Sunday 11 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 3


மதுரா மருத்துவமனை வரவேற்பு பகுதிக்கு சென்று வினயமாக வேண்டிக்கொண்டாள்.
மேடம், குழந்தைக்கு முடியலைன்னு இங்க சேர்த்திருக்கு.... குழந்தையின் அப்பா வெளியூர் போயிருக்கார்..... இந்த நம்பரை குடுத்திருக்கேன்... அவர் கூப்பிடுவார்.... அவருக்கு நான் விவரம் சொன்னாத்தான் அவர் கிளம்ப முடியும்.... அவர் கூப்பிட்டா எனக்கு வந்து கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்என்றாள்.
கண்டிப்பா சொல்றேன் மா கவலைப்படாதேஎன்றார் அங்கிருந்த பெண்.
தாங்க்ஸ்என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தாள்.

மதியம் உணவுநேரம் தாண்டி அவசரமாக வித்யாதரன் கூப்பிட்டான்.
என்ன அவசரமா கூப்பிடுனு மெசேஜ் விட்டிருக்கீங்க? இது என்ன நம்பர்.... ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு.... யாருக்கு என்ன? ” என்றான் கவலையாக.
இல்ல குழந்தை பவிக்கு...” என்று மெல்ல ஆரம்பிக்கும் முன்பே
என்ன சொல்றீங்க, என் பவிக்கு என்ன?” என்று தவித்தான்.
சுருக்கமாக விவரங்கள் கூறினாள்... அம்மாவை வீட்டிற்கு அனுப்பி காமுவை பார்த்துக்கொள்ளச் சொல்லி இருப்பதையும் கூறினாள்.
ஓ தாங்க்ஸ் அ லாட் மதுரா... உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றது பாராட்டறதுனே எனக்கு தெரியல... நான் உடனே கிளம்ப முடியுமான்னு பார்க்கறேன்... எப்படியும் இரவுக்குள் வந்துடுவேன்... கொஞ்சம் பாத்துக்குங்க என்றான் கலங்கிப்போய்.
சார் ப்ளீஸ் காம் டவுன், நீங்க தைர்யமா இருங்க... பாப்பாக்கு பரவாயில்லைன்னு சொல்லீட்டார் டாக்டர்... இப்போ தூங்கறா... நீங்க நாளைக்கு வந்தாலும் நான் இங்கேயே இருப்பேன் குழந்தை பக்கத்திலேயே... காட் இஸ் கிரேட் சார்.... ப்ளீஸ் டோன்ட் வர்ரி என்று தைர்யம் கூறினாள்.
தேங்க்ஸ் அ பஞ்ச்... நான் பயண ஏற்பாடு ஆனதும் மறுபடி இதே நம்பருக்கு கூப்படறேன் மதுரா... யு டேக் கேர் என்று வைத்தான்.

கொஞ்சம் நிம்மதியாக
, பேசாமல் பெஞ்சில் அமர்ந்தாள். நடுவில் இரு டீ மட்டுமே உள்ளே போயிருந்தது. பசி கிள்ளியது ஆயினும் குழந்தையை விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
பின்னோடு உஷா வந்தாள். “என்னடி, இப்போ பாப்பாவுக்கு எப்பிடி இருக்கு?” என்றபடி.
பரவாயில்லை உஷா என்றாள்.
அவள் சோர்வு கண்டு போ, நான் டிபன் கொண்டுவந்தேன் உனக்கு, காண்டீன்ல போய் சாப்டுட்டு வா... அதுவரை நான் இங்க இருக்கேன் என்று அனுப்பினாள்.
ரொம்ப தாங்க்ஸ் உஷா என்றாள்.
சார்தான் போன் பண்ணி விவரம் சொல்லி அனுப்பிச்சாரு... நீ நகர முடியாம சாப்பிடாம இருப்பேன்னு கொண்டு குடுக்கச் சொன்னார் என்றாள் அவள்.

‘அட, வித்யாவிற்கு இதெல்லாம் கூடத் தோன்றி உள்ளதே இந்த அவசரத்திலும்,
என்று நெஞ்சு நன்றி கூறியது.
சாப்பிட்டு வந்து உஷாவை அனுப்பினாள். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து குழந்தை இப்போ ஆபத்தான கட்டத்த தாண்டீட்டா மேடம்... ஆனாலும் இங்கேயே இருக்கட்டும்... நாளைக் காலை வரை பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்றோம் என்று சென்றார்.

பின்னோடு வித்யா கூப்பிட்டு தான் விமான நிலையத்திற்கு கிளம்பிவிட்டதாகவும் எப்படியும் இரவு எட்டு மணிக்குள் மருத்துவமனையில் இருப்பான் என்றும் தகவல் கூறினான்.
சரி நான் பாத்துக்கறேன்... இப்போதான் டாக்டர் குழந்தை நல்லா இருக்கான்னு வந்து சொல்லீட்டு போனார்... மாலை என்னை உள்ளே அனுப்பறேன்னு சொல்லி இருக்கார் என்றாள்.
குழந்தை பயப்படுவாளோ என்னமோ. முடிஞ்சா அம்மாவை காமு ஆண்ட்டி துணையோட வரச்சொல்றேன் என்றாள்.
பாருங்க, முடிஞ்சா வரட்டும்... இல்லேனா நான்தான் வந்திடுவேனே. அவ்வளவா அழ மாட்டா... புது மனிதர்களை கண்டா பயம் எல்லாம் கிடையாது பவிகுட்டிக்கு என்றான் வித்யா.

மாலை ஐந்து மணிவாக்கில் டாக்டர் வந்து உள்ளே அழைத்து போனார்.
பவித்ரா, கண்ணத் திறந்து பாரும்மா யாரு வந்திருக்கான்னு... அம்மா பாரு என்றார்.
பவி மெல்ல கண் திறந்து பார்த்தது. மருந்தின் மயக்கம், ‘அம்ம்மாவா இவளா என் அம்மாவா என்ற குழப்பம் ஒரு பக்கம் ஆயினும் அம்மா என்ற அந்த சொல் மந்திரம் போல் வேலை செய்தது. “அம்மா என்று கிடந்தபடி இரு கை நீட்டியது. மதுரா தன்னை அறியாமல் அந்த கைகளுக்குள் போய் குழந்தையை அணைத்துக்கொண்டாள். அம்மாவின் அணைப்பில் பெரும் நிம்மதி கண்டது அந்த சிசு.

அப்பா எங்கேம்மா?” என்றது.
இன்னும் ஊரிலிருந்து வரலை தங்கம்... இப்போ வந்திடுவாங்க. உனக்காகத்தான் வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வராங்க என்று லேசாக முத்தம் வைத்தாள்.
பவி அவளை அணைத்துக்கொண்டு கெட்டியாக இரு கன்னத்திலும் முத்தம் வைத்தது.
சரி பவிகுட்டி, நீ படுத்துக்க... டாக்டர் அங்கிள் சொல்றதுபோல கேட்கணும்.. நீ குட் கர்ள் இல்லியா, அப்போதானே உடம்பு சீக்கிரமா குணமாகும் வீட்டுக்கு போலாம்...  நான் வெளில தான் இருக்கேன்... பயப்படமாட்டியே செல்லம் என்றாள்.
இல்லைமா நான் குட் கர்ளா இருப்பேன் என்றது. டாக்டர் அவளை வெளியே கூட்டி வந்தார்.

சாரி மேடம் நீங்க ரொம்ப பாசமுள்ள தாய்தான்... நான்தான் ஏதேதோ பேசிட்டேன் உங்கள காலையில என்றார் மன்னிப்பு தொனியில்.
டாக்டர் நான் குழந்தையோட அம்மா இல்லை என்றாள் மதுரா.
என்ன சொல்றீங்க, நீங்க அம்மா இல்லியா... குழந்தை அப்படித்தானே கூப்பிட்டா உங்கள?” என்றார் புருவம் முடிச்சிட.
இல்லை சார். நீங்க அம்மானு சொன்னதும் மருந்து மயக்கத்துல அப்படி நினைச்சுட்டாபோல... பவிக்கு அம்மா... இல்லை...  டாக்டர் என்றாள்.
ஓ மை காட், அப்போ, நீங்க... ?”
நான் பவியோட அப்பா கீழ் வேலை பார்க்கும் காரியதரிசி என்றாள். “என் பெயர் மதுரா
நம்பவே முடியாலைமா... நான் அவ்வளவு திட்டினேன் அப்போகூட ஒண்ணுமே சொல்லாம எல்லாத்தையும் கேட்டுகிட்டீங்க... முழு நாளும் இடத்தைவிட்டு நகராம இங்கேயே தவம் இருந்தீங்க...” என்று அடுக்கிக்கொண்டே போக.
அது என் கடமை டாக்டர்... என் பாஸ் ஊரில இல்லை... அவர் வந்து பொறுப்பெடுக்கும்வரை நான் இந்த குழந்தையை காக்கணும் இல்லையா என்றுவிட்டு போய் அமர்ந்துகொண்டாள். டாக்டர் அவளை ஒரு பிரமிப்போடு பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னோடு பார்வதியை அழைத்து அம்மா, டாக்டர் பவிகுட்டிகிட்ட என்ன கூட்டிகிட்டு போனாரு... நல்லா இருக்காமா... சமத்தா இருக்கா. சாரும் எட்டுமணியோட வந்துடுவேன்னு போன் பண்ணினாரு நீங்க எப்படிமா இருக்கீங்க?” என்று கேட்டாள்.
அம்மாடி மதுரா, தெய்வம் போல வந்தே... வித்யா என்னையும் கூப்பிட்டான். வரேன்னு சொன்னான்... குழந்தை நல்லா இருக்காளா, ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்குமா... நீ நல்லா இருக்கணும் ராஜாத்தி... யார் பெத்த பொண்ணோ. 
நான் நல்லாத்தான் இருக்கேன்... இப்போ என்னை அங்க அலைய வேண்டாம்னுட்டான் வித்யா. அவன்தான் வரானே மதுரா... அதுவரைக்கும் நீ அங்க இருப்பதானே?” என்று கேட்டார்.
ஆமா மா, நான் இங்கேதான் இருப்பேன்... சரி நீங்க கவலப்படாதீங்கம்மா என்று வைத்தாள்.

இரவு எட்டு அடிக்கும் முன்பே வித்யா பறந்துகொண்டு வந்துவிட்டான்.
என்ன, எப்படி இருக்கா பவி?” என்றான் வந்ததுமே.
நல்லா இருக்கா, நான் போய் பார்த்தேன், சமத்தாதான் இருக்கா என்றாள்.
நான் டாக்டர பாத்துட்டு வரேன் என்று ஓடினான். அவன் பதட்டம் பார்த்து மதுராவிற்கு பாவம் எனத் தோன்றியது.

வித்யாதரன் டாக்டரை பார்க்க
, அவரோ பவித்ரா இஸ் பைன் மிஸ்டர் வித்யாதரன்... நல்ல நேரத்தில கொண்டு வந்துட்டாங்க... எதுக்கும் இருக்கட்டும்னு தான் அப்சர்வேஷனுக்கு இங்க இருக்கச் சொல்லி இருக்கேன்...
ஐ ஷுட் சே, நீங்க ரொம்ப லக்கி.. இப்படி ஒரு செக்ரட்டரி உங்களுக்கு... என்னமா ஹாண்டில் பண்ணினாங்க!  
வந்தவுடன் நான் அவங்கதான் குழந்தையோட தாய்னு நினைச்சு கன்னாபின்னாவென திட்டிட்டேன்... ஒண்ணுமே பேசாம கேட்டுகிட்டாங்க. அங்க இங்க நகரல.

குழந்தைகிட்ட கூட்டி போய் அம்மா பாருன்னு சொன்னேன்
... பவி உடனே ஒட்டிகிட்டா... அம்மான்னு ஒரே கொஞ்சல்தான்... அவள நல்லபடியா அணைச்சு முத்தமிட்டு படுக்கவைத்துட்டு வெளில வந்து சொல்றாங்க நான் தாய் இல்லைன்னு... எனக்கு ஒரே அதிர்ச்சி... தாயில்லா குழந்தையா உங்க பவி? இவங்கள தாயா நினைச்சு அவ கொஞ்சினத பார்த்ததும் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரலை மிஸ்டர் வித்யாதரன் என்றார்.

வித்யாவிற்கு ஆச்சர்யம், கோபம், வருத்தம், ஆறுதல் எல்லாமுமாக தோன்றியது.
ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். நான் பவிய பார்க்கலாமா ப்ளீஸ்?” என்றான்.
ஷ்யூர்என்று அனுப்பினார். அங்கே போக பவி சமத்தாக படுத்து கொண்டிருந்தது. ட்யுபில் ஏதோ மருந்து ஏறிக்கொண்டிருந்தது.
பவிமா என்றான் மெதுவாக.
டாடி என்று எழுந்து கொண்டது.
எப்பிடிடா இருக்கே குட்டிமா?” என்று கேட்கும்போதே அவனுக்கு கலங்கியது.
‘ஐயோ என் செல்ல மகள், அனாதைபோல மருத்துவமனையில் என்று கதறியது நெஞ்சம். ஆயினும் மதுரா அங்கிருந்து நகரக்கூட இல்லையாமே, என்ன பெண் இவள். தெய்வம் போல பார்த்துக்கொண்டாளே என் மகளை என நினைத்துக்கொண்டான்.

மகளை அணைத்து தட்டிக் கொடுத்தான்
.
டாடி, என்ன பார்க்க அம்மா வந்தாங்க தெரியுமா என்றது உற்சாகமாக.
வித்யாவிற்கு திக்கென்றது. ‘ஐயோ இவள் இதையே பிடித்துக்கொண்டால் நான் என்ன செய்வேன் இப்போதே இந்த எண்ணத்தை மாற்ற வேண்டுமே என எண்ணினான்.
அது அம்மா இல்லைடா செல்லம் என்றான் மெதுவாக.
இல்லைப்பா, டாக்டர் அங்கிள் கூட சொன்னாரே அது அம்மாதான்... என்ன கட்டி பிடிச்சுகிட்டு முத்தம் கூட கொடுத்தாங்க... டாடி சீக்கிரமா வந்திடுவாங்க அதுவரைக்கும் சமத்தா இருக்கணும்னு சொன்னாங்களே என்றது.
கெட்டுது என்று எண்ணிக்கொண்டான். ‘சரி முதலில் உடம்பு குணமாகட்டும் பின் மெல்ல புரியவைக்கலாம் என எண்ணி பேசாமலிருந்தான்.

அம்மாவையும் கூப்பிடு டாடி என்றது. வேறு வழி இன்றி நர்சைவிட்டு அழைத்து வரச் சொன்னான்.
அம்மா என்று அவளிடம் கை நீட்டியது. மதுராவிற்கோ தர்மசங்கடம ஆனது.
மெல்ல அவளருகில் போய் எப்படி இருக்கீங்க குட்டி?” என்றாள்.
நான் நல்லா இருக்கேன் மம்மி என்றது. வித்யாவை பார்க்கவும் கூசியது மதுராவிற்கு.
சரி படுத்துக்குங்க... நான் நாளைக்கு வரேன்.. இப்போ நான் வீட்டுக்கு போகணுமே தங்கம் என்றாள்.
கூடாது, என்னோடதான் இருக்கணும் என்று அடம் செய்தது.
சரியாபோச்சு இது எங்க போய் முடியும் என்று திணறினர் இருவரும் .
இல்லை தங்கம், அங்க பாட்டி தனியா இருக்காங்க இல்ல... உடம்பு வேற முடியல... உனக்கு முடியலைன்னு கவலப்பட்டு பயந்துட்டாங்கடா குட்டி... நான் போய் அவங்கள பாத்துக்கணுமே என்றாள் அப்போதைக்கு.
வித்யா அவளை ஆச்சர்யமா இல்லை திடுக்கிடலா என்று புரியாத பார்வை பார்த்தான். ‘ப்ளீஸ் என்று கண்ணால் கெஞ்சினாள்.
சரி என்று ஒத்துக்கொண்டது பவி.
நான் இங்கே நைட் தங்கறேன் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மதுரா என்றான்.
தனியா எப்படி, நான் கொண்டுவிடவா?”  என்றான். “உங்க வீட்டில இன்பார்ம் பண்ணீட்டீங்கதானே?” என்றான்.
அப்படி யாரும் எனக்கில்லை சார்... நான் யாருக்கும் சொல்லவேண்டியதில்லை என்றாள்.
நான் ஒரு டாக்ஸில போய்டறேன் சார் என்றாள்.
நோ நோ  வேண்டாம். இந்த வேளையில என்றான். பின் டாக்டரிடம் போய் ஏதோ பேசிவிட்டு

இங்கேயே ஒரு ரூம் குடுக்க சொல்லி கேட்டுகிட்டேன்... நீங்க இரவு நேரத்தில தனியா எங்கேயும் போக வேண்டாம்... அங்கே படுத்து நிம்மதியா தூங்குங்க... பொழுது விடியட்டும் பார்க்கலாம் என்றான்.
சரி அதுவும் நல்லதுதான் என்று அந்த அறையில் போய் பெட்டில் படுத்தாள்.
அவள் ஒன்றும் சாப்பிடிருக்க மாட்டாளே என்று தோன்றி காண்டீனிலிருந்து வாங்கிக்கொண்டுபோய் தந்தான்.
சாப்பிட்டு படுங்க குட் நைட் என்று சென்றுவிட்டான். அவனே சோர்வாகத் தெரிந்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து அதிகாலை விமானத்தில் பறந்தவன் அப்போதிலிருந்து அமரக்கூட நேரம் இருக்கவில்லைதானே.
நீங்க சாப்டீங்களா?” என்று கேட்டாள்.

அவளை நன்றியோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு
நான் இப்போ போறேன் சாப்பிட... நீங்க சாப்பிட்டு படுங்க என்று சென்றான்.
அவள் சாப்பிட்டு தூங்கிப் போனாள். சட்டென்று முழிப்பு வந்தது மணி பார்த்தாள். இரண்டு என்றது. வித்யாவும் தூங்கவே இல்லையே என்று இழுத்து போர்த்திக்கொண்டு மெல்ல குழந்தை இருக்கும் அறையின் பக்கம் சென்றாள். அவள் அயர்ந்து உறங்கிகொண்டிருக்க, அங்கிருந்த பெஞ்சில் தன் ஆறடி உயரத்தை குறுக்கியபடி சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான் வித்யா. அவளுக்குள் ஏதோ உடைந்தது.

மெல்ல அருகில் போய்
சார் என்றாள். பதில் இல்லை. “வித்யா என்றாள் பின் மெல்ல அவன் தோள் தொட்டாள் கூச்சத்தோடு. திடுக்கிட்டு முழித்தான். அவளை அங்குகண்டு முதலில் ஒன்றும் புரியாமல் என்ன என்ன என்றான் பதற்றமாக.
ஒன்றுமில்லை நான்தான்... கொஞ்ச நேரம் நல்லா தூங்கீட்டேன்... நீங்க அந்த அறையில போய் நீட்டி படுத்து கொஞ்சமானும் தூங்குங்க சார்... நான் இங்க இருந்து பாத்துக்கறேன் என்றாள்.
இல்ல வேண்டாம் என்று அவன் வாய்தான் கூறியது. ‘ப்ளீஸ் என்றாள். உடனே ஒத்துக்கொண்டு போனான். இரு நிமிடங்களில் உறங்கிப் போனான். நடுவில் ஒரு முறை குழந்தையை எட்டிப் பார்த்துவிட்டு வந்து புடவை தலைப்பை இழுத்து போர்த்துக்கொண்டு மடங்கி படுத்தாள் பெஞ்சில். உறக்கமும் முழிப்புமாக கழிந்தது.

காலை ஆறு மணி அளவில் யாரோ கூப்பிடுவதுபோலத் தோன்றி முழித்தாள்
. வித்யாதான் கையில் இரு கப் காபியுடன் நின்றிருந்தான்.
குட் மார்னிங், இந்தாங்க காபி. குடிச்சுட்டு நீங்க வேணா வீட்டுக்கு கிளம்புங்க... பாவம் எங்களால உங்களுக்கு ரொம்பவே தொந்தரவு என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. ஐ ஆம் பைன் என்றாள். “டாக்டர் என்ன சொல்றார்னு பாத்துட்டு போறேன் என்றாள்.

எட்டு மணியோடு டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு நார்மலா இருக்கா, வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்... ஜாக்ராதையா பார்த்துக்குங்க. ரிலாப்ஸ் ஆகக்கூடாது என்றுவிட்டு சென்றார்.
ஹப்பா என்றிருந்தது இருவருக்கும். உள்ளே போய் பவி என்று அவளை அள்ளிக்கொண்டான் வித்யா. அவனோடு இறுக்கிக்கொண்டே அவனுக்குபின் பார்த்தது பவி.
அம்மா என்றது இவனிடம் இருந்தபடி அவளைநோக்கி கைநீட்டியது. பக்கத்தில் வந்து தயக்கத்தோடு கைகொடுத்தாள் மதுரா.
டாக்டர் வீட்டிற்கு போலாம்னு சொல்லீட்டாரே போலாமா தங்கம்ஸ்?” என்றான் வித்யா.
ஓ போலாமே அம்மாவும் நானும் நீயும் வீட்டுக்கு ஒண்ணா ஜாலியா போலாம் பா என்றது.

இருவரும் திக்கென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்
. முதலில் கிளம்புவோம் என்று அவளை கூட்டிக்கொண்டு வெளியே வந்தனர். அவன் பில் செட்டில் செய்து எல்லாம் முடிக்கும்வரை மதுராவின் கையில் ஜம்மென அமர்ந்து கொண்டாள் பவி... கொஞ்சம் சோர்வு இருந்தது. சொக்கி விழுந்தபடி இருந்தாள்.
உன்னை வீட்டில் விட்டு போறேன் என்றான் வித்யா.
பவி முழிச்சுட்டா உங்களுக்கு கஷ்டம் ஆயிடும்... வீட்டிற்கு வந்து படுக்கவைத்துவிட்டு நானே போய்க்கறேன் என்றாள் ஆங்கிலத்தில் மெல்லிய குரலில் பவிக்கு கேட்காமல். சரி என்று டாக்சி பிடித்துச் சென்றனர். வீடு செல்வதற்குள் பவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்து பார்வதி கொடுத்த காபியை குடித்துவிட்டு அதே டாக்சியில் கிளம்பினாள் மதுரா. வித்யா வாசல்வரை வந்து நன்றி சொன்னான்.
இட்ஸ் ஓகே சார் என்று புன்னகையோடு கிளம்பிவிட்டாள்.

வித்யா உள்ளே வர, அம்மா மதுரா புராணத்தை ஆரம்பித்தாள்
. அவர் ஒவ்வொன்றும் விவரிக்க வித்யா கேட்டபடி சிலையாய் சமைந்தான். மூன்றுமாத சிசுவை விட்டுச் சென்றாளே அவளும் ஒரு பெண். யாரோ பெற்ற பிள்ளையை, இதோ காப்பாற்றிவிட்டு செல்கிறாளே இவளும் ஒரு பெண்... என்றெண்ணி பெருமூச்சுவிட்டான். வருடங்களுக்கு பிறகு பெண் என்பவளின் மீது உண்டான வெறுப்பு மறந்து மரியாதை வந்தது.

வீட்டை அடைந்த மதுரா, வழியில் வரும்போதே வாங்கி வந்திருந்த சிற்றுண்டிகளையும் பாலையும் வைத்துவிட்டு போய் அலுப்பு தீர குளித்தாள். தூக்கமும் அசதியும் வாட்டியது. சிரமப்பட்டு கொஞ்சம் உண்டுவிட்டு பாலையும் தயிர்சாத பொட்டலத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாள். மணி பத்து என்றது கடிகாரம். அப்போது வாயிற்கதவை தாழிட்டு போய் படுக்கையில் விழுந்தவள்தான். அடுத்த நிமிடம் அசந்து தூங்கிவிட்டாள்.

எத்தனை நேரம் அப்படி கிடந்தாளோ எங்கேயோ யாரோ மணி அடிப்பதுபோல கேட்டது தூக்கத்தில்
. மெல்ல கண்விழித்து பார்க்க மணி மூன்று. ‘என்ன சத்தம் என்று பார்க்க போன் அலறிக்கொண்டிருந்த்து. கூடவே அவளது அபார்ட்மெண்ட் செக்யுரிட்டி மணியும்.

துள்ளி எழுந்து போனை எடுத்தாள்
. வித்யாதரன் தான் பேசினான்.
என்ன, எங்க இருக்கீங்க? போன் ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் எடுக்கலை நிஜமாவே பயந்துட்டேன் என்றான் பதற்றமாக.
தூங்கீட்டேன், ஒரு நிமிடம், செக்யுரிட்டி போனும் அடிக்குது... ப்ளீஸ் லைன்ல இருங்க சார் என்றாள்.
அதுவும் நான்தான். இங்க கீழ உன் பில்டிங்க்லதான் நிக்கறேன்... இங்க உள்ள விடணும்னா நீ சரின்னு சொல்லணுமாமே என்றான்.
ஓ, சாரி சார், நான் பேசறேன்.. நீங்க மேல வாங்க என்று அங்கே கூப்பிட்டு அவனை மேலே அனுப்பச்சொன்னாள்.

ஐயோ இவன் இப்போது எதற்கு இங்கே, குழந்தைக்கு ஏதானும்... நான்வேறு இந்த தூங்கி எழுந்து நிலையில் கலைந்த தலையுமாக நைட்டியில் நிற்கிறேனே... இப்போது மேலே வந்துவிடுவானே என்று பதறி நைட்டியை சரியாக இழுத்துவிட்டு தலைகோதி ஒரு கிளிப் போட்டாள். சட்டென்று முகம் அலம்பினாள். அதற்குள் வாசலில் மணி அடித்தது.


1 comment: