Saturday 22 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 18

பாகம் 18
"வாங்க என்று முன்வந்து வரவேற்றான் வாசு.
சுந்தரத்திடம் ஏதுக்கே கூறி இனிப்பு காரம் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தான்.

வாங்க மேடம், வாங்க சார்.... வணக்கம்! என்னைத்தேடி நீங்களே வந்திருக்கீங்க.... கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேன் என்றான் பணிவாக.
அதெல்லாம் நோ ப்ராப்ளம்..... ஒக்காருங்க வாசு என்றான் வித்யா.
பார்த்தி வீட்டைச் சுற்றி பார்த்தபடி வந்தான். ஷோகேசில் குடும்ப படங்கள் இருக்க அதில் பார்வையிட டேய் வித்யா என்று அலறினான். “என்னடா?” என்று பயந்து அவனருகில் வித்யா செல்ல, அவன் ஒரு படத்தில் கை கட்டினான்.

அதைக்கண்டு வித்யாவும் அதிர்ச்சியாகி
வாசு, உங்கப்பா பேர் என்ன?” என்று கேட்டார்.
சார் என்றான் கலவரமாக ஏன் சார், பட்டாபிராமன் என்றான் தயங்கியபடி.
வித்யாவும் பார்த்தியும் திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
டேய், இவர் அனாதைன்னு சொன்னாரே அப்படீன்னா நம்ம பட்டாபி....?” என்றான் பார்த்தி வார்த்தையை முடிக்காமல்.
ஆம் என்பதுபோல வித்யா தலை அசைத்தான்.
மதுவுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அசோக்கை பார்க்க பொறுமையா இரு என்று ஜாடை காட்டி என்னப்பா?” என்றான் அவர் அருகில் சென்று.

டேய் அசோக், மதும்மா, இது யாரு தெரியுமா எங்க மூணாவது அங்கம்.... எங்க உயிர் தோழன் பட்டாபி ரொம்ப நாளாகவே டச் ல இல்லைன்னு சொல்லி புழுங்குவேனே, அவனோட மகன்தான் இந்த வாசு என்றான் கண் கலங்க.
ஐயோ பட்டாபி, உன் கதி இப்படியாடா ஆகணும்.... உன் குழந்தைகளையானும் எங்களுக்கு அடையாளம் காட்டி இருந்தா பூவில வெச்சு தாங்கி இருப்போமே டா என்று கலங்கினான் வித்யா. பார்த்தி அவனை தேற்றிக் கூட்டி வந்து அமர்த்தினான். அவன் கண்களுமே கலங்கித்தான் இருந்தன.

மது வித்யாவின் கையை அமுக்கி போறது விது... இப்போவானும் தெரிஞ்சுதே.... விட்ட குறை தொட்ட குறை தான்..... இல்லைனா நம்ம பவிக்கு இவரை பிடிச்சு போச்சே என்றாள் புன்னகைத்தபடி.
ஆமாம் மது, என் பட்டாபிக்கு மருமகளாகப் போறா என் பவி.... அதைவிட எனக்கு வேற என்ன வேணும்..... எங்க செட்டிலேயே அவனுக்குத்தான் முதல்ல கல்யாணம் ஆச்சு..... எனக்கே இருபத்தி ஐந்துலனா அவனுக்கு கல்லூரி முடிந்ததுமே பண்ணீட்டாங்க அவன் பெற்றோர் என்றான் மெல்ல சுதாரித்தபடி
வாசுவிற்கு ஓரளவிற்கு புரிந்தது என்றாலும் என்ன சார்.... உங்களுக்கு எங்கப்பாவை தெரியுமா?” என்றான்.

தெரியுமாவா? அவன் நான் பார்த்தி ஓருயிர் மூன்று உடலா பழகினவங்க வாசு.... ஒண்ணா படிச்சோம்.... ஊர் சுற்றினோம்... ஆட்டம் போட்டோம்.... ஊர் விட்டு வந்து சில வருடங்கள் வரை டச்சில் இருந்தான்.... ஆனால் சட்டுனு அதன்பின் ஒரு பிரிவு... ஏன் என்ன எப்பிடி என்று தெரியவில்லை... நானும் பார்த்தியும் அவனைப் பற்றி விசாரிக்காத இடம் இல்லை.... நாங்க இன்னமும் நண்பர்களாகவே இருக்கோம் அவன்தான் போய் சேர்ந்துட்டான்... என்ன செய்யறது விதி.
என் பவி உங்களை விரும்பறா..... நீங்களும் அவளை விரும்பறீங்கன்னு சொன்னா..... எங்களுக்கு ஏதுக்கே சம்மதம்தான்.... உங்க பெற்றோரைப் பற்றி தெரிந்தபின் மேற்கொண்டு பேசலாம்னு தான் வந்தோம்..... வந்த இடத்தில எல்லாமும் தெரிஞ்சுது..... ரொம்பவே சந்தோஷம்.... உங்களுக்கு சம்மதம்னா சீக்கிரமாவே கல்யாணத்தை வெச்சுக்கலாம் என்றன் வித்யா வாசுவின் கையை பிடித்தபடி.

ரொம்ப தேங்க்ஸ் சார்.... என்மேல் இத்தனை அன்பும் நம்பிக்கையும் வைத்ததற்கு நன்றி.... எனக்கு சம்மதம் சார்.... எனக்குன்னு இருக்கறது என் தங்கை..... அவளையும் வரச்சொல்றேன்.
ஆனா சார், ஒரு சின்ன விஷயம், எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு... இவன் என்ன நமக்கு கண்டிஷன் போடறதுன்னு நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.....” என்று தயங்கினான்.
அதுக்கென்ன, அவை என்னன்னு சொல்லுங்க என்றான் வித்யா.
சார், நான் திருமணத்திற்கு பிறகு பவியோட என் வீட்டில் தான் குடித்தனம் பண்ண விரும்பறேன்.... உங்களோட வந்து வீட்டு மாப்பிள்ளையா இருக்கச் சொல்லாதீங்க ப்ளிஸ் என்றான்.

ம்ம் அப்பறம்..” என்றான் வித்யா.
பவி விரும்பினா வேலைக்கு வரட்டும்.... உங்க கம்பனில அவளுக்குண்டான பங்கோ பதவியோ இருக்கட்டும்.... அதுல நான் குறுக்கே வர மாட்டேன்..... ஆனா சீர் வரிசைங்கற பேர்ல அவ்ளோ இவ்ளோன்னு செலவு பண்ணி அவளை எனக்குக் கட்டி வைக்கக் கூடாது. சிம்பிளா பண்ணினா போதும்
நான் இந்த வீட்டை வித்து ஒரு மூன்று படுக்கை அறைகொண்ட பிளாட் வாங்க ப்ளான் பண்ணி இருக்கேன்.... அதில் அவளை என்னால வசதியா வாழ வைக்கமுடியும்னு நம்பறேன்.... நீங்க எப்போ வேணும்னாலும் எங்களை பார்க்க வரலாம்..... ஏன் எங்க கூடவே தங்கினாலும் ரொம்ப சந்தோஷம்..... நாங்களும் உங்கள வந்து அடிக்கடி பாத்துக்கறோம்..... ரெண்டு நாளோ நாலு நாளோ தங்கறோம்... ஆனா அங்கேயே இருக்க முடியாது..... நான் என் போஸ்ட்லயே இருக்கேன்.... பவி அவ போஸ்ட்லயே வேலை பார்க்கட்டும்என்றான்.
அப்பறம்...” என்றான் வித்யா. “வேற ஒண்ணும் இல்லை சார் என்றான் சற்றே பயந்து.

பார்த்தியும் மதுவும் வித்யாவை பார்க்க, “பாத்தீங்களா, பட்டாபியோட மகன் பின்ன வேற எப்பிடி இருப்பான்என்றான் பெருமையான குரலில். இருவரும் புன்னகைக்க எல்லோருக்கும் திரூப்தியே.
சரி, உங்க கண்டிஷன் எல்லாத்தையும் நாங்க ஒத்துக்கறோம்..... நீங்க இதைப்பத்தி பவிகிட்டேயும் பேசிடுங்க..... நாங்களும் பேசறோம்.... அவள் மனதில் என்ன இருக்கோ தெரியணுமே என்றான் வித்யா.

ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்.... நான் பேசறேன் என்றான் சிரித்தபடி மகிழ்வாக.
அவர்களை வணங்கி எழுந்தான்.... “நல்லா இருக்கணும்.... சௌக்கியமா தீர்காயுசா வாழணும் என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டார் வித்யாதரன்.
உங்களைப் போல எங்களுக்கு கண்டிஷன் எதுவும் இல்லைனாலும் ஒரு சின்ன விஷயம் உங்ககிட்ட மறைக்காம சொல்லீட விரும்பறோம் என்றான் வித்யா தயங்கி மதுவின் முகம் பார்த்தபடி.
வாசு, பவித்ரா என் முதல் மனைவியின் மகள்.... மதுரா என் இரண்டாவது மனைவி என்றார். வாசுவிற்கு ஆச்சர்யம்.

அப்படியா!’ என்பதுபோல பார்த்தான்.
ஆம், முதல் மனைவி என் சொந்த மாமன் மகள் தான்.... ஆனாலும் அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது..... என்னைக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கொண்டு பின் வாழப் பிடிக்காமல் அவள் தன் வாழ்வைத் தேடிச் சென்றுவிட்டாள். அப்போது பவி மூன்று மாதக் குழந்தை என்றான்.
ஓ மை காட்!!” என்றான் வாசு. “எப்படி மாமா தாங்கிணீங்க?” என்றான் ஆதுரமாக அவர் கையைப் பிடித்தபடி.
கொஞ்சம் சிரமப்பட்டேன்... பின்னோடு இரு வருடங்களுக்குள் இதோ இந்த தேவதை என் வாழ்வில் வந்தாள்... வரம் தந்தாள் வாழவைத்தாள் என்றார் குறும்பாக சிரித்தபடி இலகுவாகினர். மது சிவந்து தலை குனிந்தாள்.
போதுமே, மாப்பிள்ளைக்கு முன்னாடி என்னதான் பேசறதுன்னு விவஸ்தை வேண்டாம் என்றாள் மெல்லிய குரலில்.
பாத்தீங்களா மிரட்டறா என்று அதற்கும் சிரித்தான்.
வாசு மாமா அத்தை, இது எல்லாம் பெரிய விஷயமே இல்லை..... பவி யாருக்கு பிறந்தா என்ன.... உங்க வளர்ப்பு.... அவ உங்க மகள் அத்தை.... அது எனக்கு நிச்சயமா சொல்ல முடியும் என்றான்.
மதுவுக்கு கண்கள் பனித்தன. “ரொம்ப சந்தோஷம் மாப்ள என்றாள்.

சரி நாங்க கிளம்பறோம் என
இல்லை, இனிப்பு சாப்பிடுட்டு போலாம் ஒக்காருங்க என்று ப்ளேட்டுகளை அடுக்கி எடுத்துக்கொண்டு வந்தார் சுந்தரம். அவரை அறிமுகம் செய்தான்.
தம்பி கல்யாணத்த பத்திதான் கோமதிக்கும் கவலை.... எல்லாம் கேட்டேன்.... ரொம்ப சந்தோஷமா இருக்குதுஎன்றார் அவர்.
நீங்க கவலையே படவேண்டாம்... உங்க மக இங்கே விரலை அசைக்க வேண்டாம்.... நான் எதுக்கு இருக்கேன்.... எல்லா வேலையும் பாத்துக்கறேன் என்றார்.
மது மகிழ்வோடு சிரித்தாள். “அதுசரி, புகுந்த வீட்டுல அப்படி எம் மக ஒக்காந்தா எனக்கு என்ன மரியாதை..... அதெல்லாம் சமையல் வீட்டுவேலை எல்லாம் பிரமாதமா செய்வோ எம்பொண்ணு என்றார் பெருமையான தாயாக.
அனைவரும் விடை பெற்றனர். அசோக் எழுந்து வாசுவை ஆறத் தழுவிக்கொண்டான்.வரேன் மாமா என்று.

அத்யாயம் நாற்பத்தி ஆறு
வீட்டிற்கு வந்து பெற்றோர் எல்லாம் நல்லபடி பேசி முடித்தாகி விட்டது என்று கூறும்வரை பவிக்கு இருப்பு கொள்ளவில்லை. அதிலும் வாசு தன் தந்தையின் மிக நெருங்கிய நண்பரின் மகன்தான் என்று தெரிந்ததும் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி.
வாசுவை இரவு மொபைலில் அழைத்தாள்.

என் செல்லம் சந்தோஷம்தானே?” என்று கேட்டான். “உங்க அப்பா அம்மா பேச வந்துட்டு எங்கப்பா படத்தைப் பார்த்து விவரம் சொன்னதும் எனக்கு ஒரே சந்தோஷம் தங்கம்ஸ்என்றான்
எனக்கும்தான்... என்ன ஆச்சர்யம் இல்லியா.... எங்க தாத்தா காலத்துலேர்ந்து நண்பர்களாம் நம்ம குடும்பங்கள்.... எங்கப்பா காலத்தில் அது தொடர்ந்தது. இப்போ நம்ம காலத்திலையும் தொடருது.... எல்லாம் இறைவன் செயல் இல்லையா வாசு என்றாள்.
நிச்சயமா டா என்றன்.”ஹேய் கண்ணம்மா...” என்று குழைந்தான்.
என்னவாம்?” என்றாள் அவளும் குழைந்த குரலில்.

எனக்கு பரிசொண்ணும் கிடையாதா?” என்றான் தாபத்துடன்.
சீ போ என்றாள்.
என் செல்லமில்ல ஒண்ணே ஒண்ணுடீ... மிச்சம் எல்லாம் அப்பறமா வசூல் பண்ணிக்கிறேன் என்றான்.
போங்க, எனக்கு வெட்கமா இருக்கு
போடி, நீயும் உன் வெக்கமும்... இந்த காலத்துல இப்படியும் ஒரு பெண்ணான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்குஎன்று அலுத்துக்கொண்டான்.
என்ன கோவம் இது?” என்றாள்
அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றான்.
மொபைலை வாயோடு வைத்து இச்ச என்று முத்தம் வைத்தாள் அழுத்தமாக
.
ம்ம்ம் சுகம் என்றான் ரசனையோடு.

அடுத்த நாள் மாலை தன்னோடு ஒரு முக்கியமான இடத்துக்கு வரும்படி பவியை அழைத்தான் வாசு.
எங்க போறோம் வாசு?” என்று கேட்டு துளைத்தாள்.
அது என்ன பொறுமை இல்லாம..... ஸஸ்பென்ஸ்.... பேசாம வா என்று தனது பைக்கில் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
அவர்கள் சென்றது ஒரு கார் டீலரிடம். அங்கே ஒரு அழகிய புது பியட் லீனியா மரூண் கலரில் மிளிர்ந்தது. அதன் மீது பட்டு ரிப்பனும் பலூனுமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

பவி கண்கள் வியப்பில் விரிய
, அவள் பக்கம் குனிந்து
அப்படி விழி விரிக்காதேடீ... என்னமோ பண்ணுது என்றான். “சீ போங்க என்று சிவந்தாள்.
உள்ளே சென்று சம்பந்தப்பட்ட தாள்களில் அவளை கை ஒப்பம் இடச் செய்தான்.
நானா! என் பேர்ல எதுக்கு....” என்று அவள் முடிக்கும்முன்,
இது நம்ம புது குடித்தினதுக்கு புது கார்.... போடுடீ என்றான் மிரட்டலாக.
சரி என்று கையெழுத்திட்டாள்.
மேனேஜர் அவனிடம் சாவியை தட்டில் வைத்து நீட்ட, “அங்க குடுங்க என் வீட்டு பாஸ்கிட்ட என்றான் சிரித்தபடி.

அவரும் சிரித்துக்கொண்டே அவளிடம் நீட்டினார்
. அதைப் பெற்றுக்கொண்டாள்.
தன் வாசுவின் முதல் பரிசு அதுவும் இவ்வளவு அழகான உசத்தியான பரிசு என்று பிரமித்து போயிருந்தாள் பவி.
வெளியே வந்து ஓட்டுனர் சீட்டின் கதவை திறந்து அவளை ஏறச் சொன்னான்.
நானா, என்னால் முடியாது..... நான் ரொம்ப பரவசமா உணர்ச்சிவசப்பட்டு இருக்கேன் வாசு.... ப்ளீஸ் என்று சாவியை நீட்டினாள்.
“அதுசரி, இது உனக்கு என் பரிசு ஆனாலும் நான் உபயோகப்படுத்தலாம்தானே மேடம்? என்று குறும்பு மின்ன கேட்டுக்கொண்டான்.
இந்த வம்புப் பேச்சு தானே வேண்டாங்கறது.... நீங்க வேற நான் வேறையா வாசு?” என்றாள் கண்ணில் காதலோடு.
 

சரி என்று அவனும் ஏறி அமர
, அவள் மறுபக்கம் வந்து அவனருகில் ஏறிக்கொண்டாள்.
அவன் வண்டியைக் கிளப்பி ஓட்டிக்கொண்டு போனான். இடது கை அவளைச் சுற்றி அணைத்திருக்க லாவகமாக அவன் ஓட்டிய அழகு அவளை ஆச்சர்யப்படுத்தியது.
நீங்க இவ்வளவு அழகா ஓட்டறீங்க வாசு என்றாள்.
ம்ம், தாங்க்ஸ் டா.....நான் பத்தாவது படிக்கும்போதே எங்க வீட்டுல கார் இருந்துதுன்னு சொன்னேனே செல்லம்.... அப்போதே அப்பா பழக்கிவிட்டுட்டார்.....

அக்கம பக்கம் மட்டும் ஓட்ட விடுவார்
..... அப்போ எனக்கு பதினெட்டு ஆகலை..... அதுனால மத்தபடி ஓட்ட அனுமதி கிடையாது.... அப்போலேர்ந்து நண்பர்களின் வண்டி எல்லாம் கூட ஓட்டியிருக்கேன் கல்லூரி காலத்துல என்றான்.
அவள் இடுப்பில் இருந்த கை சில்மிஷம் செய்துகொண்டிருக்க, “வாசு, வால்தனம் பண்ணினா இறங்கிடுவேன் என்று மிரட்டினாள்.
“நான் நிறுத்தினாத்தானே  இறங்குவே என்றான் மேலும் வேகம் கூட்டி.
ஐயோ வேண்டாம், இவ்வளோ ஸ்பீடா போகாதீங்க... எனக்கு பயம் என்றாள் மருண்ட விழிகளோடு.

சரி என்று மிதமாக ஒட்டிக்கொண்டு நேரே கோவிலுக்குச் சென்றான்
. அங்கே இறங்கி இருவரும் உள்ளே சென்று பூஜாரியைக் கண்டு காருக்கு பூஜை செய்ய வைத்தனர். வணங்கிவிட்டு வெளியே வந்து நேராக அவளை வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்தான். சுந்தரத்தை அமர்த்தி ஒரு ரவுண்ட் கூட்டிச் சென்றான். தன்னையும் ஒரு மனிதனாக மதித்து அவன் இதை செய்ததைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்து வாழ்த்தினார்.

காரை போட்டோ எடுத்து கோமதிக்கு ஈமெயில் அனுப்பினான்
. கோமதியும் வெங்கட்டும் கூப்பிட்டு வாழ்த்தினர்.
அப்போது வாசு கோமதியிடமும் வெங்கட்டிடமும் எல்லா விஷயங்களும் கூறி சென்னை வரச்செய்தான்.

கோமு வந்ததும் ஒரே அடம், அண்ணியை இப்போதே பார்த்து ஆகவேண்டும் என்று. சரி என்று அசோக்கிற்கு போன் செய்து சொல்லிவைத்துவிட்டு அழைத்துப் போனான்.
பெண் பார்க்க என்று அங்கே செல்லும் சந்தர்ப்பம் வரவில்லை எனினும் வருங்கால நாத்தனார் வருகிறாள் என்றதும் மது பெண் பார்க்கும் சடங்கு போலவே எல்லாமும் ரெடி செய்தாள்.

என்னமா இது தடபுடல் பண்றே?” என்று பவி வினவ,
என்னடி, மாப்பிள்ள அன்னிக்கி பிக்னிக் வந்ததோட சரி.... இப்போதானே மொத வாட்டியா வரார்... உன் நாத்தனார் வேற வரா.... மரியாதையா கவனிக்க வேண்டாம்.... நீ போய் ரெடி ஆகுபோ என்று விரட்டினாள்.
அம்மா, ஜஸ்ட் அ காஷுவல் விசிட் மா என்றாள்.
ஐ செட் கோ கெட் ரெடி என்று அதட்டினாள்.
சரி என்று பவி சென்று முகம் கழுவி ஒரு அடர் பச்சை கிரேப் சில்க் புடவை உடுத்தி மிதமான் மேக்கப்பில் ரெடி ஆனாள்.
உள்ளேயே இரு, நான் கூப்பிட்டப்பறமா வா என்றாள் மது.
மா, இதெல்லாம் டூ மச் என்று அலறினாள்
அப்படியே வாயையும் மூடு என்றாள் மது.
வாசு ஒரு முறை அங்கு வந்திருந்தாலும் இப்போது மாப்பிள்ளையாக வருவது சற்று படபடப்பாக இருந்தது. கூடவே வந்த வெங்கட்டும் கோமுவும் அவனை ஒரே வாரல் வேறு.

அண்ணா, நீயேன் பொண்ணு மாதிரி வெட்கப் படறே. படபடப்பு வேற?” என்று.
கோமு பேசாம இரேன் என்று கெஞ்சினான் அவள் கலகலவென சிரித்தாள்.
பழிக்கு பழி..... என்கிட்டே சொல்லாம நீயே காதலிச்சு அண்ணியை செலெக்டும் பண்ணிட்டே.... இப்போ வந்து சொன்னியே, அதுக்கு என்று சிரித்தாள்.
பவி வீடு வந்து சேர்ந்து உள்ளே சென்றனர். “வாங்க வாங்க என்று வரவேற்று வித்யாவும் மதுவுமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
பவி, கீழ வாம்மாஎன்று அழைத்தார் மது. அப்போது வரை நார்மலாக இருந்தவளுக்கு சட்டென்று ஒரு வெட்கமும் படபடப்பும் உண்டானது. மெல்ல கீழே வந்தாள்.

அவளை எதிர்கொண்டு கை பிடித்து அழைத்து வந்து தன்னருகில் அமர்த்திக் கொண்டாள் கோமதி
.
அண்ணி என்றாள் ஆசையாக, “ரொம்ப அழகா இருக்கீங்க என்று அவள் மோவாயை பிடித்து கொஞ்சினாள்.
பவிக்கும் கோமதியின் குழந்தை போன்ற முகமும் குணமும் மிகவும் பிடித்துப் போனது. சில நிமிடங்களில் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டனர். வெங்கட்டும் வாசுவும் வித்யாவுடன் பேசிக்கொண்டிருந்தனர். வாசுவின் பார்வை அவ்வப்போது பவியை தீண்டிச் சென்றது. அவளும் அவ்வண்ணமே பார்வையில் பதில் கொடுத்தாள்.
எல்லோருக்கும் டிபன் கொடுக்க எழுந்தாள் மது. கூடவே எழுந்து போய் உதவினாள் பவி. வாசுவிடம் தட்டை நீட்ட அவனோ அதை கையில் வாங்கியபடி அதை உண்ணாமல் அவளை கண்களால் உண்டான். அவள் வெட்கப் பட்டு அவனை கண்ணால் அதட்டினாள் சாப்பிடும்படி. அவன் சிரித்துக்கொண்டே சாப்பிட்டான்.
மத்த விஷயங்கள் பேசி முகூர்த்த தேதி தீர்மானித்தனர். சிம்பிள் திருமணம் மட்டும் ஒப்புக்கொள்ளப் படவில்லை.

எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணு.... என் பிசினஸ் கெஸ்ட் லிஸ்டே பெரிசு மாப்பிள்ள, அதுனால அதுக்குமட்டும் தடை சொல்லாதீங்க என்று கேட்டுக்கொண்டார் வித்யா.
அவனும் புரிந்துகொண்டான்.
வீட்டோடு நிச்சயம் வைத்துகொண்டு ஒரு நல்ல முகூர்த்த நாளில் திருமணம் வைத்தனர்.

வாசு அந்த நேரத்தில் பவியை அழைத்துச்சென்று ஒரு புதிய மூன்று படுக்கை அறைகொண்ட ப்ளாட்டை காண்பித்தான்.
இதுதான் நம்ம புது வீடு பவித்ரா.... உள்ளே வா என்று கைபிடித்து அழைத்துப் போனான்.
ஒவ்வொரு ரூமாகச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தாள். நல்ல வெளிச்சமும் காற்றுமாக ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்தது அவர்களது  பிளாட்.
ரொம்ப அழகா இருக்கு வாசு என்றாள்.
ஹப்பா பாசம்மா ஒப்புதல் தந்துட்டாங்க... அப்போ பணம் கட்டீடலாம்தானே?” என்றான் குறும்பாக. அவள் அவனை முறைத்து அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள்.

மொத்த கட்டிடமும் லேட்டஸ்ட் முறையில் கட்டப்பட்டிருந்தது
. மாடர்ன் வசதிகளோடு, ஷாப்பிங் செய்ய கடை, பாங்க், ஜிம், மருந்து கடை என்று எல்லா வசதிகளும் உள்ளேயே இருந்தன. கட்டிடத்தைச் சுற்றி பசுமையான தோட்டமும், ஜாகிங் பாதையும், குழந்தைகளுக்கு விளையாட இடமும் இருந்தன. நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட் என்று அது ஒரு பக்கம். மொத்தத்தில் ஒரு குட்டி நகரம் போல இருந்தது அந்த இடம்.
ஏன் வாசு, கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, இதெல்லாம் பார்த்தா ரொம்ப காசாயிருக்கும் போல தோணுது.... அவ்வளவு செலவு செய்து இத வாங்கணுமா?”என்றாள் தயக்கமாக.
கண்ணம்மா, இது என் கனவு டா.... கொஞ்சம் கூடுதல் தான்.... ஆயினும் என்னால் முடியும்னு தோணினதுனால வாங்க முடிவு பண்ணினேன்.... ஆனாலும் உன் பங்களா போல இல்லை.... கொஞ்சம் குறைச்சல்தான் என்று குறைபட்டுக்கொண்டான்.
ஐயோ, என்ன பேசறீங்க வாசு..... அங்க இருந்து எனக்கே அலுத்துப் போச்சு.... தனி வீடு போர் வாசு.... இது எவ்வளவு அழகா இருக்கு என்றாள் கண்கள் விரிய.

அந்த விழிகளைப் பார்த்துக் கிளர்ந்தான்
. அவளை இடைத்தொட்டு அருகில் இழுத்து அவளை அணைத்து அந்த கண்களின் மேல் இதழ் பதித்தான்.
வாசு வேண்டாம், கதவு திறந்திருக்கு என்றாள் முனகலாக.
ம்ம்ம் என்றான்.
ப்ளீஸ் என்றாள்
ம்ம்ம் என்று முனகினானே தவிர அவ்வளவு சீக்கிரத்தில் அவளை விடவில்லை. தாகம் தீர்ந்து அவளை விடுவித்தபோது அவள் சிவந்து போயிருந்தாள். ஒன்றும் பேசாமல் அவனோடு ஒட்டி நடந்து வெளியே வந்தனர். மொத்த இடமும் சுற்றி பார்த்துவிட்டு வந்து வண்டியில் ஏறி வீடு வந்தனர்.

பவித்ரா, வீடு ரெடி ஆகிடுச்சு..... அதை எப்படி அழகு பண்ணணுமோ உன் இஷ்டம் டா.... இன்டீரியர் டிசைனர உன்னைக் கூப்பிடச் சொல்றேன்.... அவங்க கிட்ட பேசி என்ன எப்பிடி வேணுமோ நீயே பாத்து செஞ்சுடுடா.... இதெல்லாம் எனக்கொண்ணும் தெரியாது.... இது உன் வீடு உன் இஷ்டம் என்றான். அவள் பெருமிதத்துடன் சரி என்று தலை அசைத்தாள்.
வாசு என்றாள் காதலுடன்
என்னடி?” என்றான் அவளை திரும்பிப் பார்த்து
ஐ லவ் யு என்றாள் கண்ணில் ஒரு மின்னலோடு.
ஐ லவ் யு டூ டார்லிங் என்று அவளை இடைப்பற்றி அணைத்துக்கொண்டான்.

நகை புடவை என்று தன் மகளுக்கு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தாள் மது. பிரபுவும் அசோக்கும் சில நாட்கள் முன்னதாகவே வந்து விட்டனர். வசுவை தன்னோடு இருக்க செய்தாள் மது.
டீ வசு, என்னோடவே இருடீ... ஒரே படபடப்பா இருக்கு என்றாள்.
அடிப்போடி இவளே.... உனக்கா கல்யாணம் நம்ம பொண்ணுக்குடீ.... பேசாம இரு நான் எல்லாம் பாத்துக்கறேன் என்று தங்கினாள். பார்த்தி கல்யாண ஏற்பாடுகளுக்கு அலைவதில் பெரும் உதவி செய்தான். ஊரிலிருந்து சொந்தக்காரகள் வந்த வண்ணம் இருந்தனர். மாளிகை நிறைந்து போனது. ஒரு நிமிடமும் ஓய்வு ஒழிவு இன்றி அலைந்தனர் குடும்பத்தினர். அவரவருக்கு இது இது பொறுப்பு என்று பிரித்துக்கொண்டுவிட்டதால் பெரும் பிரச்சினை இன்றி முகூர்த்த நாள் விடிந்தது.

பவியை மதுவும் வசுவுமாக அலங்கரித்தனர்.
டீ மது, உனக்கு ஞாபகம் இருக்கா... நீ என் கல்யாணத்திற்கும் நான் உன் கல்யாணத்திற்கும் இதுபோலத்தான் அலங்கரித்தோம். இப்போ நம்ம பொண்ணுக்கு அலங்கரிக்கிறோம் என்று மகிழ்ந்தாள். அவளுக்கு பெண் குழந்தை இல்லை என்பதால் எப்போதுமே நம் பொண்ணு நம் மகள் என்றுதான் பேசுவாள். பவிக்கும் வசுவை ரொம்பவே பிடிக்கும். அத்தை என்று அழைத்தாலும் அம்மாவை போலத்தான் நடந்துகொள்வாள்.
பவி ரெடி ஆனதும் வசுவும் மதுவும் எப்போதும் போல ஒரே போன்ற சேலை உடுத்தி தயாரானார்கள். மண்டபத்துக்குச் சென்றனர்.

அங்கே ஆண்கள் எல்லோரும் ஏதுக்கே முன்பாக போய் கல்யாண வேலைகளை கவனித்து இருந்தனர். உள்ளே வந்தவளைக் கண்டு வித்யா அசந்து போனான்.
மதுவன் அருகில் போய் ரகசிய குரலில் என்னடி இது, இன்னிக்கி பவிக்கு தான் திருமணம் ஒரு வேளை நமக்குன்னு நினைச்சுட்டியோ?” என்றான்.
அவள் சிவந்து போதுமே, இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பொண்ணுக்கு கல்யாணம், பேச்சைப் பாரு என்று கடிந்து கொண்டாள்.
நீ இவ்வளவு அழகா இருந்து தொலைத்தா என் தப்பா?” என்றான் அவளை மேலும் சிவக்க வைத்தபடி.
என்னடா சைக்கிள் காப்பில வழிசலா?” என்று வாரினான் பார்த்தி.
அங்கே என்ன வாழுதாம், உள்ளே வரும்போதே என் தங்கையை ஓரம் கட்டினவன் தானே நீ.... யாரும் பார்க்கலைன்னு எண்ணமா?” என்று அவனை வித்யா வார,
ஐயோ போதுமே, கஷ்டம், கல்யாண வேலையப் பார்க்காம..” என்று மகளிர் இருவரும் ஆண்களை அடக்கினர்.

பின்னோடு வாசு மாப்பிள்ளை கோலத்தில் தன் தங்கையுடனும் சில சொந்தங்களுடனும் வந்து இறங்கினான். பவியும் அழைத்துவரப்பட அருகருகே அமர்த்தி சடங்குகள் முதலாயின. அவளை வாசுவிற்கு மதுவும் வித்யாதரனுமாக தாரை வார்த்தனர்.
வித்யாவின் அருகில் அமர்ந்து பவியின் கைகளை பிடித்து வாசுவின் கையில் தந்துகொண்டிருகும்போது மதுவின் கண்கள் நிறைந்து பார்வை மறைத்தது.
இந்தக் குழந்தை நான் வளர்த்த குழந்தை என்று மனம் பொங்கியது. ‘எனக்கும் இந்த பாக்கியம் கிட்டியதேஎன்று தளும்பியது. நல்ல நேரத்தில் கோமு பின்தாலி முடிய வாசுதேவன் பவித்ராவின் கழுத்தில் தாலி கட்டினான்.
அக்னியை வலம் வந்து பெரியோர்களிடம் ஆசி வாங்கி என்று எல்லாமும் முடிந்தது. பிரபுவும் அசோக்கும் பவியை வாரிக் கொண்டிருந்தனர். அவளால் ஒன்றுமே சொல்ல முடியாமல் நாணத்தோடு தலை குனிந்து மௌனமாக அமர்ந்திருந்தாள். வாசு சிரித்த முகமாக எல்லாவற்றையும் என்ஜாய் செய்தபடி மகிழ்ந்தான்.

மாலை வரவேற்பிற்கு சென்னையின் எல்லா பெரிய மனிதர்களும் வந்திருந்தனர். அதுபோக வெளி ஊரிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் கூட பலரும் வந்து வாழ்த்தினர். அப்போதுதான் வித்யாவின் செல்வாக்கையும் வியாபார வட்டத்தையும் பற்றி அசலாக அறிந்து கொண்டான் வாசு.
அவர்களை வாசுவின் வீட்டில் கொண்டுவிட்டு பிரியாவிடை பெற்றனர் பெரியோர்.
மதுதான் தேற்ற முடியாமல் இருந்தாள். வசு அவளுடன் கூடவே இருந்து  பார்த்துக் கொண்டாள்.

அன்று முதலிரவு. வாசு உள்ளே அமர்ந்திருக்க பவி மெல்ல நாணத்துடன் உள்ளே சென்றாள். அவளை அன்புடன் அணைத்து உள்ளே கூட்டிச்சென்றவன் அவளை படுக்கையில் அமர்த்தி அவன் முகம் நிமிர்த்தி கண்ணோடு கண் நோக்கினான். அதில் ததும்பிய அன்பும் காதலும் தாபமும் ஏக்கமும் இருவருக்கும் பேசாமலே புரிந்து போனது..

அத்யாயம் நாற்பத்தி ஏழு
பவியும் வாசுவுமாக புது வீடு வாங்கி குடி போயினர். பவி குடித்தனம் ஆரம்பித்த நேரத்தில் கோமதி உண்டானாள். பவி ஆபிசிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மசக்கைக்கென அவளை அழைத்து வந்து தாய் மடியாக தாங்கினாள். தனக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை எனினும் தன் தாயிடம் பக்குவம் கேட்டு ஒவ்வொன்றும் செய்தாள். மசக்கை முடிந்து கோமு பெங்களுர் செல்ல பவியும் மறுபடி வேலைக்கு வந்தாள்.

கோமுவிற்கு எட்டு மாதத்தில் சீமந்தம் நடத்தினர்
. மதுவும் வசுவுமே எல்லாம் இழுத்து போட்டுக்கொண்டு செய்தனர். வாசுவின் கண்கள் கலங்கிவிட்டன.
அத்தை, நான் எப்படி நன்றி சொல்றதுன்னு...” என்று திணறினான்
என்ன இது, எனக்கு பவி வேறு கோமதி வேறா மாப்பிள்ளை பேசாம போங்க என்று அடக்கிவிட்டாள் மது.

கோமுவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
. பவி மீண்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு பத்தியம் சமைத்து தாயாக மடி தாங்கினாள். வாசுவிற்கு அதில் பெருமை. அவளை தலையில் வைத்துக் கொண்டாடினான்.
என் பவித்ரா செல்லம் என்று கொஞ்சி மகிழ்ந்தான். “உன்னைப்போல் உண்டாடி என்று குழைந்தான்.
போதுமே என்று வெட்கப்பட்டாள் பவி.

நாட்கள் ஓடியது. அவன் புத்தி கூர்மையால் பிசினஸ் மேலும் மேலும் பெருகியது. இப்போதெல்லாம் வித்யா முழு நேரமும் ஆபிஸ் வருவதில்லை. பவியும் வாசுவுமே பார்த்துக்கொண்டனர். அவன் இப்போது வெளி நாடுகளுக்கு பறந்து வந்தான். அப்போதெல்லாம் பவிதான் ஆபிசை பார்த்துக் கொண்டாள். இருவரும் ஜோடியாக பங்குபோட்டு வேலைகளை சிறப்பாக பார்த்துக்கொண்டனர்.
அந்நிலையில் பவி உண்டானாள். மது அவளை உள்ளங்கையில் தாங்கினாள்.
வாசுவோ கேட்கவே வேண்டாம்.... கோமுவிற்கு பவி செய்ததை பார்த்து மனம் நிறைந்தவன் பவித்ராவை கொண்டாடி பார்த்துக்கொண்டான்.

சீமந்தமும் வளைகாப்பும் சிறப்பாக நடந்து முடிய பவியை மது அழைத்து போனாள்
. வாசுவிற்கு ஒரே சோகம். நித்தமும் போனில் அனத்தினான்
என்னடி சம்ப்ரதாயம் இதெல்லாம்? எப்பிடி நான் உன்னைப் பார்க்காம இருப்பேன்?” என்று புலம்பினான்.
அவளில்லாத படுக்கை அறை அவனை கொன்றது. அங்கு படுக்க பிடிக்காமல் அத்தனை நாளும் கெஸ்ட் ரூமில் போய் படுத்துக்கொண்டான். அதை எல்லாம் கேட்டு பவிக்கு மனம் ஏங்கியது... அவனை அணைக்க கைகள் துடித்தன.... வாரத்தில் நான்கு நாளானும் வந்து பார்த்துச் சென்றான்.

ஒன்பது மாதமும் ஆகி இருக்க அவனை அங்கேயே தங்கச் சொல்லி வேண்டிக்கொண்டாள்
. அவளுக்காக அவன் விட்டு கொடுத்து அங்கேயே தங்கினான்..... அப்படி தங்கியதும் நன்றாகியது. இரண்டாவது இரவிலேயே அவளுக்கு வலி கண்டது. ஓடிப் போய் காரை எடுத்து அவளை கூட்டிக்கொண்டு மது வித்யாவுடன் மருத்துவமனைக்கு பறந்தான்.
அங்கே அவள் தவித்து வலித்து கதற இவன் வெளியே தத்தளித்தான். வித்யா அவனை சாமாதானப்படுத்தினார்.

சிறிது நேரத்துக்கு பின் சுகப்ரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது
. குண்டு கன்னங்களோடும் கரு விழிகளோடும் மிக அழகாக இருந்தது. அதை முதன் முறையாக கையில் ஏந்தியபோது மனம் நிறைந்து தளும்பியது வாசுவிற்கு. ப்ரியா என்று பெயர் வைத்து தொட்டிலில் இட்டனர்.

பின் வரும் நாளில் வித்யா ஒய்வு பெற விரும்பி வாசுதேவனை எம் டி ஆக்கினர். அவரின் பேச்சை அவன் கேட்க மாட்டான் என்பதால் போர்டின் தீர்மானத்தில் கொண்டுவந்தார். அனைவரின் வேண்டுதல், முடிவு என்பதால் அவனால் ஒன்றும் சொல்ல முடியாமல் ஏற்றுக்கொண்டான்.
இப்போது ப்ரியாவிற்கு இரண்டு வயதாகி இருந்தது. அவள் பார்க்க இப்போது அந்த வயது பவிபோலவே இருந்தாள். அதேபோல அப்பாவின் மார்பில் ஏறி குதித்து விளையாட மிகவும் பிடிக்கும். அன்று எல்லோரும் வீட்டில் கூடி இருக்க அவள் அதேபோல குதித்து விளையாடிக் கொண்டிருக்க அவளின் மழலை பேச்சும் சிரிப்பும் அந்த வீட்டை நிறைத்தது.

இப்போது பவித்ரா தன் கையில் ஒரு கிண்ணத்தில் பிசைந்த சாதத்துடன் ப்ரியாவிடம் சாப்பிட வரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தால்
.
பிரியா செல்லம் வாடாம்மா.... சமத்தில்ல, படுத்தாம சாப்பிட வாடா என்று வேண்டினாள்.
நான் வர மாத்தேன் போ.... நான் டாடீயோட வெளாட்றேன் என்றது தன் மழலையில்.
பாரேன் மா இவ படுத்தற பாட்ட..... சரியான வாலுஎன்று அலுத்துக் கொண்டாள் பவி மதுவிடம்.
லைப் ஹாஸ் கம் அ  புல் சர்க்கிள்என்றான் வித்யாதரன் கண்கள் பனிக்க மதுவிடம், அவளை அணைத்தபடி.
ஆம் என்பதுபோல அவளும் ப்ரியாவை பார்த்தபடி சிரித்தாள்.
முற்றும்

















































No comments:

Post a Comment