Friday, 22 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 5

“மாயா ஒரு ரயில் விபத்தில தான் அகப்பட்டாள்..... ரயில் தண்டவாளத்தில் பாம்ப் வைத்து ரயிலை தகர்க்க சில தீவிரவாதிகள் ஏற்பாடு செய்திருந்தாங்க போல.... அந்த பாம்ப் வெடித்தது இவளது கோச்சில் தான் னு நினைக்கிறன்.... இவ அதுலேர்ந்து பிழைத்ததே தெய்வ சித்தம் தான்... அதில இவளுக்கு நல்ல பலமான அடிபட்டு முகம் சிதைந்து தன் நிலை இழந்து விழுந்து கிடந்திருக்கா.... அவளை முதலில் கண்டெடுத்த ஒருவர், மொதல்ல ஸ்பாட்டுக்கு போன ஒரு ஆம்புலன்சில் இவளை போட்டு உடனடியா பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்காரு....

அங்கே முதலுதவி மட்டுமே செய்ய முடிஞ்சுது.... இவளுடைய மோசமான நிலைக்கு அவங்களால பெரிசா எதுவும் சிகிச்சை குடுக்க முடியல. ஏதேனும் பெரிய ஹாஸ்பிடலில் சிகிச்சை அவசியம் என தோன்ற, இங்கே என்கிட்டே அனுப்பிச்சாங்க... ரொம்ப மோசமா முகம் அடிபட்டு அடையாளமே தெரியாம கூடவே வயிறு கழுத்துனு கோரமா தான் வந்தா.... ஷி வாஸ் ஆல்மோஸ்ட் சிங்கிங்... அவளை அவள் நிலையை முதல்ல பார்த்ததும் சொல்றேன் சித்ரஞ்சன், ஒரு டாக்டரா நானே துடிச்சு போய்டேன்.... காண சகிக்கல...” என்று அந்நாளை நினவு கூர்ந்தார்.

மிக பலமான மழை இடி மின்னலுடன் அடித்து கொட்டிக்கொண்டு கிடக்க, வீட்டிற்குச் செல்வதா இந்த மழையில் வண்டி மாட்டிக்கொள்ளுமா என்று யோசனையுடன் நின்றிருந்தார் டாக்டர் கோபிநாத். அப்போது அவருக்கு ஒரு முக்கிய போன் வந்தது.

“டாக்டர், நாங்க ஓங்கோல்லேர்ந்து பேசறோம், இங்க பக்கத்துல ஒரு ரயில் விபத்து ஆயிடுச்சு.... அதுலேர்ந்து ஒரு பெண்ணை காப்பாற்றி எடுத்து எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு நல்லவரு கூட்டி வந்தாரு, ஆனா எங்களால அவங்களுக்கு ஒண்ணும் பெரிசா பண்ண முடியாத நிலை, ரொம்ப ஆபத்தான கட்டத்துல இருக்காங்க... நிறைய அடி...... முகம் முழுவதுமே பாதிக்க பட்டிருக்கு, ஸ்பாட்ல குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கும்..... தீ கங்குகள் மேல விழுந்து முகம் அலங்கோலமாகிப் போச்சு.... உங்க ஹாஸ்பிடலுக்குதான் ஆம்புலன்சில் அவரோடவே அனுப்பி வெச்சிருக்கோம், பார்த்துக்குங்க” என்றனர்.

“ஒ அப்படியா சரி நான் பாத்துக்கறேன்” என்றார்.
உடனடியாக தன் குழுவை அலெர்ட் செய்து ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யக் கூறினார். நர்ஸ் மற்று டாக்டர்களை தயார் நிலையில் நிறுத்தினார். ஆம்புலன்ஸ் வந்ததும் அந்தப் பெண்ணை இறக்கி உள்ளே ஸ்ட்ரெட்சரில் எடுத்து வர, பல ஆபத்தான கொடூரமான விபத்து கேஸ்களை பார்த்து பழக்கப்பட்டு போன அவருக்கே அவளைக் கண்டு ஒரு கணம் மனம் பதைத்தது.

“ஓ நோ” என்று ஒரு சக டாக்டர் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே திரும்ப ஒரு நர்சோ அவளை பார்த்து கோ வென அழவே துவங்கிவிட்டார். உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்தது.
“பல்ஸ் செக் பண்ணுங்க, நீங்க பிபி மானிடர் பண்ணுங்க சிஸ்டர்..... க்விக் மயக்க மருந்து குடுக்கணும், எங்கே அநெஸ்திசிஸ்ட் வந்தாரே காணுமே?” என்று ஆணைகள் பரப்பினார் கோபிநாத்.
உடனுக்குடனான அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போதே அவள் ஒரு மாதிரியான கோமா நிலையில் தான் போய் கொண்டிருந்தாள்.... மயக்கமா கோமாவா என வரையறுக்க முடியாத நிலை.
அழைத்தாலும் அசைவில்லை. கண்களை திறந்து பார்க்க முழியில் அசைவில்லை..... சிகிச்சை முடிந்து முக்கிய சிகிச்சை பிரிவில் ஐ சி யூவில் வைக்கப்பட்டாள்.
“தாலிக்கொடி பார்த்தா தமிழ் போல தெரியுது..... இந்திரா உனக்குத்தான் கொஞ்சமானும் தமிழ் தெரியும்..... நீ இவங்க கூடவே இரு” என்றார் கோபிநாத்
“எஸ் டாக்டர்”  என்றாள் அவள்.
ஆம்புலன்சில் வந்த பணியாளர், “டாக்டர், இவங்க இந்த பையை தன்னோட உடலில் குறுக்காக மாட்டி ரொம்ப கெட்டியாக தன்னோடு சேர்த்து அணைத்து பிடிச்சுகிட்டிருந்தாங்க. இதையும் உங்க கிட்டேயே ஒப்படைக்க சொன்னாங்க எங்க சீப். பத்திரம்” என ஒப்படைத்துவிட்டு சென்றார். கோபிநாத் அதை எடுத்து பத்திரப் படுத்தினார். சொல்லப்போனால் அந்த பைதான் அவள் இதய பகுதியை காபாற்றியதோ என நினைக்க தோன்றியது டாக்டருக்கு,. தீ கங்குகள் பட்டு அந்த பையும் கூட பலமாக சேதமடைந்திருந்தது.


அத்தனை நேரமும் அவளை அங்கே கொண்டு சேர்த்த அந்த இளைஞன், அங்கேயே அமர்ந்திருந்தான்.... கோர்க்கப்பட்ட கைகள் கடவுளிடம் பிரார்தித்திருக்க அசையாமல் காத்திருந்தான்.
“இப்போதைக்கு ஷி இஸ் அவுட் ஆப் டேஞ்சர்..... மேலும் நிறைய சிகிச்சைகள் தேவைபடுது, மீண்டும் கோமாவில் போகாம பார்க்கணும், வி ஆர் ட்ரையிங் அவர் பெஸ்ட், நீங்க அவங்களுக்கு சொந்தமா தெரிஞ்சவரா?” என்றார் கோபிநாத்.
“ரெண்டும் இல்லை டாக்டர், என் சொந்த ஊருக்கு போயிருந்த நான், ஒரு வழிபோக்கனா இந்த விபத்து நேரத்தில் அங்கே கடந்து வந்துகொண்டு இருந்தேன், விபத்தை கண்டு உதவ ஓடினேன், இவங்க மோசமா அடிபட்டு கிடந்தாங்க... மிகவும் கஷ்டப்பட்டு அவங்கள வெளியே கொண்டு வந்தேன், அப்போதுதான் அங்கே ஒரு ஆம்புலன்ஸ் வந்தது அதில் ஏற்றி ஒங்கோலுக்கு அழைத்து போனேன், அவங்க இங்க அனுப்பிச்சாங்க” என்று பாதி ஆங்கிலமும் பாதி தெலுங்குமாக பேசினான் அவன் - வெங்கட்.

“ஒ ஐ சி, ரொம்ப நல்ல வேலை பண்ணி இருக்கீங்க மிஸ்டர் வெங்கட்.... அவங்க உயிரையே நீங்க காப்பாத்தீட்டிங்க..... அவங்க நல்லபடி குணமாக வேண்டிக்குங்க....
“டாக்டர், அவங்க பரிபூரணமா குணமாகும் வரை இங்கே வந்து நான் அவங்கள பார்க்கலாம் அல்லவா?” என்று கேட்டுகொண்டான்.
“கட்டாயமா வாங்க” என்றார் புன்சிரிப்புடன்.
“தாங்க்ஸ்” என்று அப்போதைக்கு விடைபெற்றான்.

“அடுத்து வரும் நாட்களில் தினமும் காலை ஒன்பது மணிக்கு ஆபீஸ்க்கு முன் பின்னர் மாலை ஆறு மணிக்கு ஆபிஸ் முடிந்தபின் என வந்து அவளை தூரத்தே நின்று பார்த்து சென்றான் அந்த வெங்கட்”

“மூன்று நாட்கள் வரை அவளிடத்தில் அசைவில்லை, பின் ஒரு முறை விழிப்பு வந்தது, எங்கே இருக்கிறோம் என்பது போல மலங்க மலங்க விழித்தாள்..... பின்னோடு கண்கள் சொருகிக்கொண்டன..... சிகிச்சை தொடர்ந்தது.... ஆனால் முழுமையான முழிப்பு என்பது அவளுக்கு வரவே இல்லை....”

“தலையிலும் அடிபட்டதால் ஒரு சின்ன கிளாட் அவளது மூளையில் ஏற்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது..... ஊரில் பெஸ்ட் ந்யூரோ சர்ஜனை வரவழைத்தோம்.... அவர் தலைமையில் அவளுக்கு அந்த கட்டியை அப்புறப்படுத்தி ஒரு அறுவை சிகிச்சை நடத்தினோம்..... அதன் பின் நாலு நாட்கள் மயக்க நிலையில் இருந்தவள் மெல்ல கண் விழித்தாள்....”

“தான் யார் என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.... தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசினாள்..... இந்திரா நர்ஸ் அவளிடத்தில் பேச்சு குடுத்தாள்
“உங்க பேர் என்னம்மா?” என்றாள்.
“என் பேர்.... என் பேரு என்ன சிஸ்டர்..... நான் எங்கே இருக்கேன், இது ஹாஸ்பிடலா, எனக்கு என்னாச்சு?” என்றாள் அந்தப் பெண்.
“இங்க பாரும்மா, நல்லா ஆலோசின்சு சொல்லுமா..... உன் பேர் என்ன எந்த ஊரு..... உன் கணவர் பேர் என்ன?” என்றாள் இந்திரா நிதானமாக.
“தெரியலையே” என்றாள் குழந்தைதனத்துடன்.
அடுத்து என்ன என்று குழம்பினர் கோபிநாத் மற்றும் அவரது டீம். “இப்போதைக்கு இவளப் பற்றி பேசவானும் இவளுக்கு மாயானு நான் பேர் வைக்கிறேன்.... பார்க்கலாம், மெல்ல மெல்லமா ஏதானும் இம்ப்ரூவ்மென்ட் வருதான்னு” என்றார் அவர்.

“அவளை அங்கேயே வைத்து மேற்கொண்டு சிகிச்சை அளித்து வந்தோம். ‘எக்காரணம் கொண்டும் அவளுக்கு கண்ணாடி காட்டக்கூடாது என்றும் அவள் அறையில் இருக்கும் கண்ணாடி நீக்கப்பட வேண்டும்’ என்றும் ஆணை போட்டு வைத்தேன்”
அந்த நேரத்தில் அவளிடம் வெங்கட்டை அறிமுகம் செய்தேன், அவளை மீட்டு காப்பாற்றியவன் எனக் கூறினேன், அவளுக்கு மிகுந்த சந்தோஷமும் நன்றிகடனுமாக தோன்ற, கண்ணில் நீர் நிறைய அவனை கண்டு கை கூப்பி வணங்கினாள்.
“ஐயோ அதெல்லாம் வேண்டாம், நான் என் கடமையைத் தான் செஞ்சேன்” என கூச்சமாக ஆங்கிலத்தில் அவளுடன் பேசினான்.

“பின் வரும் நாட்களில் தினமும் வந்து அவளுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு அவள் உடல் நலம் தெரிந்து கொண்டு சென்றான். இத்தனைக்கும் அப்போது அவள் முகம் இன்னமும் குரூபியாகத்தான் இருந்தது.... அதை ஒரு கணமும் அவன் தன் முக பாவத்திலோ கண்களிலோ அருவருப்பையோ அசிங்கத்தையோ காட்டவில்லை..... சகஜமாக பேசி அவளை மகிழ்வித்தான்....

அதன் பின் வந்த நாட்களில் அவன் வர சில கணங்கள் நேரமானாலும் அவள் மனம் அவனை தேடியது.... இவளோ மணமானவள்... பழையதை மறந்திருக்கிறாள்.... இப்போது இவனுடன் பேசி பழகுகிறாளே... ஏதும் விபரீதம் ஏற்படக் கூடாது என்று எனக்கு கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு தோன்றியது மிஸ்டர் ரஞ்சன்..... மெல்ல நர்ஸ் இந்திரா மூலமாக அவளது தாலி கொடியை அணியவைத்தேன். தனக்கு மணமாகிவிட்டது என்பதை அவள் அறிய வைத்தேன்.... அதை கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள்.

“என்ன சிஸ்டர் இது, இது என்னோடதா, நிச்சயமா தெரியுமா, அப்போனா அவர் எங்கே, ஏன் என்னை பார்க்க வரலை, நான் யாரு, யாருடைய மனைவின்னு?” ரொம்ப புலம்பினா. நர்ஸ் இந்திரா தான் ஒரு தாய் போல அவளுக்கு எடுத்து கூறினாள்.

“நீங்க இங்க தான் அட்மிட் இருக்கீங்கன்னு ஆருக்கும் தெலவதேமா, அவர் எங்கே எல்லாம் தேடராரோ பாபம், நீங்க பிழைத்ததே யாருக்கும் தெரியபடுத்த முடியலையே, உங்க கைபையில விலாசம் எதுவும் கிடைக்கலே மா” என்றாள்.
“ஒ அதனால தான் வரலியா” என்று கொஞ்சம் சமாதானம் அடைந்தாள்.

வெங்கட் வந்து மேலும் அவளிடத்தில் பேச்சு குடுத்து அவளை கலகலப்பாக்கினான்.
அதுவரை அவளிடம் கொஞ்சம் உரிமையோடு அன்பாக பேசி வந்தவனுக்கு இப்போது அவள் கழுத்தில் முளைத்த மாங்கல்யம் தடுமாற்றத்தை குடுத்தது. அவளை விட்டு நீங்கவும் முடியாமல், அவளை பார்க்காமல் இருக்கவும் முடியாமல் அதற்காக அவளை கண்டு சகஜமாக முன் போல பேசவும் முடியாமல் அவன் நிலை தடுமாற்றம் கொண்டது...”

“அவன் சொல்படிதான் நாங்கள் அவளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண ஆலோசனை செய்தோம்.... அதற்கு முதலில் அவள் உடல் தேற வேண்டும் என காத்திருந்தோம்.

“அதன் பின் அவள் உடல் நலம் ஓரளவு தேற, ஒரு பிளாஸ்டிக் சர்ஜனை வரவழைத்தோம்..... அவரது மருத்துவமனையிலேயே அவளுக்கு க்ராப்டிங் நடந்தது..... அவளது புகைப்படம் கூட யாரும் தரமுடியாத நிலையில் ஓரளவு அவள் முகம் இப்படி இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் அவளது முகத்தை மீண்டும் பிரம்மனாக இருந்து உருவாக்கினார் அந்த டாக்டர் எங்கள் குழுவுடன்.... அவள் முகம் கழுத்து முழுவதும் தீ காயங்களால் கருகி உருமாறி போயிருக்க, சதை தோல் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து கட்டுகள் போடப் பட்டன.

சிகிச்சை முடிந்து கட்டுகள் அவிழ்த்தபின், இன்னமும் தாறுமாறான முள்வேலி கம்பிகள் போல அவள் முகத்தில் தடயங்கள் தையலின் வடுக்கள் இருந்தன... மெல்ல மெல்ல அவை மறையத் துடங்கின....
அவ்வப்போது என்னைக் காணும்போதெல்லாம் “நான் யார் டாக்டர்? என் பேர் என்ன?” என்பாள்.
“நீ மாயா, என் மகள்..... ஒரு விபத்தில் அடிபட்டாய்.... நான் உன்னை இங்கே அழைத்து வந்து சிகிச்சை குடுத்து வருகிறேன்னு” அவளுக்கு ஆறுதல் சொல்லி இங்கேயே தங்க வெச்சிருக்கேன்”
“மனசார என் மகளாகவே தான் அவ வாழ்கிறா மிஸ்டர் சித்ரஞ்சன்” என்றார் வேதனையுடன்.

“அப்போதும் வெங்கட் வருவதை நிறுத்தவில்லை. அவளுடன் எப்போதும் போல அன்புடன் ஆதரவாக பேசினான்..... அவன் மட்டுமே அவளுக்காக வந்தான் அன்புடன் பேசினான் என்பதால் அவளுக்கும் அவன் வரவு பெருத்த நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்தது.... ஆனால் இப்போது இருவரும் சற்றே விலகினார்போல பேசி பழகினர்.... என்னவே சிரித்து அரட்டை அடித்தபோதும் கண்ணுக்கு தெரியாத ஒரு தடுப்பு சுவர் இருந்தது அவர்கள் மத்தியில்..” என்று கூறி நிறுத்தினார் கோபிநாத்.

இதை எல்லாம் கேட்டு ரஞ்சனின் உள்ளம் கொஞ்சம் பதைத்தது. இது ஒரு வேளை என் குட்டிமாவே தானோ, எனக்காக தெய்வம் அவளை மீட்டு தந்ததோ... அவளாகவே இருந்தால் எவ்வளோ நல்லாருக்கும் கடவுளே...’
எவனோ அந்த ஒருவன், ஒருவேளை அவன் என் சித்து மேல் ஆசை கொண்டிருப்பானோ, அவளோ தன் நிலை தெரியாமல் இருந்திருக்கிறாளே.... அவளை எந்த விதத்திலும் குற்றம் சொல்லவும் முடியாது..... விலகியே பழகினர் என்று டாக்டர் கூறுகிறார்.... ஏதாயினும், அந்த நல்லவன் என் சித்துவை எனக்கு மீட்டு குடுத்த நடமாடும் தெய்வம்....’ என பல யோசனைகளும் தோன்றி மறைந்தன.

டாக்டர் கூறியதை கேட்டு அவனுக்குள் ஏதோ ஒன்று சுழன்றது...... ‘இது என் குட்டிமாவேதான்?’ என்ற எண்ணம் மெல்ல மெல்ல வலுப்பெற்றது..... ஏதோ ஒரு துணிச்சல் கொண்டு
“டாக்டர், அவங்கள, உங்க மாயாவ, பத்தி நான் கேட்டதுக்கு காரணத்த இப்போ சொல்றேன் கேளுங்க, நீங்க எனக்கு உதவ முடியும்னு எனக்கு இப்போ நம்பிக்கை வந்திருக்கு” என்றபடி சித்ராங்கி திருமணத்திற்கு கிளம்பியதிலிருந்து மொத்த கதையையும் அவரிடம் கண்ணீர் மல்க கூறி முடித்தான். கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க அதை கேட்டு கோபிநாத் பிரமித்தார்.

“டாக்டர், நான் அந்த கைபையை பார்க்கலாமா, அது ஒரு ஆழ்ந்த சிவப்பு நிற லெதர் லேடீஸ் கைப்பை தானே?” என்றான் பதறும் உள்ளத்துடன்.
அவர் மேலும் திகைத்து “ஆம் மிஸ்டர் சித்ரஞ்சன்..... மை காட், அப்போ மாயா...?” என்று முடிக்காமல் நிறுத்தினார்.
“ஐ ஆல்சோ ஹோப் த சேம் டாக்டர்” என்றான் நடுங்கிய குரலில்.
“காட் ப்ளீஸ் ஹெல்ப் மி” என்ற வேண்டுதலுடன் டாக்டர் அந்த கைபையை எடுத்து வரும் சில நொடிகளில் மனதார வேண்டி நின்றான்.

அதை அவர் அவன் கையில் கொடுக்கும் முன்னேயே,
“டாக்டர், அதில் ஒரு சின்ன சிகப்பு காயின் பர்ஸ் இருக்கும்” என்றான்.
அவர் தானே திறந்து பார்த்தார்..... அடியோடு கீழ் தேடி அலசியதில் அந்த சிறு கையின் பர்ஸ் அகப்பட்டது.
“அதன் உள்ளே எங்கள் திருமண புகைப்படம் இருக்கும் டாக்டர்” என்றான் அழுகையுடன்.
அவர் திறந்தவர் திகைத்தபடி அந்த சின்ன சிவப்பு பர்சை வெளியே எடுத்து பிரித்தார்.... அதில் சித்ராங்கியும் சித்ரஞ்சனும் அழகாக முகம் மலர்ந்த சிரிப்புடன் மாலையும் கழுத்துமாக நின்றனர்.
“மை காட்.... இட்ஸ் யு, அண்ட் திஸ் லுக்ஸ் லைக் மாயா..... மை காட், இத்தனை சின்ன பர்ஸ் ல போட்டோ இருக்கும்னு நான் எதிர்பார்கலை, இத திறக்கணும்னு எனக்கு தோணல, இது விதியா.... அப்போ அது உங்க மனைவியேதான் மிஸ்டர் ரஞ்சன்” என்று உற்சாகமானார் கோபிநாத்.

“இதில் நிறைய முக்கியமான பலதும் இருந்தன ரஞ்சன்.... அதான் நான் எடுத்து பத்திரப்படுத்தினேன்..... அதனால்தானோ என்னமோ தன் தோள் வழியே குறுக்காக போட்டு தன் நெஞ்சோடு பிணைத்து வைத்திருந்தாங்க....” என்றார்

“ஆமா டாக்டர், தன் தோழியின் திருமணத்திற்கென போயிருந்தாள்.... அதான் கெம்பு செட்டும் நீண்ட தங்க கழுத்தாரமும் கொண்டு சென்றாள்” என்றான். அவர் பேசியபடி உள்ளே பார்க்க அவன் சொன்னது அங்கே இருந்தன.
“அவை விலை உயர்ந்த நகைகள், அதனால்தான் இன்னதுன்னு சொல்லாம உங்களை கேட்டேன் ரஞ்சன்.... என்னை தவறா எண்ண வேண்டாம்” என்றார் டாக்டர்.
“ஐயோ இல்லை டாக்டர், எனக்கு புரிந்தது. நாந்தான் உங்களுக்கும் அந்த நடமாடும் தெய்வம் வெங்கட்டிற்கும் பல ஆயிரம் கோடி நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்”.

அவன் இப்போது கை நீட்டி அந்த கைபையை வாங்கினான், தன் முகத்தோடு வைத்து தேய்த்துக்கொண்டான்.

“நான் என் சித்துவ பார்க்கணும் டாக்டர்... நீங்களும் வரீங்களா?” என்றான்
கை கால் நடுங்கியது. ‘அவளுக்கு தன்னையே அறியாதபோது தன்னை எப்படி பரிச்சயப்படுத்த....’ என்று குழம்பினான் நடுங்கினான். அவள் அவனை உணர மறுத்துவிட்டால் என்னாவது என்று தயங்கினான்.7 comments: