Wednesday 15 March 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் 7


இரவு உண்டுமுடித்து இருவரும் படுத்தனர். அவள் பயமும் அலைச்சலுமாக உடனே உறங்கிப்போனாள். அவன் மேலே படுத்தபடி கீழே அவளையே பார்த்திருந்தான்... நிலாமுகம் பார்த்து மயங்கினான்...  ‘நான் ஏன் இவள்மீது ஆசைகொள்கிறேன். நான் அவளுக்கு அருகதை இல்லாதவன்என்று உள்ளுக்குள்ளே குமுறினான்.
அவளுக்கும் என்மேல் ஆசை வந்துள்ளதோ என்னைக்கண்டதும் விதூஎன்றபடி ஓடிவந்து என்னருகே நின்றுகொண்டாளேஎன்று எண்ணிப் பார்த்தான். ‘இக்கட்டான சமையத்தில் கூறிய வார்த்தைகள் என்று புறக்கணித்தான். அவள் பட்டுக்கன்னங்களில் அவளது முடிகற்றைகள் உறவாட அதை வருடி நீக்கிவிட அவன் விரல்கள் துடித்தன. சீ என்று அந்தப்புறம் திரும்பிப் படுத்துத் தூங்கினான்.
சென்னை வந்து அவளை டாக்சியில் அவளது வீட்டில்விட்டு இந்த டெட்டி நீயே பவிய அடுத்து பார்க்கும்போது குடு, ரொம்ப சந்தோஷப்படுவாஎன்று குடுத்தான். “நல்லா ரெஸ்ட் எடு, நாளைக்கு பார்க்கலாம்என்றுகூறி விடைபெற்று வீடு வந்தான்.

அத்யாயம் பதினெட்டு
வீட்டிற்குள் வந்ததுமே டாடி என்று ஓடிவந்து கட்டிக்கொண்டது பவி.
பாத்தி டாடி வந்தாச்சு என்று கூவியது.
வாடா வித்யா, கல்யாணமெல்லாம் நல்லா நடந்துதா?” என்று கேட்டார்.
ஆமாம் மா ரொம்ப நல்லா நடந்தது என்றான்.
அப்பா கல்யாணம்னா என்ன?” என்றது பவி.
அது கல்யாணம்னா ஒரு ஆம்பளையும் பொம்பளையும் கல்யாணம் கட்டிக்கிட்டு ஒண்ணா வாழ்வாங்க என்று மிடறு விழுங்கி கூறிமுடித்தான்.
என்று ஏதோ புரிந்ததுபோல கூறியதுஅவன் வாங்கி வந்த கேமை கொடுத்தான்.
ஹை கேம் என்று அவனுக்கு எம்பி முத்தம் கொடுத்துவிட்டு போய் உட்கார்ந்து கொண்டாள்.
கொடுத்துட்டியா, அவ்ளோதான் பூலோகமே மறந்துடும் உன் பொண்ணுக்கு என்று சிரித்தார் பார்வதி.
வித்யா மேலே சென்று குளித்து கீழே வந்து அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறி முடித்தான்.
உனக்கொரு அதிசயம் தெரியுமா மா, நம்ம மதுரா ப்ரண்ட் வசு இருகாள்ள அவதான் கல்யாணப்பொண்ணு நம்ம பார்த்தி மனைவி என்றான்.
அட இதென்னடா நெஜமாவா, அங்கபோய் தான் உனக்கு தெரிஞ்சதா... நல்லா இருக்கு லோகம் போ என்று சிரித்தார்.
மதுராவை பார்த்தியா?” என்றார்.
ஆம் மா இப்போ என்கூடதானே ரயில்ல வந்தா.. அவள வீட்டில் விட்டுவிட்டுதான் வரேன் நான் என்றான் இயல்பாக.
ஓஹோ அப்படியா விஷயம்என்று நினைத்தார் பார்வதி.

மதியம் சாப்பிட்டு பவியை அணைத்தபடி தூங்கினான். முழித்து காபி குடித்து போர் அடித்தது.
டாடி பீச் இல்லைனா பார்க் போலாம் என்றது.
வேண்டாம்டா அப்பா வெரி டயர்ட் என்றான்.
ப்ளீஸ் என்றது
சரி கிளம்பு கொஞ்சநேரம்தான் ஓகேவா என்று அழைத்து வெளியே போனான்.
வண்டியை ஓட்டியபடி பவி நாம வேற ஒரு இடத்துக்கு போவோமா?” என்றான்
எங்க டாடி?” என்றது.
உனக்குபிடிச்ச ஒரு இடம் என்றான்.
ஆண்ட்டிவீடு என்று கத்தியது.
சரியான வாலு கண்டுபிடித்தது பாரு என்று மெச்சிக்கொண்டான்.
இரு உன் ஆண்ட்டி வீட்டில் இருக்காங்களான்னு பார்க்கலாம் என்று இறங்கி மதுவிற்கு பூத்திலிருந்து போன் செய்தான்.
அவள் எடுத்து நீங்களா சொல்லுங்க சார்?” என்றாள்.
என்னது சாரா?” என்றான் கோபமாக.
சாரி சாரி வித்யா என்றாள்.
ஹம் என்று பெருமூச்சுவிட்டபடி, “சரி, நீ என்ன பண்றே, பவி ஒரே அடம் பண்றா உன்னைப் பார்க்கணும்னு ... அதான் அங்க கூட்டிவரலாமா கொஞ்ச நேரத்துக்குன்னு...”
 “
ஓ ஷ்யூர் வாங்களேன் நானும் போர் அடிச்சு தான் இருக்கேன் என்றாள்.
அங்கே செல்ல, பவி அடுத்த நிமிடம் தாவி அவள் இடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ஆண்ட்டி டாடி நல்லவங்க, நான் கேக்காமையே இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க என்றது அவள் காதோடு.
அவள் அவனை ஓஹோ அப்படியா விஷயம் என்ற பார்வை பார்த்தாள். பின் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
சரி தோ வரேன் என்று அவளை இடுப்பில் வைத்தபடி உள்ளே சென்று இருவருக்கும் பானம் எடுத்துவந்தாள்.
பவி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றாள்.
என்னது ஆண்ட்டி?” என்றது.
இங்கேயே உட்காரணும் கண்ண மூடிக்கோ பார்க்கலாம்... அப்போதான் தருவேன் என்றாள் மது.
ஐயோ சீக்கிரம் ஆண்ட்டி என்றது பொறுமை இல்லாமல்.
இப்போ கண்ணத் திற என்றாள். தன் முகத்திற்கு முன் அந்த பெரிய பிங்க் டெட்டியை பிடித்துக்கொண்டு நின்றாள்.
ஹைய்யா டெட்டிபேர் என்று கத்தியபடி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டது.
ஆண்ட்டி ரொம்ப ஸ்வீட் இல்லப்பா... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்ட்டிஎன்றாள். பின் அவள் புடவையை பிடித்து கீழே குனி என்றாள். மது குனிய அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள் பவி. மதுவிற்கு வெட்கமாய் போனது.
போறும் குட்டி என்றாள் கூச்சத்தோடு.

இதை பெரும் ஏக்கத்தோடு பார்த்திருந்தான்
. அவன் முகம் கண்டு அவள் மேலும் சிவந்துபோனாள்.
பவி டெட்டியோடு பிசி ஆனாள்.
என்ன திடீர்னு இங்க?” என்றாள் அவனை பார்த்து.
இல்லை பவிதான்”. அவன் முகம் ஆழ்ந்து பார்த்து நிஜமாவா...” என்றாள் ரஹசிய குரலில்.
அது வந்து... ஆமா... இல்ல... “ என்று வழிந்தான். “சரி கிளம்பட்டுமா நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்என்று பவியை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
பவி நாம மது ஆண்ட்டி வீட்டிற்கு போனோம்னு பாட்டிகிட்ட சொல்லாதேடா... நாம சும்மா போய் அவங்கள தொந்தரவு செய்யறோம்னு திட்டுவாங்க என்றான்.
ஐயோ பிள்ளைக்கு பொய் கற்றுத்தருகிறேனே என்று தன்னைக் கடிந்துகொண்டான்.
ஆமாம்பா, ஆனா டெட்டிய பாத்துட்டு கேப்பாங்களேபா என்றது அது புத்தியாக.
அதுவும் சரிதான் ஜஸ்ட் பாத்தோம்னு சொல்லிடலாம் நான் சொல்லிக்கறேன் குட்டி என்றான் சரி என்றது.

வீட்டிற்கு போய் அதேபோல பார்வதி குடைந்தாள்
.
இல்ல பாத்தி நாங்களா போகலை என்றது மேலும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவனை பார்த்தது பவி.
இல்லைமா நாங்க வெளில சுத்த போனோமா அப்போ வழியில மதுவை பார்த்தோம்... அவதான் வீட்டுக்கு கூப்பிட்டா... போனோம். இத வாங்கி வெச்சிருந்தாளாம் அத குடுத்தா... உடனே கிளம்பீட்டோம் என்றான் உண்மைபோல.
பார்வதிக்கு உள்ளுக்குள் சிரிப்பு. ‘இரண்டுபேரும் ஜோடி திருடர்கள் என்று எண்ணிக்கொண்டாள்.
கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை பார்வதிக்கு காண்பித்தான். நிறைய படங்களில் அவனோடு மது இருப்பதை பார்வதி கவனித்தாள். ஹும்ம் பார்க்கலாம் என்று நினைத்தாள்.
அந்த வாரம் ஆபீசில் வேலை நெக்கு வாங்கியது இருவருக்கும்.

அத்யாயம் பத்தொன்பது
இந்த ஒரு வாரத்திலேயே கல்யாணத்தின்போது நடந்தவற்றை அசைபோட்டவன்
வேண்டாம் இந்த விபரீதம்... அவளை நான் மணக்க முடியாது... அவள் மனதில் நானிருக்கிறேனா என்றும் தெரியாது... அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது... அன்று அங்கிள் கூட சொன்னாரே நல்லவனாக பார்த்து சீக்கிரமே கல்யாணம் முடிக்க எண்ணி உள்ளார் என. நான் அவள் வாழ்வை கெடுக்கக் கூடாது... என் புத்தி பேதலித்தது இந்த கொஞ்ச நாள் பிரண்டுபோனேன்... என் பவியையும் கூட நான் திருத்தவேண்டும்...  இப்படி அவள் அடம் பிடிப்பது நல்லதில்லை...’ என மனதில் எண்ணிக்கொண்டான். தன் நிலை அறிந்து மனதை கல்லாக்கிக் கொண்டான்.

ஞாயிறு அப்பா ஆண்ட்டி வீட்டுக்கு போலாமா?” என்று ஆரம்பித்தது பவி.
நோ குட்டி அதேல்லாம் சும்மா போகக் கூடாது என்றான் தீர்மானமாக.
அது என அழுது அடம் பிடித்தது.
நீ என்ன அழுதாலும் கிடையாது என்றன்.
என்னடா திடீர்னு இப்படி அதட்டற, கொஞ்ச கொஞ்சமாத்தானே சொல்லி புரியவைக்கணும் என்று கூறி பார்த்தார் பார்வதி.
அம்மா நீயும் கூட சேர்ந்து அப்படி பேசாதே... அவள் வேறே ஒருவனுக்கு மனைவி ஆகவேண்டியவள் இல்லையாமா... வசு பேரண்ட்ஸ் கூட இவுளுக்கு இப்போ மாப்பிள்ளை பார்க்கறாங்கம்மா... அவ கல்யாணம் பண்ணிட்டு போய்டா இவள யார்கிட்ட கூட்டிப்போறது... இல்ல அவளாலதான் இந்தப் புள்ளைய வந்து பார்க்க முடியுமா கொஞ்ச முடியுமா... அவ புருஷன் சந்தேகப்படமாட்டான்... நானே கல்யாணத்தின்போது உரிமை எடுத்துகிட்டு பழகீட்டேனொன்னு வருத்தபட்டுகிட்டு இருக்கேன் நீவேற...” என்று முனகியபடி முடித்தான்.
ஓ, அப்போ ஏதோ நடந்திருக்குது... பின்னோடு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது என்று அர்த்தம் செய்துகொண்டார் பார்வதி.
இவர்கள் விவாதிப்பதை கேட்டுக்கொண்டிருந்த பவி பாட்டியுடன் அவளது அறைக்கு சென்றது.
இவனைக்கண்டுஉன்கூட டூ உம்பேச்சு கா என்றுவிட்டுச் சென்றது.
பாத்தி கல்யாணம்னா என்ன.... அப்பா ஏன் ஆண்ட்டி வேறே கல்யாணம் பண்ணினா என்ன வந்து பார்க்க முடியாதுன்னு சொல்றா?” என்று கேட்டது.

என்ன பதில் சொல்வதென தெரியாமல் சிறிது திணறிய பார்வதி உண்மையே சொல்வோம் எனக் கூறினாள்
.
ஆமாடா கண்ணு, எல்லா பெண்களும் யாரையாவது ஆணை கல்யாணம் கட்டிக்கொள்ளத்தான் வேணும்... அப்படி கட்டிகிட்ட பின்னாலே அவனோடு போய் அவங்க வீட்டுல வாழணும் கண்ணு... அப்படி ஆண்டிக்கு கல்யாணம் ஆயிட்டா அந்த அங்கிள்கூட போய்டுவாங்க இல்ல. அப்போ பவிகுட்டிய எப்படி பார்க்கமுடியும் அதான் உன் நல்லதுக்குதான் குட்டி, அப்பா சொல்றாங்க. நீ சமத்துதானே கேட்டுப்பியாம் என்றார் பொறுமையாக.

ஆண்ட்டி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க பாத்தி?” என்றது.
தெரியாதுமா இன்னும் யாரையும் பார்க்கலை அவங்களுக்கு என்றார்.
அவங்க யாரை வேணுமானாலும் பண்ணிப்பாங்களா என்றாள்.
ஹப்பா எத்தனை கேள்விகள் இவள் மண்டைக்குள்?” என்று அலுத்தபடி
அது எப்படி செல்லம்... அவ மனசுக்கு யாரப்பிடிக்குதோ அவங்கள பண்ணிக்குவா என்றார்.
ஓ, அப்பிடீன்னா ஆண்ட்டிக்கு அப்பாவையும் பிடிக்கும்தானே அப்பாவையே ஏன் பண்ணிக்க கூடாது?” என்றாள்.
போட்டாளே ஒரு போடு என்று நினைத்து இதை யாருடி உங்கப்பன்கிட்ட போய் சொல்றது?’ என்று முனகினாள்.
பதில் சொல்லு பாத்தி என்றாள் பவி.
போடி குட்டி போய் விளையாடு.... சின்னப்பசங்க இப்படி எல்லாம் பேசக்கூடாதுஎன்று அனுப்பிவிட்டாள் பார்வதி.

அவளா கேட்பாள்
, நேரே வித்யாவிடம் சென்றாள்.
அப்பா நான் உம் பேச்சு பழம் விடணும்னா நா சொல்றத நீ கேக்கணும் என்றாள் அதிகாரமாக.
இந்தகுட்டிபிசாசுக்கு வாயப்பாரு என்று சிரித்தபடி அவனும் கோபமாக நடித்து என்னவாம்?” என்றான்.
ஆண்ட்டி யாரையானும் கல்யாணம் பண்ணிகிட்டா என்னை பார்க்க வர முடியாதா?” என்றாள்.
இதை இவள் எப்போது கேட்டாள், ஐயோ இன்னமும் என்னென்ன கேட்டாளோ என்று ஆமா அதுக்கு என்றான்.
அப்போ நீயே ஆண்ட்டியை கல்யாணம் பண்ணிக்கோ... எனக்கும் ஆண்ட்டி நம்ம வீட்டிலேயே இருப்பாங்க, கதை சொல்வாங்க கட்டிக்கிட்டு தூங்குவாங்க பாட்டெல்லாம் கூட பாடுவாங்க. எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க...” என்றாள் கண்ணில் ஆயிரம் கனவுகளோடு.
சரியாபோச்சு நான் எதுக்கு பயந்தேனோ அதையே கூறுகிறாளேஎன்று
அதெல்லாம் முடியாதுமா என்றான் தன்மையாக
ஏன் முதியாது?” என்றது பவி.
அதேல்லாம் சொன்னா உனக்கு புரியாதுடா என்றான்.
எல்லாம் புலியும் நீ சொல்லு... நீயே ஆண்ட்டிய பண்ணிக்கோ... இங்க கூட்டிகிட்டுவா என்றது அடம் பிடித்தபடி.
நோ. வாயை மூடு.... இந்த மாதிரி பெரிய பேச்செல்லாம் குழந்தைங்க பேசக் கூடாது... யார் சொல்லித்தந்தா  இதெல்லாம்... போய் விளையாடு போ என்றான் கோபமாக.
மாத்தேன் என்றது. ஓங்கி ஒரு அறைவிட்டான். அது ஓ வென அழுதபடி பாட்டியிடம் ஓடியது.
ஐயோ தாயில்லாபிள்ளையை அடித்துவிட்டேனே என்று அவனுக்கு நெஞ்சு பதறியது.
என்னடா இது, குழந்தைய போட்டு அடிச்சுகிட்டு, உன் வயசுக்கு அறிவு இல்லை?” என திட்டும் வாங்கிக்கொண்டான் தன் தாயிடம்.
குழந்தை அழுதபடி உறங்கிப்போனது. அதன் பட்டுக்கன்னதில் தன் விரல்கள் படிந்திருப்பதைக்கண்டு துடித்துப் போனான்.

சே எல்லாம் அவளால் என்று திடீரென  மதுவின் மேல் கோபம் வந்தது. ‘தன் இயலாமையை குழந்தை மீதும் மதுவின் மீதும் சுமத்துகிறேன் என்று அறிந்தான். எனினும் மதுவின் மேல் கோபம் குறையவில்லை.
அந்த கோபத்துடனே அடுத்த நாள் ஆபீசில் அவளிடம் எரிந்து விழுந்தான். அவள் தான் என்ன தவறு செய்தோம் என்பதே புரியாமல் முழித்தாள்.
சிறு டைப்பிங் தப்புகளுக்கும் புத்திய எங்க வெச்சுகிட்டு வேலை பார்க்கறீங்க... கொஞ்சம் கவனம் வேலையிலும் இருக்கட்டும் என்றான். அவளுக்குள் மளுக்கென்று உடைந்தது.

நான் யார் மீது கவனம் வைத்தேன், என்ன பேசுகிறான் இவன்... என்னவாயிற்று என்று திணறினாள். அழுகை முட்டியது. அபீஸ் என்று உடனே அடக்கி ரெஸ்ட் ரூமில் போய் ஒருபாட்டம் அழுது தீர்த்தாள். முகம் கழுவி வந்தமர ஆயினும் அவள் கண்களும் முகமும் காட்டிக்கொடுத்தது.
பாவம் இவளைப் போய் என்னவெல்லாம் கூறிவிட்டேன்... எனக்கே அசிங்கமாக இருக்கிறது... நான் என்ன செய்வேன் என்று வாழ்க்கை வெறுத்தான்.

அந்த வாரம் முழுவதும் அவள் அனாவசியமாக அவன் கண்முன்னே வரவே இல்லை. மிக முக்கியமான கை ஒப்பம் அல்லது சந்தேகம் இருந்தாலே ஒழிய தன் காபினிலேயே இருந்தாள். அவனுக்கும் அது புரிந்தது. இதுவும் நல்லதுக்கே என்று பேசாமலிருந்தான். வேலை மட்டுமே நடந்தது.
அந்த ஞாயிறு கடைசி வாரம். ப்ளான் படி குழந்தையை பார்க்கச் செல்ல வேண்டும். அதில்தான் ஏதோ சங்கடம் நடந்திருக்கிறது அதனால் தான் செல்லாமல் இருப்பது நல்லது என்று முடிவெடுத்தாள். அவனுக்கு ஒரு நோட் மட்டும் அனுப்பினாள் தான் வரமுடியாமைக்கு வருந்துவதாக.

ஐயோ கடைசி வாரமா, அங்கே பவிக்கு எப்படி பதில் சொல்வது... இவுளுக்கா வேணும்னா வருவா நான் திட்டினேன் னா வரமாட்டாளாமா ரொம்பத்தான் லொள்ளு என்று அதற்கும் அவளையே திட்டித் தீர்த்தான் மனதிற்குள்.
நீ மட்டும், வேண்டும் என்றால் கொஞ்சுவாய், இழைந்து கொள்வாய்... போட்டோ எடுத்துக்கொள்வாய்.. கூட்டிப்போய் ஊர் சுத்தி காண்பிப்பாய்... பின் ஏறுக்குமாறாக பேசி அவளை புண்படுத்துவாய்... அவள் என்ன மனுஷியா பொம்மையா? அவள் உணர்ச்சிகளோடு விளையாடியது நீ அல்லவா...’ என்று இடித்தது மனம்.

அவள் வரவில்லை என முழு நாளும் வாசலிலேயே உட்கார்ந்து காவல் காத்தது பவி. பாவமாக இருந்தது. ஆயினும் இப்படியே பழகட்டும் நல்லது என்று பேசாமலிருந்தான். ஒன்றுமே சாப்பிடவும் இல்லை. பார்வதி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சாப்பிடவில்லை.
மாலை அவனுக்கே பொறுக்காமல் குட்டி வா நாம சாப்பிடுட்டு பீச்சுக்கு போலாம் என்றான்.

அவன் முகமே காணாது பதில் சொல்லாது முகம் திருப்பிக்கொண்டது பவி
.
மரியாதையா சாப்பிடறியா, இல்லை அன்னிக்கி மாதிரி அறை வாங்கறியா?” என்றான் இயலாமையோடு.
அது மிரண்டது... பாட்டியிடம் ஓடியது. பயந்து ரெண்டு வாய் சாப்பிட்டது. அழுதுகொண்டே உறங்கிப்போனது அவர் மடியில்.
அவளை கொண்டு உள்ளே கிடத்திவிட்டு வந்தார் பார்வதி.
உக்காருடா என்றார் அதட்டலாக. “என்ன நடக்குது இங்க...?” என்றாள்.
என்னமா புதுசா கேக்கறே?” என்றான்.
ஆமாடா, உன் நடத்தை எல்லாம் புதுசா தான் இருக்கு... அதான் கேக்கறேன்.... சொல்லு என்றார்.
அப்படி எல்லாம் ஒன்றும்....”
ஏண்டா என்னிக்கானும் இந்த மூணு வருஷத்துல நீ பவிய அடிச்சிருக்கியா, இதுக்குமுன்னே அவள் அடம் பண்ணினதே இல்லையா, என்னமோ இருக்கு சொல்லு என்று அடம் பிடித்தார்.
அவன் மெளனமாக இருக்க நான் சொல்லட்டுமா?” என்றார். ‘என்ன சொல்லப் போகிறார் என்று அவன் சந்தேகமாக பார்க்க,
உனக்கு மதுராவை ரொம்ப பிடிச்சிருக்கு” 
என்னமா நீ....?” என்று ஆரம்பிக்க
போதும் நீ நிறுத்து... நான் சொல்லி முடிச்சிடறேன் அப்பறமா நீ பேசு என்று அடக்கினாள்.

உனக்கு அவள கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சது, அங்க கல்யாணத்துக்குப் போன இடத்துல நெருங்கி பழக வாய்ப்பு கிடைச்சதும் ரொம்பவே பிடிச்சுபோச்சு... ஆனா பயம்... ஒத்துக்க பயம்.... இத்தனை நாள் போட்ட சாமியார் வேஷம் கலைஞ்சுடுமே, யார் என்ன நினைப்பாங்களோன்னு வெட்கம்...
அவளோடு அங்கும் நீ நெருங்கித்தான் பழகி இருக்கே. நான் பார்த்திகிட்ட விசாரிச்சுட்டேன் எல்லாம்... ஊர் சுத்தி இருக்கீங்க ஒண்ணா வந்திருக்கீங்க...  இங்க வந்து ஒக்காந்து விலகி இருந்து யோசிக்கும்போது மறுபடியும் உன் பூதம் முழிச்சுடுச்சு... அதுக்கு பிள்ளையப் போட்டு அடிக்கற திட்டற...”
என்ன பயம் உனக்கு? அந்த ரேணுகா பொண்ணு நம்மள விட்டு ஓடிப்போனா அதுக்கு நீ என்ன பண்ண முடியும்... மத்தபொண்ணுங்கதான் என்ன பண்ண முடியும், எல்லாப்பெண்களும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சா அது பைத்தியக்காரத்தனம் இல்லையா....

இவள பிடிசிருக்கில்ல
, பவிகிட்டையும் அவ உயிரா இருக்கான்னு தெரியுது இல்லை... அப்பறம் என்ன, உன் இயலாமைய குழந்தைகிட்ட காட்டாதே வித்யா... நான் சும்மா இருக்க மாட்டேன்.... அது மனசுல வடுவா ஆயிடுச்சுனா மாத்த முடியாது... சிறு குழந்தை அவோ...
மரியாதையா நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு....
எனக்கும் மதுவ ரொம்பவே பிடிச்சிருக்கு.... பவியபத்தி கேட்கவே வேண்டாம். இப்போ உனக்கும் பிடிச்சுதான் இருக்கு.... நீ காண்பிச்ச திருமண படங்கள்லேயே உன் மனசு எனக்கு தெரிஞ்சுபோச்சு... அவ்ளோ அழகா அவள படம் பிடிச்சு வெச்சுக்க தெரியுதில்ல, பண்ணிகிட்டா என்ன கொறஞ்சுபோச்சு...”

போறும்டா வித்யா, உனக்குள்ள நீயே போராடினது போதும் என்றார்.
வித்யாவால் அவள் கூறிய எதையும் மறுக்க முடியவில்லை... ஆயினும் முடிவு எடுக்க தைரியமும் இல்லை... மடங்கி உட்கார்ந்து தாயின் மடியில் தலை வைத்து குமுறி கலங்கினான். அவன் நிலை புரிந்து மேலும் ஒன்றும் பேசாமல் அவன் தலையை வருடி கொடுத்தபடி அவரும் அமைதியாக இருந்தார். அவனே தன்னை தேற்றிக்கொண்டு எழுந்தான்.

நீ சொல்றத எதுவும் நான் மறுக்கப்போறதில்லைமா... அம்மாகிட்ட என்ன வெட்கம்... ஆனால் மா நீ நினைக்கறாப்ல இது அவ்வளவு சுலபம் இல்லை... நான் மூன்று வயது குழந்தைக்கு தந்தை... அவளோ மணமாகாத வயசுப் பெண்.. அவளைப்போய் ரெண்டாம்தாரமாய் எல்லாம் கட்டி அவ வாழ்கையை கெடுக்க முடியாது...”
என்னடா பேச்சு இது... என்னுடைய அவசரபுத்தியால உனக்கு ஊருக்கு முன்னால இருபத்தி ஐந்து வயசுல நடந்ததும் முடிந்ததும் கல்யாணமே இல்லை... உன் வயசுதானே பார்த்திக்கு... அவனுக்கு போனவாரம்தானே டா கல்யாணமே ஆயிருக்கு என்றார்.
அம்மா விட்டுடு மா... இதெல்லாம் நடக்காது என்று மேலே சென்றுவிட்டான்.

நான் பண்ணிவெச்ச பாவம் என் பிள்ளையின் வாழ்வையே கொன்றுவிட்டதே, இப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் அமர்ந்துவிட்டதே. இந்நிக்கெல்லாம் என் மகனுக்கு இருபத்தி ஒன்பதுதானே ஆகிறது. அவன் என்னமோ நாற்பது போல பேசிவிட்டு போகிறானே கடவுளே...’ என்று குமறினார் பார்வதி.
மேலே சென்றவன் மீண்டும் கீழே சாப்பிடத்தான் இறங்கி வந்தான். ஏதோ சாப்பிட்டேன் என பேர் செய்து பவியைத் தூக்கிக்கொண்டு மேலே சென்றான். அவளது கன்னத்தில் இன்னமும் கண்ணீர் கறைகண்டு துடித்துப் போனான். அவளை கெட்டியாக அணைத்தபடி உறங்க முயன்றான். அதுவும் தூக்கத்தில் எப்போதும் போல அவன் மேல் கால் போட்டுக்கொண்டு கட்டிக்கொண்டது.
 தொடரும்...


No comments:

Post a Comment