Tuesday 23 April 2019

ULLAM RENDUM ONDRU - 10


அந்த ஒரு சொல், உங்களுக்கு இதில் இஷ்டம் இல்லைன்னு ஒரு எண்ணம் அந்த பிஞ்சு மனதில ஆழமா பதிஞ்சு போயிடுச்சு..... அதுக்காக மட்டுமே கொள்ளை கொள்ளையா மனசுல ஆசை இருந்தாலும் தன்னையும் அடக்கிகிட்டு கல்யாணியையும் அடக்கிகிட்டு வேறே எந்த சிந்தனையும் இல்லாம வாழறாரு வெற்றி.... இது தகாது இல்லையா சித்தப்பா?..... அவரைவிட நல்ல மாப்பிள்ளையா நம்மளால தேடிட முடியுமா, நீங்களே சொல்லுங்க என்றான்.

அதன்பின் அவன் பேசியது எதுவும் அவர் காதில் விழவில்லை
. நான் எப்பவோ ஏதோ நினைவில் கூறிய ஒரே ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் பெண்ணின் காதலையும் ஏற்காமல் தன்னையும் அடக்கிக்கொண்டு ஆசாபாசங்களை துறந்து வாழ்கிறான் வெற்றி என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நின்றது.
வெற்றி...” என்று சென்று அவன் கைகளை பற்றிக்கொண்டார்.
அப்போ நீயும் கல்யாணியும் ஒருவர் மேல ஒருவர் அன்பு வெச்சிருக்கீங்களா வெற்றி?” எனக்கேட்டார்.

அவரின் பனித்த கண்கள் அவனுக்கு எதையோ உணர்த்த
ஆமாம் மாமா உண்மைதான்.... ஆனா பெரியவங்க நீங்க ஒப்புக்கொள்ள மாட்டீங்களோன்னு பயத்துல அவ காதல நான் ஏத்துக்கலை மாமா... என்னை நானே அடக்கிட்டுதான் இருந்தேன்.... எம்மேல உள்ள அன்பினால  இவங்க எல்லாம் சேர்ந்து இப்படி விஷயத்த போட்டு உடைச்சிட்டாங்க மன்னிச்சுடுங்க என்று அவர் காலைத் தொடப் போனான்.
ஐயோ வெற்றி, இன்னுமா நீ இந்த மாமாவை மன்னிக்கலை..... உன்னைப்போல தேடினாலும் எம் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டானே வெற்றி..... இந்த விஷயம் எல்லாம் தெரியும் முன்பே கூட எனக்கு உன்னை மாப்பிள்ளையா அடைஞ்சா நல்லா இருக்குமேன்னு எண்ணம் ஏற்பட்டது வெற்றி... ஆனா நீ கல்யாணிய விரும்பலையோ, பலவந்தப்படுத்தக்கூடாதே னு பேசாம இருந்துட்டேன் பா என்று கூறினார் அவன் கைகளை பிடித்துக்கொண்டே.

அப்படி போடுங்க, எல்லாம் க்ளியரா போச்சா..... அதுக்குதான் மனசுவிட்டு பேசணும்ங்கறது என்றான் குமரன் பனித்த கண்களோடு.
காபி கப்புளை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்த கல்யாணியும், போன் பேசிவிட்டு வந்த கந்தசாமி மற்றும் வேலுசாமியும் அப்படியே சிலையாகி நின்றனர். பெண்கள் விஷயம் கிரகித்து அவர்களும் அவ்வண்ணமே நின்று போயினர். வெற்றி சென்று குமரனை ஆரத்தழுவி கண்ணீர் மல்க என் வாழ்க்கையே காப்பாத்திட்டே குமரா... நான் உனக்கு எப்படி நன்றி. ...”  எனக் கூற.

வெற்றி மச்சான் நீங்க உங்க தங்கைக்காக பண்ணினீங்க.... நான் என் தங்கைக்காக பண்ணினேன், அவ்வளவேதான் என்றான் கண்களை துடைத்தபடி.
கல்யாணி ஓடி வந்து தட்டை டேபிள்மேல் வைத்துவிட்டு குமரனின் பாதம் பணிந்தாள்.
அண்ணா என்றாள். அவளின் அந்த அழைப்பும் அவள் பனித்த கண்களும் முகமும் ஆயிரம் நன்றி வார்த்தைகளை உணர்ந்தான் குமரன்.
என்னமா இது, எழுந்திரு என்று எழுப்பினான்.
அவள் உடனே அப்பா என்று அன்பொழுக அவரை வணங்கினாள்.
ஏண்டீ கண்ணு, இதான் விஷயம்னு ஒரு கோடி காமிச்சிருந்தா இதுக்குள்ள கல்யாணத்தையே முடிச்சிருப்பேனே அப்பா... நீயும் கஷ்டபடுத்திகிட்டியேடா என்றார் அவளை அணைத்தபடி. எல்லார் மனமும் நிறைந்திருந்தது.

அப்போது குமரனை காணலாம் என்று கீழே வந்த கௌரிக்கு விஷயம் சொல்லப்பட அவள் ஓடி வந்து குமரனைக் கண்டாள்
. அந்தப் பார்வையில் அளவு கடந்த காதல் மற்றும் நன்றி தெரிந்தது. அவளை கண்டு கண் சிமிட்டினான் குமரன். கண்ணாலேயே காதலும் நன்றியும் ஆசையும் எல்லாமும் உணர்த்தும் தன்னவளை கண்ணாலேயே அவனும் கட்டிக்கொண்டான்.
உடனே கற்பகம் ஓடிச்சென்று உப்பும் மிளகாயும் எடுத்து வந்து நால்வரையும் நிறுத்தி திரூஷ்டி கழித்தாள்.
கிளினிக்குக்கு நேரமாச்சு நான் கிளம்பட்டுமா?” என்று விடை பெற்றான் குமரன்.
கௌரியை அவனை வழி அனுப்ப விட்டுவிட்டு அனைவரும் பின் தங்கினர். அவள் வாசல் கேட்டருகில் ஒரு இருண்ட முக்கில் அவனை இழுத்து ஒளித்து அவன் கையில் இதழ் பதித்தாள்.
இது இப்போதைக்கு அச்சாரம் குமருஎன்றாள் நாணியபடி.
தாங்க யு தங்கம்ஸ் என்றான் அவன் சிலிர்த்து. அவனும் இதழ் பதித்துவிட்டு கிளம்பினான்.

கல்யாணியை இப்போது வெற்றி பார்த்த பார்வையில் கொள்ளைக் காதல் பொங்கி பொழிந்தது.
ஆமா இப்போ மட்டும் காதல் பொங்கி வழியுது என்று எண்ணிக்கொண்டாள். ஆனாலும் அத்தானின் காதலை வென்றுவிட்ட திருப்தி அவள் மனதில் நிம்மதியை தந்தது.
என்னப்பா இதான் விஷயம்னு சொல்ல மாட்டியா ஒரு பிள்ளை ஆனா?” என்றார் கந்தசாமி வருத்தத்துடன். “மன்னிச்சுடுங்கப்பா..... நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்னுதான்..” என்றான்.
சரி விடுங்க அண்ணா, எல்லாம் தான் நன்மையில் முடிஞ்சுதே என்று அனைவரும் ஒன்றாக உணவு உண்டனர்.
கௌரி கல்யாணம் முடிஞ்சா கையோட இவங்களையும் முடிச்சு போட்டுடணும் மச்சான் என்றார் மகேசன்.
கண்டிப்பா செய்துடணும் என்றனர் அனைவரும்.

உணவிற்கு பின் அனைவரும் நிறைந்த மனதுடன் படுக்கச் செல்ல,
மொட்டை மாடிக்கு வா என்றான் மௌன பாஷையில் கல்யாணியிடம்.
மாட்டேன் என்றாள் அவள் வேண்டும் என்றே.
தூக்கிட்டு போய்டுவேன், வாடீன்னா என்றான் மிரட்டலாக.
அவள் களுக்கென்று சிரித்தபடி படி ஏறினாள். மொட்டை மாடிக்கு அவர்கள் சென்ற அதே நேரத்தில் அதை அறிந்த கௌரி அண்ணனின் அறைலிருந்து போன் ஐ எடுத்து குமரனிடம் பேசிக்கொண்டிருந்தாள். அங்கே கொஞ்சலும் மிஞ்சலும் என்று அவர்கள் சொக்கி கிடக்க மேலே மாடியில் வெற்றி கல்யாணியை தன் மடியில் அமர்த்திக்கொண்டிருந்தான்.
என்னை மன்னிப்பியா நித்து?” என்றான்.
அந்த அழைப்பைக் கேட்டு அவள் சிலிர்த்தாள்.
இது என்ன பைத்தியக்காரக் கேள்வி அத்தான்?” என்றாள் அவன் மார்பில் சாய்ந்தபடி.
என்னை தப்பா நினைக்கலைதானே?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டான்.
ஐயோ, இல்லை அத்தான்..... நீங்க பெரியவங்களுக்காக பார்த்துதான் தயங்கினீங்க..... உறவுக்குள்ள தகராறு வந்துடப் போவுதுன்னு பயந்தீங்கன்னு எனக்கு தெரியாதா அத்தான்..... இனி நம்ம வாழ்க்கையின் எந்த ஒரு நாளிலும் இந்த எண்ணமே உங்களுக்கோ எனக்கோ வரவே கூடாது அத்தான் என்றாள் தீர்கமாக.

அவளை இறுக்கி அணைத்துகொண்டான்
..... அவள் அவன் மார்பில் மாலையானாள். அவனது ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் கிளர்ந்து சிவந்தாள். அவள் முகத்தில் அவன் விரலால் கோடு போட அவள் வெட்கம் தாளாமல் துவண்டாள்.
நித்து என்று அவனும் கிளர்ந்தான், கிறங்கினான்.

டீ என்றான். “ம்ம் என்றாள். “இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா... உன்னை அருகிலேயே வைத்துக்கொண்டு தொடவும் முடியாம கொஞ்சவும் முடியாம இயல்பா பேசவும் முடியாம நான் பட்ட அவஸ்தை போறும்.... நீ என்னைவிடவும் அதிகமா கஷ்டப்பட்டிருப்பே இல்லையா செல்லம்?” என்றான்.
ம்ம்ம் ஆமா அத்தான் ரொம்ப நொந்துட்டேன்..... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கௌரிக்கும் குமரன் அண்ணாவுக்கும் நாம நன்றி செலுத்தி தீர்க்க முடியாதுஅத்தான் என்றாள் நெகிழ்ந்து
ஆமாடி கண்ணம்மா உண்மைதான் என்றான்.
அத்தான் கீழே போலாம், யாரானும் பார்த்தா. ...” என்றாள்
பார்த்தா என்னடி, அதான் எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சுபோச்சே என்றான் அவளை விடாமல் மேலும் இறுக்கிக்கொண்டு.
அதுசரி அத்தான், ஆனா இன்னும் நமக்கு திருமணம் ஆகலையே என்றாள் நாணியபடி.
அதுக்கென்னடி இப்போவே தாலிய கட்டிட்டாபோச்சு என்றான்.
ஆசையப்பாரு என்று எழுந்தாள்.
மனமில்லாமல் அவனும் எழுந்தான். தூங்கச் சென்றனர் ஆனாலும் தூக்கம்தான் வருமா.

அடுத்த நாள் காலையிலேயே துடங்கி விட்டான் வெற்றி கல்யாணியை படுத்த. பெரியோர்கள் முன் எப்போதும் உள்ள மரியாதையுடன் நல்லபிள்ளையாக இருந்தபோதிலும், யாரும் பார்க்காதபோது அவளை இடித்துவிட்டு செல்வான்... அவனுக்கு உணவு பரிமாற வரும்போது ஊட்டிவிடு என்று அடம் பிடிப்பான்.... அவன் தட்டிலிருந்து அவளுக்கும் ஒரு வாய் ஊட்டுவான்.... கல்யாணி சிவந்து நாணி தடுமாறி போனாள். அவனோடு பட முடியாமல் ஒதுங்கி இருக்கலாம் என்றால் அவளை எங்கிருந்தாலும் தன்னருகில் வரவழைக்கும் வழி தெரிந்து வைத்திருந்தான்.

சாப்பாடு எடுத்திட்டு மாந்தோப்பிற்கு வா என்று இலகுவாக கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அவள் எப்படி என்னவென்று சொல்லிவிட்டு சோறு கொண்டுபோவாள்.... தவித்து போனாள். பிறகு வேறு வழி இல்லாமல் கௌரியிடம் போய் கூறினாள் உதவும்படி.
அவள் சிரித்து கேலி செய்து எல்லாம் ஆனபின்
அம்மா நானும் அண்ணியும் மாந்தோப்பிற்கு போய்ட்டு வரோம்..... ஏதானும் வேலை இருக்கா?” என்று கேட்டாள்.

டீ பெண்களா ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது.... அப்பிடி இப்படின்னு இனி அலையக்கூடாது என்று அடக்கினார்.
இன்னிக்கி மட்டும்மா, இனி போக மாட்டோம் என்றாள் கொஞ்சலாக.
சரி போறது போறீங்க, அண்ணனுக்கு சாப்பாடு கொண்டுபோய் குடுத்திடு என்று கட்டி கொடுத்தார்.
ஹப்பா பிழைத்தோம் என்று சிட்டாக பறந்துவிட்டனர் பெண்கள் இருவரும்.
அண்ணீ நீ உற்சாகமா வர்றதப் பார்த்தா எனக்கும் சந்தேகமா இருக்கே என்றாள் கல்யாணி.
ஒண்ணுமில்லியே என்றாள் கௌரி.
ஆனால் அங்கே மாந்தோப்பிற்கு சென்றபின்தான் தெரிந்தது. கிளம்பும் முன் அவளும் குமரனுக்கு கூப்பிட்டு அங்கே வரச்சொல்லி இருந்தாள். அவனுக்கும் அது உணவு நேரம் என்பதால் அவன் உடனே ஓடி வந்துவிட்டான்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிந்து பின் தேறி அவரவர் ஜோடியோடு மாந்தோப்பின் ஒவ்வொரு பக்கத்திற்குச் சென்றனர்.

பரவாயில்லைடீ நீ என்றான் வெற்றி.
ஆமா ஏன் சொல்ல மாட்டீங்க.... இப்படி வர்றதுக்குள்ள என் பாடு திண்டாட்டாமா போச்சு தெரியுமா..... இனிமே இதுபோல வெளியே போகக் கூடாதுன்னு மிரட்டி அனுப்பிச்சாங்க அத்தை என்றாள்.
முன்பு மாந்தோப்பினுள் சென்று அமர்ந்த அதே மாமரத்தின் மீது போய் அமர்ந்தனர். அங்கிருந்த மாங்கனியை பறித்து அவளிடம் தர அவள் அதை வாங்க ஆசையாய் கை நீட்டினாள். உடனே மறுத்து அதை முதலில் தானே கடித்து உண்டுவிட்டு அவளிடம் நீட்டினான். அவளும் சிவந்து வாங்கிக்கொண்டாள்.

அவள் கடித்து ருசிக்க
என்ன ருசிக்குதா?” என்று அவளை சீண்டினான்.
சி போ என்றாள் வெட்கியபடி.
எனக்கு?” என்று கேட்டான்.
அவள் அவனிடம் அதை நீட்ட அவனோ அதை வாங்காமல் குனிந்து அவளையும் கனியையும் சேர்த்தே ருசித்தான்.
அவள் மேலும் சிவந்து போங்கத்தான், நான் இனிமே உங்ககூட தனியா வரவே மாட்டேன்என்றாள் கிளர்ந்துபோய்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் பொழுது போனது. பெண்கள் கிளம்பி வீட்டை அடைய ஆண்கள் தங்கள் வேலைமேல் கவனம் வைத்தனர்.

இதோ முகூர்த்த நாள் விடிந்துவிட்டது. கல்யாணி கௌரியை தயார்  செய்துவிட்டு அவளும் தயாரானாள். அண்ணி அண்ணி என்று இருவரும் ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டனர். இருவருமே அவரவர் அலங்காரத்தை அவரவரின் மனதுக்கு இனியவன் பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இருந்தனர்.

கௌரியை அழைத்துக்கொண்டு கல்யாணி வெளியே நடந்து வர அங்கே நான்கு கண்கள் சுழண்டு மயங்கி சொக்கிப் போனது
. குமரனும் வெற்றியும் தங்கள் உரிமை பட்டவளை கண்டு சொக்கி நின்றனர்.
அப்படி இப்படி என்று மெல்ல நகர்ந்து வெற்றி கல்யாணியை அடைந்தான். அவள் அருகில் வந்து இடித்துக்கொண்டு நின்றான்.
என்னடி உனக்கா கல்யாணம்.... அள்ளுறே.... ஐயோ இப்போவே கண்ணக் கட்டுதேடீ.... ஏண்டீ இப்படி என் முன்ன வந்து என்னைக் கொல்றே என்றான் கிறங்கி போய்.
போங்க அத்தான்... சும்மா இருக்க மாட்டீங்களா.... யார் காதுலயானும் விழுந்தா அவ்ளோதான் என்று நகர்ந்தாள். அவனும் நகர்ந்தான்.
ஐயோ அந்தண்டை போங்களேன் அத்தான் என்றாள் சிவந்துபோய்.
போடி, என் பெண்டாட்டி நான் இடிச்சுகிட்டு நிக்கறேன் என்று நகர மறுத்தான்.

அங்கே கௌரி மணவறைக்கு வந்து அமர குமரனின் கண்கள் தெரித்துவிடும்போல அவளையே பார்த்திருந்தான்.
அவள் கீழ் கண்ணால் அதைக்கண்டு நாணி சிவந்தாள்.
என்ன இது இப்படி பாத்துகிட்டு...?” என்று மெல்லிய குரலில் அதட்டினாள்.
இதென்னடி கொடுமை..... என் பெண்டாட்டிய நான் சைட் அடிக்கறது கூடவா குற்றம்... போடி என்றான் அவன்.
ஐயோ போதுமே என்று சிவந்தாள்.
பெரியவர்கள் இவற்றை கண்டும் காணாமல் இருந்துவிட்டனர்.
முகூர்த்த வேளையில் குமரன் கௌரி கழுத்தில் மங்கள நாணைக் கட்டினான். கல்யாணி நாத்தனாராக நின்று சடங்குகள் செய்தாள்.
பின்னோடு வெற்றிவேலனுக்கு நித்யகல்யாணியை திருமணம் செய்து கொடுப்பதாக தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.

அப்போது விதி விளையாடத் துடங்கியது. கற்பகத்தின் உருப்படாதத் தம்பியின் காதில் இந்தக் கல்யாண சாமாச்சாரங்கள் விழுந்தன.
அது யாருடா அவன் என் முறப்பெண்ணக் கட்டுவேன்னு பரிசம் போடறது?” என்று குழறினான் முட்ட குடித்துவிட்டு மண்ணில் புரண்டபடி.
கண்கள் சிவப்பேறி வாய் குழறி லுங்கி எங்கோ நழுவி இருக்க, அவனோடு இதே நிலையில் புரண்டு உழலும் நாலு தடியன்கள் அவனை மேலும் ஏற்றிவிடட்டனர்.
அன்று மாலை கற்பகத்தின் வீட்டைத் தேடி வந்து வாசலில் நின்று அசிங்கமாகப் பேச ஆரம்பித்தான். மகேசன் அப்போது வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. கற்பகத்திற்கோ எப்போதுமே தன் தம்பியைக் கண்டால் பயம். அவள் வெலவெலத்துப் போனாள். கல்யாணியை உள்ளே அனுப்பி அவளது அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அவள் இருக்கும் அறைக் கதவை வெளியே தாளிட்டாள். மகேசனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள். அவர் பாவம் போட்டது போட்டபடி ஓடி வந்தார்.

என்ன வேலு இது, தெருவில நின்னு அசிங்கமா கத்திக்கிட்டு, எதுவானாலும் உள்ளே வந்து பேசு என்றார். சமாதானம் பண்ணி அனுப்பிவிடலாம் என்று நினைத்து.

வேலு அடங்க மறுத்தான். அவனை தர தரவென உள்ளே இழுத்து வந்து அமர்த்தினார்

என்ன வேணும் உனக்கு, உன் நிலையப் பார்த்தியா... இதுல உனக்குக் 

கல்யாணம் ஒரு கேடா..... உன் வயசென்ன எம் பொண்ணு 

வயசென்ன..... நீ ஒரு ஊர் சுத்தர பொறுக்கி, ரவுடி, குடிகாரன்.... உனக்கு 

நானில்ல, ஊரிலேயே யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்கடா..... 

பேசாம வம்பு பண்ணாம போயிடு.... இல்ல போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளீடுவேன் என்று மிரட்டினர்.

அவன் எதற்கும் பயப்படவும் இல்லை மசியவும் இல்லை
. “என்ன மாமா

 பேசறீங்க, எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு இப்போ நீங்க பேசி 

முடிச்சிருக்கீங்களே வெற்றி, அவனைவிட ரெண்டு வயது கூடுதல் 

அவ்வளவுதானே..... இதெல்லாம் ஒரு வயசா, நீங்க கல்யாணிய 

கட்டிக்குடுங்க நான் எப்படி மாறி போறேன்னு பாருங்க.... அவள வெச்சு

 நல்லபடியா காப்பாத்தலைனா ஏண்டானு கேளுங்க என்றான் 

குழறியபடி.

கல்யாணிக்கு திக்கென்றது
. அழுகை முட்டியது. கையும் காலும் நடுங்க 

என்ன செய்வது என்று அறியாமல் வெற்றி அத்தானைக் கூப்பிட்டு 

சொல்லலாம் என்று உள் அறையிலிருந்தே வெற்றியைக் கூப்பிட்டு 

கை நடுங்க அழுகை முட்ட ஹெலோ அத்தான் என்றால்

அவன் பதறி போய் ஹே நித்து, என்னடா அழறியா.... ஏண்டா என்ன 

ஆச்சு, ஹே அழாமச் சொன்னாத்தானே தெரியும்.... என்னை கலவரப் 

படுத்தற நீ..... சொல்லும்மா என்ன ஆச்சு?” என்றான் ஆதுரமாக

இல்ல இங்க... வந்து... மாமா வந்திருக்கான்”. 

யாரு மாமா?” என்றான் அவன் புருவம் முடிச்சிட

அதான் அந்த ரவுடி வேலு, அத்தான் என்றாள். உடனே விளங்கியது வெற்றிக்கு

அவனுக்கென்னவாம்?” என்றான் கோபமாக

திக்கி திக்கி விம்மியபடி எல்லாம் சொல்லி முடித்தாள்.

No comments:

Post a Comment