Sunday 3 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 10


“நான் இதெல்லாம் சும்மா வாங்கிக்க மாட்டேன்.... என் சம்பளத்தில கட் பண்ணிக்கறதா இருந்தா மட்டுமே” என்றாள்.
சென்றவன், நின்று திரும்பி அவளை முறைத்தான்.
“என்ன முறைப்பு, ஒத்துகிட்டாதான்” என்றாள்.

“வேணாம் ஓத படுவே, போ உள்ள” என்றான் மெல்லிய குரலில்.
“அப்போ நீ செஞ்ச ரசத்துக்கும் கணக்கு போட்டு சம்பளத்தில ஏத்தீடறேன்” என்றான்.
அவள் அவனை முறைத்தாள்.
“என்ன, அதுக்கு இது சரியாபோகும் செய்யட்டுமா?” என்றான். அவள் மெளனமாக உதட்டை பிதுக்கிவிட்டு உள்ளே எடுத்து சென்றாள்.... பிரித்து பார்த்ததில் அழகிய வர்ணங்களில் கண்ணை கவர்ந்தது.....‘நல்லா தான் செலெக்ட் பண்ணி இருக்கான்’ என சிரித்துக்கொண்டாள்.

அடுத்த நாள் அதிலிருந்து ஒரு லாவெண்டர் வர்ண உடையை எடுத்து அணிந்துகொண்டு ஆபிஸ் செல்ல தயாரானாள்..... ரெடியாகி வெளியே வந்தவள் அவனை காண கண்கள் தேட, அவன் அவசர மீட்டிங் என கிளம்பி விட்டிருந்தான்.
‘ஒ ஆமா, இன்னிக்கி அந்த வெளிநாட்டு பார்டி வராங்கதானே, நானே சீக்கிரம் போகணும்.... ஜி எம் காத்திருப்பாரு’ என தானும் சற்றே ஏமாற்றத்துடன் விரைவாக கிளம்பினாள்.

“ஆண்ட்டி நான் கிளம்பட்டுமா, உங்களுக்கு ஏதேனும் தேவையா?” என வந்து நின்றாள். “ஒண்ணுமில்லை மா..... ரொம்ப அழகா இருக்கேடா இன்னிக்கி, புதுசா?” என கேட்டார்.
“ஆமா ஆண்ட்டி, உங்க மகன் நேத்து வாங்கீட்டு வந்து குடுத்தார்” என்றாள்
“ஓஹோ அப்படியா, பேஷ் நல்லா இருக்குடா. போயிட்டு வா” என்று வழி அனுப்பினார்.

அவள் ஆபிசை அடைந்து, ஜி எம் கு உதவ என பிசியாகி போனாள்.
“மனஸ்வினி, இந்த கோப்புகளை எம் டி சார் கிட்ட காமிச்சு சட்டுனு கை ஒப்பம் வாங்கீட்டு வந்துடு” என அனுப்பினார்.
அவன் அறைக்குள் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
“கம் இன்” என்றான். உள்ளே வந்தவளை பார்த்து அசந்து போனான்.... திகைத்து கண் மூட மறந்து தன்சுழல் நாற்காலியில் தலை சாய்த்து வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டான்.... கண் கொட்டாமல் அவளையே பார்த்துகொண்டு அமர்ந்தான்.
“சர்” என்றாள்.
“ம்ம்” என்றான் எங்கேயோ நினைவுகள் சஞ்சரிக்க.
“சர், இதில கை எழுத்து” என்றாள்.

“மை மை.... யு லுக் கார்ஜியஸ், ஆசம்” என்றான். அவனது சொல் கேட்டு அவளுக்கு பல நாள் கழித்து அவளையும் அறியாமல் சிவந்து போனது.
“தேங்க்ஸ்” என்றாள். “எல்லாம் உங்க செலக்ஷன் தானே” என முனகினாள்.
“இருக்கலாம், ஆனா இவ்வளோ அழகா உனக்கு சூட் ஆகும்னு நான் நினைக்கலை” என்றான் கண் எடுக்காமல்.
பைலை அவன் கை கீழ் வைத்து “இங்க” என்றாள்.
“என்ன?” என கலைந்தான்.
“கை எழுத்து” என நினவு படுத்தினாள். ஒ என மீண்டு, கை ஒப்பம் இட்டான்.
“படிச்சு பார்த்துட்டு கை எழுத்து போடறதில்லையா?” என்றாள்.

“ஹ்ம்ம் ஆமா பண்ணணும்தான், நீ படிச்சிட்டே தானே?” என்றான்.
“நான் தானே டைப் பண்ணினேன்” என்றாள்.
“அப்போ கவலை இல்லை.... நான் படிக்கணும்னு அவசியம் இல்லை” என்றான் சிரித்தபடி.
“அப்படீனா?” என்றாள் கேள்வியாக
“அப்படிதான்” என்றான்
“என் மேல எப்படி அவ்ளோ நம்பிக்கை?” என வினவினாள்
“நம்பிக்கை, ஒருத்தர் மேல சொல்லி வர்றதில்லை.... காரண காரியங்கள் பார்த்து வர்றதில்லை, சில பேர்கிட்ட தானே தோணும், மனசு சொல்லும்.... நீ போ, ஜி எம் காத்துகிட்டு இருப்பாரு” என அனுப்பினான்.

“வரேன் அண்ட் தாங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?” என்றான்.
“என் மேல் வெச்ச நம்பிக்கைக்கு..... அதுக்குனு எதையுமே எப்போதுமே படிக்காம கை ஒப்பம் இடாதீங்க” என்றாள்.
“சரி மேடம்” என்றான் பவ்யமாக. அதை கண்டு வாய்பொத்தி சிரித்தாள்..... தலை ஆட்டி விடைபெற்றாள்.... நடையில் ஒரு துள்ளலுடன் வெளியே வந்து ஜி எம் அறையை அடைந்தாள்..... இது நாந்தானா, இவனிடம் இவ்வளவு சகஜமாக பேச துவங்கிவிட்டேன், அவனும்தான் என்னமா பேசறான்.... ஜோக் அடிக்கிறான்’ என சிரித்துக்கொண்டாள்.

சொல்லத் தெரியாத பரவசம், ஒருவர் மீது மற்றவருக்கு ஒரு வித பற்று, அக்கறை, அன்பு பாசம் எல்லாம் உருவாகி இருந்தது..... இது காதலா என கேட்டால்,
‘ஒ அப்படியா, நான் அப்படி யோசிக்கலை...’ என தான் இருவருமே கூறுவர்.... ஆனாலும், மனம் சந்தோஷமாக நிறைவாக இருந்தது.... புண்பட்ட இருவர் நெஞ்சங்களும் பதனிடப்பட்டு புத்துணற்சியுடன் தங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக வாழத் துவங்கி இருந்தனர்..... அதுவே இப்போதைக்கு மனதுக்கு இனிமையாக இருந்தது.

கற்பகம் இவை எல்லாம் கவனித்தார்தான்.... மௌன சாட்சியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்....‘சாமி ஏதோ கணக்கு போட்டு செய்யுது செய்யட்டும், நடப்பது நல்லதாக இருக்கட்டும்’ என நினைத்து கொண்டார்.
‘ஏண்டா, ரெண்டு பேரும் நல்ல புரிதலோடு இருக்கீங்களே காதலா, கல்யாணம் பண்ணிகுங்களேன்?’ என அவரே கேட்டால் வேதாளங்கள் இருவருமே முருங்கை மரத்தில் ஒன்றாக ஏறிவிடும் அபாயம் இருந்தது..... அதனால் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்தார்.

இந்த நேரம் கீர்த்தியின் அத்தை மகன் மும்பையில் இருந்து இங்கே வேலை விஷயமாக வந்தான்.... கீர்த்தியும் அவனும் வெகு க்ளோஸ், ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.... சிறு வயதில் ஒன்றாக ஆடி விளையாடி களைத்தவர்கள்.

அவன், ராஜன் வருகிறான், என்றதுமே கீர்த்திக்கு சந்தோஷம் கரை புரண்டது.
“பாரு மா, எவ்வளோ வருஷம் ஆச்சு... இந்த ராஸ்கலுக்கு இப்போதான் வர வழி தெரிஞ்சிருக்கு” என அவனை ஆரத்தழுவி திட்டினான்.
“என்ன மாமி பண்றது, என் வேலை அப்படி..... ஊர் ஊரா திரியற நாய் பொழப்பு..... இப்போதான் வந்துட்டேனேடா கீர்த்தி” என அவனும் அணைத்துக்கொண்டான்.

ஊர் கதை சின்ன வயசு கதைகள் என அனைத்தும் பேசி களைத்தனர்.... அப்போது கையில் காபியுடன் உள்ளே வந்தாள் மனஸ்வினி.

“வாவ்! யாரு டா, இது பச்சை கிளி?” என்றான் ராஜன்.
“டேய் அடங்குடா, அவங்க அம்மாவோட கவர்னஸ்” என்றான்.
“ஒ அப்படியா கவர்னஸ்ங்கற, இவ்வளோ அழகா இருக்காங்களே, நீ உன் கையவெச்சுகிட்டு சும்மாவா இருக்கே?” என்றன் கீர்த்தியின் காதோரம்.
“ச்சே வாய மூடுடா,,, நானும் அப்படிபட்டவன் இல்ல.... அந்த பொண்ணும் அப்படி கிடையாது... நீ அடங்கு, அடக்கி வாசி..... என்ன பேச்சு இது.... மற்ற பெண்களை பத்தி இப்படியா பேசுவாங்க” என பல்லை நறநறவென கடித்து துப்பினான்.

“ஓகே கூல் கூல்மான்.... என்னடா அவங்கள சொன்னா உனக்கு இவளோ கோபம் வருது..... உனக்கும் அவளுக்கும் சம்திங் சம்திங்?” என்றான் கண் அடித்து.
“ச்சே நீ திருந்தவே மாட்டே டா.... இன்னுமும் அப்படியே இருக்கே பாரு... அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான்.
“ஓ இல்லையில்ல அப்போ ஒதுங்கு” என்றான்.
“டேய் டேய், அதுக்குனு நீ ரூட் போடலாம்னு யோசிக்க கூட செய்யாதே.... நெருப்பு, அனலா கக்கிடுவா, பேசாம ஒழுங்கா ஒடம்ப காப்பாத்திகிட்டு ஊர் போய் சேருடா மவனே” என்றான்.

“என்னைப்பத்தி நீ கவலைபடாதே டா..... என்னை நான் பார்த்துக்குவேன்” என சிரித்தான் ராஜன்.
மனுவிற்கு ஏனோ அவன் பேச்சை கேட்டதுமே அவனை பிடிக்காமல் போனது.....‘தண்ணி பாம்பு கடிக்காது’ என புரிந்தாலும் இவனிடம் விலகி இருப்பது நலம் என நினைத்துகொண்டாள்.

சாப்பிடும் நேரத்திலும் எப்போதும் போல கற்பகம் கீர்த்தியுடன் சாப்பிட அமரவில்லை.... மேலே தன் அறையிலேயே இருந்துவிட்டாள்.
“என்னடா, மனுவ காணுமே... சாப்பிட கூப்பிடுகிட்டு வா” என்றார் கற்பகம்.
அவள் வந்தால் ராஜன் இன்னும் என்ன பேசுவானோ, காலையிலேயே அவன் பேசியதை அவள் ரசிக்கவில்லை என உணர்ந்தான்....
“அவளுக்கு கூச்சமா இருக்கும், புதுசா இவன் முன்னாடி சாப்பிட.... விடுமா, அப்பறமா சாப்பிட்டுகுவா” என கூறி பார்த்தான்.
“அதென்னடா, இவன் என்ன அந்நியமா அசலா, நம்ம ராஜந்தானே, நீ போ கூப்பிடு” என்றார்.

வேறே வழி இன்றி மேலே சென்றான்... கதவை தட்டிவிட்டு தள்ள, திறந்து கொண்டது.... கட்டிலில் படுத்தபடி ஏதோ புத்தகம் வாசித்து கொண்டு இருந்தாள் மனு.
“சாப்பிட வரலியா?” என்றான்.
“இல்ல, நீங்க எல்லாம் சாப்பிடுங்க.... எனக்கு இப்போ பசி இல்லை.... நான் அப்பறமா சாப்பிடறேன்” என்றாள் அவன் கண் பார்க்காது.
“உனக்கும் பசிக்கும் னு எனக்கு தெரியும்..... ராஜன், அவனுடைய பேச்சு உனக்கு பிடிக்கலை, அவனை அவாய்ட் பண்ண சாப்பிட வரலை, பசி இல்லைன்னு சொல்றே...... நீ வா, அவன் அனாவசியமா ஒண்ணும் பேசாம நான் பாத்துக்கறேன்..... அவன் ரொம்பவே நல்லவந்தான், ஆனாலும் கொஞ்சம் அப்படி இப்படி பேசுவான்.... ப்ளீஸ் எனக்காக அவனை இந்த ரெண்டு நாள் பொறுத்துக்கோ.... கீழ வா சாப்பிடலாம்” என்றான்.

“கீர்த்தி, நீங்க ஏன்... எனக்காக ஏன் பார்க்கறீங்க, ஆப்டரால் நான் இங்க யாரு....ஒரு வேலைக்காரி, அவ்வளவேதான், இந்தளவு முக்கியத்துவம் குடுத்து என்னை நடத்த வேண்டாமே” என்றாள்
“நீங்க போங்களேன் ப்ளீஸ்... எனக்கு நிஜமாவே பசில்லை” என்றாள்.
“உன் இஷ்டம், அவனை இல்லை, என்னைதான் நீ அவாய்ட் பண்ணற இப்போ” என திரும்பி படி இறங்கினான்.
சட்டென அவளும் கட்டிலை விட்டு இறங்கி தன் உடையை தலைமுடியை சரி செய்துகொண்டு கீழே இறங்கினாள்.
சாப்பிட பரிமாற என உதவினாள்..... கற்பகத்திற்கு கூட இருந்து எப்போதும் போல உதவினாள்.
“நீ சாப்படலியாமா?” என்றார்.
“நான் அப்பறமா சப்பிட்டுக்கறேன் ஆண்ட்டி” என்றாள்.
“இன்னும் என்ன அப்பறம் விழுப்புரம்... உக்காரு, எல்லாருமா சாப்பிடலாம்” என அதட்டினார். அமர்ந்தாள்.

“உன் பேர் என்ன, என்ன செய்யறே?” என அவளையே கேள்விகள் கேட்டு துளைத்தான் ராஜன்.
“மனஸ்வினி” என்றாள்
“ஆஹா அழகான பேரு..... யோசிச்சு தான் வெச்சிருக்காங்க.... கல்யாணம் ஆயிடுச்சா?” என கேட்டான். அவன் கேள்வியில் கீர்த்தி கற்பகமே அதிர்ந்து போயினர்.... ஆனால் மனுவோ அசராமல் “இல்லை” என்றாள்.
“ஒ அப்படியா, அப்போ நான் அப்ளிகேஷன் போடலாமா?” என்றான் துணிச்சலுடன்.
அவள் ஏறிட்டு அவனை முறைத்தாள்.
“டேய் அடங்குடா” என கீர்த்தி எவ்வளவோ சொல்லியும் ராஜன் “இருடா, என்னதான் சொல்றா னு பாப்போம்.... கவர்ன்ஸ் னு சொல்றீங்க, இவ்வளோ மதிப்போட நடத்தறீங்க அவளும் அதுக்கேத்தார் போல கெத்தா இருக்கா.... என்னமோ சம்திங் ராங் இங்க” என்றான் ஒபனாக.

“ராஜன்” என அதட்டினான் கீர்த்தி.
“ஷ், நீ இரு கீர்த்தி, மனஸ்வினி சொல்லு, நான் அப்ளிகேஷன் போடலாமா?” என்றான். அவள் கீர்த்தியை முறைத்துவிட்டு “இல்லை” என தலை அசைத்தாள்.
“ஏன் கூடாது, அழகா இருக்கே, இன்னும் கல்யணம் பண்ணிக்கலை, வேற யாரும் புக் பண்ணீட்டாங்களா ஒரு வேள, கீர்த்தியோ?” என்றான் கேலியாக.
இப்போது இருவருமே திகைத்து அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்... பின் ராஜனை எரித்துவிடுவது போல பார்த்தனர்.

“என்னடா, நீயும் என்னையே முறைக்கறவன், இதில எந்த உண்மையும் இல்லைனா அவ என்னை ஒத்துக்கலாம்தானே, முன்புன் அறியாதவன்னு யோசிக்கறாளா ஒருவேள, மாமி நீங்கதான் சொல்லுங்களேன் என் அருமை பெருமைகளை” என்றான் சிரித்தபடி.

“உன்னை பத்தி அருமை பெருமையா அவ கிட்ட சொல்லி என்ன ஆக போகுது.... விடுடா ராஜன், சாப்பிடு, மத்தவங்களையும் சாப்பிட விடு” என அடக்க முயன்றார்.
“இல்ல, இல்ல மாமி, மனு என்னை தெரிஞ்சுகிட்டா என் அப்ளிகேஷனை ஒப்புக்குவாளோ என்னமோ...நீங்க சொல்லுங்க மாமி” என்றான்.
“ராஜன், நீ திருந்தவே மாட்டியாடா, இதுக்குதான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வெச்சிருக்கணும் உனக்கு, ஊர் ஊரா நாயா அலைஞ்சு புத்தியும் அப்படியே ஆயிடுத்து உனக்கு. உன்னைப்பத்தி இதைதவிர அப்படி பெருமையா பேச என்னடா இருக்கு?” என்று முற்றுப்புள்ளி வைத்தார். “என்ன மாமி, இப்படி டாமேஜ் பண்ணீட்டீங்களே என் இமேஜை?” என வருந்தினான்.

“நானே சொல்றேன் மனு, எங்கப்பாம்மாக்கு நான் ஒரே பையன், நல்ல வேலையில இருக்கேன், ஆனா ஊர் ஊரா சுத்தர வேலை..... நிறைய சம்பாதிக்கிறேன், சொந்த கார் வீடு வெச்சிருக்கேன்... போதுமா, இப்போ ஓகேவா?” என்றான்
‘இவன் என்ன விளையாட்டு பிள்ளையா, அல்லது சீரியசாக பேசுகிறானா?’ என அவனை எவ்விதமும் கணிக்க முடியாமல் திகைத்தாள் மனு. கீர்த்தியை பார்க்க அவனோ கண்ணால் ‘ப்ளீஸ் அவன் பேச்சை மன்னிச்சுடு’ என கெஞ்சினான்.

“எக்ஸ்க்யூஸ்மீ” என சாப்பிட்டதோடு போதும் என எழுந்தே விட்டாள்.
“ஐயோ, என்ன மனு, பாயசம் எல்லாம் சாப்பிடவே இல்லையே, வடை வேற பண்ணி இருக்கா சுபா” என்றார் கற்பகம்,
“அதை எல்லாம் உங்க விருந்தாளிக்கு குடுங்க ஆண்ட்டி... எனக்கு திகட்டுது....உங்களுக்கு ஏதானும் உதவி தேவைபட்டா என்னை கூப்பிடுங்க ஆண்ட்டி ப்ளீஸ்” என கூறிவிட்டு கண்ணால் அவனை வெட்டிவிட்டு மேலே ஏறி சென்றுவிட்டாள்.

“என்ன இது ராஜன், நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை, அவ பாரு சரியாகூட சாப்டாம போய்டா.... இப்படியா வம்பு பண்றது..... வயசுதான் ஆகுது உனக்கு, ஆனா நீ இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை” என்று கடிந்துகொண்டார் கற்பகம்.

மனு முழுவதுமாக சாப்பிடாமல் எழுந்து போனது கீர்த்திக்கும் கூட வருத்தமே.
“ராஜன் நீ இப்படி அவள சீண்டறத நிறுத்தணும்” என்றான் கடினமாக.
“ஹே கூல் மான், என்ன இது, சாதாரண கவர்னஸ் தானே.... அவளை நான் என்ன கேலி பண்ணினா உனக்கென்ன, அவ்ளோ ரோஷமும் கோவமும் வருது?” என்றான் அவனை ஆழம் பார்த்தபடி.
“அவ கவர்ன்ஸ் மட்டுமில்லை, அம்மாவின் ஒரு நல்ல கம்பானியன்..... என் ஆப்சில என் ஜி எம்முக்கு செக்ரடரியும் கூட..... யாரா இருந்தாலும் பார்த்து பேசணும்” என்றான் அதே கோவத்துடன்.

“ஒ அது வேறயா, வீட்டில மதிப்பான கவர்னஸ், ஆபிஸ்ல மதிப்பான உத்யோகம், ஹ்ம்ம் சம்திங் இஸ் தேர், என்னமோ இருக்கு.... அவ என்ன அவ்ளோ உசத்தி.... அவளுக்கு இவ்வளோ மரியாதை, இதுல உள் குத்து என்னது?” என்றான் அவனை நேராக கண்டு.

“எல்லாரும் உன்னை மாதிரி இருக்க மாட்டங்க ராஜன்.... நீ நினைக்கிறா மாதிரி எல்லாம் இங்கே ஒண்ணுமில்லை” என்றான் லேசாக முகம் கன்றி.
“ஓகே நீ சொல்ல மாட்டே, விடு, இனி அவளைப் பத்தி நான் பேசலை” என்றான்.

ஆனாலும் அடுத்து வந்த மூன்று நாட்களும் கூட மனுவை வேண்டும் என்றே சீண்டினான்.... அவளை சுற்றி சுற்றி வந்தான்.... அசிங்கமாக பேசவில்லை, தொடவில்லை என்றாலும் அவனின் அந்த கிண்டல் கேலி எல்லாமே அவளுக்கு வெறுப்பாகதான் இருந்தது.... ஆனால் ‘அந்த வீட்டின் உறவினன், விருந்தாளி..... தான் அவனிடம் ஒன்றுமே பேச முடியாது, கூடாது’ என வாய் மூடி மௌனித்திருந்தாள்.
கீர்த்திக்கும் அவள் நிலை புரிந்தது..... அவ்வப்போது அவனும் மீண்டும் மீண்டும் ராஜனை அடக்கிக்கொண்டுதான் இருந்தான் ஆனால் அவன் கேட்டால்தானே.

அடுத்த நாள் காலை ராஜன் கிளம்பிவிடுவான் என்ற நிலை.... ஹப்பா என்று இருந்தது கீர்த்திக்கும் மனுவிற்கும்.
அன்று இரவு மாடி பால்கனியில் கூடை சேரில் அமர்ந்து காற்றாட கீர்த்தியும் ராஜனும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“கீர்த்தி நான் சிலது பேசணும்” என்றான் கனத்த தீவிரமான குரலில்.
“என்ன, பேசினது போதாதா... இனி என்ன புதுசா பேச போறே?” என்றான் கீர்த்தி.

“இல்ல, இது கொஞ்சம் சீரியஸ்.... நான் மாறவேயில்லை, அப்படியே இருக்கேன் னு சொன்னீங்க நீயும் மாமியும்..... ரைட், நான் மாறலை, மாற விரும்பலை.... அதனாலதான் நான் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கேன்..... நீ மாறணும்.... மாறியே ஆகணும்..... உன் பழைய வாழ்க்கை, அது முடிஞ்சு போச்சு கீர்த்தி, இன்னமும் நீ அதை நினைச்சுகிட்டு உன் அற்புதமான மனசை வாழ்க்கையை வீணாக்கிக்கிட்டு இருக்கே டா.... எனக்கு அது ரொம்ப வருத்தமா இருக்கு.

“இங்க வர்றதுக்கு முன்னாடி நான் காஞ்சனா வீட்டுக்கு போயிருந்தேன்..... அவ மாமிகிட்ட கொடுக்க சொல்லி சிலது தந்தா, அதை கலெக்ட் பண்ண போனேன்..... உன்னை உன் நிலையை எண்ணி அவ ரொம்ப கவலைப்பட்டா, வேதனையோட கண்ணீர் வடிச்சா.....உன்னைப்போல யாருக்கானும் கிடைக்குமா கீர்த்தி..... நான் இங்கே வரும்போதே ஒரு முடிவோட தான் வந்தேன்.... உன்னை பழைய கீர்த்தியா ஆக்கணும்னு.

அதுக்கேத்தார்போல வந்ததுமே உன் அழகிய கவர்னசை பார்த்தேன்.....கொஞ்ச நேரம் சும்மா சீண்ட எண்ணித்தான் நான் பேசினேன்..... ஆனா, அதுக்குள்ளாகவே அவ கண்கள்ல உன் மீது இருந்த அக்கறையை பார்த்தேன்.... அன்பை பார்த்தேன்..... உன் கண்களில் அவள் மீது உள்ள பாசத்தை பார்த்தேன்... காதலை பார்த்தேன்.... அதுனாலதான் வேணும்னே தான் அவளை வம்புக்கு இழுத்தேன்.....

நான் நினச்சது சரியாபோச்சு..... அவளுக்காக நீ வக்காலத்து வாங்கினே, என்னிடமே சண்டை போட்டே... என்னை மிரட்டி அடக்கினே..... அவளும் நான் அவளை சீண்டும்போதேல்லாம் நீ என்ன நினைக்கிற, அவளுக்காக நீ பேச வருவியா னு உன்னைத்தான் பார்த்தா..... கண்ணால உதவிக்கு கூப்டா..... என்ன இதெல்லாம், நீங்க பேசாம இருந்தா எப்படின்னு மிரட்டினா”

“உங்கள நீங்க நல்லா புரிஞ்சுகிட்டு, ஆனாலும் மற்றவருக்காக எண்ணி, அதை மறைத்து வாழறீங்கன்னா அது அனாவசியம் கீர்த்தி..... ஆனா இன்னும் உங்க மனசை நீங்க ரெண்டு பேருமே உணரலை னா அது முட்டாள்தனம்.....அவ மனசில நீ இருக்கே, உன் மனசில அவ மட்டும்தான் இருக்கா...... இதை புரிஞ்சுகிட்டு நீங்க பேசி தெளிவாக்கிக்குங்க, சீக்கிரமா ஒண்ணா சேருங்க..... அவளுக்கு அதுக்குண்டான எல்லா தகுதியும் இருக்கு கீர்த்தி..... உன்னை மாமியை இந்த வீட்டை அவ கண்ணு போல பார்த்துப்பா”
“இந்த நல்ல முடிவு, நல்லபடி நடந்தா, நான் மாமி காஞ்சனா இன்னும் நம்ம குடும்பத்தார் எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படுவோம் கீர்த்தி” என்றான்.


No comments:

Post a Comment