Saturday 20 April 2019

ULLAM RENDUM ONDRU - 7


அவன் என்ன குலமோ... வீட்டில் என்ன சொல்வார்களோ.... அவன் நல்லவந்தான்..... எனக்கும் மனசுக்கு பிடிச்சுதான் இருக்கு...
இன்று மாலை அவன் பேசியதிலிருந்து மனசுக்குள்ள ஏதோ ஒரு துள்ளல் தோணுது, பட்டாம்பூச்சிகள் பறக்குதே..... இதெல்லாம் தான் காதலா!’ என்று எண்ணினாள். முதன்முறையாக முகம் சிவப்பதை உணர்ந்தாள். ‘இனி அங்கே சென்று அவன் முன் இயல்பாக அமர்ந்து கவனமாக வேலை செய்ய முடியுமா?’ என்று எண்ணினாள்

யாரிடம் கேட்பது.... இது சரியா தவறா என்று எனக் குழம்பினாள்.
பின் கல்யாணிக்கு போன் செய்யலாம்.... பேசினால் தீர்வு வருமோ என்னமோ..... அவள் என்னைவிடவும் இதில் அனுபவம் வாய்ந்தவள்..... என்னை ஒரு நாளிலேயே இந்த காதல் இப்படி படுத்துதே, தூக்கம் வரமாட்டேங்குதே..... அவள் பாவம் எப்படி துடித்திருப்பாள்..... அண்ணாவும்தான் எப்படி தவித்திருக்கிறான்..... எனக்கும் அதேபோன்ற நிலை வந்துவிடுமோ..... குமரனை வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நானும் அப்படி தவிப்பேனோ..... இது தேவையா..... ஆனால் அவன் இவ்வளவு அன்போடு காத்திருக்கிறானே..... ஒரு வருடமாகக் காதலிக்கிறானாமே!!’ என்று மேலும் சிவந்தாள்.

அடுத்த நாள் காலை கல்யாணிக்கு போன் செய்தாள். அப்பாவும் அண்ணனும் வயர்காட்டிற்குச் சென்றிருக்க அம்மா சமையல் என உள்ளே பிசியாக இருக்க அந்த நேரத்தில் மாடியில் அண்ணாவின் அறையிலிருக்கும் போனில் இருந்து கூப்பிட்டு பேசிக்கொண்டிருந்தாள்.
அவளே எடுக்க கல்யாணி நான் ஒன்னோட தனிச்சு ஒரு விஷயம் பேசணும்..... உன்னால இப்போ அப்படி பேச முடியுமா?” என்று கேட்டுக்கொண்டாள்.
பேசலாமே சொல்லு கௌரி என்றாள் கல்யாணி.
இல்ல... வந்து.... நம்ம டாக்டர்கிட்ட நான் வேலைக்கு போறேன் இல்ல கொஞ்ச நாளா...” என்று ஆரம்பித்து முந்தின மாலை அவன் அவளிடம் பேசிய அனைத்தையும் கூறினாள்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கல்யாணி, “நான் இதை எதிர்பார்த்தேன் கௌரி..... உனக்கு இன்னைக்குத்தான் தெரியும்..... எனக்கு அவர் அத்தையை பார்க்க வந்த முத நாளே தெரியும்..... அவர் கண்ணு வீடு முழுக்க அலைபாய்ஞ்சுது..... அது உன்னைத்தேடித்தான்னு எனக்கு அன்னிக்கே தோணிச்சு.... நான் அத்தான்கிட்டக் கூடச் சொன்னேன் என

ஐயோ என்ன கல்யாணி இது.... என்கிட்டே சொல்லி இருக்கலாமே.... அண்ணன் கிட்ட போய் ஏன்?” என்று பதறினாள்.
கவலைப்படாதே..... எல்லாம் நல்லதாகவே நடக்கும்..... மறுமுறை அத்தைக்கு குணமானபின் வந்தபோது அவர் உன்னோட பேசினபோதும் எனக்கு நிச்சியமாவே புரிஞ்சுபோச்சு.... அதையும் உங்க அண்ணன்கிட்ட சொல்லீட்டேன்.... இனி நீதான் தைர்யமா யோசிக்கணும்..... அவர பிடிச்சிருக்குன்னு உன் மனசு சொல்லிச்சுன்னா உங்க அண்ணன்கிட்ட முதல்ல பேசு.... நான் பேசணும்னா அது இங்கேர்ந்து என்னால முடியாது உனக்கே தெரியும்.... அதுனால நீயே பேசு.... பயப்படாதே கௌரி.... குமரன் ரொம்ப நல்லவர்.... இப்போ அவர் பேசியத நீ சொன்னப்போ இன்னமும் நல்ல எண்ணம்தான் கூடுது.... யோசிச்சு முடிவு பண்ணு..... என்னைக்கேட்டா நல்ல இடம், உன்னை ரொம்ப நல்லா வெச்சுக்குவாருன்னு தான் சொல்லுவேன் என்றாள் கல்யாணி.

சரி என்று கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கே அவள் வரவை ஆயிரம் கண்ணோடு எதிர்பார்த்தவன்போல காத்திருந்தான் குமரன்.
எப்போதும் போல இயல்பாக இருக்க முயன்று அவனை வணங்கிவிட்டு தன்னிடத்தில் அமர்ந்து வேலையை துவங்கினாள். அவளை சிறிது நேரம் பார்த்திருந்தவன், தன் வேலையில் கவனமாகிவிட்டான்.

எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும்..... சீக்கிரமா என் முடிவ சொல்லீடுறேன் என்று அவனிடம் மெல்ல கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள். சரி என்று தலை ஆசைத்தான் குமரன்.

அந்த வாரம் முழுவதும் தீவிரமாக ஆலோசித்தாள். பின் அன்றிரவு வெற்றி வந்ததும் அவனை எப்போதும்போல மொட்டைமாடிக்கு கூப்பிட்டுச் சென்றாள்.
என்னமா?” என்றான் ஆதுரமாக.
அண்ணா..” என்றாள் அவன் கையை பிடித்துக்கொண்டு. பின் குமரன் பேசியதையும் தான் யோசித்ததையும் கல்யாணியோடு பேசியதையும் அவனிடம் மெல்லிய குரலில் கூறிமுடித்தாள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவன்,
குமரனுக்கு நீ என்ன பதில் சொன்னே?” என்றான்.
இன்னும் ஒன்றும் சொல்லலை அண்ணா.... நான் யோசிக்கணும்னு சொல்லி வந்துட்டேன் என்றாள்.
சரி உன் மனசுக்கு அவனை பிடிச்சிருக்கா?” என்றான்.
உடனே தலை கவிழ்ந்தாள் முகம் சிவக்க.
இது வரை அப்படி நான் யோசிக்கலை அண்ணா.... ஆனால் அவர் பேசினபிறகு யோசிக்கும்போது பிடிச்சிருக்குபோல தான் தோணுது என்றாள் மேலும் சிவந்தபடி.

வெற்றிக்கு அதைக்கண்டு உடனே கல்யாணி இப்படிதானே சிவப்பாள். காதல்தான் எத்தனை அழகான உணர்வு என்று பெருமூச்செரிந்தான்.
சரி இப்போ நான் என்ன செய்யணும்?” என்றான்.
அண்ணா என்றாள் பயத்தோடு.
இல்லைடா, நீ உன் மனசை தெளிவா சொன்னா நான் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிப்பேன்.... பெரியவங்க கிட்ட பேசணும்.... அவங்க என்ன சொல்லுவாங்களோ..... குமரன் என்ன ஜாதி குலம்னு கேப்பாங்களே.... நான் குமரன சந்திச்சு பேசிட்டுதான் இவங்ககிட்ட பேசணும்.... அதான், நீ சொல்லு என்றான்.
எனக்கு பிடிச்சிருக்குண்ணா என்றாள்.
சரி நான் நாளைக்கு குமரனைப் பார்த்து பேசறேன் என்றான் வெற்றி.
தாங்க்ஸ் அண்ணா என்றாள்.
எல்லாம் நல்லபடி நடக்கட்டும் அதன்பின் தாங்க்ஸ் சொல்லுடி செல்லம் என்றான்.

நான் அனுபவிக்கிற வேதனை உனக்கு ஏற்படாம இருக்கட்டும் என்றான்.
“அண்ணா நீ இன்னமும் மனசு மாறலையா அண்ணா?” என்றாள் மெல்ல.
நான் மாத்திக்க இதுல என்னடா இருக்கு?” என்றான் வெறுமையாக.
மாமாவோட பேசி...”
வேண்டாம்.... அதவிடுடா.... முதல்ல உனக்கும் குமரனுக்கும் பெரியவங்க ஒப்புதலோட கல்யாணம் நல்லபடி நடக்கட்டும் என்றான் அவள் தலையை கோதி.
ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது  உங்க அண்ணீ அன்னிக்கே சொல்லீட்டா, என்னமோ இருக்கு ன்னு என்றான் முனகலாக.
என்ன யாரு என்ன சொன்னங்க?” என்று கேட்டாள் கௌரி.
இல்லை கல்யாணி சொன்னாளே குமரன் பார்வை உன்னைத் தேடுதுன்னு என்றான்.
அதில்லை அண்ணா, என்னமோ அண்ணீன்னு...” என்றாள் சந்தேகமாக
இல்லையே கல்யாணின்னு தான் சொன்னேன்... உனக்கு காதுல ஏதோ கோளாறு என்று சமாளித்தான்.
என் காதுல இல்லை அண்ணா.... உன் மனசுலதான் கோளாறு என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள் கௌரி.

அடுத்த நாள் அவள் எப்போதும்போல வேலைக்குச் சென்றாள். முந்தைய தினங்களைப் போல இன்றும் குமரன் அவள் பதில் கூறுவாளா என்று ஆவலுடன் அவள் முகம் பார்த்தபடி இருந்தான். ஆயினும் வாய் திறந்து ஒன்றும் கேட்கவில்லை.

எனக்கும் உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு குமரன்.... உங்களத் திருமணம் செய்துக்க எனக்கு பரிபூரண சம்மதம்.... ஆனா பெரியவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியாது. மேற்கொண்டு என்ன எப்பிடீன்னு அண்ணன் வந்து உங்களோட பேசுவாரு, என்ன பேசுவாரு எப்படின்னு எனக்கும் தெரியாது..... இது இப்படின்னு விஷயத்த அவர் காதுல போட்டிருக்கேன்என்றாள்.
அவன் மகிழ்ந்து போனான். உணர்ச்சிவசப்பட்டு அவள் கைகளை பிடித்து தன் மார்பில் வைத்துக்கொண்டான்.
ஓ தாங்க யு கௌரி, தாங்க்ஸ் அ லாட் என்று அகமகிழ்ந்து போனான்.
அவன் கைகளை பிடித்ததும் கௌரிக்கு ஒரே படபடப்பாகப் போனது. கண்கள் இமைகள் படபடவென கொட்டிக்கொண்டது. அதைக்கண்டு அவன் கிளர்ந்தான். அவள் முகத்தையே கண்டபடி இருக்க, அவள் சிவந்து தலை குனிந்தாள்.
பிடித்த கைகளை விடாமல் தன் உதட்டிற்கு எடுத்துச் சென்று மெதுவாக முத்தமிட்டான்.
அவள் மேலும் சிவந்துபோய் தன் கைகளை விடுவித்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

அன்று மாலை அவன் தன் பழைய க்ளினிக்கிலிருந்து புதியதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வெற்றி அவனை எதிர்கொண்டான்.
என்ன குமரன் எங்க இப்படி?’ என்று பேச்சை ஆரம்பித்தான்.
அவனைக் கண்டதும் குமரனுக்கு உள்ளூர கொஞ்சம் உதறல்தான். ‘கௌரி இவனிடம்  கூறிவிட்டாள்... இவனப் பார்த்தால் முரடாக தெரிகிறானே ஒருவேளை அடித்துவிடுவானோ என்று பயம்.
இல்ல புதுசா கட்டிகிட்டிருக்கற மருத்துவமனையப் பார்த்து வரலாம்னு கிளம்பினேன்.... நீங்க எங்க சார் என்றான்.

சரி வாங்க என்று இருவரும் அவரவரது பைக்கில் சென்றனர். இவன் தன்னோடு எதற்கு என்று குழம்பியபடி அங்கே வந்து சேர்ந்தனர். அங்கே வேலை சுறுசுறுப்பாக நடப்பதைக் கண்டுவிட்டு வெளியே வந்தனர். மரத்தடியில் சில நாற்காலிகள் எப்போதும் இருக்கும். அங்கே அமர்ந்தனர்.
சொல்லுங்க சார்என்றான் குமரன் அவனே.
குமரன் எல்லாம் கேள்விபட்டேன்..... கௌரி சொன்னா என்றான் அமைதியான முகத்துடன்.
என்றான் கொஞ்சம் படபடபானது. அவளுக்கு விருப்பம் என்றாலும் இவர்களுக்கு இஷ்டம் இல்லையோ என்று கலக்கம். அந்த இரு நிமிடங்கள் மௌனத்தில் மனம் எதை எதையோ நினைத்து பயந்தது.
அவளுக்கு உங்கள பிடிச்சிருக்குனு சொன்னா என்றான் அவன் முகம் பார்த்தபடி வெற்றி.
அவன் ஆம் சொன்னாள் என்பதுபோல மலர்ந்து மௌனமானான்.
எனக்கு உங்களப்பத்தி கொஞ்சம் தெரியும்தான்..... பார்த்தா நல்லவங்களாத்தான் தெரியறீங்க..... ஆனாலும் உங்க பெற்றோரைப் பற்றி குடும்ப நிலவரம் பற்றி குலம் கோத்திரம் எல்லாமும் தெரிஞ்சாத்தானே நான் எங்கப்பா அம்மா கிட்ட பேச முடியும். ... “என்றான்.

நியாயம்தானே என்றான் குமரனும். “ரொம்ப சந்தோஷம் சார்....” என்றான்.
சார் எல்லாம் வேண்டாம் வெற்றின்னே கூப்பிடுங்க குமரன் என்றான்
நீங்க என்கிட்டே நேரடியா வந்து பேசறத நான் பெருமையா நினைக்கிறன்.... உங்களப் போன்ற மிராசு குடும்பம் எல்லாம் கிடையாது..... எங்கப்பா பேரு குமாரசாமி..... அம்மா பங்கஜம்.... நான் அவங்களுக்கு ஒரே பிள்ளை. அப்பா அரசு பணியில இருந்து ஒய்வு கண்டவரு..... இப்போ உயிரோட இல்லை..... அவங்க பெற்றோர் சரியான மருத்துவ வசதி இல்லாம இறந்து போனாங்கன்னு என்னை ஒரே முனைப்பா மருத்துவம் படிக்க வெச்சாரு..... எத்தனையோ கஷ்டத்திலும் அதற்கு தடங்கல் வராம பாத்துகிட்டாரு....  அதுமட்டுமில்லாம நான் கிராமத்தில்தான் தொண்டு செய்யணும்னு எங்கிட்ட சத்யம் வாங்கிகிட்டாரு.... அந்த எண்ணத்தை சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ஊட்டி வளர்த்துட்டாங்க என் பெற்றோர்....

நான் படிச்சு முடிக்கும் வரையிலும் சென்னைலதான் இருந்தோம்.... இப்போ அரசு பணியில இங்க வந்து வேலை செய்யறேன்.... இப்போ அவங்ககிட்ட மனு கொடுத்துதான் உங்கப்பா போன்ற ஊர் பெரியவங்க உதவியோடவும் இந்த புது மருத்துவமனையைக் கட்டிக்கிட்டு இருக்கேன்.... நான் இங்கேதான் பணி செய்வேன், என்னை வேற ஊருக்கு மாற்றக்கூடாது அப்படி மாற்றினா நான் அரசு பணிய உதறீடுவேன்னு சொல்லி தான் இந்த பொறுப்பையே ஏற்றுக்கொண்டேன்.... அதனால உங்க தங்கை இங்கே உங்க கண்ணு முன்னாலேயே தான் குடித்தனம் செய்வா.... அவள கண் கலங்காம பாத்துக்குவேன்..... அவ சொல்லி இருப்பா, ஒரு வருடமா நான் அவளை மனசார விரும்பறேன். சொல்லத்தான் துணிவு இல்லை

“இப்போ இங்க என்னோட இருக்கறது என் அம்மா மட்டும்தான்
. அவங்ககிட்டே நான் சொல்லீட்டேன்.... அவங்களுக்கு கொஞ்சம் கலக்கம், மிராசு குடும்பமாச்சேன்னு தயங்கறாங்க..... நல்ல காரியத்துக்கு தான் முதல்ல வந்து நிக்கறத அவங்க விரும்பல.... என்னாலையும் ஓரளவுக்கு மேல வற்புறுத்த முடியலை.... அதான் நானே பேசினேன்.....

உங்ககிட்டதான் பேசி இருக்கணும்..... ஆனா கௌரி என்ன நினைக்கிறா என்னைப்பத்தின்னு எனக்குத் தெரிய வேண்டி இருந்தது..... அதான்.....
என்றான்.

அவன் பேசுவதை பொறுமையாக ஆச்சர்யமாகக் கேட்டான் வெற்றி.
ரொம்ப சந்தோஷம் குமரன்.... எனக்கு திருப்திதான்.... நான் அப்பாகிட்ட பேசறேன்..... அவர்கிட்ட சொல்லும்போது நீங்க கௌரிகிட்ட பேசினதையோ விரும்பினதையோ சொல்லப் போறதில்லை.... ஒரு சின்னப் பொய், ஆனாலும் ஒரு நல்லது நடக்கவேண்டி..... உங்க அம்மா சொல்படின்னு நீங்க தெரிஞ்சவங்க மூலமா பெண் கேட்டிருக்கீங்கன்னு சொல்லப் போறேன். அப்படியே நீங்களும் ஒத்துக்குங்க...  மேற்படி நான் பாத்துக்கறேன்..... எனக்கு என் தங்கையின் நல்வாழ்வு முக்கியம்.... அவளை நீங்க நல்லபடியா பாத்துகிட்டா அதுவே எனக்கு போதும்..... நான் பேசீட்டு சொல்றேன் என்றான் குமரனின் கைகளை பிடித்துக்கொண்டு.

குமரனுக்கு வெற்றியை ரொம்பவே பிடித்துப்போனது.
தன் தங்கையின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறானே. அவளுக்காக பெற்றோரிடம் ஒரு சிறு பொய் சொல்லவும் தயங்கவில்லையே என்று மெச்சிக்கொண்டான். “சரி வெற்றி, ரொம்ப சந்தோஷம் என்றான்.

வெற்றியிடம் பேசியபின் கொஞ்சம் மனம் நிம்மதியுற்றது குமரனுக்கு. அந்த சந்தோஷத்தோடு வீட்டிற்குச் சென்றான்.
அம்மா என்றான். “வெற்றியப் பார்த்தேன் மா என்று எல்லாமும் கூறினான்.
பங்கஜத்துக்கும் பெருமகிழ்ச்சி. ‘தன் ஒரே மகன், அவனுக்கு ஆசைப்படும் பெண்ணோடு திருமணம் நடந்தால்தானே அவன் வாழ்வு செழிக்கும் என்று கவலை அவருக்கு.

அன்றிரவு வெற்றி தன் தந்தையிடம் வந்தான்.
அப்பா அம்மா நீங்களும் உக்காருங்க ஒரு முக்கியமான சமாசாரம் பேசணும் என்றான்.
நம்ம கௌரிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு என்றான்.
அப்படியா என்று பார்த்தனர்.
ஆமா உங்களுக்கும் தெரிஞ்சவர்தான், அதான் நம்ம டாக்டர் குமரன் இல்ல, அவர்தான் என்றான்.
என்னடா சொல்றே, நம்ம டாக்டருக்கு கௌரிய கேக்கறாங்களா? அவர் எவ்வளவோ படிச்சு பெரிய டாக்டரா இருக்காரு....” என்றாள் விசாலம் அதிசயித்து.
நம்ம கௌரி மட்டும், எதுல மா குறைச்சலு..... அழகிலா... படிப்பிலா... அறிவிலா... குணதிலா.... கொடுத்து வெச்சிருக்கணுமே அவ போல பொண்ணு கிடைக்க என்றான் விட்டுக்கொடுக்காமல்.
ஆமா இங்க யாரும் உன் தங்கைய குத்தம் சொல்லலை சாமி..... எப்பிடீன்னுதான்...”
அவங்க அம்மா இவளப் பத்தி கேள்விப்பட்டு குமரன் மூலமாவே என்கிட்டே பேசச் சொன்னங்களாம்.... அவங்க அப்பா குமாரசாமி இப்போ உயிரோட இல்லை.... குமரன் ஒரே பிள்ளை.... கிராமத்துல பணி செய்யணும்னு சொல்லியே வளர்த்து டாக்டருக்கு படிக்க வெச்சிருக்காங்க.... அவரும் அதையே தன் லட்சியமா எடுத்து தொண்டு செய்ய வந்துட்டாரு..... இங்கேயே மருத்துவமனையும் கட்டி இங்கேதான் வாழப்போறாராம்.... நம்ம கௌரிகுட்டி நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா, என்னப்பா சொல்றீங்க?” என்றான்.

என்ன பேர் சொன்னே குமாரசாமியா.... எங்கியோ கேட்ட பேரா இருக்குது.... உங்க சித்தப்பன் சென்னையில வேலை செய்யறானே, அவனுக்கு ஒரு நெருங்கிய ஸ்னேகிதம் உண்டு அந்த பேருல என்றார் ஆலோசனையுடன்.
என்ன குலமாம்?” என்றாள் தாய். சொன்னான். “அப்போ நமக்கு ஏத்ததுதான் என்றாள் மெல்ல.
குலம் எதுவான என்ன, பிள்ளை நல்ல பிள்ளை..... நமக்கு தெரியாதா நம்ம டாக்டரப்பத்தி என்றார் கந்தசாமி.
அதுசரி ஆனாலும் நாலும் பார்க்கணுமில்ல...” என்றாள் விசாலம்.

இருடா தோ வரேன் என்று சித்தப்பா வேலுச்சாமிக்கு போனை போட்டார்

என்னடா எப்படி இருக்கே?” என்று குசலம் விசாரித்துவிட்டு விஷயத்தை கூறினார்

ஆமாம் அண்ணா அவர்தான் குமாரசாமி.... அவர் இப்போ இல்லை..... 

என்னோட படிச்சவர்தான்.... ஒரே பிள்ளை.... ஆமா டாக்டருக்குதான் 

ஆசையா படிக்க வெச்சாரு.... கடைசீல அவரையே காப்பாத்த முடியாம 

விஷ காய்ச்சல்ல போய்டாரு மனுஷன்.... பிள்ளை மட்டும் தங்கம் 

அண்ணா..... நம்ம கௌரிக்கா பார்க்கறீங்க?  தாரளமா பார்க்கலாம் 

அண்ணா என்றான் அவன் மிகுந்த உற்சாகத்தோடு.


No comments:

Post a Comment