Wednesday 17 April 2019

ULLAM RENDUM ONDRU 4


இது வேண்டாம்மா.... இது நடக்காது.... நீ மனசுல என்ன வெச்சு இப்படி பார்க்கிற, நடந்துக்கறேன்னு எனக்குப் புரியாம இல்லை.... ஆனாலும் இது ஒத்து வராது நித்யா..... பெரியவங்க முக்கியமா உங்கப்பா ஒத்துக்க மாட்டாங்க.... அவங்க மனச கஷ்டபடுத்தி நாம ஒண்ணு சேர வேண்டாம்..... இப்போதைக்கு நம்ம மனசுல பெரிசா ஒண்ணுமில்லை.... இப்போவே நீயும் மனச மாத்திகிட்ட அப்பறம் பிரச்சினை இல்லை

அவள் என்ன சொல்லுவாள்
.... அதிர்ச்சியும் வேதனையுமாய் அவனை மேற்கொண்டு பார்க்க முடியாமல் தலை குனிந்தாள். கண்கள் நிறைந்து அவளையும் மீறி அருவியாய் கொட்டியது. வாய் திறக்காமல் விம்மினாள்.
ஏன் அத்தான் திடீரென்று இப்படி சொல்லிவிட்டார்.... இந்த சில நாட்களாக நன்றாகத்தானே பேசினார்.... பெரியவங்க ஏன் ஒத்துக்க மாட்டாங்க.... அவருக்கு என்னை பிடிக்கலையா?’ என்று உள்ளுக்குள்ளே வெந்துபோனாள்.

உங்களுக்கு என்னை பிடிக்கலையா?” என்றாள் விம்மலனூடே.
அது எதுக்கு இப்போ.... வா கீழே போகலாம் என்றான்.
இல்லை சொல்லீட்டு போங்க என்றாள் மன்றாடும் குரலில்.
அவள் முகம் பார்த்து ஆம் என்று அவனால் சொல்லவும் முடியுமோ??
எல்லாக் கேள்விகளுக்கும் எப்போதும் பதிலிருக்காது.... கொடுக்க முடியாது நித்யா  என்றான் அவளை கண் பார்க்காமல்.

அவளுக்கு புரிந்தது
, ‘அவனுக்கும் பிடித்துதான் இருக்கிறது ஆனாலும் அப்பாவுக்காக பார்த்து தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்..... என்னையும் கலவரப்படுத்துகிறான்.... அதனால் தான் நேராக பார்த்து பதில் சொல்லாமல் சமாளிக்கிறான் என்று. இதன் முடிவுதான் என்ன என்று மனது மயங்கியது குழம்பியது. அவன் தைரியமாய் முன் நின்றாள் அவள் யாரையும் எதிர்த்துப் போராடத் துணிவாள். அவனே இப்படி என்றால்... ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்.
அதற்குள் விசாலம் கீழே இருந்து குரல் கொடுத்தாள்.
கீழ வாங்க பிள்ளைகளா.... வந்து நேரத்தோட தூங்குங்க என்று அதட்டலாக.

அடுத்த நாள் காலை திருவிழா பூஜைகள் எல்லாம் சிறப்பாக முடித்துக்கொண்டு கல்யாணிக்கு வேண்டிய புத்திமதிகளை கூறிவிட்டு கற்பகமும் மகேசனும் கிளம்பினர். அவர்கள் அந்தப்புரம் போனதும் பெண்கள் இருவருக்கும் இறக்கை முளைத்ததுபோல உணர்ந்தனர். ஒருவரை ஒருவர் துரத்தியபடி மாடிப்படியில் ஏற,

பாத்துடீ கீழே விழுந்து காலை உடைச்சுக்க போறீங்க.... அப்பறம் எவனும் கட்டமாட்டான் என்று சிரித்தார் விசாலம்.
அதைக்கேட்டு விசாலத்தை திரும்பிப்பார்த்துக்கொண்டே மேலே ஏறிய கல்யாணி கால் தடுமாறி யார் மீதோ முட்டிக்கொண்டு சரியப்போனாள்.
ஐயோ அத்தை சொன்னதுபோல நான் விழுந்துடுவேனோ கால் முறிந்துவிடுமோ என்ற பயம் தோன்றிய அதே கணத்தில் அவளை யாரோ அணைத்து விழாமல் காப்பாற்றியது கண்டாள். முகம் திருப்பாமலே அது அத்தான்தான் என்பதை உணர்ந்தாள்.

கண்ணோரம் பார்க்க அவன்தான் அவளை பிடித்துக் கொண்டு நின்றான்.
பார்த்து நட என்று கூறிவிட்டு இறங்கி சென்றுவிட்டான். அவளுக்கு அவன்பிடியில் இருப்பதை உணர்ந்து வெட்கப்படும் முன்பே அவன் இப்படி கூறிச்செல்ல அவள் அதிர்ந்துபோய் நின்றாள். பின் மெல்ல மேலேறி சென்று அறையை அடைந்தாள்.

என்னடி எங்க போனே... என் பின்னலேதானே வந்தே?” என்றாள் கௌரி.
இல்லைடி படியில கால் தடுக்கிடுச்சு என்று ஆரம்பிக்க.
ஐயோ அடிபட்டுதாடீ?” என்று பதறினாள் கௌரி.
இல்ல அதுக்குள்ள அத்தான் வந்து... “என்று நிறுத்தினாள்
ஓஹோ அப்படியா விஷயம்.... ஹீரோ வந்து ஹீரோயின காப்பாத்தீட்டாராக்கும் என்று கேலி செய்தாள்.
சீ போடி... விழாம பிடிச்சு நிறுத்தினாரு அவ்வளோதான் என்றாள்.
சரி சரி நடத்துங்க என்றபடி அவள் குளிக்க சென்றாள். நடந்ததை நினைத்துப் பார்த்தபடி படுக்கையில் கிடந்து கலங்கினாள் கல்யாணி.
ஏன் அத்தான் இப்படி நடந்துக்கிறார்.... நான் என்ன செய்வேன்.... இங்கேயே தங்கி மட்டும் என்ன லாபம்.... என் மனதுக்கினிய அத்தான் பாராமுகமா இருக்கிறாரே...’ என்று உள்ளே கதறினாள்.
அன்று அவர்களது மாந்தோப்பில் வேலை இருப்பதாகக் கூறி இருந்தான் வெற்றி.

“எனக்கும் தோப்புக்கு போகணும்னு ஆசையா இருக்கு, நாமும் போகலாம்டி” என கௌரியை கிளப்பினாள்
அங்கே போனால் அத்தானோடு மீண்டும் பேசிப்பார்க்கலாமே..... ஏதானும் நல்ல முடிவு கிட்டுமோ முயற்சி செய்யலாமேஎன்று தோன்றி உடனே அவளும் மகிழ்ச்சியாகி ஓ போலாமே என்றாள்.
சரி வாங்க என்று அவர்களை வில்வண்டியில் அனுப்பிவிட்டு தான் பைக்கில் சென்றான் வெற்றி.

அங்கே சென்றதும் மாந்தோப்பின் பசுமையும் குளிர்ச்சியும் அரை இருளும் அவளை கட்டிபோட்டன
. அட என்று சுற்றி சுற்றி வந்தாள். அங்கே இருந்த கயிற்றுக் கட்டிலில் அவர்களை அமர வைத்து அவன் போய் தன் வேலையை கவனித்துவிட்டு வருவதாகச் சென்றான். அந்தத் தோப்பு அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.... அங்கே ஒரு சிறு குடிலும் இருந்தது.... அவர்கள் வயலை ஒட்டிய தோப்பு என்பதால் காவலுக்கு வருபவர் இளைப்பாற அந்தக் குடிலை கட்டி இருந்தனர்.... அதனை தொட்டடுத்து மோட்டாறும் பம்ப் செட்டும் இருந்தன.... ஜோவென தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது..... அது வாய்கால் வழியாக களத்து மேட்டிற்கு சென்று பாய்ந்தது....

இதை எல்லாம் கண்ட கல்யாணிக்கு ஒரே மகிழ்ச்சி
. பம்பசெட்டை ஒட்டி இருந்த தொட்டியில் நீர் நிறைய அதன் குட்டி சுவர்மீது அமர்ந்து காலை தொங்கவிட்டபடி நீரில் அளைந்தாள். அவள் கால்கள் கெண்டை மீனாக மின்னியது. கொலுசு அணிந்த பாதத்தில் திருவிழாவிற்கென இட்ட மருதாணி அழகு சேர்த்தது.  அந்த அழகிய பாதங்களை ரசித்தவண்ணம்  வந்தான் வெற்றி. அந்தக் காட்சி அவனை கிறங்க அடித்தது. ‘சே என்ன இதுஎன்று தன்னைத்தானே அடக்கிக்கொண்டு பார்வையை அகற்றினான்.

பாவாடையை மேலேற்றி அமர்ந்து நீரில் ஆடிக்கொண்டிருந்தவள் அவனைக் கண்டு உடை திருத்தி கீழே இறங்கி நின்றாள்
. உள்ளே சென்றவன் சில மாங்காய்களை பறித்து வந்து இருவரிடமும் கொடுத்தான். ஆசையாக வாங்கி ருசித்தனர். புளிப்பு இல்லாமல் மிகச் சுவையாக இருந்தன அவை.
அவள் ரசித்து உண்பதை கண்டபடி அவள் உதட்டை பார்த்தவண்ணம் இருந்தான். அவனுக்குள் ஏதோ நிகழந்தது.
சே என்ன நான் இப்படி ஆகிப்போனேன்..... ஒரு பெண்ணை இப்படியா பார்ப்பது.... நான் எப்போதும் இப்படி நடந்ததில்லையே என்று அவனுக்குள் ஆச்சர்யம் ஆனான்.

நான் கல்யாணியை நேசிக்கிறேன்
.... தெரிந்தேதான் இருந்தது.... ஆனாலும் அதனால் என்ன பயன்.... அவள் என்னை பார்க்கும்போதும் நாணும்போதும் அவளுக்கும் என்மேல் ஒரு ஆசை உள்ளது என்று நன்றாக உணர்த்துகிறாள்...... இதை வளர்ப்பது சரியா என்று திணறினான்.
இந்த சில நாட்களில் அவளில்லாமல் வாழ்வது முடியாது என்ற எண்ணம் கெட்டியாக மனதில் விழுந்தது. ஆனால் அவளது தந்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பின் இந்த சிறு பெண்ணின் மனதில் சலனத்தையும் காதலையும் வளர்பதில் அர்த்தம் இல்லை என்று தன்னைத் தானே கடிந்துகொண்டு அடக்கினான்.

கௌரி எப்போதும் போல தன் வானொலியோடு ஐக்கியமாகிவிட இவர்கள் இருவரும் கண்ணால் பேசிக்கொண்டே நடந்தனர்.
கௌரி வாயேன்டீ தோப்பின் அந்த மூலை வரை நடந்துட்டு வரலாம்..... குளுகுளுன்னு என்னமா இருக்கு என்றாள் ஆசையுடன்.
அடிப்போடி, உனக்குதான் இது புதுசு.... ரசிக்கிரே..... எனக்கு பார்த்து பார்த்து அலைஞ்சு திருஞ்சு அலுத்துப்போன இடம்.... நீ தனியாவே போ..... ஒண்ணும் பயமில்லை..... இல்லேனா அண்ணாவை அழைத்துகொண்டுபோ என்றாள் கௌரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல்.
அவனோடா என்று மெல்ல ஏறெடுத்துப் பார்க்க நட என்றான் அவன் அவள் கண்களை பார்த்தபடி.

அவனோடு நடந்தாள். உள்ளே செல்லச் செல்ல இன்னும் இருள் சூழ்ந்தது. தப்பு செய்துவிட்டோமோ.... உள்ளே வந்திருக்க வேண்டாமோ.... ஒரே இருட்டாக இருக்கிறதே.... எவ்வளவு அடர்ந்த மாமரங்கள்.... ஒவ்வொன்றிலும் நூற்று கணக்கில் தொங்கின காய்கள்.... அதை கண்ணுற்றபடி நடக்க காலில் ஏதோ குத்தியது. “அம்மா என்றாள் காலை நொண்டியபடி.
என்ன என்ன ஆச்சு?” என்று அருகே வந்தான்.
இல்லை ஒன்றுமில்லை காலில் ஏதோ முள் குத்தினாப்போல...” என்று இழுத்தாள்.
அவன் உடனே குனிந்து அவள் பாதத்தைத் தூக்கிப் பார்த்தான். ஒரு முள் குத்தி இருந்தது.
வேண்டாம் அத்தான்.... காலை எல்லாம் தொட்டுகிட்டுஎன்று கலவரப்பட்டாள்.
சு சும்மா இருஎன்று அதட்டியபடி அதை படக்கென பிடித்து எடுத்துவிட்டான்.
அம்மா என்று கத்தினாலும் உடனே சரியாகிவிட்டது....
நடக்க முடியுதா?” என்றான்.
ம்ம் வலி ஒண்ணும் பெரிசா இல்லை. சின்னமுள்தானே என்றாள்.
நித்து என்றான் அவளை கைபிடித்து நிறுத்தி.

ஹான்!” என்று திகைத்து அவனைப் பார்த்தாள். ‘முதன்முறையாக அவளை அவளது அத்தான் நித்து என்று அழைத்துள்ளானே என்று மனம் விம்மியது.
அத்தான் என்றாள் மெதுவாக. அவன் கிளர்ந்தான்.... அவள் வந்து இத்தனை நாட்களில் அவனை நேரடியாகக் கண்டு அத்தான் என்று அவளும் அழைக்கவில்லை... வெட்கம் மேலிட பாராமுகமாக தான் பேசிக்கொண்டனர்.... அழைத்துப் பேசவில்லை.
நித்து, நான் நேத்தே உன்கிட்ட சொன்னதுதான்.... நீ புரிஞ்சிகிட்டையான்னு தெரியல?” என்றான்.
ம்ம் என்றாள் குனிந்த தலையுடன்.
இங்கே வா என்று கீழே இறங்கித் தொங்கிய ஒரு மரக்கிளையின் மேல் அவளை அமர வைத்து தானும் அமர்ந்தான். “சொல்லு நித்து, என்னைபோய் ஏன் உனக்கு பிடிச்சிருக்கு.... எனக்கு உன் அன்பு தெரிஞ்சுதான் இருக்கு ஆனாலும் இது வேண்டாம்மா...” என்றான் முகத்தில் கொள்ளை கொள்ளையாய் சோகத்துடன்.
ஏறிட்டு அவன் முகம் கண்டவள் அதில் எல்லையில்லா துன்பமும் ஏக்கமும் கண்டு கலங்கினாள்.
மெல்ல ஏன் அத்தான், என்ன தப்பு.... உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... இப்போன்னு இல்லை, நாம சின்னப்பொ பழகினோமே அப்போலேர்ந்தே..... அப்போ சின்ன வயசு, அத்தான் ரொம்ப பிடிக்கும், அப்படீன்னு மட்டும் இருந்தது..... பருவ வயது ஆன பின்னும் அந்த எண்ணம் இன்னும் மேலோங்கி வளர்ந்தது.... உங்களைப் பார்க்கவில்லை என்றாலும் என் மனதில் உங்களை மட்டுமே தான் நான் நினைச்சிருந்தேன்..... என் மனசுக்கு பிடிச்சவரு நீங்க மட்டும்தான்.... உங்களை மணக்கமுடியலைனா நான் செத்தாலும் சாவேனே தவிர இன்னொருத்தரை மணக்க என்னால முடியாது அத்தான் என்று விம்மினாள்.

அவள் பேச்சில் இருந்த ஆழம் கண்டு உருகி போனான்
.... தன்னை முழுவதுமாக இழந்தான் வெற்றி.
அவள் கண்களைத் துடைத்து இதப்பாரு நித்து அழக்கூடாது.... உன் நிலைமை உன் காதல் நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு எல்லாமும் எனக்கு புரியலைனா நினைக்கிறே... ஆனா அதன் விளைவுகளையும் நான் சேர்த்து யோசிக்கிறேன். அதனாலதான் திரும்பத் திரும்ப உனக்கு சொல்றேன்..... உன் நல்லதுக்குதான் சொல்றேன் என்று நிறுத்தினான்.

உங்கப்பா அந்தச் சின்னச் வயசிலேயே
, நான் உன்னை தூக்கிவெச்சு கொஞ்சும்போது பத்து வயசு வித்தியாசம் இருக்கு என்ன உறவு முறை வெச்சு வளர்க்கறீங்கன்னு திட்டினார்.... அதான் நானும் உனக்கு ஆசைகளை வளர்க்காம ஒதுங்கி இருந்தேன்.... நீ இங்க வந்ததுமே உன்னைக்கண்டு நான் மயங்கிப் போனது உண்மை..... ஆனாலும் உங்கப்பாவை நினைத்துதான் நான் என்னையே அடக்கிகிட்டேன்....”

ஏன் அத்தான், அப்பா எப்பவோ சொன்ன ஒரு வார்த்தைக்கு இவ்வளோ மதிப்பு கொடுத்து ஒதுங்கறீங்க.... மனசுல கொள்ளை கொள்ளையா ஆசைய வெச்சுகிட்டு அடங்கி இருக்கீங்க.... ஆனா உங்க கண்ணு முன்னால உங்களையே நம்பி ஆசை வெச்சு கதறிக்கிட்டு இருக்கிற என்னைப்பத்தி ஒரு நிமிடம் யோசிச்சீங்களா அத்தான்..... அப்பாகிட்ட கேட்டு பார்ப்போமே, அவங்க முடியாதுனு சொன்னா அப்பறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாமே அத்தான்..” என்று கெஞ்சினாள்.

இல்லை நித்து.... அந்த மாதிரி ஒரு எண்ணம் நமக்கு இருக்குன்னு அவருக்கோ எங்க வீட்டுல யாருக்குமோ தெரிஞ்சா கூட இரு குடும்பங்களுக்கும் நடுவுல பெரிய பழிபாவம் எற்பட்டுடும்னு தோணுது....உன்னைப் பத்தி யோசிச்சியான்னு கேட்டியே. நான் எந்த அளவு யோசிச்சேன்னு உனக்கு தெரியாது.... போதும் பேச்சை வளர்க்க வேண்டாம்..... இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுவோம் என்று முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டான்.

வெளியே வந்து கெளரியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சாப்பிட்டனர்
. அவன் பின்னோடு தன் வேலை மீது சென்றுவிட்டான். கல்யாணிதான் அனல்மேல் புழுவாய் துடித்தாள். யாரிடமும் சொல்லவும் முடியாமல் தானேத் தன்னை அடக்கிக் கொள்ளவும் முடியாமல் தனிமையில்  அழுது தீர்த்தாள்.
என்னடி கண்ணும் மூஞ்சியும் செவந்து கெடக்கு அழுதியா என்ன?” என்று கௌரி கேட்க, “இல்லையே.... தண்ணி மாறினது கண் எரிச்சலா இருக்கு.... அதுனால இருக்கும் என்று சமாளித்தாள்.
அன்று இரவும் வெகு நேரம் கழித்தே வீடு வந்தான் வெற்றி. அலுத்து களைத்து மனமும் உடலும் அசந்து வந்து ஒன்றும் சாப்பிடாமல் கூட படுத்துவிட்டான்.
நீயும் துடித்து என்னையும் துடிக்க வைக்கிறியே அத்தான் என்று கல்யாணி வெதும்பினாள்.

அன்று காலை எழுந்து குளித்து அவரவர் வேலையில் ஈடுபட்டிருக்க, சமையல் செய்து கொண்டிருந்தார் விசாலம். சமையல் முடியும் தருவாயில் தண்ணீர் வேண்டுமே எல்லோரும் சாப்பிட வருவார்களே..... அசலே கோடைகாலம் ஆயிற்றே என்று குடத்தில் ஏந்திக்கொண்டு பின்கட்டிலிருந்து சமையல் அறைக்கு படி ஏற அம்மா என்று அலறியபடி சாய்ந்தார்.

ஐயோ என்னங்கத்தே?” என்றபடி சிட்டாக பறந்து வந்து தலையை ஏந்திக்கொண்டாள் கல்யாணி. அதனால் தலை எங்கேயும் முட்டி அடிபடாமல் தப்பினார் விசாலம்.
அப்படியே ஒருபக்கமாக கைவைத்து அழுத்தியபடியே ஐயோ கல்யாணி முடியலையே.... இந்தபக்கம் இடுப்பில ரொம்ப வலிக்குது என்றார் கண்ணீர் வழிய.
அவர் வேதனை புரிந்து மாமா.... அத்தான்....” என்று குரல் கொடுத்தாள்.
என்ன என்ன என்று ஓடி வந்தனர். “என்ன அம்மா விழுந்துட்டாங்களா.... எப்பிடி என்னாச்சு?” என்றான் வெற்றி பதறிபோய்.
தம்பி, ஓடு நம்ம டாக்டரப் பார்த்து அழைச்சுட்டு வந்துடு..... என்னமோ ஏதோ இப்போவே கவனிச்சுடுவோம் என்றார் கந்தசாமி.
இதோ என்று பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தான்.

கந்தசாமியும் கல்யாணியுமாக மெல்ல விசாலத்தை எழுப்பி பக்கத்து ஹாலில் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் படுக்க வைத்தனர்
. டாக்டர் வருவதற்குள் ஓடிப்போய் வேறு புடவை எடுத்து வந்து வேலை ஆள் கண்ணியம்மாவை பிடித்துக்கொள்ள சொல்லி கல்யாணியே ஈரப் புடவையை மாற்றிவிட்டாள். அதற்குள் வெற்றி, டாக்டர் குமரனுடன் வந்தான்.

அவன் வந்து எல்லாம் பரிசோதித்துவிட்டு
ஒண்ணும் இல்லை.... இடுப்பில சுளுக்கி இருக்கு.... எலும்பு முறிவேல்லாம் ஒன்றுமில்லை, அதனால பயப்படவேண்டாம்..... ரெண்டு மூணு நாள் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்..... வலி இல்லாம இருக்க ஊசி போட்டிருக்கேன்..... ஒரு நாளுக்கு இருமுறை உணவிற்குப்பின் இந்த மாத்திரையை கொடுங்க.... இந்த ஆயிண்ட்மெண்டை தடவுங்க. போதும் எழுந்து நடந்துடுவாங்க என்றான் புன்னகையுடன்.
விசாலத்தை கவனித்து முடிந்தபின் டாக்டரின் பார்வை அங்கும் 
இங்கும் எதையோ தேடியதுபோல தோன்றியது கல்யாணிக்கு

என்னத்தை தேடுகிறாரு இவரு என்று பார்த்தாள். கிளம்பும் வரையிலும் பார்த்துக்கொண்டே வெளியே சென்றான்



No comments:

Post a Comment