடிவிட்டான்.
அந்த பெண் பயத்திலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்தது.

அதற்குள் வந்தனா கீழே இறங்கி ஓடிப்
போய் அவளை அணைத்துக் கொண்டாள்.
ஒண்ணும் இல்லைமா, பயப்படாதே.... நாங்க இருக்கோம் இல்ல..... நீ ஏன் இங்க தனியா நிக்கறே.... வீட்டுக்கு போகலியா?” என்று அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டே மெல்ல கேட்டாள்.
இன்னிக்கி என் ஸ்கூல் பஸ் என்ன விட்டுட்டு போயிடுச்சு..... அதான் அம்மா வருவாங்களா, இல்லனா ஆட்டோல தனியா எப்படி போறதுன்னு யோசிச்சுகிட்டு நின்னேன்.... அதுக்குள்ள அந்த ஆளு...” என்று திக்கினாள் அந்தப் பெண்... கண்ணில் நீர் முட்டி நின்றது..... பருவ வயது, பன்னிரண்டு பதிமூன்று இருக்கலாம்.
போகுது அதான் அடிச்சு அனுப்பிட்டாரே.... வா நாங்க உன்னை வீட்டுல விட்டுட்டு போறோம் என்றாள்.
அம்மா வந்தா?” என்றாள் அவள்.

அப்போதுதான் அங்கே வந்தான் பள்ளி காவலாள்
.
எங்கய்யா சுத்தீட்டு வரே..... தனியா நிக்கற பெண்பிள்ளைகள் கிட்ட ரவுடிப் பசங்க வாலாட்டறாங்க.... நீ என்ன கிழிக்கரே இங்க.... புத்தி இல்லை..... உன் ட்யூட்டிய பார்க்காம எங்க போனே?” என்று அவனை கண்டித்தான் தீபன்.
இல்லைங்க சார்,  இப்போதான் சும்மா ஒரு டீ சாப்பிடலாம்னு அஞ்சு நிமிஷம் கூட ஆகலை சார் என்றான் அவன் பயந்தபடி.
சரி சரி, நான் இந்தப் பெண்ணை அவங்க வீட்டுல விட்டுடறேன்.... அவங்க வீட்டுலேர்ந்து யாரும் வந்து கேட்டா, இதான் என் கார்ட் குடுத்து விஷயம் சொல்லீடு.... திரும்ப எங்கியானும் போயிடாதே.... அவங்க அலைஞ்சு போவாங்க என்று மிரட்டிவிட்டு காரில் ஏறினான்.

அந்தப் பெண்ணை பின் சீட்டில் அமர வைத்து தான் முன்னே வந்து அமர்ந்தாள் வந்தனா. ரியர் கண்ணாடியில் அந்தப் பெண்ணின் பயந்த முகத்தைக் கண்டவனுக்கு பாவம் தோன்றியது. பின்னோடு இவளை எங்கேயோ பார்த்ததுபோல உள்ளது என்றும் தோன்றியது. வந்தனாவும் அப்போது அதையே எண்ணினாள்.
இந்த முகம் ரொம்ப பரிச்சயமா இருக்கு எனக்கு என்றாள் அவனிடம் மெல்லிய குரலில்.
எனக்கும் என்றான் அவன், அவள் ஆச்சர்யமானாள்.

எங்கேம்மா வீடு?” என்று கேட்க அந்த பெண் முகவரி கூறினாள்.
நீ யார்வீட்டு பெண்...உங்கப்பா யாரு?” என்று தன்மையாகக் கேட்டான் தீபன்.
எங்கப்பா பேர் ரகுபதி..... அம்மா நிர்மலா என்றாள்.
திடுக்கிட்டு சடன் ப்ரேக் போடு வண்டியை நிறுத்திவிட்டான் தீபன். ஒரு நிமிடம் அவனுக்கு வெலவெலத்துப் போனது. அவன் வந்தனா முகத்தை பார்க்க அவள் அதிர்ந்து போய் அவன் முகத்தைப் பார்த்தாள்.
நிஜமாவ சொல்றே?” என்றான் அதிர்ச்சி தாளாமல், நம்பமாட்டாமல்.
ஆமாம் என்றது அது மேலும் பயந்துபோய்.
எங்கப்பாவை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
ம்ம் என்றான்
அது வந்து...” என்று வந்தனா ஆரம்பிக்க
ம் என்று ஒரு மிரட்டல் போட்டு அவளை அடக்கினான்.

மருண்ட விழிகளோடு மான்குட்டி போல இருந்தாள் அந்தப் பெண். மனதிற்குள் என்னமோ பிசைந்தது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
உன் பெயர் என்ன?” என்று கேட்டாள் வந்தனா தீபன் முறைப்பதை காணாததுபோல
தீபா என்றாள்.
இருவரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
நல்ல பேரு என்றாள் வந்தனா.
தீபனுக்கு உள்ளுக்குள் ஏதோ இளகியது. ‘என் பெயரையே என் ஞாபகமாக இவளுக்கும் வைத்திருக்கிறார்களா என்று.
செல்லும் வழி எல்லாம் இவளுக்கு அப்படியே என் முக ஜடை, அதுதான் எங்களிருவருக்கும் எங்கேயோ பார்த்ததுபோல தோன்றியதா என்று எண்ணிக்கொண்டான்.
அவள் வழி சொல்லும்  முன்பே அவளது வீட்டை அடைந்து நிறுத்தினான்.
எங்க வீடு கூட உங்களுக்கு தெரியுமா?” என்றாள் அந்தப் பெண்.
ஆமாம்மா, அம்மா தேடப் போறாங்க, உள்ள போய் முதல்ல அவங்கள பாரு என்று தன்மையாக கூறி அனுப்பினாள் வந்தனா.

அதற்குள் பஸ்ஸில் வரவில்லையே என்று மகளை காணமல் தவித்து திண்டாடி காரில் ஏறி ஸ்கூலை அடைந்தாள் நிர்மலா. அங்கே காவலாள் விவரம் சொல்லி கார்டை கொடுத்தான். அதை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி பறந்தாள்.
அங்கே செல்லும் வரை கூட பயம்தான் எவனோ வந்து கூட்டி சென்றானாமே.... எவனோ ரவுடி கலாட்டா செய்தானாமே என்று பதறிபோனாள்.
அந்த பதட்டத்தில் கார்டை படிக்கவும் மறந்தாள்.  வீட்டை அடைந்து காவலாள் மகள் வந்துவிட்டாள் என்று கூறிய பின் தான் நிம்மதி மூச்சு வந்தது.

உள்ளே சென்று மகளை அதட்டி
, கொஞ்சி அணைத்து அமர்த்தினாள்.
யாருமா கொண்டுவிட்டாங்க?” என்று கேட்டாள்.
தெரியல மா.... ஒரு ஆண்ட்டியும் அங்கிளும் வந்தாங்க..... உங்களை எல்லாம் நம்ம வீட்டையும் கூட தெரியும் போல இருக்குமா..... நம்ம வீட்டுக்கு நான் வழி சொல்லாமலே கூட்டி வந்துட்டாரு அங்கிள் என்றாள் தீபா.
அப்படி யாரு.. ஒருவேளை அவருக்கு தெரிஞ்சவங்களோஎன்று நினவு வந்து பையிலிருந்து கார்டை எடுத்து பார்த்தாள்.
தூக்கிவாரிப் போட்டது.
இவரா உன்னை கூட்டி வந்தது?” என்றாள் கண்கள் பனிக்க.
ஆமாம் மா, அங்கிள் தான் கார்ட் கொடுத்தாரு வாட்ச்மேன் கிட்ட என்றாள் தீபா.
அவளும் கார்டை எட்டி பார்த்து ஹை அவருக்கும் எனக்கும் ஒரே பேரு என்றாள்.
ம்ம் ஆமாம் அதுமட்டுமில்லை... அங்கிள் இல்லை அண்ணான்னு சொல்லணும்...  என்று ஆரம்பித்து நிறுத்தினாள்.

அண்ணாவா ஏன்மா?” என்று கேட்டாள்.
அது... அது.. வந்து அவருக்கு ஒண்ணும் அவ்வளோ வயசாகலை போலிருக்கே. அப்போ அங்கிள் வேண்டாம் இல்லையா அதுதான் சொன்னேனே என்று சமாளித்தாள்.
அவரிடம் கேட்காமல் சொல்லாமல் எப்படி இவளிடம் உண்மை விஷயத்தைக் கூறுவது என்று தயங்கினாள்.
நீ போ பிரெஷ் செய்த்கொண்டு வந்து சாப்பிடு குட்டி... ஓடு என்றாள்

அன்று மாலை ரகுபதி வந்தவுடன் அவரிடம் நடந்தவற்றை கூறினாள் அவர்  முகம் பார்த்தபடி. அதில் பல உணர்ச்சிகள்.
தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்தானே என்று எண்ணிக்கொண்டார்.
அப்போ நம்ம வீடுவரை வந்திருக்கான்.... உள்ளே வரலை..... தீபாவிடமும் தான் யார்னு காண்பிச்சுக்கலை இல்லையா ..... எத்தனை காழ்ப்பு எத்தனை வீம்பு பாரு நிம்மி என்றார் கலங்கிப் போய்.
என்ன செய்யறது..... ஆனா எனக்கென்னவோ இனிமே சரி ஆயிடும்னு உள்ளுணர்வு சொல்லுது என்றாள்
அந்த நொடி தேவர்கள் ததாஸ்து என்றனர்

அத்யாயம் பதினேழு
அந்த வாரம் முழுவதும் மழை அடித்து கொட்டியது. கார்மேகம் சூழ்ந்து இருட்டாக இருந்தது. தீபன் மனசும் கூட அப்படியே இருந்தது. ஏனோ தீபாவை பார்த்துவிட்டு வந்ததலிருந்து மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஏதோ மனசை பிழிந்தது.
நாலு நாள் கழித்து மீண்டும் அந்த பள்ளி வழியே சென்றான், அதே மாலை நேரம் ஆனால் சற்று முன்பாக. அங்கே அன்றும் அவள், தீபா, நின்றிருந்தாள். சிறிது நேரம் காரிலேயே அமர்ந்து பார்த்திருந்தான். பின்னோடு அவளை ஒரு கார் வந்து அழைத்துச் சென்றது. அது அவன் தந்தையின் கார்தான் எனத் தெரிந்தது. ஒரு பெருமூச்சுடன் திரும்பிவிட்டான்.

அதற்குப் பிறகு தீபாவை பார்த்தீங்களா தீபு?” என்று வந்தனா கூட கேட்டாள்.
இல்லையே, நான் ஏன் அவளை பார்க்க வேண்டும்..... அந்தப் பேச்சை மற வனி என்று அவளை அடக்கிவிட்டான்.
ஆனால் அவன் மனம்தான் அடங்க மறுத்தது. பருவ வயதில் இருந்தாலும் இன்னமும் அவள் முகத்திலும் பேச்சிலும் குழந்தைத்தனம் மிச்சம் இருந்தது. அவனுக்கு எப்போதுமே பெண் குழந்தைகளை பிடிக்கும். அதிலும் பட்டுப்பாவாடை அணிந்து காலில் கொலுசு கிணுங்க ஓடி விளையாடும் பெண் குழந்தைகள் என்றால் உயிர். என்ன இது என்று தலையை சிலுப்பிக் கொண்டான்.

அடுத்த வாரம் மீண்டும் பள்ளிக்குச் செல்ல அங்கே அவள் தனியே நின்றுகொண்டிருந்தாள். பார்க்கும் தூரம் வரை எந்த காரும் ஆளும் தென்படவில்லை. அதனால் இன்று சற்று துணிவுடன் காரைவிட்டு இறங்கி தீபாவிடம் சென்றான்.
ஹை அண்ணா என்றாள் அவள் முகம் மலர்ந்து.
அவன் உள்ளம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. ‘அண்ணாவா!! எல்லாம் சொல்லிவிட்டார்களா?’ என்று திணறினான்.
ஹை தீபா, அண்ணான்னு யார் சொன்னது?” என்றான் மெதுவாக. 
அம்மாதான், நீங்க அப்படி ஒண்ணும் வயசானவர் இல்லையே, அதுனால அங்கிள்னு கூப்பிட வேண்டாம்னு அண்ணான்னு கூப்பிடுன்னு சொன்னங்க என்றாள் வெகுளியாக.
ஓ அப்படியா, அந்த லேடி செம ஸ்மார்ட் தான்... அதான் என் அப்பாவையே வளைத்து போட்டுகிட்டாங்க என்று இதயத்தை நீவி விட்டுக்கொண்டான்.

அவள் முதன்முறையாக அண்ணா என்று அழைத்தது எங்கேயோ போய் தொட்டது.... சிலிர்த்தது.
என்னம்மா இங்க நிக்கறே.... இன்னிக்கும் பஸ்ஸை தவரவிட்டுட்டியா?” என்றான் தன்மையாக.
இல்லேண்ணா, இன்னிக்கி, இப்போ அம்மா வருவாங்க..... நாளை மறுநாள் எனக்கு பர்த்டே அண்ணா..... அதுக்கு எனக்கு புது டிரஸ் எடுக்கப் போகப்போறோம்.... அதான் வெயிட் பண்றேன் என்றாள்
ஓ அப்படியா என்றான்.
அதற்குள் அவளது கார் வந்து அவன் காரின் பின் நின்றது.
சரேலென்று கருப்பு கண்ணாடியை அணிந்துகொண்டு வண்டியில் ஏறி புயல் போல கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஆடு பகை, குட்டி உறவா?’ என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள் நிர்மலா.
என்னமா தீபா, யாரு அது?” என்றாள் எதுவும் அறியாததுபோல.
போ மம்மி, ரெண்டு நிமிடம் சீக்கிரம் வந்திருந்த தீபன் அண்ணாவை அறிமுகம் செய்திருப்பேன் என்றாள் அங்கலாய்த்தபடி.
அதுகென்ன பிறகு ஒரு நாள் வீட்டுக்கே கூப்பிட்டு பார்த்துட்டாப்போச்சு..... நீ வா நாம ஷாப்பிங் போகலாம் என்று அழைத்துச் சென்றுவிட்டாள்.

ரகுபதியிடம் கூறினாள்இன்னிக்கும் நம்ம பிள்ளை வந்து தீபாவை பார்த்து பேசீட்டு போச்சுது என்று .
ஓ அவளை மட்டும் வந்து பார்க்க முடியுதாமா..... நீ சொன்னதுபோல நல்லதே நடக்கட்டும் நிம்மி..... அது போகட்டும் எப்பிடி நிம்மி நம்ம பிள்ளைன்னு உரிமையா பேசறே?”
இதுல என்ன இருக்கு..... உங்க பிள்ளை எம் பிள்ளை இல்லையா..... ஒரு பேச்சுக்கு கேக்கறேன்.... நான் போய் அக்கா இருந்திருந்தா நம்ம தீபாவ தெருவிலா விட்டிருப்பாங்க?” என்றாள்.
ஐயோ அவளை இழந்துட்டு நான் தவிக்கிறது போதாதா நிம்மி...... அப்படி சொல்லாதேடிஎன்று அவள் வாயை அடைத்தார்.
சரி சரி சொல்லுங்க என்றாள்.
அதெப்பிடிடீ,  கண்ணுக்குள்ள வெச்சு பாத்துகிட்டிருக்க மாட்டாளா என்றார்
அதேபோல்தான் இதுவும் புரியுதா என்றாள்.
ம்ம் புரியுது என்றார் சரசமாக.
போதுமே என்று சிவந்து எட்டிப் போனாள்.
இப்போவும் வெக்கத்தப் பாரு என்று நினைத்து சிரித்துக்கொண்டார்.

அடுத்த இரண்டாவது நாள் மதியம் லஞ்ச டைமில் மீண்டும் பள்ளிக்கு வந்தான் தீபன். ‘முந்தைய தினம் தனக்குப் பிறந்த நாள் என்று கூறினாளே தீபா என்று மனம் கேட்காமல் போய் அவளுக்கென்று ஒரு உயர்தர பென் செட்டும் அந்த வயது பெண்கள் அணியும் அழகிய கைகடிகாரமும் வாங்கினான். பெண்களுக்கு வேறு என்ன பரிசு வாங்குவது என்றுகூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. வந்தனாவை கேட்க வெட்கம் கூச்சம்.

அதை கலர் பேப்பரில் பொதிந்து எடுத்துக்கொண்டு இப்போது கொடுக்க வந்திருந்தான். அவளை கண்களால் துழாவி தேடினான். ‘ஏழாவது பி என்றாளே அந்த வகுப்பறையில் போய் பார்க்கலாமா என்று முன்னே செல்ல அண்ணா என்று பின்னே அழைப்பு கேட்டு திரும்பினான்.
அங்கே தினம் போல் சீருடையில் இல்லாமல் அழகிய நீல நிற பட்டுப்பாவாடையும் அதன் மேல் லாங் ப்ளவுசும் அணிந்து தலையில் பூ சூடி அழகிய பதுமையாக நின்றிந்தாள் தீபா. அவனுக்கு அவளை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் போல பாசம் பொங்கியது. “எப்பிடிடா இருக்கே..... ஹாப்பி பர்த்டே டு யு  என்று விஷ் செய்து பரிசை அவள் கையில் திணித்தான்.
ஹாய்... எனக்கா!!! தாங்க்ஸ் அண்ணா என்றாள்.

அவள் ஒவ்வொருமுறை அண்ணா எனும்போதும் அவனுக்குள் கொஞ்ச கொஞ்சமாக் இளகிக் கொண்டிருந்தது.
அவள் தலையில் கை வைத்து மனசார வாழ்த்திவிட்டு
வரேன் தீபா... ஹாவ் மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தா டே என்றபடி வெளியே வந்துவிட்டான்.
அந்த பரிசை தீபா வீட்டில் காட்டி கூறுவாளே. அப்போது தந்தையும் சித்தியும் என்ன நினைப்பார்கள் எதையும் அவன் யோசிக்க விரும்பவில்லை.... அவர்கள் தப்பு செய்தவர்கள் அதனால் எனக்கு அவர்கள் மீது வெறுப்பு..... ஆனால் இந்தக் குழந்தை ஒரு பாவமும் அறியாதவள். அதனால் நான் அவளிடம் பாசமாக இருக்கிறேன்.... அவ்வளவேதான்’ என்று தன்னையே சமாதானபடுத்திக்கொண்டான்.

எங்கே போனீங்க தீபு..... ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்.... போன் எடுக்கலை?” என்றாள் வந்தனா காரில் அமர்ந்து மொபைல் எடுத்ததும். 
இல்ல இங்க ஒரு சின்ன வேலை..... போன் கார்ல இருந்துடுச்சு அதான் ஹனி.... என்ன சொல்லு?” என்றான் சமாளித்து.
அப்பா பேசணும்னார்..... நிச்சய தேதி முடிவாகீடுச்சு இல்லையா அதான் என்றாள்.
ஓ நானே ஈவனிங்  கூப்பட்றேன்னு சொல்லு வனி என்றான்.

அன்று மாலை வீட்டில் தீபா நிர்மலாவிடம் தீபன் கொடுத்த பரிசை காண்பித்துக் கொண்டிருந்தாள்.


No comments:

Post a Comment