Monday 22 April 2019

ULLAM RENDUM ONDRU - 9


கல்யாணி வந்திருக்கிறாள் என்று அறிந்தான் வெற்றி. மனம் ஒரு பக்கம் குதூகலித்தது. ஆயினும் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. ‘வந்து மட்டும் எனக்கென்ன என்று தன்னை அடக்கிக் கொண்டான். நிச்சய வேலைகளில் மனதை செலுத்தினான்.

சாப்பிடும்போது அவளைக்கண்டு அதிற்சியானான். ‘என் நித்யாவா இவள்.... இதென்ன இப்படி இருக்கிறாள்..... முகத்தில் இருந்த களை எங்கே, கண்ணின் கீழ் கருவட்டங்கள், முகம் சோர்ந்து, இளைத்து என்னவோபோல.... இதற்கெல்லாம் தான்தான் காரணமா என்று குமைந்தான்.
அவளை நேராகக் காண முடியாமல் குற்ற உணற்ச்சியுடன் தலை குனிந்தான். அவளோ அவளைக் காணப் பிடிக்காமல் அவன் தலை குனிந்தான் என்று எண்ணினாள். கண்ணில் நீர் மல்கியது.
கௌரியிடம் தனிமையில் கேட்டான் என்னாச்சு கௌரி.... கல்யாணி ஏன் என்னமோ போல இருக்கா.... முகமே சரி இல்லையே?” என்று.
அதை என்னிடம் நீ கேட்கிறியா அண்ணா?” என்றாள் அவள் கோபமாக.
அவளின் இந்த நிலைக்கு நீதான் காரணம்னு இன்னுமா புரியலை உனக்கு.... நீயும் உன் வறட்டு பிடிவாதமும் என்று கேட்டே விட்டாள்.
கௌரி நீயுமா?” என்றான் கண்ணில் வேதனையோடு.

அவசரமாக இல்லை அண்ணா.... சாரி அண்ணா மன்னிச்சுக்கோ... ஆனாலும் கல்யாணியப் பார்த்தா பாவமா இல்லையா... நீ ஆயிரம் சொன்னாலும் அவ இந்த ஜென்மத்துல வேற யாரையும் மனசால கூட நினைக்கப் போறதில்லை அண்ணா.... கல்யாணம் செய்துக்கறது அப்பறம் கதை..... நீதான் யோசிச்சு நல்ல முடிவா எடுக்கணும் என்றுவிட்டு சென்றாள்.
அவனுக்கு மனம் கனத்து போயிற்று.

வெளியே வரும்போது கல்யாணி எதிர்பட எப்படி இருக்கே நித்யா?” என்றான்.
ம்ம் நல்லா இருக்கேன் அத்தான், நீங்க?” என்றாள்.
நல்லா இருக்கேனா உன் முகம் ஏன் இப்படி களை இழந்து இருக்கு.... இளைத்திருகே... உன் முகம் வாடி இருக்கு.... இதெல்லாம் என்ன நித்யா.... இன்னுமா நீ....” என்று மேலும் பேச முடியாது அவளை பார்த்தபடி நின்றான்.
உன்னை மறக்கலியான்னு கேட்காம கேட்கிறியா அத்தான்.... உன்னை நான் மறந்தா அது என் சாவில்தான் என்று அவள் மெளனமாக மொழிந்தாள்.
அவள் கண்ணில் தெரியும் வேதனையும் சொல்லாமல் சொல்லிய வார்த்தைகளும் அவனை கொன்றே விட்டது.

சே இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது.... ஒரு வேளை கௌரி கூறுவதுபோல மாமாவிடம் பேசிப்பாற்பது நல்லதோ என்று ஒரு சிறு துளிர் விட்டது. அதை உடனே அழித்தான்.
இப்போ கௌரி நிச்சயம் முன்ன நிக்குது.... அதப் பாப்போம் என்று சென்றுவிட்டான்.

கல்யாணி வந்தவுடன் பொறுப்பேற்றுக்கொண்டாள். கௌரியை அலங்கரிப்பது மட்டுமின்றி விசாலதிற்கும் உதவி செய்து பலகாரங்கள் தயாரித்தனர்.... வாசலை காலையிலேயே மெழுகி அழகிய கோலம் போட்டு வைத்தாள்..... வீட்டை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தினாள்..... அவர்கள் வரும் முன் வீடு பளிச்சென்று லக்ஷ்மி களையோடு விளங்கியது.
விசாலம் யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ என்று பெருமூச்செரிந்தாள். ‘வெற்றிக்கு இவளை பிடிக்காமலா இருக்கும் பின் ஏன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறானே.... பாப்போம் என்று நினைத்தார்.

நிச்சயத்துக்கு என ஊர்லிருந்து மாமாவும் மாமியும் வந்திருக்க எல்லோருமாக ஒரு நல்ல நேரதில் கௌரியின் வீட்டை அடைந்தனர். கந்தசாமி வாசலுக்கே வந்து வரவேற்றார். அமரச்செய்து கௌரியை அழைக்க வெற்றி தானே மேலே சென்றான். கௌரியை மிக அழகாக் தயார் செய்திருந்தாள் கல்யாணி.
அசத்தலா இருக்கே போ... குமரன் மயங்கிட போறாரு என்று கிண்டல் செய்தபடி அழைத்து வந்தான்.
பின்னோடு மாடிப்படி வளைவில் ஒதுங்கி நின்றுகொண்டு கீழே நடப்பதை பார்த்திருந்தாள் கல்யாணி.

கௌரி வந்து குமரனின் தாயையும் மற்றவர்களையும் வணங்கி எழுந்தாள். பங்கஜம் அவளை அருகில் இருத்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார். “எனக்கு கௌரிய ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்
குமரன் கௌரியைக் கண்டு மயங்கி சமைந்துபோய் அமர்ந்திருந்தான் கள்ளுண்ட வண்டுபோல.
அவள் அவனைக் கண்ணால் அதட்ட நினவுலகதிற்கு மீண்டான். பின் பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டனர்.

பின்னோடு எல்லோருக்கும் பலகாரம் கொடுக்க என விசாலம் உள்ளே சென்றதும் உதவ என அவளோடு வந்து சேர்ந்து கொண்டாள் கல்யாணி.
அங்கே குமரன் வாய் திறந்தான்.
என்ன வீட்டுல உங்க மருமக அதான் என் தங்கை இல்லீங்களா மாமா?” என்றான் வேண்டும் என்றே.
மாப்பிள்ள யாரச் சொல்றீங்க?” என்றார் அவர் புரியாது.
அதாங்க மாமா நான் அத்தைய பார்க்க வந்தபோது உங்க மருமக அத்தைய அவ்ளோ நல்லா கவனிச்சுகிட்டங்களே..... எனக்கு கூட காபி போட்டு கொடுத்தாங்களே என்றான்.
ஓ அது என் தங்கை பொண்ணு கல்யாணி மாப்பிள்ளை... இந்த வீட்டு மருமக இல்லைஎன்றார்.
ஓ அப்படியா! முறைப் பெண்ணாச்சே வெற்றிக்கு பரிசம் போட்டிருப்பீங்க அதான் அப்படி அவ்ளோ அழகா பார்த்து பார்த்து பணிவிடை செய்யறான்னு நினைச்சேன் என்றான் வேண்டும் என்றே அசட்டு சிரிப்பு தோன்றும்படி.
கௌரி வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டாள். அவளை பார்வையால் அதட்டினான். அவள் கப்பென்று மூடிக்கொண்டாள்.
அவங்க வரலையாக்கும்?” என்றான் பின்னோடு.
ஓ வந்திருக்காளே..... அம்மாடி கல்யாணி..” என்று குரல் கொடுக்க பலகார தட்டுகளுடன் வந்தாள் கல்யாணி என்னங்க மாமா?” என்றாள் பணிவாக.
இந்தா பாரு மாப்பிள்ளையப் பார்த்தியா.... உன்னக் கேட்டாரு அதான் கூப்பிட்டேன் என்றார்.

வாங்க நல்லா இருக்கீங்களா? என்று விசாரித்தாள்.
நான் நல்லா இருக்கேன் மா.... என்னமோ தெரியல உன்னையப் பார்த்தா என் தங்கை போல தோணிச்சுது அதான் இருக்கியான்னு கேட்டேன் என்றான் நிஜமான பாசத்துடன்.
அவளுக்கு அட என்று இருந்தது. “அதுக்கென்ன அண்ணா, அப்படியே நினைச்சுகிட்டாப் போச்சு என்றாள் முழு மனதாக.
அட வந்த இடத்தில எனக்கு மருமகளோட சேர்ந்து ஒரு மகளும் கிடைச்சுட்டாளா!” என்று சிரித்தார் பங்கஜம்.
குமரன் என்னமோ திட்டத்துடன் இதை எல்லாம் செய்கிறான் என்று அறிந்தான் வெற்றி. ஆனால் அவனால் ஒண்ணுமே பேச முடியவில்லை. அப்படி ஒன்றும் இல்லையே என்று சொல்லிவிட்டால் என்னாவது, வருங்கால மாப்பிள்ளை அல்லவா என்று பேசாமலிருந்தான்.

பலகாரம் சாப்பிட்டுவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
வரேம்மா கல்யாணி என்றான் குமரன் அவளிடம்
சரீங்கண்ணா என்றாள் அவளும் அன்பொழுக.
என்னடி ரொம்பத்தான் ஈஷல்?’ என்று உள்ளே மென்றான் வெற்றி.
வரேன் மாமா வரேன் அத்தை, இவங்களுக்கும் சீக்கிரமே பரிசம் போட்ருங்க ரொம்ப காக்க வைக்காதீங்க பாவம் என்றான் நமுட்டு சிரிப்புடன்.
அட என்ன மாப்பிள்ள இப்படி பேசி வைக்கிராரு?. நமக்கு தெரியாத ஏதானும் விஷயம் இவருக்கு தெரிஞ்சிருக்குமோ என்று பெரியவர்களுக்கு தோன்ற வைத்துவிட்டு ஒன்றுமே அறியாதவன் போல முகத்துடன் சென்றுவிட்டான் குமரன்.

என்னடா மாப்பிள்ள இப்படி சொல்றாரு?” என்று வெற்றியை கேட்க வம்பு வருகிறது என்று உஷாராகி அவர் என்னமோ சொல்றாரு தெரியாத்தனத்தோட விடுங்கப்பா என்று கூறி கெளரியையும் கல்யாணியையும் ஒரு முறை முறைத்துவிட்டு சென்றுவிட்டான்.
மேலே சென்று உடை மாற்றும்போது கௌரி நமுட்டு சிரிப்புடன் கல்யாணியிடம் எப்படி?” என்றாள்.
அடிப்பாவி இதெல்லாம் உன் வேலைதானா..... நீயும் கூட்டா அவரோட சேர்ந்து.... என்னடி, ஏண்டீ நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்?” என்றாள் அழமாட்டாமல் கல்யாணி.

அட ஏண்டீ இவ ஒருத்தி.... கலகம் பிறந்தாத்தாண்டீ மங்களம் பிறக்கும்.... நல்லது நடக்கும்.... பேசாம வேடிக்கையப் பாரு என்றாள்.
உன்னை என்னமோன்னு நினைச்சேன் என்றாள் கல்யாணி.
அண்ணன் அதுக்குமேல என்றாள்.
இல்லியா பின்ன, நான் கோடு போட்டேன், அவரு ரோடே போட்டுட்டாரு..” என்று சிரித்தாள். கல்யாணிக்கும் சிரிப்பு வந்ததுதான்.
ஆனாலும் கௌரி உங்க அண்ணன் பார்வையை கண்டியா, பயமா இருக்கு.... இதெல்லாம் என்னோட கைவேலைன்னு நினைச்சுடப் போறாரேன்னு
அத அப்பறம் பார்த்துக்கலாம் நீ வா என்று கூறினாள் கௌரி.

அன்று இரவு என்னடி மாப்பிள்ள என்னென்னமோ சொல்றாரு... நீ ஏதானும் அவர்கிட்ட இத பத்தி பேசினியா.... அவருக்கு எப்படி தெரியும், ஏண்டீ எப்போதுமே ஒண்ணாவே சுத்தரீங்களே கல்யாணி மனசுல அப்படி ஏதும் எண்ணம் இருக்கா.... ஏன் அவ ஒரு மாதிரி இருக்கா..... உங்க அண்ணன் மனசு உனக்கு தெரியும்தானே.... அப்படி ஏதானும் இருந்தா சொல்லுடி.... பேசி முடிச்சுடுவோம் என்றார் விசாலம் கௌயிடம்.
என்னமோம்மா நான் என்னத்தக்கண்டேன்.... எனக்கொண்ணுமே தெரியாது என்றாள் அப்போதைக்கு அண்ணன் மனம் அறிய வேண்டி.
அவனோ உர்ர் என்று மொட்டை மாடியில் போய் சாப்பிடாமல் கூட அமர்ந்திருந்தான்.
எல்லாம் கூட்டுக் கேடிகள் என்று பொருமினான். ‘நான் இவங்ககிட்ட சொன்னேனா.... அப்பறம் ஏன் என்று குழம்பினான். கலகம் பிறந்தா நன்மை பிறக்கும்தானே என்று அவன் உள் மனது அவனை ஆட்டிப் படைத்தது.

நெஞ்சு நிறைய ஆசையை வைத்துக்கொண்டு அவளையும் எதிரிலேயே வைத்துக்கொண்டு கொடுமை அனுபவிக்கிறாயே வெற்றி, ஏண்டா இப்படி, அப்பா கேட்டாரே சொல்லி இருக்கலாம்தானே?’ என்று இடித்தது.
சொல்லி இருக்கலாம்தான் என்னவோ பாழாப்போன பயம். மாமவின் மீது இருக்கும் மரியாதை... பார்க்கலாம் என்று அடக்கினான்.
டீ, உங்கண்ணன் ஒண்ணுமே சாப்பிடாம மேலே போய் ஒக்காந்திருக்கான் எப்படியானும் பேசி சாப்பிட வை அவனை என்று தட்டில் போட்டுக் கொடுத்தாள்.

தட்டுடன் கூட கல்யாணியையும் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு மேலே சென்றாள் கௌரி.
அண்ணா ஏன் சாப்பிடாம வந்துட்டே.... என் மேல என்ன கோவம்.... அதை சாப்பாட்டின் மேலே ஏன் காண்பிக்கிற?” என்று மிரட்டி வாய் வாயாக ஊட்டிவிட்டாள்.
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டான்.... வயிறு நிறைந்ததும் தெம்பு வந்தது... கோபமும் தணிந்தது... ஆயினும் உர்ர் என்றே இருந்தான்.
என்ன யார்மேல இத்தனை கோபம்?” என்றாள்.

அவன் ஜாடையாகக் கல்யாணியை பார்க்க,
அவளை ஏன் முறைக்கிற.... அவள்தான் காரணம்னு நினைக்கறியா.... ஐயோ கடவுளே... அவளே பாவம்.... இதெல்லாம் நானும் அவரும் சேர்ந்து பண்ணது.... இப்போ உன்கிட்ட உண்மைய சொல்லீட்டேன் என்ன பண்ணப்போறே.... வேணும்னுதான் கிளப்பி விட்டிருக்கோம்... வெடிக்கட்டுமே நல்லதே நடக்கும்..... நீ மட்டும் கொஞ்ச தைர்யம் வை.... நாங்க மிச்சத்த பாத்துக்கறோம் என்றாள்.
அட இந்த சின்னகுட்டிக்கு என்ன தைர்யம் பாரேன்.... எனக்காக பார்த்து நேற்று வந்தவனோடு ஜோடி சேர்ந்து கொண்டு பெரிய வேலை எல்லாம் பார்க்குது என்று நினைத்தான்.
கல்யாணியையும் தன்மையாக பார்த்தான் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்றான்.
பின்னோடு அது இல்லாமையா, நீங்கதானே முன்னாடி கொட்டிப்பீங்க..” என்றான் கேலியாக.
ஆமா அதுக்கென்ன இப்போ உனக்கென்ன குறைஞ்சுபோச்சு?” என்றாள் கெத்தாக கௌரி.

கல்யாணத்துக்கு நாள் குறிக்கப் பட்டது. இன்னும் ஒரே மாதத்தில் நல்ல முகூர்த்தம் இருந்தது. அதை விட வேண்டாம் என்று அதையே முடிவு செய்தனர். வேக வேகமாக ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
விசாலம் கற்பகத்தை கூப்பிட்டு நடந்தவற்றை கூறினாள்.
என்ன அண்ணீ அதிசயமா இருக்கு.... நிஜமாவே அவருக்கு ஏதோ தெரியுமோ, இல்லைனா அப்படி ஏன் பேசி வைக்கிறாரூ மாப்பிள்ளை?” என்றாள்.

எனக்கு மட்டும் என்ன தெரியும் கற்பகம்.... ஜாடையா கௌரிகிட்ட கூட விசாரிச்சேன்... வாயே திறக்கல கழுதை.... கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம்..... அது போகட்டும் நான் ஒரே பதட்டமா  இருக்கேன்.... இன்னும் ஒரே மாதத்தில கல்யாணம்னு..... எல்லாத்தையும் மனசுல வெச்சுதான் சொல்றேன் கற்பகம்.... கல்யாணி இங்கேயே இருக்கட்டும் கல்யாணம் முடியும் வரைக்கும்..... நிச்சயமா நல்லது நடக்கும்னு படுது..... என்ன சொல்றே சரியா?” என்று கேட்டார்.
அதுக்கென்ன அதுக்குள்ள வந்து திரும்பி போய் எல்லாம் வேண்டாம்... அவ அங்கியே இருக்கட்டும்..... நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை அண்ணீ என்றாள் அவள்.

ஜவுளி எடுக்க நகைகள் பாலிஷ் போட என்று அலைந்தனர். ஊர் கூடி தேர் இழுத்து ஏற்பாடுகள் நல்லபடி நடந்தன.
ஒரு வாரம் இருக்கையில் கற்பகமும் மகேசனும் வந்து சேர்ந்தனர். அன்றே வேலுச்சாமியும் வந்து சேர்ந்தார்.
கந்தசாமி குமரனை அழைத்து மாப்பிள்ள, எங்க மச்சான், அதான் கல்யாணியின் தாய் தந்தையும் என் தம்பி உங்க வேலு மாமாவும் வந்திருக்காங்க.... உங்களால ஒரு எட்டு வர முடியுமான்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன் என்றார்.
அதுக்கென்ன மாமா, நானும் அவங்கள பார்க்க ஆவலாத்தான் இருக்கேன்..... கிளினிக் போகும் முன்னாடி வந்துட்டு போறேன் என்றான் குமரன்.
அதேபோல மாலை வந்தான். “வேலு மாமா, பார்த்து எத்தனை நாளாச்சு என்று அவரை கட்டிக்கொண்டான்.

நீ எங்க வீட்டுக்கே மாப்பிள்ளையா வரதுக்கு ரொம்ப சந்தோஷம் குமரா என்றார் அவர் ஆரத்தழுவிக்கொண்டு.
பின்னோடு மகேசனை அறிமுகம் செய்ய அவரை வணங்கி என்ன சித்தப்பா நல்லா இருக்கீங்களா, எப்போ வந்தீங்க?” என்றான் அன்பாக.
அவன் அப்படி கூப்பிடவும் மலைத்துவிட்டார் மகேசன்.
ஏன் சித்தப்பா, நான் கல்யாணிய என் தங்கையா வரிச்சுட்டேன்... அப்போ நீங்க எனக்கு சித்தப்பா முறைதானே ஆகணும்...” என்றான்.
ஆமா நிச்சியமா என்றார் அவர் மகிழ்ந்து போய்.
எனக்கும்தான் மகனில்லை.... உங்களையே மகனா அடைஞ்சுட்டேன் ரொம்ப சந்தோஷம் என்றார்.

அனைவரும் பேசிக்கொண்டிருக்க
,  என்னப்பா குமரா தோ கௌரிக்கு முடிவாகீடுச்சு... அதேபோல உன் தங்கைக்கும் ஒரு நல்ல இடமா பார்த்துச் சொல்லேன் என்றார் மகேசன்.
அதுகென்ன சித்தப்பா, தேடிக்கிட்டா போகணும்.... அதான் கைவசம் 

இருக்கே.... நல்ல அழகு, படிப்பு, அறிவு, திறமை, வசதி, 

பெரியவங்கன்னா அப்படி ஒரு மதிப்பு மரியாதை. அவங்க 

சொல்லீட்டாங்கன்னு ஒரே வார்த்தைக்காக உயிரையும் கொடுக்கத் 

தயங்கமாட்டாரு....” என்று அடுக்கிக்கொண்டே போக


மகேசன், “அது யாருப்பா அப்படி ஒரு உசந்த மாப்பிள்ளை?” என்று கேட்டார்.

ஏன் சித்தப்பா, உங்க கண்ணுக்கு நம்ம வெற்றியத் தெரியலையா..... 

என்னைவிட உங்களுக்குத்தானே அவரை நல்லா தெரியும்.... நான் 

சொல்றதெல்லாம் அவருக்கு பொருந்தும்தானே?” என்றான்

மகேசனால் மறுக்க முடியவில்லை. இங்கே ஏதோ ஒரு நாடகம் 

அரங்கேறுகிறது என்று கந்தசாமியும் வேலுவும் வெற்றியும் கூட 

வேடிக்கை பார்த்தனர். அந்நேரத்தில் கந்தசாமிக்கு சொந்தத்தில் இருந்து

 போன் வர மனமில்லாமல் எழுந்து சென்றார். கூடவே வேலுவையும் கூப்பிட்டார் பேசவென

அப்போது அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு குமரன் 

சித்தப்பா, சின்ன வயசுல குழந்தை கல்யாணிய கைய்யில தூக்கி

 வெச்சிருக்கறப்போ பெரியவங்க கல்யாணம் கட்டிக்க போறியான்னு 

கேலி பேசினாங்க.... அப்போ நீங்க அதட்டிணீங்கஎன்ன இது பத்து 

வயசு வித்தியாசம் இருக்கு என்னத்துக்கு உறவு வெச்சு பேசறீங்க 

எனக்கு பிடிக்கலைன்னு...” என்று நிறுத்தினான்

ஆமா ஞாபகம் இருக்கு குமரா...” என்றார்.



No comments:

Post a Comment