Friday 26 April 2019

ULLAM RENDUM ONDRU - 13 - FINAL


அவளோடு ஜோடியாக வந்து இறங்கிய ஆனந்தைப் பார்த்து மகிழ்ந்தாள் கல்யாணி.
ஒன்றுமே நடவாததுபோல வா வாம்மா சாந்தி..... அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா....” என்று விசாரித்துவிட்டு அவர்களுக்கு காபி கலக்க உள்ளே சென்றாள்.
இவர்களுக்கு என்மேல கோபமே வராதா.... இது என்னமாதிரி மனசு?’ என்று வியந்தாள் சாந்தி.

ஆனந்தைப் பார்க்க
எனக்கு தெரிஞ்சு அனாவசியத்துக்கு எங்கம்மாக்கும் அப்பாக்குமே கோபம் வந்து நான் கண்டதில்லை என்றான் புன்னகையுடன் அவள் மனதை புரிந்து.
இவன் என்ன மாயஜாலம் அறிந்தவனா.... என் கண்ணை பார்த்தே என் கேள்விக்கு பதிலாக பேசுகிறானே என்று மேலும் வியந்தாள்.
அவள் விரித்த கண்களை பார்த்து அவன் மறுபடி நெருங்க சி போ என்று வெட்கத்தோடு உள்ளே ஓடிவிட்டாள். ‘சரிதான் எல்லாம் சரியாகீட்டாப்போல இருக்கு என்று சிரித்துக் கொண்டனர் கல்யாணியும் வெற்றியும்.

மாமா மன்னிச்சுக்குங்க அத்தை மன்னிச்சுக்குங்க என்றாள் காபியை கையில் வாங்கிக்கொண்டு குனிந்த தலையோடு.
அட இதென்னமா பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு, களைச்சு வந்திருப்பீங்க.... போய் ரெஸ்ட் எடுங்க போங்க என்றாள் கல்யாணி.

உள்ளே வந்தவளையே வியந்து பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான் ஆனந்த
. அவனது பார்வையின் தாக்கத்தை உணர்ந்து மெல்ல அவன் பக்கம் திரும்பினாள். ‘என்னஎன்பதுபோல புருவத்தை உயர்த்தி வினவினாள். ‘ஒன்றுமில்லை என்று அவனும் அப்படியே ஜாடை செய்தான்.
அவள் போய் முகம் அலம்பி வந்து துடைத்து பொட்டிட வர அவளது ஜில்லென்ற கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டுவிட்டு குளியறைக்குள் மறைந்துவிட்டான்.

இவன் என்ன இன்னிக்கி இப்படி...’ என்று சிவந்துபோனாள். கண்ணாடி முன்னாள் அமர்ந்திருப்பதால் தன்னையே அதில் காண, தான் முகம் சிவந்து நாணி அவ்வளவு அழகாக இருப்பதைக் கண்டு தானே சொக்கிப் போனாள்.
அதானா ஐயா அப்பப்போ என்னை சிவக்க வைத்து ரசிக்கிறாரு என்று மேலும் சிவந்தாள்.

அவனுக்கு வேண்டிய மாற்றுடையை தேர்வு செய்து படுக்கை மேல் வைத்தாள்
. மணமான புதிதில் எப்போதோ ஓரிரு முறை செய்தாள், பின் அதைப்பற்றி கவலைப் படவில்லை. இன்று மீண்டும் ஏனோ செய்யத்தோன்றியது.
வெளியே வந்தவன் அதைக்கண்டு அதிசயித்து சிரித்தபடி அணிந்து கொண்டான்.
அவள் அவனைக்காண வெட்கப்பட்டு சமையல் அறைக்குச் சென்றாள். ஆனவரை இயல்பாக மெல்ல பேசியபடி கல்யாணிக்கு இரவு உணவிற்கு உதவி செய்தாள்.

உள்ளுக்குள்ளே வியந்து கொண்டாலும் முகத்தில் ஏதும் காட்டாமல் புன்னகையோடு அவளோடு பேசியபடி வேலை செய்தாள் கல்யாணி
.
இரவு உணவை வெற்றியும் கல்யாணியும் எட்டு மணிக்கே உண்டுவிடுவர். அதன்பின் பத்து மணிக்கு உறங்கச் செல்வார்கள். அவளும் ஆனந்தும் ஒன்பது மணிக்குதான் உண்பது வழக்கம்.

அதேபோல பெரியவர்கள் உண்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருக்க
, ஆனந்த் சாப்பிட எழுந்து வந்தான்.
அவன் தினமும் அப்படி எழுந்து வந்து ஒன்றா தானே தட்டில் போட்டுக்கொண்டு போய் டிவி முன் அமர்ந்து பார்த்தபடி சாப்பிடுவான்.... இல்லை எனில் கல்யாணி எழுந்து வந்து அவனுக்கு எடுத்து போட்டுவிட்டு போவாள்.

இன்று அவன் பின்னே சாந்தியும் எழுந்து வந்தாள்
.... தனக்கும் அவனுக்குமாக தட்டுகள் வைத்தாள்.... இரண்டிலும் பரிமாறினாள்.... அவள் செய்கை கண்டு அதிசயித்து அங்கேயே அமர்ந்தான். அவளும் அவனருகில் அமர்ந்து மெளனமாக சாப்பிடத் துடங்கினாள்.
அவன் திடீரென்று தன் தட்டிலிருந்து ஒரு விள்ளலை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.... குனிந்த தலையாக சாப்பிட்டு கொண்டிருந்தவள் சட்டேன்று நிமிர்ந்து அதை இயல்பாக வாங்கிக்கொண்டாள்.... என்ன தோன்றியதோ அவளும் அதேபோல அவனுக்கு ஊட்டினாள். அவளை புன்சிரிப்புடன் பார்த்தபடியே கண் அடித்து அவள் விரலை லேசாகக் கடித்து வாங்கிக்கொண்டான்.

அவளுக்குள் விர்ரென ஷாக் அடித்ததுபோல ஏதோ ஒரு உணர்வு
.... மனம்  மயங்கியது.... அவனை ஏறெடுத்தும் பார்க்கமுடியாமல் தன் விரலில் அவன் கடித்ததை உறுஞ்சிக் கொண்டாள்.
வலிச்சுதா?” என்று ரகசியமாக கேட்டு அந்த விரலை இழுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டான். அவள் அவனது செய்கையில் கட்டுண்டு போனாள். ‘ஓ இதெல்லாம் தான் இவன் சொன்ன காதலா.... அன்பின் வெளிப்பாடா?’ என்று உள்ளே ஏதோ பொங்கியது.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள், அதென்ன சொன்னான் ஆங்சரசங்கள் எவ்வளவு இன்பமாக இருக்கு!!’ என்று வியந்தாள். பின் மீண்டும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அவள் பாத்திரங்களை ஒழித்து போட எடுத்தாள்.... அவனும் அவளோடு கூடவே எடுத்து வந்து கொடுத்தான்.... அதற்குள் கல்யாணி எழுந்துவரப்போக நீங்க ஒக்காருங்க அத்தை... நாங்க பாத்துக்கறோம் என்றாள் அவனை அர்த்தமாக பார்த்தபடி. அவன் சிரித்து கொண்டான்.

அடுப்படியில் சிங்கில் தேய்க்க போட்டுவிட்டு மேடையை ஒதுக்கி எல்லாமும் செய்துகொண்டிருந்தவளை பின்னிருந்து இடுப்பை வளைத்துக் கட்டிக்கொண்டான்.... அவள் பின்னகழுத்தில் அழுந்த முத்தமிட்டான்.... கழுத்தின் வளைவில் முகம் பதித்தான்.... அவள் கிறங்கி துவண்டு அவன்புறம் திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
என்னடி சொக்கறே?” என்றான் காதோரம்.
ஊஹூம் நீங்க சொக்க வைக்கறீங்க என்றாள் நாணத்தோடு.
அப்போ போலாமா?” என்றான் கிசுகிசுப்பாக.
ம்ம் என்றாள்.

அடுப்படி வேலை முடித்துவிட்டு வெளியே வந்து பெற்றோரிடம் குட் நைட் சொல்லி தங்கள் அறைக்கு வந்தனர்
. அங்கேயும் ஒரு டிவி வாங்கிப் போட்டிருந்தான் அவளுக்காக.
அங்கே சென்று கட்டிலில் அமர அவளையும் இழுத்துத் தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
சானு என்றான் ஆசையோடு.
மிக நெருக்கமான நேரங்களில் மட்டும் அப்படி அழைப்பான்.... அவள் அவனை ஏறிட்டு பார்க்க தாங்க்ஸ் என்றான். அவள் அவன் வாய் அடைத்து பேசாதே என்று தலை இடம் வலமாக அசைத்தாள். அன்று அவர்கள் இருவரும் கொடுக்கவும் வாங்கவும் தடுக்கவும் ஏங்கவும் புதிதாக புணர்ந்ததுபோல உணர்ந்தனர். இன்னொரு முதல் இரவோ என்று எண்ணும் வண்ணம் அமைந்தது அந்த இரவு.

அடுத்த நாள் விடியும்போது எழுந்தவள் நாணி தலை குனிந்து சிவந்து போனாள்.
என்னவாயிற்று ஆனந்திற்கு நேற்று இரவு?’ என்று கேட்டுக்கொண்டாள். ‘உனக்கு என்னவானது?’ என்று அவளையே கேட்டது அவள் மனது. “சி போ என்று அடக்கிவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றாள்.
காலையில் மருமகள் மலர்ந்து சிவந்த முகத்தோடு எழுந்து வருவதைக்கண்ட கல்யாணிக்கு மிக்க மகிழ்ச்சி. காபி போட்டு அவளே எல்லோருக்குமாக எடுத்து கொடுத்தாள்.

அத்தை நீங்க உக்காருங்க இட்லி வைத்து சட்டினி அரைக்கணும் அதானே... நான் பாத்துக்கறேன் உங்களுக்கு ரெஸ்டே இல்லை என்று தானே செய்தாள்.
என்னடி சாத்தான் வேதம் பேசுது?” என்றார் வெற்றி.
சும்மா இருங்க ராசி ஆயிட்டாங்கபோல என்றாள்.
ராசி இல்லைடி ஆளையே மாத்திபுட்டான் எம்பிள்ள என்று கண் அடித்து சிரித்தார்.
இது இதான் வேண்டாங்கறது.... அதுனாலதான் இவ்வளவு பிரச்சினைஎன்று கல்யாணி செல்லமாக மிரட்டினாள். “அதுசரி என்று சிரித்தான் வெற்றி.
 
ஆனந்திற்கு காபி எடுத்துச் சென்றாள் அவனோ அவளை குடிக்க வைத்து தான் அவளையும் காபியையும் சேர்த்தே ருசித்தான்.
என்ன இது காலங்கார்த்தால வம்பு?” என்று சிரித்துக்கொண்டே விலகிப்போனாள்.
அவள் குளித்து வந்தபின் அவன் குளிக்கச் சென்றான்.
அவள் கண்ணாடிமுன் அமர்ந்து தயாராகிக் கொண்டிருக்க குளித்து டவலுடன் வெளியே வந்தவன் தன் ஈர முடியை அவள் அருகில் வந்து சிலுப்ப, அவள் தோளின் மீது வைரமணிகளாக விழுந்தன நீர்த்துளிகள்.... அவள் சிலிர்த்து கண்மூடினாள்.

ஐயோ என்ன பண்றீங்க... ட்ரெஸ்செல்லாம் பாழ் பண்ணாதீங்க ப்ளீஸ் என்றது வாய்மட்டும்.
அவள் ரசித்த அந்த கணத்தில் குனிந்து அந்த நீர் துளிகளை வாயால் ஒற்றி எடுத்தான்.... அவள் கிரங்கிப்போனாள். அப்படியே திரும்பி அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டாள், அவன் வயிற்றில் முகம் புதைத்தபடி.
ஏண்டீ ரெண்டு பெரும் லீவ் போட்டுட்டு ராத்திரிய தொடருவோமா?” என்றான் காதோரம்.
ஐயோ, இன்னிக்கி முக்கியமான மீட்டிங் இருக்கு.... போங்க காலங்காலையில வம்பு பண்றீங்க என்று வெட்கி சிவந்து நகர்ந்து பின்னலிட்டு கொண்டு எழுந்தாள்.
அறை வாசலை அடைந்தவள் அவன் கைக்கு அகப்பட மாட்டாள் என்று கட்டைவிரலை உயர்த்தி ஜாடைகாட்டிவிட்டு ஓடிவிட்டாள்.
மாட்டாமையா போவேஎன்றான் ஆனந்த்.

அந்த ஆனந்தப்பொழுதை இருவரும் ரசித்துக் கொண்டிருக்கும்போது நடுவில் கல் கடித்ததுபோல அவளின் தாய் அழைத்தாள்
.
என்ன நீயா வந்தே.... ஓ ன்னு அழுதே.... பின்னோட அந்தப் பய வந்து கூப்பிட்டதும் போன்ல ஒரு மெச்செஜ் மட்டும் விட்டுட்டு அவனோட ஓடிப் போய்ட.... என்ன நடக்குது.... அவன் என்ன சொல்றான்.... அந்த கிழவி திரும்ப உன்னை படுத்தறாளா?” என்று ஏகவசன வார்த்தைகளோடு அவள் பேச, சாந்திக்கு சுருசுருவென ஏறியது.

தோ பாருமா, மரியாதையா பேச கத்துக்கோ..... உன்னாலேதான் எனக்கு இங்க இந்த நிலைமை.... நீயும் ஒழுங்கா இல்லை என்னையும் ஒழுங்கா வளர்க்கலை..... அதென்ன அவன் இவன்கிட்டு.... அவர் எனக்கு தாலி கட்டின புருஷன்....உங்க வீட்டு மாப்பிள்ள.... கிழவியா? யாரு? எங்க அத்தையா.... நீ டை பூசிக்கிட்டு திரியறே.... நீ கிழவியா.... இன்னமும் ஒருமுடி கூட நரைக்காம முகபொலிவோட இயற்கை அழகோட பளிச்சுன்னு சிரித்தாப்போல இருக்காங்களே அவங்க கிழவியா..... நான் இங்க நல்லா இருக்கேன்.... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.... போதும் போன வை என்று இரைந்துவிட்டு போனை வைத்துவிட்டாள். படபடவென இருந்தது.
இதை எல்லாம் மற்ற மூவரும் ஒவ்வொரு மூலையில் இருந்த கண்டும் காணாமலும் கேட்டிருக்க வியப்பே மேலோங்கியது.

அன்று காரில் இருவரும் ஆபீஸ் போகும்போது என்ன இவ்வளவு வம்பு பண்றீங்க ஆனந்த என்றாள்
வம்பு இல்லைடி சரசம் என்றான். அவன் உரிமையோடு டீ போட்டு பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அதில்லை செல்லம் உனக்கு சிலதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது செயல்பாட்டில்தான் சொல்ல முடியும்னு சொன்னேனே கவனம் இருக்கா..... இதான் அது.... ஆர் யு நாட் என்ஜாயிங் இட் பேபி?” என்று கேட்டான்.
அவள் சிவந்து தலை குனிந்து ஆம் என்றாள்.
ஹுர்ரே என்று கத்தினான். அவள் அவனைக்கண்டு சிரித்தாள்.

இப்படியாக வாழ கற்றுக்கொண்ட சாந்தியும் கற்றுக்கொடுத்த ஆனந்தும் குடித்தனம் செய்ய பின்னோடு அவள் கர்ப்பம் தரித்தாள். அவனுக்கோ கால் தரையில் பாவவில்லை.... அவளை தட்டாமாலை சுற்றினான்.
ஐயோ என்னடா இது, அவ தனி மனிஷி இல்லை, விடுடா அவள என்று கத்திக்கொண்டே வந்தாள் கல்யாணி.
ஐயாம் சோ ஹாப்பி டார்லிங்.... தாங்க் யு என்றான் காதோரம் தனிமையில்.
அவளுக்கு கிளர்ந்து போனது.... ‘தாய்மை என்பது இவ்வளவு அருமையான விஷயமா என்று தோன்றியது.

அடுத்த மாதத்தில் களைப்பும் வாந்தியும் தலை சுற்றலுமாக அவள் அவஸ்தைப் பட அவளை அருமையாக தாங்கினர் அந்த வீட்டினர்
.
வெற்றி மார்கெட்டையே திருப்பிக்கொண்டுவந்து போட்டான்.
இந்தா இந்த காய் கிடைச்சுது மருமகளுக்கு செஞ்சு போடு..... இந்தா பூவு இப்போதான் வந்து இறங்கிச்சு.... அவ தலைக்கு வை, நீயும் கொஞ்சம் வெச்சுக்க என்று பரவசமாக.
ஏன்ன்ன், உங்க மருமகளுக்கே வெச்சிட்றேனே எல்லாத்தையும் என்று கல்யாணி நொடித்தபடி சிரித்து கிண்டல் செய்ய,
அதுவும் சரிதான் என்றான் அவன்.
சாந்தி கண்கள் பனிக்க அவர்களது இந்த சந்தோஷத்தைக் கண்டுகொண்டாள்.
ஆனந்த முடிந்த வரையிலும் அவளுடனே நேரம் சிலவழித்தான்..... அவள் எண்ணம் எங்கோ சென்றது....

தன் வீட்டில் அவளுக்கு மலேரியா ஜுரம் வந்து ஒரு மாதம் போல அவஸ்தை பட்டபோது தன் தாய் கடமைக்காக எனக்கூட அவளோடு ஒரு நாள் தங்கவில்லை..... டாக்டரும் வேலை ஆட்களும் என்று அவள் தேறினாள்.
இங்கே இவளது ஒவ்வொரு அசைவுக்கும் கவனிக்க ஆள் இருந்தது....

உணக்கையாக மசக்கைக்கென சமைத்துக்கொண்டு வந்து தந்தாள் கல்யாணி
.... அவள் ஆசையாக உண்ணுவதும் பின்னோடு ஓடிப்போய் அத்தனையையும் வெளியே எடுப்பதுமாக இருந்தாள்.... பயந்து போனான் ஆனந்த.... “அப்படித்தாண்ட இருக்கும்.... அதுக்குன்னு சாப்பிடாமையும் இருக்கக் கூடாது என்று நார்தங்காய்யை தந்து வாயில் அடக்கிக் கொள்ளச் சொல்லுவாள் கல்யாணி.

சாந்தியின் தாய்க்கு கூப்பிட்டுச் சொல்ல என்னது கர்பமா.... அதுக்குள்ள என்ன அவசரம்.... அப்பறமா பெத்துக்கலாமே என்ன இப்போவே..... உனக்கு வேணுமான்னு யோசிச்சுக்க என்றாள். சாந்திக்கு வெறுத்துவிட்டது.
ஆனா சாந்திமா உன்னோட பிரசவ டேட்டுன்னு கொடுத்திருக்கற நாளுக்கு நாங்க வர்ள்ட் டூர்ல இருப்போம்.... நான் டாக்டர்கிட்ட எல்லாமும் சொல்லி வைக்கிறேன்.... சீமந்தம் எப்படியும் அவங்க வீட்டுல தான்.... நான் வளைகாப்பு செய்துட்டு கிளம்பிடுவேன்.... நீ சமாளிச்சுப்பே இல்லை?” என்றுவேறு கேட்டுக்கொண்டாள்.

அனைத்தையும் ஆனந்திடம் கூறி அவள் அழ அதை கேட்டுக்கொண்டே வந்த கல்யாணி
, “என்னம்மா இது, நாங்க தான் இவ்வளவு பேரு இருக்கோமில்ல.... பேசாம இரு.... அழக்கூடாது.... அதான் உன் நாத்தனாரே மிகப்பெரிய தாய்சேய் டாக்டராச்சே, அவகிட்டே பாத்துக்கிறியா இல்ல உனக்கு வேற யார்கிட்டேயானும் பழக்கம் இருக்கா அங்க போலாமா என்று கேட்டாள்.

இல்லைமா, சுமனா கிட்டேயே பாத்துக்கலாம் என்றாள். இப்போதெல்லாம் அத்தை என்பதை விடுத்து கல்யாணியை அம்மா என்றழைக்க ஆரம்பித்திருந்தாள் சாந்தி.
அதுபோல சுமனாவிடம் காண்பித்து டானிக் மருந்துகள் எல்லாம் வாங்கிக்கொண்டனர். அவள் தனியாக வாரத்திற்கு ரெண்டு நாள் இவளை கூப்பிட்டு அறிவுரை கூறுவதும் உடல் நலம் பற்றி கேட்பதுமாக பார்த்துக்கொண்டாள்.

இங்க நாங்களே சீமந்தத்தோட சேர்த்து வளைகாப்பு பண்ணிக்கறோம் நீ கிளம்பு உன் டூருக்கு என்று தன அம்மாவை அனுப்பி வைத்துவிட்டாள் சாந்தி.
என்னமா அவங்களுக்கும் ஆசை இருக்குமே வளை அடுக்கி பூச்சூடி உன்னை அழகு பார்க்க...?” என்று கல்யாணி கூட கடிந்து கொண்டாள்.
ஆமா ரொம்ப ஆசை தெரியும்.... போங்கம்மா என்று அலுத்துக்கொண்டாள்.
சரி தன் மருமகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று சுற்றுபுரத்தையே அழைத்து விருந்து வைத்து சீமந்தமும் வளைகாப்புமாக செய்தாள் கல்யாணி.

சுமனவும் கௌரியின் மகள் சரோஜாவும் கௌரி குமரனும் கூட முன்தினமே வந்திருக்க வீடே களை கட்டியது. ‘பிள்ளையா பெண்ணா.... என்ன பெயர்..... என்று சர்ச்சை செய்தனர்..... கலகலப்பாக வீடே நிறைந்திருக்கஇதான் என் குடும்பம்.... நான் இந்த வீட்டைச் சேர்ந்தவள்...... இதுதானே ஆனந்த் ஆசைப்பட்ட ஆதர்ஷ தாம்பத்யம் என்று கற்று தேர்ந்தாள் சாந்தி.
அடுத்த மாதத்தில் அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாள். குடும்பமே மகாலட்சுமி பிறந்திருக்கா என்று கொண்டாடியது. தொட்டிலிட்டு சுகுணா என்று பெயர் வைத்து கொண்டாடினர்.
சுகுணா வளர்ந்து பள்ளிக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே வெற்றி அவளுக்கு எ பி சி மற்றும் எண்கள் எல்லாமும் கற்றுத் தந்திருந்தார். அவள் படுசுட்டியாக எல்லாமும் சுருக்கவே கற்றுத் தேர்ந்தாள். கல்யாணி அவளுக்கு ஆத்திச்சுடி போன்றவையும் சில நீதி கதைகளும் ராமாயணம், மகாபாரத சாராம்சமும் கற்றுத் தந்திருந்தால். அந்த மூன்று வயதில் சுகுணா பாட்டி தாத்தாவிடம் அளவு கடந்த அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருந்தாள். வளர வளர அவளுக்கு அவர்களே சகலமும் என ஆகிப் போனது. அது நல்லதல்ல குழந்தைக்கு பெற்றோரிடம்தான் அதிக பாசம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து வெற்றியும் கல்யாணியும் கொஞ்ச நாள் விலகி இருக்கலாம் என்று ஊரை பார்க்கக் கிளம்பி வந்தனர்.

அதில் சாந்தி மற்றும் ஆனந்திற்கு மிகுந்த துக்கம்
.
சுகுணா பள்ளிக்கு போகும் நேரத்துல வழி நடத்தி அவளை கொஞ்ச நீங்க அங்க இல்லாம எப்படி அம்மா?” என்றாள் சாந்தி கல்யாணியிடம்.
நாங்க எங்கடா போறோம் இங்கே பக்கத்தில நம்ம ஊருக்குதானே..... எப்போவேணா பாத்துக்கலாம் கூடிக்கலாம் சாந்தி.... ஆனா குழந்தை உங்ககிட்ட ஓட்டணும்மா... அது முக்கியம் என்று சரியான நேரத்தில் அவளை நல்வழிபடுத்தி ஒதுங்கினர்.

சுகுணா பெற்றோரிடமும் அதேபோன்ற அன்புடனும் பாசத்துடனும் பழகக் கற்றுக் கொண்டாள்
. இதுதான் அம்மாவின் வளர்ப்பு என்று மெச்சிக்கொண்டனர் சாந்தியும் ஆனந்தும்.
எந்த நேரம் சில நாள் விடுமுறை கிடைத்தபோதும் ஊரூக்கு ஓடிச் சென்றுவிடுவாள் சுகுணா. அங்கே போய் தாத்தா பாட்டியிடம் கொட்டம் அடிப்பாள்.... அவர்களுக்கும் அவள் வந்துவிட்டால் கொண்டாட்டம்தான்.... அந்த சில நாட்கள் அவர்களுக்குப் பண்டிகை போன்றது.... சில நேரம் சாந்திஆனந்தும் கூடச் செல்வார்கள்.

முக்கியமான பண்டிகை தினங்களில் சுமனாவும் அவள் கணவரும் மகன் கிரிஷும் கூட வந்து சேர்ந்து கொள்வார்கள்
.... அந்த தருணங்கள் இனிமையானவை.... அந்த சில நாட்களை எதிர்நோக்கி ஆவலாகக் காத்திருப்பர் கல்யாணியும் வெற்றிவேலனும்.
மற்ற நேரங்கள் அவர்களுக்கான தனி நேரம். அங்கே அவர்களின் இனிமையான தாம்பத்யம் ஓங்கி நிற்கும்.
ஆம் உள்ளம் ரெண்டும் ஒன்று....  உருவம் தானே ரெண்டு....
முற்றும்



























No comments:

Post a Comment