Friday 1 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 8


“கீர்த்தி உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன், நீங்களும் இப்படி அவசரப்படாதீங்க” என்றாள்.
“போதும் அர்பிதா, இனி நான் என்ன சொல்லணும் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு யாரும் சொல்ல வேண்டாம்..... இனியானும் என் வாழ்கையை எனக்கு வேணுங்கற மாதிரி நான் வாழ ஆசைப்படறேன்.... பட்டது வரை போதும்...

அவ  எனக்கு  செய்த கொடுமைகளும் போறாது னு அவதானே முதல்ல என்கிட்டே விவாகரத்து கேட்டிருக்கா, நானே ஒத்துகிட்டாலும் அவளுக்கு தான் நான் வேண்டாமே, அவ எனக்கு செஞ்ச கொடுமைக்கு பின்பும் நான் அவளுடன் மனமொத்து வாழ்வேன்னு நீ மட்டும் எப்படி எதிர்பார்க்கலாம் அர்பிதா..... போதும் ப்ளீஸ் லீவ் மி அலோன்” என வைத்துவிட்டான்.

நாலு நாள் வீடே அமைதியாக இருந்தது. “என்னஅண்ணா இதெல்லாம்?” என அழுதாள் காஞ்சனா போன் இல்
“ஒண்ணுமில்லைமா.... உனக்கு இனி அண்ணி இல்லை அவ்வளவே தான்” என்றான்.

“கீர்த்திகண்ணா, எடுத்தேன் உடைதேன்னு இப்படி பண்ணாதேப்பா, அவ தப்பே பண்ணி இருக்கட்டும், ஆனா அதே போல நாமும் தப்பு பண்ணணுமாபா, நல்லா யோசி” என்று மன்றாடினார் கற்பகம்.

சில வாரங்கள் போன பின் கொஞ்சம் உடல் தேறி தெம்பு வந்ததும் அர்ச்சனா அழைத்தாள். ரிசீவரை காதுக்கு குடுத்து வெறுமனே நின்றான்.
“நாந்தான் அர்ச்சனா பேசறேன்” என்றாள்.
“ம்ம்” என்றான்.
“எப்படி இருக்கீங்க..... ஏன் என்னை அப்படி ஹாஸ்பிடல்லேர்ந்து அனாதை மாதிரி விமானம் ஏற்றி அனுப்பீட்டீங்க, உங்களுக்கே தப்புன்னு தோணலையா, நான் எப்படி வந்து சேர்ந்திருப்பேன்னு கூட நீங்க கண்டுகலை, அதன் பின் போனும் பண்ணலை..... இங்கே வந்தா இவங்க என்னடானா ஆளுக்காள் என்னையே குத்தம் சொல்வது போல பேசறாங்க.... வார்தைகளால கொல்றாங்க.... நீங்க அர்பிதாகா ட என்ன சொன்னீங்க, என்ன பேசினிங்க..... அவளோட உங்களுக்கு என்ன பேச்சு..... எது வேணும்னாலும் என்னை கூப்பிட்டு என்கிட்டே இல்ல நீங்க கேட்டிருக்கணும்....?”

“ஆமா நான் அபார்ஷன் செஞ்சுகிட்டேன், அதுக்கு என்ன வந்துது இப்போ..... காலம் இருக்கு அப்பறமா பெத்துகிட்டா போச்சு..... நான் என்ன பெரிய செய்யக் கூடாத குத்தம் பண்ணீட்டேன்னு இப்படி நடந்துக்கறீங்க.....நான் துரோகம் செய்தேன், ப்ளான் போட்டு ஏமாத்தீட்டேன்னு அர்பிதாகா ட சொன்ணீங்களாமே, ஏன் நீங்க என்னை ஏமாற்றலையா என்ன, நான் லண்டனுக்கு போலாம் அங்கேயே குடித்தனம் செய்யலாம்.... நானும் நீங்களும் னு தனியா ஜாலியா வாழலாம்னு எவளோ கனவு கண்டேன், என் கிட்ட சொல்லாம கூட கம்பனியில போய் நான் போகலைன்னு சொன்னீங்களே.... அது தப்பில்லையா, நான் செய்தது மட்டும் பெரிய குத்தமா போச்சா?” என கத்தி தீர்த்தாள்.
“முடிச்சுட்டியா வைக்கட்டுமா?” என போனை வைத்தான்.

“என்ன கொழுப்பா பேசிகிட்டே இருக்கும்போது கட் பண்றீங்க?” என திரும்ப அழைத்து கத்தினாள்.
“இனி உன்னோட பேச எனக்கு இஷ்டமில்லை, என்னை பொறுத்தவரை நான் செஞ்சது சரி... உனக்கு நீ செஞ்சது சரி..... அதனால இந்த முடிவிலேயே இருப்போம்.... எனக்கு இனி உன்னோட வாழ விருப்பமில்லை....நீ அனுபிச்ச பத்திரத்தில கை ஒப்பம் இட்டு அனுப்பி இருக்கேன்.... நீயும் கை எழுத்து போட்டு கோர்ட்டுக்கு அனுப்பு போதும்.... இனி போன் செய்யாதே... என் பொறுமையை சோதிக்காதே” என்றபடி போனை வைத்தான்.

விவாகரத்துவேண்டும் என அவனை பயமுறுத்தவே அவள் ஏற்பாடு செய்திருந்தாள்.... அதை கேட்டு அவன் அவள் சொல்லும்படி நடப்பான், அவள் கேட்டுகொண்டபடி செயல்படுவான்... அப்படி அவனை கீலு பொம்மையாக ஆட்டி வைக்கலாம் என்றுதான் அவள் இந்த விபரீத விளையாட்டை துடங்கி இருந்தாள். ஆனால் இப்போதோ கதை வேறு முகமாக திரும்பி தன்னையே அதளபாதாளத்தில் தள்ளுகிறது என உணர்ந்தாள்..... தன் ஆட்டத்தின் தீவிரம் தன்னையே பாதித்து விட்டது என உணர்ந்தாள்..... இனி ஒன்றும் செய்ய முடியாது... விதியை நொந்து பயனில்லை என அழுதாள்... கலங்கி திணறி போனாள்.

‘ஐயோ, என்ன சொல்றான் இவன்... டைவர்ஸா?’ என கலங்கினாள். தாய் தந்தையிடம் சொன்னால் என்ன நடக்கும் என அவளுக்கு தெரியுமே, அர்பிதவிடம் புலம்பினாள்.
“இப்போ புலம்பி என்னடி செய்யறது.... கீர்த்தி எவ்வளோ நல்லவரு, அவர் அருமை உனக்கு தெரியலை..... எவ்வளோ பாடு படுத்தி வெச்சே, நான் எவ்வளோ சொன்னேன், ஏதானும் காதில வாங்கினியாடீ, இப்போ அழுது புலம்பி துடிச்சா ஆச்சா.... அவர் என்கிட்டே எப்பவோ தன் முடிவ சொல்லீட்டாரு.... நான் உனக்காக அவர்கிட்ட வாதாடி பார்த்துட்டேன், ஒண்ணும் பிரயோஜனம் இல்லாம போச்சு..... எல்லாம் நீயே எழுதிகிட்ட உன் தலைவிதி..... அனுபவிச்சுதான் ஆகணும்” என்றால் அவள் ஆத்திரம் தீர.

அவன் தந்தை இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு மனம் உடைந்தார்.... அவர் உடல் நிலை சீரழிந்தது.... பார்த்துக்கொண்டே இருக்கையில் அவரது முடிவும் சட்டென ஏற்பட்டு போனது....ஒரு கோடு பக்கத்தில் பெரியதாக இன்னொன்று போட்டால் இது தானே சிறிய கோடாகி விடுவது போல, தந்தையின் மறைவுக்கு முன் அர்ச்சனா நடந்துகொண்டது அவனுக்கு சிறு துரும்பாக கண்ணிலேயே படாமல் போனது.

அன்னையை தேற்றி புதிய கம்பனி வேலையில் முழு மனதாக தன்புத்தியை செலுத்தினான்.
அந்த லைசென்ஸ் இந்த சான்றிதழ் மினிஸ்டரை பார்ப்பது, பர்மிஷன் வாங்குவது என ஓடிற்று காலம்.... அடுத்த ஒரு ஆண்டின் முடிவில் வெற்றிகரமாக தான் எண்ணிய வண்ணம் தன் யூனிட்டை திறம்பட நிறுவி நல்லபடி நடத்தி வெற்றி கண்டான் கீர்த்தி.

அவன் தாயும் தங்கையும் கூட பெண்கள்தான் என்றாலும் ஒட்டுமொத்தமாக பெண்கள் மீது ஒரு வெறுப்பு அசூயை ஏற்பட்டு போனது.... அதனால் எங்கே எந்த பெண்ணை சந்தித்தாலும் வெறுப்புடனும் கசப்புடனுமே பேசினான், ஒதுங்கியே வாழ்ந்தான்.... அவனது கம்பனியிலும் கூட பெரும்பான்மையாக ஆண்களையே வேலைக்கு வைத்துக்கொண்டான்.... சில பெண்கள் மட்டுமே விதிவிலக்காக பணியில் உள்ளனர்.

ஒரு பெருமூச்சுடன் தன் நிலை மீண்டான்.....‘ஆனா இவ வித்யாசமா இருக்கா, இவ நடத்தையால, குணாதிசயங்களால, தன்மையா அன்பா பண்பா பழகுற வித்த்தில வித்யாசபடறா.... அதனாலதான் சில பல நேரங்கள்ள என மனசும் தரிகெட்டு ஓடுது, அவளை நினைச்சு ஏங்குது.... இது சரி இல்லை..... அவ அசலே என்ன சொன்னா இப்போ, என்னைன்னு இல்ல, வேறே எந்த ஆண் மேலேயும் அவளுக்கு என்றுமே எந்த விருப்பமும் ஏற்படாதுன்னு சொன்னா... ஏன் அப்படி சொன்னா, நான் ஒரு பெண்ணிடத்தில் பட்ட அவதியை அவள் ஒரு ஆணிடத்தில் பட்டிருப்பாளோ. அதனாலதான் ஆண்களை வெறுத்து ஒதுக்குகிறாளா..... என யோசனையில் ஆழ்ந்தான். என்ன ஒதுக்கியும் அவள் நினைவை அவனால் தடுக்க முடியாமல் போனது..... அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை போல மீண்டும் மீண்டும் அவள் நினவு மனதை குடைந்தது.

அன்று, அவன் பேசிய பேச்சின் பின் அவளும் சூடாகவே அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு ஆத்திரத்தில் முகம் சிவக்க தோட்டத்தில் கொஞ்சம் நடந்துவிட்டு மனம் அமைதியானபின் உள்ளே வந்தாள்....கற்பகத்தின் தேவைகளை செய்துவிட்டு தனது அறைக்குள் சென்றாள்.... கண்ணாடியில் தன்னை கண்டாள்..... சித்திரபாவையாக தெரிந்த தனது உருவத்தை கண்டவள் அதை வெறுத்தாள்..... இந்த அழகுதானே அவனை அப்படி பேச வைத்தது என எரிச்சல் வந்தது.... பரபரவென அந்த நல்ல புடவையை அவிழ்த்துவிட்டு நைட்டியை அணிந்து கொண்டாள்... படுக்க சென்றாள்.

‘ச்சே, என்ன மனுஷன் இவன், ஒரு நொடியில என்னவெல்லாம் பேசீட்டான்.... என்னை என்ன னு நினைச்சான்..... ஏன் என் வாழ்வில் நான் சந்திக்கும் ஆண்கள் எல்லாருமே இப்படி மிருகங்களாக இருக்காங்க..... இவங்களுக்கு வெட்கமே இராதா..... இவனால் ஆன பலன் நான் ஆண்களை முன்னை விட இப்போ மேலும் மேலும் வெறுக்க துவங்கீட்டேன் என்பதுதான்’ என்ற கசப்புணர்வுடன் உறங்கி போனாள்.

அடுத்த நாள் முதல் என்னவே கற்பகத்தை அன்பாக கவனித்துகொன்டாலும் எந்த ஒரு காரணம் கொண்டும் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவன் கண்களில் படுவதில்லை என தீர்மானித்து கொண்டாள்.... அப்படியே சந்திக்க நேர்ந்தால் உடனே அதை தவிர்த்து நொடிகளில் மாயமானாள்.... அவனும் அதை கவனித்தே வந்தான்...
‘ஓ அன்னிக்கி அப்படி நானும் பேசி அவளும் பேசி னு ஆனபின் என் மேல வெறுப்பு கோபம் போல.... அதான் என் முன்னால வர மாட்டேன்னு ஒதுங்கறா.... நல்லது, அவளை பார்த்தா தான் என் மனசு அடங்காம படுத்துதே.... அவ அப்படியே இருக்கட்டும், என் மனசும் அலைபாயாம இருக்கும்’ என அவன் வேலையில் அவன் மூழ்கினான்.

இப்படி ஓடிய கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு நாள் முடியத்தான் வேண்டி வந்தது.
அன்று கற்பகம் ஓய்வாக மாமர நிழலில் அமர்ந்தபடி அவளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அன்று என்னவோ கலக்கமாக அவர் தோன்ற
“என்ன ஆண்ட்டி, என்னமோ மாதிரி இருக்கீங்க இன்னிக்கி, உங்களுக்கு என்ன கவலை?” என்று கேட்டாள் ஆதுரத்துடன்.

“ஒண்ணுமில்லை மனு, எல்லாம் கீர்த்தி பத்தின கவலைதான்” என்றாள்.
ஒ என மௌனமானாள்.... அவனை பற்றி எதுவுமே அவளுக்கு தெரிய வேண்டி இருக்கவில்லை.... அவன் எண்ணங்களையே அவள் வெறுத்து ஒதுக்கினாள் தானே.... அவளது மௌனம் கற்பகத்தை பாதிக்கவில்லை.... அவர் மேலே பேச்சை தொடர்ந்தார்.....

“நேத்து ராத்திரி காஞ்சனா கூப்டா இல்லையா, அதான் இவனை பத்தி இவன் வருங்காலம் பத்தி பேசினோம்..... அவளும் இவனுக்காக கவலை படறா..... அவளுக்கு கீர்த்தின்னா உயிரு.... அதான் அங்கே ஏதோ பெண்ணை பார்த்தாளாம், இவனுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணித்தாம்.... அதை என் கிட்ட சொன்னா..... என் கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம் சொல்லு... இவன்தான் பிடிச்ச முயலுக்கு மூணேகால் னு நிக்கறானே.

நடந்த ஒரு கல்யாணமும் விளங்காம போச்சு..... இவனுக்குன்னு வந்து வாய்ச்சவோ ராக்ஷஷியா வந்து சேர்ந்தா..... பாவம்ஆசை ஆசையா நாந்தான் பொண்ணு பார்த்து இவனுக்கு பண்ணி வெச்சேன்..... ரெண்டுத்துக்கும் சின்ன வயசு, அழகா அம்சமா குடித்தனம் பண்ணுவாங்க,கண் முன்னாடி னு நினச்சேன்..... எல்லாம் மண்ணா போச்சு..... ஹ்ம்ம் அவனுக்கு குடுத்து வெச்சிருந்தது அப்படி இருந்தது..... சரி அதான் முடிஞ்சே போச்சே, அதை விட்டோழிச்சுட்டு வேறே பண்ணிக்கலாமா, அதுக்கும் மாட்டேன் அடம் பிடிக்கறான்.... போதும், ஒருத்தியோட நான் பட்ட வேதனை, இனி என் கல்யாண பேச்சை எடுத்தா நான் வீட்டுக்கே வர மாட்டேன்னு மிரட்டறான்.... அதுக்காக அப்படியேவா விட்டுட முடியும் மனுமா?” என்றார்.

அவர் கலக்கம் கண்டு பாவம் எனத் தோன்றியது....
‘ஓஹோ இந்த குரங்கு மூஞ்சிக்கு கல்யாணம் வேற நடந்துதா, இவன் இப்படியே அவ கிட்ட பேசி பழகி இருந்தா அவ கண்டிப்பா ஓடி தான் போயிருப்பா’ என தோன்றியது. ச்
சே தெரியாம அப்படி பேச கூடாது என தன்னையே அடக்கி கொண்டாள்.

“எல்லாம் அவ, அந்த அர்ச்சனாவால வந்தது.....பொண்ணா அது, நானும் ஒரு பொண்ணா இருந்துண்டு இப்படி பேசறது தப்புதான் மனு.... ஆனாலும், அவ இவனையும் எங்களையும் படுத்தி வெச்சா பாரு ஒரு பாடு அப்பாடியோவ்..... ஒரு துரும்பையும் அசைக்க மாட்டா, ராஜகுமாரி மாதிரி இவனை அதிகாரம் பண்ணீண்டே இருப்பா..... எல்லாத்துக்கும் சண்டை பூசல் வாக்குவாதம்னு அவன் வாழ்க்கையை நார அடிச்சுட்டா மனு மா.... கூட நாங்களும் இந்த கூத்தை எல்லாம் பார்த்து வேதனை படறதா போச்சு..... இதுனாலேயே தான் அங்கிள் உடம்பு மோசமா போய் அவர் இறந்தும் போய்ட்டாரு” என கலங்கினார்.

‘இவனே முரடு இவனுக்கு ஒரு முரட்டாடாக்கும்... பேஷ் நல்ல ஜோடி.... அதான் வீடு போர்களமா ஆகி போச்சு போல’ என எண்ணினாள்.

“என்னவெல்லாம் செஞ்சா தெரியுமோ?” என கற்பகம் அவர் பாட்டிற்கும் சொல்லிக்கொண்டே போக மனு மெளனமாக கேட்டுக்கொண்டு அமர்ந்தாள்.... அனைத்தையும் கேட்டு முடித்த பின்தான் அவள் தன் உணர்வு பெற்றாள்....
‘இவளும் ஒரு பெண்ணா, இப்படி எல்லாம் கூட நடக்க முடியுமா என்ன.... பாவம்தான் கீர்த்தி’ என முதன் முறையாக அவனுக்க பாவம் நினைக்க தோன்றியது.....

“இந்த கீர்த்தி இப்போ இப்படி எல்லாத்துக்கும் எல்லார் மேலேயும் உன்னிடம் கூட, எரிஞ்சு விழறானே மனு, அவன் எவ்வளவு நல்லவன், சாதுவா இருந்தவன் தெரியுமா, இப்படி பிள்ளை கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும் னு அக்கம் பக்கத்துல சொல்வாங்க..... காஞ்சனா பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் அண்ணா அண்ணா னு இவன் மேல உசிரு.... போடி உன்னை மாதிரி எங்களுக்கு ஒரு அண்ணன் அமையலையேடி னு அவள கரிச்சுகிட்டே இருப்பா.... ஹ்ம்ம் எல்லா வீணா போச்சு.... அவன் குணாதிசயத்தையே மாத்தி அமைச்சுட்டு போய்டா அந்த ராக்ஷ்ஷி” என்றார்.

‘ஹ்ம்ம், அதானா ஐயா முகத்தில கடுகு வெடிக்குது.... பாவம் தான்..... நான் என் கல்யாணம் விளங்காம போய் கஷ்டப்பட்டேன்.... இவன் தனக்கும் அதே போல தன் கல்யாணத்தில கஷ்டங்கள் ஏற்பட்டு தத்தளிச்சு அவதி பட்டிருக்கான்..... நான் அவற்றை கடந்து வந்து சேவையில என்னை ஆழ்த்திகிட்டேன்..... கீர்த்தி தன் வேலையில அழ்த்திகிட்டான்..... ஒரு ஆணுடனான சந்திப்பு எனக்கு மிகவும் குறைவு என்பதால் நான் என் கசப்பை வெளிகாமிப்பதில்லை...... அவனுக்கு அப்படி பெண்களை சந்திக்கும் நேரங்கள் ஏற்படும் போது தன் வெறுப்பை ஓபனாக காண்பிக்கிறான்.... அதுதான் எங்களுக்குள் வித்யாசம்..... ஆனால் உள்ளே நாங்கள் அனுபவித்த ரணம் ஒன்றுதான்....’

‘ஐயோ, என்ன கஷ்டபட்டானோ?’ என தோன்றியது....‘ஹ்ம்ம் போனா போகுதுடா, உன்னை மன்னிச்சுடறேன்’ என நினைத்துகொண்டாள்... சிரிப்பு வந்தது..... முகத்தில் அது புன்சிரிப்பாய் மலர்ந்தது போலும்..... அதை கண்ட கற்பகம் “என்னமா மனு, நீயே சிரிச்சுக்கறே..... என் பிள்ளை கதை உனக்கும் கூட சிரிப்பா இருக்கா?” என்ன என்றார் வேதனையுடன்.

உடனே திகைத்து தடுமாறி நிமிர்ந்து “ஐயோ இல்லை ஆண்ட்டி..... நான் அதுக்கு சிரிக்கலை..... நாந்தான் ஒண்ணும் வாழ்ந்துடலைன்னு பார்த்தா, உங்க பிள்ளை கதியும் எனக்கு மேலதான் இருக்குனு விரக்தியில தான் சிரிச்சேன்” என சமாளித்தாள்.
“உண்மைதான் மா..... சீதா தேவியை விட மோசமா நீ உன் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிச்சுட்டே..... அவனும் ஒண்ணும் கம்மியா அனுபவிக்கலை மனு மா.... என் மகன் கிட்ட யாரு பேசறது இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லி யாரு சொல்றது..... வெட்டி போட்டுடுவான்” என்றார் பெருமூச்சுடன்.
“பார்க்கலாம் ஆண்ட்டி, காலம் கனியும் நல்லதே நடக்கும்” என்றாள்.

அதற்கு பின் அவனுடன் வேண்டும் என்றே போய் பேசுவது பழகுவது இல்லை என்றாலும் அவன் முன் சகஜமாக நடமாடினாள்.... அவனுக்கு வேண்டியதையும் கூட முன் போல புன்னகையுடன் செய்தாள்..... அதை அவன் ஆச்சர்யத்துடன் கண்டான்.... ஆனால் ஒன்றும் பேசவில்லை.

அந்த ஞாயிறு ஓய்வாக அமர்ந்திருந்தான் கீர்த்தி.... தன் அன்னையுடன் அமர்ந்து அப்படி மனம் விட்டு பேசி சிரிப்பதற்கு அவனுக்கும்தான் நேரம் கிடைப்பதில்லை..... கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவருடன் பேசினான்..... அந்த கால விஷயங்களை அலசி பேசி சிரித்தனர்.....

அவர்களின் நடுவில் செல்ல விரும்பாமல் மனு ஒதுங்கினாள்.... தன் அறையில் அமர்ந்தபடி எப்போதும் போல அவளுக்கு பிடித்த கைவேலையில் ஈடுபட்டாள்..... எப்போதுமே பிடிக்கும், தனது வீட்டின் அருகிலே கற்று கொண்டது வேறு.... இப்போது இங்கே கற்பகம் வீட்டில் அழகிய தையல் இயந்திரம் வேறு இருந்தது.... அதை எண்ணெய் விட்டு செப்பனிட்டு அவள் உபயோகத்திற்கு கொண்டு வந்தாள்..... கேட்பாரின்றி கிடந்த அது இப்போது அவள் கைவண்ணத்தில் பல விதமாக தைத்து குடுத்தது.... திரை சீலைகள், டேபிள் விரிப்பு, சோபா உரை, தலையணை உரை என அவள் கைவண்ணத்தில் பூக்களும் பக்ஷிகளுமாக அழகிய வண்ணங்களில் டிசைன்களில் மின்னியது.
அதே போல அவள் அன்றும் தையலில் தன்னை மூழ்கடித்துகொண்டாள்.

“ஏண்டா பையா, நீயும் இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போறே..... காஞ்சனா கூப்பிட்டிருந்தா பா, அவா சொந்தக்காரா சைட்ல யாரோ ஒரு பொண்ணு இருக்காளாம், இவ பார்த்தாளாம்... உனக்கு பொருத்தமா இருப்பான்னு...” என துவங்கினார்.

“அம்மா, என்னைக்கோ நேரம் கிடைச்சிருக்குனு உன்னோட ஆசையா பேசலாம்னு வந்திருக்கேன்... அதை இதை பேசி அனாவசியமா என் வெறுப்பை கிளறாதே..... எனக்கு இனி திருமணம் இல்லை, அவ்ளோதான் விட்டுடு இந்த பேச்சை” .என்றான் கடினமாக.
“இப்படியே சொல்லீண்டு இருந்தா எப்படிப்பா?” என்றார் அழமாட்டா குறையாக.

“இப்படியேதான் சொல்லிகிண்டு இருப்பேன்.... என்ன பண்ண போறே..... ஏன் இன்னிக்கி உனக்கு நாந்தான் கிடைச்சேனா, எங்க உன் செக்ரடரி, அவள போட்டு அரிச்சு புடுங்கு..... என்னை விட்டுடு.... உன்னோட உக்கார்ந்து பேச வந்ததே தப்பு” என எழுந்தான்.

“டேய் டேய், நான் வேற ஒண்ணும் பேசலை, நீ உக்காருடா” என அவன் கை பிடித்து அமர்த்தினார்.
“அவளை ஏண்டா பாவம் எப்போ பாரு ஏதானும் சொல்லிக்கிட்டு இருக்கே, அவளே பாவம்டா” என்றார்.
“என்னவாம் பாவம் நீ கண்டே?” என்றான்.
அவனையும் அறியாமல் அவளை பற்றி மேலும் பேச, அவளை பற்றி தெரிந்து கொள்ள அவன் மனம் ஆசைப்பட்டது என்பதுதான் உண்மை.

“உனக்கு யாரை பார்த்தாலும் பாவம்தான், நீ ரொம்பவே வெகுளி மா... அதான் எல்லாரும் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கறா” என்றான்.
“போடா இவ அப்படி இல்லை, நானும்ஒண்ணும் நீ சொல்றா மாதிரி வெகுளியும் இல்லை..... இவ ரொம்பவே நல்ல பொண்ணுடா..... சின்ன வயசுதான் ஆனா, இந்த வயசுக்குள்ள அவ அனுபவிக்காத கொடுமையே இல்லை கீர்த்தி” என்றார் கண்ணீர் மல்க.

“என்னம்மா இது அவள பத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டு நீ கலங்கற, அப்படி என்ன நடந்துடுச்சு அவ வாழ்க்கையில..... நீ இப்படி எல்லாம் கலங்கி நான் பார்த்ததில்லையே, இப்படி செய்யறது உன் உடம்புக்கும் நல்லதில்லை.... தன் சோக கதை எல்லாம் சொல்லி இப்படிதான் அவ உன்னை மயக்கினாளா, உன்னை இப்படி அழ வைக்கறாளா... இதெல்லாம் நல்லவா இருக்கு?” என இரைந்தான்.

“போதும்டா பேத்தாதே.... அவ ஒண்ணும் என்னை மயக்க வேண்டிய அவசியம் இல்லை..... என்னை மயக்கி அவளுக்கு என்ன ஆக போறது.....”
“அதானே, உன்னை மயக்கவே வேண்டாம்..... நீயே தான் அவ கிட்ட மயங்கி இருக்கியே” என சிரித்தான்.
“நல்ல பெண்களை பார்த்தா பாசம் தானா ஏற்படும்.... அதுபோலதான் இதுவும்.... உனக்கு இதெல்லாம் இப்போ புரியாது..... நான் முழுசா சொன்னா அப்போ நீயும் ஒப்புவே” என்றார்.

“என்னமோ பீடிகை எல்லாம் பலமா இருக்கு.... சரி உன் ஆசைக்கு சொல்லு” என்றான் பிகுவுடன். உள்ளுக்குள் அவளை அவள் வாழ்வை பற்றி அறியும் ஆவல் இருந்தது.



2 comments:

  1. Idha idha idhai dhaan ethir paarthaen! Now our Keerthi is going to melttttt!

    ReplyDelete