Wednesday 24 April 2019

ULLAM RENDUM ONDRU - 11


வெற்றிக்கு ஆத்திரமானது. உடம்பு முறுக்கேறி கண்கள் கோவத்தில் சிவக்க
என்ன தைர்யம், நான் பரிசம் போட்டப் பொண்ண அவன் கண் எடுத்து பார்க்கறதே தப்பு.... இதில இவனுக்கு, இந்த பொறுக்கி நாய்க்கு கட்டிவேற குடுக்கணுமாமா.. கொல்லாம விடறதில்லை அவன..... நான் உடனே புறப்பட்டு அங்கே வரேன், நீ தைர்யமா இரு நித்து என்றான்.
ஐயோ வேண்டாம் அத்தான்..... அவன் முரடன் ஏதானும் செய்துடுவான்.... அப்பா பேசிகிட்டிருக்கார்.... உங்ககிட்ட சொன்னா ஆறுதலா இருக்கும்னுதான் கூப்பிட்டேன்..... வேணும்னா அப்பறம் பார்த்துக்கலாம் அத்தான்என்றாள் கல்யாணி.

எப்பறமா... அவன் உன்னைக் கட்டிகிட்ட பிறகா?” என்றான் கோபமாக.....  இதெல்லாம் தெரிஞ்சபிறகும் என்னால எப்பிடிடி இங்க நிம்மதியா உக்கார முடியும்.... இல்ல நான் வரேன் நீ பேசாம இரு..... எதேர்சையா வராப்போல வரேன் போதுமா என்றான்.
அவன் தனக்காக ஓடி வருகிறான் என்று நிம்மதி சந்தோஷம் கல்யாணிக்கு.
வெற்றி உடனே தன் பெற்றோரிடம் விஷயத்தைக்  கூறிவிட்டு அவர்களை பதறாமல் இருக்கச் சொல்லிவிட்டு இரவோடு இரவாக ரயில் பிடித்து விடிகாலை தஞ்சை வந்து சேர்ந்துவிட்டான். அங்கிருந்து வண்டி பிடித்து கல்யாணி வீட்டை அடைந்தான்.

என்ன மாப்பிள்ள திடீர்னு !” என்று அதிசயமாக பார்த்தனர் இருவரும்.
இல்ல, இந்த ஊர்ல ஒரு வேல அதான் இங்க வந்து உங்களையும் பார்த்துட்டு என் வேலையையும் முடிச்சுட்டு போகலாம்னு...” என்று மென்று முழுங்கினான்.
கற்பகம், மாப்பிளை நம்ம வீட்டுக்கு முதன் முதலா வந்திருக்காரு பாரு.... போ போ ஓடு, காப்பிய போட்டு எடுத்துவா..... பலகாரம் செய்யச் சொல்லு என்று பரபரத்தார். குளித்து சிற்றுண்டி சாப்பிட்டு எல்லாமும் ஆனபின்
என்ன மாமா என்ன விஷயம்?” என்றான்.
அவன் என்ன கேட்கிறான் இவனுக்கு விஷயம் தெரிந்தா வந்திருக்கிறான்..... கல்யாணி அதற்குள் அவனிடம் கூறிவிட்டாளா?” என்று தயங்கினார் மகேசன்.
இல்ல, வந்து... அதான்,. கற்பகத்தொட தம்பி நேத்து வந்து ஒரே ரகள அதான் என்ன செய்யறதுன்னு...” என்று மென்று முழுங்கினார்.

அது சரி..... அதேல்லாம் கல்யாணி சொன்னா.... அப்பறம் என்னாச்சு?” என்று கேட்டான்.
என்ன ஆகறது, கட்டி குடுக்கலைனா அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்னு பயமுறுத்தீட்டு போயிருக்கான், என்ன செய்யறதுன்னு தெரியல..... நீங்க வந்ததும் நல்லதாத்தான் போச்சு.... அவள கட்டிக்கப் போறவரு.... நீங்க இருந்தா மேற்கொண்டு என்ன செய்யலாம்னு யோசிக்க தோதா இருக்கும் என்றார். அவன் வந்துவிட்டான் என்பதே பெரிய தைர்யம் போல.
வெற்றி சரி பார்க்கலாம், யோசிப்போம்.... நீங்க கவலைப்படாதீங்க என்று தேற்றிவிட்டு மேலே எழுந்து சென்றான்.

அவன் வந்துவிட்டான் என்று அறிந்து ரொம்பவே தைர்யமானாள் கல்யாணி
. ஆனால் அவன் முன் வர வெட்கப்பட்டு உள்ளே இருந்தபடி அம்மாவின் மூலம் எல்லாம் சமைத்து பரிமாற வைத்துக்கொண்டு இருந்தாள்.
வெற்றியோ அவளை நேரில் காணாமல் தவித்து போனான். மகேசனுடன் பேசும்போதும் அவன் கண்கள் அவளையே தேடியது.

என்னடி நீ, மாப்பிள்ளை வந்திருக்கார்..... அப்போலேர்ந்து உன்னையவே தேடிக்கிட்டு இருக்காரு.... நீ என்னடான்னா இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டு..... போடி, அத்தான் கிட்ட என்ன வெட்கம்..... வாங்க எப்படி இருக்கீங்கனு ரெண்டு வார்த்தை பேசீட்டு வா என்று அவள் கையில் கொஞ்சம் இனிப்பை திணித்து மேலே அனுப்பினாள் கற்பகம்.

நாணம் மேலிட மெல்ல மேலே வந்தாள்
. அவள் வருவதை அவள் கொலுசொலி மூலம் அறிந்தவன் அம்பிட்டுகிட்டையா என்று அவளை பின்னிருந்து கப்பென்று பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டான்.
ஐயோ அத்தான், என்ன இது, அப்பாம்மா வந்துடுவாங்க..... விடுங்களேன்..... இதுக்குதான் நான் உங்க முன்னாடி வரவே பயந்தேன்என்றாள்
ஓஹோ அப்படியா, இப்போ ஏன் வந்தியாம்?” என்றான் முறைப்பாக.
அம்மாதான் போய் அத்தானோட பேசீட்டு வான்னு அனுப்பிச்சாங்கஎன்றாள் தயங்கியபடி.
 
அப்போ நீயா வரலை.... அவ்ளோதான் என்மேல அன்பு என்றான்.
ஐயோ, என்ன அத்தான்... உங்க மேல அன்பு வைக்காமையா நம்பிக்கை இல்லாமையா உங்கள அவசரமா கூப்பிட்டேன் என்றாள் கண்ணில் நீர் தளும்ப.

என்னவோ... யாருக்கு தெரியும்... அதான் மாமன்காரன் வந்திருக்கானே, பரிசம் போட்டு கட்டிக்குவானோ என்னமோ என்றான்.
அவன் அதை கேலியாகத்தான் கூறினான். ஆனால் அதைக்கேட்ட கல்யாணியின் பார்வை அடிபட்ட புறாவைப் போல இருந்தது.
என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்டீங்க அத்தான் என்றாள் மெல்ல.
ஹேய் நித்து, நீ கண்ணுல படவே இல்லைங்கற கோவத்துல எதோ தமாஷுக்கு சொல்லீட்டேன்டீ..... சாரி மன்னிச்க்சுக என் செல்லமில்ல என்று நெருங்கி வந்து அவளை அணைக்க முயல.
ஒண்ணும் வேண்டாம்.... மனசுல இல்லாமலா வாயில வரும் என்று விலகிப்போனாள். அவன் வெறுத்துவிட்டான். “மன்னிப்பு கேட்டுகிட்டேனேடி, இன்னும் வேற என்ன செய்யட்டும் தோப்புக்கரணம் போடட்டுமா, எண்ணிக்கோ என்றான்.

அவனுக்கும் உள்ளுக்குள்ளே
அவளை அப்படி பேசி இருக்கக்கூடாது.... அவளை பற்றி நன்கு அறிந்தும் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்று புழுங்கியது.
அவன் கரணம் போட முயல அதற்குமேல் தாளாமல் கல்யாணி ஒண்ணும் வேண்டாம் அத்தான்.... பேசாம இருங்க என்றாள்.
அப்போ நீ பக்கத்தில வா என்றான்.
மாட்டேன் என்றால்.
அப்போசரி என்று கரணம் ஆரம்பிக்க
ஐயோ என்று சிணுங்கியபடி கொஞ்சம் அருகே வந்தாள்.

அவளை சட்டென்று இழுத்து இறுக்கி அணைத்து கட்டிக்கொண்டான்
.
நான் உயிரோட இருக்கும்போது வேறு எவன் கண்ணானும் உன் மேல பட்டுடுமாடி..... அவனை ஒரு கை பாத்துக்கறேன் என்றான் மேலும் இறுக்கியபடி. கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய,
அத்தான் மீசை பட்டு கூசுது விடுங்களேன் என்று கெஞ்சினாள்.
அப்படியா, ஒத்தடம் குடுத்துடுவோம் என்று மேலும் இழைந்து முத்தம் பதித்தான். அவள் நாணி சிவந்தாள்.

அப்படியே அமர
, அவனிடம், “என்ன செய்யப் போறீங்க அத்தான்.... எனக்கு பயமா இருக்கு..... அவன் முரடன்.... குடிகாரன்..... அந்த மயக்கத்துல அவன் என்னவேணா செய்வான் அத்தான்..... உங்கள ஏதானும் பண்ணீடுவானொன்னு எனக்கு கலக்கமா இருக்கு என்றாள்.
ம்ம் உண்மைதான், குடிகாரன்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாதான் நடந்துக்கணும்.... இரு பார்க்கலாம்..... எனக்கு தெரிஞ்சவங்க இங்கே சில பேர் இருக்காங்க.... அவங்க மூலமா ஏதானும் செய்ய முடியுதான்னு பார்க்கலாம் என்றான்.
நீ கவலைப் படாதே என்றான்.

வெற்றி பின்னோடு வெளியே சென்று சிலரை பார்த்து பேசிவிட்டு வந்தான். அதன்பின் இருவர் அந்தத் தெருவில் நடமாடக் கண்டனர்.
யாரு அத்தான் அது, யாரோ ரெண்டு பேர் இந்த வீட்டையே பார்த்தபடி நடமாடுறாங்க.... பயமா இருக்கு என்றாள் மேல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்த கல்யாணி.
ஒண்ணுமில்லையே, என்னமோ யாரோ என்றான் மழுப்பலாக.

அன்று மாலை மறுபடியும் வேலு முட்ட குடித்துவிட்டு வந்து அதேபோல பேச ஆரம்பிக்க வெற்றி இப்போது அவனை எதிர்கொண்டான்
.
என்ன முடிவு பண்ணி இருக்கீங்க மாமா?” என்றான் சத்தமாக. அவனை உள்ளே இழுத்து வந்தனர்.
இதப்பாரு நான் கல்யாணிய பண்ணிக்கப் போறவன்.... உனக்கு அவள பண்ணி குடுக்க முடியாது.... நீ இந்த எண்ணத்தைவிட்டுடு.... இதற்மேலும் பிரச்சினை பண்ணினா உன்னை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்றான் வெற்றி அவனை மிரட்டியபடி.
அட தோ பாருடா,  நீ கட்டலாம் நான் கட்டக்கூடாதா.... ஏன்... ஏன்னு கேட்கிறேன்?” என்றான் கெத்தாக.
டேய் நிறுத்து, போதும், பேசாம உடம்ப காப்பாத்திகிட்டு வெளியே போயிடு என்றான் வெற்றி.
என்ன பயமுறுத்திறியா.... எங்க, மேல கை வை பார்க்கலாம் கீசுடுவேன் என்றான். நாராசமாக கத்திக்கொண்டு வெற்றி மேலே பாய்ந்தான்.
ஐயோ என்று கத்தினாள் கல்யாணி.

உடல் பயிற்சியால் உரமேறிய வெற்றி, குடித்து கெட்டுபோய் உளுத்துப் போன உடம்புடன் மோதிய வேலனை ஒற்றைக் கையால் தள்ளினான்
. அதுக்கே அவன் மூலையில் போய் சுருண்டு விழுந்தான். மேலும் எழுந்து முன்னே வந்து தாக்க. அவனை லாவகமாகத் தடுத்தான் வெற்றி. அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவன் ஐயோ குய்யோ என்று மூலையில் போய் விழுந்தான். அதன்பின் எழுந்திருக்க முடியவில்லை.

வெற்றியைக் கண்டதுமே அவன் படைகள் அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவனின் ஆளுமைகண்டு பயந்துவிட்டான் வேலன். தன் தோஸ்துகளும் ஓடி இருக்க அவனுக்கு பயம் வந்தது.
வேண்டாம் வெற்றி என்றான் மிரட்டலாக, “என்னைப்பத்தி உனக்கு தெரியாது என்றான்.
தோ பாரு வேலா, உன்மேல எனக்கு ஒண்ணும் காழ்ப்பு இல்லை.... ஆனா நீ இப்போ நடந்துகிட்டதுக்கு என் அத்தை முகத்திற்காகத்தான் நான் பேசாம இருக்கேன்.... உங்கக்கா உனக்காக எவ்வளவு கவலைப்படுறாங்கன்னு உனக்குத் தெரியாது.....

இந்த வம்ப விட்டுடு
.... இந்த கெட்ட பழக்கத்தையும் விட்டுடு... நல்லவனா நீ மாறி வாழ்ந்தா மாமாகிட்ட சொல்லி உனக்கு ஏதானும் வியாபாரம் செய்து பிழைக்க வழி செய்து கொடுக்கிறேன்.... நீ திருந்தீட்டதா தெரிஞ்சா நானே நல்லபெண்ணாப் பார்த்து உனக்குக் கட்டி வைக்க ஏற்பாடு செய்யறேன்.... என் கல்யாணிய நீ மனசாலும் அடைய முடியாது. நினைக்கவும் கூடாது.... வேறு ஏதானும் பேசு, இல்லை மாமியார் வீட்டுக்குப் போய் அங்கேயே பல வருஷங்கள் களி திங்கலாம்... எப்படி வசதி என்றான்.

என்ன என்ன சொல்றே நீ...?” என்று மிரண்டான்.
ஆமா, பின்ன, அதோ அங்க நிக்கறாங்களே யாருன்னு நினைச்சே.... என் ஒரு கண்ணசைவுல வந்து உன்னை அள்ளிக்கிட்டுப் போக ரெடியா இருக்காங்க, கூப்பிடவா?” என்றான்.
அவர்களின் கட்டு உடலும் கருப்பு ஷூவும் ஒட்டி வெட்டியா கிராப்பும் அவர்கள் யாரென்று வேலனுக்கு புரிய வைத்தது. “வேண்டாம்.... நான் இனிமே கல்யாணியப் பத்தி பேசிக்கிட்டு இங்க வரலை என்று குழறியபடி தள்ளாடி நடந்து போய் விட்டான். கற்பகம் தொய்ந்து அமர்ந்து அழுதாள்.

அத்தை, என்ன இது..... நானாச்சு வேலனை நல்லவனா மாற்றி காட்டறேன்... பேசாம இருங்க அழாதீங்க என்று தேற்றினான்.
வாசலில் மப்டியில் இருந்த போலீசிடம் பேசி நன்றி கூறி இன்னும் சில நாட்களுக்கு அவர்கள் அப்படி அங்கு உலாவுவது அவசியம் என்று வேண்டிக்கொண்டான். இதை எல்லாம் அதிசயமாக பார்த்தனர் வீட்டில் எல்லோரும்.

அன்று இரவே கிளம்ப வேண்டும் என்று வெற்றி கூற கல்யாணியின் முகம் வாடிவிட்டது.
தனிமையில் என்னடி, நீ கூப்பிட்டதும் போட்டது போட்டபடி ஓடி வந்துட்டேன், அங்கே வேலை இருக்கும்மா.... அதான் சீக்கிரமே தாலி கட்டிடுவேனே அதுக்கு அப்பறமா நீ விலகி போனு சொன்னாலும் போக மாட்டேன் போக விடமாட்டேனேடீ என்று கொஞ்சி சரிசெய்தான்.
அவளும் சிரித்த முகமாக அனுப்பி வைத்தாள். மகேசன் ரொம்பவே நன்றி கூறினார்.
விடுங்க மாமா, அவ என் பெண்டாட்டி, நான் விட்டுடுவேனா என்றுவிட்டு கிளம்பினான்.
அதன் பின் சில நாட்கள் அங்கே வேவு பார்க்க வந்தபோதும் மப்டியில் போலிஸ் சுற்றுவதை கண்டு பயந்து ஒதுங்கிவிட்டான் வேலன்.

நல்லபடியாக குறித்த முகூர்த்த நாளில் வெற்றி கல்யாணியின் கழுத்தில் தாலி கட்டினான். கௌரியும் குமாரனுமே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டனர். சந்தோஷமாக இவர்களை வாரியபடி செய்தனர்.
என்ன வெற்றி மச்சான், ஒரே ஹீரோ போல வரிஞ்சுகட்டிகிட்டு போயிட்டீங்களாமா, நிசமாவா?” என்றான் குமரன். “அடபோப்பா அங்கிருந்து அழுதுகிட்டு அத்தான்னு போன் பண்ணா உன் தங்கை.... என்ன செய்யறது போக வேண்டியதாப்போச்சு என்றான் ஏதோ போனா போகுதுன்னு செய்தார்ப்போல. ஓஹோ ஓஹோ என்று கிண்டல் செய்தனர்.
மனசுப்படி தன் அத்தானின் கையால் தாலி வாங்கிக்கொண்ட கல்யாணி இவை அனைத்து கேலிகளையும் கிண்டல்களையும் சாமாளித்தபடி மெளனமாக நாணி சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அரக்கு நிற கூரை புடவையில் தங்கமென ஒளிர்ந்தாள். இத்தனை கேலி கிண்டலிலும் வெற்றியின் பார்வை அவளை கண்ணால் தொட்டு மீண்டது அடிக்கொரு முறை.

அன்றிரவு முதல் இரவு ஏற்பாடுகள் செய்தனர் குமரனும் கௌரியும்
.
கல்யாணியை அலங்கரித்து கொண்டுபோய் விட்டாள்.
என்ன அண்ணி இது, எங்க அண்ணன் என்ன புலியா சிங்கமா.... இல்ல நீதான் அவர அறியாதவளா, என்ன உன் கை இப்படி சில்லிட்டு போயிருக்கு?” என்று கேலி செய்தாள்.
போ அண்ணி என்றாள் கல்யாணி ரோஜாவாக சிவந்து.
உள்ளே பஞ்சணையில் இவளையே எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான் வெற்றி. வந்தவளை அணைத்து கூட்டி வந்து அருகில் அமரச்செய்தான்.
ஆனாலும் சும்மா சொல்லக்கூடாதுடீ, நினைச்சவனையே அடைஞ்சுட்டியே என் தங்கம்.... ஆமா ஒண்ணு கேட்கணும்.... அப்படி என்னடி பிடிச்சிருக்கு என்கிட்டே..... என்னைப்போய் ஏண்டீ உயிரா விரும்பறவோ? என்றான் கொஞ்சலாக.

அவள் பதிலே பேசாமல் தரை பார்த்து குனிந்து சிவந்தாள்
. “சொல்லுடீன்னா என்றான் மேலும்.
இப்படி கேட்டா என்ன சொல்ல..... எத்தனையோ பிடிச்சிருக்கு என்றாள்.
அட அப்படியா! எங்க ஒண்ணு ரெண்டு சொல்லு கேப்போம் என்றான்.
போங்கத்தான் என்றாள்.
சொல்லுடி, என் கண்ணில்ல என்றான் அவள் மருதாணி விரல்களை முகர்ந்தபடி.
உங்க அழகு பிடிக்கும், உங்க அறிவு பிடிக்கும்.... உங்களுக்கு கோவமே வராது.... சின்ன வயசுல கூட நான் ஏதானும் குறும்பு பண்ணினாக்கூட நீங்க என்னைத் திட்டினது இல்லை.... சிரிச்சுகிட்டு போய்டுவீங்க... அப்போவே என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு என்றால்.
இத்தனை வயசுக்கு என் அழகைப் பிடிச்சிருக்குங்கிறியேடீ. உனக்கேத்தவனா இள வயசுல யாரானும் சினிமா ஹீரோ மாதிரி எவனையானும் கட்டி இருக்கலாமே என்றான் வேண்டும் என்றே அவளை கலாய்த்தபடி.
எங்கண்ணுக்கு நீங்கதான் ஹீரோ.... உங்களைவிடவா வேறு ஒரு உறவு அத்தான் என்றால் அவனை நிமிர்ந்து அவன் கண்களை ஆழ பார்த்தபடி.
கண்ணம்மா என்று ஆரத்தழுவிக்கொண்டான்.
அதிகாலையில் முழிப்பு வர எழுந்துகொண்டாள் கல்யாணி. அவளை நகரவும் விடாது பிடித்து இழுத்து தன்னுள் வளைத்துக்கட்டிக்கொண்டான் வெற்றி.
என்ன அத்தான், பொழுது விடிஞ்சுடுச்சு விடுங்களேன் என்றால் சிவந்தபடி.
சூ பேசாம படுடி, இன்னும் நிறைய வேலை இருக்கு என்று அவளை விடாது தான் நினைத்ததை பெற்றான்.

சில நாட்களில் புதிய மருத்துவமனை கட்டிமுடித்து திறப்புவிழா 

ஏற்பாடுகள் நடந்தன. கல்யாணியும் வெற்றியும் முழு மூச்சாக உதவி 

செய்தனர். அதனால் குமரனுக்கு சந்தோஷம் மட்டும் அல்லாமல் 

மிகுந்த இலகுவாகியது. அவன் பெரிய மனிதர்களை அமைச்சர்கள் 

என்று நேரில் சென்று பார்த்து அழைத்து என்று பார்க்க முடிந்தது

கௌரி கடைசி நிமிட கட்டுமான வேலைகள் பூச்சுகள், அலங்கரிப்புகள்

என்று பார்த்துக்கொண்டாள். ஒரு பக்கம் தோட்டம் ரெடி ஆனது

சாப்பாடு பானர் கட்டுவது அழைப்புகள் அனுப்புவது என்று மும்மரமாக வேலை நடந்தது.

அந்த சுப தினத்தில் நல்லபடியாக அமைச்சர் வந்திருந்து திறப்புவிழா 

செய்து வாழ்த்திவிட்டு சென்றார். அவர் அப்புறம் சென்றதும் ஏழை 

எளிய மக்களுக்கு இலவசமாக சாப்பாடும் போட்டு இலவசமாக 

மருத்துவ உதவி கிடைக்கும் கண்டிப்பாக வந்து மருத்துவம் 

பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதில் அங்கிருந்த 

மக்களுக்கு ஒரே சந்தோஷம். ஊர் பெரியோர்களுக்கும் நன்றி கூறினான் குமரன்.   தொடரும்


No comments:

Post a Comment