Monday 12 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 4


வாங்க சார் என்று வரவேற்றாள். உட்காரச்சொன்னாள்.
அவள் நிலைகண்டு அவனுக்கும் தர்மசங்கடம் ஆகியது.
சாரி, நான் போன் பண்ணீட்டுதான் வரணும்னு, நீங்க போனையே எடுக்கல. அம்மாக்கு பயம், உங்களுக்கு எதுவானும் ஆயிடுச்சோ நேத்து பூரா  மருத்துவமனையிலேயே இருந்துடீங்களேன்னு, அதான் புறப்பட்டு வந்துட்டேன் என்றான் அவள் முகம் காணாமல்.

பரவாயில்லை சார். குழந்தைக்கு ஏதானும்...” என்றாள்.
ஆம் மதுரா, பவி எழுந்துட்டா. ஒரே அழுகை, அம்மா வேணும்னு அமர்க்களம்....
அங்கே நாங்க யார் சொல்லியும் கேட்கலை
... டாக்டர் வேற மேலும் அழாம பாத்துக்கச் சொல்லி இருக்காரு... மெள்ள மெள்ளமாத்தான் புரியவைக்கணும் இல்லியா. மன்னிச்சுக்குங்க, திரும்ப திரும்ப உங்கள சிரமப்படுத்தறேன். கொஞ்சம் வரமுடியுமா?” என்றான் தயங்கியபடி.
ஓ அப்படியா. சாரி, நான் வந்து படுத்து அசந்து தூங்கீட்டேன் இல்லேன உங்களுக்கு இந்த சிரமம் இருந்திருக்காது... அப்போதே போனில் விஷயம் தெரிந்திருந்தால் நானே கிளம்பி வந்திருப்பேன் இந்நேரம் என்றாள் மன்னிப்பாக.
தோ ஒரு நொடியில வந்துடறேன் சார் என்றபடி உள்ளே மாயமானாள்.

வித்யா அவளது அந்த சின்ன ஹாலை சுற்றிபார்த்தான் உட்கார்ந்த இடத்திலேயே
. கச்சிதமாக அழகாக இருந்தது. லட்சுமிகரமாக விளங்கியது.  சுத்தமாக இருந்தது.
ஷோகேசில் சில புகைப்படங்கள் இருந்தன... அருகில் சென்று பார்த்தான். மதுரா பெற்றோருடன் போலும், சின்னப் பெண்ணாக, பின் கல்லூரி பருவத்திலும். அதன் அடுத்தபடியாக இன்னமொரு சம வயது பெண்ணோடு இருந்தாள் ஒரு படத்தில்.
பெற்றோர் இப்போது இல்லையா, தனக்கென யாரும் இல்லை என்றாளே பாவம் இது என்ன கொடுமை, இந்த வயதில் தனியாக.... அதுதான் இவ்வளவு உயர்ந்த செக்யுரிட்டி உள்ள வீட்டில் இருக்கிறாள். ரொம்பவே ஸ்மார்ட் என்று மெச்சிக்கொண்டான்.
ஐந்து நிமிடத்தில் தான் வேறு உடை மாற்றி தலை சீவி பின்னலிட்டு கையில் காபியுடன் பிரசன்னமானாள் மலர்ந்த சிரிப்போடு.
இந்தாங்க சார். நீங்க காபிதான் குடிப்பீங்கனு தெரியும்... முத முறையா வீட்டிற்கு வந்திருக்கீங்க, ப்ளீஸ் எடுத்துக்குங்க... நான் ரெடி, குடித்து முடித்ததும் கிளம்பலாம் என்றபடி எதிரே அமர்ந்தாள் தன் காபி கோப்பையுடன். இருவரும் பேசாமல் அருந்திமுடித்து கிளம்பினர்.
அவள் வீட்டை ஒரு முறை சுற்றிபார்த்துவிட்டு கைபையை ஒருமுறை சரிபார்த்துவிட்டு சாவிகொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வந்தாள். அவன் காரை எடுக்க, போய் அமர்ந்தாள்.

ரொம்ப தாங்க்ஸ் மதுரா. இந்த உதவிக்கு எல்லாம் எப்படி நான் நன்றி சொன்னாலும் போதாது... என்ன கைம்மாறு செய்யப்போறேனோ என்றான் வண்டி ஓட்டியபடி.
ப்ளீஸ் சார். இட்ஸ் நத்திங். விட்டுடுங்க என்றபடி வெளியில் பார்த்தாள்.
வீட்டை அடைந்ததுதான் தாமதம் பவியின் அழுகுரல் வாசல் வரை கேட்டது.

ஐயோ என்றபடி சட்டென இறங்கி உள்ளே ஓடினாள். ஓடிப்போய் அவள் அறையில் காண மம்மீ என்று அலறிக்கொண்டு ஓடிவந்தது.
ஐயோ செல்லம் அப்படி ஓடக்கூடாது... நான்தான் வந்துட்டேனே டா... அழுகை நிறுத்து... சமத்து இல்லை என் தங்கம் இல்லை என்று இடுப்பில் தூக்கிக்கொண்டு தோளில் சாயத்துக்கொண்டாள். அப்போதும் விக்கியபடி இருந்தது. லேசாக உடம்பு சுட்டது. பின்னோடு உள்ளே வந்த வித்யா இவை அனைத்தையும் கண்டு மனம் நிம்மதி உண்டாயிற்று. ‘ஆனால் எத்தனை நாள் இப்படி...’ என்ற பயமும் வந்தது. “லேசா சுடுதே சார் என்றாள்.
ம்ம் ஆமாம், டாக்டரை கூப்பிட்டு கேட்டேன்... கொஞ்சம் இருக்கும்... அதே மருந்த கண்டின்யு பண்ணினா போதும்... இரண்டு நாள் கழித்து கூட்டி வாங்கன்னு சொன்னார் என்றான். அப்படியே அவளை தோளில் சாய்த்துக்கொண்டே தட்டிகொடுத்தபடி மெல்ல நடந்தாள் மதுரா. ‘தாயில்லா தனக்கு அந்தச் சின்ன பிஞ்சின் மனதின் ஏக்கம் புரியாதா என்று எண்ணினாள்.

அம்மாவைக் கண்ட நிம்மதியில் தூங்கியது பவி
. ஆயினும் கையில் கெட்டியாக அவளின் புடவை நுனியை பிடித்திருந்தது. அவளை படுக்கையில் படுக்கவைத்து நிமிரப்போனாள் மதுரா. முந்தானை நுனி பவியின் கையில் வகையாய் சிக்கி இருக்க புடவை நெகிழ்ந்தது. ஒரே கூச்சமும் வெட்கமுமாக சட்டென்று குனிந்துகொண்டாள். குழந்தையோடு ஒட்டி நின்று மெல்ல தன் புடவையை விடுவித்தாள். இதை ஒரு கணம் கண்டுவிட வித்யா சரேலென அங்கிருந்து நகர்ந்து வெளியேறிவிட்டான்.

அவளும் வெளியே வர பார்வதி அவள் கையை பிடித்து மதுரா மன்னிச்சுக்கோமா... குழந்தை இப்படி அடம் பிடிப்பானு நினைக்கலை. உன்னை மறுபடியும் தொந்தரவு பண்றோம் என்றாள்.
அதேல்லாம் ஒண்ணும் இல்லைமா... நீங்க எப்பிடி இருக்கீங்க, உடம்பு தேவலையா?” என்று கேட்டாள்.
காமு காபி தரவா?” என வந்தார்.
வேண்டாம் ஆண்ட்டி, இப்போதான் கிளம்பும் முன் சாருக்கும் எனக்குமாக அங்கே கலந்தேன் என்று மறுத்தாள்.
கொஞ்ச நேரம் டிவி பார்த்தபடி அமர, “மதுரா ஒரு ரிக்வெஸ்ட் என்றான் மெல்ல .
என்ன சார்?” என்றாள்.
இன்னிக்கி நைட் இங்க...”  என்று அவன் தயங்க, “அம்மா மதுரா, இன்னிக்கி மட்டும் இங்கே தங்கமுடியுமா உங்க வீட்டுல ஏதானும் சொல்லுவாங்களா?” என்றார் பார்வதியும்.
இல்லை அதேல்லாம் இல்லைமா... சரி தங்கறேன் என்றாள் மிகுந்த தயக்கத்துடன்.
ரொம்ப தாங்க்ஸ்... இப்படி ஆயிடுச்சு... மன்னிச்சுடுங்க என்றுவிட்டு வித்யா மேலே சென்றுவிட்டான் தன் வேலைகளை பார்க்க என.

அத்யாயம் எட்டு
ஏம்மா உங்க வீட்டில யாரெல்லாம் இருக்கா உன்னைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே?” என்று கேட்டார் பார்வதி.
எனக்குனு யாரும் இல்லைமா... நான் ஒற்றைப் பொண்ணு... நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும்போதே ஒரு கார் விபத்துல அம்மா அப்பா போய்ட்டாங்க... சுற்றமும் சொந்தமும் என் சுமை வேண்டாம்னு ஓடிட்டாங்க... நான் இருந்தத வெச்சு படிச்சு முடிச்சு வேலைய தேடிகிட்டேன்... எனக்குனு தனியா சின்னதா ஒரு பிளாட் வாங்கி அதில் தனியாத்தான் இருக்கேன்மா என்றாள் குரல் கம்மியது ஆனால் ஒரு நிமிர்வோடு இருந்தாள்.

அடப்பாவமே. என்னடி இது கொடுமை. ஒன்னப்போல ஒரு நல்ல பொண்ணுக்கு...” என்று அங்கலாய்த்தார் பார்வதி.
இத்தனை வருடமா தனியாவா இருக்கே?” என்றார்
இல்லைமா. எனக்கு வசுமதினு ஒரு நெருங்கிய தோழி இருக்கா... அவ பெற்றோர் இப்போ மதுரையில இருக்காங்க... பள்ளிவரை ஒண்ணா படிச்சோம். கல்லூரியின்போது அவள் முதல் ஆண்டு என்னோட  சேர முடியல.. அங்கேயே ஏதோ கல்லூரியில சேர்ந்தா. அங்கே ஒண்ணும் சரியாவரலை. அதற்குள்ளதான் என் வாழ்க்கையில சூறாவளி . பிறகு நான் இங்கே வீடு வாங்கி குடிவந்ததும், அவ பெற்றோர் அவள என்கூட அதே கல்லூரியில சேர்த்து என்னோடவே இருக்கவும் சம்மதிச்சாங்க. இடைப்பட்ட விடுமுறைகள்ள நாங்க ரெண்டு பேருமா அங்க அவங்க வீட்டுக்கு போய்டுவோம். கல்லூரி மற்றும் எம் பி ஏ முடித்தோம். இருவருக்கும் ஒரே அலுவலகத்தில வேலையும் கிடைத்தது. போன ஆண்டு வரைக்கும் ஒண்ணாவே இருந்தோம். இப்போதான் அவங்க வீட்டில அவளுக்கு வரன் பாத்துட்டாங்க. அதனால அவ பெற்றோரோட இருக்கா. இந்த சில மாதமா தனியா இருக்கேன் என்றாள் பெருமூச்சோடு.

அதற்குள் அம்மா என்று கூப்பிட்டது பவி. பார்வதியை ஒரு சங்கடப் பார்வை பார்த்தபடி எழுந்து ஓடினாள்.
என்னடா செல்லம் இங்கேதான் இருக்கேன்... எங்கியும் போ மாட்டேன்.. நீ தூங்கு கண்ணு என்று தட்டிக்கொடுத்தாள்.
தூக்கம் வல்லை என்றது.
சரி ஏதானும் சாப்பிட்டியோ?” என்று கேட்டாள்.
எங்க... ஒண்ணுமே தொடலை.. மருந்து மட்டும்தான் வித்யா அதட்டி மெரட்டி குடுத்தான்... அதுக்கே ஆர்பாட்டம் தாங்கலை என்றார் பார்வதி.
அச்சோடா அப்படீன்னா தங்கம், நீங்க பாட் கர்ளா? என்றாள்.
இல்லை என்றது
குட் கர்ள்னா  ஏதானும் சாப்பிடணுமே என்றாள். சரி என்று தலை அசைத்தது.

என்னம்மா ஆகாரம்?” என்று கேட்டாள். அவளது ரிப்போர்டை எடுத்து பார்த்தாள். இளம் சூடாக பால் பானங்கள் அல்லது சூப் , மற்றும் ரசம் சாதம் என்று இருந்தது.
சரிமா இப்போ சூப் குடுக்கறேன். இரவு வேணா ஹார்லிக்ஸ் மாறி ஏதானும் குடுக்கலாம்...” என்று கூறிக்கொண்டே சமையல் அறைக்கு சென்றாள். ‘என்ன நான் பாட்டுக்கு சுவாதீனமாக இப்படி என்று எண்ணி வெளியே வந்து அம்மா சூப் காமு ஆண்ட்டிகிட்ட பண்ணிகுடுக்க சொல்லட்டுமா என்றாள் தயங்கியபடி.
அதெல்லாம் அவளுக்கு பண்ணத் தெரியாது மதுரா... நாமதான் பண்ணணும் நானே வரேன் என்று அவர் மெல்ல எழுந்திருக்க,
“அப்படீன்னா நானே பண்றேன்.. நீங்க உக்காருங்கமா என்று உள்ளே போனாள்.

உள்ளே சென்று கொஞ்சம் காரட், காபேஜ், பீன்ஸ், உருளை என எடுத்துக்கொண்டு சன்னமாக துருவினாள்.  பின் காமுவிடம் கேட்டு கார்ன் மாவு வாங்கி வைத்துக்கொண்டாள். காய்களை வேகவைத்து பின் அதே நீரில் கொஞ்சமாக உப்பும் மிளகுபொடியும் தூவி கார்ன் மாவையும் ஒரு ஸ்பூன் போட்டு கொஞ்சமாக பால்விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஆற்றினாள். பொறுக்கும் சூட்டில் ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

பவிகுட்டி வாங்க, சமத்தா இத குடிப்பீங்களாம்... அப்போதான் நீங்க குட் கர்ள் என்று தாஜா செய்தாள்.
நான் கார்டூன் பார்த்துண்டே சாப்பிடுவேன் என்றது.
சரியென டிவியின் முன் சோபாவில் அவளை தன் மடியில் அமர்த்தி கொஞ்சமாக ஸ்பூனால் ஊட்டிவிட்டாள். துளியும் சிந்தாது, அடம் பிடிக்காது சமத்தாக சாப்பிட்டது பவி. அப்போது அதைக்கண்டபடி கீழே இறங்கி வந்தான் வித்யா ஒரு இயலாமை பார்வையோடு.

அடிப்போக்கிரி, இதப் பாரேன் வித்யா, உலக அதிசயம்... அடம் பண்ணாம மிச்சம் வைக்காம சாப்பிட்டுடுத்து” என்று மெச்சிக்கொண்டார். மதுரா உள்ளே சென்றிருக்க என்னமா நீ, ஏதோ உதவிக்குனு கூப்பிடிருக்கோம் அவங்களைப் போய் இதெல்லாம் செய்ய சொல்லிக்கிட்டு... சூப் இல்லைனா வெறும் ரசம் சாதமா நீயே ஊட்டி இருக்கக் கூடாத, இல்லேனா நான் வந்து செய்திருப்பேனே என்று கடிந்துகொண்டான்.
நான் ஒண்ணுமே சொல்லலைபா... அவளேதான்...” என்று முனகினார் பார்வதி.

இந்த பவிய என்ன
பண்ணினா தேவலை என்று மண்டையை பிய்த்துக்கொண்டான். இவளால தானே இதெல்லாம் எனக் கோபம் வந்தது.
மம்மீ, நான் உன் மடில என்று ஏறி உட்கார்ந்தது. திஸ் இஸ் தா லிமிட் என்று நினைத்து,
இதப்பாரு பவி, இது உன் மம்மி இல்லை... என் ஆபிஸ்ல வேலை பண்ற ஆண்ட்டி... உனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க.. நீ அவங்கள ரொம்பவே தொல்லை பண்றே... இன்னிக்கி ஒரு நாள் மட்டுமே அவங்க உன்கூட இருப்பாங்க... நாளை காலையில அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க.... புரியுதா நல்லா கேட்டுக்கோ... இது உன் மம்மி இல்லைடா பவிகுட்டி என்றான் வித்யா அன்பாக ஆனால் அழுத்தமாக
அவ்வளவுதான் கண்ணில் நீர்முட்ட நீங்க என் மம்மி இல்லையா?” என்றது மதுராவை பார்த்து. அவளுக்கு சங்கடமானது. அவள் மௌனமாக இருக்க பவி என்று அழத் தொடங்கியது.

மூடு வாய, மூடுன்னு சொன்னேன்... நீ என்ன சின்னக்குழந்தையா பிக் கர்ள்னு சொல்லிக்கற... இதென்ன அழுகை... இப்போ வாய மூடறியா இல்லையா என்று வித்யா ஆத்திரப்பட்டு கையை ஒங்க மேலும் வீறிட்டது.
போதும் வித்யா... அவ நிலைமை தெரிஞ்சும்...” என்று கண்டிக்கும் குரலில் கூறிவிட்டு பவியை தூக்கிக்கொண்டு உள் அறைக்கு சென்றுவிட்டாள் மதுரா.
என்ன இது அவர் குழந்தை அவர் திட்டரார், அதுவும் எனக்காக பார்த்து... இதுல பேரச்சொல்லி வேற கூப்பிடுட்டேனே. ஏதானும் தப்பா எடுத்துப்பாரோ என்னமோ... கண்டிச்சு வேற பேசிட்டேன் என்று குழம்பியவாறு மெல்ல பவியை மடியில் வைத்து மெல்லிய அரவணைப்பான குரலில் பேச ஆரம்பித்தாள்.
பாரு பவிகுட்டி, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா. நீ என் செல்லம், ஆனா பாரு அப்பா சொன்னதும் நிஜம்தான். நீ அழாம கேட்டா நான் எல்லாம் சொல்லுவேன் என்றாள்.
கண்ணீர் வழியும் கண்களுடன் அவளைஎன்ன என்பதுபோல பார்த்தது.
நான் உன் அம்மா இல்லைடா தங்கம்... அதுனால நான் எப்போதுமே இங்க தங்க முடியாதுடா... என் வீட்டில தானே நான் தங்கணும் இல்லையா... நீ பிக் கர்ள் ஆச்சே உனக்குதான் எல்லாம் புரியுமே தங்கம்ஸ் என்றாள்.

ஏதோ புரிந்ததுபோல மண்டையை ஆட்டியது
. “அப்போ என் மம்மி?” என்றது.
அவங்க எங்கே இருக்காங்கனு தெரியலை குட்டிமா... ஆனா கண்டிப்பா  வருவாங்கடா... அதுவரை அப்பாவையும் பாட்டியையும் படுத்தாம நீ சமத்தா இருக்கணும்... என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே, அதனால நானும் அப்பப்போ வந்து பாத்துக்கறேன் உன்ன. நீயும் என் வீட்டிற்கு வரலாம் சரியா... ஆனா நீ அங்கேயே இருக்க முடியாது நானும் இங்கேயே தங்க முடியாது குட்டி என்று கூறி முடித்தாள்.
எதுவோ புரிந்தது. “சரி நான் உங்கள பார்க்க வரலாமா நீங்களும் வருவீங்கதான் மம்மி என்று ஆரம்பிக்க.

இப்போதானே சொன்னேன்... என்னை ஆண்ட்டின்னு தான் கூப்பிடணும் சரியாச் செல்லம் என்றாள்.
நிச்சயம் வரலாம். நானும் வருவேன். சரி இப்படி வெச்சுக்கலாமா... நீங்க சமத்தா இருக்கீங்கன்னு தெரிஞ்சா நான் மாதத்தில் ஒரு நாள் வருவேன்... அதேபோல நீயும் மாதத்தில் ஒரு நாள் வரலாம் சரியா... அன்னிக்கி நாம ஜாலிய இருக்கலாம்... மிச்ச நாள்ள நானும் ஆபீஸ் போகணுமே பிசியா இருப்பேனே, உன்னை பாத்துக்க முடியாது இல்லையா என்றாள்.
ஆமாம் என்றது.
அப்போ டீலா?” என்று கட்டைவிரல் தூக்கி காட்டினாள்.
எஸ் மம் .... ஆண்ட்டி டீல் என்று தயக்கமாக சிரித்தது. “ஆனா ஆண்ட்டி இன்னிக்கி நைட் இங்க இருப்பீங்கதானே. நான் உங்ககூட தூங்கட்டுமா ப்ளீஸ்?” என்றது கண்ணைக்கொட்டி அவள் மோவாயை பிடித்து கெஞ்சியபடி.
சரி நான் உங்கப்பாகிட்ட பேசிப் பார்க்கறேன். நீ போய் கொஞ்சம் பேசாம படுத்துக்கோ செல்லம் என்று படுக்கவைத்தாள்.

பின் வெளியே வந்தாள். வித்யா உர் என அமர்ந்திருந்தான். “சார், சாரி வெரி சாரி... என்ன பேசறோம்னு தெரியாம பேரச்சொல்லி கூப்பிட்டு கண்டிச்சு பேசி எல்லாம் பண்ணீட்டேன். மன்னிச்சுடுங்க.
நான் சொல்லி புரியவெச்சிருக்கேன்... ஒத்துகிட்டா குழந்தை... மாதத்தில் ஒரு நாள் நாங்க பாத்துக்க, கூடஇருந்து  ஸ்பெண்ட்  பண்ண நீங்க அனுமதிக்கணும்... அதையும் மெல்ல மெல்லமா நான் மாத்திடறேன் என்று கூறினாள்.
அவனால் அவள் கூறுவதை உணர்ந்தாலும் நம்ப முடியவில்லை. பவி அடம் பிடிக்காமல் கூறுவதைக் கேட்டுக்கொண்டாளா, ஒப்புக்கொண்டாளா?... மாதத்தில் ஒரு நாள் தானே போகட்டும் ஒரு நல்லா செஞ்சாக இருக்கும் என்று ஆச்சர்யமாக அவளை பார்த்து பாரட்டும் தொனியில்

ஓ தாங்க்ஸ் மதுரா, எப்படி, எப்படி ஒத்துக்க வெச்சீங்க?” என்று பிரமித்தான்.
நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். அதனால் என்ன... இது அபீஸ் இல்லையே பேரச் சொன்னால்தான் என்ன. அதானே என் பேரு என்று இலகுவாக நகைத்தான். ஹப்பா என்று இருந்தது.
இன்னிக்கி இரவு என் கூட தூங்கணுமாம்...” என்றாள் மெல்ல.
ஓ அப்படியா! ஆண்ட்டிய பார்த்ததும் அப்பா வேண்டாமாமாஎன்றான்
ஐயோ, அப்படி இல்லை என்றாள் அவசரமாக.
இல்லை நான் சும்மாதான் சொன்னேன்... தூங்கட்டும்... உங்க தூக்கம் கெடுமேன்னுதான் நான் யோசிச்சேன் என்றான் புன்னகையுடன்.
அன்றிரவு அவர்களோடு உண்டுவிட்டு பின் பவியோடு அவளது அறைக்கு போய்விட்டாள்.
ரொம்ப அமைதியான நல்ல குணம் இந்த பொண்ணுக்கு என்று பாராட்டிக்கொண்டார் பார்வதி. கூடவேஹும்என்று பெருமூச்சுவிட்டபடி. “அம்மா...” என்றான் உஷ்ணமாக எரிப்பதைபோல பார்த்தான். வாயை மூடிக்கொண்டார்.

பவியை அணைத்துக்கொண்டு படுத்தபடி அவள் காதோரமாக நல்ல சில கதைகள் சொன்னாள் மெல்லிய குரலில்.
ஆண்ட்டி ஒரு பாட்டுபாடுங்களேன்என்றது.
ஐயோ, எனக்கு பாட எல்லாம் தெரியாது குட்டிமா என்றாள்.
ப்ளீஸ் என்றது. பின் மெல்லிய குரலில்

கண்ணே கமல பூ காதிரண்டும் வெள்ளரி பூ
மின்னிடும் உன் பொன் மேனி செண்பக பூ செண்பக பூ
முல்லை பூ கட்டிடமாம் முகப்பெல்லாம் புத்திரமாம்
முகப்பை திறந்து விட்டால் முல்லை பூவின் வாசனையாம்
சின்ன வாய் மணக்குதடீ சிங்கார கண்ணு
சித்திரமே பொற்கொடியே சீக்கிரம் நீ உறங்கு...” பாடினாள்

அவளை அணைத்துக்கொண்டு முகம் கொள்ளா சந்தோஷத்தோடு அவள் மேல் கால் போட்டபடி பாடும் அவள் முகத்தையே பார்த்தபடி உறக்கம் பிடித்தது குழந்தை.
பவி என்ன படுத்துகிறாளோ என்று காண வந்த வித்யா இந்த கண்கொள்ளா காட்சியை மனம் நிறைந்து பார்த்துவிட்டு சப்தம் செய்யாமல் சென்றுவிட்டான். இப்போது ஹும் என்று பெருமூச்சுவிடுவது அவன் முறை ஆயிற்று.


2 comments: