Friday 23 August 2019

கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் - கண்ணன் என் பார்வையில்

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள்!

கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான், புதுக் கவிதைகள் பிறந்ததம்மா, மன்னன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான், மனக் கவலைகள் மறந்ததம்மா ஹாப்பி க்ரிஷ்ணஷ்டமி.

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி நான் என்ன புதுசாக சொல்வதற்கு இருக்கு. இதிகாசங்களும் புராணங்களும் பாகவதமும் சொல்லாததையா நான் இங்கே சொல்ல வந்தேன், அல்லவே அல்ல.

நமது நாடு ஒரு செகுலர் நாடு. இங்கே பன்மததை சார்ந்தவரும் இருக்காங்க,

கண்ணனை அவங்களுக்கு தெரியாம போகாது. இறைவன் ஒன்றேதான் என்பதுதான் எல்லா மதத்தை சேர்ந்த ஒரே சித்தாந்தம். பின்னே இதென்ன விளக்கம்...

கிருஷ்ணன், கண்ணன் என அழைக்கப்படும் அந்த மாயவன் மாதவன் ஒரு கேரக்டர் ஆக பாத்திரமாக இங்கே பார்க்க முயலுகிறேன்.

கண்ணன் ஒரு ரோல் மாடல். நம்மை போல ஒரு சாதாரண மானுடனாக பிறந்து நாம் நித்தமும் படும் அத்தனை இன்னல்களையும் இன்னமும் பல மடங்கு அதிகமாக துன்புற்றவன் கண்ணன்.

பிறந்ததே சிறையில், கட்டுண்டு கிடக்கும் பெற்றோருக்கு. பிறந்த அன்றே அப்போதே அவர்களிடமிருந்து பிரிய வேண்டிய நிலை. இரவோடு இரவாக வேறே இடம் அன்னை தந்தை. அந்த நிலையை மிக எளிதாக தனதாக்கிக்கொண்டான். தன்னிலையாக்கி கொண்டான். Accustom Acclamatise செய்து கொண்டான்.

பிறந்த நாள் முதல் பல்வேறு ரூபத்திலும் உயிர்கொல்லும் ஆபத்து அவனை சூழ்ந்துகொண்டே தான் இருந்தது. அமுதூட்டும் அன்னையாக வந்த பூதகி துவங்கி, வளர வளர, கம்சனை வதம் செய்வது வரை ஓயவில்லை. நாளொரு கண்டம், இது survival of the fittest

அவனுக்கென சில அதீத திறமை இருந்தது, அதை சரியான நேரத்தில் சரியான வகையில் சரியான மனிதர்கள் மீதும் நிகழ்வுகளிலும் பிரயோகம் செய்து மனதை கொள்ளை கொண்டான். Use off power diligently

அவன் மாயாவியா கண்கட்டு வித்தையா தெய்வீகமா – மானுட அனுமானத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளாக தோன்றலாம், ஆனால் இது எதுவுமே இல்லை. Its purely divine intervention, imagination and part of hallucination.

அவன் மீது கொண்ட பிரேமையினால் பக்தியினால் ஹீரோ வொர்ஷிப் அதிகம் ஆனது.

அந்நிலையில் கோபிகைகள் தன்வயத்தில் இல்லை. கோகுலமே அவனது அன்பினால் அவன் அவர்களோடு உண்டான பழக்க வழக்கத்தினால் கள்ளுண்ட வண்டாகி இருந்தது, அவனையே சுற்றி வந்தது. பின்பற்ற நினைத்தது. அந்நிலையில் கண்ணன் அவர்களை ஆட்கொண்டான். ஹி வாஸ் அ ஹீரோ அண்ட் leader of sorts அவர்களை முன்நடத்தினான் வழிநடத்தினான்.

சின்ன குழந்தையாவது மலையை சுண்டு விரலில் தூக்குவதாவது. ... “நடக்கும்... கண்ணா இருக்கான், அவன் மலையையும் பிரட்டி எடுத்துடுவான் தூக்கிடுவான்னு கோகுலத்து மக்கள் அவன் மீது வைத்த நம்பிக்கை. அவன் அந்த நேரத்தில் என்ன செய்தாலும் அதை அவர்கள் நம்புவார்கள். அவன் அவர்கள் இடத்தில ஏற்படுத்திய நம்பிக்கை அப்படிப்பட்டது. நம்பிக்கைக்கு பாத்திரமாக அவன் அவர்களுக்காக நின்றது அங்கே முக்கியம். 

நம்ம வீட்டு குழந்தைகளிலேயே நாம் பார்க்கிறோம், அங்கே இங்கே கேள்விபடுகிறோம் பேச்சு பாட்டு நடனம் கராத்தே இப்படி பலவும் சாதிக்கிறாங்க. நாம் பசங்கள உற்சாகப்படுத்த படுத்த அவங்க முயற்சி அதிகமாகுது. நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கை அவங்கள செய்ய வேண்டியதில் உள்ள focus ஐ அதிகப்படுத்துது.... சோ, end ரிசல்ட் மிக சிறப்பாக வருகிறது.

அசாதாரணம்னு எடுத்துகிட்டாலும் கூட, இது மாயை இல்லை. அயராத பயிற்சி உழைப்பு. உடல் அளவிலும் கூடவே மனதுக்குமான பயிற்சி.

இதை நாம் சாதிக்க வேண்டும், இவர்களுக்கு தன்னை விட்டால் யாருமில்லை. இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நான் நடக்க வேண்டும். இவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற தீவிர முயற்சி அங்கே வெற்றி பட்டது.

அசகாய சூர விஷயங்கள் எல்லாமே இதில் அடங்கும். Sense of responsibility and accountability and commitment. ஒனர்ஷிப்

கண்ணன் மனதளவில் எப்போதுமே குழந்தை. அந்த குழந்தைத்தனம் சில்மிஷங்களாக விஷமத்தனங்களாக பல இடங்களில் வெளிப்பட்டது. naughtiness நம்மிலே சிலர் கூட வயதானபின் அப்படி செய்வதை பார்க்கிறோம்.

கண்ணன் வம்புதும்பு செய்யாமல் இல்லை typically a child like behaviour. children ought to be mischievous and troublesome esp boys.

அவனுக்கும் தாய்பாசம் உண்டு. அம்மாவே உலகம். அவன் அன்னை யஷோதாவிற்கோ கண்ணனே சர்வம். எல்லா அன்னைக்கும்தானே... பிள்ளைகள் தானே சொர்க்கம். அந்த பாசம் என்னும் மாயை அவள் கண்ணை மறைத்தது. அவள் கண்ணனின் சிறு வாயில் உலகமே அவளுக்கு கண்டது.

கண்ணனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு... கோபிகைகளுடனான அவனது பந்தம், நல்லதொரு நட்பு... CO-ED ல படிச்சா நாம் எல்லோருக்குமே அந்த நட்பு புரியும்.

அதை மிஞ்சி ராதை. இது ஒரு மிக அழகான பந்தம். SOULMATE. கண்ணன் ரொம்ப அதிருஷ்டசாலி. சின்ன வயதிலேயே அவனால் அவனது SOULMATE ஐ கண்டுகொள்ள முடிந்தது. SOULMATE DON;T ALWAYS MARRY. இதையும் அவன் UANRTHIVITAAN.

அவள் மேல் அவனும், அவன் மேல் அவளும் கொண்ட அதீத பிரேமை எல்லா லைலா மஜ்னு அம்பிகாபதி அமராவதிக்கும் அப்பாற்பட்ட காதல். ETERNAL LOVE. IT DIDN’T EVEN END EVEN AT DEATH.

ருக்குமணியுடன் உண்டான காதல் பந்தம், நாட்டு நடப்பு போல, நம் எல்லோரையும் போல வயது வந்த முதிர்ந்த தெரிந்த அறிந்த புரிந்த காதல். இந்த காலத்தை போல அன்றும் காதலியை வில்லனிடம் சண்டையிட்டு கடத்தி கொண்டு வந்து காதல் மணம் புரிந்தான்.

அடுத்த முக்கிய கட்டம் பாரத போர்

தர்மம் நிலைக்க வேண்டும். அதற்கான எதுவும் செய்யலாம். அதையே கண்ணன் செய்தான். தர்மம் பக்கமும் தருமர் பக்கமும் நின்றான்.

போரிட மாட்டேன் என குந்தி தேவி, அவன் அத்தைக்கு வாக்கு கொடுத்தான்

அதனால் தேரோட்டியானான். கையில் வில்லேந்தாமலே போரை வழி நடத்தினான். mentoring his fav friend, pupil and mate.

எதிரே நிற்பது தன் தமையன்மார்கள் மாமன்கள் தாத்தன்கள் பாட்டன்கள் குரு மணிகள் என்றதும் அர்ஜுனன்கு உதறியது. மனசு பதறியது.

கடமையை ஆற்றும்போது ஆங்கே பாசத்திற்கும் பந்தத்திற்கும் இடமில்லை.

நம் வாழ்விலேயே கூட பார்தோமானால் ஒரு டாக்டர் தன் குழந்தை மனைவி மக்களுக்கு வைத்தியம் பார்க்கும்போது கை நடுங்கக் கூடாது. மனசு பதற கூடாது.

காவல் அதிகாரி தன் சொந்தங்களை நட்புகளை கைது செய்வதானாலும் தர்மத்தின் கடனை சரியாக செய்ய வேண்டும். அதில் சிறிதும் விலகக் கூடாது. வக்கீலாக இருப்பினும் தன் மகனோ தந்தையோ குற்றவாளியாக கூண்டில் நின்றாலும் அவன் நெஞ்சு நிமிர்த்தி அவர்களுக்கு எதிராக வாதாட வேண்டி வந்தால் செய்ய வேண்டும். இதைத்தான் கண்ணன் சொன்னான். செய்ய வைத்தான்.

இன்று வரை நம்மையும் வழி நடத்தி வாழ வைக்கிறான்.

கண்ணன் என பார்க்காமல் ஒரு காந்தியாக கலாமாக வள்ளுவராக பாருங்கள் கண்ணன் நிலை புரியும், கண்ணன் வழிகாட்டியவை தெரியும். சொன்ன கீதை மனதில் படியும். இறைவனாகதான் காண வேண்டும் என அவசியமில்லை.

ஆசானாக தமையனாக தம்பியாக தந்தையாக ஆசிரியராக குருவாக காணலாம். அப்போதும் கண்ணன் கண்ணனாகதான் இருப்பான். செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக செய்வான், நம்மை சரியாக செய்யவும் வைப்பான்.

ஹிந்தி ல சொல்வாங்க ‘கிஸ்மத் சே ஆகே வக்த் சே பெஹலே’ எதுவுமே நடக்காது. நேரம் தான் எல்லாமே. நம் கர்மாவை தாண்டி எதுவுமே அசையாது நடக்காது. ஆனால் நடக்க வேண்டியவை சரியாகவே நடக்கும். வணங்குவோம், அவனை வாழ்த்துவோம்.

கிருஷ்ணாற்பணமஸ்து.

Tuesday 20 August 2019

CHENNAI - EN PAARVAIYIL -3



#சென்னை
சென்னை என் பார்வையில் – 3
அப்பாடா! ஷாப்பிங் அலுப்பு தீர்ந்துதா...

டி நகர்லேர்ந்து நேரா அண்ணாசாலைக்கு போலாம் வாங்க.
சென்னைய பற்றி எழுத சொன்னா எல்லாருமே ‘LIC கட்டிடம்’ பத்தி சொல்லி இருப்பா, அத விட்டுடலாம். அது பற்றி எரிஞ்சு சென்னையே அல்லோகலப்பட்டது வேற விஷயம்.

‘ஸ்கைலாப்’ னு செயற்கைகோளா மீட்டியோரா... விழபோறது நம்ம தலைமேலனு ஒரு புரளி, அல்லோகல்லப்பட்டது 79 னு நினைக்கறேன்.

நேரா ‘சாந்தி திரை அரங்குக்கு’ போகலாம். அங்கேயும் ஸ்பெஷலா நெருக்க தொடுத்த ஜாதி மல்லி முல்லை பேமஸ். சிவாஜி sir அவரே கட்டிய அரங்கம். அவர் படங்கள் ஒண்ணு விடாம படையெடுத்து பார்த்த இடம். உள்ளே நுழைஞ்சா அவரோட எல்லா படங்களின் ஸ்டில்ஸ் சுவற்றை அலங்கரிப்பதை காணலாம். ஆவலோட அதை பார்த்து, இதுல எத்தனை படங்கள் நாம் பார்த்திருக்கோம்னு எண்ணறது ஒரு தனி இன்பம்.

சற்றே முன்னே சென்றால் இன்னொரு மகத்துவம் வாய்ந்த மல்டிப்ளக்ஸ் – ‘தேவி’, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ். சுத்தி சுத்தி மேலே ஏறி போய் தலை கிறுகிறுத்த அனுபவம் உண்டா J
தேவில நிறைய பேமஸ் ஹிந்தி படங்கள் பார்த்ததுண்டு. ‘ஏக் துஜே கே லியே’ ‘க்ஹூப்சூராத்’ போன்றவை.

முன்னாலே ‘வெல்லிங்க்டன்’, ‘மிட்லாண்ட்’.

( இந்த நேரத்தில ஆங்கில படங்களுக்குன்னு மட்டுமே பேமஸ் ஆன தியேட்டர் ஒண்ணு உண்டு. அதுதான் ‘பைலட்’ அரங்கம்... அப்பப்பா எத்தனை எத்தனை ஆங்கில படங்கள் அங்கே பார்த்திருக்கோம். அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அதனால பலவும். BENHUR, TEN COMMANDMENTS, WHERE EAGLES DARE, POSIDIEN ADVENTURE, LAWRENCE OF ARABIA, GUNS OF NAVARONE இப்படி).

முன்னாலே சென்றால் ‘கன்னிமாரா’ ‘தாஜ் கோரமண்டல்’, அப்பப்பா அந்த காலத்தில் எத்தனை பேமஸ். கன்னிமாரா எதுக்கோ இல்லையோ அவங்க நூலகத்துக்கு ரொம்ப பேமஸ்.

எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் சொல்லணுமா என்ன...
அங்கேர்ந்து நேரா கொஞ்ச நேரமெல்லாம் ட்ராவல் பண்ணுவோம், அலுப்பு தீர உட்கார்ந்து பிரயாணத்தின்போது பார்த்தவற்றை அசைபோடுவோம்...

அதற்குள் பெசன்ட் நகர் திருவான்மியூர் வந்துரும்.
‘அஷ்டலக்ஷ்மி கோவில்’. பிரம்மாண்டம், அந்த காலத்தில் கட்டி முடித்ததும் ஒரே பரபரப்பு. மேலே ஏறி ஏறி கால் வலிக்க ஒவ்வொரு லக்ஷ்மி அவதாரத்தையா தரிசித்தபடி மேலே போகணும்.. குறுகலான படிகள்.

எல்லாரோட வீட்டிலும் பெரியோர் அஷ்டலக்ஷ்மி படம் பூஜை அறையை அலங்கரித்தது. நடுவிலே பெரியதோர் மகாவிஷ்ணு, அவரை சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள். அவரவருக்குண்டான ஸ்லோகங்களும் பெயர்களுடனும்.

‘அன்னை வேளாங்கண்ணி சர்ச்’. சில முறை போயிருக்கேன்.
அங்கே அருகே சில வருடம் முன் பிரசித்தி பெற்ற ‘முருகன் இட்லி கடை’, அன்றைய அவர்களின் சுவை ஸ்பெஷல்தான்.

பெசன்ட் நகர் பீச், எல்லியட்ஸ் அண்ட் மெயின் மரினா போலல்லாமல் அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் ஆள் கூட்டம் குறைவாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும். அதனால அங்கே போயிருக்கோம் நிறைய. விட்டா சாந்தோம் பீச் போயிருக்கோம்.
சில வருடங்கள் முன்  திருவான்மியூரில் கட்டப்பட்டுள்ள ‘அறுபடை வீடு கோவில்’ மிக அருமை.

‘தியசாபிகல் சொசைடி’ அமைதியின் வாசஸ்தலம். உள்ளே போனதில்லை. அந்த இடமெல்லாம் பரிச்சயம். மரமும் இயற்கையும் சூழ்ந்த இடம். குளுகுளுன்னு மனதை அள்ளும்

அதே போல ‘ராஜாஜி மண்டபம்’ ‘காந்தி மண்டபம்’ போன்றவை. ஓரிரு முறை போனதுண்டு. பள்ளி நாட்களில் ‘கிண்டி பார்க்கு’ போனதோடு சரி.
சென்னைல நான் அதிகம் சுற்றி அலைந்தது இந்த இடமெல்லாம்தான்.
இனி கலாச்சாரம், மக்கள் அவர்களின் குண நலன்கள் பார்க்கலாம். பலருக்கும் பூக்காரி காய்கறி வாடிக்கை உண்டு.

எங்களுக்கு ஒரு 50 வயது தக்க பூக்காரர் வருவார். ஆள் ஆறடிக்கும் மேலே இருப்பார். அதுக்கும் மேலே கை உயற்றி ‘மா பூ னு’ ஒரு சத்தம் போடுகிட்டு வருவார். அவர் உசரம் கை மேலே ஏற்றிய உசரம் எங்கிருந்து வேணும்னாலும் அவர பார்த்துடலாம்.

எங்களுக்கு நித்தமும் பூ குடுப்பார். சுவாமிக்கும் பெண்கள் எங்களுக்கும். அதிலேயும் என்னை ரொம்ப பிடிக்கும்.
‘பாப்பா இரு’ அப்படீன்னு ஈர துணி விலக்கி அதன் அடியில் எனக்காக ஒளித்து வைத்து ஸ்பெஷலாக ரோஜா பூ எடுத்து குடுப்பார்.

எனக்கு லைட் பிங்க் பன்னீர் ரோஸ் ரொம்ப பிடிக்கும். அது மொட்டவிழ்ந்த நிலையில் ஓரிரு இலைகளுடன் இருக்கணும், அதை காதோரம் செருகணும்னு ஆசை.

வெள்ளிகிழமை வெள்ளை யுனிபார்ம், அதற்கேற்றபடி வெள்ளை ரோஜா இரண்டு ஒளித்து கொண்டு வந்து கொடுப்பார். எனக்கு ரோஜா மோகம் அதிகரித்ததுக்கு காரணமே அவரது ரோஜா பூக்கள்தான்.

மல்லி சீசனில் மிக நெருக்கமாக கட்டப்பட்ட மல்லி.. நான் சொன்ன பெரிய அஷ்டலக்ஷ்மி படத்திற்கு ஸ்பெஷலாக 5 முழம் கதம்பம். அப்படி மணக்கும். மல்லி, கனகமாபாரம் மரிகொழுந்து violet கலர்ல ஒரு பூ இருக்கும்... அது, எல்லாம் வெச்சு மிக அழகா கட்டி இருப்பார்.

டிசம்பர்ல டிசம்பர் பூக்கள். அவர்ட பார்த்த கலர்கள் வேறெங்கும் பார்கலை. அது என்ன தனி வாஞ்சையோ எங்கள் பேரில் தெரியாது. அடர்த்தியான பர்பிள், லைட் பர்பிள், அதிலேயே  வெள்ளை நாமம் போட்டது. பிங்க். வெள்ளை, சந்தன கலர்  இத்தனையும் கொண்டு வருவார்.

அதேபோல காய்கறி அம்மணி. கோவையை சேர்ந்தவங்க. அந்த இனிமையான கோவை தமிழில் ‘என்ன கண்ணு நல்ல படிக்கிறியா’ னு வாய்கொள்ளா சிரிப்புடன் வெற்றிலை குதப்பலுடன் வருவாங்க. ‘கூடையை ஒரு கை பிடி கண்ணு’ னு இறக்கி வைப்போம்.

என் தங்கை 3 வயதிருக்கலாம். அவங்க வந்தவுடனேயே கூடைலேர்ந்து குட்டியாக தக்காளியோ கேரட்டோ எடுத்து கடித்து தின்ன துவங்கிடுவா, அதுல அவங்களுக்கு கொள்ளை இன்பம்.
“என் கண்ணு நீ எடுத்து தின்னாதாண்டி கண்ணு எனக்கு நல்ல வியாபாரம்’ என்பார்.

“நம்பீசன் வெண்ணை” பிரசித்தம். மாதம் இரு முறை பெட்டி பொருத்திய வண்டியில் வந்து கொடுத்து விடுவார். அப்படி வெண்ணை வரும் நாட்களில் அதற்காகவே தாத்தாவிற்கு அடை செய்ய வேண்டும். அன்று மட்டுமே வீட்டில் அடை.

அதே போல “புஹாரீஸ்” வண்டி வரும். சுவைமிகு பன்கள் ரொட்டிகள் அத்தனை மென்மையாக வாயிலிட்டால் கரையும். கூடவே ஜெம் பிஸ்கட் குக்கீஸ் எனப்படும் பல்வேறு பிஸ்கட் வகைகள் கிரீம் வைத்த பன்ஸ் ப்ரூட் கேக் இப்படி பலவும். அவரும் மாதம் இரு முறை வருவார்.

சென்னை மக்கள் Heart in the sleeves” என்பார்கள் அதுபோல மிக மென்மையானவர்கள். “Matter of fact” living  கூட. யதார்த்தம் அதிகம். ஓஹோ என பாராட்டி அனாவசிய வஞ்ச புகழ்ச்சி தெரியாது.
அவர்கள முறைத்துகொள்ளாதவரை இனியவர்கள்.

ஆட்டோகரர்கள் டாக்சிகாரர்கள் சண்டை, குழாயடி சண்டை, காய் மார்கெட்டுகளில் வசவுகள் - அதை எடுத்தே இதை ஓடைச்சே பொறுக்கி எடுக்கற...  இன்னாமே பேஜார்.... இது சென்னையின் ஜீவ நாடி. அதெல்லாம் இல்லேனா நம்ம சென்னைக்கு என்ன பெருமை. பரவாயில்லை, அதுவும் ஒரு ரசமயமான சூழல்தான். சாப்பாட்டுக்கு ஊறுகாயைப் போல.

டாக்சின்னதும் ஞாபகம் வருது. கொஞ்சம் காசு அதிகம்... எப்போதானும் ஏறுவோம். கருப்பு டாக்சிகள் மேலே மஞ்சள் பெயிண்டுடன். இப்போது விமான நிலையத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதிலும் பேபி டாக்சினு ஒண்ணு உண்டு. பொட்டி மாதிரி இன்றைய நானோ பீட் போல சின்னதாக இருக்கும்.

பல்லவனை யாரால் மறக்க முடியும். முதலில் சிவப்பு வண்ணம், பின்னாளில் பச்சை நிறம். இப்போ மெட்ரோ வரை வந்திட்டுது.
எலெக்ட்ரிக் ரயில், பம்பாய் அளவு பிரசித்தம் இல்லையெனினும் பல பேருக்கு ஜீவாதாரம் ஜீவ நாடி.

உஸ்ஸ்ஸ் அப்பாடா! டாக்சி பஸ் ரயில்னு ஏறி இறங்கி சுத்தி பார்த்து களைச்சாச்சு.

அம்மாடா! இனி ஆத்துக்கு போய் ரெஸ்ட் பா.
வேறொரு பொன்னாளில் சந்திப்போம். பொறுமையாக படித்து பாராட்டிய அனைவருக்குமே நன்றிகள்.
என் சின்னவளாம் சென்னை மகள் என்றும் பதினாறாக விளங்க வாழ்த்தி விடை பெறுகிறேன். பை பை






Monday 19 August 2019

CHENNAI - EN PAARVAIYIL - 2




சென்னை – 2
இன்று எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான இரண்டு இடங்களை பார்க்க போறோம் வாங்க...
ஆழ்வார்பேட்டை, டி நகர்
ஆழ்வார்பேட்டை எனப்படும் alwarpet எனது மறுவீடு... புக்ககம் அல்ல நான் படித்த அகம். என் பள்ளிகள் - 2 கிளாஸ் வரை st francis xaviers, பின்னர் அதே தெருவில் உருவாகிய Boston school.
மௌபரிஸ் ரோடு - டிடிகே சாலை இணைபிரியாமல் நீளும் அந்த தெரு மனதுக்கு மிக நெருக்கம். பள்ளி காலம் முழுவதும் அங்கே சுற்றி திரிந்த இடங்கள்.
பின்னைய நாட்களில் மீண்டும் மனதுக்கு நெருக்கமாகிய காரணமும் வேறே உண்டு... அதே சாலையில் உள்ள சபாக்கள்.
ம்யுசிக் அகாடெமி, நாரத கான சபா எல் ஆர் சுவாமி (இப்போதைய சபா) அப்போதைய ஆபீஸ் நிறுவனம், பின்னர் திருமண மண்டபம்.
சென்னையை பற்றி பேசும்போது அதன் soul பற்றி சொல்லாமல் இருக்க முடியாதே... கலைமகளின் பொக்கிஷமென போற்றி பாதுகாக்கப்படும் இயல் இசை நாடக அரங்கங்கள் நிகழ்சிகள்.
அந்த காலத்திலே திரு RS மனோகர் அவர்களின் புராண நாடகங்கள் மிக பிரசித்தம். காத்தாடி ராமமூர்த்தி, மௌலி YGP/YGM நாடகங்கள் கொடிகட்டி பறந்த காலம்.
டிசம்பர் இசை விழா அமைதியாக கலப்படமில்லாத கோலாகலங்கள் இல்லாமல் இனிமையாக இசைக்காக மட்டுமே நடந்தேறிய காலகட்டம். ராஜா அண்ணாமலை மன்றம், ம்யூசிக் அகாடெமி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், நாரத கன சபா கிருஷ்ணா கான சபா இப்படி சில சபாக்கள் மட்டுமே.. Music in its purest form unlike today.
இன்றைய இசை விழாக்கள் வியாபாரம் மட்டுமே. சபாக்கள், பாடுபவர்கள், நடனமாடுபவர்கள், அவர்கள் உடைகள் அங்கே நடத்தப்படும் உணவகங்கள், எல்லாவற்றிலுமே வியாபார நோக்கம் ஓங்கி நிற்கிறது என்பது வருத்தமான விஷயம்.
அப்போதைய முதல் சில 5 ஸ்டார் ஹோட்டல்கள் – சோழா, மாரிஸ், அடையார் கேட்.
தேனாம்பேட்டை - அண்ணா சாலை நெடுஞ்சாலையில் மிக பிரபலமான திரைப்பட அரங்கங்கள்... அன்றைய முதல் multiplex – Safire, Blue Diamond and Emerald அரங்குகள். பெயர்களே மிக ஸ்டைலாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில படங்கள் அங்கே கோலோச்சிய நாட்கள் அவை.
Blue Diamond இல் தொடர் காட்சிகள் உண்டு நிறைய படங்களுக்கு. காலை 7 முதல் இரவு 10 வரை என நினைக்கிறேன்... அடுத்தடுத்து ஒரே படம் ஓடிக் கொண்டே இருக்கும். ஒரு டிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் வெளியே வரலாம்.
அதே சாலையின் நேரே ஆனந்த், லிட்டில் ஆனந்த், திரு உமாபதி அவர்களுடையது...
அண்ணாசாலை பிறகு செல்வோம் இப்போது அப்படியே ஒடித்து திரும்பி டி நகர் போய்டலாம். ஆவணி பிறந்துடுத்து, கல்யாண சீசன் வேற, ஜவுளி நகை கடைகள் ரங்கநாதன் ஸ்ட்ரீட் shoppers Paradise – தேவலோகம். இன்றைய போலவே அப்போதும் கூட்டம் நெருக்கியடித்ததுதான் என்றாலும் இப்போதைய frenzy அப்போது இல்லை.
அதே தெருவின் மூலையில் சாந்தமாக ஓரமாக அமைதியாக ஒரு வூட்லண்ட்ஸ் உண்டு.
ஒரு நல்லி ஒரு குமரன் ஒரு GRT TB Jewellery. இவையே.
நல்லியில் காலணா டிஸ்கவுன்ட் கிடையாது, இன்றுவரை. அவர்கள் தரத்தின் சான்று அது என நினைக்கறேன். நல்லி வாசல்ல நெருக்க கட்டிய முல்லை மல்லிகை சரங்கள், உப்பு மிளகாய் பொடி தூவிய மாங்காய் பத்தைகள்... அபாரம்.
பாண்டிபஜார் பனகல் பார்க் அன்றைய மிக பிரபலமான பார்க். சாந்தா பவன்ல கண்டிப்பாக tiffin உண்டு. டி நகர் ஷாப்பிங்னு துவங்கும்போதே, இந்த கண்டிஷன போட்டுடுவோம். இன்னிக்கெல்லாம் முக்கி முக்கி சாப்பிட்டாலும் இருபது முப்பதுனு தான் செலவாகும் அங்கே பூரி மசாலா ரொம்ப famous
அதன் பின்தான் சரவணா பவன் ஆனந்தா பவன் படை எடுப்புகள் எல்லாம்.
பாண்டிபஜார் தெருவோர கடைகள் இப்போது அவ்வளவாக இல்லை. அந்நாளில் வீட்டுக்கு குடும்பத்தினர் அனைவர்க்கும் தேவையான பலதும் இந்த தெருவோர கடைகளிலேயே தரமாக கிடைத்த காலம்.
கைராசி ப்ளவுஸ் பிட் மாட்சிங்கிற்கு மிக பிரபலம், அதே போல ஸ்டார் பிட்.
டி நகர் ரயில் நிலையத்தை சென்றடையும் மிக பிரபலமான ரங்கநாதன் தெரு. அம்மா அப்பா தவிர மிச்ச எல்லாமே சீப்பாகவும் கிடைக்க  கூடிய இடம். கைய பிடிச்சு இழுக்காத குறையா இவங்க வியாபாரம் பண்ற அழகே தனிதான். இன்றும் அந்த கடைகள் நிலைத்து நிற்க இதுவும் ஒரு முக்கிய காரணமோ....
அங்கேதான் முதல் முதல் கோன் ஐஸ் மெஷின் மூலம் ரொப்பி குடுத்தார்கள். கரும்பு ஜூஸ். மசாலா தூவி பொரிகடலை பொட்டலங்கள். கடலை பட்டாணி பொட்டலங்கள். நாலணா எட்டணா காசில் கொள்ளை கொள்ளையாக.
சிவா விஷ்ணு  கோவில். டி நகர் மெயின் பேருந்து நிலையம்.
டி நகர் மிக நெருக்கம் என்பதன் முக்கிய காரணம். என் பாட்டி தாத்தா வீடு (அன்னையின் பெற்றோர்) அங்கேதான். கிருஷ்ணவேணி திரை அரங்கின் பின்னேயே தாமோதர ரெட்டி தெருவில்.
நானும் பாட்டியும் சொல்லாமல் கொள்ளாமல் மதிய ஆட்டம் பார்க்க பல நாட்கள் ஓடிவிடுவது உண்டு. எத்தனை இனிமையான தருணங்கள். ‘தில்லானா’ மட்டுமே அங்கேயே 3 முறை பார்த்திருக்கேன். பல பாலச்சந்தர் படங்கள், சிவகுமார் கமல் ரஜினி படங்கள்.
2.90 டிக்கெட்டு அப்போ டிரஸ் circle.
1 மணி ஆட்டம் பார்த்துவிட்டு பொடி நடையாக நடந்தே வீட்டுக்கு போய்டுவோம். அதே பட்டாணி கடலை, கடலைமிட்டாய்.
இப்போது ஒரு குடும்பம் ஒரு சினிமாவிற்கு செல்ல ஆயிரம் ருபாய் இல்லாமல் முடியாது என்பது போல அல்ல. அந்த காலம் அது அது வசந்தகாலம்தான்.
இன்னிக்கி ரொம்ப அலைச்சல் நாளைக்கு வேறே இடத்துக்கு போகலாம், சரியா... அசைபோடுங்கள்.




CHENNAI - EN PAARVAIYIL 1




சென்னை என் விழிகளில் – 1
சென்னையைப் பற்றி என்ன சொல்ல... எதை சொல்ல, எதை விட!!! பிரமிப்பு. பிரம்மாண்டம். கலாச்சாரமும் அன்பும் பண்பும் தன் உயிர் மூச்சாக கொண்டு நடமிடும் அழகு மங்கை. ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் இன்னமும் இளமை குன்றாது இளவயது மங்கையாக உலா வருகிறாள் நம் மனதில்.
அன்றைய சென்னை 60 ல் - துவங்கி இன்றுவரை ஒரு இனிய பயணம்... அதில் பல உணர்ச்சிகள் காட்சிகள் ரசனைகள் படைப்புகள் தன்னில் அடக்கியவள் எங்கள் அன்பு சென்னை மகள்.
அன்றைய சென்னையில் R A புரம் வாசி நான். சற்றே முன்னேறினால் அபிராமபுரம், மயிலை, பின்னே சென்றால் மந்தைவெளி அடையார் என அமைந்த ஒரு அருமையான இடம்.
முழுவதுமான மத்யமர் குடி இருப்பு பகுதி. சிறிதும் பெரிதுமாக பங்களாக்கள், சிறு கடைகள், அண்டாண்டுகாலமாக பழக்கமான கடைக்காரர்கள் என இனிய பிணைப்பு. 
டெலிபோனே அரியதாக இருந்த நேரம் அது. கரண்ட் போனா எல்லாரும் வீட்டு வாசலில் ஆஜர். படிக்கட்டில் திண்ணையில் தஞ்சம்.
கரண்ட் இருந்தாலுமே மாலையில் வீட்டின் முதியோர் ஈசி சேரில்... மகன் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அக்கம் பக்கம் திண்ணைகளில், அரட்டை கச்சேரி உண்டு.
வேனிற் காலத்தில் மாமரத்தடி நிழலும் உண்டு ருசியாக கடித்து திங்க மாங்கனியும் உண்டு... உப்புமிளகிட்ட மாங்காயும் உண்டு.
தெருவில அப்போதான் புதியதாக விற்பனைக்கு வந்த குல்பி... பானையில சிவப்பு துணி சுற்றி ஆவலை தூண்ட மணி சத்தம் போட்டபடி.. கேட்டாலே வாசலுக்கு ஓட வைக்கும். இரவில் வருவான்.

பின்னோடு சோன்பாப்டி. பெரியதொரு கண்ணாடி குடுவையில் மங்கிய வெள்ளை நிறத்தில் நாறுபோல் தோன்றும் அதன் சுவை நாக்கில் கரையும். பேப்பர்ல சுத்தி தருவான். நிமிடத்தில் நாவில் கரைந்து மாயமாகும்.
மதிய நேரங்கள்ல, எந்த வீட்டில குழந்தைங்க இருக்காங்கனு தேடி போய் பலமாக குரல் கொடுக்கும் Joy ஐஸ்கிரீம் மற்றும் Rita ஐஸ்கிரீம்.
எங்கள் தெருவின் முன்னேறி போனால் st மாரிஸ் ரோடு. அங்கே புனித மேரி மாதாவின் தேவாலயம் பிரசித்தம். இப்போதும் உள்ளது. வாரன் ரோடு எனப்படுவது பிரசித்தம். அங்கே அடியில் கூவத்தின் கிளை கால்வாய் அதன் மேலுள்ள சின்ன ப்ரிட்ஜ்... தாண்டினால் சங்கர மடம், மந்தைவெளி.
அந்நாளில் 2 ரூபாய் கொடுத்து ரிக்ஷாவில் மைலை கபாலி கோவிலுக்கு போயிருக்கோம். அங்கே இறைவனை காண்பது சில மணித்துளிகள். பெரியதொரு கோவில் அது. எப்போதுமே கூட்டம்தான்.,. தெப்ப குளத்தில் ஜகஜ்ஜோதியாக விளக்குகள் அலங்காரத்துடன் தெப்பம், இறைவனை அதிலேயே கூட அமர்ந்து சென்று தரிசித்ததுண்டு.
நார்த் மாடா தெருவில் குளத்தை ஒட்டியபடி தேர்த்திருவிழா நாட்களில் நிறைய குட்டி கடைகள் முளைக்கும்.
தரிசனம் முடிஞ்ச கையோட கடைகளின் மேல் படை எடுப்பு. வளையல்கள் மீது மோகம், குஞ்சலம், சொப்புகள். சின்ன பொ போட்டு அச்சு, கோலக்குழாய் அச்சுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஐந்துக்கும் பத்துக்கும் சாமான்கள் கைகொள்ளாமல் வாரிக்கொண்டு வருவோம் மறுபடி ரிக்ஷாவில்.
இன்றைக்கும் அந்தக் கடைகள் உள்ளன ஆனால் இப்போது வருடம் முழுவதுமே கூட, பல பல கடைகளும் வந்துவிட்டன.
நவராத்திரி முன்புள்ள ரெண்டு வாரம் அங்கே போனா அன்றும் இன்றும் கால் வைக்க முடியாது. கொலு பொம்மைகளின் கண்கொள்ளா அணிவகுப்பு, கூடவே plastic சாமான்கள், பார்க் ஸ்கூல் போன்றவற்றிற்கு உபயோகப்படும் பொம்மைகள்.
குங்கும சிமிழ் மஞ்சள் குங்குமம் மட்டுமே கிடைத்திருந்தன அந்நாட்களில். இப்போதோ தாம்பூலம் குடுக்க ஆயிரமாயிரம் பரிசு பொருட்கள்.
கபாலி கோயிலை ஒட்டி துவங்கப்பட்ட ‘ராசி சில்க்ஸ்’ ‘அம்பிகா அப்பளம்’ இன்றும் உள்ளன, பெருமையாக இருக்கு.
அதே தெருவில் இருக்கையிலேயே ‘ராயர் மெஸ்’ மாறாக முடியுமா...
காலை வேளை இட்லி பொங்கல் வடை கொத்சு சட்னி சாம்பார் நெய் ஒழுக, கை மணக்க வாய் வாழ்த்த உண்ட அனுபவம். இன்றும் மெஸ் செவ்வனே நடைபெற்று வருகிறது எனக் கேள்வி.
‘கற்பகம் ஹோட்டல்’ தெற்கு மாட வீதியில், பின்னர் அதுவே விஸ்தரிக்கப்பட்டு ‘கற்பகம் கல்யாண மண்டபம்’ ஆக ஆனது என கேள்வி.
‘தண்ணித்தொர மார்கெட்.’.. கல்யாணமா, சீமந்தமா சுபஸ்வீகாரமா எந்த சின்ன பெரிய விழாக்களுக்கும் மக்கள் படை எடுக்கும் சின்ன கொத்தவால் சாவடி அது. கிடைக்காத சாமானே காய்கறி கனிகளே கிடையாது அங்கே.
மருந்து மூலிகை வகையறாக்களுக்கு ‘டப்பா செட்டி கடை’.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியவற்றை வாங்க luz corner இல் ஒரே போன்ற பெயர் பொருத்தம் கொண்ட பல கடைகள் அவற்றில் சில இன்றைக்கும் உள்ளன... crores & crores, lakhs & lakhs , millions & millions... indiabookhouse - என் முதல் கோல புத்தகம் வாங்கியது நினைவுக்கு வருகிறது.
அண்ணாமலைபுரம் 6 மெயின் ரோடுகள், கிராஸ் ரோடுகள்... ஆறாவது மெயின் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில், அவர் சன்னதி மட்டுமே கட்டப்பட்டு வாசலில் நிறைய மணற்பரப்பும் மரங்களும் திண்ணைகளுமாக இருந்த நினைவு, என் 2 வயதிலிருந்து அங்கே சென்று வந்தவள் நான். பின்னர் பல சன்னதிகள் கட்டினர். கோவிலும் பெரிதாகியது. புழக்கமும் நிறைந்தது.


நாங்கள் இருந்த முதல் மெயின் ரோடின் பின்னே குருகுலம் எனப்படும் ஏரியா. அங்கேயே தெருவீதி அம்மனும் உண்டு, சின்ன குருத்வாராவும் உண்டு. ஆடி மாதங்களில் அம்மனுக்கு கூழு ஊற்றும் பண்டிகை கண்டிப்பாக கோலாகலமாக நடைபெறும். உரியடி, உடுக்கை அடி காதை பிளக்கும், காலையிலிருந்தே அம்மன் பாடல்கள் காதை செவிடாக்கும். இரவில் நடுநிசி வரை வாண வேடிக்கை, தேரில் அம்மன் ஊர்வலம் என அந்த மாதமே திருவிழா கோலம்தான்.
எங்க ஏரியா உள்ள வாங்கனு கூவி அழைச்சாச்சு. படிச்சு மகிழுங்க...
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....
மிச்சம் எல்லாம் எப்போ சொல்றது... விரைவில் சுற்றி பாற்போம் நட்புகளே. வணக்கம்.