Tuesday 16 April 2019

ULLAM RENDUM ONDRU - 3


என்ன கௌரி செம அரட்டையா, அதான் நேரம் ஆகி பொழுது சாய்ஞ்சது கூட உரைக்கலையா.... அம்மா தேடுறாங்க வாங்க போகலாம் என்று முன்னே நடந்தான்.
அதான் நீ வந்திருக்கியே அண்ணா துணைக்கு.... கொஞ்ச நேரம் உட்காரு... பேசீட்டு போலாம் என்றாள் கௌரி.
சரி என்று அடுத்த படியில் அமர்ந்தான்.... பொதுவாக பேசினர்.
என்ன படிக்கிறே... என்ன க்ரூப் என்று கேட்டான். குரலே வெளி வராமல் முணுமுணுப்பாக பதில் கூறினாள் கல்யாணி.
உங்க வீட்டுல உனக்கு சாப்பாடே போடுவது  இல்லையோ?” என்றான் தீவிரமான முகத்துடன்.
உடனே விழித்து இல்லியே நல்லாத்தானே சாப்பிடுறேன் என்றாள் அவளும்.
குரலைப் பார்த்தா அப்படி இல்லை.... அதான் கேட்டேன் என்றான் சிரிக்காமல்.
கௌரிதான் சிரி சிரி என்று சிரித்தாள். அவனை ஒரு நிமிடம் முறைத்துவிட்டு பின் தானும் சிரித்தபடி தலை கவிழ்ந்துகொண்டாள் கல்யாணி.

அத்தானுக்கு தான் எவ்வளவு சிரிப்புத்தன்மை என்று மெச்சிக்கொண்டாள்.
பின் கொஞ்சம் சகஜமாகி பேச ஆரம்பித்தாள்.
பின்னோடு வீட்டை அடைந்தனர். கௌரிதான் பாவம் வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
என்னடி போனா போன இடம்.... வந்தா வந்த இடமா, இப்படி நீ புகுந்த வீட்டில போய் செஞ்சா விளங்கிடும்.... என்னமா வளர்த்திருக்காங்க பாருன்னு என்னைத்தான் சொல்வாங்க என்றாள் விசாலம்.
விடுங்க அண்ணி, சின்ன வயசு பெண்ணுங்க எத்தனையோ நாள் கழிச்சு கூடி இருக்குதுங்க... அப்படிதான் இருக்கும் என்று பரிந்துகொண்டு வந்தாள் கற்பகம்.
அது சரி, ஆனாலும் என்று முனகிக்கொண்டே சென்றுவிட்டாள்.

சாரி கௌரி என்றாள் கல்யாணி.
நீ ஏன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.... அம்மா அப்படிதான் ஏதோ சொல்வாங்க... நம்ம நல்லதுக்குதானேன்னு நானும் கேட்டுக்குவேன்.... ஆனா அம்மா ரொம்ப நல்லவங்க தெரியுமா என்றாள் கௌரி சிரித்த முகமாக.
இவளுக்கு கோவமே வராதோ... ஒரு சுணக்கம் கூட இல்லையே முகத்தில் என ஆச்சர்யப்பட்டாள்.

அதை கேட்கவும்
, “இல்லை கல்யாணி, அது எங்க அண்ணன்கிட்ட நான் கத்துகிட்டது.... அவருக்கும் தான் கோவமே வராது....  பெரியவங்க எதச் சொன்னாலும் அதில் நமக்கு ஒரு நன்மை ஒளிஞ்சிருக்கும்னு அண்ணன் சொல்லும் என்று அண்ணன் புகழ் பாடினாள். கல்யாணிக்கு மனம் இனித்தது. அவளுக்கு கசக்குமா அவனைப்பற்றிய பேச்சு.

இரவு இரு பெண்களும் மேலே கௌரியின் அறையில் படுக்கச் செல்ல வானொலி ஒலித்துக் கொண்டிந்தது
.
அத்தான்... என் அத்தான்.... அவர் என்னைத்தான்.... எப்படிச் சொல்வேனடி....” என்ற பாடல் வர உள்ளுக்குள்ளே கிளர்ந்தாள் கல்யாணி.
ஏதேதோ கனவுகள், மயக்கங்கள்..... ‘காதல் என்பது இதுதானா என்று மனம் ஏங்கியது. அவன் மனது தெரியவேண்டி தவித்தது.
அடுத்த நாள் மதியம் வரை அவனைக் காண முடியவில்லை. பெரியோர்கள் எல்லோரும் அடுத்த நாள் தொடங்கவிருக்கும் திருவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். அத்தானும் அந்த வேலைகளில்தான் பிசியாக இருப்பதாகத் தெரிய வந்தது. கோவிலில் கொடி ஏற்றிவிட்டனர். அன்றிலிருந்தே யாரும் ஊரைவிட்டுப் போகக் கூடாது என்று முழக்கம் கேட்டது.
அன்று மதியம் கௌரியிடம் வயற்காட்டிற்கு வெற்றிக்கென சாப்பாடு கொடுத்தனுப்பினாள் விசாலம்.

நானும் போகட்டுமா?” என்று கேட்டுக்கொண்டு தானும் அவள் கூட ஒட்டிக்கொண்டாள் கல்யாணி. அங்கே சென்று வெற்றியைக் கண்டாள். களத்துமேட்டில் ஏதோ ஒரு வரப்பினை வெட்டி நீர்புக வழி செய்துகொண்டிருந்தான். துண்டை முன்டாசாக தலையில் கட்டி இருக்க, வேட்டியை தார்பாய்ச்சி பின்பக்கம் முடிந்திருக்க கட் பனியன் அணிந்து அவன் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். நெற்றியில் வியர்வை பூத்திருக்க அவனின் ஆண்மை மிகுந்த தோற்றம் அவளை செயலிழக்க வைத்தது.

ஐயோ பாவம் இப்படி வெய்யில்ல உழைக்கிறாரே என்று பதறியது நெஞ்சம். ‘ஐயோ நான் என்ன இப்படி பார்த்து வைக்கிறேன்... சீ யாரானும் பார்த்தா என்ன நினைப்பாங்க.... வெட்கக்கேடு என்று கண்களை தழைத்துக் கொண்டாள்.
அவன் அருகே சென்று சாப்பிட அழைத்துவிட்டு வந்தாள் கௌரி. இருவரும் போய் ஒரு பெரிய மர நிழலில் அமர்ந்து அவன் வர காத்திருந்தனர்.
அவன் கைகால் கழுவி வந்து அமர்ந்தான்..... கல்யாணி எல்லாவற்றையும் எடுத்து கொடுக்க கௌரி பரிமாறினாள். அப்போதுதான் கவனித்தனர் தண்ணீர் இல்லை என்று.

இரு அண்ணா, நான் போய் கொண்டுவரேன் என்று கௌரி எழுந்து வரப்பை கடந்து சென்றாள்.
நீ சாப்டியா?” என்றான் வெற்றி.
ம்ம என்றாள்.
அவன் இலையில் பொரியல் குறைந்திருக்க அவள் சட்டென்று எழுந்து அதை பரிமாறினாள். அவன் சாப்பிடுவதைக் கண்டபடி அமர்ந்திருந்தாள்.
உனக்கு இங்க நேரம் போகுதா?” என்று கேட்டான்.
ம்ம் பரவாயில்லை என்றாள். “இப்போ கொஞ்சம் போர் அடிச்சுது, அதான் வந்தேன் என்றாள் நிஜம்போல.
ஓ அப்படியா! நீ என்னைப் பார்க்கணும்னு வந்தே னு இல்லை நினைச்சேன் என்று அவளை வாரினான்.
அவளுக்கு திக்கென்றது.... அவனை சட்டென்று ஏறெடுத்து பார்த்தாள்.
ஹப்பா என்ன அதிர்ச்சி..... அப்போ அதான் உண்மை அப்படிதானே?” என்றான் சிரித்தபடி.
அவள் பதிலேதும் கூறாமல் தலை குனிந்தாள்.
ஹே சும்மா ஜோக்குக்காகச் சொன்னேன் என்றான் இலகுவாக.
அதற்குள் கௌரி நீர் எடுத்துவந்தாள். அவன் சாப்பிட்டு முடிக்க இருவரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திரும்பினர். ‘அவன் ஏன் அப்படி கேட்டான்?’ என்று யோசித்து அவளுக்கு பைத்தியம் பிடித்தது.

அடுத்த நாள் கோவிலில் திருவிழாவிற்கென பூஜைகள் ஆரம்பம். விடிகாலையிலேயே எழுந்து அந்தந்த வீட்டின் பெண்கள் வாசலை பெருக்கி மெழுகி பெரிது பெரிதாகக் கோலம் போட்டனர். கௌரியும் கல்யாணியும் கூட அதிகாலை எழுந்து வாசல் தெளித்து தங்கள் பாவாடைகளை இழுத்து சொருகிக்கொண்டு கலர் நிரப்பிய கோலங்கள் போட்டு வாசலையே அடைத்துவிட்டனர். அந்த தெருவிலேயே அவர்களது கோலம்தான் மிகச் சிறப்பாக விளங்கியது. கௌரி போடுவாள்தான். ஆனால் தனியே செய்வதைவிடவும் பேசியபடியே கலர்த்தூவி இதுபோல பெரிய கோலங்கள் போட்டது அவளுக்கு ஒரே குதூகலம்.

என்னமா இது, இப்படி வாசலையே அடைத்து கோலத்தையும் போட்டுவிட்டு அதை கால் வைக்காம தாண்டணும்னு ஆர்டர் போட்டா, நாங்க என்ன அனுமாரா தாண்டி குதிச்சுப் போக என்று சிரித்து கேலி செய்தார் கந்தசாமி. பெண்கள் களுக்கென சிரித்துக்கொண்டனர்.

இவர்கள் வாசலை அடைத்துக் கோலம் போட்டதை மாடி பால்கனியிலிருந்து பார்த்திருந்தான் வெற்றி
. அதை கல்யாணி அறிந்திருக்கவில்லை. கன்னத்திலும் மொவாயிலும் கலர் ஒட்டி இருக்க இழுத்து சொருகிய தாவணியும் பாவாடையுமாக நின்று கொண்டிருந்தவளைக் கண்டு அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.
பரவாயில்லியே இவ, இந்த அளவு அழகா போட்டிருக்காளே என்று மெச்சிக்கொண்டான்.... கூடவே கோலம் மட்டுமா அவளும்தான் அழகு என்றது மனது. அவளை பார்ப்பதும் ஒரிருவார்த்தை பேசுவதும் கூட அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது உண்மை என்று உணர்ந்தான். அவனை ஈர்த்தது அவள் அழகா, பண்பா, அவளின் பழகும் தன்மையா என்பதை திருத்தமாக அறிய அவனால் முடியவில்லை..... ‘இது சரி இல்லை..... அவள் சின்னப்பெண்..... மாமா அன்றே கூறினாரே எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம் என்று தன்னையே அடக்கினான்.

தினமும் காலையும் மாலையும் மொத்த குடும்பமும் கோவிலுக்குச் சென்று பூஜை செய்தனர்
. வெள்ளி அன்று இவர்கள் குடும்பத்துக்கு முதல் மரியாதை தந்து பரிவட்டம் கட்டி மிகச்சிறப்பாக பூஜை நடந்தது. கற்பகத்தையும் மகேசனையும் முன் நிறுத்தி மரியாதை செய்ய வைத்தார் கந்தசாமி. பெண்கள் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். அங்கேயும் இழுத்து கட்டிக்கொண்டு வேலை செய்தனர் கௌரியும் கல்யாணியும். பொங்கல் வைத்து பூஜை முடித்து சாமி கும்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மகேசன் நாளையோட திருவிழா முடிஞ்சுடுதே மச்சான், நாளைக் காலையில ஊருக்கு கிளம்பலாம்னு..... அங்கே போட்டது போட்டபடி அப்படியே இருக்குஎன்றார்.
என்ன நாளைக்கேவா.... இன்னும் ரெண்டு நாளு இருந்துட்டு போகலாமே..... என்னிக்கோ வந்திருக்கீங்கஎன்றார் கந்தசாமி.
ஆசைதான் மச்சான்.... ஆனா வேலை இருக்கே..... நாம பார்க்கறது உர வியாபாரம் பாருங்க..... காற்றுள்ளபோதே தூற்றிக்கணும்என்றார்.
சரிஎன்றார் மனசில்லாமல்.

விசாலி நாளைக்கு கிளம்பறாங்களாம், எல்லாம் பார்த்து எடுத்து வெச்சுடுஎன்றார் ஜாடையாக.
சரீங்கஎன்றாள், அவர் கூறுவது புரிந்து. வராத கற்பகம் வந்து கிளம்புவதால் பழம் காய்கறிகள் மட்டுமல்லாது அரிசி பருப்பு என்று சீர் கொடுத்தே அனுப்புவர் ஒவ்வொரு முறையும். கற்பகமும் மகேசனும் ரொம்பவே தடுத்து பார்த்தாலும் விசாலத்திடம் எடுபடாது.

ஊருக்கு அடுத்த நாள் கிளம்பணும் என்றதும் கல்யாணிக்கு திக்கென்றது
.
ஐயோ ஊருக்கு போகணுமா.... என் அத்தானை நான் மீண்டும் எப்போது எங்கே பார்ப்பேன்.... அதற்குள் அவர் வேற யாரையானும் திருமணம் செய்துட்டால் என்ன செய்வது..... அவர் மனதில் நான் இருக்கிறேனான்னு இன்னமும் தெரியலையே..... நான் அவரையே நினைச்சிருக்கறதையும் நான் இன்னும் அவர்கிட்ட சொல்லலையேஎன்று வெதும்பினாள். கண்ணில் நீர் முட்ட அவனை திரும்பிப் பார்த்தாள்.
ஊருக்கு போகும் விஷயம் கேட்டதுமே அவனுமே அதிர்ந்தான் ஆயினும் தன்னை மறைத்தான். மெல்ல அவளைத் திரும்பிப் பார்க்க அவள் கண்ணில் அதிர்ச்சியுடன் நீர்முட்ட நின்றிருப்பது தெரிந்தது.
அந்தக் கண்ணீரின் அர்த்தம் என்ன.... இவள் இவ்வளவு தீவிரமாக என்னை காதலிக்கிறாளாஎன்று குமைந்தான்.

அதற்குள் அவர்களது மனதை அறிந்ததுபோல விசாலம் பேச ஆரம்பித்தாள்
.
ஏன் கற்பகம் நீங்க வேணாக் கிளம்புங்க..... நான் கல்யாணியக் கொஞ்ச நாள் இங்க வெச்சுக்கறேனே.... இதோ திரும்பி பார்க்கறதுக்குள்ள கௌரிக்கு திருமணம் ஆகிக் கிளம்பிடுவா..... சின்ன பெண்ணுங்க கொஞ்ச நாள் சேர்ந்து இருக்கட்டுமே..... பின்னோட கல்யாணிக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா அதோட இவங்க எப்போ ஒண்ணா இருக்க முடியும் சொல்லுஎன்றாள்.
கற்பகம் வந்த சான்சை கப்பென பிடித்துக்கொண்டாள்.

அதற்கென்ன அண்ணி, நீங்க கேட்டா இல்லைன்னு சொல்ல என்னாலும் முடியாது உங்க அண்ணனாலையும் முடியாதே.... நல்லா வெச்சுக்குங்க..... வாரம் பத்துநாள் கழிச்சு உங்க அண்ணனே வந்து கூட்டிகிட்டு போவாருஎன்றாள் தன் கணவனை பார்த்தபடி. கொஞ்சம் பயம்தான் அவன் என்ன எகிருவானோஎன்று.
அவன் பெண்ணின் முகத்தைக் காண, அவள் முகத்தில் இருந்த ஆசை ஏக்கம் பார்த்து சரி அப்படியேஎன்றான்.

உடனே பூவாய் மலர்ந்தது கல்யாணியின் முகம்
. அதைக்கண்டு வெற்றி,
இந்த வீட்டைவிட்டுப் போக இவுளுக்கு என்ன சங்கடம்?’ என்று ஆலோசித்தான்.
சரி இந்த வாரம் இருப்பாளே, எல்லாமும் தெரிந்துகொண்டு என் மனதையும் பேசிவிடுவேன்என்று தீர்மானம் செய்தான்.

அடுத்த நாள் சித்ரா பௌர்ணமி
. ஆற்றங்கரையில் ஊர் மொத்தமும் கூடி வழிபட்டு பூஜைகள் செய்து தின்பண்டங்களும் கட்டுசாத மூட்டைகளுமாக எடுத்துச் சென்று கொண்டாடுவது வழக்கம். விடிகாலையிலேயே எழுந்து பெண்கள் எல்லாம் தயார் செய்து மூட்டை கட்ட எல்லோருமாக ஆற்றுபடுகையை அடைந்தனர். அங்கே சென்று வழிபட்டு கொஞ்சம் ஒதுக்குபுறமாக அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட்டனர். பெரியவர்கள் சிறிது இளைப்பாற இளைஞர்கள் மூன்றுபேரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.

அன்றுதான் நிதானமாக் ஆழமாகக் கல்யாணியைப் பார்த்தான் வெற்றி
. அழகிய மயில் கழுத்து நிற பட்டுப்பாவாடை. அதன் மேல் அதே மாட்சிங் ரவிக்கை. கூடவே அரக்கு நிற பார்டருக்கேற்ப தாவணி. நீண்ட முடியை பின்னலிட்டு நிறைய மல்லிகை சூடி காதில் ஆடும் ஜிமிக்கியும் கழுத்தில் அட்டிகையுமாக மிளிர்ந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்க அவள் வேலை செய்வதை பார்த்திருந்தான். அவள் நடக்கும்போது ஜல் ஜல் என்று ஒலித்த கொலுசொலி அவனை கட்டிப்போட்டது. மைவிழி கண்கள் இன்னமும் அவனைக்கண்டு காணாமல் அலைபாய்ந்தன. அவன் தன்னையே பார்பதை அறிந்து அவள் சிவந்தாள். அவளும் அவனையே கண்டிருந்தாள். அவன் பார்க்கும்போது நிலம் பார்த்தாள்.

அன்று இரவு பௌர்ணமி நிலவில் சாப்பிடலாம் என்று தீர்மானித்தனர். விசாலம் எல்லோருக்குமாக குண்டானில் சோறு பிசைந்து வட்டமாக உட்கார வைத்து கைகளில் உருட்டி போட்டார். ஒருவரை ஒருவர் வம்பு செய்தபடி கேலியும் சிரிப்புமாக சாப்பிட்டனர். சாப்பிட்டபின் பெரியவர்கள் கீழே இறங்கிச் செல்ல மிச்ச மூவரும் அங்கேயே அமர்ந்து தங்கள் பேச்சை வளர்த்தனர்.
சிறிது நேரத்தில் கௌரி தனக்கு பிடித்தமான பொழுது போக்காக வானொலியை திருப்பி அதில் ஆழ்ந்து போனாள். மொட்டைமாடி சுற்றுச்சுவரில் அமர்ந்து வானொலியில் பாட்டு கேட்பது அவளுக்கு அல்வா தின்பதுபோல.

கல்யாணி தன் வசத்தில் இல்லை
. கால் முட்டி மடங்கி தரையில் அமர்ந்து இரு கைகளையும் பின்னால் ஊன்றி வானம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். வானில் தங்கமென ஜொலிக்கும் முழு நிலவும், தழுவிச் செல்லும் தென்றல் காற்றும் அவளை எங்கோ இழுத்துச் சென்றது. தன் மனதுக்கு இனியவன் தன் அருகிலேயே அமர்ந்திருப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அப்போது அவள் பாலில் ஒரு துளி சிகப்பு கலந்ததுபோன்ற நிறத்தில் பாவாடை, ரவிக்கை தாவணி அணிந்திருந்தாள். அதன் பார்டரில் கொத்துகளாக அழ் சிவப்பில் ரோஜாக்கள் பூ வேலைபாடு செய்யப்பட்டிந்தது. கழுத்திலும் காதிலும் முத்தாரமும் முத்து ஜிமிக்கியும் ஆடியது. தளர பின்னிய முடியில் மல்லிகை சூடி அவளே ஒரு அழகிய வெண்ணிலாவாக நிலாப்பெண்ணாக அவன் கண்ணனுக்குத் தெரிந்தாள். தினம் தினம் அவளை அருகில் கண்டு மெல்ல அவன் மனம் தன் வசம் இழக்க ஆரம்பித்திருந்தது.
பெரியவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ என்று பயந்து அவளுக்காக யோசித்து தன்னையே தான் அடக்க முயன்றாலும் அவன் மெல்ல தோற்றுக் கொண்டுதான் இருந்தான்
.
இது ஆவாது என்று எண்ணி அப்படியே தரையில் படுத்து கைகளை தலைக்குபின் கட்டிக்கொண்டான். மல்லாந்த வாக்கில்
வானில் ஒளிரும் வெண்ணிலவை பார்த்திருந்தான். அதிலும் அவள் முகமே காண
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை...?
என்று மெல்லிய குரலில் பாடினான்.

அதை அவள் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள்
. அந்தக் கண்ணில் ஏக்கமும் அதிர்ச்சியும் கண்டான். அவள் தன்னைக் காண்பதைக்கண்டு அவனும் அவளை நோக்க இருவர் கண்களும் சந்தித்தன. இருவராலும் மீள முடியாமல் மீண்டனர். அவள் படபடப்பும் நாணமுமாக சிவந்தாள். அதை அவன் கண்டுவிடுவானோ என்று தலையை குனிந்துகொண்டாள். அவன் உடனே அவள்புறம் திரும்பி இடது கையை மடக்கி அதில் தன் தலையைத் தாங்கி அவளையே பார்த்திருந்தான். அவள் அவன் செய்கையை ஓரக்கண்ணால் கண்டாள். மேலும் சிவந்தாள்.

இங்கே வா என்று ஜாடை செய்தான்.
ம்ஹூம் என்றாள் கௌரியை கண்ணால் கண்டபடி.
வா...நான் உன்னோட கொஞ்சம் பேசணும்...” என்றான் மீண்டும். கொஞ்சமாக அருகில் நகர்ந்தாள்.
ஆமா அது என்ன நீ வந்ததிலிருந்து என்னை ஒரு மார்கமா பாத்து வைக்கிறியே... அது ஏன்?” என்றான் நேராக.
அதெல்லாம் ஒண்ணுமில்லியே என்றாள் அவசரமாக

நீ ஒத்துக்கலைனா இல்லைன்னு ஆயிடுமா.... போகட்டும், அது 

எதுவாக இருந்தாலும் நான் சொல்லப் போறத கவனமா கேளு நித்யாஎன்றான்.
என்ன என்பதுபோல் பார்க்க


No comments:

Post a Comment