Wednesday 24 July 2019

ANBIN VAASALILE -14 FINAL


ஆமா வனி, நிச்சியமா நீதான் முக்கிய காரணம்.... அப்பாவும் சித்தியும் என்னை வந்து கவனிச்சுகிட்ட போதுதான் நான் எவ்வளவு மோசமாக வக்கிரமா நடந்துகிட்டேன்னு எனக்கு புரிஞ்சுது.... அதை எனக்கு புரிய வெச்ச பெருமை உன்னையே சாரும். நிர்மலாம்மா ரொம்ப அன்பானவங்கன்னு புரிஞ்சுது..... யோசிச்சு யோசிச்சு மண்ட வெடிச்சு எடுத்த முடிவு....” என்று எல்லாம் சொல்லி முடித்தான்.

எனக்கு உங்கள இப்போவே பார்க்கணும் போல இருக்குஎன்றாள்.
பார்த்து...?” என்றான்.
அத பார்த்தப்பறமா சொல்றேன்என்றாள்.
சரி நான் இப்போ ஆபிஸ் போயிட்டு லஞ்ச அவர்ல வீட்டுக்கு வரேன்என்றான்.
ம்ம் சரி காத்திருப்பேன்என்றாள். அவன் கிளர்ந்தான்.
என்னடி ஸ்பெஷல்?” என்றான்.
ஒண்ணுமில்லியேஎன்றாள் மழுப்பலாக.
ஹே சொல்லுடி னாஎன்று குழைந்தான்.
லஞ்ச அவர்ல மீட் பண்ணுவோம் சரியாஎன்று வைத்துவிட்டாள்.

அவன் லஞ்ச அவரில் வீட்டிற்குச் சென்று அவளது அறைக்குச் சென்றான்
. அங்கே அவள் மும்மரமாக ஏதோ வேலையில் ஈடுபட்டு இருந்தாள். அவன் அதை கலைக்காமல் போய் சோபாவில் அமர்ந்து காத்திருந்தான். அதை முடித்துவிட்டு நிமிர்ந்தவள் அவனைக் கண்டு நீங்க எப்போ வந்தீங்க தீபு?” என்று ஆச்சர்யமானாள்.
இப்போதான் ஹனிஎன்றான்.
அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் கை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு தீபுஎன்றாள்.
பின் அவனை கை பிடித்து இழுத்து எம்பி அவன் இதழோடு இதழ் பதித்து ஆழ்ந்த முத்தமிட்டாள். அவன் அதிசயித்து கண்மூடி கிரங்கிப்போனான். அவன் கைகள் அவள் மேனியை தழுவ ஈருடல் என்பது மாறி ஓருடலாக பின்னிப் பிணைந்தனர். அவன் கிடைத்த சான்சை விடாமல் தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டே அவளை விட்டான். பின் மெல்ல சுதாரித்து பிரிந்தனர்.

ம்ம்ம் வாட் ஆ கிபிட்என்றான் கிறங்கிப் போய்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கி தலை குனிந்தபடி சென்று மீண்டும் சோபாவில் அமர்ந்தாள். ஸ்வீட்டோடு சாப்பாடு செய்திருந்தாள். இருவருமாக பகிர்ந்து உண்டனர். அவளை வம்பு செய்தபடி சாப்பிட்டு முடித்தான்.
லஞ்ச அவர் முடிந்ததும் கிளம்பினான்.

மாலையில உன்னையும் கூட்டிகட்டா வனி?” என்று கேட்டான்.
வேண்டாம் தீபு, இது உங்களுக்கும் அவங்களுக்கும் உண்டான தனிப்பட்ட நேரம்..... தனிப்பட்ட சந்தோஷம்..... அங்க நானிருந்தா நல்லா இருக்காது தீபு..... நீங்க அவங்கள கூட்டிகிட்டு வாங்க.... நான் இங்கே ஏற்பாடுகளை பார்க்கறேன்..... அவங்க இங்க வந்ததும் எல்லோருமா ஒண்ணா செலிபரேட் பண்ணலாம் சரியாஎன்றாள்.
எவ்வளவு தீர்கமாக யோசிக்கறேடீ, என் செல்லம்என்று அணைத்து கன்னத்தில் தட்டிவிட்டு விடைப் பெற்றுச் சென்றான்.

அத்யாயம் இருபத்தி எட்டு
அன்று மாலை தன் ஆபிஸ் வேலையை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்பினான் தீபன்.
மதியமே ராமையாவை அழைத்து வந்தனா எல்லாமும் கூறி இருக்க அவருக்கு சந்தோஷத்தில் கை கால் ஓடவில்லை. நிஜமாவா உண்மைதானே என்று கேட்டுக்கொண்டார்.
ஆமா அங்கிள், மாலை அத்தை மாமா  தீபா எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க அதற்கு பிறகு இங்கேதான் இருப்பாங்க என்றாள்.
மாமாவின் அறை அப்படியேதான் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அதை மீண்டும் சுத்தப்படுத்தி உறைகள் திரைகள் மாற்றி புதிது போல ஆக்கினாள்.
மேலே தங்களது அறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி பெட்ரூமை தீபாவிற்காகவென அழகாக அலங்கரித்தாள்.
விசேஷமாக ராமையாவுடன் சேர்ந்து விருந்து சமைத்து டேபிளில் அடுக்கினாள். வீட்டை அழகு படுத்தி தானும் குளித்து அழகாக உடுத்தி அவர்கள் வரக் காத்திருந்தாள்.

மாலை ஏழு மணியோடு சில பெட்டிகளில் அத்யாவசிய சாமான்களோடு வந்து இறங்கினர் எல்லோரும்
. தீபாவிற்கு உற்சாகம் கரை புரண்டது. “அண்ணீ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
இனிமே நாம எல்லாம் ஒண்ணா இருப்போமாம் அண்ணன் சொல்லிச்சு என்றாள்.
ஆமா செல்லம் என்று அவளை கட்டிக்கொண்டாள் வந்தனா.
வாங்க மாமா வாங்க அத்தை என்று வரவேற்றாள்.
இதெல்லாம் உன்னாலதான் நடந்தது வந்தனாமா என்று அவள் தலையில் கை வைத்து ஆசி கூறினார் ரகுபதி.
ஐயோ அப்படி ஒண்ணும் இல்லைங்க மாமா... அவர் தானே யோசிச்சு எடுத்த முடிவு என்றாள் அடக்கமாக.

அவளை அதிசயித்துப் பார்த்தான் தீபன்
.
அவள் சிரமப்பட்டு அவர்களுக்காகவென அறை ரெடி செய்து வீட்டை சீர் செய்து ஸ்பெஷலாக சமைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போயினர் அனைவரும்.
தீபனுக்கு உள்ளூர ஒரு உதறல், ‘இது சரியான முடிவா.... இது ஒத்துவருமா?’ என்று உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி பறந்தது. அதை அவன் முகத்தில் இருந்தே கண்டு கொண்ட வந்தனா அவன் கை பிடித்து அமுக்கி ஆல் வில் பி வெல் என்றாள்.
அவள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று தெளிந்தான்.

ஆனா ஒண்ணுடீ..” என்றான் குனிந்து அவளிடம்
என்ன?” என்றாள்.
முன்போல சுதந்திரமா ஒன்னோட கொஞ்சிக்க முடியாது..... அக்கம் பக்கம் பார்த்து கை போடணும் என்றான் கண் சிமிட்டி.
சி போ என்று சிவந்து போனாள்.
எல்லோருமாக அமர்ந்து அரட்டை அடித்து சாப்பிட்டு பேசி சிரித்து மகிழ்ந்தனர். ராமைய்யாவிற்கு கண்கள் நிறைந்தன. கொஞ்சம் உப்பு மிளகாய் எடுத்து வந்து அனைவரையும் சுற்றி எடுத்துச் சென்று அடுப்பில் போட்டு வெடிக்கவிட்டார்.

சில நாட்களில் இங்கே ரகுபதி நிர்மலா தீபாவிற்கு பழகிப் போனது. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து மருமகள் அமைத்திருப்பதைக் கண்டு மெச்சிக்கொண்டாள் நிர்மலா. தீபா இங்கிருந்தே ஸ்கூல் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

அவர்கள் மத்தியில் நடமாடியபடி வந்தனாவோடு ரகசியமாக கொஞ்சுவதில் ஒரு த்ரில் இருந்ததுதான் என்று உணர்ந்தான் தீபன். அதை அவளிடமும் சொல்லி வெட்கப்பட வைத்தான். அனைவர்க்கும் நடுவில் அமர்ந்து ரகளை செய்து கொண்டிருந்தான்.
அவளைக்கண்டு ரகசியமாக கண் சிமிட்டுவான்... காற்றில் உம்ம்மா கொடுப்பான்..... தீபா அருகில் இல்லாதபோது இன்னும் அதிகம்.... வேண்டுமென்றே இழைந்து கொண்டு இடித்துக்கொண்டு நடந்து போவான்.... வந்தனாவிற்குதான் இவனை சமாளிப்பது கஷ்டமானது.

என்னங்க இப்படி அழும்பு பண்றீங்க?” என்று தனிமையில் கடிந்து கொண்டாள்,
நான் என்ன பண்ணேன்?” என்றான் சிறு பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு.
ச்சே ரொம்ப மோசம் என்று சிவந்து போனாள். அவள் சிவந்த கன்னத்தை வருடியபடி
இதெல்லாம் ஒருவித ரசனையான சரசம்டீ.... இப்போதான் என்ஜாய் பண்ண முடியும்..... ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் மை டியர் என்றான்.
அதுக்கில்ல மாமாவும் அத்தையும் ஏதானும்...” என்று அவளும் கிறங்கித்தான் போனாள். உள்ளுக்குள் மனம் இதை எல்லாம் ரசித்ததுதான்.
அவங்களும் காதலிச்சவங்கதானே என்றான்.
மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கினார்போல தோன்றியது ரகுபதி நிர்மலாவுக்கு மட்டுமின்றி தீபன் வந்தனாவிற்கும் கூட.
சங்கரன் மங்களத்துக்குமே கூட பெருமகிழ்ச்சி.

அத்யாயம் இருபத்தி ஒன்பது

இப்படியாக ஒன்றாக குடித்தனம் செய்திருக்க இவர்களின் தலை தீபாவளி வந்தது. எல்லோருமாக துணிமணிகள் ஷாப்பிங் ஸ்வீட்டுகள் செய்வது என்று வீடு நெய் மணத்தது. நிர்மலா பக்குவம் சொல்ல வந்தனா அவளோடு கூட சேர்ந்து தினுசு தினுசாக செய்து ஜமாய்த்தனர்.

அங்கே சங்கரனும் மங்களுமும் கூட தலை தீபாவளி என்று சிறப்ப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். முன்தினமே அங்கே வர வேண்டும் என்று அழைத்திருந்தனர். முன்தினம் அங்கே தீபாவுடன் சென்று கொண்டாடினர். தீபாவோடு சேர்ந்து ஊரையே அசத்தி பட்டாசு வெடித்து ஆசை தீர கொண்டாடி மகிழ்ந்தான் தீபன்.
மறுநாள் காலை நான்கு மணிக்கே விழித்தெழுந்து குளித்து புதுசு உடுத்தி மீண்டும் தொடர்ந்தனர். வந்தனா தாய் வீட்டில் எடுத்திருந்த மயில்கண் வண்ண பட்டுப்புடவையில் மிளிர்ந்தாள். தாயுடன் சேர்ந்து பலகாரம் தயாரித்து ஸ்வீட்டுடன் எல்லோருமாக சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

வலுக்கட்டாயமாக மங்களம் சங்கரனையும் கூட்டிக்கொண்டு தங்கள் வீடு வந்து சேர்ந்தனர். அங்கே எல்லோருமாக கூடி பேசி சிரித்து பண்டிகை கொண்டாடினர். தீபனும் தீபாவும் கூடினால் வீடே அதிர்ந்தது. ரகுபதி நிர்மலா, வந்தனா தீபனுக்கு புதுசு தந்து மாற்றிக்கொள்ள கூறினார்கள். அது மிக அழகிய மஞ்சள் கிழங்கு நிற பட்டுப் புடவை.
அதை உடுத்தி அழகு தேவதையாக திகழ்ந்தாள் வந்தனா. தலை சுற்றி சொக்கி விழுவது போல நடித்தான் தீபன்.
போதுமே என்று இவள் சிவந்து நாணிப் போனாள்.

தீபாவளிக்கு எனக்கு என்னடி ஸ்பெஷல்?” என்றான் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு பின் கழுத்தில் முத்தமிட்டபடி.
இப்போ தர முடியாது, ஆனால் இன்னும் எட்டு மாதத்தில் கையில கொடுக்க முடியும் என்றாள் மேலும் சிவந்தபடி.
போடி எட்டு மாதம் கழித்து நீ கொடுக்கற வரைக்கும் காத்திருக்கணுமா.... இப்போ...” என்று பேசிக்கொண்டே போனவன் சட்டென்று உரைத்து ரியலி!! ஓ மை டார்லிங், மை ஹனி வனி...... நிஜமாவா?” என்று அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
ஆம் என்பதுபோல வெட்கி லேசாக தலை சுற்ற, அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

முத முதலா உங்ககிட்டதான் சொல்லணும்னு நேத்து அம்மா அப்பாகிட்ட கூட சொல்லலை என்றாள்.
ஓ மை லவ் என்று மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தான். அவள் வயிற்றில் குனிந்து முத்தமிட்டான். அவளுக்கு கூசியது.

சும்மா இருங்களேன் இப்படி படுத்தினா எப்பிடி என்றாள் குழைந்த குரலில்.
டீ எனக்கு பயமா இருக்குடீ..” என்றான் திடீரென்று படுக்கையில் அமர்ந்தபடி.
அவன் முகத்தில் நிஜமான கலவரம் கண்டு அவளும் கலங்கிப் போய்
ஏன் என்ன கண்ணா, என் தீபு இல்ல.... என் செல்லமில்ல... என்ன கலக்கம் சொல்லுங்களேன்?” என்று கெஞ்சினாள்.

இல்லடீ நேத்துவரைக்கும் ஒண்டிக் கட்டையா தனியா அனாதை மாதிரி வாழ்ந்தேன்..... இன்னிக்கி என்னடானா எனக்குன்னு என் மனைவி, கூடி வாழ வந்திருக்கும் அம்மா அப்பா தங்கை..... போதாதற்கு இப்போ எனக்குன்னு ஒரு பாப்பா.... இதெல்லாம் நிஜம்தானே..... உண்மைதானே..... கனவில்லையே..... திடீர்னு இவ்வளவு சொந்தங்கள்... மூச்சு திணருதுடீ.... பயமா இருக்கு என்று அவள் வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்துக்கொண்டான்.
கண்ணிலிருந்து நீர் பெருகிக்கொண்டிருந்தது.

ஐயோ இவளோதானா.... என்னமோன்னு நானும் பயந்துட்டேன்.... என் செல்ல தீபுவா இப்படி கலங்கறது..... கடவுள் கருணை வைத்தார் தீபு..... நம்ம மேல கருணை வைத்தார்.... எல்லாமே நிஜம்.....இனிமே என்னிக்குமே உண்மையானது.... இது மாறாது.... அதுக்கு நாம நம்ம வீட்டு பெரியவங்களுக்கும் தெய்வத்துக்கும் தான் நன்றி கூறிகிட்டே இருக்கணும் என்று ஆறுதல் படுத்தினாள்.

கண் துடைத்துக்கொண்டு ஜோடியாக மாடியிலிருந்து கீழே வந்தனர். அனைவரும் ஒன்றாக இருக்கும்போது மெல்ல இருவருமாக இந்த நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்ள என்று சந்தோஷம் எல்லோரையும் பற்றிக்கொண்டது. ஆரவாரமானது.
இன்னிக்கி டபிள் சந்தோஷம் டபிள் செலிபரேஷன் என்று கொண்டாடினார் ரகுபதி.

நிர்மலாவும் மங்களமும் வந்தனாவை வந்து அணைத்துக்கொண்டனர்
. மற்ற விவரங்கள் காதோடு மெல்ல கேட்டுக்கொண்டனர். அவள் வெட்கத்துடன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள்.
ரொம்ப ரொம்ப நாளைக்குப் பிறகு எங்க வாழ்வில இப்படி ஒரு சந்தோஷத குடுத்திருக்கீங்க.... நல்லா இருக்கணும் என்று எல்லோரும் வாழ்த்தினர்.
ஆனந்தம் விளையாடும் வீடு....” என்று எப் எமில் பாட்டு ஓடியது.

முற்றும்








































 





Tuesday 23 July 2019

ANBIN VAASALILE - 13


இவ்வளோ இடம் எங்கேர்ந்து மா வந்துது?” என்றார் ஆச்சர்யமாக.
அது அங்கதான் இருந்துது அங்கிள் என்று இருவருமாக சிரித்துக்கொண்டனர்.

பின்னோடு முன் ஹாலை சுத்தப்படுத்த இறங்கினாள். ஒவ்வொரு  க்யுரியோவும் அழகழகான பெயிண்டிங்குகளும் தூசு மூடிக் கிடந்தன. மொத்த வீடும் இதே போல பார்த்து பார்த்து சுத்தப் படுத்தி ஒழித்து இடம் செய்து புதுமை படுத்தி இடுப்பு விட்டுப்போனது வந்தனாவிற்கு.

இந்த வீட்டை இத்தனை கஷ்டத்திலும் வலி வேதனையோடு சரி செய்துவிட்டேன். அதேபோல தூசு மூடி அழுக்காக மங்கிக் கிடக்கும் என் தீபுவின் மனதையும் சரி செய்து, மாமா அத்தையுடன் சேர்த்துவிட இயலுமா....... இறைவா அதற்குண்டான மன உடல் வலிமையை நீதான் எனக்குக் கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.
கொஞ்சம் முதுகை சாய்க்கலாம் என்று போய் படுகையில் நீட்டிக் கிடந்தாள். அப்படியே அயர்ச்சியில் உறங்கியும் போய்விட்டாள் போலும். இருட்டி தீபன் கூட அலுவலகத்திலிருந்து வந்திருந்தான். தோட்டத்திலிருந்து ஆச்சர்யபட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் ஒவ்வொரு மூலையும் பார்த்து அசந்து பிரமித்துப்போய் நின்றுவிட்டான்.

எப்பிடி அங்கிள்?” என்றான் கண்கள் விரிய.
அதான் தம்பி ஒரு பெண் வாழும் வீட்டின் மகிமை. அவளது கைவண்ணம் என்றார் அவர்.
ஓ மை டார்லிங், இப்போதுதான் இது வீடாக இருக்கிறது என்று மனதுள் மெச்சிக்கொண்டான்.
எங்கே உங்க செல்ல மருமக?” என்றான்.
மேலே போனாங்க, ரொம்ப அசதியா ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன் தம்பி. இழுத்து போட்டு செஞ்சு ஓய்ஞ்சுட்டாங்க..... நான் கூட சொன்னேன் மெது மெதுவா செய்யலாம்னு.... கேக்கலைஎன்றார் அவர்.

அவன் மெல்ல மேலே சென்று தங்களது படுக்கை அறையை பார்த்து மேலும் கட்டுண்டு போனான். அழகிய படுக்கை உறை மாற்றி இருந்தாள். ரோஜாக்கள் கொத்து கொத்தாக படர்ந்து விரிந்தது போல உறை. அறையில் ஆங்காங்கே தோட்டத்திலிருந்து ரோஜா கொத்துகளை அழகிய பூ ஜாடிகளில் அடுக்கி இருந்தாள். திரைச்சீலைகளும் அதே ரோஜா வண்ணத்தில் மாற்றி இருந்தாள். அதில் சின்னச் சின்ன ரோஜா மொட்டுகள் கண் சிமிட்டின.
இதெல்லாம் எங்கிருந்து வந்தது..... இவளே கொண்டு வந்தாளா... வாங்கினாளா?” என்று ஆச்சர்யம் கொண்டான்.  

அவளோ அசதியாய் ஓய்ந்து அந்தப் படுக்கையிலேயே சுருண்டிருந்தாள்
. பாவம் என்று தோன்றியது.
கை கால் அலம்பி பிரெஷ் செய்துகொண்டு அருகே வந்து அமர்ந்து அவளை மெல்ல தொட்டான். கண்விழிக்க முடியாமல் மூடி மூடிப்போக அவள் அப்படியே அவன் தொடைகளைக் கட்டிக்கொண்டு உறங்கிப்போனாள். அவனுக்கு மிகவும் பாவமாகியது. மெல்ல அவளை விலக்கிவிட்டு கீழே வந்தான்.

என்ன அங்கிள் ரொம்ப சோர்வு படுத்திகிட்டா போலிருக்கு.... கண் முழிக்கக் கூட முடியலை.... சுருண்டு கிடக்காளே.... சாப்பிட்டாளா ஏதானும்?” என்று கேட்டான் கவலையாக.
ஐயோ அப்படியா...... மத்தியானம் கொஞ்சம் சாப்பிட்டதுதான் தம்பி என்றார்.
சரி என்ன சமையல்?” என்று கேட்டுத் திறந்து பார்த்தான். தனக்கும் அவளுக்குமாக ஒன்றாக தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலுடன் மேலேறிச் சென்றான்.

அவள் அருகே அமர்ந்து தட்டை பக்கத்து
சைட் டேபிளில் வைத்தான். அவளை இழுத்து தன் மேலே சாய்த்துக்கொண்டான். இடது கையில் அவளை தாங்கியபடி சிறு விள்ளல்களாக சப்பாத்தியை எடுத்து குருமாவில் தோய்த்து அவள் வாயில் ஊட்டினான். பசி போலும் வாங்கிக்கொண்டு மென்று தின்றாள். அதேபோல மொத்தமும் ஊட்டினான். அப்போதும் கண் திறக்க முடியாமல் தான் கிடந்தாள். தண்ணீர் குடிக்கச் செய்து அவளை ரெண்டு தலையணை வைத்து சாய்த்து படுக்க வைத்துவிட்டு தானும் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்தான். பின் கீழே சென்று தட்டைப் போட்டுவிட்டு வாசலை அடைத்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் மேலே வந்தான். அவளை சரியாகப் படுக்க வைத்து போர்த்திவிட்டு குளிரை மிதமாக செட் செய்து வைத்தான். அவளருகே படுத்து அவள் தூக்கம் கலையாது அணைத்தபடி அவளையே பார்த்தபடி படுத்திருந்தான்.

இப்படி நீ என் வாழ்வில் வசந்தமென வர நான் என்ன புண்ணியம் செய்தேனோடீ கண்ணம்மா என்று மனம் நெகிழ்ந்தான். அப்படியே தூங்கிப் போனான்.
பாதி இரவுக்கும் மேலே மெல்ல கண்விழித்தாள் வந்தனா. ஒன்றும் புரியவில்லை.
கொஞ்ச நேரம் படுக்கலாம்னுதானே வந்தேன்.... என்ன மணி.... ஐயோ தீபு வந்துட்டாரே..... சாப்பிட்டாரா.... எனக்கு பசிக்கலையே, யாரோ ஊட்டினார்களே.... அது தீபு போலல்லவா இருந்தது..... எனக்கு ஊட்டினானா என் தீபுவா..... இந்த கடினப் பாறைக்குள் இத்தனை ஈரமா?” என்று வியந்தாள்.
பக்கத்தில் அவளை அணைத்தபடி அவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் தூக்கம் கலையாமல் அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின் அவனை அணைத்தபடி அவளும் தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்தனர்.
என்னடீ இது மாயம்?” என்றான் சுற்றும் பார்வையாய ஓடவிட்டபடி.
அவள் கண்கள் விரிய நல்லா இருக்கா?” என்று கேட்டாள்.
நல்லா இருக்காவா, அற்புதம்டீ..... இப்போதான் இது வீடு, இல்லை இல்லை தேவலோகம் மாதிரி இருக்கு..... என் அழகிய ஏஞ்சல்..... என்ன மாயம் செய்தாயோடீ என்று அவளை பின்னிருந்து அணைத்து முத்தமிட்டான்.
இதுகெல்லாம் நான் என்ன பரிசு குடுக்கறது?” என்று கேட்டான் கிசுகிசுப்பாக அவள் காதோடு.
ஒண்ணும் வேண்டாம்.... நான் ஒண்ணும் பெரிசா புதுசா பண்ணலை..... எல்லா பெண்களும் அவங்கவங்க வீட்டுல பண்றதுதான் என்றாள்.
அவளை இறுக்கிக்கொண்டான்.

ஐயோ விடுங்க.... நேத்து சுத்தம் செய்துட்டு கை கால் அலம்பினேன்.... இன்னும் குளிக்க்க கூட இல்லை என்று விலகப்போனாள்.
அதெல்லாம் சேர்ந்து குளிச்சுக்கலாம் என்று அவளை இழுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான்.
ஐயோ என்ன இது காலங்காலையில என்று சிணுங்கினாள். “ஆபிஸ் போக வேண்டாமா?” என்றாள்.
இந்நிக்கி நான் லீவ் என்றான் சிறு பிள்ளைபோல.
நோ, இப்போதானே கல்யாணம், தேன் நிலவுன்னு எவ்வளவோ லீவ் போட்டாச்சு..... உடையவன் பார்க்கலைனா ஒரு முழம் கயிறுன்னு சொல்லுவாங்க..... நம்ம பிசினச நாமளே கவனிக்கலைன்னா எப்பிடி?” என்று நல்ல வார்த்தை கூறி எழுப்பிக் குளிக்க வைத்தாள். மனத்தாங்கலோடு எழுந்துக் கிளம்பி ஆபிஸ் சென்றான்.

இருக்குடீ உனக்கு ராத்திரி வெச்சுக்கிறேன் கச்சேரிய என்றபடி சென்றான்.
அவள் சிவந்து சரி சரி அப்போ பாத்துக்கலாம் இப்போ கிளம்புங்க என்று அனுப்பினாள்.
தானும் குளித்துவிட்டு வந்து விளகேற்றி பூஜை முடித்தாள். ஹப்பா என்றிருந்தது.
பின்னோடு தீபுவையும் சரி பண்ண வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சுற்றி வந்தாள்.

அத்யாயம் இருபத்தி ஆறு
வந்தனாவும் தீபனும் குடித்தனம் நடத்த ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தன. மோகமும் ஆசையுமாக அன்பான தாம்பத்யம் அன்னியோன்னியமாக அங்கு அரங்கேறி இருந்தது. மெல்ல மெல்ல அவனை கொஞ்சம் கரைத்துக் கொண்டுதான் இருந்தாள்.
என் செல்லமில்ல என் தீபு இல்ல, ஒத்துக்குங்க கண்ணாஎன்று கெஞ்சினாள் கொஞ்சினாள்.
நீங்க போன் பண்ணி வாங்கன்னு மட்டும் சொல்லீட்டு வெச்சுடுங்க, சரியா, நான் மிச்சத்தப் பாத்துக்கறேன்என்றாள்.
அதெல்லாம் முடியாதுஎன்றான் முரண்டு பிடித்தபடி.
அவங்கள மன்னிக்க மாட்டீங்களா தீபு?” என்றாள் நேராக பார்த்து.
எப்பிடிடீ மன்னிக்கச் சொல்றே?” என்றான்.
ஏன் அவங்க என்ன தப்பு பண்ணினதா நீங்க நினைக்கறீங்க?” என்று கேட்டாள்.
இன்னும் என்ன செய்யணும்?” என்றான்
அதத்தான் சொல்லுங்கங்கறேன்என்று கேட்டாள்.
எங்கம்மா செத்து ஒரு வருடத்துல இந்த இவங்கள கல்யாணம் பண்ணிகிட்டாரு.... என்னை கவனிக்காம அவங்க கூட போய்ட்டாரு..... கூடவே அடுத்த வருடமே தீபாவை வேற பெத்துகிட்டாங்க..... என்னை அடியோட மறந்துட்டாருஎன்றான் அடுக்கடுக்காக.

உங்க மனசத் தொட்டு சொல்லுங்க, உங்க அப்பா உங்களை கவனிக்காம ஊர் ஊரா போனாரு,  ஒத்துக்கறேன் ஆனா ஊர் சுத்தவா போனாரு.... இப்போ நீங்க எப்பிடி ஊர் ஊரா உங்க வியாபாரத்த பெருக்கப் போறீங்களோ அதுபோல தானே அவரும் போனாரு.... சும்மா போனாரா இல்லியே உங்களுக்கு தகுந்த வசதி, பாத்துக்க ஆளு, படை, வீடு, காருன்னு வசதி செஞ்சுட்டு தானே போனாரு..... உங்க அம்மா முடியாம கிடந்தாங்களே, அப்போ உங்கப்ப்பா அவங்க பக்கத்திலேயே தானே இருந்தாரு.... தேவைன்னு வரும்போது அவர் இருந்தாருதானே....”

நீங்க உங்கம்மாவை இழந்த சோகத்தை இன்னமும் கொண்டாடறீங்களே தீபு..... அவரவிடவா உங்க இழப்பு பெரிசு..... இதுல அவங்க ரெண்டு பேரும் அந்த காலத்திலேயே காதலிச்சு கல்யாணம் செய்தவங்க.... அவங்க அவர அப்படி சடனா விட்டுட்டு போனதும் அவர் நிலைமை எப்பிடி இருந்திருக்கும்னு யோசிச்சு பாத்திருக்கீங்களா எப்போவானும்.... அவர் பாவம் தீபு....

அப்போ ஒரு செக்ரடரியா மட்டுமில்லாம  தாய் மனசோட தான் நிர்மலா அத்தை அவரை அரவணைச்சு பாத்துகிட்டாங்க..... அந்த துக்க சூழ்நிலையில உங்களையும் தனியா வளர்க்க கஷ்டப்பட்டுகிட்டு, வீடு, பிசினஸ்னு தவியா தவிச்ச அவரு, கொடிக்கு பற்றுகோல் கிடைச்சாப்போல அவங்க அன்ப கெட்டியா பிடிச்சுகிட்டாரு....

அது தப்பா தீபு
..... கல்யாணம்னு பண்ணிகிட்டா குழந்தை பிறக்கும்தானே.... இப்போ நமக்கு மட்டும் நாளைக்கு பிறக்காதா?” என்று கூறிவிட்டு சட்டென்று வெட்கம் வந்து தலை குனிந்தாள். அவளது வெட்கம் கண்டு அவனுக்கும் சிரிப்பு வந்தது.

உங்களை அடியோட மறந்துட்டாங்கனு சொல்றீங்களே அதுவும் தப்புதான்னு உங்க மனசுக்கே தெரியும்..... மூணு நாலு வருடங்கள் வரையிலும் உங்கப்பா உங்க வீட்டுல தானே உங்க கூடத் தானே இருந்தாரு. நித்தமும் அவங்க கூட சில மணி நேரம் செலவழிச்சுட்டு மிச்ச நேரங்கள்ள இங்க இருந்தார்தானே..... நீங்கதானே அவரோட பேசாம,  ஒண்ணா ஒக்காந்து சாப்பிடாம அவர் முகம் காண பிடிக்காம அவர் இருக்கும்போது வீட்டுக்கு வராம னு அவரப் பிரிச்சீங்க..... உதாசீனப் படுத்தப்பட்டபோது அவர் மட்டும் என்ன செய்வாரு.... தன் பிசினசை சில காலம் லீசுக்கு விட்டுட்டு ஐந்து வருடங்கள் அஞ்யாத வாசம் மாதிரி வேறே ஒரு ஊருக்கே போய்ட்டாரு..... ஒரே ஊர்ல இருந்தா உங்களப் பார்க்காம பேசாம அவரால இருக்க முடியாதுன்னு பயம்தான் காரணம்..... அப்போதும் போன்ல கூப்பிட்டா கூட நீங்க பேசலையே தீபு..... எரிஞ்சு விழுந்தீங்களேஎன்றாள் பக்குவமாக எடுத்து கூறினாள்.

இதெல்லாம் இவ்வளவு விவரமா உனக்கு எப்பிடி தெரியும்?” என்றான்
நாங்க சந்திச்சுப் பேசினோம்..... சொல்லி அழுதாங்க ரெண்டு பெரும்..... அதான் என் மனசு கேக்கலை... வாக்கு குடுத்தேன்.... எப்பிடியும் உங்கள சேர்த்துட முடியும்னு நம்பினேன்...... இன்னமும் நான் நம்பிக்கை இழக்கலை..... என் வாக்கை காப்பாத்தறது உங்க கையில தான் இருக்குஎன்றாள்.
ஹ்ம்ம்என்று பெருமூச்சு விட்டான். “என்னைக் குழப்பாதே செல்லம்..... நான் யோசிக்கணும்என்று கூறி புரண்டு படுத்துக் கொண்டான்.
பாறை இளக ஆரம்பித்துள்ளதுஎன்று புன்னகைத்துக்கொண்டாள்.

அத்யாயம் இருபத்தி ஏழு
தீபன் தூக்கம் வராமல் அமைதியை இழந்தான். வந்தனா இந்த சில மாதங்களாக இதைப் பற்றியே பேசி பேசி கரைத்து வந்தாள் தான். அவனும் கூட தன் மனதளவில் இதை அலசி ஆராய்ந்து பார்த்திருந்தான் பலமுறை.... ஆனல் இன்று விளக்கமாக வந்தனா தன் தந்தையின் நிலையில் இருந்து வாதாடும்போது தனது தவறு தானோ என்ற எண்ணம் வந்து போனது...

வந்தனா சொல்வதெல்லாம் கேட்டால் உண்மை போலத் தான் தெரிகிறது....  ஒருவேளை அப்படியும் இருக்குமோ..... நான் என் இழப்பைப் பற்றி மட்டுமே யோசித்தேனே..... அவரது இழப்பைப் பற்றி நினைக்க வயதில்லை..... வயது வந்தபின் மனதில்லை என்பதுதானே உண்மை..... வந்தனாவை ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை..... பாவம்தானே அப்பாஎன்று எண்ணம் தோன்றியது. யோசித்தான்... இரவு முழுவதும் தூங்க முடியாமல் புரண்டான். காலை கண்விழித்தபோது மண்டை பிளப்பது போல தலை வலித்தது. காபி குடித்தான்.

எழுந்து  குளித்து வந்தனாவிடம் கூறிவிட்டு அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றான்
. அங்கே சென்று தன் அன்னை இஷ்ட தெய்வமாக வணங்கிய லோக மாதாவை வணங்கி அருள் புரிய வேண்டினான். தெளிவு பிறந்தது போல தோன்றியது. இளங்காலை காற்றில் கடற்கரையில் கொஞ்ச தூரம் நடந்தான். முற்றிலும் தெளிவு வந்தது.
பின் வீட்டிற்கு செல்லாமல் கோவில் பிரசாதமும் கொஞ்ச பூ ஸ்வீட்சும் வாங்கிக்கொண்டு தன் தந்தையின் வீட்டிற்குச் சென்றான். அவனை அங்கே கண்டு திகைத்து மகிழ்ந்து போனார் ரகுபதி.
நிம்மி இங்க பாரேன்என்றார்.
என்னமோ என்று பயந்து கை கார்யத்தை போட்டுவிட்டு ஓடி வந்தாள் அவள். அவனைப் பார்த்து ஆனந்தத்தில் ஆழ்ந்தார்.

வா சின்னு உள்ளே வாஎன்று அழைத்தார் ரகுபதி. அவன் தயக்கமாக உள்ளே சென்றான். பூ பிரசாதம் எல்லாவற்றையும் நிர்மலாவிடம் தந்தான். இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து விழுந்து வணங்கினான்.
என்னை மன்னிச்சுடுங்க, இத்தனை வயது வந்தும் சிறு பிள்ளைத்தனமா நடந்துகிட்டேன்.... வாங்க நம்ம வீட்டில எல்லோருமா ஒண்ணா வாழலாம்..... என்னை மன்னிச்சு ஏத்துக்குங்கஎன்றான்.
அகமகிழ்ந்தனர் இருவரும்.
அடா இந்த நேரம் பார்த்து தீபா ஸ்கூலுக்கு போய்ட்டாளே..... இல்லேன இத்தனை நேரம் வீட்டையே ரெண்டு பண்ணி இருப்பாஎன்று சிரித்தார் நிர்மலா.
சித்தி...” என்று அழைத்தான். “எனக்கு அம்மான்னு கூப்பிட வரலை சித்தி..... மெல்ல மெல்லமா அதையும் பழகிப்பேன்.... என்னை மன்னிச்சுடுங்க சித்திஎன்றான்.
தம்பி என்னப்பா இதெல்லாம்.... சும்மா இரு..... பெரிய வார்த்தை எல்லாம் பேசாதேஎன்று அடக்கினாள்.

அவன் வந்த சந்தோஷத்தைக் கொண்டாட உடனே  பாயசம் செய்து தன் கையால் கொடுத்தாள்
. அவர்களது உற்சாகமும் மகிழ்ச்சியும் கண்டு நெகிழ்ந்து போனான் தீபன். ரகுபதி ஒன்றும் பெரிதாக பேசவில்லை எனினும் அவனை அருகில் அமர்த்தி அவன் தலைத் தடவி, அவன் கைகளை பிடித்துக்கொண்டே பேசினார்..... பிடித்த கை விடவே இல்லை.... ஓடி விடுவானோ என்று இறுக்கிக்கொள்வது போல இருந்தது அவர் செயல். ‘பாவம் ஏங்கிபோய்விட்டார்என்று நினைத்துக்கொண்டான்.

நான் ஆபிஸ் போகணும் பாஎன்றான் மெல்ல.
போகணுமா சின்னு.... அப்படியா சரி.... அது முக்கியமாச்சே போயிட்டு வா..... மாலையில இங்க வருவியா சின்னு ?” என்றார் ஆசையாக.
சரி நானே வந்து நம்ம வீட்டுக்கு அழச்சுகிட்டு போறேன் ரெடியா இருங்கஎன்றான்.
ஆஹ!!! அப்படியா ரொம்ப சந்தோஷம்.... அப்படியே பண்ணீடலாம் சின்னுஎன்றார்.
அவரது குழந்தைத்தனமான குதூகலம் கண்டு அவனுக்கு கண்கள் பனித்தன.
ச்சே என்ன பிள்ளை நான், என் தந்தையை ஏங்க வைத்து நானும் ஏங்கி தவித்து என்ன சாதித்தேன்என்று தன் மீதே கோபம் வந்தது. ‘சரி விடு இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதேஎன்று அடக்கினான்.

அங்கிருந்து வெளியே வந்து வண்டியிலிருந்தே வந்தனாவை அழைத்து விவரம் சொன்னான். அவள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள்.
நிஜமாவா தீபு நிஜம்தானே.... நீங்க அங்க போனீங்களா தீபு?” என்று நூறுமுறை கேட்டுக்கொண்டாள்.
ஆமாண்டா உன்கிட்டே நான் பொய் சொல்வேனாஎன்றான் சிரித்தபடி.
அடுத்து என்ன தீபு?” என்று கேட்டாள்.
அடுத்து என்ன, உன்கிட்டேர்ந்து ஒரு உம்மா வாங்கறதுதான்என்றான் குறும்பாக.
சி போ, நான் அதையா கேட்டேன்என்றாள் நாணிக்கொண்டே.
நீ எது கேட்டு நான் இல்லைன்னு சொல்லி இருக்கேன் சொல்லுடி..... மாலையில நானே மறுபடி அங்கே போய் அவங்கள அழச்சுகிட்டு நம்ம வீட்டுக்குக் கூட்டி வரப் போறேன் செல்லம்என்றான்.
தீபு ஐ லவ் யு சோ மச்என்றாள் அழ்ந்த குரலில் ஆத்மார்த்தமாக.
எனக்காக தானே தீபு?” என்றாள் குழைந்த குரலில்.