Sunday 19 August 2018

NESAMULLA VAANSUDARE - IRUDHI PAGUDHI

“ம்ம்” என்றாள்.
“ஹே என்ன அழறியா?” என்றான் காதலாக. கண்ணில் நீர் முட்டி நின்றதுதான்.
“ம்ம்” என்றாள்.
“சி அசடா நீ, விடும்மா, கலங்காதே.... இனி அவ தொந்தரவு செய்ய மாட்டா” என்றான் ஆறுதலாக.
“கவலைப்படாம தூங்கு டார்லிங்” என்றான். ஓகே என்று வைத்தனர். அவளுக்கு ஏது தூக்கம். மனம் புரண்டது பயம் அப்பிக்கொண்டது.

அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகம் செல்ல அவள் தன் வேலையில் பிசியாக இருந்தாள். அப்போது யாரோ ஒரு பெண் சித்துவின் அறைக்கு வந்திருப்பது தூரத்தில் கண்ணில் பட்டது. ஒரு வேளை ஒரு வேளை ஷாலுவா என்று துடித்து போனாள் சங்கீதா. ஆம் அது ஷாலுதான். அவனை காணவென நேரே ஆபிசிற்கே வந்துவிட்டாள்.

“என்ன, உங்க வுட்பியும் இங்கதான் வேலை பார்க்கிறாங்களாமே..... அவங்கள எனக்கு அறிமுகம் செய்ய மாட்டீங்களா சித்து?” என்று அவன் நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்து அவன் மீது சாய்ந்தபடி கொஞ்சினாள்.
“நீ எங்க இங்க வந்தே, உன்னை யாரு உள்ள விட்டது..... இறங்கு முதல்ல வெளியே போ” என்று கத்தினான்.
“சும்மா சத்தம் போடாதீங்க சித்து.... நான் எல்லாம் அறிஞ்சு தயாரா தான் வந்திருக்கேன்.... நீங்க என்னை வெளியேத்தினா உங்களுக்குத் தான் அவமானம்...... நீங்க என்னை கல்யாணம் செய்துகிட்டுதான் ஆகணும், இல்லேனா நான் உங்க வுட்பி கிட்ட பேச வேண்டி இருக்கும்” என்றாள்.
“என்ன, மிரட்டறியா..... அவளுக்கு ஏதுக்கே எல்லாமே தெரியும்... சோ நீ உன் நாடகத்தை நிறுத்தீட்டு... கிளம்பு” என்றான்.

“இதுவரை நடந்தது தெரிஞ்சிருக்கலாம்..... ஆனா, நான் சொல்வேனே இன்னிக்கி நீங்கதான் என்னை இங்கே வரச் சொன்ணீங்கன்னு,.... என்னோட கிளம்பி ரிசார்ட்டுக்கு போக ப்ளான் பண்ணீங்கன்னு எல்லாம் சொல்லுவேனே..... அப்போ என்னாகும்னு யோசிச்சீங்களா.... நான் அப்படி எல்லாம் செய்து உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னு பார்க்கறேன்..... அதனால் மரியாதையா என்னோட இப்போ கிளம்பி வெளியே வாங்க.... நான் ஒரு நல்ல துணி கட்டி நகை போட்டு பல நாள் ஆச்சு..... பெரிய ஹோட்டல்ல போய் ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிடலை..... என்னோட வாங்க, ஷாப்பிங் செய்யலாம், அப்படியே சாப்பிட்டுவிட்டு எங்கானும் ஊர் சுற்றலாம்” என்று ப்ளான் போட்டாள்.

“அதுக்கு வேற ஆளப் பாரு.... நீ முதல்ல இங்கிருந்து வெளியே போறியா இல்லை ஆளக் கூப்பிட்டு விரட்டவா?” என்று கத்தினான்.
“சத்தம் போட்டா உங்களுக்குத்தான் அவமானம்னு நான் சொல்லல, கிளம்புங்க” என்று மிரட்டினாள். அப்போது யாரோ விருந்தினர் என்று எண்ணி ஆபிஸ் பாய் குளிர்பானம் கொண்டு வந்தான்.
“தாங்க யு” என்றபடி வாங்கி உறிஞ்சினாள்.
“சங்கீதா மேடம சார் கூப்பிடுகிறாருன்னு கொஞ்சம் அழைத்து வரியா?” என்று அவனிடம் அவளே கூறினாள். அவன் சித்துவின் முகம் பார்க்க அவன் வேண்டாம் என்று கூற முயல, “வரச் சொல்லுங்க, இல்லேனா கதையே வேற” என்றாள் ரகசியமாக. சரி அவன் முன் ரசாபாசம் வேண்டாம் என்று தலை அசைத்தான்.

“ஐயோ என் சகி, இவள் முன் அசிங்கப்பட வேண்டுமா” என்று புழுங்கினான். சங்கீதா உள்ளே வர அனுமதி கேட்டு வர ஷாலு இன்னமும் அவன் மீது சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு துணுக்குற்றாள். தலை கவிழ்ந்து எதிர் நாற்காலியில் அமர்ந்தாள். நுனியில் அமர்ந்து “எதுக்கு சர் வரச் சொன்னீங்க?” என்றாள் மெல்ல. அவனை ஏறிடக்கூட அவளுக்கு இஷ்டமில்லை.
“இல்ல... நான்..” என்று தடுமாறினான்.

“இல்ல சங்கீதா, அவர் சார்பில நான்தான் வரச் சொன்னேன்... நாங்க கொஞ்சம் அவசரமா வெளில போக வேண்டியது இருக்கு, சோ, அவர் இல்லாத நேரத்துல ஏதானும் அவசர ஆபிஸ் வேலைகள் வந்தால் நீங்கதான் பார்துப்பீங்களாமே, அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு நான் கூப்பிட்டேன்....” என்றாள் உரிமை பட்டவள் போல. சங்கீதா இதைக் கேட்டு திகைத்தாள். சித்துவின் முகம் பார்த்தாள் அந்தப் பார்வையில் அளவிலா கோவமும் சங்கடமும் வெறுப்பும் கண்டான் சித்து.

‘என்னை உனக்குத் தெரியாதா.... என்னை நீ நம்ப மாட்டாயா?’ என்ற இறைஞ்சல் இருந்தது அவன் பார்வையில்.
“நான் எங்கும் வெளீல வரலை, நீ கிளம்பு” என்றான் மீண்டும்.
“அதான் இவங்க இருக்காங்களே, ஆபிஸ நல்லபடி கட்டி காப்பாத்துவாங்க, நீங்க வாங்க சித்து, நாம ஜாலிய சுத்தீட்டு வரலாம்” என்றாள் மீண்டும். சங்கீதா உடனே எழுந்து வெளியே வந்துவிட்டாள். அவளின் சீட்டை அடைந்து அமர, ஒரே படபடப்பாக இருந்தது.... உடம்பெல்லாம் எரிவதுபோல தோன்றியது.... மடை திறந்தாற்போல அழுகை வந்தது... ‘அவளை அடிச்சு வெளியே தள்ள முடியல, அவ மேல விழுந்து கொஞ்சறா அவளோட சமரசம் பேசிகிட்டு உக்கார்ந்திருக்கான்... இவனுக்கும் இன்னமும் அவ மேல அசை போகல போல’ என்று பொருமி தீர்த்தாள். அவளை ஒரு இயலாமையோடு பார்த்தபடி ஷாலுவோடு வெளியே சென்றான் சித்து.
‘அடப்பாவி போய்டானே அவளோட’ என்று கனன்றது சங்கீதாவிற்கு.

வெளியே சென்றவன் காரில் அவளை ஏற்றி மெயின் ரோட் வந்து ஒரு திருப்பத்தில் காரை நிறுத்தி, “போதும் உன் நாடகம்... இத்தோட நிறுத்திக்கோ.... என் வழில குறுக்கே வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.... இன்று அனாவசியமா நீ என் சங்கீதாவை அவமான படுத்திவிட்டாய்..... இனி நான் பொறுக்க முடியாது.... உன் மேல ஆக்ஷன் எடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, வேண்டாம் அடங்கீடு” என்று மிரட்டினான். அவளா அசருவாள்.

“என்ன முடியுமோ செய்யுங்களேன் சித்து.... நான் தகுந்த ஆதாரத்தோட நிரூபிப்பேன்.... நீங்கதான் என்னை வரச் சொன்நீங்கன்னு.... அன்னிக்கே எனக்காக என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நகை புடவை எல்லாம் எடுத்தீங்கன்னு... என்னை திருமணம் பண்ணிக்கறேன்னு சொல்லி என்னை ஏமாத்தீட்டீங்கன்னு சொல்லுவேன்” என்றாள்
“ஒண்ணும் பலிக்கலைனாலும், நாலு தரம் இப்படி உங்கள வலுக்கட்டாயமா வெளியில அழச்சுகிட்டு போய் ஊர் சுத்தினா அப்பறம் சங்கீதா உங்கள வெறுத்துடுவா, திரும்பியும் பார்க்க மாட்டா, என்ன ஓகேவா, செய்யட்டுமா?” என்றாள். அவள் எதற்கும் துணிந்துவிட்டாள் என்று உணர்ந்தான். ‘இவள் இப்படி எல்லாம் பேசினால் இவளை யாரும் நம்பப் போவதில்லைதான், ஆயினும் அது அசிங்கமாகும், சங்கீதாவிற்கு அவமானமாகும்... தன்மையாகத்தான் இவளை டீல் செய்ய வேண்டும் என்று தணிந்த குரலில், “உனக்கு இப்போ என்ன வேணும்?” என்றான். லிஸ்ட் அடுக்கினாள்.

“என்னால உன்கூட வர முடியாது, ஆனா நான் பணம் குடுக்கிறேன், நீ போய் வாங்கிக்கொள்” என்றான்.
“இல்ல நீங்க என்னோட வரணும்” என்று அடம் பிடித்தாள்.
“இன்னிக்கி முடியாது, முக்கயமான மீட்டிங் இருக்கு, அதனால் இன்னிக்கி நீ போ.... நாளைக்கு நான் உன்னோட வரேன்” என்றான். அவன் அவளைக்கண்டு பயந்துவிட்டான் என்று வெற்றி களிப்பு ஷாலுவிற்கு. சரி என்று வந்த பணத்தை விடாமல் வாங்கிக்கொண்டு ஒரு கால் டாக்சியில் ஏறி ஷாப்பிங் சென்றாள். அவன் சென்றது ஒரு மீட்டிங்கிற்குதான்.

இப்படி அவள் தினமும் ஆபிஸ் வருவதும் அவனிடம் கொஞ்சுவதும் சில சமயம் அவளுடன் அவனும் வெளியே செல்வதும் ஆபிசே கண்டு பின்னே புரளி பேசியது. சங்கீதா வாழ்க்கையை வெறுத்தாள். சித்துவை வெறுத்தாள். இனி அவனை தான் மணக்க முடியாது என்று தீர்மானித்தாள். வேலையை ராஜினாமா செய்ய கடிதம் எழுதி அவனுக்கு இமெயில் அனுப்பினாள்.
‘ஏற்க முடியாது நான் உன்னோடு பேச வேண்டும்’ என்று பதில் வந்தது. அவனை சந்தித்து ஒரு வார்த்தையும் பேச அவளுக்கு இஷ்டமில்லை. ‘முடியாது’ என்று வேலைக்கு வராமல் வீட்டில் அமர்ந்தாள். இந்த நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

போனில் அழைத்தான், பேச மறுத்தாள்... மீண்டும் மீண்டும் என முயன்றான்.
“என்னதான் வேணும் உங்களுக்கு, நான் உங்களோட பேச விரும்பல... நீங்க இன்னும் அவள மறக்கல... என் கூட பேசியதெல்லாம் நடிப்பு... என் மேல ரொம்ப காதல், நான் இல்லாம வாழவே முடியாதுனு சொன்னதெல்லாமே பொய் பித்தலாட்டம்... அதான் அவ கூப்டு ஐயோ னு அழுததும் நான் சொன்னதே போதும்னு அவ பின்னாடி ஓடீட்டீங்க, இப்போ அவ சுண்டு விரல்ல சுத்தி விடறா... நீங்களும் பம்பரம் போல அவ இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடறீங்க.”

“ச்சே அசிங்கமா இல்ல. ஆபீசே கொல்லுனு சிரிக்கிது உங்க நடவடிக்கையை பார்த்து.
உங்களுக்கு இருக்கோ இல்லையோ, எனக்கு அசிங்கமா அவமானமா இருக்கு. நான் இனி உங்களை மணக்க முடியாது, உங்க கிட்ட வேலையும் செய்ய முடியாது. இனி எனக்கு போன் பண்ணவோ பேசவோ சந்திக்கவோ முயற்சி செய்ய வேண்டாம். குட்பை” என பொரிந்து தள்ளிவிட்டு பதிலுக்கும் காத்திராமல் போனை வைத்துவிட்டாள்.
அவன் மீண்டும் அழைத்து தன் நிலை உணர்த்த முயல அவள் போனை சுவிச் ஆப் செய்து வைத்திருந்தாள். தோற்றான். பாரம் அமர்ந்தது மனதில். மண்டை விண் விண்ணென வலித்தது. சுருண்டு படுத்தான். தொய்ந்து போனான்.

“ஆபிசில் எல்லோருக்கும் தெரிந்து அசிங்கமான சீன் வேண்டாம்.... தயவு செய்து ஆபிஸ்ற்கு மட்டுமானும் வா, நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டேன்... பேச முயல மாட்டேன்” என்று மெசேஜ் விடுத்தான். மனமில்லாமல் சென்றாள். ஒரு வாரம் போல ஓடியது.

“இன்று எல்லாவற்றுக்கும் முடிவுரை, மாலை ஐந்து மணிக்கு இந்த ஹோட்டலுக்கு வரவும்.... ப்ளீஸ் எனக்காக, என் மேல் நீ கொண்ட காதல் உண்மை என்றால் வா” என்று மெசேஜ் அனுப்பினான். “முடியாது” என்றே பதில் அனுப்பினாள்.

ஆனால் மணி ஐந்தை நெருங்கியது மனம் தவித்தது. ஒரு டாக்சி பிடித்து அங்கே சென்றாள்.... அவன் சொன்ன அறையின் சாவியை வரவேற்பில் பெற்று உள்ளே சென்று அமர்ந்தாள்.... சிறிது நேரத்தில் அவன் குரல் கேட்டது போலத் தோன்றியது.... எங்கே இருந்து வருகிறது குரல் என்று தேடினாள்.... அந்த அறைக்கும் பக்கத்து அறைக்கும் நடுவே ஒரு உள் கதவு இருந்தது. அதன் பின்னிலிருந்து வந்தது அவன் குரல். அவள் கேட்க வேண்டும் என்றே அவன் உரக்க பேசினான் போலும், அவள் கதவின் இந்தப் பக்கம் நின்று மூச்சுவிடாமல் கேட்கத் துவங்கினாள்.

“சரி ஷாலு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் குழைவாக சித்து. தூக்கிவாரி போட்டு வியர்த்து கொட்டியது சங்கீதாவிற்கு. அவன் வசமாக வலையில் சிக்கினான் என்று கொக்கறிதாள் ஷாலு.
“நல்ல முடிவு சித்து..... குட் எப்போ பண்ணிக்கலாம்?” என்றாள்.
“உன் இஷ்டம்” என்றான்.
“இப்போ உன் மாமனார் இங்க வருவாரு, அவர்கிட்டேயே கேட்டு முடிவு பண்ணிக்கலாமா?” என்றான்.
“என் மாமனாரா, உன் அப்பாவா சித்து?” என்றாள்.
“ஆமா அப்பன், வரார்” என்றான் சித்து கேலியாக. “ஒ” என்றாள் ஷாலு கொஞ்சம் படபடப்பாக. ‘இவன் அப்பாவாவது, இங்கேயா, ஏன் வருகிறார்?’ என்று உள்ளே குடைந்தது.

“அவர் இங்க ஏன் வரணும் சித்து, அப்பறமா வேணும்னா நாமளே உங்க வீட்டுக்கு போய் அவங்களப் பார்த்து ஆசிகள் பெறலாமே?” என்றாள்.
“ஆனா அவருக்கு தன் மருமகளப் பார்க்க ஆசை இருக்குமே, பொன் காப்பு வெள்ளி காப்பூ போடணும்னு ஆசையா இருக்காமே” என்றான். அவனின் கேலி குரல் ஷாலுவிற்கு விளங்கவில்லை. அவளுக்கு ஏசி அறையிலும் வேர்த்தது சரி என்றபடி அமர்ந்தாள்.

பேச்சை வளர்த்தும் பொருட்டு, “அப்பறம் ஷாலு, சொல்லு, அந்த வினோத் என்ன பண்ணான்?” என்று கிண்டினான்.
“அவனா, பொழப்ப கெடுத்தான்..... அமெரிக்கா போலாம் வான்னு கூப்பிட்டுகிட்டு போய் அடைச்சு வெச்சான்..... செலவுக்கு கூட பணம் தரலை.... என்னை அடிமையாக்கினான்..... என்னை குழந்தை பெத்துக்கணும்னு கட்டாயப்படுத்தினான்” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

“ஒ அப்படியா, நீ என்ன பண்ணினே?” என்றது வேறு ஒரு குரல். அந்தக் குரலை உணராமல், “நான் இவனுக்கெல்லாம் மசிவேனா என்ன, அவன் என் பேர்ல போட்டிருந்த பணம், என் பேர்ல வாங்கின சொத்து பத்திரங்கள், அவன் வாங்கித் தந்த விலை மதிப்பில்லாத சாமான்கள் உடைகள் நகைகள்னு எல்லாத்தையும் சுருட்டிகிட்டு அவனுக்கே தெரியாம கல்தா குடுத்துட்டு ஓடி வந்துட்டேன்..... என்னை அங்க காணாம தேடிகிட்டு இருக்கும் அந்த பைத்தியம்..... விவாகரத்து பத்திரம் வெச்சுட்டு வந்துட்டேன்.... இனி அவன் என்னை ஒண்ணுமே பண்ண முடியாது.... அது ஒரு பேக்கு, என்னை யாரானும் அடக்கி ஆள முடியுமா... நான் ஒரு சுதந்திரப் பறவை இல்லையா” என்றாள் இருமாப்பாக.

“அடிப்பாவி” என்று எண்ணிக்கொண்டாள் சங்கீதா.
“அப்போதே, “யார பேக்குன்னே, என்னய்யா ஷாலு?” என்றபடி இன்னொரு ரெண்டாவது குரல் கேட்டது. ஷாலு அங்கே வெலவெலத்து போயிருப்பது அறிந்தாள் சங்கீதாவிற்கு. அப்போது யாரோ நடு கதவின் தாழ்பாளை நீக்கும் சப்தம் கேட்டு சங்கீதா கதவை மெல்ல தள்ளினாள். ஒரு அங்குலம் மட்டுமே திறந்து வைத்துக்கொண்டு உள்ளே பார்க்க அங்கே சித்து இவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி கண் சிமிட்டினான்.

அங்கே வினோத் வந்திருக்க, அவனைக் கண்டுதான் நடுங்கிக்கொண்டிருந்தாள் ஷாலு.
“நீங்க, நீங்க.... இங்க எப்பிடி?” என்றாள்.
“உன்னைப் பிரிந்து என்னால வாழ முடியுமா டார்லிங், நீ என் ஆசை மனைவி இல்லையா.... அதான் ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுனு’ உன் பின்னாடியே ஓடி வந்துட்டேன்” என்றான் அவன் கிண்டலாக. ஆனால் அவன் முகத்தில் ரௌவ்த்ரம் தெரிந்தது.
“ஷாலு, உன் மாமனாரப் பார்க்கணும்னியே வந்திருக்கார் பார்க்கலாமா?” என்று “வாங்க” என்று அழைத்தான். அதே நேரம் போலிஸ் ஆபிசர்கள் உள்ளே நுழைந்தனர்.
“இதோ, உன் மாமனார் மச்சினர் எல்லோரும் உன்னை மாமா வீட்டுக்கு அழைத்துப்போக வந்திருக்காங்க..... அங்கதான் உனக்கு கல்யாணம் கருமாதி எல்லாமே நடக்கும் கிளம்பு” என்றான் வினோத் கேலியாக. ஷாலு முற்றிலும் துவண்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

சங்கீதாவிற்க்கு புரிந்தது. ‘சித்து, அவள் சொல்படி எல்லாம் ஆடி நடித்து போலிசின் உதவியுடன் வினோதை வரவழைத்துள்ளான்..... அவனின் உதவியோடு அவள் மீது புகார் செய்து அவளை கைது செய்ய ஏற்பாடு செய்துவிட்டான்’ என்று. ஓடிப்போய் சித்துவை அணைத்துக்கொள்ள மனம் நாடியது. மெல்ல ஷாலு முன்னே போலீசுடன் நடக்க சித்து பின்னே ரெண்டடி எடுத்து வைத்து கதவை முழுமையாகத் திறந்தான்.

“சித்து” என்று அவனிடம் ஓடிப்போய் நெருங்கி நின்று கொண்டாள்.
“என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” என்றாள்.
“உஷ் பேசாம இரு, இதெல்லாம் வேண்டாம்” என்று இடது கையால் அவள் இடுப்பை வளைத்து பிடித்தபடி நின்றான்.
“தேங்க்ஸ் வினோத், உங்களால்தான் என் வாழ்க்கை பிழைத்தது, இதான் என் வுட்பி சங்கீதா.... எங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையையும் காப்பாத்தீட்டீங்க” என்று அவன் கை குலுக்கி நன்றி சொன்னான்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் சித்தார்த்.... உங்க மெசேஜ் கிடைச்சதனால்தான் இவ இங்க இருக்கான்னு தெரிஞ்சுது, என்னோடு ஆசை வார்த்தை பேசி, மணமுடித்து அங்க வந்தபின் என் வாழ்க்கையையே நரகமாக்கிட்டா.... எப்போ பாரு ஷாப்பிங், ஊதாரிச் செலவு..... நான் டாக்ஸ் கணக்கிற்காக இவள் மீது முதலில் வாங்கிய சொத்து பத்தியெல்லாம் எப்படியோ தெரிஞ்சுகிட்டு, எல்லா பத்திரத்தையும் என் லாக்கர்லேர்ந்து திருடிக்கிட்டு நகை நாட்டோட கம்பி நீட்டிட்டா... நல்லவேளை நான் உழைத்து சம்பாதித்து பறிபோகாமல் காப்பாற்றிட்டீங்க” என்றான் அவனும்.
“என்னோடு மனம் ஒத்து குடித்தனம் பண்ணி இருந்தா, இயல்பாகவே இதெல்லாம் அவளுடைய சொத்துதான்.... அது புரியல இந்த லூசுக்கு.... என்ன பண்றது..... எல்லாம் என் தலை எழுத்து...” என்றான்.
“கங்க்ராட்ஸ் சங்கீதா” என்றான் அவளிடம். “தேங்க்ஸ்” என்றாள் அவள் நாணத்துடன்.
“ரொம்ப உசத்தியானவர் உங்க அவர்” என்றான். அவள் அவனை நிமிர்ந்து கண்களில் ஒரு வித பெருமையோடு பார்த்துக்கொண்டாள். அவன் அவள் இடையை மேலும் இறுக்கிக்கொண்டான்.
“சரி நான் வரேன், போலிஸ் கிட்ட போகணும்... இன்னமும் எனக்கு வேலை இருக்கு, ஷாலு இந்த ஷாக் ட்ரீட்மென்ட்னால, நல்லபடியா இனியானும் திருந்தி ஒழுங்கானவளா மாறி என்னோட குடித்தனம் பண்ண ஒத்துகிட்டா அவளையும் அழச்சுகிட்டு திரும்பி போய்டுவேன்..... அவ திருந்தலைனா அவ பேர்ல சீட்டிங் கேஸ் போடத்தான் வேணும்..... என்ன பண்ண போறாளோ பார்க்கணும்” என்றான் பெருமூச்சுவிட்டபடி.

வினோத் விடைபெற அந்த அறையை விடுத்து
, அவளோடு பக்கத்து அறைக்கு வந்தான் சித்து. நடுக்கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான்....
இந்த அறையில் அவள் அமர்ந்து அவனையே பார்த்திருந்தாள். அன்று இவனை என்னவெல்லாம் பேசினேன் நான்..... ஷாலுவை மறக்கவில்லை, தன்னிடம் பேசியதெல்லாம் நடிப்புஎன்று... ஏசினேனே, அவன் உள்ளம் எப்படி கலங்கி இருக்கும்.... அவற்றுக்கு நான் இவனிடம் இப்போது எந்த முகத்துடன் மன்னிப்பு வேண்டுவதுஎன்று அவளுக்கு அவமானமாக இருந்தது. அவள் அருகில்  படுக்கையில் அமர்ந்து, ம்ம் என்றான் புருவம் உயர்த்தி. அவள் தலை கவிழ்ந்தாள்.
என்னடா சகி?” என்றான்

மன்னிச்சுடுங்க சித்துஎன்று நழுவி அவன் பாதங்களை பணிந்தாள்.
ஹே என்ன இது?” என்று பதறி அவளை அள்ளிக்கொண்டான்.
என்னடி இதெல்லாம், பைத்தியமா நீ..... உன் நிலையில் நானிருந்தால் இதை விட மோசமா பேசியிருப்பேன் நடந்திருப்பேன்..... மறந்துடு ஹனிஎன்றான். அவள் அழுகை முட்ட உங்களை கஷ்டப்படுத்தீட்டேன்என்றாள்.
அவள் கண்களை தன் உதட்டால் ஒற்றி எடுத்து
,
இதுக்கெல்லாமா அழறது ஹனி?” என்றான். அவள் முகம் தெளியாமலே இருக்க, “ஒண்ணு வேணா பண்ணலாமா?” என்றான். அவள் ஆவலுடன் என்ன என்றாள்.

உனக்கு மன்னிப்பு கேட்கணும் அவ்ளோதானேஎன்றான் ஆம்என்றாள் கண்ணீருடன்.

சரி அப்போ நான் அன்னிக்கி கேட்டேனே அந்த ட்ரீட் இப்போ தந்துடு, என்ன?” என்றான். அவன் எதைச் சொல்கிறான் என்று விளங்க சில நொடிகள் ஆகின. சி போஎன்று முகம் சிவந்து கவிழ்ந்தாள்.
ப்ளீஸ் ஹனிஎன்றான் அவளை மேலும் தன்னோடு இறுக்கியபடி. அதற்குமேல் தாளாமல் அவன் மார்பிலேயே சாய்ந்தாள்.... அதையே அவளது ஒப்புதலாக எடுத்துக்கொண்டான்.... அவள் முகம் நோக்கி குனிந்தான்.... நான்கு இதழ்களும் சேர்ந்து அங்கே கவிதை எழுதின.... மேலும் அவள் முகம் எங்கும் அவன் முத்தக் கோலம் வரைந்தான்.... அவள் முகம் மேலும் சிவந்து துடிப்பதை கண்டு சிரித்துக்கொண்டான்.

பிளீஸ் சித்துஎன்றாள் அவன் காதோடு. சரி என்று விடுவித்தான். அவள் கண்மூடி கிடக்க அவள் உதடுகள் துடித்துக்கொண்டு இருந்தன. அவனை அது என்னமோ செய்தது... மீண்டும் அவளைத் தழுவி அவள் கழுத்தில் முகம் பதித்தான். கைகள் எல்லைமீற ஒரு நிலையில் அவள் தடை போட்டாள். அவனை வெட்கத்துடன் விலக்கி எழுந்து அமர்ந்தாள்.

போலாம், இங்க இருந்தா வம்புஎன்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கி அவனுடன் எழுந்து நடந்தாள். அவளது வீட்டில் அவளை இறக்கி விட காரில் கூட்டிச் சென்றான்.
எப்படி சித்து?” என்று கேட்டாள்.
அதுவா, ஒண்ணுமில்லைடா...என்று சொல்லத் துவங்கினான்.
அன்னிக்கி இவ ஆபிஸ் வந்தா இல்ல, தன்னோட என்னையும் வெளியே இழுத்துகிட்டு போனா இல்லை, அப்போவே இவ உள் நோக்கம் எனக்கு புரிஞ்சுபோச்சு....... இவள தன்மையாத்தான் பேசி ஜெயிக்கணும்னு திட்டம் போட்டேன்..... பணம் தானே போனா போகுதுன்னு குடுத்து ஷாப்பிங் செய்ய அனுப்பீட்டு, நான், என் நண்பன் ஒருத்தன் போலீஸ்ல பெரிய பொறுப்புல இருக்கான், அவன்கிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன்..... அவன் மூலமா வினோத கண்டு பிடிச்சோம்.... அவருக்கு இவளப் பத்தி மெசேஜ் அனுப்பினோம்..... உடனே இங்கே வர முடியுமான்னு கேட்டோம்.... அவரும் இவளைத்தான் தேடிகிட்டு இருந்தாரு போல, உடனே வரேன்னு கிளம்பி வந்துட்டாரு....

இவ வாயாலேயே அவ செய்த அனைத்தையும் ஒத்துக்க வைக்கணும்னு போலிஸ் நண்பன் பிரபுவின் உதவியுடன் இந்த ரூம் எடுத்தோம்..... உனக்கும், நான் வாயால சொல்லாமலே உண்மை புரியணும்னு இந்த நடுவுல கதவு இருக்குற மாதிரி அறையை நான் தேர்ந்தெடுத்தேன்.... பிளான்படி நான் அவகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி உண்மையை வரவழைச்சேன்.... வெளியே நின்னு இவ பேச்சை கேட்டுகிட்டே வினோத் மற்றும் போலிஸ் ஆட்கள் உள்ளே வந்தாங்க.... அதன்பின் நடந்தது தான் உனக்கே தெரியுமே ஹனிஎன்றான்.

கிரேட் சித்து... இது புரியாம நான் ரொம்ப சின்னத்தனமா நடந்துகிட்டேன்என்றாள் வருத்தத்துடன்.
அதை விடவே மாட்டியாடீ நீ?” என்று செல்லமாக கடிந்து கொண்டான். அவனின் உரிமையான டீ எனும் விளிப்பில் கரைந்தாள் சங்கீதா. அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவன் தன் வீடு அடைந்தான்.
ஹப்பா கடவுளே எவ்வளவு பெரிய கண்டத்தில் இருந்து என்னை காப்பாற்றி உள்ளாய் தெய்வமே என்று நன்றி கூறிக்கொண்டான்.

அடுத்த வாரத்திலேயே முகூர்த்த நாள்.... சங்கீதாவின் திருமணம் வெகு விமர்சையாக சித்தார்த்துடன் நடந்துகொனண்டு இருந்தது. எப்போதும் போல நண்பர்கள் இவர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தனர்.

நல்ல நேரத்தில் அவன் அவள் சங்கு கழுத்தில் தாலி கட்ட
, கண்களில் நன்றியுடன் அவன் முகம் பார்த்தாள்.... மாலையில் இதோ, வரவேற்பு..... ஒத்த உடையுடன் பொருத்தமான ஜோடியாக நின்றனர். அன்று அவனருகே நின்றது அவளுக்கு நினைவு வந்தது. என்ன என்பதுபோல அவளை கண்டு புருவம் உயர்த்தினான். ஒன்றும் இல்லை என்றாள் கண் அமர்த்தி. காற்றில் உதடு குவித்தான். தலை தாழ்த்தி சிவந்தாள். இப்படி அவர்களின் ஒவ்வொரு ரகசிய தருணத்தையும் கமிரா படம் பிடித்து பாதுகாத்தது.

கண்ணில் ஆனந்தக் கண்ணீர் மல்க, தன் மகளுக்கு ஒரு விதமான அவமானமும் இன்றி அவளுக்கு முன்பு நிச்சயித்தவன் கையாலேயே தாலி பாக்கியம் கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்து நின்றனர் கணேசன் சரோஜா தம்பதியினர்.
சுனில் ஓடி ஓடி விருந்தினர்களை சந்தோஷமாக உபசரித்துக்கொண்டு இருந்தான்.
ஒற்றை பிள்ளையின் வாழ்வு செழித்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டனர், மனமும் கண்களும் நிறைந்து, மரகதம் ராமலிங்கம் தம்பதியினர்.

சிஸ்டர், நீங்க உங்க அன்பால சாவித்திரியையே மிஞ்ஜிட்டீங்க.... தாலி கட்டாம ஓடினவன தேடி பிடிச்சு உங்க அன்பால கட்டிப்போட்டு மீண்டும் அவன் கையாலையே தாலி வாங்கிகிட்டீங்களே, யு ஆர் ரியலி கிரேட்என்றான் ஷ்யாம்.
போடா, என் மனைவிய இவன் பாராட்டறான் புதுசா, எனக்குத் தெரியாத என்ன, என் சகியின் அருமைஎன்று அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் சித்தார்த்.

நிறைந்தது.





7 comments:

  1. Wow..super ending...no happy beginning for Sidhu and Sangeetha!!

    ReplyDelete
  2. Wow asusual...keep writing wth gud health, wealth...migavum arunai,arputham..ovvoru episode padikum pothum Kan mun vanthachu kaaachi..wow...arumai... character eduthu Sona vitham romba Azhagu. Continue Ur great stories...

    ReplyDelete
  3. Arumaiyana முடிவு.. வாழ்க வளமுடன். 🙏🏻

    ReplyDelete
  4. Very well written.(Hindi Gaya)Back to South Episode was too Good Eagerly Awaiting The Next Episode.

    ReplyDelete
  5. Suuuuuuper story sudha. ... .

    ReplyDelete