Thursday 21 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 4

கலா “அம்மா அம்மா” என்று தொணக்கத் துவங்கி இருந்தாள். நாளொரு மேனியாக அழுகை ரகளை அடம் அதிகமானது.... அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடானது.

திங்கள் முதல் அவன் மீண்டும் மனதை தேற்றிகொண்டு நடைபிணமாக ஆபிஸ் செல்ல வேண்டி வந்தது. அங்கே சென்று வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.... வேலை ஏதோ நடந்ததுதான்.... ஆனாலும் அங்கிருந்து கிளம்பின மறுநொடி மனதில்,
‘சித்ராங்கி என்னன்னாள் இன்றானும் வீட்டில் இருப்பாளா, ஒரு வேளை வந்திருப்பாளோ..... தனக்கு சர்ப்ரைஸ் குடுக்கவென போன் செய்யாமல் இருந்திருக்கலாம்....’ என்ற மாயக் கனவுகளுடன் வீட்டை நோக்கி ஓடி வந்து அவளை அங்கு காணாமல் வாடி நின்றான். துயரம் கொண்டான். சாப்பிடாமல் கூட கலாவை அணைத்துக்கொண்டு உறங்கினான்.

ஒரு வார தாடியும் மீசையும் உள்ளடைந்த கண்ணும் முகம் விகாரமானது. அவன் நிலை அறிந்து யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை. செத்துவிட்டாள் என்றால் அது துக்கம்தான் ஆனால் போய்விட்டாள் என்று தெரிந்தாவது இருக்கும்..... பிழைத்தால் கடவுள் காப்பாற்றினார் என்ற மனம் நிறையும்... இரண்டும் அல்லாது இந்த திரிசங்கு சொர்க்க நிலை கடினம்.... நெஞ்சில் முள்ளாக ஆனது அவன் வாழ்க்கை.

இந்த நிலை மூன்று மாதங்கள் தொடர்ந்தது.... ரஞ்சன் பித்து பிடித்தவன் போல ஆகி இருந்தான்.... கண்ணில் ஒரு வெறுமை, முகத்தில் துக்கம்... அலைபாயும் கண்கள்..... ஏனோதானோ என்ற உடை..... எல்லார் மீதும் ஒருவித எரிச்சலோடும் ஆத்திரத்தோடும் ஒரு இயலாமையுடனேயே பேசிப் பழகினான்..... ஆபிசில் மட்டுமே கொஞ்சம் மரியாதையாக பேசிப் பழக முயன்றான்..... அங்கே அதிகம் யாரிடமும் பேச்சே வைத்துக்கொள்ளவில்லை.... யாரும் அவனிடம் எதுவும் பேசவும் பயந்து ஒதுங்கினர்.

வாரம் ஒரு முறையேனும் போலிஸிடம் சென்று கெஞ்சி விட்டு வந்தான். அவர்களுக்கும் இவன் நிலை பரிதாபத்தை குடுத்தாலும் எந்த விதத்திலும் அவனுக்கு உதவமுடியவில்லை.

இன்று...

இதோ இன்றும் கூட கடந்த மாதங்கள் போல அவளின் பிரமையோடு முழித்தவன் அவளைத் தேடி அலைபாய்ந்தான்..... அவள் புடவையை எடுத்து முகத்தோடு வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி தூக்கம் கலைந்து எழுந்தான்..... இவன்தான் இப்படி என்றால் கலாவின் நிலையோ கேட்கவே வேண்டாம்.... அம்மா தவிர அவள் வாயில் இப்போதெல்லாம் வேறே ஒன்றுமே வருவதில்லை..... அம்மா ஊருக்கு போயிருக்கிறாள் என்பது கூட இன்னது என அறியாத பச்சிளம் மனது. அறியாமை பேதைமை கொண்ட மழலை உள்ளம்.... என்ன சொல்லி தேற்ற என வகை தெரியாமல் இரு அன்னைமார்களும் தவித்தனர்.

அப்பா அம்மா என்று ஸ்பஷ்டமாக பேச ஆரம்பித்திருந்தாள் கலா.
“அம்மா எப்போ வவ்வா?” என்றாள் மழலையில்.
“அம்மா வருவா” என்பான் பொறுமையாக.
“எப்போ?” என்பாள்.
“தெரியாது, நம்மளை விட்டுட்டு போனாளே அவளையே போய் கேளு ஏன் இப்படி தவிக்கவிட்டுட்டு எங்கே போனான்னு” என்று சத்தம் போடுவான் எரிந்து விழுவான். அது பாவம் பயந்து “பாத்தி” என்று சிவகாமியிடம் தத்தி தத்தி ஓடும்.
“அப்பா பாவம், உடம்பு முடியலை இல்லையா செல்லம், அதான், போனாபோறது.... அம்மா சீக்கிரமே வருவாடா என்ன” என்று ‘எதை நம்பி இப்படி சமாதானம் செய்கிறோம்...’ என்றே தெரியாமல் தவித்தபடி அந்த சிசுவை அணைத்துக்கொண்டார்.

ஆறு மாதங்களின் முடிவில் அவனைத்தவிர அனைவருமே அவள் இனி வரமாட்டாள் என்ற முடிவுக்கு திண்ணமாக வந்திருக்க, ரஞ்சம் மட்டும் இன்னமும் அவள் வருவாள் என கெட்டியாக நம்பினான்..... எதிர் பார்த்து காத்திருந்தான்.... அவள் இறந்துவிட்டாளோ இனி வரமாட்டாளோ என்று ஒரு பய திகில் போல அவன் மனதை அவ்வப்போது அறுத்ததுதான். ஆனால், அந்த எண்ணம் தோன்றிய மறு கணம், திண்ணமாக, ‘இல்லை, அவள் இறக்கவில்லை, என் குட்டிமா இறக்கவில்லை, கண்டிப்பாக என்னிடம் என்றேனும் வந்து சேருவாள்’ என்று சொல்லி தன்னை தெளிந்து வந்தான்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் டூருக்கு செல்ல வேண்டி வந்தது, அவ்வப்போது சென்று வருவது பழக்கம்தான். அதுபோல விஜயவாடாவிற்கே செல்ல வேண்டி வந்தது. விஜயவாடா என்றதுமே பளிச்சென ஒரு மின்னல் உதித்தது... அங்கே சித்ராங்கியின் தோழியை கண்டு பேசினால் எதேனும் தகவல் தெரியுமோ என்று எண்ணி கிளம்பினான்.
அங்கே சென்று முக்கிய ஆபிஸ் வேலைகளை முடித்த பின் அந்தத் தோழி பிரேமாவை சந்திக்க சென்றான்.

“வாங்க அண்ணா” என்றாள். அவளது கணவனும் இருந்தான்..... இருவரும் அன்பாக ஆதரவாக பேசினர்...
எல்லோருக்குமே விஷயம் பரவி இருக்க, அவளுமே சித்ராங்கி இனி இல்லை என்பதுபோலதான் பேசினாள்.
“மன்னிச்சுக்குங்க அண்ணா, என் கல்யாணத்துக்குனு வந்துதான் இப்படி ஆகி போச்சு” என்று அழுதாள் பிரேமா
“இல்லைமா அவளுக்கு ஒண்ணும் ஆகலை, அவ கண்டிப்பா என்கிட்டே திரும்பி வருவா.... நீயே பார்ப்பே, அழாதே, உன் கல்யாணத்தை உன்னை நீ ஏம்மா குறை சொல்லிக்கற..... நீங்க எல்லாம் நல்லபடி என்ஜாய் பண்ணிநீங்கதானே” என்றான்.

“ஆமா அண்ணா, போடோஸ் பார்க்கறீங்களா?” என்று கேட்டாள்.
“ஹே பிரேம், என்ன இது அவர்கிட்ட போய், அவரே துக்கபட்டுகிட்டு இருக்காரு... இப்போ போய்...” என்று அவள் கணவன் அவளை அடக்கினான்.
“இல்லைங்க, வந்து....” என்று அடங்கினாள்.

“இல்லை ஆனந்த், இருக்கட்டும் பார்க்கறேன், அவளின் போட்டோவை கண்டாலாவது என் மனதுக்கு ஆறுதலா இருக்குமோ என்னமோ” என்று ஆசையாக ஆல்பத்தை வாங்கினான். புரட்டிக்கொண்டே வர பல போடோக்களிலும் பிரேமாவுடன் சித்ராங்கி இருந்தாள். அவளை வெவ்வேறு அலங்காரத்தில் காணக் காண முட்டிக்கொண்டு தளும்பியது அழுகை. மற்றவர் வீட்டில் இருக்கிறோம் என்று தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்றான். கண்ணீர் வழிய புகைப்படங்களை பார்த்த வண்ணம் இருந்தான்.
“பாரு இதுக்குதான் சொன்னேன்” என்று கடிந்தான் பிரேமாவின் கணவன் ரகசிய குரலில்.
“நோ நோ ஆனந்த், ஐ ஆம் ஒகே” என்றான் கண்ணை துடைத்தபடி. சில புகைப்படங்களை காட்டி “இதை நான் எடுத்துக்கவா?” என்றான்.
“கண்டிப்பா அண்ணா” என்றாள். சிலதை எடுத்து தன் பாக்கெட்டில் பத்திர படுத்திக்கொண்டான்.

“கிளம்பறேன்மா, நாளைக்கு ஊருக்கு போறேன்..... சென்னைக்கு வந்தா கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வந்து அங்குதான் தங்கணும் ஆனந்த் பிரேமா” என்று விடை பெற்றான்.

வெளியே வந்து தன் ஹோட்டலுக்கு போக ஆட்டோ எடுத்தவன் ஏறி அமர்ந்தான். சட்டை பையில் இருந்து போடோக்க்களை எடுத்து பார்த்தவன் மெய் மறந்து பார்த்தவண்ணம் இருந்தான்.... அப்போது அவன் சென்ற ஆட்டோவை வலது பக்கத்திலிருந்து வந்த ஒரு கார் முட்டியது மோதியது... அவன் கவனித்திருக்கவில்லை ஆதலால் உடனே தன்னை சுதாரித்துக்கொள்ள முடியாமல் கையில் கெட்டியாக பிடித்த போட்டோக்களுடன் சரிந்து ஆட்டோவில் இருந்து வழுக்கி கீழே ரோடில் விழுந்தான்.... இடது கையில் நல்ல அடி.... இடது கன்னத்திலும் நெற்றியிலும் ரத்த காயம்....

உடனே பக்கத்தில் இருப்போர் இன்னொரு ஆட்டோவை அழைத்து போலிசின் உதவியுடன் அவனை அங்கே அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கே சென்று முதலுதவி முடிந்து எக்ஸ்ரே எடுத்தனர்.... பலத்த காயம் இன்றி தப்பித்தான்.... நேரமே சரி இல்லை போல என்று எண்ணிக்கொண்டான்.... கட்டுகள் போடப்பட்டன.... வலிக்கு மாத்திரை மருந்து என அங்கேயே பார்மசியில் வாங்கிவிட்டு திரும்பியவன் நேரே யார் மீதோ மோதிக்கொண்டான்.

“சாரி” என்றான். ஆனால் அந்த ஸ்பரிசம்...
“பரவாயில்லை” என்றாள் அந்த மாது. அந்த முகம் எங்கேயோ கண்டது போலத் தோன்றியது.
‘நான் இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ என்று எண்ணினான்.
“ஒ நீங்களும் தமிழா? இங்கே இந்த விஜயவாடாவில தமிழ் கேக்க சுகமா இருக்கு” என்றான் - சொல்ல போனால், வேண்டும் என்றே அவளோடு பேச்சை வளர்த்தான். அவள் யார் என்று அறிய முற்படுவது போல.
“ம்ம்ம்” என்று சிரித்தாள் அந்த மங்கை.
“எனக்கும் அதே பீலிங்தான்” என்றாள்.
அந்த சிரிப்பு, அந்த கண்களின் ஒளி, அந்தக் குரல் அவனை சுழற்றிபோட்டது. ‘இந்த குரல், இந்த காந்த்க்கண்கள்....’  என்று புத்தி யோசித்து பேதலித்தது.

“நீங்க சென்னையா இங்கேயேவா?” என்றான்.
“நான் நான்.. எனக்கு தெரியலையே, இப்போ இங்கே இருக்கேன்” என்றாள்.
“தெரியலையா?” என்றான் ஆச்சர்யத்துடன்.
“ஆமா, எனக்கு நான் யாருன்னு தெரியாது, என் பேர் கூட தெரியாது அதான் இங்க ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றாள். ஒரு அறியாதவனுடன் பேசும் எண்ணமே இன்றி சகஜமாக அவனிடம் தன் நிலையை உரைத்துக்கொண்டு இருந்தாள் அவள்.

‘என்ன சொல்கிறாள் இவள்..... முகம் எங்கேயோ கண்டுபோல பரிச்சயமாக உள்ளது.... ஆனால தான் யார் என்று தெரியாது என்கிறாளே, பேர் கூடவா மறந்து போகும், இது என்ன அம்நீஷியாவா?’ என்று எண்ணினான்.

“அம்மா ரண்டி, நீங்க ஆருன்னு தெலவது காதா, தனியா அங்க இங்க போவொத்து, உங்கள காணலைனா டாக்டர் நன்னு திட்டுவாரு.... ரண்டி மீ ரூமுக்கு..... நினவு இருக்குதா, ரூம் முப்தி ஆறு” என்றாள் நர்ஸ், பாதி தெலுங்கும் பாதி தமிழுமாக.

“அது தெரியும்.... நினவு இருக்கு சிஸ்டர்..... எத்தனை நேரம்தான் ரூமிலேயே இருப்பதுன்னு கொஞ்சம் காலாற வெராண்டாவில நடக்கலாம்னு வந்தேன்.... நான் தனியே ஹாஸ்பிடலை விட்டுட்டு வெளியே போக மாட்டேன் பயப்படாதீங்க” என்றாள்.

“இந்த ஒரே ஒரு நர்சுக்கு சில வார்த்தைகள் தமிழ் தெரியுமோ நான் பிழைச்சேன், இல்லைனா பாஷையும் தெரியாம நான் யாருன்னும் எனக்கே தெரியாம எனக்கு பைத்தியம் இன்னமும் முத்தி இருக்கும்... நான் வரேன்” என்று இவனிடம் கூறிவிட்டு அகன்றாள் அந்த மங்கை.
‘இதென்ன கொடுமை, பாவம்’ என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அந்த முகம் அந்த குரல் கூட எங்கேயோ என்றபடி வெளியே வந்து ஆட்டோ பிடித்து தன் ரூமிற்கு வந்தான். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு படுத்தான்.

இன்னமும் அந்த மங்கையை மறக்க முடியாமல் அவன் எண்ணங்கள் சுழன்றன. தூங்கி போனான். கை வலித்ததென முழித்தான்.
சடாரென தூக்கிப் போட்டது போல உடல் உதரலெடுத்தது.

‘அந்தக் குரல் அந்த குரல் என் குட்டிமாவுடையது போல அல்லவா இருந்தது, அதனால்தான் பரிச்சயமாக தோன்றியது.... அய்யோ, என்ன இது, இவள் இப்படி குட்டிமா போல பேசுகிறாள்..... சில வார்த்தைகள் கூட அப்படியே உபயோகிக்கிறாளே’ என்று சிலிர்த்தான்.

‘ஆனால் முகம் என் குட்டிமா அல்லவே, என்னையும்தான் அடையாளம் கண்டு கொள்ளவில்லையே’ என்று நினைத்தான். ‘அவளுக்குத்தான் தன்னையே தெரியவில்லையே என்னை எப்படி அடையாளம் தெரியும்’ என்று வாதித்தான். ‘முகம் கூடத்தான் வேறே மாதிரி இருக்கே, கோரமாக’ என்று குழம்பினான். யோசித்து மண்டை வெடித்தது.

அத்யாயம் 3

அடுத்த நாள் ஊருக்குச் செல்ல வேண்டும் ஆனால் அதற்கு முன் அவளை அந்த மங்கையை மீண்டும் காண வேண்டும் என்ற உந்துதலை அடக்க முடியவில்லை அவனால். எள்லாம் பாக் செய்து ஹோட்டல் லாபியில் வைத்துவிட்டு ஒரு ஆட்டோவில் மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சென்றான்.
‘ரூம் முப்பத்தி ஆறு’ என்றாளே நர்ஸ் என்று அங்கே சென்றான். அங்கே ஏதோ தமிழ் பாட்டை முணுமுணுத்தபடி ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள் அந்த மங்கை.

“ஹெலோ” என்றான் வாயிலில் நின்று. நிமிர்ந்தவள் அவனை அங்கே கண்டு ஆச்சர்யபட்டாள். அந்த கண் மலர்ச்சி மீண்டும் அவனுக்கு சித்ராங்கியை நினைவூட்டின.
“நீங்க இங்கே எங்க? கைய காமிச்சுக்க வந்தீங்களா.... ரொம்ப வலிக்கறதா?” என்றாள் ஆதுரமாக.
“குட்டிமாவும் இப்படிதானே வலிக்கற
+தான்னு கேட்பா.... வலிக்குதான்னு சொல்ல மாட்டா” என்று உணர்ந்தான். உள்ளே என்னென்னவோ எண்ணங்கள் அவனை பிரட்டி போட்டன.

“உங்களத் தேடி இங்கே வந்தேன்” என்றன்.
“ஒ என்று கண்கள் மல்க “தேங்க்ஸ்” என்றாள்.
“ஏன், உங்களைத் தேடி இங்கே யாருமே வரலையா இன்னும், எத்தனை நாளா இங்கே இருக்கீங்க, எப்படி இங்கே வந்தீங்க, சாரி நான் முன்பின் தெரியாத உங்களிடம் தப்பான எண்ணத்துடன் இதை கேட்கலை, உங்களுக்கு எந்த விதத்திலானும் உதவ முடியுமான்னு பார்க்க தான் கேட்டேன்” என்றான்.

“இல்லை இட்ஸ் ஒகே, நான் ஏதோ ஆக்சிடென்ட்ல மாட்டினேனாம்... அதுலேர்ந்து இங்கேதான் இருக்கேன்னு இங்கே நர்ஸ் சொல்வா” என்றாள் அவள்.
“ஒ எத்தனை நாளா?” என்றான் ஆவலாக
“நாட்களா, பல மாதமா நான் இங்கே இருக்கேனாம், செலவு கூட எவளோ ஆச்சோ தெரியல..... என் கிட்ட இன்னமும் பில் ஒண்ணும் தரலை.... ‘அதெல்லாம் நீ குணமானபின் பார்த்துக்கலாம் மா’ என்பார் பெரிய டாக்டர். அவருக்கு நான் அவரது மகள் போல தெரிகிறேனாம் அதனால தனி அன்பு” என்றாள்.
“ஒ சரி, நான் அப்போ கிளம்பட்டுமா.... நான் இன்னிக்கி சென்னைக்கு திரும்பறேன்” என்றான்.
“ஒ..... ஓகே... சரி தாங்க்ஸ்” என்றாள் ஒருவித சோர்வுடன்.
“பை டேக் கேர்” என்றான்.
“தேங்க்ஸ்” என்றாள்.

அவன் மனது அலைபாய்ந்தது, ஏதோ சொல்லொணா ஒரு தவிப்பு ஆட்கொண்டது... அதன் உந்துதலின் பேரில் நேரே தலைமை டாக்டர் யாரென்று விசாரித்து அவரிடம் அவசர அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
முதியவர், கருணை ததும்பும் கண்கள்.
“எஸ்” என்றார் இவனைக் கண்டு.
“டாக்டர், நான் சித்ரஞ்சன், சென்னைலேர்ந்து வரேன்... இது என் கார்ட், நான்  இங்க முப்பத்தி ஆறாம் நம்பரில் இருக்கும் நோயாளியைப் பற்றி சிலது தெரிஞ்சுக்க விரும்பறேன்” என்றான்.

“அவங்களை உங்களுக்கு தெரியுமா.... ஏதேனும் விவரம் சொல்ல முடியுமா?” என்றார் டாக்டர் ஆவலுடன்.
“இல்லை டாக்டர், ஆனால் அந்த முகம் அந்த குரல் எங்கேயோ பரிச்சயம் ஆனதுபோல எனக்குத் தோணுது..... நேத்து எனக்கு அடிபட்டு இங்கே வைத்தியத்துக்காகனு வந்த இடத்துல அவங்க மேல மோதிகிட்டேன், அந்த ஸ்பரிசம் பேச்சு பழக்கம் எல்லாம், இரவு முழுவதும் என்னை உறங்க விடவில்லை..... அதான் காலையிலேயே அவளைத் தேடி வந்து பேச்சு குடுத்தேன்..... ஏதோ விபத்து நடந்து அது முதல் இங்கே இருக்கறதா சொல்றாங்க....” என்று இழுத்தான். “ப்ளீஸ் எனக்கு விவரங்கள் சொல்ல முடியுமா?” என்றான்

“எனக்கு தெரிந்த விவரங்கள உங்ககிட்ட சொல்ல ஆட்சேபனை இல்லை.... ஆனால் அவளது விஷயங்களை நீங்க எந்த விதத்திலும் மிஸ்யூஸ் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்றார் தெளிந்த ஆங்கிலத்தில்.
“இல்லை டாக்டர் இது என் கார்ட், நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவன், நல்ல கம்பனில நல்ல உசந்த உத்யோகத்தில இருக்கேன்.... நீங்க என்னை நம்பலாம்” என்றான்.
கொஞ்சம் நிம்மதியாகி சொல்லத் துவங்கினர் அவர்.
“முழுசா சொல்றேன் கேட்டுட்டு நீங்களே சொல்லுங்க மிஸ்டர் சித்ரஞ்சன்” என்று அவரும் அவருக்கு தெரிந்தவரை அவள் கதையை கூறத் துவங்கினார்.

“நான் மாயானு அவளுக்கு பேர் வெச்சிருக்கேன்.... என் மகளாகவே நினைக்கிறன்..... பச்சிளம் குழந்தை மனசு அவளுக்கு....
“ஆம் என் குட்டிமாவுக்கும் தான்” என்றது அவன் மனது.



5 comments: